Advertisement

                     அத்தியாயம் 8

ஆராத்யாவின் கையில் இரத்தம் வருவதை பார்த்து அக்னி அவளை அதட்டி அழைத்துக்கொண்டு சென்றான். அவன் பின் நேஹாவும் கதிரும் சென்றனர்.

ஆத்ரேயன் அமைதியாக அவர்கள் செல்வதை பார்த்துக்கொண்டிருந்தான், ஏனோ அக்னி அவ்வளவு உரிமையாய் அவளை அழைத்துக்கொண்டு சென்றது அவனுக்கு பிடிக்கவில்லை.

ஆருவிற்கு அடிப்பட்டதை நினைத்து கிஷோருக்கு தான் ஏதோ போல் இருந்தது. அவளை சென்று காண வேண்டும் என எண்ணியவன் ஆத்ரேயனிடம்
“ரேயா போய் பார்த்திட்டு வரலாம் டா.. ரொம்ப பெருசா இருக்காது தான்.. ஆனா அப்படியே போக மனசு வரல” என்று கூற,
ஆத்ரேயனோ எவ்வித உணர்ச்சியும் காட்டாது “உன் இஷ்டம்” என்றான், அதில் அவனை முறைத்த கிஷோர் “உன்னையும் தான் கூப்பிடுறேன்”
“நான் வரல.. நீ போறதா இருந்தா போ இல்லனா அமைதியா கிளம்பி வா”
“ப்ச்.. சும்மா கூட படிக்கிறானா கூட ஒகே..  அவ நம்ம குரூப் வேற, கூட இருக்குறப்போ ஆகிருக்கு.. பார்க்க வேண்டாமா”
“என்னடா உனக்கு.. எனக்கு தோணுச்சுனா போய் பார்ப்பேன்.. ஆனா எனக்கு பார்க்க தோணல.. இப்படி தான் நடக்கனும்ன்னு சொன்னாலாம் என்னால அப்படி நடக்க முடியாது” என்று எரிந்து விழ,
கிஷோர் அவனை அழுத்தமாக பார்த்துக்கொண்டே “நீ அவனை மனசுல வச்சு தான் பேசுரேன்னு நல்லா தெரியுது.. நான் போய் பார்க்குறேன்” என்றவன் ஆருவை பார்க்க வகுப்பிற்கு சென்றான்.

வகுப்பறையில் அக்னி ஆருவிற்கு மருந்திட்டு கட்டு போட, ஆரு “டேய் லூசு.. சின்ன அடிக்கு இவ்ளோ பெருசா கட்டு போடுற, கட்டு போடலனா கூட அது சரியாகிடும் ” என அவனை கலாய்க்க,
நேஹா “இல்ல கிட்டி இரத்தம் வருது.. வரலனா பரவால்ல” என்று பதிலளிக்க, அக்னி இவர்கள் பேசுவதை காதில் வாங்காமல் கட்டுப்போட்டுக்கொண்டிருந்தான் (இவன் பண்ற அலப்பறை இருக்கே.. எப்பா.. இருந்தாலும் உன் நட்புணர்வை கண்டு நான் வியக்கேன் டா அகி)..

கதிர் “ஏன் ஆரு.. பண்ணும்போது ஒழுங்கா பண்ண அது ஏன் கிளம்பும் போது அந்த டெஸ்ட் டியூபை கொலை பண்ண”
“ஹான்.. நசுக்கி சாப்பிடலாம்ன்னு நினைச்சேன்… பே” என அவனுக்கு பதிலளிக்கும் போதே கிஷோர் நுழைந்தான்.
அக்னி பொருட்களை எடுத்துவைக்க, கிஷோர் ஆருவின் அருகே வந்தான். அக்னி அவனை அமைதியாய் பார்க்க, ஆருவிடம் வந்த கிஷோர் “பார்ட்னர் எப்படி இருக்கு இப்போ” என்று வினவ, அவளோ அக்னியையும் அவனையும் மாறி மாறி பார்த்தாள்.
கிஷோர் “அவன் என்ன எதுவும் சொல்ல மாட்டான் நீ சொல்லு” என்றிட, கிஷோரின் கூற்றில் அக்னி சற்று அதிர்ந்து அவனை பார்க்க, அவனோ ஆருவிடம் தான் வளவளத்துக்கொண்டிருந்தான்.

