Advertisement

       ஹர்ஷவர்தன் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தான். அப்போது “மச்சான்…” என ஆர்ப்பாட்டமாக வந்து அவனை அனைத்து கொண்டான் விக்ரம்.
     விக்ரமின் அனைப்பை எடுத்து விட்டவாறு “டேய் ஏன்டா இப்டி செய்ற‌. தள்ளி நில்லுடா” என்றான் நெளித்துக் கொண்டே. “ஹேய்.. ஏய் ஹர்ஷா நடிக்காத மேன். அந்த பொண்ணு நேம் என்னடா சொல்லு சொல்லு” என்றான் விஷமமாக‌.
     அவன் நக்கலை கண்டு வெட்கமாக வர அதை முகத்தில் காட்டாது “என்னடா?” என்றான் அலுத்துக் கொண்டு. “என்ன சார் ரொம்ப அலுத்துக்குறீங்க.
     என் ஆருயிர் நண்பன் நீ. உனக்கு மேரேஜ். இவ்ளோ கூட நான் உன்னை ஓட்டுலைனா உலகம் என்னை தப்பா பேசாது” என்ற விக்ரமை சிரிப்புடன் பார்த்தான் ஹர்ஷா.
     பின் ஹர்ஷாவை இழுத்து வந்து கட்டிலில் அமர்த்தியவன் “ம்ம் சொல்லு சொல்லு” என்றான் ஆர்வமாக. அதற்கு “என்னடா சொல்ல சொல்ற” என்றான் ஹர்ஷா.
     “ஹான் இன்னைக்கு எத்தனை ஆப்பரேஷன் செஞ்சன்னு” என்று கடுப்பாய் மொழிந்தவன் “ஏன்டா ஏன் நான் என்ன கேக்குறேன்னு தெரிஞ்சே வம்பு பண்ற” என்று அவன் வயிற்றில் லேசாக குந்தியவன்
     “எல்லாம் எங்க தங்கச்சியை பத்தி தான் மச்சான்” என்றான் குதூகலமாக. “ஏன் அவளுக்கு என்ன. கீழே தானே இருக்கா” என்றான் விளையாட்டாக.
     “ஓ காமெடி. எனக்கு சிரிப்பு வரல. கடுப்பேத்தாமா ஒழுங்கா சொல்லு மச்சான்” என்றான் இப்போது கெஞ்சலாக. “சரி சரி கெஞ்சாத சொல்றேன்.
     அனு போதுமா” என்றான் ஹர்ஷா. “ம்ம் பேரைலாம் செல்லமா சுருக்கி கூப்பிட ஆரம்பிச்சிட்ட போல. நடக்கட்டும் நடக்கட்டும். ஆனா எனக்கு இந்த பேர் தெரியாதா.
     நான் கேட்டது உனக்கு சிஸ்டரை எவ்ளோ பிடிச்சிருக்குனு தெரிஞ்சுக்க தான். சொல்லு சொல்லு” என்றான் வேகமாக.
     “பிடிச்சிருக்கு டா. ஆனா அது எவ்ளோன்னுலாம் சொல்ல தெரியலை போதுமா” என்றான் சிரிப்புடன். “ஹே ஹர்ஷா. யு ஆர் ப்ளஷிங் மச்சான்‌” என்றவன்
     ஹர்ஷாவின் கன்னத்தை பிடித்தபடி “அட் லாஸ்ட் மை மச்சான் பெல் இன் லவ்” என்றான் சந்தோஷமாக. “ஹையோ.. கொஞ்சம் சும்மா இருடா” என ஹர்ஷா அவனை அடக்க முயன்று கொண்டிருந்தான்.
     இந்த ஆர்ப்பாட்டங்கள் நடக்க மாலையில் நடந்த நிகழ்வுகளே காரணம். ஹர்ஷா மாலை மருத்துவமனையில் இருந்து வீட்டிற்கு வந்த நேரம் பார்வதி அவனை அழைத்தார்.
     அப்போது தான் விக்ரமும் வந்தான். பார்வதி “ஹர்ஷா குட்டி சண்டே உனக்கு எந்த கமிட்மெண்ட்ஸ்ம் வச்சுக்காத பா” என்றார் மொட்டையாக.
