அடக் கடவுளே! சாரா…இவள் என்னையா சொன்னா?யாசுவை பார்க்க, அவள் சிரித்துக் கொண்டே தலையசைத்தாள்.
மேம்…உங்களுக்கு அவள் பேசியது கேட்டதா? அப்படி தான் கூறினாளா? இன்பாவிடம் கேட்க, ஆம் என்றாள் அவளும்.
பின் இருவரும் பிடித்தது, பிடிக்காதது பேசிக் கொண்டிருக்க, ஆன்ட்டி அவளிடம் பேசியதும் போதும் துகிரா இடையே வர, இரு துகி…. என்றார்.அவளுக்கு கோபம் வந்து விட்டது.
போனை பிடுங்கி ஜானுவிடம், இனி என்னோட ஆன்ட்டியிடம் பேசுன அவ்வளவு தான்.உன்னை… என்று பல்லை கடித்தாள்.
நான் அப்படி தான் பேசுவேன்.என்னடி செய்வ? ஜானுவும் பல்லை கடிக்க இருவருடைய சண்டையும் முற்றி விட்டது.
போனை கொடும்மா,ஆதேஷ் ஜானு அருகே வந்தான். போனா? அவளை கொல்லாமல் விட மாட்டேன் கத்தினாள் ஜானு.
கொல்வியா? எப்படி டி கொல்வ? துகியும் கத்த, அங்கே அம்மாவும் இங்கே மகனும் மாட்டிக் கொண்டனர். மற்றவர்கள் வாய்க்குள் சிரித்துக் கொண்டிருந்தனர்.
ஜானு அருகே வந்த பிரதீப் போனை வாங்கி, நீ தள்ளி இரு என்று ஜானுவை விலக்கி விட, அவள் அண்ணன் கூறியவுடன் நகர்ந்து நின்றாள் ஜானு. அடிப்பாவி…என்று அவளை தீவிரமாக முறைத்துக் கொண்டிருந்தான் ஆதேஷ்.
அங்கே போனில் துகி இருக்க, இங்கே பிரதீப் அவளிடம்,எம்மா..உங்க ஆன்ட்டி கிட்ட போனை கொடு என்றான்.
யோவ்….நீ யாருயா? எங்க அவ? என்னோட ஆன்ட்டியையே என்னிடம் பேச விட மாட்டிகிறாள் கத்தினாள்.
இனி அவள் தொந்தரவு செய்ய மாட்டாள் என்று அவன் கூறியும் அவள் போனை நகர்த்துவதாக இல்லை.
துகிம்மா….பாசமாக ஒரு வார்த்தை தான் ஆதேஷ் அம்மா கூப்பிட்டார்.
ஆன்ட்டி….என்று அவர் பக்கம் திரும்பினாள்.போனை கொடும்மா…அவளை அரவணைக்க சரிந்தாள் அவர் தோள் மீது.
ஷ்ஹா….என்று மூச்சிழுத்து விட்டான் பிரதீப். அனைவரும் சிரித்தனர்.
இருவரும் மாறி மாறி சாரி சொல்லிக் கொண்டனர். நீங்க….எல்.ஏ குரூப்ஸ் கம்பெனி சேர்மன் தானே! உங்களை பார்த்திருக்கிறேன் என்றான்.
நீ என்ன செய்கிறாய்? படித்திருக்கிறாயா?
எஸ் மேம்.எஸ்.கே கல்லூரி,டென்த்து பேட்ச்சு, விவசாயம் வழியான பிஸினஸ்.உங்க கம்பெனியோடு சேர்ந்திருக்கும் நேச்சுரல் கேர் பியூட்டி தயாரிப்பில் எங்களது பங்கும் உள்ளது என்றான்.
வாவ்…..நைஸ்… என்றவர் மேலும் இருவரும் பேச, ஆதேஷ் பிரதீப்பையே பார்த்து கொண்டிருந்தான்.
ஜானு பூனை போல் அவனருகே வந்து, என்னோட அண்ணன் அழகா இருக்கான்ல…சைட் அடிக்கிறியா? கேட்டாள்.
