அத்தியாயம் 6
ஸ்ரீயின் தேம்பல் சத்தமும் கொஞ்சமாக அடங்கியது. நர்ஸ் இருவரையும் அதிர்ச்சியுடன் பார்த்து கூச்சமுடன் அவள் அருகே சென்று அவள் ஆடையை விலக்கி அவளது தழும்பை பார்த்து வருத்தமுடன் ஸ்ரீயை பார்த்து விட்டு அர்ஜூனை பார்க்க, அவன் கண்கள் மூடியவாறு அவன் முகம் சுருங்க பார்த்தவளுக்கு அர்ஜூனின் காதல் வியப்பாக தான் இருந்தது.
அவள் ஊசியை போட்டு விட்டு ஸ்ரீ ஆடையை சரி செய்து, சார் அவங்க மயக்கத்திற்கு போயிடுவாங்க. யாராவது ஒருவர் மட்டும் இருங்கள். அது நீங்களா கூட இருக்கலாம் என்று சிரிப்புடன் அந்த பொண்ணு வெட்கத்துடன் வெளியே வந்து அவள் தோழி நர்ஸிடம் சென்று,
என் கையை பாருங்களேன். புல்லரிக்குது புன்னகைக்க, பைத்தியம் முத்திடுச்சாடி என்று அவள் கேலி செய்ய,
ஏய்..பைத்தியமா எனக்கா?
அந்த பையன் இருக்கானே செம்ம பையன்டி. ஆசிட் பட்டுதுல அந்த பொண்ணு அழுதுன்னு ஊசி போட கூட தனியா விடலடி.அவன் அவளை அணைத்து சமாதானப்படுத்தினானே? வாவ்..செம்மடி. காதலிக்கிற பொண்ணா இருந்தாலும் அவன் கண்ணில் காதலை தவிர ஒரு நொடி கூட காமம் தெரியலடி.
அவளை ஒரு நொடி தான் அணைத்து விட்டு அவளை தொட கூட இல்லடி. அந்த பொண்ணு தான் நல்லா கட்டிக்கிட்டு தூங்குது.கொடுத்து வச்ச மகாராசிடி.
உங்களுக்கு வேற வேலையே இல்லையா? தேவ் அவர்களிடம் கேட்க, அந்த பொண்ணு பதறி சாரி சார் என்று அங்கிருந்து வேரொரு அறைக்கு சென்றது.
அந்த பொண்ணு வெளியே வந்ததிலிருந்து பேசிய அனைத்தையும் பார்த்து நண்பர்களுக்கு மகிழ்ச்சியாக இருந்தது. ஸ்ரீ தூங்கியதால் அவளை படுக்கையில் விட்டு வெளியே வந்தான்.
அந்த நர்ஸின் தோழி அர்ஜூனையே பார்க்க, மற்றவர்களும் அர்ஜூனை குறுகுறுவென பார்த்தனர்.
நித்தி ஸ்ரீ அறையை எட்டி பார்த்து, இப்ப அவள் ஓ.கே வா? கேட்டாள்.
அவ தூங்க ஊசி போட்டுருக்காங்க. அவ எழுந்தால் தான் தெரியும் நித்தி என்றான்.
அவன எங்க? மாதவை பார்த்தான்.
அவன தீனா விடவே இல்லை. ஆதேஷ் அர்ஜூனையே பார்த்தான். அர்ஜூன் பிரதீப்பிடம் அண்ணா..நாங்களும் நம் ஊருக்கு வருகிறோம்.
ஊருக்கா? இப்பொழுதா? கவின் கேட்டான்.
இல்லடா. நாளை காலையில் வாரோம்.
ஸ்ரீக்கு சரியாகாதுடா. கவின் நாம தப்பு பண்ணிக்கிட்டு இருக்கோம். நம்ம ஸ்ரீயை எங்க தொலைச்சோமோ? அங்க தான் தேடணும். அவளையும் அவள் பிரச்சனைக்கான முடிவையும்.
