Advertisement

                  அத்தியாயம் 19

              பழைய நினைவுகளில் உழன்றுகொண்டிருந்த அக்னிக்கு இப்போதும் அது கண் முன் நடப்பது போல் தோன்றியது. தலை வெடிக்கும் அளவிற்கு வலிக்க அவன் காரோ அவன் கோபத்தின் அளவை தாங்கி சீறிக்கொண்டிருந்தது.

வண்டியை வீட்டின் வாயலில் நிறுத்தினான், அது அவனுடைய வீடு அவன் உழைப்பினால் வளர்ந்த வீடு. கடந்த சில நாட்களாக அவன் இன்ப துன்பங்களை காணும் வீடும் இதுவே.

அக்னி ஜெகதீஷை இவ்வில்லத்திற்கு அழைத்த போது அவர் வர மறுத்துவிட்டார் கல்பனா மட்டும் வாரத்தில் ஒரு நாள் அவனை பார்த்துவிட்டு செல்வார். ஏன் இங்கு தனியாக இருக்கிறாய் என்று கல்பனா பலமுறை கேட்டும் அந்த அழுத்தக்காரன் பதிலளிக்கவில்லை அவனை நினைத்த அவரும் வருந்தாத நாளே இல்லை.

காரிலிருந்து இறங்கியவனை வாசலுக்கு வந்து வரவேற்றது அங்கு பணிபுரியும் வேதாச்சலம் தான்.

அக்னி “வேதா ண்ணா ஜாக்கி சாப்பிட்டானா” என்று அவன் வளர்க்கும் ஜெர்மன் ஷெப்பர்ட்டை பற்றி வினவ அவரோ “இல்ல தம்பி என்ன வச்சாலும் சாப்பிட மாட்டேன்கிறான்.. நீங்க நேத்து வீட்டுக்கு வரல அதனால தான் இப்படி பண்ணுறான்” என்று கூறும் போதே அக்னியின் பேச்சுக்குரல் கேட்டு ஓடி வந்தது அந்த அழுதக்காரனின் வளர்ப்பு பிள்ளை. ஆம் இப்போது அவனுக்கென்று மருந்தாயிருக்கும் இரு ஜீவன்கள் ஜாக்கி மற்றும் வேதாச்சலம் தான். வேதாச்சலத்திற்கு பிள்ளைகள் கிடையாது அவருடைய மனைவியும் இறந்துவிட  ஒண்டிகட்டையாக இருப்பவரை தன்னுடனே வைத்துக்கொண்டான் அக்னி.

ஜாக்கியின் தலையை தடவியவன் “டேய் என்ன உனக்கு.. நான் வரலனா சாப்பிட மாட்டியா.. அவ்ளோ திமிரா உனக்கு” என்றவனின் குரலில் இருந்தது என்னவோ பாசம் மட்டுமே ஆம் இந்த ஆறு வருடங்களில் அவன் மென்மையாய் பேசும் இரு ஜீவங்களும் அவர்கள் தானே.

ஜாக்கியின் முகத்தை பிடித்து ஆட்டியவன் அதன் நெற்றியோடு நெற்றி முட்டி விளையாட வேதாச்சலம் ஜாக்கிக்கான உணவை எடுத்துக்கொண்டு வந்தார்.
அக்னி “ஜாக்கி கோ..” என்று அதை உணவுண்ண அனுப்ப தன் எஜமானனின் பேச்சை கேட்டு அதுவும் சமத்தாக உணவுண்டது. அதன் தலையை தடவியவன் “குட் பாய்” என்று பாராட்ட தன் வாலை ஆட்டியபடி உணவை உண்டது.

வேதாச்சலம் “வர வர ரொம்ப பண்ணுறான் தம்பி இவன்” என்று ஜாக்கியை பார்த்து கூற, அக்னி சிறிதாக முறுவலித்தான்.
வேதாச்சலம் “உட்காருங்க தம்பி.. சாப்பாடு எடுத்து வைக்கிறேன்” என்றவரிடம் “இல்ல ண்ணா எனக்கு வேண்டாம்.. தலை வலிக்கிது படுக்க போறேன்” என்றான்.
வேதாச்சலம் “சரி அப்போ டீ போட்டு கொண்டு வரட்டா” என்று வினவ சிறிது யோசித்தவன் ‘சரி’ என்பதாய் தலையசைத்துவிட்டு உணவு மேசையில் அமர்ந்தான். இரண்டு நிமிடத்தில் இஞ்சி தட்டி போட்ட டீயை அக்னியிடம் கொடுக்க அதை வாங்கி பருகியவனின் சிந்தை முழுவதும் அவனவளே.

