Advertisement

                    அத்தியாயம் 25

           ஆராத்யா உறங்க சென்றவுடன் கௌதம் மற்றும் சித்துவும்  உறங்க சென்றனர், ரேயனும் எழுந்து கதவின் அருகே நின்றுகொண்டான். கௌதம், ஆத்ரேயன் வந்ததிலிருந்து அவனையும் ஆரத்யாவையும் கவனித்துக்கொண்டு தான் இருந்தான் அவர்கள் சரியில்லை என்பதையும் உணர்ந்தே இருந்தான் ஆனால் அவளிடம் எதுவும் கேட்டுக்கொள்ளவில்லை.

       ரேயன் எழுந்து செல்ல கிஷோரும் அவன் பின் சென்றான்.கதவின் அருகே நின்றுகொண்டிருந்த ஆத்ரேயனின் தோளை பிடித்து தன் பக்கம் திருப்பிய கிஷோர் “மச்சா எதாச்சு சாப்பிடுடா.. லன்ச்ல இருந்து சாப்பிடாம இருக்க” என்று அக்கறையுடன் கூற அவனை உணர்ச்சிகள் துடைத்த முகத்துடன் ஏறிட்ட ரேயன் “கிச்சா ப்ளீஸ்.. என்கிட்ட எதுவும் பேசாத.. எதாச்சு பேசிட போறேன்னு பயமா இருக்கு.. நீ போய் தூங்கு” என அவனை அனுப்ப முயற்சித்தான். ஆனால் கிஷோரோ அசையாது அவனை பார்க்க, ஆத்ரேயன் “என்ன பார்த்தா பைத்தியக்காரன் மாதிரி இருக்குல” என்று வலி நிறைந்த புன்னகையுடன் வினவ கிஷோருக்கோ அவன் வார்த்தைகள் வலியை கொடுத்தது. கிஷோர் “ஒரு தடவை பேசி பார்க்கலாம்ல” என்று மென்மையாக கூற அவனை அமைதியாய் ஏறிட்ட ரேயன் “சிலது பேசி புரியவைக்க முடியாதுடா.. அப்படியே பேசினாலும் புரியாம தான் போகும்.. அதான் அமைதியா இருக்கேன் அண்ட் நான் என்ன ப்ரூவ் பண்ண வேண்டிய அவசியம் இல்ல.. பண்ணவும் மாட்டேன்” என வருத்தமாக தொடங்கியவன் கோபமாக முடிக்க

கிஷோர் “நீ யார்கிட்டயும் ப்ரூவ் பண்ண வேண்டாம் ஆனா மிஸ் அண்டர்ஸ்டேண்டிங்கா இருந்தா” என்று கேள்வியாய் நிறுத்த அவனை பார்த்து மறுப்பாக தலையசைத்தவன் “ஈகோ இல்லாத உண்மையான காதல்ல மிஸ் அண்டர்ஸ்டேண்டிங் அப்படின்றது பெரிய விஷயம் கிடையாது.. ஆனா இங்க அப்படி இல்ல” என்று கூறும் போதே அவன் குரல் பிசிறடித்தது. அவன் கூறியதை கேட்டு கடுப்பான கிஷோர் “அப்போ உனக்கு ஈகோ இல்லன்னு சொல்லுறியா” என்று கோபமாக கேட்க, மெலிதாக புன்னகைத்தவன் “ஈகோவா.. அவக்கிட்டயா” என்று இடமும் வலுமாக தலையசைக்க, கிஷோர் “இப்போ எதுக்கு சிரிக்கிற.. சொல்லு.. நீ மட்டும் அன்னிக்கி நடந்த இன்சிடெண்ட்க்கு அப்பறம் பேச முயற்சி பண்ணியா” என்று கூர்மையாக அவனை பார்த்தபடி கேட்டான்.

அவன் கேள்வியில்  பெருமூச்சு ஒன்றை வெளியிட்ட ரேயன் “பண்ணேன்” என்றான், அவன் பதிலை  காதில் வாங்காது கிஷோர் “பண்ணல தான.. அப்போ ஈகோ” என்று அவன் பேசும் முன் ரேயன் சத்தமாக “நான் முயற்சி பண்ணேன்.. முப்பதுவாட்டிக்கு மேல முயற்சி பண்ணேன்” என்று கத்த கிஷோரோ அவன் கூறியதை கேட்டு அதிர்ந்து நின்றான்.

கிஷோர் “நி..நிஜமாவா சொல்லுற” என்று கேட்டவனுக்கும் அவன் கூறியது புதிய செய்தி அல்லவா. ரேயன் ஆருவுடன் பேசவில்லை என்றல்லவா அவன் இதுவரை நினைத்துக்கொண்டிருந்தது.

ரேயன் “ம்ம்.. பேசுனேன்” என்றான் உணர்ச்சிகலற்று,

கிஷோர் “எப்போடா” என்று புரியாமல் கேட்க

“அன்னிக்கி வீட்டுக்கு போன அப்பறம்.. அடுத்த நாள்ல இருந்து அந்த வாரம் முழுக்க அவகிட்ட பேச முயற்சி பண்ணேன்.. பட் நான் பண்ணது தப்புன்னு லேட்டா தான் புரிஞ்சிகிட்டேன்” என்று விரக்தியாக கூறினான்.

கிஷோர் “அப்போ நீ பேச முயற்சி பண்ணியும் அவ உன்கூட பேசலயா” என்று ஆதங்கமாக கேட்க ஆம் என்பதாய் தலையசைத்தவன் “அதுக்கு அப்பறம் தான் எதுவும் வேண்டாம்னு முடிவு பண்ணி ஊர விட்டு போனேன்.. மறுபடியும் சொல்லுறேன் கிச்சா.. எடுத்த உடனே தூக்கி போடுற ஆள் நான் இல்லடா.. என்ன தான் எல்லாரும் தூக்கி போட்டுட்டாங்க” என்றான் வலி நிறைந்த குரலில், அவன் கூறியதை கேட்டு கிஷோர் கண்கள் கலங்கியது. இத்தனை வலியையும் தாங்கிக்கொண்டு வலம் வருபவனை அவனும் வார்த்தைகளால் காயப்படுத்தியுள்ளான் அல்லவா.

ஆத்ரேயனை இறுக அணைத்துக்கொண்ட கிஷோர் “சாரிடா.. எல்லாம் சீக்கிரம் சரியாகிடும்” என்று தட்டி கொடுக்க அவனை விலக்கி விட்டு கண்ணுக்கு எட்டாத புன்னகையை சிந்தியவன் “நீ இல்லனா இந்த ஆத்ரேயன் என்னிக்கோ ஒன்னுமே இல்லாம போயிருப்பான் கிச்சா” என உடைந்த குரலில் வருந்த, அவனை சகஜமாக்கும் பொருட்டு கிஷோர் “ஆமா என்ன பண்ணுறது.. எல்லாத்தையும் நான் தான் பாக்க வேண்டியதா இருக்கு.. சே சே.. கஷ்டம்ப்பா” என்று போலியாக சலித்துக்கொள்ள அதில் மெலிதாக புன்னகைத்து ரேயன் “போடா டேய்.. போய் தூங்கு” என்றான்.

கிஷோர் “நீயும் வா.. எதுவும் யோசிக்காம வந்து படுடா.. நாளைக்கு இறங்கி திரும்பி பார்க்காம போயிடலாம்” என்று கூறியவன் ரேயனின் மனதை இப்போது  நன்கு அறிந்திருந்தான்.