ஆனா அர்ஜூன் எல்லாரிடமும் எப்படி ஸ்ரீ பற்றி சொல்லி புரிய வைக்கிறது. அவள அவங்க செஞ்சதுல்லாம் தெரிஞ்சா நம்ம ஊரு ஆளுங்க கொந்தளிச்சிடுவாங்க யாசு கூறினாள்.
நீங்க யாரும் பிரச்சனையை யாரிடமும் சொல்ல வேண்டாம். அதை நான் பார்த்துக் கொள்கிறேன் பிரதீப் கூறினான்.
அகில் அங்கே வந்தான். அவனை பார்த்த அனைவரும் அவனை முறைக்க, அர்ஜூனும் கவினும் ஒரு படி மேல் சென்று அவனை மாறி மாறி அடித்தனர்.
அபிக்கு அடிபட்டது கூட தெரியல உனக்கு? கவின் அடிக்க,
இங்க என்ன நடக்குது? உனக்கு சாப்பாடு முக்கியமா போச்சா? அர்ஜூன் அடிக்க, அவன் சொல்வதை கூட கேட்காமல் இருவரும் அடித்தனர்.
நான் வெளியே சென்ற போது ஒரு போன் கால் வந்தது என்றான் அகில். இருவரும் நிறுத்தினார்கள்.
ஒரு போன் வந்தது. ஸ்ரீயை கடத்தியதா சொல்லி ஒரு இடத்துக்கு வர சொன்னாங்க. நானும் சென்றேன். ஆனால் அங்க யாருமில்லை. மீண்டும் ஒரு இடத்திற்கு வரச் சொன்னாங்க. அங்கேயும் யாருமில்லை. ஸ்ரீயை தவிர ஏதும் தோன்றவில்லை. அதனால் நானும் கேசுவலாக பைக்கை எடுக்க சென்றேன். அதற்குள் என் பைக்கை அடித்து தூக்கினார்கள்.
நான் பதட்டத்துடன் இருக்க, எட்டு பேராவது இருப்பாங்க. என்னை விரட்ட நான் ஓடினேன். நான் சென்ற இடம் பக்கத்தில் பவி வீடு இருந்தது. அங்க போனா அவங்களையும் ஏதும் செஞ்சிடுவாங்களோ என்று எதிர் திசையில் ஓட ஆரம்பித்தேன்.
அப்ப நான் சென்ற இடத்தில் கட்டிட வேலை நடந்து கொண்டிருந்தது. அங்கிருந்த ஆட்களிடம் சென்றேன். அவங்க தான் எனக்கு உதவினாங்க. அப்புறம் தான் பவி வீட்டுக்கு போனேன். அவளோட அப்பா தான் என்னை அழைத்து வந்தார் என்று திரும்பி பார்த்தான் அகில்.
உனக்கு ஒன்றுமில்லைல என்று அர்ஜூனும் கவினும் மாறி மாறி அகிலை சுற்றி சுற்றி பார்த்தனர்.
டேய்..கவின் கோவில்ல கூட இப்படி சுத்த மாட்டடா அகில் கிண்டல் செய்ய, இருவரும் அகிலை அணைத்து சாரிடா என்றனர்.
எல்லாரையும் பார்த்து விட்டு ஸ்ரீயை காணோம். அர்ஜூன் நீ அவளை தனியே விட மாட்டேலடா. எங்கடா அவள காணோம். அபியை பார்க்கணும் டா அகில் இருவரையும் பார்க்க,
ஸ்ரீ மேல ஆசிட் பட்டுடுச்சுடா நித்தி அகிலிடம் ஓடி வந்தாள்.
நித்தி, நம்ம ஸ்ரீ மேலயா? கண்கலங்கி அர்ஜூனை பார்த்தான்.
நீ எங்கடா போன? அகில் அர்ஜூனை அடிக்க வர, தேவ் அவனை தடுத்து உள்ளே சென்று பார்த்து விட்டு மட்டும் வாங்க. தொந்தரவு செய்யாதீங்க என்றான்.
