இப்போது மித்ரன் ஒருகையில் தன் உணவை உண்டு கொண்டு.. ப்ரக்யாவை ஒரு சேரில் அமர வைத்துவிட்டு.. அவளுக்கு நெய் ஊற்றி.. சின்ன இட்லி துண்டுகளை ஊட்டினான் அண்ணன்.
சஹா “டேய்.. பிரசன்னா…” என மாடி படியின் கீழிருந்து குரல் கொடுத்தாள்.
பிரசன்னா காதிலே வாங்கவில்லை.
இன்னும் இரண்டு சத்தம் போடவும்தான் “வரேன்ன்ம்மா” என்றான் அன்னையிடம்.
கௌரி டைனின் டேபிள் அருகில் வந்தான்.. தானாகவே எடுத்து தட்டில் பரிமாறிக் கொண்டு.. உண்ணத் தொடங்கினான்.. இப்போது போன் பேசிக் கொண்டிருந்தான்.
ப்ரக்யா, தன் தந்தையின் மடியில் ஏறினாள்.
இப்போது மித்ரனின் ஸ்கூல் பஸ் ஹார்ரன் சத்தம் கேட்டது. மித்ரன் தன் தங்கைக்கு முத்தம் வைத்துவிட்டு.. லஞ்ச் பாக்ஸ் எடுத்து பாக்’கில் வைத்துக் கொண்டு.. சான்வெஜ் ஒரு கையில் எடுத்துக் கொண்டு.. பாக் ஒரு தோளில் மாடிக் கொண்டு “பை மாம்..” என பறந்தான்.
சஹா “பை டா..” என அவனை கிட்சனில் இருந்து எட்டி பார்த்து.. சொன்னாள்.
பிரசன்னா வந்தான்..
சஹா “என்ன சாப்பிடுற” என்றாள்.
பிரசன்னா “ப்ரெட் ரோஸ்ட்” என்றான்.
சஹா அவனுக்கு என ரெண்டு டேட்ஸ் கொடுத்தாள் கையில். மகன் முறைத்தான் வேண்டாம் என்பதாக.. சஹா “அண்ணன்.. நான் கொடுத்ததும் சாப்பிட்டான். அவனுக்கு மட்டும் ஈவினிங் சீஸ் பால்ஸ்.. உனக்கு அப்புறம் கொடுக்கமாட்டேன்” என சொல்லிக் கொண்டே டைனிங் டேபிள் மேல் வைத்துவிட்டு உள்ளே சென்றாள்.
அமைதியாக உண்டான் மகன்.
கௌரி, உண்டு முடித்து.. மகளை தூக்கிக் கொண்டே கைகழுவி வந்தான்.. போனை பேசி முடித்து வைத்திருந்தான். எனவே, தன் மகனிடம் “குட் மோர்னிங் பிரன்னா..” என்றான்.
ப்ரக்யா “கூட் மோரிங்” என அவளும் பேசினாள் தன் அண்ணனிடம்.
கெளரிக்கு அதற்குள் கால்டாக்ஸியிடமிருந்து அழைப்பு வந்துவிட்டிருந்தது. எனவே, “ஒன் செகண்ட் கண்ணா” என்றவன் போனில் பேச தொடங்கினான்.
பின் கௌரி “அம்மா வருவா.. எனக்கு சீக்கிரம் போகனும்.. ம்.. அம்மாகிட்ட அடம் பண்ண கூடாது.. ம்..” என சொல்லி மகனின் சிகையை தன் விரல்களால் சரி செய்தான். பின் “பை டா..” என்றான்.
பிரசன்னாவின் முகம் கோவத்தில் இருந்தது.. இன்னும் அவனின் தந்தை பள்ளி விழா எதற்கும் வந்ததில்லை. எனவே, இப்போதும் அதே கோவம். அதனால் அமைதியாக இருந்தான்.
இப்போது சஹா, கணவனின் அருகில் வர.. தங்கள் மகளை மனையாளிடம் கொடுத்தவன்.. பட்டும் படாமல்.. குழந்தைகளுக்கு தெரியாமல்.. தன் மனையாளின் கன்னத்தை இத்ழலால் தீண்டி.. “பை.. மினுக்கி” என சொல்லி கிளம்பினான்.
சஹா புன்னகை முகமாக நின்றாள்.
அடுத்து மகனின் வேன் வந்துவிடும்.. எனவே, சஹா “ம்.. ப்ரசன்னா, சாப்பிடு..” என அவனின் லஞ்ச் பாக் எடுத்து வைத்தாள்.. ஸ்கூல் பேக் எங்கே என பார்த்து.. எடுத்து, இரண்டையும் தனியே வைத்தாள்.
