Advertisement

                     அத்தியாயம் 10

சீனியர் மாணவர்களிடம் அக்னி சண்டையிட்டு அன்றொடு இரண்டு நாட்கள் கடந்திருந்தது. அன்று வகுப்பில் அக்னி ஆரு நேஹா கதிர் ஒரு பக்கம் அமர்ந்திருக்க, இங்கு ஆத்ரேயன் ஆதியுடன் அமர்ந்திருந்தான். கடந்த இரண்டு வாரங்களில் இவர்களுக்குள் ஒரு நல்ல நட்பு உருவாகியிருந்தது. அன்று கிஷோர் விடுமுறை எடுத்திருந்ததால் ஆதி ஆத்ரேயனுடன் அமர்ந்திருந்தான்.

முன் வரிசையில் அமர்ந்திருந்த ஸ்வேதா அக்னியிடம் பேசவேண்டி பின் வரிசைக்கு வந்தாள்.

அக்னியிடம் ஒரு சாக்லேட்டை நீட்டியவள் “அக்னி இந்தாங்க சாக்லேட்.. உங்களுக்காக தான் கொண்டு வந்தேன்” என்க, அக்னி அதை பெற்றுக்கொண்டு “தேங்க்ஸ்” என்றவன் அதை அவள் முன்னே ஆருவிடம் கொடுத்துவிட,

ஆரு “தேங்க்ஸ் ஸ்வேதா.. இப்போ தான் இவன்கிட்ட சாக்லேட் வாங்கி தர சொல்லி கேட்டுட்டு இருந்தேன்” என்றிட,

ஸ்வேதா “அக்னி.. நான் உங்களுக்காக கொடுத்தேன் ஆராத்யாக்கு இல்ல”

“ஆமா நீ எனக்கு கொடுத்த அப்போ அது என்னோடது.. எனக்கு சாப்பிட தோணல, நான் ஆருக்கு கொடுத்தேன்..என்ன இப்போ” என்றான் நீண்டதோர் விளக்கத்துடன்.

அதை கேட்டு ஸ்வேதா ஏதோ கூற வர,

நேஹா “எம்மா ஸ்வேதா, நக்ஷு உன்ன கூப்பிடறா பாரு” என்றிட, ஸ்வேதா முன்னே சென்றாள்.

நேஹா கூறியதை கேட்டு ஆரு “நக்ஷு கிளாஸ்லயே இல்லையே” என கேள்வியாய் அவளை பார்க்க, நேஹா அசடு வழிந்துக்கொண்டே “ஆமா இல்ல” என்றாள்.

ஆரு “அப்பறம் மேடம் எதுக்கு சொன்னிங்க”

“அது.. சும்மா எதுக்கு அவ இங்க நின்னு உசுர வாங்குறா… அதான்” என்றாள், அக்னி அதை கேட்டும் கேட்காதது போல் அமர்ந்திருக்க,

ஆரு நக்கலாக “ஓ” என்றாள். உடனே அக்னி “PQRST” என்று கூற, ஆரு அவனை கேவலமாக ஒரு பார்வை பார்த்துவிட்டு கதிரிடம், “டேய் கதிரு.. உனக்கே டஃப் கொடுக்குறான்டா இந்த அகி பைய..” என்று கூற,

கதிர் “மதுர வீரன் தானே” என்றான் ஒரு ராகத்தில். அதை கேட்டு அக்னி ஆருவின் மண்டையில் கொட்டினான். தலையை தடவியபடி அமைதியானாள்.

என்னதான் இங்கு பேச்சு வார்த்தை நடந்துக்கொண்டிருந்தாலும் ஆருவின் கண்கள் யாரும் அறியா வண்ணம்

நோக்கடிக்கொரு முறை ஆத்ரேயனை தழுவிச்சென்றது.

அவனோ தலையில் கைவைத்து கண் மூடி அமர்ந்திருந்தான். அவன் அப்படி அமர்ந்திருந்ததை பார்த்து அவளுக்கு தான் ஏதோ போல் இருந்தது.

ஆரு மனதில்’ஏன் இவன் இப்படி உட்கார்ந்திருக்கான்.. ஒருவேளை தல வலியா இருக்குமோ’ என்ற எண்ணம் ஓட ‘சரி எதுவா இருந்தாலும் லேப்ல கேட்போம்” என்று நினைத்துக்கொண்டு எப்போது ஆய்வகத்திற்கு செல்வோம் என காத்துக்கொண்டிருந்தாள்.