ஆத்ரேயன் “இல்ல கிச்சா.. எனக்கு அவளை பார்க்க வேண்டாம்.. இன்னும் கொஞ்ச நேரம் தான.. ஐ வில் மேனேஜ்” என்று மறுத்துவிட அதற்கு மேல் அவனை தொந்திரவு பண்ண கிஷோருக்கும் விருப்பமில்லை. கிஷோர் “சரி பார்த்து.. கதவு முனைல போய் நிக்காத” என்றுவிட்டு சென்றவனின் மனது இப்போது பாரமாகியது. இவ்வளவு வலி அவன் மனதில் இருந்தும் அதை தன்னிடம் கூட காட்டிக்கொள்ளமல் அவன் தனக்குள்ளே மருகிக்கொண்டிருக்கிறான் என்று நண்பனுக்காக வருந்தியவன் இதற்கு  விரைவில் தீர்வு காண வேண்டும் என்று மனதில் நினைத்துக்கொண்டான்.

கிஷோர் சென்ற பின் ரேயன் கதவின் மீது சாய்ந்துகொண்டு பாடல்கள் கேட்டுக்கொண்டிருந்தான்.

உறக்கம் வராமல் புரண்டுக்கொண்டிருந்த ஆராத்யா முகம் கழுவ எழுந்து சென்றாள். சரியாக ஆரு முகம் கழுவ செல்லும் போது ரயில் வேகமெடுக்க, கதவின் அருகே அவள் வரும் போது ரயில் குலுங்க கதவின் ஓரத்தில் நின்றிருந்தவனின் கை பிடித்தவள் “ஐயோ பாத்து” என்று பதற அவனோ தன் கை பிடித்தவளை திரும்பி பார்த்தான். அவளும் அப்போது தான் அது ஆத்ரேயன் என்று உணர்ந்தாள் ஆனால் அவள் பற்றியிருந்த கையை விலக்கவில்லை.

ஆத்ரேயனும் அவளை தான் பார்த்துக்கொண்டிருந்தான், முதுகு வரை வளர்ந்திருந்த கூந்தலை தோள் வரை வெட்டிருந்தாள், கண்ணில் பழுப்பு நிற லென்ஸ் அணிந்து ஆளே மாறியிருந்தாள். ஆராத்யாவும் அவனை தான் பார்த்துக்கொண்டிருந்தாள். கல்லூரியில் க்ளீன் ஷேவ் செய்திருந்தவன் இப்போது மீசை தாடியுடன் கம்பீரமாய் நின்றுக்கொண்டிருந்தான் அவன் முகமோ எப்போதும் போல் இறுகி இருந்தது. இருவரும் தங்கள் இணையின் கண்களை தான் பார்த்துக்கொண்டிருக்க இருவரின் மனமும் மீண்டும் கல்லூரி நாட்களுக்கு சென்றது.

ஆக்சிஜன் தந்தாயே

முன்னொரு பொழுதினிலே..

மூச்சுக் காற்றை மொத்தம்

திருடிப் போனாய் எதனாலே..

ஏழு வருடங்களுக்கு முன்..

அனைவரும் மூன்றாம் வருடம் படித்துக்கொண்டிருந்த தருணமது.

இரவு பத்து மணிக்கு ஆராத்யா ஆழ்ந்த உறக்கத்தில் இருக்க அவளின் உறக்கத்தை கலைக்கும் வண்ணம் அடித்தது அவள் அலைபேசி. உறக்கத்தில் கண்ணை கூட திறக்காது அழைப்பை ஏற்றவள் “ஹலோ” என்று குரல் குலற பேச மறுபக்கமிருந்த நேஹாவோ “அடியே கிட்டி.. தூங்கிடாத டி.. அகி பர்த்டே.. விஷ் பண்ணனும்ல” என்று கத்த

ஆரு “தூக்கம் வருதே டி” என்றாள் அப்போதும் உறக்கத்திலிருந்து தெளியாமல். கான்பரேன்ஸ் காலில் இருந்த கதிர் “அடியேய்.. கேக் வாங்கி வெயிட் பண்ணிட்டு இருக்கோம் நாங்க.. பத்தாததுக்கு டெகரேஷன் வேற பண்ணோம்ல.. அதுக்காகவாச்சு முழிச்சிட்டு இருடி.. இப்படியெல்லாம் தூங்கி வழியாத” என்று பேசிக்கொண்டிருக்கும் போதே அவள் உறங்கியிருக்க, கதிர் “என்னடி.. சத்தமே காணோம்” என்று நேஹாவிடம் கேட்டான், அவளோ தலையில் அடித்துக்கொண்டு “இவ்ளோ பெருசா மொக்க போட்டா.. தூங்கிருப்பா.. சரி கத்து வா” என்றாள்.

நேஹா மற்றும் கதிர் கோரசாக “ஆருஊஊஊஊ” என்று கத்த, ஆரு “ஹான் ஹான்.. ஹாப்பி பர்த்டே அகி” என்று உலற

நேஹா “அட பக்கி.. நீ இன்னும் எங்க கூட தான் பேசுற” என்று கத்த,

ஆரு “ஹே.. வை போன.. அகி எழுப்புவான்.. 11:50” என்று அழைப்பை துண்டித்துவிட்டாள். நேஹா “டேய் அவளை விடு.. நீ 11:45க்கு வந்திடு.. நானும் வந்திடுறேன்” என்று திட்டத்தை கூற, கதிர் “உங்க அப்பாவை எப்படி சமாளிப்ப” என்று அடக்கப்பட்ட புன்னகையுடன் கேட்க

நேஹா “யாரு சொல்ல போறா.. எகிறி குதிச்சு வர வேண்டியது தான்.. சரி பை” என்று அழைப்பை துண்டித்துவிட

கதிர் “அட 420” என தலையில் அடித்துக்கொண்டான்.

நேஹாவிடம் பேசிய ஆரு அடுத்ததாக அக்னிக்கு தான் அழைப்பு விடுத்தாள். ஏதோ படம் பார்த்துக்கொண்டிருந்தவன் ஆரு அழைப்பதை பார்த்து மென்முறுவலுடன் அழைப்பை ஏற்று “சொல்லு” என்றான், மறுமுனையில் இருந்தவளோ உறக்க கலக்கத்தில் “அதான் உனக்கே தெரியும்ல அகி” உலற அவள் குரல் கேட்டு நன்றாகவே புன்னகைத்தவன் “என்னடி லூசு” என்று புன்னகையுடனே கேட்க அவளோ “11:50க்கு எழுப்பி விடு” என்றாள். அதை கேட்டு தலையில் அடித்துக்கொண்டவன் “விஷ் பண்ணவா” என்று அடக்கப்பட்ட புன்னகையுடன் கேட்க அவளோ “இல்ல” என்றாள், அக்னி “வேற எதுக்காம்” என்றான் சிறுப்பிள்ளையிடம் கேட்டுக்கும் தொனியில்.

ஆரு “கேக் சாப்பிடனும் அகி.. ப்ளூபெர்ரி வேற.. மறந்துடாத” என்றாள். அக்னி “சரி சரி தூங்கு போ” என்றிட அவளோ அவனிடம் பேசிக்கொண்டே அழைப்பை கூட துண்டிக்காது உறங்கிப்போனாள். அழைப்பை துண்டித்தவனின் இதழ்களோ அவளை நினைத்து புன்னகையில் சிந்தியது.

