Advertisement

அத்தியாயம் 38

அக்னி ஓட்டுனர் இருக்கையில் அமர்ந்திருக்க, நேஹா அவன் அருகில் அமர்ந்திருந்தாள். பின்னிருக்கையில் ஆராத்யா அமர்ந்திருக்க அவளுடன் ஆத்ரேயன் அமர்ந்திருந்தான்.

அக்னி அமைதியாக வண்டியை செலுத்திக்கொண்டிருக்க, நேஹாவும் ரேயனும் பொதுவாக பேசிக்கொண்டு வர,  ஆரு ஜன்னலின் வழி சாலையை வெறித்துக்கொண்டிருந்தாள், அவள் மனமோ வெறுமையாக இருந்தது.

ஆருவின் வீட்டின் வாயிலில் அக்னி வண்டியை நிறுத்த, வண்டியிலிருந்து இறங்கியவள் “பை நேஹா” என்றுவிட்டு செல்ல, வண்டியின் மறுபுறத்தில் இருந்து இறங்கிய ரேயன் “ஓகே மாப்ஸ்.. எனக்கு இங்க முடிக்க வேண்டிய வேலை ஒன்னு இருக்கு.. நாளைக்கு மீட் பண்ணுவோம்” என்று கண்ணடித்துவிட்டு செல்ல, அக்னி அவனை அமைதியாக பார்த்து மட்டும் வைத்தான். அவன் மனமோ குற்றவுணர்வில் தவித்தது. ஏதேதோ யோசனையில் வண்டியை செலுத்திக்கொண்டிருந்த அக்னி, நின்றது என்னவோ நேஹா வீட்டின் முன் இருந்த பூங்காவில் தான். வண்டியிலிருந்து இறங்கிய நேஹா “பை” என்றுவிட்டு செல்ல, தானும் இறக்கியவன் “ஒரு நிமிஷம்” என்றான். நேஹா என்ன என்பதாய் பார்க்க, அவள் அருகில் வந்தவன் அவளை இறுக அணைத்துக்கொள்ள, அவன் அப்படி அணைப்பான் என்று எதிர்பாராதவள் “அகி.. என்ன பண்ணுற.. யாராவது பாக்க போறாங்க” என்றாள் நெளிந்துக்கொண்டே.

அவள் கூறியதை சிறிதும் சட்டை செய்யாதவன் எலும்புகள் நொறுங்கும் அளவிற்கு அவளை அணைத்திருந்தான். அவளை காணாமல் அவன் மனம் பட்ட பாடு அவன் மட்டுமே அறிவான் அல்லவா. அவளை அணைத்து அவள் தோளில் முகம் புதைத்தவன் “உன்ன காணும்னு தெரிஞ்சப்ப செத்துட்டேன்… உனக்கு மட்டும் ஏதாவது ஆகிருந்தா என்ன நானே மன்னிச்சிருக்க மாட்டேன்.. என்னால தான் எப்போவும் ஏதாவது பிரச்சனை வருது” என்றவன் உணர்வுகளின் பிடியில் சிக்கியிருந்தான். அதை உணர்ந்துகொண்ட நேஹா அவன் முதுகை ஆதரவாக வருடி “இப்போவும் ஒன்னும் ஆகிடல… ஏன் தேவையில்லாததை நினைச்சு கவலை படுற” என்க, அவளை நிமிர்ந்து பார்த்தவனின் கண்கள் லேசாக கலங்கி இருந்தது.

நேஹா பதறி “என்ன அகி இது சின்னபிள்ளை மாதிரி.. முதல கண்ண துட” என்று அதட்டியவள் தானே அவன் கண்களை துடைத்துவிட கை உயர்த்தியவள், பின் அதை அந்தரத்தில் நிறுத்த, அவள் கையை தன் கன்னத்தில் அழுந்த பற்றியவன் “என்ன மன்னிச்சிடு.. ஐ அம் ரியலி சாரி” என்றான் ஆழ்ந்த குரலில். ஆனால் அந்த ஒற்றை வார்த்தையில் எதுவும் சரி ஆகிவிடாது என்பதை அவனும் அறிவான்.