டீயை பருகியவன் “குட் நைட் ண்ணா” என்றபடி தன் அறைக்கு சென்றான்.
கட்டிலில் சரிந்து கண் மூடியவனின் கண்ணுக்குள் தெரிந்தது என்னவோ அவள் தான். அவளை முதல் முறை கண்டதிலிருந்து இன்று வரை நடந்ததை அசைபோட்டவனுக்கு தூக்கம் எட்டாகனியாகி போனது.

பதினொரு மணியளவில் தன் அலைபேசியை எடுத்தவன் அழைத்தது என்னவோ கதிருக்கு தான்.

மெல்லிய பாடல்கள் பின்னணியில் இசைத்துக்கொண்டிருக்க கைகளை தலைக்கு வைத்து விட்டத்தை பார்த்துக்கொண்டிருந்த கதிரின் அலைபேசி ஒலிக்க அதில் ஒளிர்ந்த எண்ணை பார்த்தவன் ‘இந்த நேரத்துல கூப்பிடுறான்.. ஏதாவது பிரச்சனையா’ என பதறி அழைப்பை ஏற்றான்.

அக்னி கதிரிடம் பேசாமலில்லை ஆனால் முன் போல் அவன் நெருங்கி பேசுவதில்லை ஆனால் கதிர் அப்படியல்ல எப்போதும் போல் சின்ன சின்ன விஷயத்தையும் அவனிடம் தெரிவித்துவிட்டு தான் செய்துக்கொண்டிருந்தான்.

கதிர் இப்போது தனக்கென ஒரு தனி உணவகத்தையும் ஒரு நடன பள்ளியையும் வைத்திருந்தான், அது இரண்டுமே அவன் கனவல்லவா.

அக்னியின் அழைப்பை ஏற்றவன் “மச்சா என்னடா இப்போ கால் பண்ணிருக்க.. என்ன ஆச்சு” என்று பதட்டத்துடன் வினவ அவன் பதட்டம் அக்னியை நெகிழ வைத்தது. ஆம் என்னதான் அவனிடம் பேசாமல் விலகி சென்றாலும் அவன் வலிய வந்து பேசுவதை நினைத்து அவனுக்கு நிம்மதியாக தான் இருந்தது.

அக்னி பேசாது அமைதி காக்க, கதிர் “டேய்.. இருக்கியா” என்று கத்தினான்.
அக்னி “ம்ம்.. இருக்கேன்” என்க
கதிர் “சொல்லு என்னாச்சு”
“இல்ல ஒன்னும் ஆகல” என்று அவன் பொய்யுரைத்தாலும் கதிர் அவனை கண்டுக்கொண்டான்.

கதிர் “நீ எனக்கு சும்மா கால் பண்ண மாட்டேன்னு தெரியும்.. என்ன ஆச்சுன்னு சொல்லு” என்று கேள்வியெழுப்ப
அக்னி “உன் பிரெண்ட் சம்மந்தமே இல்லாம இனி வேலைக்கு வர மாட்டேன், என் மூஞ்சில முழிக்க மாட்டேன்னு சொன்னா” என்று நிறுத்த
கதிர் “நேஹாவா.. ஏன்.. ஏன்னு கேட்டியா” என வினவ
அக்னி “நான் ஏன் கேட்கனும்” என்றான் விரக்தியான குரலில்
கதிர் “அப்போ ஏன் என்கிட்ட கேட்குற.. போய் தூங்க வேண்டியது தான” என்று நக்கலாக கேட்டிட
அக்னி “ஆன்.. வேலைய விட்டுட்டு வீட்ல சும்மா இருக்க பிளான்னானு சொல்ல தான் வந்தேன்.. வேற எதுவுமில்ல” என்று வாய்க்கு வந்ததை கூற
கதிர் “ஏன் உன் கம்பெனி விட்டா அவளுக்கு வேற எங்கயும் வேலை கிடைக்காது பாரு.. அவகிட்ட எத்தன ஆப்பர் லெட்டர்ஸ் இருக்கும்னு உனக்கு தெரியாதா” என்று கேட்க அக்னி தான் என்ன கூற வேண்டும் என தெரியாமல் மௌனித்தான். பின் “வை போனை” என்க, கதிர் உள்ளுக்குள் சிரித்துக்கொண்டு “கேட்டு சொல்றேன்” என்று அழைப்பை துண்டித்துவிட்டான்.

