கற்பூர முல்லை Episode 28

Advertisement

Jeevitha Ram prabhu

Active Member
மலர் 28
அன்று மாலை அகிலன் கிளம்புவதற்காக துணிகளை அடுக்கிக் கொண்டிருந்தான் அவனுக்கு அன்று இரவு ரயில் புக் பண்ணி இருந்தான் ... அவனைத் தவிர மற்ற அனைவரும் சென்றிருந்தனர் ஆகவே அவன் மட்டும் தனியே இருந்தான்.

அந்த சமயம் அங்கு வந்து சேர்ந்தாள் தமிழ். அவளைப் பார்த்ததும் அகிலனுக்கும் ஆச்சரியம்தான். அவனே அவளை பார்த்துவிட்டு செல்ல வேண்டும் என்று நினைத்திருந்தான். ஆனால் நேரம் இல்லாமல் போகுமோ....? என்று கவலையாய் இருந்தான். ஆனால், அதற்கு முன்பாகவே அவள் அங்கு வந்திருந்தாள்.

என்ன கிளம்பியாயிற்றா....? என்றாள்.
அவனும் கிளம்பி கொண்டே இருக்கிறேன் என்று கூறினான்.

பிறகு இப்பொழுது தான் நீ உன் வேலையெல்லாம் முடித்துக்கொண்டு கோவையிலிருந்து இங்க வந்து சேர்ந்தாய்....இப்போது பாரு, நான் மறுபடியும் ஊருக்கு செல்ல வேண்டியதாயிற்று.... என்று கூறினான்.
பரவாயில்லை போயிட்டு வாருங்கள் என்று நிதானமாய் கூறினாள்....

ம்ம்ம்ம்ம் ..... போகலாம் தான் ஆனால் திருமணத்தையும் முடித்துக் கொண்டு அதற்கு அடுத்தடுத்த சம்பிரதாயங்களையும் முடித்துக் கொண்டு வருவதற்கு கொஞ்சம் நாட்கள் ஆகும் என்று கூறினான்...அதுவரை உன்னை காணாமல் இருக்க வேண்டுமே என்று சோகத்துடன் கூறினான்....

பரவாயில்லை தங்கைக்காக கொஞ்சம் அட்ஜஸ்ட் செய்து கொள்ளுங்கள் என்றாள் அவளும்....

பிறகு, தமிழ் எல்லாம் எடுத்தாயிற்றா...? வேறு ஏதாவது மறந்து விட்டீர்களா....? என்று கேட்டாள்...
எல்லாம் எடுத்து ஆயிடுச்சு. என் உயிரை மட்டும் தான் இங்கே விட்டு செல்கிறேன் என்று கூறினான்....

அப்படி சொன்னதோடு மட்டுமல்லாமல் அவளை நெருங்கினான். அவன் கண்களில் அளவில்லாத காதல் தெரிந்தது.
அவன் முன் செல்ல அவள் பின் செல்ல கடைசியில் சுவரில் சாய்ந்து நின்றாள்..

அப்பொழுது அவன் மூச்சுக்காற்று அவள் மேல் பட்டது.
ஏய் வேண்டாம்.... என்று அவள் கூற அவன் அதை கண்டுகொள்ளாமல் அவளை இழுத்து அணைத்தான்.

அவன் அணைப்பில் சில நொடிகள் இருந்தவள் பின்னர் போதும் விடுங்கள் என்று கூறி விலகினாள்...

ஆமாம் குமாரும் பவியும் வந்து விடுவார்கள் என்று அவன் கூறி அவளை விலக்கினான்.
சொன்ன அடுத்த நிமிடம் வெளியே கார் வந்து நிற்கும் ஓசை கேட்டது. உடனே இருவரும் விலகினர்.

உள்ளே வந்தவர்கள் இவளை எதிர்பார்க்கவில்லை...இருந்தும் அவர்களுக்கு இது பெரிய விஷயமாய் படவில்லை....
குமார்.... பரவாயில்லை பரவாயில்லை.... நடக்கட்டும் நடக்கட்டும்.... என்று சிரித்தவாறு கூறினான்...
டேய் அப்படியெல்லாம் ஒன்றுமில்லை டா என்று கூறினான் அகிலன்.

அதை தான்டா நானும் கூறினேன் என்று மழுப்பினான் குமார்.

அண்ணா.... என்னதான் இருந்தாலும் உங்கள் காதலுக்கு நான்தான் அதற்கு முழு காரணம் என்று கூறினாள் பவி...
என்னமா நீயுமா...
அவன் தான் ஏதோ கூறுக்கிறான் என்றால் நீயும் என்னை நம்ப மாட்டாயா ...?என்றான். இல்லை அண்ணா சும்மாதான் என்றாள் அவள்....
ஒருவாறு அவர்கள் மூவரும் கேப்பிள் கிளம்ப தமிழும் கிளம்பினான்.
***********
சுந்தர் நிறைத்தவாறு சென்னையில் கோயம்புத்தூரிலும் ஒரே நாளில் இரு புதிய பிரான்சிகள் தொடங்கியது...
சென்னையில் சில நாட்கள் மட்டும் புதிய பிரான்ச் நிர்வகித்துக்கொள்ள ஒரு ஆள் தேவைப்படுவதால் கைலாஷை சுந்தரின் அனுமதியுடன் அழைத்தாள் தமிழ்.

கைலாசும் இங்கு வந்து சேர்ந்தவுடன் தமிழின் வே
லைகள் அனைத்தும் தடை இல்லாமல் நடந்தது.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top