எல்லாரும் வயிற்றை பிடித்துக் கொண்டு ஆதேஷை பார்த்து சிரிக்க, உன்னால நான் ரொம்ப டேமேஜ் ஆகிக் கொண்டிருக்கிறேன்.இனி நீ வாயை திறக்கவே கூடாது அவன் அவளை விரட்ட,
அபி அருகே வந்து மாமா என்னை காப்பாத்து….என்றாள். எனக்கு தெரியாதுப்பா.அவன் பின் வாங்கினான். ஆதேஷ் அவளை பிடித்து வாயை அவனது கையால் மூட,அவள் அவனது கையை கடித்து விட்டாள்.
அம்மா….என்று கத்தியவனை பிரதீப் திரும்பி பார்க்க, ஜானு பாவம் போல் நின்றிருந்தாள்.
டேய் ஆது, அவர் அழைக்க ஜானுவை முறைத்துக் கொண்டே பிரதீப்பிடமிருந்து போனை வாங்கினான்.
ஜானு சே..சாரி…கடுகடுத்தான் பிரதீப்.
ஆதேஷிடம் சாரி கேட்டு விட்டு,அங்கிருந்து அழுது கொண்டே வெளியே சென்றாள்.
ஜானும்மா….என்று பிரதீப் பின் வர, ஆதேஷ் அவள் முன் வந்து போனை நீட்டினான். அவன் அம்மா பேசி ஜானுவை சமாதானப்படுத்தினார்.
தாரிகாவை அழைத்து சென்ற கவின்,உனக்கு என்னை பிடிக்கும் என்று தெரியும். எனக்கு உன்னை பிடிச்சிருக்கு.சரியாக அதை பற்றி பேச எனக்கு நேரமில்லை.நானும் உன்னை காதலிக்கிறேன்..நீ ஆதேஷிடம் நெருக்கமாக பேசினால் பிடிக்கவில்லை.உன்னை பார்க்காமல் இருக்க முடியவில்லை.நீ என்னை விட்டு தள்ளி செல்வது போல் உள்ளது.ரொம்ப கஷ்டமா இருக்கு.எனக்காக காத்திருப்பாயா? நாட்கள் அல்ல…வருடங்கள் ஆகும்…என்றான்.
அவள் அழுதாள்.முடியாதா? கேட்டுக் கொண்டே எழுந்தான் பாவம் போல்.அவள் அவனை அணைத்துக் கொண்டு மீண்டும் அழுது கொண்டு எத்தனை வருடமானாலும் காத்திருப்பேன்.
அப்புறம் எதற்காக அழுகிறாய்? எனக்கு இது கனவா? நினவான்னு தெரியல…
அவன் அவள் கன்னத்தில் முத்தமிட்டு…இது நனவு தான் என்றான் புன்னகையுடன்.
ஆமாம் நனவு தான்.அவள் கண்ணை மூடிக் கொண்டு”ஐ லவ் யூ” சீனியர் என்றாள்.
கண்ணை திற என்று கவின் அவளிடம் நெருக்கமாக வந்து, அவளது கண்ணை பார்க்க, அவளது இமை படபடத்தது.
ஷ்…டிஸ்டெர்ப் பண்ணாதே! கண்ணை பார்த்தவாறே…”ஐ லவ் யூ ஜில்லு”….என்றான்.
அவள் மெதுவாக அவனிடம் ,அது என்ன ஜில்லு?
அது ….இந்த கண்ணு இருக்கே அது என்ன ஏதோ செய்யுது….என்றான் கிரக்கத்துடன்.
நாம கிளம்புவோமா?
கிளம்பணுமா?
இப்பொழுதே நேரமாயிருச்சு.அம்மா தேடுவாங்க என்றாள்.அவன் விலகி விட்டு அவன் தலையை அழுத்தமாக கோதியவன் வா…என்றான்.
அவ்வளவு தானா? கேட்டாள்.
என்ன? அவன் வேகமாக திரும்பி அவளருகே வந்தான்.
அவனை நிறுத்தி …ஒரு ஹக் வேண்டும் என்றான். அவன் சிரித்து கொண்டே அவளை கட்டிக் கொண்டான். சிறிது நேரம் இருவரும் அப்படியே நின்றனர்.பின் அவளை விடுவித்து நேரமாகிறது.நான் கிளம்ப வேண்டும் என்றான்.
நீங்கள் என்ன வேலை பார்க்கிறீர்கள்? தயங்கிக் கொண்டே கேட்டாள்.