ஆரு “ஒகே தான் பார்ட்னர்.. பெருசா எதுவுமில்ல, இவன் தான் நான் என்னமோ போருக்கு போன மாதிரி ஸீன் போடுறான்.
கதிர் “போர்ரா.. அவன் என்னமோ நீ உயிருக்கு போராடிட்டு இருந்த மாதிரில வந்தான்” என அக்னியை கலாய்க்க, கிஷோர் சிரித்துவிட்டு, “ஒகே பார்ட்னர் நான் கிளம்புறேன்.. டேக் கேர்” என்றவன் சென்றுவிட, இவர்களும் கிளம்பினார்.

அக்னி அமைதியாய் ஆருவை வீட்டில் இறக்கிவிட, ஆரு “இப்போ என்ன உனக்கு.. எனக்கு அடிப்பட்டது பிரச்சனையா இல்ல அவன்கூட இருக்கும் போது அடிப்பட்டது பிரச்சனையா” என்றாள் முகத்தை சுருக்கி,
அக்னி அவளை முறைத்துவிட்டு “நீயா எதுவும் யோசிக்காத”
“சரி நான் யோசிக்கில.. நீயே சொல்லு” என அவன் முகம் பார்க்க, அவனோ தரையை பார்த்தபடி “ஒன்னுமில்ல” என்றான். ஆரு அவன் முகத்தை நிமிர்த்தி “என்ன தான் டா உனக்கு இப்போ.. சொல்லு.. இல்ல கால்ல விழவா.. காலை காட்டு” என அவள் கேட்க, அவள் கேட்ட விதத்தில் சிரித்தவன் “லூசு.. அதெல்லாம் ஒன்னுமில்ல போ”
“இன்னோரு வாட்டி முகத்தை அப்படி வைக்காத, பார்க்க முடியல”
“ம்ம்ம்”
“நீ சரிபட்டு வர மாட்ட.. இரு அந்த ஸ்வேதா  கிட்ட அவளை நீ லவ் பண்ரேன்னு சொல்லி விடுறேன்” என அவனை மிரட்ட, அக்னி முகத்தை சுருக்கி “ச்சீ.. பல்ல கழட்டிடுவேன்.. ஆமா உனக்கு எப்படி தெரியும்” என்று அவளை பார்க்க,
“லேப்ல உனக்கு என் டேபிள் மேல கண்ணுனா.. எனக்கு உன் டேபிள் மேல” என அவள் தோளை உலுக்க,  அவனோ “ஓ” என்றான்.
ஆரு கடுப்பாகி “மவனே ஒழுங்கா பேசல.. கண்டிப்பா உன்ன அவ கூட கோர்த்து விட்டுடுவேன்” என்றாள் விரல் நீட்டி எச்சரிக்கும் விதமாக.
“போடி லூசு” என்று அவன் அவளை விரட்ட, அவளும் உதட்டை சுழித்துக்கொண்டு உள்ளே சென்றாள்.

அவள் வீட்டினுள் செல்லும் போது வெளியே வந்த சிவாவை “வாங்க வாங்க”
அவனை தான பார்க்க வந்தீங்க” என கேட்க, அவரும் “தெரியுதுல.. உள்ள போடி” என்றவர் அக்னியை பார்க்க செல்ல, ஆரு “பேட் டாடி” என்று அவரை முறைத்துவிட்டு உள்ளே சென்றாள்.

தூரத்தில் இருந்தே அக்னியின் முகம் சரியில்லை என்பதை புரிந்துக்கொண்டவர் என்ன ஆயிற்று என்று கேட்க தான் அவனை காண வந்தார்.
அக்னியின் அருகே வந்தவர் “என்னடா முகமே சரியில்ல..”
“அதெல்லாம் ஒன்னுமில்ல பா” என்றவனை கூர்மையாக பார்த்தவர்
“ஏதோ சொல்ற.. நானும் நம்புறேன்.. எதுவும் போட்டு குழப்பிக்கமா ரெஸ்ட் எடு” என்றுவிட்டு சென்றார்.

