E1 Santhathil Paadaatha Kavithai

Advertisement

murugesanlaxmi

Well-Known Member
விநாயகர் சதுர்த்தி எளிய முறையில் வீட்டில் பூஜை செய்வது எப்படி?
  1. அதிகாலையிலேயே எழுந்து, குளித்துவிட்டு, வீட்டையும் சுத்தமாக்கிக் கொள்ள வேண்டும். வாசலில் மாவிலை தோரணம் கட்டலாம். முடிந்தால், இரண்டு வாழைக்கன்றுகளையும் வாசலின் இருபுறங்களிலும் கட்டிலாம். பிறகு, பூஜையறையில் சுத்தம் செய்த ஒரு மணையை வைக்க வேண்டும்.
  2. அதன்மேல் ஒரு கோலம் போட்டு, அதன்மேல் ஒரு தலை வாழை இலையை வைக்க வேண்டும். இலையின் நுனி வடக்கு பார்த்ததுபோல இருப்பது நல்லது. இந்த இலையின் மேல் பச்சரிசியைப் பரப்பி வைத்து, நடுவில் களிமண்ணாலான பிள்ளையாரை வைக்க வேண்டும்.
  3. பூமியிலிருந்து உருவான எதுவும் பூமிக்கே திரும்பப் போகவேண்டும் என்ற தத்துவம்தான் களிமண் பிள்ளையார். களிமண் மட்டும்தான் என்றில்லாமல், உலோகம், கற்சிலை விக்ரகங்களையும் வைக்கலாம்.
  4. பத்ர புஷ்பம் எனப்படும் பல்வகைப் பூக்கள் கொண்ட கொத்து, எருக்கம்பூ மாலை, அருகம்புல், சாமந்தி, மல்லி என்று எத்தனை வகை பூக்களை வாங்க முடியுமோ, அவரவர் வசதிக்கேற்ப வாங்கிக் கொள்ளலாம். மஞ்சள் சந்தனம் குங்குமத்தை பிள்ளையார் நெற்றியில் வைக்க வேண்டும். பிம்பத்துக்கு தொப்புளில் நாணயம் வைத்து மூட வேண்டும். அதன்பின் பிள்ளையாருக்குப் பூணூல் அணிவித்து, வெள்ளெருக்கம்பூ மாலை மற்றும் அருகம்புல் மாலை சார்த்தி பூஜிப்பது சிறப்பானது.
  5. சில வகை பழங் களையும் வாங்கிக் கொள்ளலாம். இவை எல்லாவற்றையும் விட, விநாயகருக்கு மிகவும் பிடித்தமான மோதகத்தை செய்து கொள்ளலாம். அதாவது கொழுக்கட்டை.
  6. பிள்ளை யா ருக் கு பூக்களால் அலங்காரம் செய்து விட்டு, பிறகு விநாயகர் பாடல்கள் பாடலாம். அவ்வையார் தந்த விநாயகர் அகவல், காரிய சித்தி மாலை படிப்பது விசேஷமான பலன்களை தரும். பிள்ளையாருக்கு கொழுக்கட்டை மட்டுமில்லாமல், அவரவர் வசதிக்கேற்ப எள்ளுருண்டை, பாயசம், வடை என்றும் நைவேத்யம் செய்யலாம்.
  7. பால், தேன், வெல்லம், முந்திரி, அவல் என்று ஒவ்வொன்றிலும் சிறிதளவு எடுத்து ஒன்றாகக் கலந்து அதையும் நைவேத்யம் செய்யலாம். நிவேதனப் பொருட்கள் ஒவ்வொன்றிலும் 21 என்ற கணக்கில் சிலர் வைப்பார்கள். ஆனால், எண்ணிக்கை முக்கியமில்லை, ஈடுபாடுதான் முக்கியம். பிறகு கற்பூரம் காட்டி விரதத்தை முடிக்கலாம்.
  8. இந்த விரதத்தை காலையிலிருந்தே உணவு எதுவும் எடுத்துக் கொள்ளாமல் அனுஷ்டிப்பது மிகவும் விசேஷம். பூஜை நேரம் வரை பட்டினியாக இருப்பது சிறப்பு. சம்பிரதாயம் பார்க்க கூடியவர்கள் இந்த விநாயகர் சதுர்த்திக்கு பிறகும் தொடர்ந்து விரதத்தை அனுசரிப்பார்கள். அப்படித் தொடர்ந்து, பவுர்ணமிக்கு பிறகு வரும் சதுர்த்தி தினத்தோடு விரதத்தை நிறைவு செய்வார்கள்.
  9. இத்தனை நாள் விரதத்துக்கு பிறகுதான் பிள்ளையாரை கிணற்றிலோ அல்லது ஏதாவது நீர்நிலையிலோ கொண்டுபோய் போடுவது வழக்கம். பதினைந்து நாள் அனுசரித்தாலும் சரி, விநாயகர் சதுர்த்தி அன்றைக்கு ஒரே ஒருநாள் மட்டும் அனுசரித்தாலும் சரி, மேற்கொள்ளும் விரதத்தை உளப்பூர்வமாகக் கடைப்பிடிக்க வேண்டியதுதான் முக்கியம்.