நான் ஜே ஜே ரெஸ்டாரண்டில் சர்வராக உள்ளேன் என்றான்.
ஓ. அப்படியா?
உனக்கு ஏதும் பிரச்சனையா?
எனக்கு பெருமை தான் என்றாள்.
பெருமையா?
ம்ம்…என்றாள் வெட்கத்துடன்,உனக்கு என்னை பிடிக்காமல் போகவில்லையா? நான் ஜஸ்ட் சர்வர் தான்..
எனக்கு இப்பொழுது தான் உங்கள் மீது காதல் அதிகமாகிறது என்றாள்.
அதெல்லாம் ஒன்றுமில்லை. புரியாமல் தானே செய்தீர்கள்.ஆனால் இனி நித்தி சீனியரிடம்…அவள் கலக்கத்துடன் அவனை பார்த்தான். அவன் அவளது வகிட்டில் முத்தமிட்டு, அவளிடம் அதிக உரிமை எடுத்துக் கொள்ள மாட்டேன் என்றான்.
ம்ம்..என்றாள். வா செல்லலாம் என்று அவன் முன் செல்ல அவள் அவனது கையை பிடிக்க முயன்றவாறு அவன் பின் சென்றாள். அவளை திரும்பி பார்த்தவன் அவள் செய்கையை கவனித்து அழகான புன்னகையுடன் அவளது கையை பற்றி அவனது இதழ்களை பதித்தான். அவள் கூசி நின்றாள். அவள் கையை இறுக்கத்துடன் பற்றிக் கொண்டு,எப்பொழுது வேண்டுமானாலும் என் கையை பிடித்துக் கொள் என்றான்.
அவள் அம்மா……..கேட்க, பேசுகிறேன்…நான்கு நாட்களுக்கு வேலை அதிகமாக இருக்கும். அதனால் சனிக்கிழமை பார்ப்போம் என்றான்.அர்ஜூன் ஏற்கனவே பேசினான் உங்களுக்கு சாதகமாக.
தெரியும் என்றான் பெருமூச்சுடன்,அவன் விசயத்தில் தவறு செய்து விட்டோம் என்று உறுத்திக் கொண்டே இருக்கிறது.
என்ன தான் நடந்தது? தாரிகா கேட்டாள்.நிறைய நடந்தது..எதை என்று கூறுவது?கூற நேரமும் இல்லை.அதுவும் அவனுக்கு ஸ்ரீ மீது உள்ள காதலை நினைத்தால் தான் கவலையாக உள்ளது. எல்லாம் ஸ்ரீ கையில் தான் உள்ளது என்றான்.
இருவரும் அனைவர் இருக்கும் இடத்திற்கு வந்தனர். மற்றவர்கள் இவர்களை கவனிக்க ஜானு அமைதியாக இருந்தாள்.என்னடா?…எல்லாமே ஓ.கே போல என்றான்.
அண்ணா,யாழினி அக்காவின் தங்கை தாரிகா என்று அர்ச்சு பிரதீப்பிடம் கூறினான்.
வாழ்த்துக்கள்.அர்ச்சு தாரிகாவிற்கு கை கொடுக்க முகம் சிவந்து கவின் பின் மறைந்து கொண்டாள்.
போதும்மா,வெளியே வா என்று அவளை நித்தி அழைத்தாள்.
யாரும் கிளம்ப கூடாது.நான் முக்கியமான விசயம் ஒன்று கூற வேண்டும் என்று சைலேஷை பார்த்தான்.அவனும் அர்ச்சு அருகே வந்தான்.
சார்…இங்கே வேண்டாம்.வேறெங்காவது சென்று பேசலாம். இது ரகசியமாக செய்ய வேண்டியது.
வீட்டில், சைலேஷ் கேட்டான். இந்த விசயம் செய்ய போவது. யாருக்கும் தெரியக் கூடாது.யார் பெயரும் வெளியே வரக் கூடாது அர்ச்சு கூறினான்.
என்னுடைய ஆபிஸ் அறை தான் சரியாக இருக்கும்.எல்லாரும் இங்கே இருங்கள். நான் முதலில் சிசிடிவியை கனெக்சனை எடுத்து விட்டு வருகிறேன் முன் சென்றான் சைலேஷ்.