மணி இரவு ஒன்பதை கடந்து சில நிமிடங்கள் ஆகிருந்தது. அந்நேரத்திலும் சைட்டில் கட்டிட பணியாளர்களை வேலை வாங்கியபடி நின்றுக்கொண்டிருந்தாள் நிரஞ்சனா.

நிரஞ்சனா “மேஸ்திரி அந்த இடத்தை பாருங்க.. அவங்க எதுக்கு செங்கலை அங்க வச்சிருக்காங்க” என கேள்வியெழுப்பியபடி நின்றவளின் கவனத்தை திசை திருப்பியது அவளின் அலைபேசி. அலைபேசியில் ஒளிர்ந்த பெயரை பார்த்துவள், அதை ஏற்றாள்.

நிரஞ்சனா “சைட்ல தான் இருக்கேன்”
“…..”
“ஏன் பொண்ணு நைட் சைட்ல இருக்க கூடாதா”
“……”
“அவ்ளோ அக்கறை இருந்தா இங்க வா.. சும்மா அங்க இருந்தே என்ன வீட்டுக்கு போக சொல்லாத” என பொரிந்தவள் அழைப்பை துண்டித்தாள்.

அழைப்பை துண்டித்துவிட்டு மீண்டும் ஆட்களை வேலை வாங்கிக்கொண்டு நின்றிருந்தாள். இங்கு வேலை ஆரம்பித்த நாளில் இருந்து அவள் இங்கு தான் அதிக நேரம் செலவிடுவது.

பணியாளிடம் பேசிக்கொண்டே நடந்தவள் அங்கு போடப்பட்டிருந்த கல்லில் தடுக்கி விழ போக, அவளை விழா வண்ணம் தாங்கி பிடித்தது ஒரு வலிய கரம்.
“பொண்ணுங்க நைட் நேரத்துல வேலை செய்யலாம் ஆனா இப்படி ஹை ஹீல்ஸ் போட்டுட்டு சைட்ல சுத்த கூடாது” என்றான் கணீர் குரலில்.
அவன் பேச்சில் வெகுண்டவள், “நான் ஒரு பங்க்ஷன் போய்ட்டு இங்க வந்தேன் அதான்.. ரொம்ப பேசாத”
“இந்த பேச்சுக்கெல்லாம் ஒன்னும் குறைச்சல் இல்ல.. மணி ஒன்பது ஆகுது.. சாப்டியா இல்லையா” என்று அவன் கேட்க,
“என்ன கேட்குறது இருக்கட்டும்… நீங்க சாப்டீங்களா” என அவள் வினவ, அவனோ சற்று கோபமாக “உன்ன கேட்டா நீ பதில் சொல்லு.. என்னை திருப்பி கேட்காத” என்றிட, அவனை பார்த்து இதழ் விரித்தவள் “கோபப்படுற மாதிரி நடிச்சது போதும்.. வா போய் சாப்பிடுவோம்” என்றுவிட்டு முன் செல்ல
“இந்த ஏ.சி.பி.க்கு நல்ல மரியாதை” என்று அவள் பின் புன்னகையுடனே சென்றான் பிரகாஷ்.
நிரஞ்சனா காதலிப்பவன், அவளுள் மென்மையை கண்டெடுத்தவன்.

பிரகாஷ் சென்னையின் உதவி ஆணையர், குணத்தில் தங்கம். நிரஞ்சனாவை உயிர்க்கும் மேலாக காதலிப்பவன் ஆனால் அதை அவன் என்றும் வெளிக்காட்டிக் கொண்டதில்லை.

தனது ஓட்டுனரை அனுப்பியவன் அவள் வண்டியில் சென்று ஏறிக்கொள்ள,
நிரஞ்சனா “ஆமா நீ என்ன இங்க, எப்பவும் டியூட்டி.. வீடுன்னு தான இருப்ப” என்று கேட்க,
“உண்மை தான்.. சும்மா அப்படியே இந்த பக்கம் வந்தேன்.. அதான் உன்னையும் பார்த்திட்டு போகலாம்ன்னு வந்தேன்” என்றான் தோளை உலுக்கிக்கொண்டே. அவன் கூற்றில் அவனை பார்த்தவள் “ஓ.. அப்படியா.. சரி இறங்கு.. நீ ஒன்னும் வரவே தேவையில்ல.. நான் வீட்டுக்கு போறேன்.. இறங்கு.. இறங்கு டா” என அவனை பிடித்து தள்ள, அவனோ வெடித்து சிரித்தான். அது என்னவோ அவளை வெறுப்பேற்றுவதில் அவனுக்கு அப்படியொரு ஆனந்தம்.