அவளை ஒதுக்கியது, சொற்களால் அவளை காய படுத்தியது, அவளின் காதலை உதாசீனப்படுத்தியது போன்ற அனைத்தும் அவனை அவளிடமிருந்து இரண்டடி தள்ளி நிற்க வைத்தது. அவன் திடீரென்று விலகி நின்றதால் குழம்பியவள் அவனை புரியாமல் பார்க்க,

அக்னி “அப்போ நான் கிளம்புறேன்.. நீ உள்ளே போ.. காலைல பாக்கலாம்” என்றான் தடுமாறிய குரலில். என்னதான் தன் காதலை அந்நொடியே கூற சொல்லி அவன் காதல் மனம் பரபரத்தாலும், முயன்று தன்னை கட்டுப்படுத்திக்கொண்டு நின்றான். ஆருவுடனான மனஸ்த்தாபம், நேஹாவின் கண்ணில் தெரியும் கோபம் என்று அனைத்துயும் நீக்கிய பின்னரே கூறவேண்டும் என்று நினைத்தான், அதுதான் சரியும் கூட என்று அவன் மறுமனம் உரைத்தது.

அக்னி பெருமூச்சுடன் தன் கார் நோக்கி செல்ல, நேஹா “இன்னும் எவ்ளோ நாள் என்கிட்ட இருந்து இப்படி ஓடிட்டே இருப்ப அக்னி, அதான் நான் வேண்டாம்னு இருக்கல அப்போ ஒரேடியா விட்டுடு.. இப்படி நம்பிக்கைய வளர்த்துட்டு அப்பறம் அப்படியே போறதெல்லாம்.. என்னால முடியல” என்று தன் ஆதங்கத்தை வெளிப்படுத்த, அவளை நெருங்கி வந்தவன் அவள் நெற்றியோடு நெற்றி முட்டி “நான் உன்னவிட்டு போனாதான நேஹா.. நான் தான் போனதே இல்லையே, என்னால முடியவும் முடியாது, ஆனா இப்போ என்னால எதுவும் உன்கிட்ட பேசமுடியல, இப்போ நான் என்ன பேசுனாலும் சரியா இருக்காது புரிஞ்சிக்கோ.. ஆனா எப்போவும் உன்ன விட்டு போகவும் மாட்டேன், இனி தள்ளியும் இருக்கமாட்டேன், நீயே போனாலும் உன்ன விடமாட்டேன்” என்றான். அவனை தள்ளி விட சொல்லி மனம் கூறினாலும் அவளுக்கு ஏதோ பலமிழந்து உணர்வு.   அவளிடம் இருந்து பிரிந்தவன் அவள் நெற்றியில் புரண்ட கூந்தல் கற்றுகளை அவள் காதின் பின் ஒதுக்கிவிட்டு, அவளை ஆழமாக பார்த்தான். அவன் பார்வைகளுக்கு ஆயிரம் அர்த்தங்கள் இருந்தன. அதன் பின் காரினுள் ஏறியவன் அவளை பார்க்க, அவளும் அவனை தான் பார்த்துக்கொண்டிருந்தாள், அவள் கன்னங்களில் சூடான கண்ணீர் கோடுகள்.

அக்னியின் வண்டி சத்தம் கேட்டு அங்கு வந்த ரித்து “அண்ணா.. நீங்க என்ன இங்க” என்று வினவ, அக்னி “உன் அக்காவ பாக்க வந்தேன்.. அப்படிதான நீ நேஹாவ கூப்பிடுற” என்று புருவம் சுருக்க, ரித்து “ஆமா ண்ணா…. ஆனா” என்று யோசனையாக இழுக்க, அக்னி “நீ எது கேட்குறதா இருந்தாலும் அவகிட்ட கேளு” என்றான் உல்லாச புன்னகையுடன். ரித்து “என்ன பெருசா.. எதாச்சு வர்க் குடுத்துருப்பீங்க” என்று சலித்துக்கொண்டாள், ஏனென்றால் அவளை பொறுத்தவரை அக்னி ஒரு ரோபோ.