மணி சரியாக 11:45 என்றிருக்க அக்னி ஆருவிற்கு அழைப்பு விடுத்தான். எப்படியோ அவள் எளிதில் அழைப்பை எடுத்துவிட மாட்டாள் என்பதை அறிந்து தான் அவன் சற்று முன்னிலிருந்தே அவளுக்கு முயற்சித்துக்கொண்டிருந்தான் அதே போல் தான்  பத்து பதினைந்து அழைப்பிற்கு பின்னரே அழைப்பை ஏற்றவள் “அகி அகி.. இதோ எழுந்துட்டேன்.. இனி தூங்கள.. வை வை நான் 12க்கு பண்ணுறேன்” என்று படபடத்துவிட்டு அவன் வீட்டிற்கு ஓடினாள்.

யாரோ ஓடும் சத்தம் கேட்டு வெளியே வந்த சிவகுமார் “ஹே நிலா.. உன் பொண்ணை பிடி தூக்கத்துல நடக்குற வியாதி கேள்வி பட்டிருக்கேன்.. இவ என்ன தூக்கத்துல ஓடுறா” என்றவரை முறைத்த நிலா “ஐயோ ப்பா.. முடியல உங்க காமெடி சென்ஸு.. நாளைக்கு கண்ணா பிறந்தநாள்.. அங்க தான் போறா போல” என்று சரியாக யூகிக்க சிவக்குமாரும் “ஓ.. நாளைக்கு நல்லவன் பிறந்தநாளா அது சரி” என்று உறங்க சென்றார்.

அக்னியின் வீட்டு வாசலில் மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்க நின்றவள் நேரத்தை பார்க்க அது 11:50 என்று காட்டியது. உடனே நேஹாவிற்கு அழைத்தவள் “கிட்டி” என்றிழுக்க நேஹாவோ உச்சபச்ச கடுப்பில் “ஹே.. வந்து தொலடி.. இப்போவே 11:55 ஆகிடுச்சு” என்று கத்த, ஆரு “அட பைத்தியமே.. நான் வீட்டு வெளிய தான் நிக்கிறேன்.. எப்படி உள்ள வர்ரது” என்று கேட்க

நேஹா “ஆமால.. நீ வேற அவனை எழுப்பி விட சொல்லி எழுப்பி விட்டுட்ட.. சின்ன சத்தம் கேட்டாலும் அவன் வந்திடுவான்.. என்ன பண்ணலாம்” என்று யோசிக்க

“நீ வை.. நான் அவன்கூடவே வரேன்” என்றவள் அழைப்பை துண்டித்துவிட்டு அக்னிக்கு அழைத்தாள்.

அழைப்பை ஏற்றவன் “சொல்லு” என்க அவளோ நக்கலாக “இப்போவே சொல்ல முடியாது.. கதவை திற” என்றாள் உத்தரவாக அதில் விழி விரித்தவன் “வாட்” என அதிர, அவன் அதிர்ச்சியை ஒரு பொருட்டாக மதிக்காதவள் “திற டா டேய்” என்றாள்.  அழைப்பை துண்டித்துவிட்டு அவசரமாக கதவை திறந்தவன் முன் ஹூடியுடன் நின்றவள் அவனை தாண்டி உள்ளே செல்ல, அவனோ “என்னடி பண்ணுற.. ஏன் இப்போ.. எப்போவும் மார்னிங் தான வருவ” என்று கேட்க அதில் ‘எவ்ளோ கேள்வி கேட்குறான்’ என போலியாக சலித்தவள் “எனக்கு உன்ன பார்க்கனும்னு தோனுச்சு அதான் வந்தேன்” என்றாள். அக்னியோ மனதில் ‘உனக்கு தோனுது ஆனா எதிர்த்த வீட்ல இருந்தும் கூட அவ கால் தான் பண்ணுவா’ என நினைத்தவன் பெருமூச்சுடன் அவள் அருகே சென்றான்.

சோபாவில் அமர்ந்தவள் “கல்லும்மா.. மிலிட்டரி தூங்கிட்டங்களா” என்று கேட்க ‘ம்ம்’ என்றான். ஆரு நேரத்தை பார்த்துவிட்டு “சரி வா மாடிக்கு போகலாம்.. வழக்கம் போல ரெண்டும் மாடில நின்னு கை ஆட்டும்” என்று அவனை இழுத்துக்கொண்டு செல்ல அவனோ “அவங்களையும் கூட்டிட்டு வந்திருக்கலாம்ல” என்று முதல் முறை வாய் விட்டு மனதில் நினைத்ததை கேட்டான். ஆருவோ அவனை ஒரு மார்க்கமாக பார்த்துவிட்டு “டேய் அதான் உன் மாமனார பத்தி தெரியும்ல.. அப்பறம் என்ன.. கதிரும் துங்கிட்டான் போல.. மேல போயிட்டு கால் பண்ணுவோம்” என்றவள் மாடி படிக்கட்டில் ஏற, அவள் கூறியதை கேட்டு சிரித்தவன் அவளுடன் ஏறினான்.

மாடி கதவை திறக்கும் முன் அக்னியின் கண்ணை பொத்தியவள் “ஏன்டா இவ்ளோ ஹைட்டா இருக்க..” என்று கேட்க அதில் வாய் விட்டு சிரித்தவன் “இப்போ எதுக்குடி கண்ணை மூடுற” என்று வினவ அவளோ “டேய் மட சாம்பிராணி.. வெயிட்.. 3..2..1” என்று கதவை காலால் திறந்துவிட்டு அவன் கண்ணிலிருந்து கையை எடுக்க எதிரில் நேஹா, கதிர், ஸ்மிருதி மற்றும்  கல்பனா நின்றுகொண்டிருந்தனர்.

ஆருவும் அவர்களுடன் சேர்ந்து நின்றுக்கொள்ள, அனைவரும் ஒரே நேரத்தில் “ஹாப்பி பர்த்டே அக்னி” என்று கத்தினர். ஸ்மிருதி “ஆன்.. நோ.. ஹாப்பி பர்த்டே ண்ணா” என அவனை அணைத்துக்கொள்ள அவனும் அவளை அணைத்து “தேங்க்ஸ்டா குட்டி.. நீ ஏன் இன்னும் தூங்காம இருக்க” என்று வினவ அவளோ “உனக்காக 5%.. கேக்குக்காக 95%” என்றாள் குறும்பாக. அவள் கூறியதை கேட்டு சிரித்தவன் தன் தாயை பார்க்க அவரோ அவனை தோளோடு அணைத்துக்கொண்டு “ஹாப்பி பர்த்டே அக்னி” என்றார், “தேங்க்ஸ் மா” என்றவன் அவரை அணைத்துக்கொள்ள

ஆரு “கல்லுமா மிலிட்டரி எங்க” என்று கேள்வியெழுப்ப, கல்பனா “அவர் தூங்கிட்டார் ஆரு” என்றார் கவலையாக, அதை கேட்ட அக்னிகோ வெறுப்பாக இருந்தது ஆனால் அவன் அதை காட்டிக்கொள்ளவில்லை.

ஆரு “சரி விடுங்க விடுங்க.. அகி வா கேக் கட் பண்ணலாம்” என்றழைக்க அவனோ நேஹாவை பார்த்தான். நேஹா கண்களை சுழட்ட அப்போது தான் அவர்கள் செய்து வைத்திருந்த அலங்காரத்தை பார்த்தான்.

நிழல் பந்தலின் கீழ் வண்ண விளக்குகள் மின்ன அதன் பின்னணியில் ‘ஹாப்பி பர்த்டே அகி’ என்று தங்க நிற பலூனில் கோர்க்கப்பட்டிருக்க அதை சுற்றி அக்னியின் சிறு வயது முதல் இப்போது வரையிலான புகைப்படங்கள் தொங்க விடப்பட்டிருந்தது.

