என் உறவென வந்தவனே 12

Advertisement

Gayus

Writers Team
Tamil Novel Writer

Hi frds and sis's enna ellarum marandhu irupinganu nenaikuran... 3yrs gap romba long dhan... but sila thavirka mudiyadha situations so writing continue panna mudiyala.. sorry vasagargale... Indha nerathula Banumathi Jayaraman ( BJ mam) avargalai romba miss pandren​

en uravena vandhavane 12 pathithuvitten... marubadium indha kathaiyai muthalil irundhu read pannanumnu vitradhing frds... happy reading​

அத்தியாயம் -12​

காதலின் ரகசிய மொழிகளை…​

கற்றுக்கொண்டேனே உன்னால்…​

வெட்கமும் புன்னகையும்…​

உன் ஒரு பார்வையால்…​

வாங்கிக்கொள்கிறாய்…​

தனுவின் முகத்தை கண்ணாடி வழியே பார்த்தவன்... “ம்ம்... எல்லாத்தையும் மனசுக்குள்ளே வச்சிக்கராளே... நல்ல வேல லவ்வ வெளிய சொல்லிட்டா... இல்லனா என்னோட நிலைமை... கடவுளே.. இந்த விஷயத்தில் என்னை காப்பாத்திட்ட…” என்று நினைத்துக்கொண்டவன் “என்ன... கேட்ட கேள்விக்கு பதிலக்காணோம்…” என்று மீண்டும் கேட்க... “அது.. அது வந்து எனக்கு உடம்பு சரியில்லாம இருக்குல்ல... அதான் உங்களுக்கு நான் அழுத மாதிரி தெரியுது…” என்று சமாளித்தவளை கண்ணாடி வழியே முறைத்துப்பார்க்க... அவன் முறைப்பதைக் கண்டு வேறுப்பக்கம் திரும்பிக்கொண்டாள்...​

இருவரும் ஹாஸ்பிட்டலின் உள்ளே நுழைந்தனர்... எதிரில் வந்த நர்ஸிடம் “டாக்டர்.மதுமிதா... எங்க இருப்பாங்க…” என்று ஜான் கேட்க... “ ம்ம்..அவங்க ரூம்ல இருப்பாங்க... “ என்று சொல்லிவிட்டு போனை நோண்டிக்கொண்டே அந்த நர்ஸ் செல்ல... தனு வேகமாக சிரித்துவிட்டாள்... அவளை திரும்பி பார்த்தவன் “என்ன...சிரிப்பு…” என்று கேட்டுக்கொண்டே நடக்க... “ம்ம்... இப்படி அந்த பொண்ணுகிட்ட மொக்க வாங்கிட்டீங்களே தஷு…” என்று சொல்லி மீண்டும் தனு சிரிக்க... “நான் எங்க மொக்க வாங்கினேன்... ம்ம்... எல்லாம் என் நேரம்... சரி சரி சீக்கிரம் வா... டாக்டர் மேடம் போய்டப்போறாங்க…” என்று ஜான் வேகமாக செல்ல... அவன் பின்னே சென்றாள் தனு....​