     அதற்கு “ஏன் அத்தை?” என்றான் புரியாது. “அது ஹர்ஷா குட்டி பொண்ணு வீட்ல அண்ணா பேசிருந்தாரு சண்டே வரலாமான்னு கேட்டு.
     அவங்க இன்னைக்கு தான் கால் பண்ணாங்க. சண்டே அவங்களுக்கு ஓகே தானாம்‌. நம்மல வர சொல்லிட்டாங்க டா ஹர்ஷா” என்றார் பார்வதி ஆர்ப்பாட்டமாக.
     இதை கேட்டு சரி என சொல்லி தலை அசைத்த ஹர்ஷா அவன் அறைக்கு செல்ல பின்னோடு வந்த விக்ரமும் அவனை வம்பு செய்துக் கொண்டிருந்தான்.
     விக்ரமிடம் எதுவும் காட்டிக் கொள்ளாது சமாளித்தாலும் ஞாயிற்றுக்கிழமை என்று வரும் என ஹர்ஷா எதிரநோக்கியது அவன் மனம் மட்டுமே அறிந்த உண்மை.
     ஹர்ஷா எப்போது உணவை உண்டு அவன் அறைக்கு போவான் என எண்ணியபடி பார்த்திருந்தான் அபிமன்யு.
     அன்று அம்முவை வெளியே அழைத்து சென்ற அபி நிறைய ஏற்பாடுகள் செய்துவிட்டே வீட்டிற்கு வந்தான். அதை செயல்படுத்தவே இந்த தவிப்பு.
     அவன் அப்படி உள்ளே சென்றவுடன் “ஊப்..” என்று மூச்சை விட்ட அபியை கண்டு அருகில் இருந்த விக்ரம் “என்னடா ஹர்ஷாக்கு தெரியாம எதோ பெருசா பிளான் பண்ற போல‌” என்று கேலியாக வினவினான்.
     விக்ரமை லேசாக முறைத்த அபி “ரொம்ப பேசாத அத்தான். நீயும் தான் எங்க பிளான்ல ஒரு பார்ட். தின்ன உடனே தூங்க மட்டும் போய்றாத அத்தான்.
     நமக்கு மிகப் பெரிய வேலை ஒன்னு இருக்கு” என்றான் தீவிரமாக. அவன் பேசிய தொனியை கேட்ட விக்ரம் “என்னடா கொல்லை கூட்ட தலைவன் மாதிரியே பேசுற.
     என்ன பிளான் டா எரும” என்றான் அவன் முதுகில் அடித்தவாறு. “ஐயோ அத்தான் நாளைக்கு என்ன நாள்ன்னு மறந்துட்டியா. அட கிராதகா!
     நீயெல்லாம் என அண்ணே பிரண்டுனு வெளிய சொல்லிட்டு திரியாத” என்று வறுத்தெடுத்தான். அதற்கு “ஏன்டா திட்ற. எனக்கு ஒன்னும் புரியலயே” எனறு பாவமாக கேட்டான் விக்ரம்.
     “என்ன திட்றனா. உன்னை கொல்லனும். நாளைக்கு என் செல்ல அண்ணே, உன் ஆருயிர் பிரண்டோட  பர்த் டே” என்றான் முறைத்து கொண்டே.
     அப்போது தான் தன் கைப்பேசியை எடுத்து தேதியை பார்த்தவன் “ஹையோ ஆமாடா அபி. நான் மறந்தே போய்ட்டேன். பார்ட்டிக்கு எல்லா ரெடி பண்ணிட்டியா டா” என்றான் அவசரமாக.
     “ஹான் இப்ப வந்து கேளு” என சிறிது பிகு செய்தவன் பின் “அதெல்லாம் பெர்பெக்ட்டா பண்ணிட்டேன். நானும் உன் பாசமலரும் தான் சேந்து செஞ்சோம்.
     இப்போ வீட்ட டெக்ரேட் பண்ற வேலை இருக்கு. சோ அதை பினிஷ் பண்றோம். அண்ட் அண்ணன டுவெல்க்க நீதான் போய் எழுப்பி கூட்டிட்டு வர என்ன.
     அப்புறம் நாளைக்கு ஒரு பெரிய பார்ட்டிக்கு அரேஞ்ச் பண்ணியாச்சு. எல்லாம் பக்கா. போதுமா” என்று முடித்தான்.