பிரகாஷ் “ஹாஹா.. செம்ம ஜாலியா இருக்கு பா உன்ன வெறுப்பேத்தி பார்க்க.. சோ கியூட் யூ நோ” என்றவன் அவள் கன்னத்தை கிள்ள, அவன் கையை தட்டிவிட்டவள், “கியூட்டா.. என்ன ஒரு ஆனந்தம்…”
“இந்த கரடிக்கு.. அதானா.. சொல்லிரு…  ஏன் நிறுத்துன”
என்று பிரகாஷ் அவள் முகம் பார்க்க, அவளோ “உன் வாயால சொல்றது இன்னும் நல்லா இருக்கு.. அதான் ஸ்டாப் பண்ணிட்டேன்..” என்று கண்ணடித்துவிட்டு சிரித்தாள். அவள் புன்னகையில் அவன் முகமும் மலர்ந்தது.

பிரகாஷ் “சரி வண்டி எடு போலாம்” என்றவன் சீட்டில் சாய்ந்தமர
“ஏன்டா.. ஒரு லவர் அசதியா இருப்பாளே.. பாவம் புள்ள, நான் வண்டி ஓட்டுறேன்னு சொல்றியா” என கேள்வியெழுப்ப,
பிரகாஷ் “ஏன் உன் லவர் கூட தான் அசதியா இருப்பான், நீயே ஓட்டலாம்ல” என்று அவளை போல் பதிலுரைக்காமல் அவனும் கேள்வியெழுப்ப,
“நம்ம பேசுனா போயிட்டே இருக்கும்.. நானே ஓட்டுறேன்” என்றவள் வண்டியை கிளப்பினாள். அவளுக்கு தெரியாத அவன் எவ்வளவு வேலை பலுவில் சுற்றிக்கொண்டிருக்கிறான் என்று.

கியர்பாக்ஸ்ஸில் இருந்த நிரஞ்சனாவின் கை மீது தன் வலது கையை வைத்தவன் அப்படியே கண் மூடி அமர்ந்துவிட்டான்.  வண்டியை ஒரு உணவகத்தின் முன் நிறுத்தியவள் “பிரகாஷ் வா” என்று அவனை எழுப்ப, அவனோ அந்த உணவகத்தை பார்த்துவிட்டு “ஹே இங்க ஏன் வந்த.. வேண்டாம் டி” என்று இறங்காமல் அமர்ந்திருக்க,
“டேய் ஒரு நாளாச்சு அஸிஸ்டன்ட் கமிஷனர் சாப்பிடுற மாதிரி இடத்துல சாப்பிடலாம்.. வா”
“நோ நோ.. எனக்கு அங்க தான் சாப்பிடனும்” என்று அவன் அடம்பிடிக்க
“ஹான் ஹான் போறேன்” என்று வண்டியை திருப்பினாள். சில நிமிடங்களிலேயே வண்டி ஒரு கையேந்தி பவன் முன் நின்றது.

வண்டியிலிருந்து இறங்கிய பிரகாஷ் “என்ன கமலாக்கா.. எப்படி இருக்கீங்க” என்று பேசிக்கொண்டே அவரை நெருங்க,
கமலா என்பவரோ “என்ன தம்பி ஒரு வாரமா வரவேயில்ல” என்று உரிமையாய் கேட்டார்.
“என்னக்கா பண்றது… இந்த வாரமெல்லாம் ஒரே வேலை..
நிருவையே இன்னிக்கி தான் போய் பார்த்தேன்” என்றவன் ஒரு இருக்கையில் அமர, நிரஞ்சனா தான் “அக்கா செம்ம பசி.. சீக்கிரம் போடுங்க” என்று அவனுடன் அமர்ந்துக்கொண்டாள்.