பின் மகனின் வாடிய முகம் பார்த்து “கண்ணா, அப்பா.. உன்னோடு பெரென்ஸ் மீட்டிங்க்கு கண்ணடிப்பா வருவாங்க.. ம்.. ப்ராமிஸ்..” என தன் நெஞ்சோடு அணைத்து சமாதானம் பேச தொடங்கினாள், அன்னை.
இப்போது வேன் ஹாரன் சத்தம் கேட்டது.. ஏதும் பேசாமல் பிரசன்னா பாக் எடுத்து கொண்டு கிளம்பினான். சஹா, மகனை நிறுத்தி “ஸ்மைல் டா.. ஏன் அம்மா வரக்கூடாதா” என்றாள்.
பிரசன்னா “இட்ஸ் ஓகே.. ம்மா.. வாங்க” என அலட்டாமல் சொல்லிவிட்டு, தன் அன்னைக்கு முத்தம் கொடுத்துவிட்டு ஓடினான் மகன். அதுவரையில் அன்னைக்கு சந்தோஷம்.
ப்ரக்யா, இன்னும் உண்ணவில்லை.. மகன் உண்ணாமல் பாதி ரோஸ்ட் வைத்துவிட்டிருந்தான். வீடு கல்யாண மண்டபம் போல இப்போதுதான் பெரிதாக தெரிந்தது சஹாவிற்கு. அமைதியாக அப்படியே ஹாலில் அமர்ந்துக் கொண்டாள் பெண்.
ப்ரக்யா “ம்மா.. ம்மா.. நான் ச்சூல்க்கு” என்றாள் மழலையில்.
சஹா “ம்.. போலாம் டி.. போலாம்.. “ என சொல்லி அவளை அள்ளிக் கொண்டாள் கைகளில்.
ப்ரக்யா ப்ளே ஸ்கூல் போகிறாள். அடுத்து அவளை கிளப்ப வேண்டும்.
சாகம்பரி மகளுக்கு உணவு ஊட்டி.. மகளுக்கு உடம்பு துடைத்து.. உடை அணிவித்து.. அவளை கொண்டு.. ப்ளே கிளாஸ்சில் விட்டு வட்டு வந்தாள்.
வீட்டில் வேலைக்கு என வருபவர்.. பத்து மணிக்குதான் வருவார். அவர் வந்திருந்தார்.. சஹா வீட்டை திறந்துக் கொண்டு உள்ளே வந்தாள். அந்த அக்காவும் வேலையை ஆரம்பித்தார்.
வீடு சரியாகிக் கொண்டிருந்தது. சஹா அப்படியே அமர்ந்துக் கொண்டாள். தன் தந்தைக்கு அழைத்து பேசினாள்.
நேரம் கடந்தது.
பனிரெண்டு மணிக்கு ப்ரக்யாவை கூட்டி வந்தாள். 2:30 க்கு பிரசன்னா வந்தான். மாலை 7க்கு மித்ரன் வந்தான்.
பிள்ளைகளுக்கு உணவு கொடுத்து.. அவர்களின் பள்ளி கதைகளை பேசி.. ஹோம் வொர்க் பார்த்து. என நேரம் சரியாக இருந்தது ஒன்பது மணி வரை. மாடியில் இரு பிள்ளைகளையும் உறங்க வைத்து.. சஹா கீழே வந்தாள். மணி பத்து இன்னும் கணவனை காணோம்.
மித்ரன் அப்போதுதான் உண்டுக் கொண்டிருந்தான். அவனை கவனித்து.. அவனுக்கு ஸ்கூல் எப்படி போகுது என இரண்டு வார்த்தை பேசி கொண்டிருந்தாள் பெண்.
கணவன் வந்து சேர்ந்தான்.
சஹா காட்டான் சல்வாரில் இருந்தாள்.. முகம் அசதியில் இருந்தாலும் கணவனை பார்த்தும் கண்கள் மின்னியது.
மித்ரன் “ஹாய் சித்தப்பா” என்றான்.
கௌரி “ம்.. சாப்பிட்டியா” என்றான் சோபாவில் அமர்ந்து கொண்டே.
மித்ரன் பதில் சொல்லிக் கொண்டிருந்தான்.
கௌரி, மேலே சென்றான்.. பிள்ளைகளை பார்த்துவிட்டு.. பிரெஷ்ஷாகி கீழே வந்தான்.
மித்ரன் இன்னமும் சஹாவோடு பேசிக் கொண்டிருந்தான்..
சஹா கணவன் வரவும் “சாப்பிடலாங்க” என்றாள்.