     “பரவாயில்லை டா அபி வளர்ந்துட்டடா” என்று தோலை சுற்றி கைப் போட்டு சொன்னவன் “சரி வா வா போய் நாம‌ வீட்ட டெக்கரேட் பண்ணலாம்” என எழுந்து கொண்டான்.
      அபியும் எழுந்தான்‌. பின் இருவரும் சேர்ந்து வீட்டை அலங்கரிக்க ஆரம்பித்தனர். அவர்கள் வேலை முடித்த நேரம் இரவு பன்னிரண்டு மணி நெருங்கியே விட்டது.
     அபி வீட்டில் இருந்த மற்ற அனைவரையும் அழைத்து வர செல்ல விக்ரமை ஹர்ஷாவின் அறையில் தள்ளி விட்டு சென்றான்.
     விக்ரம் ஹர்ஷாவின் அறையில் நுழைந்த போது அனுவின் நினைவில் தன் பிறந்தநாளையே மறந்த ஹர்ஷா அங்கே சுகமான நித்திரையில் இருந்தான்.
     அவன் அருகே அமைதியாக சென்ற விக்ரம் மெதுவாக எழுப்பினான். ஆனால் அந்த சிறு அசைவிலே எழுந்து விட்ட ஹர்ஷா தம் முன் இருட்டில் நிற்கும் விக்ரமை கண்டவன் வீட்டில் தான் யாருக்கும் எதுவோ ஆகிவிட்டது என எண்ணினான்.
      ஹர்ஷாவின் உள்ளே இருக்கும் மருத்துவன் விழித்துக் கொள்ள “என்ன ஆச்சு விக்ரம். வீட்ல யாருக்கும் எதுவும் இல்லைல. என்னடா இந்த டைம்க்கு வந்திருக்க” என்றான் பதட்டத்துடன்.
     அவனின் பதற்றத்தில் நொந்த விக்ரம் “டேய் டேய் மச்சான். உன் சின்சியாரிட்டிய நான் வியக்கேன். ஏன்டா ஏன் இருபத்தி நாலு மணி நேரமுமே நீ டாக்டராவே இருப்பியா” என்று விட்டான்.
     சில நிமிடம் ஒன்றும் புரியாத ஹர்ஷா “அப்புறம் ஏன்டா இந்த அர்த்தராத்திரி எழுப்பின” என்றான் கடுப்புடன்.
    “அது வந்து மச்சான் அது..” என இழுத்தவன் ‘ஐயையோ திடீர்னு சொல்ல காரணம் ஒன்னும் கிடைக்கலையே. இப்படி கோர்த்து விட்டுட்டு போய்ட்டியே டா அபி தடிமாடு” என அபியை மனதில் திட்டியவன்,
     “என்னடா எதுக்கு எழுப்பி தொலைச்ச” என்று மீண்டும் கேட்க “அது ஹான் நியாபகம் வந்திருச்சு மச்சான். கீழ ஹால்ல ஏதோ விழுந்த சத்தம் கேட்டுச்சு டா.
     அதான் என்னன்னு போய் பாக்கலாம்னு” என இழுக்க “அதுக்கு அங்க போக வேண்டியது தானே டா. இங்க எதுக்கு வந்த” என்றான் ஹர்ஷா.
     “அது மச்சான் சத்தம் ஒரு தினுசா இருந்துச்சு டா. அதான் திருடனா ஏதும் இருந்தா. ரெண்டு பேரும் சேந்து போனா சேப் இல்ல அதான்” என இன்னும் இழுக்கவும்
     ஹர்ஷா தன் தலையிலே அடித்துக் கொண்டவன் “ச்சே உன்னோட பெரிய ரோதனை டா‌‌. வா போலாம். வந்து தொலைக்கிறேன்” என்று முன்னே சென்றான்.
     அவன் கீழே செல்லும் போது ஹாலே கும்மிருட்டாக இருந்தது. பார்த்த ஹர்ஷாவே ஒரு நிமிடம் குழம்பி விட்டான். உண்மையில் திருடன் தான் வந்து விட்டானா என.
     ஹர்ஷாவும் விக்ரமும் நடு ஹால் வரும் போது திடீரென விளக்குகள் ஒளிர குடும்பம் மொத்தமும் ஹாலில் இருக்க அனைவரும் சேர்ந்து ஒரே நேரத்தில் “ஹேப்பி பர்த்டே டே ஹர்ஷா!!!