ஒருவழியாக ஆய்வகத்திற்கு செல்லும் நேரமும் வந்தது. ஆரு அவசரமாக சென்று பார்க்க அங்கு ஸ்ருதி மட்டும் நின்றுக்கொண்டிருந்தாள்.

அதில் யோசனையாய் இருந்தவள் ஸ்ருதியிடம் “ஸ்ருதி ஆத்ரேயன் எங்க.. கிச்சா இன்னிக்கி வரலன்னு தெரியும் ஆனா இவங்க” என்று கேள்வி கேட்க,

ஸ்ருதி “இவங்களா.. என்ன டி என்ன” என்று கேலியாய் கேட்க,

ஆரு “அட சொல்லு மா” என்றாள்.

ஸ்ருதியோ “தெரியல ஆரு.. அவன் லேப்கே வரல” என்றிட, அவளிடம் நன்றி தெரிவித்தவள் யோசனையில் ஆழ்ந்தாள்.

‘எங்க போயிருப்பான்.. ஒருவேளை கேன்டீன் போயிருப்பானோ.. கிச்சா கூட வரலயே.. என்ன பண்ணலாம்’ என சிந்தித்தவள் ‘சரி எதாச்சு சொல்லிட்டு போவோம்’ என எண்ணியவள் நேராக நின்றது பேராசிரியர் ஷாலினியின் முன்பு தான்.

ஆரு “மேம்.. எனக்கு ஒரு மாதிரி இருக்கு.. வாஷ் ரூம் போயிட்டு வரட்டுமா” என்று பாவமாக முகத்தை வைத்துக்கொண்டு கேட்க,

ஷாலினி “ஓகே ஆராத்யா டேக் கேர்” என்றாள். அவருக்கு நன்றியை தெரிவித்தவள் வாசலுக்கு சென்று நேஹாவை திரும்பி பார்க்க,

அவளோ ‘என்ன’ என்பதாய் பார்த்தாள்.

ஆரு “ஒன்னுமில்ல நான் சமாளிச்சிக்குவேன்” என வாயசைத்து செய்கை செய்தவள் அவசரமாக வெளியில் சென்றாள்.

ஆய்வகத்தை விட்டு வெளியேறியவள் “இவன் எங்க இருப்பான்.. இவ்ளோ பெரிய காலேஜ்ல இவனை எங்க போய் தேட” என புலம்பிக்கொண்ட வந்தவளுக்கு கேன்டீன் முன் கைகளை தலைக்கு முட்டுக்கொடுத்த படி அமர்ந்திருந்த ஆத்ரேயன் தென்பட்டான்.

ஆரு “இவன் என்ன.. தலைவலினா எதாச்சு வாங்கி குடிக்க வேண்டியது தான.. இப்படி உட்கார்ந்திருக்கான்” என மனதினுள் அவனை கடிந்தவள் கிஷோரின் எண்ணிற்கு அழைப்பு விடுத்தாள்.

ஆருவின் எண்ணை பார்த்த கிஷோர் ‘என்ன பார்ட்னர் இந்த டைம்ல போன் பண்றா’ என யோசித்தபடி அழைப்பை ஏற்க,

ஆரு “பார்ட்னர்.. என்ன பார்ட்னர் எங்க போன”

“அரே பார்ட்னர்.. என்ன கால்லாம் பண்ணிருக்க.. எனக்கு பீவர் அதான் லீவ்” என்றிட,

ஆரு “இப்போ எப்படி இருக்கு.. ஓகே தான”

“அதெல்லாம் ஓகே தான்.. நாளைக்கு வந்திடுவேன்”

“சூப்பர் சூப்பர்”

“சரி எதுக்கு கால் பண்ண.. சொல்லு என்ன ஆச்சு”

“அது உங்களை காணும்ன்னு தான் கால் பண்ணேன்”

“இப்போ லேப் டைம்.. நீ அதை கட் அடிச்சிட்டு எனக்கு கால் பண்றியா.. ஏதோ இடிக்கிதே”

“அட.. இதுல என்ன சந்தேகம் உங்களுக்கு”

“சந்தேகம்லாம் இல்ல பார்ட்னர் கன்பார்ம்மே ஆகிடுச்சு.. சொல்லு எதுக்கு கால் பண்ண”

“இல்ல பார்ட்னர் இங்க உங்க பிரண்ட் தனியா தலைல கை வச்சிக்கிட்டு உட்கார்ந்திருக்காரு அதான் ஏன்னு கேளுங்கன்னு சொல்ல தான் கால் பண்ணேன்.. லேப் போனும்ல”

“பார்ட்னர்” என்று ஒரு மாதிரி குரலில் அவன் கேலி செய்திட

“ஈஈஈ.. சொல்லுங்க பார்ட்னர்” என அசடு வழிந்தாள் அவள்.