அக்னி “வாவ்.. இதெல்லாம் எப்ப பண்ணீங்க” என்று வியக்க, ஆருவோ “நாங்க ஜஸ்ட் ஹெல்ப் தான்பா பண்ணும்.. ஐடியா முதற்கொண்டு எல்லாத்தையும் கலக்ட் பண்ணது தலைவி நேஹா தான்” என்று மெச்ச அக்னி மீண்டும் ஒருமுறை அந்த அலங்காரத்தை பார்த்தான்.

கதிர் “நீ பொறுமையா பாருடா சாமி.. இப்போ கேக் கட் பண்ணு” என்று அவனை இழுத்துக்கொண்டு வர அவனும் புன்னகையுடன் கேக்கை வெட்டினான். கேக் வெட்டி ஊட்டிய பின் ஸ்மிருதி “நான்தான் பர்ஸ்ட் கிப்ட் கொடுப்பேன்” என்று துள்ள

கதிர் “சீன் போடாத.. கொடு” என்று கேலி செய்ய “பே” என்றவள் அங்கியிடம் பரிசை வழங்கினாள். அதில் அவளும் அக்னியும் இருக்கும் புகைப்படம் ஒன்று பிரேம் செய்யப்பட்டிருந்தது அந்த பிரேமை பார்த்து விழி விரித்தவன் “ஹே ரௌடி.. நீயா பண்ண.. செம்மையா இருக்கே” என்று கூற,  அவளோ “ஆம்” என்க அக்னியோ அவளை தோளோடு அணைத்துக்கொண்டு “தேங்க்ஸ் குட்டி” என்றவன் அவள் உச்சியில் இதழ் பதித்தான்.

ஸ்மிருதி “டேய் கதிரு.. பிஜிஎம் போடுடா.. எங்க அண்ணன் எங்க அண்ணன்னு” என்று கூற, கதிர் “நல்ல மரியாதை கூட பிறந்தவனுக்கு.. நன்றுடா” என்றான் நெஞ்சில் கைவைத்து. கல்பனா அவனுக்காக ஒரு சட்டையை பரிசளித்தவர் அவர்களுக்கு தனிமை கொடுத்துவிட்டு சென்றுவிட்டார்.

அடுத்து கதிர் அவனுக்கு கை கொடுத்து “மச்சா நானே உனக்கு பெரிய கிப்ட்.. எதுக்கு தனியா இன்னோரு கிப்ட்” என்று இளிக்க, பெண்கள் மூவரும் ஒரு சேர “உனக்கு வெக்கமே இல்லையா” என்று கேட்க அக்னியோ வாய் விட்டு சிரித்தவன் “உண்மை தான் மச்சான்.. நீயே பெரிய கிப்ட் தான்” என்றான். அடுத்து ஆரு அவன் பெயர் பொறிக்கப்பட்டிருந்த  காப்பு ஒன்றை போட்டுவிட்டு “எப்படி மாஸ்ஸா” என்று விழி விரித்து வினவ

“செம்ம” என்றான். ஆரு “தேங்க்ஸ் சொல்லுடா” என்று அவன் தோளில் அடிக்க அவனோ மறுப்பாக தலையசைத்து “முடியாது” என்றான்.

ஆரு “டேய் கதிரு.. வா போலாம்.  இங்க வந்ததுக்கு மானம் தான் போகுது.. ஹே அர டிக்கெட்டு வாடி” என்று இருவரையும் இழுத்துக்கொண்டு செல்ல, ஸ்மிருதி “யார அர டிக்கெட்டுன்னு சொல்லுற.. போடி” என்று சிலுப்பிக்கொள்ள கதிர் “ஹே இரு நேஹா வரட்டும்” என்றான்.

ஆரு “அதெல்லாம் அவ குதிச்சு போவா.. நீ வா.. எனக்கு தூக்கம் வருது” என்றிட, கதிர் “சரி வா.. ஹே ஸ்மிருதி வா” என்று அழைத்துக்கொண்டு சென்றான். ஆரு அக்னியை திரும்பி பார்த்து கண்ணடிக்க அவளை பார்த்து புன்னகைத்தான்.

ஆரு அங்கிருந்து கிளம்ப, அக்னி “ஆரு.. தேங்க்ஸ்” என்றான் அடக்கப்பட்ட புன்னகையுடன். அவளோ “போட டேய்” என்றுவிட்டு செல்ல

நேஹா “ஹே என்னடி உனக்கென்ன அவசரம்” என்று கேட்க அவளை ஒரு பார்வை பார்த்தவள் “வாடி.. கீழ இறங்கிட்ட அப்பறம் கேளு” என்று கலாய்க்க,

நேஹா “நீ எங்க நான் சொன்னதை கேட்ட” என்று முறைக்க, ஆரு “எனக்கு என் தூக்கம் முக்கியம்.. போடி” என்றுவிட்டு சென்றாள்.

இப்போது நேஹா மற்றும் அக்னி மட்டும் தனித்து விடப்பட்டிருக்க இருவருக்குள்ளும் மெல்லிய படபடப்பு. நேஹாவின் அருகே வந்தவன் “சோ மேடம் எனக்கு என்ன கொடுக்க போறீங்க” என்று ஒரு மார்க்கமான குரலில் கேட்க அவளோ முகத்தை சுருக்கி “ஒன்னும் கிடையாது போ.. இதெல்லாம் எப்படி இருக்குன்னு ஒரு வார்த்தை சொன்னியா” என்று முறைக்க அதில் தன் வசீகர புன்னகையை சிந்தியவன் “ம்ம் ஏதோ பரவால்ல” என்று உதட்டை பிதுக்க, அவளோ “ஹாப்பி பர்த்டே.. பை” என்றுவிட்டு செல்ல அவள் இடை பிடித்து தன்னோடு இறுக்கியவன் “உடனே ஓடாதடி” என்று அவள் நெற்றியோடு நெற்றி முட்ட, அவளோ அப்போதும் விழி தாழ்த்தி நின்றிருந்தாள்.

அக்னி “என்ன பாரு” என்று மென்மையாக கட்டளையிட “முடியாது” என்றாள். அக்னி “பாருன்னு சொன்னேன்” என்று அழுத்தம் கொடுக்க அவனை நிமிர்ந்து பார்த்தாள்.

அவள் முகத்தை கையிலேந்தியவன் தன் பெருவிரல் கொண்டு அவள் கன்னத்தை வருடி “ரொம்ப அழகா இருக்கு” என்று ஹஸ்கி குரலில் கூற, நேஹா குழப்பமாக “நீ.. நீ எதை சொல்லுற” என்று தயங்கியபடி கேட்டாள், அதில் குறும்பாக புன்னகைத்தவன் “நீ எதை நினைச்சியோ அதை” என்றான். நேஹா அவசரமாக “நான்.. நான் டெகரேஷனை தான் நினைச்சேன்” என்றிட அவனும் “நானும் டெகரேஷனை தான் சொன்னேன்” என்றவனின் இதழோ விஷமமாக வளைந்தது.

நேஹா நெளிந்துகொண்டு “சரி ஓகே.. விடு என்ன” என்று அவன் கையை தன் இடையிலிருந்து விலக்க முற்பட அவனோ அவள் இடையை அழுத்தமாக பற்றி “முடியாது” என்றான். நேஹா “அகி நான் கிப்ட் கொடுக்கனும்.. விடு” என்க அப்போது தான் பெரிய மனது பண்ணி அவளை விடுவித்தான்.

நேஹா “உன் லேப்டாப்ல மெயில் செக் பண்ணு” என்ற கூற, தன் அறைக்கு சென்று மடிகணினியை மாடிக்கு கொண்டு வந்தவன் மெயிலை திறக்க அதில் ஒரு லிங்க் இருந்தது.