அக்னி “இன்னைக்கு நாளைக்கு தான் ஆபீஸ் இல்லையே.. உனக்கு ஞாபகம் இல்லையா” என்று கேட்டுவிட்டு கண்ணடிக்க, ரித்து விழி விரித்து “அண்ணா” என்று வாயை பிளக்க, அக்னி “பை….” என்றுபடி அங்கிருந்து கிளம்பினான். அக்னி காரில் அமர்ந்தபடி நேஹாவை பார்க்க, அவளோ முகத்தை வெட்டி திரும்பினாள். அக்னி சென்றதும் ரித்து “அக்கா அக்கா.. என்ன நடக்குது இங்க” என்று நச்சரிக்க, அக்னியின் வார்த்தையில் மனபாரம் குறைந்தது போல் உணர்ந்த நேஹாவோ ரித்துவிடம் இயல்பாகவே பேசினாள்.

நேஹா “என்ன நடக்குது இங்க” என்று தாடையை தட்டி யோசிக்க,

ரித்து “அதான் கீழ” என்றாள் இழுவையாக,

நேஹா “கீழ என்ன” என்று அவளை போலவே இழுக்க, ரித்து “அக்கா” என்றாள் சிணுங்களாக. நேஹா “அது இருக்கட்டும் கிச்சாவ உனக்கு எப்படி தெரியும்..” என்று கேள்வியெழுப்ப,

ரித்து “கிச்சாவா அது யாரு” என்றாள். நேஹா “ஹே.. நடிக்காத.. கிஷோர கேக்குறேன்” என்றிட, ரித்து “ஓ, கோளாறா.. ஐயோ… ஹான் கிஷோரா…” என்று திணற,

நேஹா “பதில்” என்றாள் கண்டிப்பாக.

ரித்து “அது..” என்று தொடங்கியவள்,  பள்ளி பருவத்தில் கிஷோரை சந்தித்தது, வம்பிழுத்தது என்று அனைத்தையும் கூறி முடிக்க, நேஹா “ஓ அப்போ உனக்கு அவன ஸ்கூல்ல இருந்தே தெரியுமா” என்றாள். ரித்து “ஆமா நான் போன டியுஷன்க்கு தான் அவனும் சாரி அவரும் வருவாரு, அப்போ அப்படியே கலாச்சு பழகிட்டேன்… அவருக்கு என்ன கண்டாலே ஆகாது, அதே தான் எனக்கும், ஆனா ஸ்கூலுக்கு அப்பறம் நாங்க பார்த்துக்கவே இல்ல, நானும் அப்போ அப்போ யோசிப்பேன் அப்படி ஒரு பீஸ் இருந்துச்சே இப்போ எங்க இருக்கோன்னு… ஆனா இப்படி இருக்கும்னு நினைக்கல..” என்றாள் முகத்தை தீவிரமாக வைத்துக்கொண்டு.

நேஹா “நீ சொல்றத பாத்தா நீ ஏதோ அவனுக்கு பலமா செஞ்சிருக்க போலயே…” என்று புருவமுயர்த்த,

ரித்து “கீழ நடந்தது பாத்தா, கூட ஏதோ பலமா நடந்திருக்கும் போலயே” என்று  நேஹாவை போல் கூறியவள் பின் “டாபிக் மாத்றீங்க.. சொல்லுங்க… உங்களுக்கும் அக்னி அண்ணாக்கும், அப்பறம் ஆபீஸ் வந்த ஆத்ரேயன் சார், அப்பறம் அந்த கோளாறுக்குலாம் எப்படி பழக்கம்… சும்மா கிளாஸ்மேட்ஸ்ஸா” என்று மூச்சு விடாமல் கேள்வி கேட்க, நேஹா “மூச்சு விடு செத்துட போற” என்றாள் குறும்பாக.