டாக்டரின் அறை கதவை திறந்துக்கொண்டே.... “டாக்டர் உள்ள வரலாமா??” என்று கேட்டுக்கொண்டே கதவை திறந்தவனை..... இருக்கையில் கோப்பையுடன் அமர்ந்திருந்த மது..... கோப்பையை இறக்கி அணிந்திருந்த கண் கண்ணாடியை சரிசெய்துக்கொண்டே “அதான் உள்ள வந்துட்டியே...அப்புறம் எதுக்குடா கேக்குற....” என்று கேட்டுக்கொண்டே அவனின் பின்னால் பார்க்க.... “டேய் யாருடா இந்தப்பொண்ணு....” என்று கேட்க.... “இவங்க என்னுடைய மனைவியா.....” என்று அவன் சொல்லி முடிப்பதற்குள்… “என்னடா சொல்ற அதுக்குள்ள கல்யாணம் பண்ணிட்டியா... என்கிட்ட கூட சொல்லாம... உன்ன கடைசியா ஒன் மன்த் முன்னாடி தானடா பார்த்தேன்... அம்மா அப்பாக்காவது தெரியுமா... இல்ல அம்மாக்கு தெரிஞ்சிருந்தா என்கிட்ட சொல்லிருப்பாங்க.... ஒருவேல வீட்டுக்கே தெரியாமா....” என்று சொல்லிவிட்டு வாய்மேல் கை வைத்தவளை.... தனு வினோதமாக பார்த்துவிட்டு தஷ்வந்தின் காதருகே சென்று “நீங்க நிஜமாவே என்ன டாக்டர்கிட்டதான் கூட்டுட்டுவந்துருக்கிங்களா…” என்று கேட்க... அவளை ஒற்றை புருவம் உயர்த்தி முறைத்துவிட்டு திரும்பி “ஏய் அடிவாங்கப் போற... சொல்ல வர்றத முழுசா எப்பவும் கேட்க மாட்டியா…” என்று மதுவை அடிக்கப்போக... “டேய் வேணாம்டா…” என்று மது இருவருக்கும் இடையே இருந்த மேஜையை சுற்றி ஒட... இருவரும் மாற்றி மாற்றி ஒடிக்கொண்டிருக்க... தனு தான் இருவரையும் பார்த்து முழித்துக்கொண்டிருந்தாள்...​

ஒரு வழியாக இருவரும் ஒடிப்பிடித்து விளையாடுவதை நிறுத்திவிட்டு தனுவைப் பார்க்க... “போச்சு... உன்னால என்னையும் லூசுனு நினைச்சுட்டா…” என்று மதுவின் தலையில் கொட்டிவிட்டு தனுவிடம் சென்ற தஷ்வந்த் “தனு... இது என்னோட ப்ரெண்ட்... ஸ்கூல் மேட்ஸ்... காலேஜ் வேற வேற... பட் இப்போவரைக்கும்... இல்ல எப்பவுமே க்ளோஸ் ப்ரெண்ட்ஸ்…” என்று சொல்ல... “ஓ…” என்று யோசித்துக்கொண்டிருந்தவளை அசைத்து “என்ன யோசிக்கிற தனு…” என்று தஷ்வந்த் கேட்க... “வேற என்னடா யோசிக்கப்போறாங்க... ஸ்கூல் மேட்டா இல்ல... மெண்டல் ஹாஸ்பிட்டல் மேட்டான்னு தானே யோசிக்கிறிங்க தனு…” என்று மது கேட்க... “கடவுளே... அப்படியெல்லாம் யோசிக்கல... ப்ரெண்ட்ஸ்னு சொன்னீங்க... பட் ரவி அண்ணா மேரேஜ்க்கு இவங்க வரலையா... அதான் யோசிச்சுட்டுருந்தேன் அவ்ளோதான்…” என்று சொன்னவளை... “ஓ... தனு ரிலாக்ஸ்... உங்கள எனக்கு இரண்டு வருஷத்துக்கு முன்னாடியே தெரியும்... ஆனா... உங்கள எனக்கு தெரியும்ங்கறது இவனுக்கு தெரியாது... அப்புறம்... நான் ஹையர் ஸ்டடீஸ் லண்டன்ல முடிச்சிட்டு ஆறு மாசத்துக்கு முன்னாடி தான் இந்தியா வந்தேன்.. ரவி பத்தி அடிக்கடி சொல்லுவான்... பட் நாங்க பேசிக்கிட்டதுமில்ல அண்ட் மீட் பண்ணதுல்ல....” என்று மது ஒரு பெரிய விளக்கத்தைக் கூறி முடித்தாள்....​