அது ஒரு வீடியோ கான்பரேன்ஸ்கான லிங்க்.. அதனுள் சென்றவுடன் அக்னி “ஹே இது லைவ்வா” என்று விழி விரிக்க அவளோ மேலும் கீழும் தலையசைத்தாள்.

நேஹா  யாருக்கோ அழைத்து பேசிய மறுநொடி அவன் திரை ஒளிர்ந்தது. அதில் இருபது முப்பது சிறுவர்கள் கோரசாக “ஹாப்பி பர்த்டே அண்ணா” என்று ஒரு சேர கத்த அவனோ புன்னகையுடன் நன்றி தெரிவித்தான். அதன் பிறகு அந்த ஆஷ்ரம சிறுவர்களுடன் சிறிது நேரம் பேசியவன் இறுதியாக நேஹாவை அழைக்க, அவன் அருகே வந்தமர்ந்தவள் அழைப்பிலிருந்த சிறுவர்களிடம் “தேங்க்ஸ் குட்டீஸ்..” என்றவள் அந்த ஆஷ்ரம மேலாளரிடம் நன்றி தெரிவித்துவிட்டு மறுநாள் அவர்களை வந்து சந்திப்பதாக கூறிவிட்டு அழைப்பை துண்டித்தாள்.

அழைப்பை துண்டித்த பின் தான் அவள் அக்னியை கவனிக்க அவனோ உணர்வுகளின் பிடியில் அமர்ந்திருந்தான்.

நேஹா “அகி என்ன ஆச்சு.. ஏன் அமைதியா இருக்க” என்று கேட்க அவள் கையை தன் கைக்குள் புதைத்துக்கொண்டவன் “தேங்க்ஸ் டா” என்றான். அவனை பார்த்து மென்னகை சிந்தியவள் சிறு துண்டு கேக்கை ஊட்ட அதை வாங்கிக்கொண்டவன் ஒரு துண்டு கேக்கை எடுத்துக்கொண்டு அவளை நெருங்கினான்.

தன்னை நெருங்குபவனின் பார்வை மாற்றத்தை உணர்ந்த நேஹா பின்னே நகர்ந்து செல்ல அவனோ விஷம புன்னகையுடன் அவளை மேலும் நெருங்கினான்.

அதற்கு மேல் பின்னால் நகர முடியாத வண்ணம் சுவர் அவளை தடுக்க, அக்னி தன் இடது கையால் அவள் இடையை வளைத்து தன்னோடு இறுக்கியவன் அவளுக்கு கேக்கை ஊட்டினான், பின் அவளிடம் “எனக்கு ஒரு ப்ரோமிஸ் பண்ணு” என்க அவளோ “என்ன ப்ரோமிஸ்” என்றாள் காற்றிற்க்கும் கேட்காத குரலில்.

அக்னி “நீ எப்போவும் என்கூட தான் இருக்கனும்.. நான் என்ன பண்ணாலும் என்ன விட்டுட்டு போக கூடாது” என்று கூற, அடுத்த கணமே “ப்ரோமிஸ்.. எப்போவுமே இருப்பேன்” என்றாள் சிறு யோசனையுமின்றி.

அக்னி “நல்லா யோசிச்சிட்டு பண்ணு.. அப்பறம் பின் வாங்க கூடாது” என்று கூற அதில் புன்னகைத்தவள் தன்னிலையிலிருந்து மாறவில்லை.

இந்த சில மாதங்களாக அவளுக்கு அக்னியின் மீதிருந்த அன்பு காதலாய் மாறி இருந்தது என்னவோ உண்மை தான் அதுவும் அன்று அவன் ஸ்வேதாவை பற்றி கூறும் போது தான் அவன் மீதிருந்த காதலை அவள் உணரவே செய்தாள்.

அக்னி வாய் வார்த்தையாக காதலை சொல்லவில்லை தான் ஆனால் ஒவ்வொரு முறையும் அவன் அவளுக்கு தரும் முக்கியத்துவத்திலும் அவன் செயலிலும் காதலை உணர்த்திக்கொண்டு தான் இருந்தான்.

எப்போதும் தன்னை கண்டால் அவன் கண்ணில் தோன்றும் மின்னல்களையும் அவளும் கவனித்துக்கொண்டிருக்கிறாள் தான். அக்னியும் அவளுக்கு அவன் மேல் இருக்கும் காதலை உணர்ந்தே இருந்தான்.

இதோ இப்போதும் அவன் நெருக்கத்தில் கரைந்துகொண்டு இருப்பவளை தன்னவளாக எடுத்துக்கொள்ள அவன் ஒவ்வொரு செல்லும் துடைத்துக்கொண்டு தான் இருக்கிறது. அக்னி அவள் நெற்றியோடு நெற்றி முட்டி நிற்க அவளோ அவன் அருகாமையில் செங்கொழுந்தாய் சிவந்துகொண்டிருந்தாள்.

அவளின் கன்ன சிவப்பாய் ரசித்தவன் அவள் மூக்கோடு மூக்கை உரச, இருவரின் இதழும் தொட்டுவிடும் இடைவேளையில் இருக்க நேஹா கண்களை இறுக மூடிக்கொண்டான். அவள் செயலில் அழகாய் இதழ் பிரித்தவன் இரு கைகளாலும் அவள் இடையை அழுத்தமாக பற்ற, நேஹாவோ தன்னை நெருங்கியவனின் உஷ்ண மூச்சு காற்று தன் முகத்தில் பட்டதில் எழுந்த உணர்வில்  உதட்டை கடித்துக்கொண்டு நின்றாள். அக்னி அவள் பற்களில் சிக்கியிருந்த உதட்டை தன் விரல் கொண்டு விடுதலை கொடுக்க நேஹாவோ உணர்ச்சியின் பிடியில் அவன் சட்டையை இறுக பற்றினாள்.

மங்கையவளின் செயல் மன்னவனுக்கு போதை ஏற்ற அவள் நெற்றியில் இதழ் பதித்தான் பின் அவள் மூடியிருந்தது இமைகளில் இதழோற்றியவன் அடுத்ததாக அவள் நுனி மூக்கில் இதழ் பதித்தான். அவன் இதழ் தீண்டலில் பெண்ணவள் உடல் சிலிர்த்து அடங்க அவள் தோளில் புரண்ட முடி கற்றுகளை எடுத்து பின்னால் போட்டவன் இப்போது அவள் கழுத்து வளைவில் முகம் புதைத்தான், சட்டென அவள் பெண்மை விழித்துக்கொள்ள நேஹா “அகி” என்று காற்றுக்கும் கேட்காத குரலில் அழைக்க அவள் கழுத்து வளைவில் முகம் புதைத்தவன் “ம்ம்” என்றான் கிறக்கமாக.

நேஹா “அகி.. லேட்டாகுது வீட்டுக்கு போகனும்” என்று தயங்க சட்டென அவளிடமிருந்து விலகியவன் “ம்ம்” என்றான் இறுகிய குரலில். அவனுக்கோ காதலை சொல்லும் முன் அவளிடம் உரிமை எடுக்க முயற்சித்ததில் தன் மீதே கோபமாக வந்தது. நேஹாவோ அவன் சட்டென விலகியதில் எங்கு தன் மீது கோபம் கொண்டானோ என்ற தவிப்பிருக்க, நேஹா “அகி” என்றாள் தவிப்பாக.