பின் நேஹாவே தங்களின் நட்பு, உறவு, சண்டை என அனைத்தையும் கூறினாள், அவர்களின் காதலை தவிர்த்து. ரித்துவோ கண்கள் மின்ன “வாவ்.. இது என்ன அட்லீ படத்தவிட ட்விஸ்ட்டா இருக்கு” என்றவள் சிறு இடைவேளைக்கு பின் “அக்கா எனக்கு தெரிஞ்சு” என்றிழுக்க, “உனக்கு தெரிஞ்சு என்ன” என்றாள். ரித்து “அக்னி அண்ணா உங்கள  தான் லவ் பண்றாங்க” என பட்டென்று தன் யூகத்தை வெளிப்படுத்த, நேஹா தான் அதிர்ந்துவிட்டாள். ரித்து “வாவ்.. அப்படி இருந்தா செம்மல.. பாஸ் ஸ்டாப் லவ் ஸ்டோரி, இல்ல இல்ல ஓ மை கடவுள் படத்துல வரமாதிரி லவ்.. கதைப்போமா.. கதைப்போமா” என்று பாட, அதில் நேஹாவுக்கு சிரிப்பு வந்துவிட்டது, ரித்துவின் தலையில் குட்டியவள் “வா போவோம்” என்று அவளை அழைத்துக்கொண்டு சென்றாள்.

அங்கு ஆருவுடன் இறங்கிய ரேயன் அவள் பின் செல்ல, அவன் வருவதை உணர்ந்தவள் வேக எட்டுகளுடன் வீட்டை நோக்கி செல்ல, இரண்டே எட்டில் அவளை நெருங்கியவன் அவள் கரத்தை பற்றி “கொஞ்சம் பேசணும்” என்றான்.(இங்கேயும் அதே சீன்னு நினைப்பீங்க அதான் இல்ல….?) ரேயனின் பிடியிலிருந்து தன் கையை உறுவியவள் “பேச என்ன இருக்கு” என்று இறுகிய குரலில் கேட்க, ரேயன் தொண்டையை செருமிக்கொண்டு “ஆத்ரேயனா பேச வரல உன்னோட அத்துவா பேச வந்திருக்கேன்” என்றான்.

ரேயனின் கூற்றில் நக்கலாக இதழ் வளைத்தவள் “என்னோட அத்துவா.. ஐ அம் சாரி மிஸ்டர் எனக்கு அப்படி யாரையும் தெரியாது” என்றவள் வீட்டினுள் சென்று கதவை அடைத்துக்கொள்ள, அவள் வீட்டின் வாயிலில் நின்று “ரொம்ப தான் பண்ணுறா” என முணுமுணுத்தவன் அலைபேசியை எடுத்து அழைத்தது என்னவோ ஜெயபிரகாஷிற்கு தான்.

அவன் வெளியே நின்று போனில் பேசிக்கொண்டு இருக்க, பின்னால் இருந்து ஒரு குரல் கேட்டது (வேறு யாரு சாக்ஷாத் நம்ம சிவகுமார் அவர்கள்தான்)

சிவகுமார் “என்ன மாப்பிள்ளை இந்த பக்கம்” என்று குரல் கொடுக்க, அக்கம் பக்கம் பார்த்தவன் “யாரு டா அது.. வேற யரையாச்சு கூப்பிடுறாங்களோ” என்று மீண்டும் போனை காதில் வைக்க, சிவகுமார் “மாப்பிள்ளை மேல பாருங்க” என்றார். ரேயனோ அலைபேசியை வைத்துவிட்டு மேலே பார்க்க, அங்கு பால்கனியில் சிவகுமார் நின்று கையாட்டிக்கொண்டிருந்தார். அவரை பார்த்து முத்து பற்கள் தெரிய புன்னகை சிந்தியவன் “ஹாய் அங்கிள்… சாரி மாமா” என்றான்.