கிஷோர் சிரித்துவிட்டு “அவன் சாப்பிட்டிருக்க மாட்டான் பார்ட்னர்.. அதான் அவனுக்கு தல வலி வந்திருக்கோம்.. இருந்தாலும் இரு நான் என்னன்னு கேட்டு சொல்லுறேன்” என்றவன் ஆத்ரேயனுக்கு அழைத்து பேசினான்.

சிறிது நேரத்தில் கிஷோர் ஆருவிற்கு அழைப்பு விட, அதை ஏற்றவள் “என்ன ஆச்சு பார்ட்னர்”

“அதான் சொன்னேன்ல.. அவன் சாப்பிடலயாம் அதான் தல வலி வந்திருக்கு.. லேப் போக மாட்றான்”

“ஓ.. நான் போய் சாப்பிட சொல்லவா”

“அந்த லூசு கேட்காதே.. திட்டிட போறான் பார்ட்னர்”

“நான் ட்ரை பண்றேன் பார்ட்னர்.. அவங்கள இப்படி பார்க்க கஷ்டமா இருக்கு.. நான் அப்பறம் கூப்பிடுறேன்” என்றவள் அழைப்பை துண்டித்துவிட,

கிஷோர் ‘எதே கஷ்டமா இருக்கா.. கன்பார்ம் இவளுக்கு அவன் மேல க்ரஷ் இருக்கு.. நம்ம அதை லவ்வா மாத்திட வேண்டியது தான்’ என தனக்குள் சிரித்துக்கொண்டான்.

இங்கு ஆரு எப்படி அவனிடம் பேசுவது என  சிந்திக்க, அப்போது சரியாக அஷ்வின் அவளை கடந்து சென்றான். அவனை பார்த்தவுடன் ஆருவின் மனதில் ஒரு எண்ணம் தோன்ற, உடனே “சீனியர் சீனியர்” என்று அவன் பின் சென்றாள்.

அவள் விளிப்பில் திரும்பியவன் “சொல்லுமா என்ன ஆச்சு.. உன் பெயர் என்ன.. எதாச்சு பிரச்சனையா.. யாராவது வம்பிழுத்தாங்களா” என பொறுப்பான ப்ரெசிடெண்ட்டாய் கேள்வி கேட்க,

ஆரு “ஐயோ ப்ரெசிடெண்ட் சீனியர்.. எனக்கு ஒன்னுமில்ல.. என் பெயர் ஆராத்யா, சிவில் பர்ஸ்ட் இயர்”

“அட நம்ம டிப்பார்ட்மெண்ட்.. சொல்லுடா என்ன வேணும்”

“அது வந்து..” என ஆரு இழுக்க,

அஷ்வின் “வந்து” என்றான் அவனும் இழுவையாக,

“இல்ல அது” என்றவளின் பார்வை நொடிக்கொரு முறை அலைபாய, அவள் பார்வை சென்ற திசையில் திரும்பி பார்த்தவன் “என்ன அவன்கிட்ட பேசனுமா” என்று நேரடியாக கேட்டிட, அவள் விழி விரித்து “சீனியரே.. இதால தான் நீங்க ப்ரெசிடெண்ட் போல” என சிலாகிக்க,

அஷ்வின் சிரித்துக்கொண்டே “சரி சொல்லு.. என்ன பண்ணனும் உனக்கு இப்போ” என்று கேட்டான். ஏனோ அவனிடம் எதுவும் மறைக்க தோன்றாமல் அவள் நடந்தவற்றை (அவன் உண்ணாமல் இருப்பதை பற்றி) கூற,

அஷ்வின் “இரு இரு.. என்னன்னு சொல்லிட்டு வந்த லேப்ல”