அக்னி “சாரி நேஹா.. நான் ஏதோ..” என தொடங்கியவன் அதை கூற முடியாமல் “சாரி” என்று தலை குனிய, அவனுக்கு தன் மீது கோபமில்லை என்றதில் நிம்மதியுற்றவள் அவன் மன்னிப்பு கேட்கவும் அவன் மனதிலிருந்த குற்றவுணர்வை உணர்ந்துகொண்டது போல் அவன் முன் சென்றவள் “எனக்கு என் அகிய பத்தி தெரியும்.. நான் எப்போவும் அவனை தப்பா நினைக்க மாட்டேன்” என்றவள் தொடர்ந்து “அப்பா விஷ் பண்ணலனு பீல் பண்ணாத.. எல்லாமே சீக்கிரம் சரி ஆகும்” என்றுவிட்டு அவன் கையில் அழுத்தம் கொடுத்தவள் “நாளைக்கு பாக்கலாம்” என்று அங்கிருந்து ஓடிவிட அவனோ செல்லும் அவளின் முதுகை பார்த்து புன்னகைத்துக்கொண்டான் அவனவளின் புரிதலில்.

தன் அலைபேசியில் அவள் புகைப்படத்தை பார்த்து, அக்னி “நான் சொல்லாமலே என் மனசை புரிஞ்சிகிட்டதுக்கு தேங்க்ஸ் நேஹா” என்றவன் அதே இனிய மனநிலையுடன் உறங்க சென்றான்.

மறுநாள் அக்னியின் பிறந்தநாளை கொண்டாட கல்லூரியை கட் அடித்துவிட்டு நால்வரும் ஊர் சுற்றிவிட்டு அடுத்த நாள் தான் கல்லூரிக்கு சென்றனர்.

அக்னி நேஹா கதிர் கிஷோர் அனைவரும் ஒரு கிளப்பில் சேர்ந்திருக்க ஆருவோ என்விரான்மெண்ட் கிளப்பில் சேர்ந்திருந்தாள். ஆத்ரேயனுக்கு அதிலெல்லாம் விருப்பமில்லை என்று கூறிவிட்டான் ஆனால் ஆரு தான் விடாப்பிடியாக அவனை அவள் இருக்கும் கிளப்பில் சேர்த்துவிட்டிருந்தாள்.

அவர்கள் வகுப்பிலேயே ஆரு மற்றும் ஆத்ரேயன் மட்டும் தான் அந்த கிளப்பில் சேர்ந்திருந்தனர் ஆனால் அக்னி அதை அறிந்திருக்கவில்லை.

அன்று கல்லூரி அரை நாள் என்றிருக்க சுற்றுச்சூழல் கிளப்பில் இருந்தவர்களுக்கு மட்டும் ஐந்து மணி வரை கல்லூரி என்று அறிவித்திருந்தனர். கல்லூரி முடித்துவிட்டு கிளம்பும் போது அக்னி ஆருவிடம் “ஈவினிங் நான் வரேன்.. கேட் கிட்ட நில்லு” என்றான், எதற்கு அவனை அலைய விட வேண்டும் என்றெண்ணியவள் “இல்ல அகி நானே வந்திடுறேன்.. பஸ்ல வந்தும் ரொம்ப நாள் ஆகுது” என்றாள், அக்னியும் அரை மனதுடன் “சரி.. பாத்து வா” என்றுவிட்டு சென்றான்.

கிளப் மீட்டிங் என்று மாணவர்கள் அமர்ந்திருக்க, ஆரு ரேயனுடன் அமர்ந்திருந்தாள். யாரோ ஒருவர் ஒரு மணி நேரமாக மேடையில் பேசிக்கொண்திருக்க ஆருவுக்கோ கண்கள் சொருகியது. அவள் ஆத்ரேயனை திரும்பி பார்க்க அவனோ தீவிரமாக அவர் பேசுவதை கவனித்துக்கொண்டிருந்தான்.

ஆரு “ஐ அம் சாரி அத்து” என்று சிறுபிள்ளை போல் மன்னிப்பு வேண்டியவளுக்கு அவனை நினைத்து கஷ்டமாக இருந்தது. வரமாட்டேன் என்றவனை அவளல்லவா இழுத்துக்கொண்டு வந்து இதில் சேர்த்துவிட்டது.

ஆருவின் கூற்றில் அவளை புரியாமல் பார்த்தவன் “சாரியா எதுக்கு” என்று வினவ அவளோ முகத்தை பாவமாக வைத்துக்கொண்டு “இப்படி ஒரு மொக்க கிளப்ல உன்ன சேர்த்து விட்டுட்டேன்” என்று தலைகுனிய, “ஹாஹா.. பரவால்ல, எல்லாம் இப்படி தான்” என்று அவளை சமாதான செய்தவனுக்கு அவளின் சிறு முக மாறுதலும் மனதை வதைத்தது.

ஆரு “இல்ல பா.. அந்த ரோட்ராக்ட்ல சும்மா எதாச்சு ஈவெண்ட் வைப்பாங்களாமே” என்று இழுக்க, ரேயனோ சிறு சிரிப்புடன் “அதுல இருந்தா நிறைய வேலை செய்யனும்.. மேடம்க்கு அது பிடிக்காது அதான” என்று கேட்க, “ஈஈஈ.. அதே அதே.. வர்க் அலர்ஜி” என்றாள்.

ரேயன் “அப்போ மேடம் படிச்சிட்டு என்ன பண்ண போறீங்க” என்று ராகமாக கேட்க அதில் புன்னகைத்தவள் “கல்யாணம் தான்” என்று கண்ணடித்தாள்.

ரேயன் “அடிப்பாவி” என்று வாயில் கை வைக்க, ஆரு “சும்ம் சொன்னேன் அத்து.. அதெல்லாம் அப்போ பார்த்துக்கலாம்.. செஞ்சா பிடிச்ச வேலைய தான் செய்யனும்”

“ம்ம் ம்ம்” என்றவன் அவளை பார்க்க, ஆருவோ “ஏன் அப்படி பார்க்குற” என்றாள் கேள்வியாக அதில் புன்னகைத்தவன் “போர் அடிக்கிதா” என்று கேட்க பலமாக தலையசைத்தவள் “ஐயோ முடியல” என்றாள் தலையில் கைவைத்து.

அவள் கையை எடுத்துவிட்டவன் அவள் கை பற்றி “வா போகலாம்” என்றழைக்க, அவளோ “வா போலாமா.. 5 மணி வரை வெளிய விட மாட்டாங்க” என்றாள். ரேயன் “வா வா” என்று எழுந்து செல்ல ஆருவும் அவன் பின் சென்றாள்.

ஆரு “அத்து.. அத்து.. என்ன பண்ண போற, அந்த சொட்ட சார் விட மாட்டாரு” என்றிட

ரேயன் “நான் எது சொன்னாலும் ஆமான்னு சொல்லு சரியா” என்றுவிட்டு முன் செல்ல, ஆருவோ “நீ சொல்லவே வேண்டாம்.. நான் அப்படி தான் சொல்லுவேன்” என்று சிரிக்க, அவளை திரும்பி பார்த்த புன்னகைத்தவன் கதவின் அருகே சென்றான்.

கதவின் அருகே நின்ற பேராசிரியர் ஒருவர் “எங்க போறீங்க.. 5 வரைக்கும் வெளிய யோக கூடாது” என்று கூற

ரேயன் “சார் பேப்பர் ப்ரெசென்ட பண்ணுற ஸ்டுடெண்ட்ஸோட credentials ரெடி பண்ண சொன்னாங்க” என்றான். அவரோ அவனை சந்தேகமாக பார்த்துவிட்டு “யாரு பண்ண சொன்னா” என்று வினவ, ரேயன் “விக்ரமன் சார் தான்.. வேணும்னா கால் பண்ணி குடுங்க ஸ்பீக்கர்லயே சொல்லுறேன்” என்றான். அவரும் விக்ரமன் என்பவரை அழைத்து ரேயனிடம் கொடுக்க அதை வாங்கியவன் “சார் credentials ரெடி பண்ண சொன்னிங்கல” என்று வினவ அவரும் ஆம் என்றார். பின் அவரும் அவர்களை செல்ல விட, இருவரும் அங்கிருந்து வெளியேறினர்.