     ஹேப்பி பர்த்டே அண்ணா!! ஹேப்பி பர்த்டே டே அத்தான்!! ஹேப்பி பர்த்டே டே மச்சான்!!” என வாழ்த்து தெரிவிக்க அப்போது தான் ஹர்ஷாவிற்கே இன்று தன் பிறந்தநாள் என்ற நினைவு வந்தது.
     பின் தனக்காக மொத்த குடும்பமும் அந்நேரம் விழித்து கொண்டு இருந்தது அவன் மனதை மிகவும் மகிழ்ச்சி அடைய வைத்தது. அனைவருக்கும் நன்றி சொன்னான்.
     இருந்தும் அவன் தாத்தா அருணாசலமும் இந்நேரம் முழித்து இருக்கவே “ஏன் தாத்தா நீங்களும் இவ்ளோ நேரம் முழிச்சிருக்தனுமா” என செல்லமாக அலுத்து கொண்டவன் அவர் பாதம் பணிந்து அவரின் ஆசிகளை வாங்கினான்.
     அதன்பின் அவன் தந்தை அத்தை மாமா என தனித்தனியாக எல்லோரிடமும் ஆசிகளை பெற்றுக் கொண்டதும் அபி வந்தான்.
     “இந்தா ண்ணா கத்தி. வா வா கேக் கட் பண்ணலாம்” என அழைத்து சென்றான். பிறந்தநாள் வாழ்த்து பாடல் பாட ஹர்ஷா கேக்கை வெட்டி அனைவருக்கும் ஊட்டி விட்டு தானும் வாங்கி கொண்டான்.
     கேக்கை உண்ட பின் பெரியவர்கள் கலைந்து சென்றுவிட சிறியவர்கள் மட்டுமே மிஞ்சி இருந்தனர். அதிலும் அம்மு தூக்கம் வருது என கண்ணை தேய்க்கவும் அவளையும் தூங்க அனுப்பி விட்டனர்.
    அப்போது விக்ரம் “எல்லா ஏற்பாடும் செஞ்சது உன் தம்பி தான்டா. நான் கூட மறந்துட்டேன் டா. அவன் தான் எல்லாம் செஞ்சான்” என்றான் அபியை பற்றி பெருமையாக.
     அதற்கு அபியை தன் தோளோடு அனைத்த ஹர்ஷா “அவன் எதுவும் செய்லனா தான் நான் ஆச்சரியப்பட்டிருப்பேன். அவன பத்தி என்கிட்டையே சொல்றியா.
     அவன் என் தம்பி டா” என்றான் இன்னும் பெருமையாக. “நல்ல அண்ணே தம்பிடா நீங்க. எப்படிடா இப்டி இருக்கீங்க. லைட்டா பொறாமை கூட வருதுடா” என்றான் விக்ரம்.
     ஆனால் குரலில் பொறாமை என்பது துளியும் இல்லை. மாறாக அவனும் மகிழ்ச்சியாக அந்த நிமிடத்தை அவர்களுடன் கழித்தான் என்றால் மிகையில்லை.
     அடுத்த நாள் அழகாக விடிய ஹர்ஷாவின் நாளும் நன்றாகவே விடிந்தது. அபி பரிசளித்த புது உடைகளை உடுத்திக் கொண்டான் ஹர்ஷா.
     பின் மீண்டும் பெரியவர்கள் அனைவரிடமும் ஆசி பெற்று மருத்துவமனை சென்றான். ஆனால் இன்று விரைவாகவே வீட்டிற்கு வந்தான்.
     அவன் வந்தவுடன் வீட்டில் இருந்த அபி மற்றும் அம்முவோடு வெளியே சென்று வந்தவனுக்கு அங்கே வீட்டில் சிறிய அளவில் பார்ட்டிக்கான ஏற்பாடுகள் கண்டு ஆச்சரியமாகி போனது.
     ஒருவழியாக எல்லாம் முடிந்து படுத்த ஹர்ஷாவின் மனது ஆனந்தத்தில் திளைத்து இருந்தது. காரணம் அவன் குடும்பம் இன்றி வேறு யாரோ!!
     அதே நேரம் நாளை ஞாயிற்றுக்கிழமை என நினைவு வர கூடுதல் சந்தோஷத்தில் மனம் நெகிழ அதே மகிழ்வுடன் தன் படுக்கையில் விழுந்தான்.

Advertisement