“சரிடா.. இப்போ சொல்லு.. தனு உனக்கு யாரு…” என்று மது கேட்கவும்... “ஆமா உனக்கு எப்படி தனுவ தெரியும்... அத முதல்ல சொல்லு…” என்று அவன் யோசனையுடன் கேட்கவும்... “அது வந்து... அன்னைக்கு ஒரு நாள்... போதையில்…” என்று அவள் இழுக்க.... அவனுக்கும் ஞாபகம் வந்துவிட்டது... “ஒகே ஒகே... அதெல்லாம் இப்போ எதுக்கு…” என்று அவளிடம் கண்ணால் செய்கை செய்துக்கொண்டே “தனு இருக்கா சொல்லாதடி…” என்று சொன்னவனின் முதுகை தட்டி “ட்ரிங்ஸ் அடிப்பிங்களா?...” என்று கேட்டேவிட்டாள் தனு...​

அவன் திரும்பாமலே “இப்போ உனக்கு ஹேப்பியா…” என்று ஹஸ்கி வாய்சில் கேட்க... “ம்ம்… ரொம்ப ஹேப்பி..” என்று இருகைகளையும் உயர்த்தி சொன்னாள் மது… “அங்க என்ன பேசுறிங்க… இந்தப்பக்கம் திரும்பி பேசுங்க.. குடிப்பிங்களா?...” தனு கேட்க… மதுவை முறைத்தபடியே திரும்பி” இல்ல தனு அது ஒன் இயர் பேக்.. இப்போ எதுவும் கிடையாது… ப்ராமிஸா…” என்று அவன் சமாளிக்க… “அப்போ உங்களுக்கு ட்ரிங்க் பன்ற பழக்கம் இருக்கு…” என்று சோகமான குரலில் அவள் கேட்க… “அய்யோ தனுமா.. நீ இவ்ளோ ஃபீல் பன்ற அளவுக்கு மொடா குடிக்காரன் கிடையாதுமா… எப்பவாவது ப்ரண்ட்ஸகூட பார்ட்டி அந்தமாதிரிதான்மா… இதுக்கப்பறம் அதுக்குக்கூட குடிக்கமாட்டேன் ஒகே…” என்று அவளின் இருக்கன்னங்களையும் பிடித்து அவன் சொல்ல… “ம்ம்.. ஒகே…” என்று அவளும் சொல்ல… இவர்களின் கொஞ்சலைப் பார்த்த மதுவோ தலையில் அடித்துக்கொண்டு “டேய் எப்பா போதும்டா உங்க ரொமன்ஸ்… நான் ஒருத்தி இங்க இருக்கன்டா…” என்று சொல்ல… தஷு உடனே திரும்பி “டாக்டர்னா பேஷன்ட்டா வர்றவங்கல க்யுர் பன்னனும்… இப்படி டார்ச்சர் பன்னக்கூடாதுடி…” என்று சிறுப்புன்னகையுடன் சொன்னான்…​

மது “பரவால்லடா… உனக்கு கரக்டான ஆளாதான் இருக்காங்க தனு… தனு வந்து உட்காருங்க… என்னாச்சி உடம்புக்கு…” என்று அவளுடைய பணியை செய்ய.. “அது தெரியலனுதான உன்கிட்ட கூப்ட்டு வந்தேன்..” என்று தஷு அவளை கேலி செய்தான்… “தஷு கொஞ்ச நேரம் அமைதியா இருங்க… அது ஒன்னுல்ல மது.. நான் கொஞ்சம் டயர்டா இருந்த.. அவ்ளோதான்..” என்று சொல்லி தனு சமாளித்தாள்… மது அவளை செக் செய்து ஒரு டிடி இன்ஞ்க்ஷ்னையும் போட்டுவிட்டாள்… “ஒகே.. தனு டூ டேஸ் இந்த டேப்ளட் மட்டும் போடுங்க… நைட் நல்லா தூக்கம் வரும்… ஒரு சின்ன அட்வைஸ் எதையும் ரொம்ப யோசிக்காதிங்க.. அதுப்போக்குலயே விட்ருங்க…” என்று சொன்னதும் அவளை ஒரு பார்வைப் பார்த்துவிட்டு “ஒகே மது..” என்று சொல்லி சிரித்தாள் தனு…​