ஆரு “வாவ் அத்து எப்படி.. உண்மையா வர்க் இருக்கா.. பண்ண போறோமா” என்று கேட்டவளுக்கு அங்கிருந்து வந்ததே போதுமென இருந்தது

ரேயன் “இல்ல.. அவரு அவரோட பர்சனல் credentials புதுசா லாமின்ட் பண்ணி தர முடியுமான்னு கேட்டாரு, எனக்கு பண்ண இஷ்டமில்ல, அதை இப்போ யூஸ் பண்ணிக்கிட்டேன்” என்று தோளை உலுக்க

ஆரு “அப்போ அது பண்ணனும்ல” என்று கேட்க, ரேயனோ “அதை நான் பார்த்துக்குறேன்.. இப்போ எங்க போலாம்” என்றான் கேள்வியாக.

ஏனோ ரேயனுக்கு அவளை தன் இல்லத்திற்கு அழைத்து செல்லவேண்டும் என்று தோன்ற “என் வீட்டுக்கு வரியா” என்று கேட்டே விட்டான். ஆரு “வீட்டுக்கா” என்றிழுக்க, ரேயன் “ஏன் வர மாட்டியா” என்றான் முகம் சுருக்கி,

ஆரு “இல்ல இல்ல.. அப்படி இல்ல.. லேட் ஆகிட போகுது அதான்” என்று யோசிக்க

ரேயன் “டைம் இப்போ 3.. சரியா 5:30க்கு உன்ன வீட்ல விட்டுடுறேன்” என்று கூற “அப்போ ஓகே.. வா போவோம்” என்றாள்.

ரேயன் “ஓகே டன்.. நான் கார் கொண்டு வரேன்” என்றுவிட்டு வண்டி எடுக்க சென்றான்.

ரேயன் காரை நிறுத்த அதில் ஏறி அமர்ந்தாள் பெண்ணவள். ரேயன் காரை ஓட்ட, ஆரு “அத்து” என்றழைத்தாள், அவளை திரும்பி பார்த்தவன் “சொல்லு தியா” என்று வினவ

ஆரு “வீட்ல யாரெல்லாம் இருக்கீங்க” என்று கேட்டாள். ரேயனோ அவளை வெறுப்பேற்ற எண்ணி “யாரெல்லாமா.. நான் மட்டும் தான் இருக்கேன்” என்று கூற, ஆரு அதிர்ந்து “நீ மட்டுமா.. அப்போ அம்மா அப்பாலாம்” என்றாள் கேள்வியாக அவனோ இதழுகிடையே புன்னகையை அடக்கி “அவங்க எல்லாம் ஊர்ல இருக்காங்க.. நான் மட்டும் தான் இங்க இருக்கேன்” என்று தோளை உலுக்கிவிட்டு அவளை பார்க்க “ஓ” என்றாள்.

ஆராத்யா ரேயன் மீது கண்மூடி தனமான நம்பிக்கை வைத்துள்ளாள் தான் ஆனால் அக்னிக்கு இது தெரிந்தால் அவன் நிச்சயம் சும்மா விட மாட்டான் என்று அறிந்தவளுக்கு லேசாக பயம் வந்தது.

ஆரு “நம்ம வெளிய எங்கனா போகலாம் அத்து” என்று கூற அவனோ “டையர்டா இருக்கு தியா.. வீட்டுக்கே போகலாம்.. எனக்கு அப்படி வெளிய சுத்தவும் பிடிக்காது” என்றான். அவளின் முகத்தில் பயம் தெரிந்தாலும் அவனுடன் மறுப்பேதும் இன்றி வருபவளின் நம்பிக்கையில் அவன் முகம் மென்மையானது.

ஏனோ ஆத்ரேயனுக்கு அவளை சீண்ட தோன்ற, “தியா.. உனக்கு என்ன ஜூஸ் பிடிக்கும்” என்று கேட்க அவளோ “ஏன்.. எதுக்கு ஜூஸ்” என்றாள் புரியாமல், ரேயன் “வாங்க தான்.. வீட்ல இல்ல அதான்.. அப்படியே போய் வாங்கனும்” என்றான்.

ஆரு “இல்ல எனக்கு எதுவும் வேண்டாம்” என்று மறுக்க, ரேயனுக்குகோ ஐயோவென்றிருந்தது. அவள் மறுக்க மறுக்க அவளுக்காக ஜூஸை வாங்கியவன் வேண்டுமென்றே பக்கத்திலிருந்த மருந்தகத்திற்கு சென்று எதையோ வாங்கிக்கொண்டு வந்தான். ஆருவிற்குகோ அவள் பார்த்த சினிமா படங்கள் காட்சி எல்லாம் கண் முன் ஓடியது.

ரேயன் வண்டியில் ஏறியவுடன் ஆரு “என்ன மாத்திரை வாங்குன” என்று கேட்க அவனோ “எனக்கு தான்.. டைஜின் டைப்” என்றவன் அதை வேண்டுமென்றே அவளிடமிருந்து மறைத்து வைத்தான். அவ்ளோ ஏதோ யோசனையில் வர, ரேயன் “வீட்டுக்கு போன் பண்ணி லேட் ஆகும்ன்னு சொல்லிடு” என்றான் அடக்கப்பட்ட புன்னகையுடன் அவளோ அதிர்ந்து “இல்ல இல்ல.. எனக்கு சீக்கிரம் போனும்” என்று கூற அவனோ “அப்படியா.. சரி அதுக்கேத்த மாதிரி பண்ணிடலாம்” என்று விட அவனை ஒரு மாதிரி பார்த்தவளுக்கோ இதய துடிப்பு எகிறியது.

வீட்டின் முன் வண்டியை நிறுத்தியவன் “வா தியா” என்றுவிட்டு இறங்க அவளோ சிலை போல் அமர்ந்திருந்தாள். ரேயன் அவள் பக்கம் வந்து கதவை திறக்கவும் வண்டி சத்தம் கேட்டு ஷோபனா வரவும் சரியாக இருந்தது.

ஷோபனா “வாடா ரேயா.. அது யாரு உன் பிரெண்டா” என்று வினவ, அவனோ புன்னகையுடன் “ஆமா மா.. ஆராத்யா” என்று அவளை அறிமுகப்படுத்தியவன் சிரித்துக்கொண்டே முன்னே செல்ல அவளோ அவனை முறைத்துக்கொண்டு ஷோபனாவுடன் உள்ளே நுழைந்தாள்.

ஷோபா “உட்காருமா.. என்ன குடிக்கிற” என்று வினவ, ஆரு “இல்ல வேண்டாம் மா” என்று மறுக்க

ஷோபா “சும்மா இரு, நான் ஜூஸ் கொண்டு வரேன்” என்று செல்ல, அவள் அருகே அமர்ந்த ரேயனோ சிரிப்புடன் “மா இந்த ஜூஸை உள்ள வை.. மேடம் ஜூஸ்லாம் குடிக்க மாட்டாங்க” என்க உடனே ஆரு “இல்லமா நான் குடிப்பேன்” என்றாள் அவனை பார்த்து உதட்டை சுழித்தபடி. ஷோபா “அதான.. நீ போட” என்றவர் அவளுக்காக பழரசம் செய்ய சென்றுவிட அப்போது தான் ஏதோ கேட்க வந்த வேணி ஹாலில் அமர்ந்திருந்தவர்களிடம் வந்து பேசினார்.