மித்ரன் “குட் நைட்” என சொல்லிக் கொண்டே மேலே சென்றுவிட்டான்.
கௌரி சஹா இருவரும் அமர்ந்து உண்ண தொடங்கினர்.. சஹா “பிரசன்னா.. உங்களை ரொம்ப தேடுறான்.. அவனை ஒருநாள் ஸ்கூலில் ட்ராப் பண்ணுங்க.. மித்ரனுக்கு பிஸிக்ஸ் டியூஷன் பார்க்கணும்.. அவன் எங்கையோ ஸ்கூல் கிட்ட இருக்கு போறேன்னு சொல்றான். அதெல்லாம் சரி வராதுனுன்னு சொல்லிடுங்க.. நான் இங்கே விசாரிச்சு வைச்சிருக்கேன்.. வீட்டுக்கு பக்கம்.. என் டூ வீலர் எடுத்துட்டு போயிட்டு வந்திடட்டும்..” என பொதுவான விஷயங்களை பேசத் தொடங்கினர்.
கெளரியின் மண்டையில் இதெல்லாம் ஏறவில்லை.. ம் கொட்டினான். அவனுக்கு இரவு இரண்டு மணிக்கு மீட்டிங் இருக்கு.. அதைவிடுத்து.. நாளை கிளைன்ட் விசிட்.. எனவே, அதிலேயே அவனின் கவனம் இருந்தது. எனவே “ம்.. சொல்லிடுறேன்.. பார்க்கிறேன்.. நாளைக்கு முடியாது அடுத்த வீக்கில், பிரசன்னாவை கூட்டி போறேன்” என மனையாளுக்கும் ஒருகாதை கொடுத்து.. கேட்டுக் கொண்டு.. பதில் சொன்னான்.
உண்டு முடித்து.. சஹா பாத்திரங்கள் துலக்கி.. கிட்சென் துடைத்து வந்தாள்.. அடுத்த ஒருமணி நேரம் சென்றிருந்தது.
கௌரி தன் கழுத்தை அழுத்திக் கொண்டே.. லாப்போடு அமர்ந்திருந்தான்.
சஹா, கணவனின் சிகையை விரித்து அவனின் தோள் தொட வைத்தாள்.. லேசாக பாதம் ஆயில் கொண்டு.. அவனின் உச்சம் தலைமுதல்.. தோள் வரை அழுத்திவிட தொடங்கினாள்.. கௌரி அப்படியே நன்றாக சாய்ந்தான் சோபாவின் பின்புறம். மனையாளின் மென் விரல்கள்.. அவனின் வலியை தளர்த்தி.. மனதை இதமாக்கியது.. பதினைந்து நிமிடம் சென்று.. கண்கள் கசிய தன்னவளின் கையை பற்றி இழுத்தவன்.. லாப்டாப் விட்டு, தள்ளி அமர்ந்து அவளை தன்னருகே அமர்த்திக் கொண்டான். தன்னவளின் விரல்களை.. முத்தமிட்டு.. “தேங்க்ஸ்.. சொல்லுவேன்.. தேங்க்ஸ் டி.. “ என சொல்லி அவளின் கைகளை பிடித்துவிட்டான் இதமாக.
கௌரி “லவ் யூ.. வருஷம் போக போக.. நீ தேவதையாகிட்டே வர.. வரம் கொடுத்திட்டே இருக்க.. எப்படி இப்படி எல்லாம்” என்றான் ரசனையாகவும்.. அவளை சீண்டும் குரலிலும்.
சஹா “ம்.. நீங்களும்தான்.. நான் சொல்லலை நீங்க சொல்லிட்டீங்க” என தன்னவனின் தாடையை முட்டினாள் தன் நெற்றியால்.
கணவன் ரசனையாக பார்த்திருந்தான் தன்னவளை, இப்போது ஆழமாக அவளின் நெற்றியில் முத்தம் வைத்தான். என்ன சொல்லுவது.. பேச்சுகள் என்பது தேவையே இல்லை.. அவர்களுக்குள் நேசம் விரவிக் கிடக்கையில். ஆனால், ஆழ்மனதின் எண்ணத்தை முத்தத்தால் அடிக்கடி உணர்த்துகிறான் கணவன். ம்.. அவளும் சேமித்துக் கொள்கிறாள்.. அவனின் முத்தத்தை.
இப்போது, அவனின் லாப்டாப்பில்.. அலுவகல அழைப்பு வர தொடங்கியது. கௌரி “குட் நைட்.. தூங்கு.. சஹா” என சொல்லி அவளை மேலே அனுப்பிவிட்டு.. தன் வேலையை தொடங்கினான்.