சிவகுமார் “என்ன, இங்க என்ன பண்றீங்க” என்று வினவ,  ரேயன் “உங்க பொண்ணுகிட்ட பேசலாம்னு பாத்தா மதிக்காம போயிட்டா” என்று புகார் பத்திரிகை வாசிக்க, சிவகுமார் “மாப்பிளை என்ன நீங்க.. எங்கயாச்சு கை கால் தூக்கிட்டு போனாதான் அவ கேட்பா.. இல்லனா கஷ்டம்தான்.. எல்லாம் அவ அம்மாகிட்ட இருந்து வந்தது” என்று சலித்துக்கொள்ள, அவர் பின் வந்த நிலா  “எல்லாம் பொய்.. என்கிட்ட இருந்து வந்துதாம்” என்று அங்கலாயா, அவர்களை பார்த்து வாய் விட்டு சிரித்தான், திடீரென்று தன் தாய் தந்தை நியாபகம் வர, அதில் முகம் வாடியவன் அவர்கள் சுதாரிக்கும் முன் தன்னை சரி செய்து கொண்டு “சரி அத்தை விடுங்க.. நான் நாளைக்கு வந்து உங்கள பாக்குறேன்” என்றான்.

சிவகுமார் “வீட்ல இருக்க பிசாசு என்ன பண்ணும் தெரியலயே” என்று கூறும் போதே ஆரு அவர்களை தேடி அங்கு வந்தாள். அங்கு நடந்துக்கொண்டிருந்ததை கண்டு கடுப்பானவள் “அப்பா.. என்ன பைத்தியமா உங்களுக்கு” என்று சத்தமிட,

சிவகுமார் “என்ன யாரும் வெளிய அப்படி கூப்பிடல.. உன்ன கூப்பிடாம பாத்துக்கோ” என்றார் நக்கலாக. ஆரு “போதும் வாங்க உள்ள.. யார்கிட்டனாலும் பேசிட்டு இருப்பிங்களா” என்று ரேயனை முறைத்துக்கொண்டே கூறினாள்.

நிலா “யாரோவா.. உனக்குவேணா யாரோவா வச்சிட்டு போ எங்களால முடியாது” என்று சிலுப்பிக்கொண்டு உள்ளே செல்ல, சிவகுமார் “பை ரேயன்.. நாளைக்கு பாப்போம்” என்று ஆரு என்ற தீயில் எண்ணெய்யை வார்த்தார்.

ஆருவோ ரேயனை திரும்பி பார்க்க, சில பறக்கும் முத்தங்களை தாராளமாக வழங்கினான். ஆரு “ஸ்டுபிட்” என்று முணுமுணுத்துவிட்டு உள்ளே செல்ல,

ரேயன் “நாளைக்கு பாக்கலாம் டார்லிங்” என்று கத்திவிட்டு வந்தவனின் முன் வண்டியை நிறுத்திய கிஷோர் “இதுக்கு நீ என்கூடவே வந்திருக்கலாம்” என்று நக்கலாக கூற, ரேயன் “சரி விடு.. காதல்ல சில சறுக்கல்கள் இருக்க தான் செய்யும் அதெல்லாம் தட்டிவிட்டுட்டு போயிட்டே இருக்கனும்” என்றான்.

கிஷோர் “அது சரி” என்றவன் “அடுத்து என்ன கிறுக்குத்தனம் பண்ணலாம்னு இருக்க” என்று வினவ, இருக்கையில் நன்றாக சாய்ந்தமர்ந்தவன் விசிலடித்தபடி தன் திட்டத்தை கூற, அதை கேட்டு ஒரு மாதிரியாக தலையாட்டியவன் “நீ என் பார்ட்னர் கிட்ட அடிவாங்காம போக மாட்ட போல” என்று கேலி செய்ய, அதில் வாய் விட்டு சிரித்தான் அவன்.