கமலா இருவருக்கும் உணவை கொடுத்துவிட,
பிரகாஷ் “என்ன க்கா வியாபாரமெல்லாம்  எப்படி போகுது” என்றான் தட்டிலிருந்த தோசையை பிய்த்துக்கொண்டே,
“என்ன தம்பி தெரியாத மாதிரி கேட்குற… நீயே இங்க வந்து சாப்பிடுறதா பார்த்து நிறைய பேர் வராங்க, அப்பறம் நீ சொன்னேன்னும் நிறைய பேர் வராங்க அப்பறம் என்ன.. எல்லாம் நல்லா தான் போகும்… உனக்கு எப்போவுமே என் நன்றி இருக்கும் தம்பி..” என்று அவர் உணர்ச்சிவசப்பட,
பிரகாஷ் “நன்றியெல்லாம் வேண்டாம் க்கா.. எக்ஸ்ட்ரா ஸ்பெஷலா தோசை போடு போதும்”
“உனக்கு போடாம வேற யாருக்கு போடுவேன்” என்று அவர் தோசை வார்க்க,
ஜனா “அது என்னக்கா இவன் சொல்லி விட்ட ஆளுங்க”
“ஆமா கண்ணு.. தம்பி இங்க நல்லா இருக்கும்ன்னு சொன்னதா சொல்லி நிறைய பேர் வருவாங்க” என்று அவர் தன் வேலையை பார்க்க,
பிரகாஷ் தட்டை வாங்கி ஜனா உண்ண தொடங்கினாள். அவளை பார்த்து போலியாக முறைத்தவன் இன்னொரு தட்டை வாங்கிக்கொண்டு உணவருந்த,
நிரஞ்சனா “என்ன பாஸ் பெரிய ஆளு போலயே நீங்க” என அவனை கேலி செய்ய,
பிரகாஷ் “ஹே இதுல என்ன இருக்கு.. பிடிச்சா சொல்லமாட்டோமா.. அதான்” என்று கூற,
நிரஞ்சனாவோ “இல்ல.. எப்போவும் சொல்லமாட்டோம்” என்றாள் அவனை பார்த்தபடி, அவள் கூற்றில் நிமிர்ந்தவன் “நான் வீட்ட விட்டு வெளிய வந்த அன்னைக்கு என்ன பண்றதுன்னு தெரியாம உட்கார்ந்திருந்தேன்.. அப்போ இவங்க தான் சாப்பிடுன்னு சொல்லி சாப்பாடு கொடுத்தாங்க.. அவங்க அப்படி பண்ணனும்ன்னு அவசியம் இல்ல ஆனா அவங்க ஏதோ சரியில்லன்னு தானா வந்து உதவி பண்ணாங்க… மறக்கமாட்டேன் நிரு” என்றவரின் குரலிலும் கண்ணிலும் அத்தனை வலி இருந்தது.
ஜனா எழுந்து வந்து அவனை அணைத்துக்கொண்டு “யூ வில் பி தி பெஸ்ட்” என்றிட, அவனும் அவளை அணைத்துக்கொண்டு “நீங்களும் தான் மேடம்” என்றான், அதில் அவனிடமிருந்து விலகியவள்
“ஹாஹா.. இதை என் வீட்டு ஆளுங்ககிட்ட சொல்லிடாத”
“நீ ஏன் தனியா பிசினஸ் பண்றேன்னு தெரிஞ்சா அவங்களும் அதான் சொல்லுவாங்க”
“அதெல்லாம் ஒன்னுமில்ல”
“நடிக்காத.. ஐ நோ யூ பெட்டர்” என்றான் தன் காக்கி சட்டையின் காலரை தூக்கிவிட்டபடி,
“அப்படியா.. என்ன சொல்லு கேட்போம்”
“உங்க அப்பா பிசினஸ்ல இருக்குற பாலிட்டிக்ஸ்ஸ வெளிய இருந்து பார்த்து சரி பண்ண தான இப்படி பண்ற.. வேணும்ன்னு அவங்ககிட்ட தனியா பிசினஸ் பண்றேன்னு சொல்லிட்டு சுத்துறா” என்று சரியாக அவளை பற்றி கூற,
நிரஞ்சனா “வாட்.. அப்படியெல்லாம் இல்ல..” என்றால் மழுப்பலாக,
“எனக்கு தெரியும்” என்றான் அவன் குறுநகையுடன். அவனை முறைத்தவள் “எப்படி தெரியும் உனக்கு”
“உங்க அப்பா பிசினஸ்ல இருக்க சில பிரச்சனைங்க எனக்கும் தெரியும்.. அதுவும் இல்லாம இந்த திமிருப்பிடிச்சவளோட கண்ண பார்த்தே அவ என்ன நினைக்கிறான்னு கண்டு பிடிச்சிடுவேன்” என்று கண்ணடிக்க, அவளும் புன்னகையுடன் உணவை உண்டாள்.
பிரகாஷ் “அப்பா வீட்ல இதை பத்தி எதுவும் சொல்றது இல்லையா”
“ஆமா பிரகாஷ் அவர் சொல்லமாட்டார்.. அவருக்கே தெரியாம சில விஷயமெல்லாம் வெளிய நடக்குது.. எனக்கே அது ஒரு வருஷ மேற்பார்வையில தான் தெரிய வந்தது… இதை நான் சொன்னாலும் நம்ப மாட்டாங்க, இல்ல உனக்கு இதெல்லாம் தேவையில்லைன்னு சொல்லுவாங்க.. இப்போ என்ன பண்ண விடாததுக்கு காரணமும் அது தான்.. பட் ஐ வோன்ட் லெட் மை டேட் லூஸ் இன்பிரன்ட் ஆப் எனி ஒன் (but I won’t let my dad lose in front of anyone)”
“தெரியும் டா.. விடு.. எல்லாம் நல்லதே நடக்கும்.. நான் உன் கூட இருக்குற வரைக்கும் உனக்கும் உங்க.. இல்ல இல்ல நம்ம குடும்பத்துக்கும் எதுவும் ஆகாது” என்றிட, ஜானாவும் அமோதிப்பதாய் தலையசைத்தாள்.