அழைப்பை துண்டித்த கதிர் “இந்த பிரெஸ்டிஜ்க்கு ஒன்னும் குறைச்சல் இல்ல” என அவனை வசைபாடியபடி நேஹாவிற்கு அழைத்தான்.

கதிரின் அழைப்பை இரண்டே ரிங்கில் எடுத்தவள் “சொல்லுடா” என்று தேய்ந்த குரலில் பேச
கதிர் “என்னடி டல்லா பேசுற.. என்னாச்சு” என அக்கறையாக வினாவினான்.
நேஹா “ஒன்னுமில்லடா தலை வலி” என்று மழுப்ப
கதிர் “சும்மா பேசலாம்னு தான் கூப்பிட்டேன்.. தூங்கலயா நீ” என்று கேட்க
“இல்ல” என்றாள்,
கதிர் “அப்பறம் வேலையெல்லாம் எப்படி போகுது.. உன்ன எப்படியெல்லாம் படுத்தலாம்னு இருப்பானே ஒருத்தன்.. அவனை எப்படி சமாளிக்கிற” என்று பொதுவாக கேட்பது போல் கேட்க
நேஹா “நான் இனி அங்க போகமாட்டேன்டா” என்றாள் சிறு குரலில்,
கதிர் “ஹப்பா.. இத தான் நான் பல வருஷமா சொல்லுறேன்.. நல்ல முடிவு” என்று பாராட்ட
நேஹா “ஏன்னு நீ கூட கேட்க மாட்டியா” என்று சோகமாக கேட்க கதிர் உள்ளுக்குள் சிரித்தவன் ‘இவ என்ன நம்மள மாதிரி ஆகிட்டா’ என நினைத்துக்கொண்டு “சொல்லும்மா என்னாச்சு.. என்ன பண்ணான் உன் எம்.டி” என்று கேட்க
நேஹா கோபமாக “அகி முன்னாடி மாதிரி இல்ல கதிர்.. ரொம்ப மோசமாகிட்டான்” என்று குறைப்பட கதிருக்கு அவள் எதையோ போட்டு குழப்பிக்கொண்டிருக்கிறாள் என்பது புரிந்தது.

கதிர் “ஏன் என்ன பண்ணான் அப்படி” என்று பொறுமையாக விசாரிக்க
நேஹா “நான் என்னோட பென்ட்ரைவ் விட்டுட்டேன்னு இன்னிக்கி திருப்பி ஆபீஸ் போனேன், அகி ஆபீஸ்ல இல்ல.. அப்போ அங்க இருந்த ஸ்டாப்ஸ் பிரதாப் சார் நிறைய பொண்ணுங்க கூட சுத்துறாரு அவரோட நடவடிக்கை எதுவும் சரியில்ல அப்படின்னு பேசிக்கிட்டாங்க” என்க
கதிரே “அவங்க சொன்ன உடனே நீ நம்பிட்ட அப்படி தான” என்று கோபமாக கேட்டிட
நேஹா “ஒருத்தங்க விடாம எல்லாரும் சொன்னாங்க.. பிக் கூட காட்னாங்க.. அது என் கண்ல கூட பட்டுச்சு” என்னும் போதே அவள் குரல் வலியில் உடைய
கதிர் “நேஹா.. அக்னிய நீயுமா அப்படி நினைக்கிற” என்று ஆதங்கமாக கேட்டான்,
நேஹா “எனக்கு அவன் பண்றது எதுவும் பிடிக்கலடா.. இன்னிக்கு கூட அந்த ரித்துவ அவனே டிராப் பண்றான்.. அவன் அப்படியெல்லாம் பொண்ணுங்ககிட்ட பேசுவானா.. இப்போ இப்படியெல்லாம் பண்றான்” என மூக்கை உறிஞ்ச
கதிர் “அக்னி எது பண்ணாலும் ஒரு காரணம் இருக்கும்.. தப்பா இருக்காது அதை புரிஞ்சிக்கோ.. நீ வேலைக்கு திரும்ப போக வேண்டாம் ஆனா அவனை தப்பா நினைக்காத” என்னும் போதே அழைப்பை துண்டித்துவிட்டாள்.