“ஏன்.. போய் போட்டுக் கொடுக்க போறிங்களா” என்று பாவமாக கேட்க,

அஷ்வின் “சே சே.. இல்ல பாப்பா.. நான் ஏன் சொல்ல போறேன்” என்றான் ஆதரவாக,

“வாஷ் ரூம்ன்னு சொல்லிட்டு வந்தேன்”

“ஓ.. சரி என்கிட்டயே டக்குன்னு பேசிட்ட, அவன்கிட்ட பேச என்ன”

“ஆன்.. அது.. அது..” என அவள் திணற,

“என்ன பாப்பா க்ரஷ்ஷா” என்றான் சரியாக,

“சீனியரே.. நீங்க ஒரு போதி தர்மன்”

“ஹாஹா.. சரி என்ன பண்ணனும் இப்போ.. அதை சொல்லு.. டைம் ஆகுது உனக்கு”

“ஒன்னுமில்ல சீனியரே.. நீங்க போய் அவன்கிட்ட பேசுங்க நான் ஜாயின் பண்ணிக்கிறேன்” என்றாள்.

அஷ்வின் “யாருனே தெரியாம என்ன பேச” என்று அவன் தெரியாதது போல் கேட்க,

ஆரு “என்னையே ஏமாத்தூறிங்க பார்த்தீங்களா.. நான் தான் பாத்தேன்னே.. ஆடில நீங்க ரெண்டு பேரும் பேசிகிட்டத”

“பிராடு தான் நீ.. சரி உனக்கு ஹெல்ப் பண்றேன் பாப்பா”

“தேங்க்ஸ் சீனியரே.. நீங்களும் எந்த உதவினாலும் என்கிட்ட கேட்கலாம்..”

“ஹாஹா கண்டிப்பா மேடம்.. இப்போ நான் போறேன்..நீ வா” என்றவன் முன்னே நடந்தான்.

தலையில் கைவைத்து அமர்ந்திருந்த ஆத்ரேயனின் அருகே அமர்ந்த அஷ்வின் “என்ன ரேயா கிளாஸ் டைம்ல இங்க என்ன பண்ற”

“வாங்க ண்ணா.. ஒன்னுமில்ல தலைவலி அவ்ளோதான்”

“எதாச்சு சாப்டியா.. அதனால கூட தல வலிக்கலாம்”

“சாப்பிட்டேன் ண்ணா.. சரியாகிடும் விடுங்க..” என்று பேசிக்கொண்டிருக்கும் போதே வந்த ஆரு “ஆத்ரேயன் மேம் தேடுறாங்க.. லேப்க்கு வர சொன்னாங்க” என்றவள் அப்போது தான் அஷ்வினை பார்ப்பது போல் “ஹாய் சீனியர்” என்றாள்.

அஷ்வினும் “ஹாய் மா.. யாரு நீ”

“நான் ஆத்ரேயன் கிளாஸ்மேட்.. ஆராத்யா”

“ஓ அப்படியா.. சரி.. ரேயா சீக்கிரம் சாப்பிட்டு போ” என்றான். ரேயன் என்ன செய்வது என்று யோசிக்க, ஆருவும் அஷ்வினும் மாறி மாறி பார்த்தனர். உடனே அஷ்வின் “பாப்பா ஒரு உதவி பண்ண முடியுமா”

“ஹான்.. சொல்லுங்க சீனியர்”

“சாப்பிட எதாச்சு வாங்கிட்டு வர முடியுமா”

“ஹான் இதோ” என்றவள் அவனுக்கு உணவு வாங்கிக்கொண்டு வர சென்றாள்.

அவள் சென்றவுடன் அஷ்வின் “டேய்.. இங்க தான இருக்க.. சாப்பிட வேண்டியது தான”

“இல்ல முடில ண்ணா.. அதான்”

“கிச்சா வரலையா”

“இல்ல ண்ணா” என்று இவர்கள் பேசிக்கொண்டிருக்கும் போதே உணவுடன் வந்த ஆரு “இந்தா.. இதை சாப்பிடு” என்றாள். ஆத்ரேயன் எதுவும் பேசாது அமைதியாய் அவளை பார்க்க,

அஷ்வின் “டேய் சாப்பிடு டா”

ரேயன் “இல்ல பரவால்ல ண்ணா” என்றான்.