இருவரும் மதுவிடம் சொல்லிக்கொண்டு கிளம்பினர்… வண்டியை ஹாஸ்டலின் வாசலில் நிறுத்திவிட்டு அவனும் இறங்கி “தனு… நாளைக்கே நம்ம விஷயத்த அம்மாகிட்ட சொல்லப்போறன்… சீக்கிரம் என் கூட உன்ன கூட்டுக்கிறேன்… அதுவரைக்கும் கொஞ்சம் உடம்ப பாத்துக்கோமா…” என்று அவளின் கைக்கோர்த்து ஹாஸ்டலை நோக்கி நடந்துக்கொண்டே சொன்னான்… அவளும் தஷுவின் தோல் சாய்ந்து “ம்ம்..” என்று சொல்லிக்கொண்டே வாசல் வரைக்கும் வந்தும் தன்னவள் தன்னைவிட்டு பிரியாமல் இருப்பதைக்கண்டு மனதால் ரசித்து சிரித்தான்… “தனு.. இதுக்கு மேல நான் உள்ள வரமுடியாதுமா…” என்று சொல்லவும்… ஏன் என்பதுபோல் அவனை பார்த்துவிட்டு.. நேராக பார்க்க.. வார்டன் நின்றிருந்தார்… அவரைக்கண்டதும் தஷுவைவிட்டு சற்று தள்ளி நின்றுக்கொண்டு அசடு வழிய சிரித்து.. அவனை பார்க்க அவனும் கேலியாக சிரிக்க… “அய்யோ.. தஷு முன்னாடியே சொல்லமாட்டிங்களா… மேம் என்ன நினைக்கப்போறாங்களோ… தெரியல…” என்று வெட்கப்பட்டுக்கொண்டே சொல்ல… “அதெல்லாம் ஒன்னு நினாக்கமாட்டாங்க.. சரி சரி.. நீ சீக்கிரம் உள்ளப்போ…” என்று சொல்லிவிட்டு வேகமாக வண்டியை நோக்கி நடந்தான்… அவளும் சிறிது தூரம் சென்று திரும்பி பார்க்க… அவன் இருக்கைகளால் தலையைக்கோதிக்கொண்டே ஒரு சுற்று சுற்றி பைக்கிள் ஏறிச்சென்றுவிட்டான் (ஒரு ஆணுக்கு தான் தெரியும் தன்னவளின் வெட்கப்படும் முகத்தைக் கண்டால் தனக்குள் என்ன மாற்றங்கள் நிகழும் என்று)… இவளும் புன்னகையுடன் உள்ளே சென்றுவிட்டாள்…​

இங்கே ஹேமாவும் அவளின் அம்மாவிடம் அனைத்தையும் சொல்லி அழுதுக்கொண்டிருந்தாள்… அவளின் அம்மா எவ்வளவோ அறிவுரைக் கூறிப்பார்த்தார்கள்… அவள் திருந்துவதாக தெரியவில்லை “மாமா மட்டும் தான் எனக்கு வேணும்… இல்லனா இந்த ஜென்மத்தில் கல்யாணம் என்ற ஒன்றே நடக்காது… அப்படியே வேற ஒருவனுடன் நடந்தாலும் நான் இந்த உலகத்துல இருக்க கடைசி நாள் அதுவாகத்தான் இருக்கும்…” என்று அவளின் அம்மாவை மிரட்டி வைத்தாள்… அவரும் கொஞ்சம் அவளின் பேச்சைக் கண்டு மிரண்டு தான் போனார் என்று சொல்வதைவிட பயந்துவிட்டார் என்றே சொல்ல வேண்டும்…​

- தொடரும்​

 
Last edited by a moderator:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top