  10. வருடத்திற்கு ஒருமுறை இப்படி விநாயகர் சதுர்த்தி அனுசரிப்பதுபோல மாதந்தோறும் பவுர்ணமிக்கு அடுத்த சதுர்த்தி, சங்கடஹர சதுர்த்தியாக அனுஷ்டிக்கப்படுகிறது. இந்த நாளிலும் விரதம் இருப்பது சிலருடைய வழக்கம். அன்றைக்கு முழுவதும் விரதமிருந்து, விநாயகர் சிலை அல்லது படத்துக்கு முன்னால் தீபமேற்றி, விநாயகர் பாடல்கள், ஸ்தோத்திரங்களை பாடி, மாலையில் கொழுக்கட்டை நைவேத்யம் செய்து, பிறகு சந்திர தரிசனம் செய்துவிட்டு எளிமையான உணவை எடுத்துக்கொண்டு விரதத்தை முடிப்பதும் சிலர் வழக்கம்.
  11. இந்த விரதங்களால் உள்ளம் மேன்மை அடையும். உடல் ஆரோக்கியம் பெறும். எல்லா வளங்களும் நிறையும். விரதம் இருப்பவர்களுக்கு மட்டுமல்ல, அவர்கள் குடும்பத்தினருக்கும், அவர்களை சார்ந்த அனைவருக்கும் விநாயகர் நல்லன எல்லாம் அருள்வார்.
    12 விநாயகர் சதுர்த்தி அன்று காலையில்தான் களிமண் விநாயகரை வாங்க வேண்டும். முதல் நாள் வாங்கி வைக்கக் கூடாது கிழக்குப் புறமாக தலைவாழை இலை (நுனி இலை) போட்டு அதன்மேல் நெல் பரப்பி, அதற்கு மேல் இன்னொரு நுனிஇலை போட்டு பச்சரிசியை நிரப்பி, அதன்மேல் களிமண் பிள்ளையார் வைக்கவேண்டும். வடக்குப்பக்கம், மேற்குப்பக்கம் பார்க்க பிள்ளையாரை வைத்து பூஜிக்கலாம். ஆனால், தெற்குப்பக்கம் பார்த்து வைப்பதோ, பூஜிப்பதோ கூடாது.
மணை அல்லது பாயில் அமர்ந்து கீழ்க்கண்ட சுலோகத்தைக் கூறி பிரார்த்தனை செய்ய வேண்டும்.
வக்ரதுண்ட மஹாகாய கோடிஸூர்ய ஸமப்ரப |
அவிக்நம் குரு மே தேவ ஸர்வகார்யேஷு ஸர்வதா ||
உடைந்த கொம்பையுடைய (ஸ்ரீ விநாயகப் பெருமான், வியாசர் சொல்ல ஸ்ரீமகாபாரதத்தைத் தன் கொம்பை உடைத்து எழுதினார் என்பது புராணக் கூற்று) பெரிய உடம்புடன் கூடிய பலகோடி சூரிய பிரகாசமுடைய இறைவனே! என்னுடைய எல்லா காரியங்களிலும் எப்போதும் எந்தவிதமான இடைஞ்சலும் இல்லாமல் இருக்க நீ அருள் புரியவேண்டும்.
அடுத்து ஸ்ரீ விநாயகருக்கு உகந்த அருகம்புல்லால் கீழ்க்கண்ட மந்திரத்தை 108 முறை கூறி அர்ச்சிப்பது குடும்ப நலனுக்கு உகந்தது..
ஓம் கம் கணபதயே நமஹ |
மஞ்சள், குங்குமம், சந்தனம், நீர் சேர்த்த அரிசியில் (அட்சதை) புஷ்பங்களும் (வெள்ளெருக்கு, செவ்வரளி, செம் பருத்தி, வெண்தாமரை) அருகம்புல் கொண்டு அர்ச்சிக்கவும். மேலே சொன்ன மந்திரத்தைச் சொல்லி அர்ச்சனை செய்யவும்.
என்ன நைவேத்தியம்?
கொய்யா, இலந்தை, வாழைப்பழம், திராட்சை, நாகப்பழம் போன்றவற்றுடன் கரும்புத் துண்டு, தேங்காய், வெற்றிலை, பாக்கு வைக்கவேண்டும்.
பின்பு வெண்பொங்கல், வெல்ல மோதகம், உப்பு மோதகம், அப்பம், உளுந்து வடை, கறுப்பு சுண்டல், மொச்சக்கொட்டை வேகவைத்தது, இட்லி, தோசை, பாயசம், அவல், பொரியில் நாட்டுச் சர்க்கரை கலந்து நைவேத்தியம் செய்யவேண்டும். அதன்பின் கற்பூர ஆரத்தி காட்டி விநாயகப் பெருமானை வழிபடுவது சிறப்பானது. பூஜை முடிந்ததும் அவரவர் சக்திக்கேற்ப பிரம்மச்சாரிக்கு அன்னமளித்து ஒரு வேஷ்டி (4 முழம்) கொடுத்து, தட்சணை அளிப்பது குடும்பத்துக்கு நலம் தரும்.
களிமண் பிள்ளையாரை வீட்டில் வைத்து வழிபட்டுவிட்டுப் பின்பு ஓடும் நீரில் விட்டுவிடவேண்டும். முடியாதவர்கள் கிணறு, ஏரி, கடற்கரையில் விடலாம்.....
 