அகில் சென்று ஸ்ரீ அருகே அமர்ந்து அவள் காலில் இருந்த மருந்தை பார்த்தான்.அவளுடைய உடையில் அவளுக்கு ஆசிட் பட்ட இடம் மட்டும் ஆடையில்லாது கிழித்து மருந்திடப்பட்டு இருந்தது.
அவன் ஸ்ரீயை பார்த்து விட்டு அபியை சந்திக்க சென்றான். அங்கே இன்பா குடும்பம் அவனுடன் இருந்தது. அபி..உனக்கு ஒன்றுமில்லைல? அழுதான்.
வெளியே நடந்த எதுவும் இவர்களுக்கு தெரியாது.அகில் ஸ்ரீயை பற்றி கூற, அபி பதறி எழுந்து அமர்ந்தான்.
ஏன்டா, சொல்லவே இல்லை. எங்களுக்கு தெரியாது இன்பா வேகமாக எழுந்தாள். இதயாவும் அம்மாவும் எழ,
நீ இங்கேயே இரு அகில் என்று வெளியே வந்த இன்பா, அனைவரையும் தேடினாள். மாடியிலிருந்து கீழே பார்த்தாள்.
அம்மா..அங்க இருக்காங்க என்று அவளும் பதறி வந்து எல்லாரையும் திட்டினாள். அவளை பார்த்த தேவ், வாவ்.. என்று வாயை திறக்க கவின் அவனிடம் வந்து,
ஹலோ சார்..வாயை மூடுனீங்கனா நல்லா இருக்கும். எங்க அபிக்கும் அவங்களுக்கும் ஓடிக் கொண்டிருக்கிறது என்றான்.
மேம்..என்று அர்ஜூன் வர, சொல்லி இருக்கலாம்ல..அவள் அவனை பேச விடாமல் சத்தம் போட,
ஏம்மா நீயா? ஒரு நர்ஸ் வர, அவர்களை முறைத்த இன்பா. அர்ஜூன் என்ன நடக்குது? எதுவுமே சரியில்லை மீண்டும் சத்தமிட,
அந்த நர்ஸ் மீண்டும் அவளிடம் பேச வர, மேம்..அர்ஜூன் அழைக்க, உனக்கு என்னம்மா பிரச்சனை ஹாஸ்பிட்டல் நர்ஸ் தானம்மா. நீ போய் வேலைய பாரும்மா.
என்ன நடக்குதுன்னு தெரியாம திருடனை பிடிக்கிற மாதிரி பிடிக்கிறீங்க? இல்லை பேசாதன்னு சொல்றீங்க.கஷ்டமாக இருக்கும் போது பேசுனா தான் மனசுக்கு நிம்மதியா இருக்கும். அது கூட தெரியாம நர்ஸாம் நர்ஸ்.. போம்மா..என்று பார்க்க, பிரதீப் சிரிப்பை அடக்கிக் கொண்டிருக்க,
ஆதேஷ் மேம்..கொஞ்சம் மூச்சு விடுங்க..என்று சொல்ல, அர்ஜூன் ஒரே வார்த்தையில் அவள் பேச்சு, முகப்பாவனை, பதற்றம் அனைத்தையும் போக்கினான்.
மேம்..அபி நல்லா இருக்கானா? என்று அவளருகே வந்து, நீங்க தான் ரொம்ப கஷ்டப்பட்டு அபியை ஹாஸ்பிட்டலுக்கு அழைத்து வந்து சத்தமிட்டு அவனை சேர்க்க முயற்சி செய்தீர்களாமே? ஆனால் உங்க பேச்சு எடுபடல போல கிண்டல் செய்தான்.
அமைதியான இன்பா கொதித்து, நான் தான் அபியை அழைத்து வந்தேன். என்ன ஹாஸ்பிட்டல் டா இது? மனுசங்க உயிருக்கு மதிப்பே கொடுக்க மாட்டிக்கிறாங்க கத்தினாள்.
மேடம், என்ன பேசுறீங்க? நாங்க அப்படியெல்லாம் இல்லை. எங்களுக்கு தெரியாம நடந்தது.