ஆரு “ஏன்.. சாப்பிடு.. என்ன இப்போ.. அதான் வாங்கியாச்சுல” என்றிட, அவனும் எதுவும் பேசாது உண்ண தொடங்கினான்.

அஷ்வின் “சரி டா நான் கிளம்புறேன்.. நீ சாப்பிட்டு கிளம்பு… பாப்பா நீயும் தான்”

ஆரு “ஓகே சீனியர்” என அவள் சல்யூட் அடிக்க, அஷ்வின் சிரித்துக்கொண்டே சென்றான். அவள் செய்கையில் ஆத்ரேயனுக்கும் சிரிப்பு வந்தது ஆனால் அதை இதழின் இடையே மறைத்தவன் அமைதியாக உண்டான். சிறிது தூரம் சென்ற அஷ்வின் திரும்பி ஆருவிற்கு கண் காட்ட, அவளும் சிரிப்புடன் தலையசைத்தாள்.

ஆத்ரேயன் அருகில் சென்றவள் “தலவலியா.. அதான் வரலையா லேப்க்கு” என்று கேட்க

“ம்ம்” என்றான்.

“இதை சாப்பிட்டா கொஞ்சம் சரியாகும்” என்க, அதற்கும் “ம்ம்” என்றான்.

‘என்ன எல்லாத்துக்கும் ம்ம் மட்டும் சொல்றான்.. இதுக்குமேல இவன்கிட்ட என்ன பேசுறது.. பேசமா கிளாஸ்க்கே போவோம்’ என்று அவள் நினைக்கும் போது,

ஆத்ரேயன் “எனக்கு அவ்ளோ சீக்கிரம் சரி ஆகாது.. நான் அப்பறம் வரேன்.. நீ போ”

“சரியாகலயா.. நான் வேணா மெடிக்கல் போய் மாத்திரை வாங்கிட்டு வரட்டா”

“உனக்கு லேப் மிஸ் ஆகுதுன்னு போக சொன்னா நீ மருந்து வாங்கிட்டு வரேன்னு சொல்லுற”

“இல்ல தலைவலின்னு சொல்ற.. அப்படியே எப்படி போக முடியும்” என சிறுகுரலில் அவள் கூற,

ஆத்ரேயன் “தலைவலி தான்.. பெருசா ஒன்னுமில்ல.. நீ போ” என்றிட, அவள் அமைதியாக நின்றாள். ரேயன் அவளை அழுத்தமாக பார்க்க, அப்போது எழுந்து சென்றாள்.

என்னதான் வாய் வார்த்தையாக அவளை போக சொன்னாலும், அவள் செல்வது அவன் மனதை உறுத்த தான் செய்தது. தனியாக இருப்பது வேறு கடுப்பாக இருந்தது அவனுக்கு. மனதில் கிஷோரை நல்ல வார்த்தைகளால் அர்ச்சித்தவன் உர்ரென்று முகத்தை வைத்துக்கொண்டு உண்டான்.

உணவு உண்ட பின் கொஞ்சம் தெளிந்தவனுக்கு தலைவலி மட்டும் விடவில்லை. தலையை பிடித்துக்கொண்டு அவன் குனிந்திருக்க, அவன் அருகே நிழலாடியது. யாரென்று அவன் நிமிர்ந்து பார்க்க, அங்கு நின்றதோ அவனின் தேவதை தான்.

மாத்திரையுடன் நின்றவளை அவன் ‘என்ன’ என்பது போல் பார்க்க,

ஆரு “இது போடு.. தலைவலி சரியாகிடும்”

“அப்போ நீ லேப் போல.. மெடிக்கல் தான் போயிருக்க”

“ஆமா” என்று அசட்டையாய் கூறியவளை அவன் அழுத்தமாக பார்க்க,

ஆரு “சரி நான் அவ்ளோ தூரம் போய் வாங்கிட்டு வந்தேன்ல.. அதுக்காகவாச்சு போடு” என்று அதை நீட்ட, அவனுக்கு சிரிப்பு தான் வந்தது. ஆனால் அவளிடம் அதை காட்டிக்கொள்ளமல் மாத்திரையை விழுங்கினான். ஆரு புன்னகைத்துவிட்டு “சரி ஒரு பத்து நிமிஷம் அப்பறம் லேப் வா.. நான் போறேன்”

“ம்ம்ம்”

‘சரியான ம்ம் க்கு பொறந்தவன்’ என அவனை நினைத்து  தலையில் அடித்துக்கொண்டு அவள் திரும்ப,

ஆத்ரேயன் “தேங்க்ஸ்” என்றான், அதில் அவள் மதிமுகம் சட்டென மலர்ந்துவிட, “இட்ஸ் ஓகே” என்றவள் முகம்கொள்ள புன்னகையுடன் ஆய்வகம் சென்றாள்.

