Superb Precap,
மல்லிகாமணிவண்ணன் டியர்
அடடடடடா
சிவனேன்னு சும்மா இருக்க மாட்டாமல் இந்த புள்ளைத்தாய்ச்சி பொண்ணு கண்டதையும் நினைச்சு குழம்புதே
வாய் இருக்க மாட்டாமல் கோக்குமாக்கா எதையாவது பேசி விட வேண்டியது
அப்புறம் புருஷன் கண்டு கொள்ளவில்லை புண்ணாக்கு வைக்கலைன்னு அழ வேண்டியது
இந்த ஷர்மிளா பொண்ணுக்கு இதே வேலையா போச்சு
குழந்தை பிறக்கும் வரை பிரச்சனை எதுவும் வேண்டாம்ன்னு ரவியும் பொறுமையாத்தான் இருக்கிறான்
இதுக்குத்தான் பெற்றவள் கூட இருக்கணும்ன்னு எதிர்பார்ப்பது
அம்மா லெட்சுமிதான் இல்லை
சரி சின்னாயியா வந்த விசாலியாவது அனுசரணையா இருப்பாள்ன்னு பார்த்தால் அது சரியான தத்தியா இருக்கு
போறாக்குறைக்கு விசாலியின் அம்மா வந்து ஏதாவது ஏழரையை இழுத்து விட்டுட்டு போறாள்
ஆமாம்
விசாலியை நீங்க கல்யாணம் பண்ணும் பொழுது அவளுடைய அம்மாவை இலவச இணைப்பாக கொடுத்துட்டாங்களா, மிஸ்டர் கேசவன்?