நீங்க டாக்டர்ன்னா உங்க வேலையை மட்டும் பாருங்க. ஹாஸ்பிட்டல் ஓனரை பத்தி தான் பேசுறேன். உனக்கென்ன?
என் அப்பா தான் ஓனர் அவன் திமிறாக கூறியவுடன், புடவையை இடுப்பில் இழுத்து சொருகி தேவ் காலில் ஓங்கி உதைத்து விட்டு, நான் அவனை எவ்வளவு கஷ்டப்பட்டு அழைத்து வந்தேன். ஆனால் நீங்க..இடியட்ஸ்..டா. இது போல் தான் பேசண்ட்டிடம் நடந்து கொள்வீர்களா?
இன்பா சும்மா இரு என்று அவள் அம்மா கூற,
அம்மா நீ சும்மா இரு. இவனை..என்று அங்கிருந்த பிளாஸ்டிக் சேரை எடுக்க,
அக்கா..வேண்டாம் என்று அவளது கையை இதயா பிடிக்க,
விடுடி..நீயும் பார்த்தாலே..வயசானவங்களிடம் இப்படி நடந்துப்பான்னுக போல..எடுத்து விட்டாள்.
மேம்..என்ன செய்றீங்க? அபி சத்தத்தில் அனைவரும் அவனை பார்த்தனர். ஆருத்ராவும், அண்ணா..என்று அவளது அம்மாவுடன் வந்தாள்.
அபி அகிலை பிடித்துக் கொண்டு நடந்து வந்தான். எடுத்த சேரை கீழே போட்டு விட்டு, இடுப்பில் இருந்த புடவையை சரி செய்து விட்டு, நீ ஏன் வந்த? வலிக்க போகுது இன்பா அபி அருகே வர, அவன் அவளை முறைத்து பார்த்து பார்த்தான்.
அர்ஜூன் அபியிடம் வந்து, எப்படிடா இருக்க? உங்க ரெண்டு பேரையும் தனியா விட்டுட்டேன்டா சாரி என்று அபி அகிலை அணைக்க,
நீ யார சொல்ற அர்ஜூன்? அபி கேட்டான். அர்ஜூன் அகிலை பார்த்தான்.
அகில் உனக்குமா? என்று அபி பதட்டமாக அகில் மீதிருந்த கையை எடுத்தான். அவன் தடுமாறி கீழே விழ, அர்ஜூனும் இன்பாவும் அபியை பிடித்தனர்.
அபி ஒன்றுமில்லைடா அகில் கூற, ஒன்றுமில்லையா? சாதாரணமாக சொல்றடா? அடுத்தடுத்து? ஸ்ரீ எங்க இருக்கா? என்று பதறினான்.
தேவ் அபியிடம், நீ அமைதியா இரு. அப்ப தான் உனக்கு சீக்கிரம் சரியாகும் என்றான். அபியை பிடித்துக் கொண்டு இன்பா அவனை முறைத்து நின்றாள்.
ஆருத்ரா இன்பா முன் வந்து, உங்க இஷ்டத்துக்கு பேசுறீங்க? பேசினாள்.
நிவாஸ் அவளிடம் வந்து, நான் பேசுறேன். நீ ஓய்வெடு என்று அவன் கூற, அபி அவனிடம் யாருடா இந்த பொண்ணு? கேட்டான்.
எல்லாரும் நிறுத்துங்க என்று அர்ஜூன் கூறினான். இன்பா அமைதியானாள்.
மேம் சாரி சொல்லுங்க என்றான் அபி.
என்னால முடியாது என்று அபியை பார்த்து எனக்கு பதில் அந்த இடத்தில் வயசானவங்க இருந்தா அவங்களுக்கும் சேர்த்து ஏதாவது ஆகி இருக்கும் கூறி விட்டு, தேவ்வை பார்த்து சைக்கோ என்று முணுமுணுத்தாள்.