கதிர் ‘இன்னும் பத்து நிமிஷத்துல கால் வரும்’ என்றவாறு கட்டிலில் சரிய, அவன் நினைத்ததை போலவே அவள் மீண்டும் அழைத்தாள்.

நேஹா “ஓகே தப்பு தான்.. நான் ஆபிஸ் போறேன்” என்க
கதிர் “வேண்டாம்.. அவன் உன்ன எவ்ளோ வெறுப்பேத்துறான்.. போகாத” என்று அவளை சீண்ட
“பரவால்ல பே” என்று அழைப்பை துண்டிதவள் நிம்மதியாக உறங்க சென்றாள்.

கதிர் “எல்லாம் என்ன தான் மதிக்க மாட்டேன்கிதுங்க” என தலையில் அடித்துக்கொண்டு அக்னிக்கு அழைத்தான். அழைப்பை ஏற்ற அக்னி “ம்ம்” என்க
கதிர் “அவ ஏதோ குழம்பிருக்கா அவ்ளோதான்” என்று முடித்துக்கொள்ள
அக்னி “சரி” என்றான்.
கதிர் “நீ என்னவெனா பண்ணு ஆனா அவளை ஹர்ட் பண்ணாத” என்று அறிவுரைக்க அக்னி அழைப்பை துண்டித்தான்.

கதிர் ‘இதெல்லாம் எப்போ தான் சரியாகுமோ’ என நினைத்துக்கொண்டு பாரமான மனநிலையுடன் உறங்க சென்றான்.

மறுநாள் நேஹா அலுவலகம் கிளம்பிக்கொண்டிருந்தாள். கண்ணாடி முன் நின்றவள் “சும்மாவே ரொம்ப பண்ணுவான் நேத்து வேற ஓவரா பேசிட்டோம்.. வச்சு செய்யப்போறான்” என புலம்பியபடி அலுவலகம் சென்றாள்.

அலுவலகத்தில் தன் இருக்கையில் அமர்ந்தவள் அக்னியின் அறையையே நொடிக்கொருமுறை பார்வையிட அங்கு வந்த பியூன் “மேடம் சார் உங்களை கூப்பிடுறாரு” என்று அழைத்துவிட்டு செல்ல நேஹாவிற்கு தான் இதயம் ரயில் வண்டியை போல் தடதடத்தது.

ஆழ்ந்த மூச்செடுத்தவள் அக்னியின் அறைக்கதவை தட்டி அனுமதி பெற்று உள்ளே நுழைய அமைதியாக அவன் முன் சென்றாள்.

அக்னி “இன்னிக்கு ஒரு மீட்டிங் இருக்கு லன்ச்க்கு போறோம்.. அபிஷியல் மீட்டிங் தான் ஆனா ரெஸ்டாரெண்ட்ல.. பீ ரெடி” என்றவன் தன் கணினியை இயக்க நேஹா அவனை இமைக்காமல் பார்த்துக்கொண்டிருந்தாள். அவள் அங்கிருந்து செல்லாததை கண்டு நிமிர்ந்தவன் புருவமுயர்த்தி அவளைபார்க்க, மறுப்பாக தலையசைத்தவள் திரும்பி செல்ல
அக்னி “நாளைக்கு ஒரு டெண்டர்க்கு போகணும்.. டீடெயில்ஸ் மெயில் பண்ணிட்டேன்.. கொடேஷன் ரெடி பண்ணுங்க” என உத்தரவிட
“ஓகே” என்றவள் தன் இருக்கைக்கு சென்றாள்.
அவள் மனமோ “என்ன இவன்.. வச்சு செய்வானு பார்த்தா லன்ச்க்கு கூப்பிடுறேன்.. ஒருவேளை மறந்துட்டானோ” என எண்ணியவள் பின் “அவனாச்சு மறக்குறதாச்சு” என்று தலையை உலுக்கிக்கொண்டு தன் பணியில் கவனம் செலுத்தினாள்.