அவள் கூறியது போல் பத்து நிமிடத்தில் ஆய்வகம் வந்தவன் அங்கு யாரும் இல்லாமல் இருப்பதை கண்டு யோசனையுடன்

வகுப்பிற்கு சென்றான். அங்கு மாணவர்கள் தங்கள் குழுக்களுடன் அமர்ந்திருக்க, ஆரத்யாவை தேடினான்.

கை காட்டினால் அக்னியிடம் மாட்டிக்கொள்வோம் என்பதை அறிந்த ஆரு தலையை மட்டும் எக்கி பார்க்க, ஆத்ரேயன் அதை கவனித்துவிட்டான்.

ஆரு அமர்ந்திருந்த இடத்திற்கு வந்தவன் அவள் அருகில் அமர்ந்துக்கொண்டான். அவள் பேசுவாள் என்று அவன் எதிர்பார்க்க அவள் அமைதியே உருவாய் அமர்ந்திருந்தாள். ஆனால் அதுவும் சிறிது நேரமே, ஆத்ரேயனின் புறம் திரும்பியவள் “இப்போ ஓகேயா” என்று கேட்க, அவள் புறம் திரும்பியவன் “எஸ், சரியா போச்சு” என்றான்.

ஆரு “ஹப்பா.. சூப்பர்” என்று நிம்மதியானவளை கண்டு அவன் குழம்பி தான் போனான்.

ஷாலினி செய்முறை விளக்கம் கொடுத்துக்கொண்டிருக்க அனைவரும் அதை எடுத்துக்கொண்டனர்.

அக்னி “ஆரு என் லேப் கோட் உன்கிட்ட இருக்கா.. காலைல வேண்டாம்ன்னு சொன்னதால கவனிக்கில.. இப்போ வேணும்” என்க, அப்போது தான் ரேயனும் அவன் சத்தத்தில் திரும்பினான்,அதை கண்டு அக்னிக்கு கோபம் வர, ஆத்ரேயன் எவ்வித உணர்வும் காட்டாமல் முகத்தை திருப்பிக்கொண்டான்.

ஆரு “அகி என்கிட்ட இல்லையே.. இந்தா என்னோடது வச்சுக்கோ.. மேம் கேட்டா நான் ஏதாவது சொல்லிக்கிறேன்”

“இல்ல இல்ல வேண்டாம்.. நான் பார்த்துக்குறேன்” என்றவன் வெளியில் சென்றிட,

ஆரு

“டேய் இருடா.. போய்ட்டான்.. கேட்கவே மாட்டான்” என அவனை அழைத்தவள் பின்  சத்தமாக புலம்பிட, ஆத்ரேயன் அவளிடம் “அவன்கிட்ட கொடுத்திட்டு நீ என்ன பண்ணுவ” என்று வினவினான்.

ஆரு எப்போதும் போல் அசட்டையாக

“மேம் கிட்ட ஏதாவது சொல்லிருப்பேன்” என்றாள்.

“மேம் திட்டுனா” என்று ஆத்ரேயன் மீண்டும் கேள்வி கேட்க,

“வாங்கிக்க வேண்டியது தான்.. இதுல என்ன பெருசா இருக்கு” என்றவளை அவன் ஒரு மாதிரி பார்க்க,

ஆரு “என்ன.. அப்படி ஒரு லுக்கு” என்று அவள் சிரிப்புடன் கேட்க, ரேயன் சிறு நகையுடன்

“வியர்டோ” என்றான்.

ஆரு “ஹாஹா தேங்க்ஸ்” என்றாள் கண் சிமிட்டி.

அக்கணம் இருவரும் உணரவில்ல காதலேனும் அழகிய உலகில் இனி வரும் காலங்களில் இருவரும் கைபிடித்து ஒன்றாக காலடி எடுத்துவைக்க போவதை.

தொடரும்…

Advertisement