தனக்காக தான் இப்படி பேசுகிறாள் என்று அபிக்கு சந்தோசம். அதை காட்டிக் கொள்ளாமலிருக்க,
என்ன சைக்கோன்னு சொல்றாங்க? ஆருத்ரா நிவியை பார்த்து கேட்க,
மேம்..என்றான் அவனும். இன்பாவோ மலை இறங்குவதாக இல்லை.
சைக்கோ என்ன செய்வான்னு உனக்கு தெரியுமா? தேவ் இன்பா அருகே நெருங்க, அபிக்கு கோபம் வர ஆரம்பித்தது.
சார்..கொஞ்சம் அமைதியா இருங்க. இந்தாங்க என்று கோக்கை அவனிடம் தூக்கிப் போட்டான் கேரி.
கேரி..நீ ஏன் வந்த? பாப்பா எங்கே? கேட்டாள் இன்பா.
தேவ் அவனை பார்த்து யாருடா இவன்? பார்க்க, அபிக்கு அவனை பார்க்கவும் முகம் வாடியது.
பாப்பா கைரவுடனும் அவங்க வீட்ல இருக்கிறவங்களுடன் விளையாடுகிறாள்.
நீங்க விளையாடலையா சார்? கவின் கேட்க, கேரி கவினை பார்த்தான்.
இல்ல..பாப்பாவுடன் விளையாடலயான்னு கேட்டேன். தாரிகா அம்மா அவனை முறைத்தார். அவர் தருண் அறையில் இருந்திருப்பார்.
சைக்கோ என்ன செய்வான்னு நீ எதுக்கு காட்டணும். நான் காட்டுகிறேனே? என்று தேவ் கழுத்தை பிடிக்க, அனைவரும் அதிர்ந்து இருக்க, மாதவும் சைலேஷும் ஓடி வந்தனர்.
கேரி அவரை விட்டுரு..சைலேஷ் அவனது கையை எடுத்து விட்டான்.
எதுக்குடா பதறுறீங்க? சும்மா செய்து தான் காட்டினேன். அதுக்கே பயப்படுறீங்க.
உன்னோட விளையாட்டு தனத்தை இப்படியா காட்டுவ? நீ மாறவே இல்லைடா மாதவ் அவனை திட்டினான்.
ஏன்டா, ரொம்ப வருஷம் கழித்து சந்தித்திருக்கிறோம். இப்படியா திட்டுவ? நான் எப்படிடா ஒருவனை கொல்லப் பார்ப்பேன் வருத்தமாக கூறியவன்.
நீங்க இன்னும் என்னோட பிரின்சஸ் ஆக முடியலடா..என்று இன்பா அருகே சென்றான். அவன் கழுத்தில் கை வைத்தவாறு என் பிரின்சஸ் பக்கத்தில் தான் இருந்தேன். ஆனால் என் மீதுள்ள நம்பிக்கையில் அவள் என்னை தடுக்கவில்லை. அவளை போல் என்னை யாரும் இப்ப வரை புரிஞ்சுக்கல.. அவன் வருத்தப்பட, எல்லாரும் அமைதியானார்கள்.
தேவ் சட்டையை நேராக்கி விட்டு, ஒருவரிடம் விதண்டாவாதம் பண்ணும் முன் நாம் செய்தது சரியாக இருக்க வேண்டும். நீ சரியா தான் இருந்தாயா?
தேவ்வால் பதில் கூற முடியவில்லை. ஆருத்ரா அருகே வந்த கேரி, நீ உன்னோட அண்ணாவுக்காக பேசினாயே? அந்த டாக்டரை பற்றி உன் அண்ணன் சேகரித்த விசயத்தை உன் அப்பாவிடம் ஏற்கனவே கூறி இருக்கான். அவர் பெரியதாக எடுத்துக் கொள்ளவில்லை. ஆனால் உன் அண்ணன் அதில் பிடிவாதமாக அவருக்கு புரிய வைத்திருந்தாள். அந்த டாக்டர் உன்னை கடத்தி இருக்க மாட்டான்.