கமலா “தம்பி தோசை போதுமா.. கண்ணு உனக்கு டா” என்று கேட்க,
பிரகாஷ் “போதும் க்கா.. மனசும் வயிறும் நிறஞ்சிடுச்சு”
“ஆமா க்கா.. அப்பறம் தோசை செம்மையா இருந்தது ஆனா சட்னி காரம் அதிகம் ஆகிட்டிங்க இன்னிக்கி”
“அடடா.. கொஞ்சம் இருடா கண்ணு வரேன்” என்றவர் அருகே எங்கோ செல்ல,
நிரஞ்சனா குழம்பி “எங்க போறாங்க டா”
“இரு இரு.. கொஞ்ச நேரத்துல கைல ஏதாவது எடுத்திட்டு வருவாங்க பாரு” என்றுவிட்டு உணவு தட்டை வைத்துவிட்டு கை கழுவினான்.

பிரகாஷ் கூறியதை போல் கமலா கையில் பழசாற்றுடன் வந்தவர் “இந்தா கண்ணு இதை குடி” என்று அவளிடம் நீட்ட,
“ஐயோ அக்கா எதுக்கு இது.. நான் காரம்ன்னு தான சொன்னேன்”
“அட என்ன கண்ணு நீ.. நீங்க ரெண்டு பேர் எவ்ளோ பெரிய ஆளுங்க.. இங்க வந்து எனக்காக சாப்பிடறீங்க, அப்போ நான் தான உங்கள நல்லா பார்த்துக்கனும்”
“க்கா சும்மா பெரிய ஆளுங்கன்னு சொல்லாத.. நாங்களும் அப்போ சாதாரண ஆளுங்க தான்”
“இப்போவும் சாதாரண ஆளுங்க தான்.. உனக்காக.. உன் சப்பாடுக்காக வரோம்.. அதை மட்டும் நீ பாரு” என்றிட,
“சரியா சரி கோபப்படாத” என்றார்.

ஜனா பழச்சாற்றை பாதி அருந்திவிட்டு மீதியை அவனிடம் நீட்ட, அவனும் அமைதியாக வாங்கி பருகினான்.
பிரகாஷ் “சரிக்கா எவ்ளோ ஆச்சு”
“அதெல்லாம் வேண்டாம் தம்பி” என்று அவர் மறுக்க, அவரை முறைத்தவன் “எத்தனை வாட்டி சொல்றது.. பாசம் வேற பணம் வேற.. ஒழுங்கா பிடி” என்றவன் அவரிடம் உணவிற்கான பணத்தை கொடுத்துவிட்டு விடைபெற்றான்.