இரண்டு நாட்கள் விடுமுறையில் கழிய, மறுநாள் காலை அலுவலகம் சென்ற ஆருவை அழைத்த ஜெயபிரகாஷ் “ஆராத்யா.. நமக்கு ஒரு பெரிய ப்ரொஜெக்ட் கிடைச்சிருக்கு.. ஏ.ஆர். குரூப்ஸ் அண்ட் பியூரோ கம்பெனி சேர்ந்து பண்ண போற ப்ரொஜெக்ட்ல நம்மலும் ஒரு பார்ட்னரா இருக்க போறோம்.. அதை நீ எடுத்து பண்ணா இன்னும் நல்லா இருக்கும்” என்று கூற, ஆரு “இல்ல சார்.. கௌதம் இல்லனா வேற யாராவது அந்த ப்ரொஜெக்ட்டை பண்ண சொல்லுங்க.. எனக்கு வேற சில ப்ரொஜெக்ட்ஸ் இருக்கு” என்றவளை தடுத்தவர் “நோ ஆராத்யா.. வேற ப்ரொஜெக்ட்ஸ் வேணா கௌதம் பண்ணட்டும்.. நீ இதை பண்ணு” என்றிட, வேறு வழியின்றி அதை ஒப்புக்கொண்டவள் “எல்லாம் அந்த ரேயனோட வேலையா தான் இருக்கும்.. இருடா இருக்கு உனக்கு” என மனதினுள் அவனை வருத்தெடுத்தபடி அக்னியின் அலுவலகத்திற்கு சென்றாள்.

செல்லும் வழியில் பல யோசனைகளில் இருந்தவள் உணர்ச்சிகள் துடைத்த முகத்துடனே அவன் அலுவலகத்தினுள் நுழைந்தாள். சரியாக அதே நேரம் ஏதோ வேலையாக வெளியே வந்த அக்னி அவளை கண்டு சிலையாகி நிற்க, அவளோ உணர்ச்சிகளற்ற முகத்துடன் நின்றிருந்தாள்.

ஆராத்யா வருவதை சிசிடிவி வழியாக கவனித்து அங்கு வந்த ரேயன், “ஹான் மாப்ஸ்.. சொல்ல மறந்துட்டேன்.. நம்ம ப்ரொஜெக்ட்ல ஜெபி குரூப்ஸ்ஸும் ஒரு பார்ட்னர், அதோட ரெப்ரெசென்டேட்டிவ் தான் மிஸ் ஆராத்யா, சூன் மிஸஸ் ஆத்ரேயன்” என்று கிடைத்த வாய்ப்பில் கெடா வெட்ட, அவனை தீயாய் முறைத்தவள் “என்னோட வேலை என்னன்னு சொன்னா நான் முடிச்சிக்கொடுப்பேன்” என்று பரபரக்க, ரேயன் ‘என் கண்ணு முன்னாடி இருக்குறது மட்டும் தான் உன் வேலை’ என மனதினுள் கவுண்டர் கொடுத்தவன் “உங்க வேலைய பத்தி நேஹா சொல்லுவாங்க” என்றவன் தொடர்ந்து “அதோ அந்த கேபின் தான் நமக்கு” என்றான்.