கடத்துனாங்களா? இன்பா கேட்க, ஆமாம் பிரின்சஸ்..இந்த பொண்ணை கடத்தினாங்க.
உன் அண்ணா, அப்பா தவறு தான். தனக்கு அடுத்து பொறுப்பை எடுக்கும் தன் பையன் கூறுவதை அவர் கேட்டிருக்கணும். உன் அண்ணனும் அவரை எதிர்த்து பேச வேண்டாம் என்று விட்டு விட்டார். அது தான் பிரச்சனை.
சைலேஷ் அபிக்கு அடிபட்டதை கூறியதால் அவனை பார்க்க தான் வந்தேன். ஹாஸ்பிட்டலில் இருந்து ஒருவன் வெளியே ஓடி வந்தான். அவனை பிடித்தேன். அவன் என்னை தள்ளி விட்டு வேகமாக ஓடினான். அங்கிருந்த லாரியில் அடிப்பட்டு சாகும் நிலையில் இருந்தவனை நான் தான் அட்மிட் செய்தேன். அவன் தான் அனைத்தையும் கூறினான்.
அவன் இப்ப எப்படி இருக்கான்? இன்பா கேட்க, ஆப்பரேசன் முடிஞ்சது பிரின்சஸ் இவங்க அப்பாவின் தயவால் என்று தேவ்வை பார்த்தான்.
அபிக்கு லேசாக பட்டதால் அவ்வளவு நேரம் தாங்கினான். அதே ஆழமாக இருந்தால் என்று கேரி இன்பாவை பார்த்தான். அவள் கண்கள் கலங்க நின்றாள்.
நடக்க ஆரம்பிச்சுட்ட..சின்ன பையன்னு சொல்ல மாட்டேன் என்று அபியை பார்த்து ஒற்றை கண் அடித்தவன். சீக்கிரமா சரியாகி வா..வேலை நிறையா இருக்குல கேரி கூற, அவனை அபி புன்னகையுடன் பார்க்க,
வேலையா? கேரி என்ன சொல்ற? இன்பா கேட்டாள்.
இன்பா தோளில் கையை போட்டு, என்னோட பிரின்சஸின் தடுமாற்றத்தை முதல் முறையாக பார்த்தேன் கேரி கூற, புரியாமவே பேசுறடா? இன்பா அவனை பார்த்தான்.
அவன் கண்கள் கலங்க நான் வாரேன் பிரின்சஸ் வெளியே வர, அவள் மீதான காதல் கேரிக்கு அப்படியே உள்ளது. அதை நினைத்து தான் கலங்குகிறான் என்று இன்பாவிற்கு தாமதமாக புரிந்தது.
அவள் அபியை பார்க்க, அவன் புருவத்தை உயர்த்தினான்.
நில்லுடா என்று இன்பா செல்ல இடையே கேரியை அசந்து பார்த்து நின்று கொண்டிருந்தான் தேவ்.
ஏய்..தொட்லக்கா..வழிய விடு. எல்லாருக்கும் இடையிலே வாரான் தொட்லக்கா என்று இன்பா தேவ்வை திட்டு விட்டு செல்ல, அபி அவளை ரசித்து பார்த்தான். எல்லார் உதட்டிலும் சிறுபுன்னகை தொற்றிக் கொண்டது.
அது என்ன தொட்லக்கா? தேவ் கேட்க, அவள் கோபமாக இருந்தால் இப்படி தான் பேசுவாள் என்று சைலேஷ் கூற, என்ன இன்று முழுவதும் எல்லா பொண்ணுகளும் என்னுடன் சண்டைக்கே வராங்க?
தாரிகா அவனை முறைக்க, அவன் நான் கிளம்பிறேன். எனக்கு வேலை உள்ளது.
டேய்,..நான் வீட்டுக்கு வந்து உன்னை கவனிக்கிறேன் என்றாள் ஆருத்ரா.
ஏன் தம்பி நிக்கிறீங்க? உட்காருங்க என்று இன்பா அம்மா கூற, அர்ஜூன் அபியை உட்கார வைத்தான்.