அதே சமயம் ஜெ.பி கன்ஸ்ட்ரக்ஷனில் மறுநாள் நடக்கவிருக்கும் டெண்டர் குறித்த விவரங்களை ஆராய்ந்துகொண்டிருந்தாள் ஆராத்யா. அப்போது அவளது முதலாளி ஜெயபிரகாஷ் அவளை அழைக்க தன் வேலைகளை ஒதுக்கிவிட்டு அங்கு சென்றாள்.

ஜெயபிரகாஷ், ஜெ பி கன்ஸ்ட்ரக்ஷனின் முதலாளி. அவருக்கு அறுபது வயதென்று கூறினால் யாரும் நம்ப மாட்டார்கள் அத்தகைய தோற்றத்தை உடையவர் அவர். இருபத்தி ஐந்து ஆண்டுகளாக அந்த நிறுவனைத்தை இன்றளவும் முதன்மையானதாக கட்டி காத்துவரும்   உழைப்பாளி. அவருக்கு ஆராத்யா என்றால் பிடிக்கும் அவளுடைய நேர்மை மற்றும் உழைப்பை கடந்த ஆறு ஆண்டுகளாக கண்டு வருகிறார் அல்லவா. அவருக்கு எப்போதும் ஆராத்யா இன்னோரு மகள் போல தான் ஆனால் அதை அவர் என்றும் காட்டிக்கொண்டதில்லை.

அவர் அறையின் கதவை தட்டியவள் “மே ஐ கம் இன்” என்று உத்தரவு கேட்க
“எஸ் ஆராத்யா வாங்க” என்றார்.
ஆரு “சொல்லுங்க சார் என்ன விஷயம்”
“டெண்டர்க்கு கொண்டு போக டாகுமெண்ட்ஸ் எல்லாம் ரெடியா” என்று கேள்வியெழுப்ப
ஆரு “எஸ் சார்.. ஆல்மோஸ்ட் டன், இன்னிக்குள்ள முடிச்சிடும்” என்றிட
ஜெபி “சாரி மா.. ஒரு ஜெனரல் மேனேஜர் கிட்ட இந்த வேலைய விட கூடாது ஆனா இது ரொம்ப கான்பிடென்ஷியல் அதான் யாரையும் நம்பல” என்று எடுத்துரைக்க
“தட்ஸ் ஓகே சார்.. கண்டிப்பா அந்த டெண்டர் நமக்கு தான்” என்றாள் ஒரு சிறு நகையுடன்.
ஜெபி “நம்ம கம்பெனி இந்த லெவல்லயே மெயின்டேயின் ஆகுறதுல பெரிய பங்கு உங்களுக்கு இருக்கு.. இது ஒரு பிரெஸ்டிஜ்ஜியஸ் ப்ரொஜெக்ட்.. நிறைய கம்பெனி இதுக்கு வருதுன்னு கேள்வி பட்டேன்” என்று தெரிவிக்க
ஆரு “கவலை படாதீங்க சார்.. நான் பார்த்துக்குறேன்” என்று வாக்களித்தவள் தன் அறைக்கு சென்றாள்.

××××××××

ரேயனும் கிஷோரும் சென்னை வந்த சேர்ந்தனர். கிஷோர் “நீ ரூம்க்கு போ.. நான் மேனேஜர பார்த்துட்டு வரேன்” என்றவன் செல்ல போக,
ஆத்ரேயன் “நாளைக்கு டெண்டர் எத்தனை மணிக்கு ஸ்டார்ட் ஆகும்” என்று வினவ
“பத்து மணிக்கு” என்றான். ஆத்ரேயன் தலையசைக்க கிஷோர் அங்கிருந்து சென்றான்.

ஒரு நாளில் வாழ்க்கை இங்கே எங்கும் ஓடி போகாது
மறுநாளும் வந்துவிட்டால் துன்பம் தேயும் தொடராது
எத்தனை கோடி கண்ணீர் மண் மீது விழுந்திருக்கும்
அத்தனை கண்ட பின்னும் பூமி பூ பூக்கும்..

வெவ்வேறு திசைகளில் சிதறிய காதல் மனங்கள் ஆறுவருடம் கழித்து சந்திக்கவிற்கும் தருணம் வெகுவிரைவில்..

Advertisement