வீட்டிற்கு திரும்பும் போதும் இருவரிடையே பலத்த மௌனம் நிலவியது, இருவருக்கு அது பிடித்தே இருந்தது.

பிரகாஷின் வீட்டின் முன் வண்டியை நிறுத்தியவள் அவனை பார்க்க, அவனும் அவளை தான் பார்த்துக்கொண்டிருந்தாள்.
அவனை பார்த்து புருவமுயர்த்தியவள் ‘என்ன’ என்று கங்களாலே வினவ, அவளை தன்னை நோக்கி இழுதவன் அவள் நெற்றியில் அழுத்தமாய் இதழ் ஒற்றிவிட்டு இறங்கிவிட,
நிரஞ்சனா “எதையும் யோசிக்காத போய் தூங்கு” என்றாள், அவனை நன்கறிந்தார் போல்.

அவள் கேள்வியில் பிரகாஷ் குறும்பாக “அப்போ உன்ன பத்தி கூட நினைக்க வேண்டாமா”
“யாரு நீ.. என்னை பத்தி யோசிக்கிற, பச்சையா பொய் சொல்லாத டா.. நீ எதை பத்தி யோசிப்பன்னு எனக்கு தெரியும்” என்று அவள் உதட்டை சுழிக்க, பிரகாஷோ “ஹாஹா.. நீ என்கூட தான் இருக்க, என்கூடவே தான் இருப்ப சோ உன்ன பத்தி யோசிக்கனும்னு இல்லல”
“நல்லா பேச கத்துகிட்ட.. ஆனா இது உனக்கு செட் ஆகல.. சரி நான் கிளம்புறேன் டைம் ஆகுது அப்பறம் ரேயன் கால் பண்ணிடுவான்”
“என் மச்சான் நல்லவன் டி.. சரி கிளம்பு.. வீட்டுக்கு போய்ட்டு கால் பண்ணு”
“முடியாது போடா” என முறுக்கிக்கொண்டு சென்றவளை பார்த்தவனின் அகம் நிறைந்திருந்தது.
“திமிரு பிடிச்சவ” என அவளை செல்லமாக கடிந்தபடி வீட்டினுள் நுழைந்தான் அந்த காவலன்.

__________________________

அக்னி ஏதோ யோசனையில் இருந்தான். ஆராத்யா செயலில் அவனுக்கு கோபம் வரவில்லை ஆனால் முற்றிலுமாக குழப்பியிருந்தான் என்று தான் கூற வேண்டும்.
அவன் ஏதோ யோசித்தபடி தோட்டத்தில் நடந்துக்கொண்டிருக்க அவன் சிந்தையை கலைத்தான் விஷ்வா, நேஹாவின் பக்கத்து வீட்டு பையன். ஐந்தாம் வகுப்பு படிக்கும் குட்டி வானரம், அவனுக்கும் அக்னி ஆருவிற்கும்  ஏழாம் பொருத்தம், அக்னி ஆரு ஒரு கூட்டணி என்றால் இவன் நேஹாவுடன் கூட்டணி சேர்ந்து அவர்களை வம்பிழுப்பான். என்னதான் சிறு சிறு சண்டைகள் வந்தாலும் அக்னிக்கு அவன் மேல் தனி பாசம் இருக்க தான் செய்தது.

விஷ்வா “டேய் சிடுமூஞ்சி.. இந்தாடா.. நேஹா அக்கா கொடுக்க சொல்லுச்சு” என்று ஒரு டப்பாவை நீட்ட,
“வாடா குள்ளா” என்றான் அவனை வம்பிழுக்கும் பொருட்டு,
விஷ்வா அவனை முறைத்துவிட்டு “அப்படி கூப்பிடாத டா”
“அப்போ நீ என்ன அண்ணான்னு கூப்பிடு டா”
“முடியாது டா”
“அப்போ என்னாலையும் முடியாது டா குள்ளா” என்று அக்னியும் விடாது அவனை வெறுப்பேற்ற,
“இந்தா பிடி.. உனக்கெல்லாம் ஏன் அக்கா கொடுக்க சொல்லுதோ” என அவன் தலையில் அடித்துக்கொள்ள,
அக்னி “டேய் டேய் அவ முதல எனக்கு பிரெண்ட் அப்பறம் தான் உனக்கு அக்கா” என்றவன் அவன் கொடுத்த டப்பாவை திறக்க அதில் குலாப் ஜாமுன்னும் ஒரு கடிதமும் இருந்தது.