banumathi jayaraman

Well-Known Member
என்னோட இனியத் தோழிகள்
அனைவருக்கும், பாசமிகு சகோதரர்கள்,
முருகேசன்லெஷ்மி and பழனியப்பன்
இருவருக்கும், இனிய விநாயகர் சதுர்த்தி
நல்வாழ்த்துக்கள், என்னருமைத் தோழிகளே
இனிய சகோதரரே
என்னோட விநாயகப் பெருமான் திருவருளாலும்,
அனுகிரஹத்தாலும், ஒவ்வொருவரும் எண்ணிய,
எண்ணங்கள் இனிதே, ஈடேற வேண்டுமென்று
வாழ்த்துகிறேன்
தாமதமான விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கு
மன்னிக்கவும்
லேட்டாத்தான் இங்கு வந்தேன் பா
 

banumathi jayaraman

Well-Known Member
hi malli,

காவியம் பாட வருபவள்
கிருஷ்ண கானத்தில்
லயிப்பாளா...?
இல்லை.....
ஓவியம் காண வருபவன்
காவிய கீதத்தில்
துயில்வானா...?
சந்தத்தில் பாடாத கவிதை - இது
சந்தம் வாடாத மகிமை!

நன்றி
Excellent, Mithravaruna dear
 

banumathi jayaraman

Well-Known Member
:D:Dவந்தாச்சு
:mad::mad::mad:

:cool::cool:I lke my darling only
வஞ்ச புகழ்சசி...:cool:
காவ்யா புதனா???ன்


இல்ல காவ்ய காதலா....


Literature student..
Principles Vera...

Kalakura kaavya.
சரி விடுங்க... அதுக்கு ஈடாக எனக்கு ஐஸ் கிரீம் வேண்டும் :p அப்ப தான் நான் கூல் ஆவேன் :p
மல்லி கேட்டாலும்...என் டார்லிங் க்கு மட்டும் தான்..சொல்லுவேன்:p
பிசாசா தேவதையா மாறப்போறவளோ
சரி
ice-cream-4-smiley-emoticon-emoji.png
ஹா...ஹா..ஹா.....
 

banumathi jayaraman

Well-Known Member
நகர்ததிடுவோம்...நண்பனுக்கு அர்தத ராத்திரியில் என்ன வேலை..
கல்யாணம் ரேணுகாக்கு தானே...

Me too......:D
நீ 2 இல்ல...4 :D:mad::p:cool:
அப்படின்னா.....
ஹா...ஹா...ஹா.....
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top