ரேயனின் கூற்றில் இன்னும் வெறியானவள் அங்கு வந்த நேஹாவிடம் “இவ்ளோ பெரிய கம்பெனில எனக்கு தனியா கேபின் கூட இல்லையா” என்று எரிந்து விழ, அதில் பேந்த பேந்த முழித்த நேஹாவோ “கேபின் தான வா” என்று அவளை அழைத்து செல்ல, அவர்களை கண்டுகொண்டிருந்த அக்னியின் தோளில் கை போட்ட ரேயன் “எப்படிடா அவளை சமாளிச்ச” என்று சலித்துக்கொள்ள, முதல் முறையாக ரேயனின் கூற்றில் இதழ் பிரித்தவன் அதை அவனிடம் காட்டிக்கொள்ளாமல் மறுபக்கம் திரும்பி, வெளியே சென்றான். அதை கண்ட ரேயன் “டேய் நான் என்ன உன் லவரா, சிரிப்பு வந்தா சிரிச்சிட்டு போ, இப்படி ஒடுற” என்று தனக்குள்ளே புலம்புவதாக எண்ணி கொஞ்சம் சத்தமாகவே புலம்ப, அதை கேட்டபடி அங்கு வந்த கிஷோர் “ச்சை.. என்ன டா உன் பொழப்பு இப்படி ஆகிருச்சி” என்றவன் தொடர்ந்து “என்ன பண்றது, சால்ட் ஈட் பண்ணா தண்ணி ட்ரிங்க் பண்ணிதான ஆகணும்” என்று மட்டமான கவுண்டர் போட, ரேயனோ அவனை கேவலமான ஒரு பார்வை பார்த்து விட்டு வெளியே சென்றான். செல்லும் அவனை கண்ட கிஷோர் “அத்து டேய் எங்க போற” என்று வினவ,

ரேயன் “சொல்ல முடியாது” என்றான் சிலுப்பிக்கொண்டு.

கிஷோர் “திமிரு மட்டும் குறையுதா பாரு” என்று முணுமுணுத்துக்கொண்டே திரும்ப, அங்கு ராகுலும் சுஷ்மியும் கிஷோர் பேசியதை கேட்டு அதிர்ந்தபடி அக்னியின்  அலுவலகத்தினுள் நுழைந்தனர்.

இருவரும் பேயரைந்தார் போல் கிஷோரை நோக்கி வர, அவர்களின் முக பாவனையை கண்ட கிஷோர் “அடச்சி எதுக்கு இப்படி சிட்டி ரோபோக்கு பேய் புடிச்சமாதிரி வரிங்க ரெண்டு பேரும்” என்று வினவ, ராகுல் “நீங்க சாரை” என்று தொடங்க, “டேய்னு கூப்பிடுறீங்க” என்று சுஷ்மி முடித்தாள், கிஷோர் சிறிதும் அலட்டிக்கொள்ளாமல் “பின்ன என் 23வருஷ பிரண்ட்ட எப்படி கூப்பிடுவாங்களாம்” என்று கேட்க, இரண்டு பேரும் ஆவென வாயை பிளந்து கொண்டு நின்றனர்.

.

.

.

.

.

இம்ரான் “என்ன அவ்ளோ சீக்கிரம் உன் குடும்பத்தை விட்டுடுவேன்னு நினைக்குறியா” என்று நக்கலாக வினவ,

அவன் முன் அமர்ந்திருந்தவரோ “நான் இருக்க வரைக்கும் ஏதும் ஆகா விடமாட்டேன்” என்றார். இம்ரான் “இவ்ளோ வருஷம் ஆனாலும் உன் திமிரு மட்டும் குறையல பாரேன்” என்று போலியாக ஆச்சிர்யப்பட, சரியாக அப்போது உள்ளே நுழைந்த ரேயன் “ஒருவேளை என்னோட அப்பான்றதால அப்படி இருக்குமோ” என்று கேள்வியாக அவனை ஏறிட, இம்ரான் “வா டா வா… நீ எப்படியும் வருவன்னு எனக்கு தெரியும்..” என்றான். ரேயன் “பிரில்லியன்ட் வில்லன் நீதான் டா” என்று மெச்ச, இம்ரான் “சரி வா நீயும் வந்து உட்காரு பேசுவோம்” என்றான். “இன்னொரு சேரும் போடு.. நானும் பேச வரேன்” என்றபடி அக்னி உள்ளே நுழைய, ரேயன் அவனை தீயாக முறைத்தான்.

தொடரும்..

Advertisement