டப்பாவை அருகே இருந்த கல் மேசையில் வைத்தவன் அந்த கடிதத்தை பிரித்து படிக்க, அதில்..
‘முகத்தை அப்படியே உர்ருன்னு வச்சிக்கிட்டு இருப்பியே.. அதான் இதை செஞ்சேன்.. உடனே ஆரு அப்பறம் கதிர் கிட்ட போட்டு கொடுத்திடாத.. திடீர்னு செய்யவும் மாவு அவ்ளோ இல்ல.. சோ அவங்களுக்கு நாளைக்கு செஞ்சு தரேன்.. இப்போ இதை சாப்பிட்டு தூங்கு’ என்றிருந்தது.

அதை படித்தபின் அக்னியின் முகம் தெளிவானது. விஷ்வாவை நிமிர்ந்து பார்த்தவன் அவனுக்கும் இரண்டு கொடுத்துவிட்டு உண்ண, கதவின் அருகே சென்ற விஷ்வா “டேய் சிடுமூஞ்சி.. உனக்கெல்லாம் கொடுக்குறப்போ அக்கா எனக்கு கொடுக்காதா.. அதெல்லாம் நான் அங்கையே சாப்பிட்டேன்.. பௌ பௌ” என நாக்கை துருத்தி காட்டிவிட்டு அவன் ஓடி விட, அக்னி அவனை பார்த்து சிரித்துக்கொண்டே அவளுக்கு அழைத்தான்.

நேஹா “சொல்லுடா”
“என்ன பண்ற”
“தூங்க போறேன் டா.. டையர்டா இருக்கு”
“லூசாடி நீ.. எதுக்கு இப்படி பண்ணுற.. ஆல்ரெடி காலேஜ் முடிச்சிட்டு வந்து டையர்டா இருப்ப.. இப்போ இது தேவையா” என கடிய,
“டேய் என்னடா குலாப் ஜாமுன் பண்ணதுக்கு கூட திட்டுற” என்று பாவமாக கேட்டாள்,
“சரி போய் தூங்கு” என்றான் அவன் பெரிய மனதுடன்.
“எப்படி இருந்ததுன்னு ஒரு வார்த்தை சொல்லுடா”
“போய் தூங்கு டி.. ஹான் மறக்காம அந்த பிஸிக்ஸ் அசைன்மெண்ட் எடுத்து வச்சிடு”
“சீ பே.. போனை வை” என்றவள் அழைப்பை துண்டித்துவிட, அக்னியின் முகம் புன்னகையில் மலர்ந்திருந்து.

__________________________

தன் அறையில் அமர்ந்து தொலைக்காட்சி பார்த்துக்கொண்டிருந்த ஆத்ரேயனின் மனம் மாலை ஆய்வகத்தில் ஆரு செய்தவற்றைநினைவு கூர்ந்தது, அதில் அவன் முகம் புன்னகையில் விரிந்தது. திடீரென அக்னியின் முகம் நினைவில் வர, அவன் முகம் கடுகடுவென ஆனது.
‘ச்ச.. நான் எதுக்கு தேவையில்லாம கோபப்படனும்.. அவங்க யாரோ.. நமக்கு என்ன’ என்று தான் முதலில் நினைத்தான் ஆனால் மீண்டும் மீண்டும் ஆருவின் முகம் மனதில் வர, இனி அவளை கண்டுக்கொள்ளவே கூடாது என முடிவெத்துக்கொண்டு அமர்ந்துவிட்டான், ஆனால் கிஷோர் இருக்கும் வரை அது நடக்காது என அவன் அப்போது அறிந்திருக்கவில்லை.

Advertisement