வேணி சென்றவுடன் இருவரும் ஜூஸ் அருந்த, ரேயன் “ம்மா நாங்க மேல இருக்கோம்” என்றிட

ஷோபா “சரிடா.. நான் சாப்பிட கொடுத்து விடுறேன்” என்றார். ரேயன் “இல்லமா நாங்களே வரோம்” என்றுவிட்டு அவளை  தனதறைக்கு அழைத்துக்கொண்டு சென்றான்.

ரேயன் உள்ளே செல்ல அவளோ கதவிடம் நின்றாள். ரேயன் “என்ன தியா, உள்ள வருவியா இல்ல இன்னும் என் மேல சந்தேகம் இருக்கா” என்று புன்னகையுடன் கேட்க அவசரமாக உள்ளே நுழைந்தவள் காட்டிலிருந்த தலையணை கொண்டு அவனை மொத்தினாள், அவனும் அவள் அடியை புன்னகையுடன் வாங்கிக்கொண்டான்.

ஆரு மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்க பெட்டில் அமர, அவள் அருந்த நீர் கொடுத்தவன் அவள் அருகே அமர்ந்துக்கொண்டான்.

நீரை அருந்தியவள் “ரூம் நல்லா இருக்கு” என்றாள், ரேயன் “தேங்க் யூ மேடம்” என்று புன்னகைக்க

ஆரு “நீயா க்ளீன் பண்ணுவ” என கேள்வி எழுப்ப, “ஆமா தியா.. எனக்கு வேற யாரு பண்றதோ இல்ல ரூம்குள்ள வர்ரதோ பிடிக்காது.. வீட்ல இருக்குறவங்கள தாண்டி” என்றான். அதில் அவனை பார்த்தவள் “கிச்சா கூடவா” என வினவ “சே.. அவனும் என் பேமிலி தான்” என்றான், “அப்போ நான்” என்று அவள் தலைசாய்த்து கேட்க அதில் மெலிதாக புன்னகைத்தவன் அவளை தோளோடு அணைத்து “நீயும் என் பேமிலி தான் மக்கு” என்றவன் “சரி இரு நான் ப்ரெஷ் ஆகிட்டு வரேன்” என்று சென்றிட, ஆரு அங்கிருந்து பால்கனிக்கு சென்றாள்.

தன்னை சுத்தப்படுத்திக்கொண்டு கீழே சென்று காபி வாங்கி வந்தவன் பால்கனியில் நின்றிருந்தவளின் அருகே சென்று “தியா.. காபி” என்று கொடுக்க அதை வாங்கி ஒரு மிடறு பருகிவிட்டு “எனக்கு இந்த இடம் ரொம்ப பிடிச்சிருக்கு.. ரொம்ப பீஸ்புல்லா இருக்கு” என்று உணர்ந்து கூற, அதை ஆமோதித்தவன் “ம்ம்.. எனக்கும் இங்கிருக்குறது ரொம்ப பிடிக்கும்” என்றான்.

அதன் பின் இருவரும் அவன் அறையில் அமர்ந்து ஏதேதோ பேசிக்கொண்டிருக்கும் போது ஆரு “உனக்கும் அக்னிக்கும் என்னதான் பிரச்சனையோ.. ரொம்ப பண்ணுறீங்க பா” என்று சலித்துக்கொள்ள ரேயனின் முகம் மாறியது. அதை கவனித்தவள் “ஐயோ போச்சா.. சாரி சாரி அத்து.. ஏதோ தெரியாம” என்று முகத்தை பாவமாக வைக்க

“ஒன்னுமில்ல சில்” என்றான். சிறிது நேரம் பலத்த மௌனம் அங்கு ஆட்சி புரிய திடீரென ரேயன் அவள் தோளில் சாய்ந்தான். அவளோ அதிர்ந்து “அத்து என்ன பண்ணுற” என்று நெளிய,

“ப்ளீஸ்” என்றான் அதன் பின் அவளும் அமைதியாகிவிட அவள் கையை தன் கையோடு பிணைத்தவன் “தியா” என்றழைக்க அவளோ அவனை புரியாமல் பார்த்தாள். ஆனால் அவன் அருகாமை பெண்ணவளின் மனதில் புதுவித தடுமாற்றத்தை கொண்டு வந்தது என்னவோ அவள் மட்டுமே அறிந்த ஒன்று.

ஆத்ரேயன் “அவன் எப்பயாச்சு என்கிட்ட பேச கூடாதுன்னு சொன்னா பேசாம இருப்பியா” என்று ஒருவித பரிதவிப்புடன் வினவ, அவன் கண்களை கண்டவள் “எதுக்கு அத்து இப்படி கேட்குற” என்றாள். ரேயனோ “சொல்லு ப்ளீஸ்.. அவனுக்காக என்கிட்ட பேசாம இருப்பியா” என்று மீண்டும் வினவ அவளோ “அவன் ஏன் சொல்லுறான்னு கேட்பேன்.. சொல்ற ரீசன் நியாயமா இருந்த பேசமாட்டேன்” என்று அடக்கப்பட்ட புன்னகையுடன் அவள் கூற சட்டென அவளை விட்டு விலகி அமர்ந்தான் அவன். அதில் ‘அச்சோ.. அத்து’ என மனதினுள் அவனை கொஞ்சியவள் “கோபமா” என்றாள் கேள்வியாக, ரேயன் “இல்ல” என்று எங்கோ பார்த்தபடி கூற அவனை இடித்துக்கொண்டு அமர்ந்தவள் “என்ன பாரு” என்றாள். அந்த பிடிவதாகாரனோ முகத்தை திருப்பாது அமர்ந்திருக்க, ஆரு அவன் தாடையை பற்றி தன்னை நோக்கி திருப்பியவள் “இதெல்லாம் பர்ஸ்ட் இயர் ஆரு சொல்லிருப்பா ஆனா இப்போ என்னால உன்கிட்ட பேசாம இருக்க முடியாது..” என்று கண்ணடிக்க அவளை பார்த்து புன்னகைத்தவன் “கன்சோல் பண்ணுறியா” என்றான் ஒரு மாதிரியான குரலில், அதில் அவனை முறைத்தவள் “அத்து மேல ப்ரோமிஸ்” என்று குறும்பாக கூறி அவன் தலையில் கைவைக்க அதில் வாய் விட்டு சிரித்தவன் “நான் வாழனும்” என்றான் ஏளனமாக. ஆரு அவன் முகத்தை கையிலேந்தி “என் வாழ்க்கையோட பர்ஸ்ட் ப்ரோமிஸ்.. இதுவரை நான் யாருக்கும் ப்ரோமிஸ் பண்ணதில்ல.. இப்போ தான் பண்ண தோனுச்சு” என்றாள். தன் கன்னத்திலிருந்த அவள் கையை பிடித்தவன் “தேங்க்ஸ்” என்று மென்னகை புரிய “ஏன்” என்றாள் புருவமுயர்த்தி கேள்வியாக, ரேயன் “என் லைஃப்ல இன்னும் ஹாப்பினெஸ் கொண்டு வந்ததுக்கு” என்றான் இதழில் தேங்கிய புன்னகையுடன். ஆனால் பாவம் இந்த புன்னகை வெகுநாட்கள் நீடிக்கப்போவதில்லை என்பதை அக்கணம் இருவரும் அறியவில்லை.

Advertisement