Advertisement

     காலை எட்டு மணி!! ஆதிராவின் கைப்பேசி அலறிக் கொண்டிருந்தது. ஆனால் ‘அதெல்லாம் என் காதில் விழவில்லை’ என்பது போல் நன்றாக தூங்கிக் கொண்டிருந்தாள் அம்மு.
     இதோடு ஐந்து முறை அடித்து ஓய்ந்திருந்தது அந்த கைப்பேசி. அந்த புறம் அழைப்பை ஏற்படுத்தி கொண்டிருந்த அபிமன்யு கடுப்பின் உச்சியில் இருந்தான்.
     “இவள…” என பல்லை கடித்தவன் “மணி எட்டு ஆகுது‌. இன்னும் இவளுக்கு விடியலை. உன் நிலைமை ரொம்ப மோசமா போயிரும் போலையே அபி.
     இவளை தினமும் காலைல எழுப்பி விடறத்துக்குள்ள என் ஜீவன் தான் போகும் போலையே. ஆண்டவா!!” என் நொந்தான்.
     “அடியே! இப்ப மட்டும் நீ போன் எடுக்காம இரு. அப்புறம் என்ன பண்றேனு பாரு” என வாய் விட்டே புலம்ப அவன் மனதோ ‘ஆமா அப்படி என்ன பண்ணிருவ.
    அம்முவ உன்னால என்ன செஞ்சுற முடியும். முடிஞ்சா அவ அடி உதைல இருந்து தப்பிக்க எதாவது வித்தைய கத்து வச்சுக்கோ. அது வேனா யூஸ் ஆகும்’ என நக்கலாக சொல்லி சென்றது.
    “அது வேனும்னா உண்மை தான்” என்று நொந்தவன் ஆறாவது முறையாக அழைக்க அடித்து முடிக்க போகும் நேரம் கைப்பேசி எடுக்கப்பட்டது.
     “ஹ..லோ…” என்று தூக்க கலக்கத்தில் அபி ஒரு ஹலோவை உதிர்க்க “ஆத்தா ஒரு வழியா எழுந்திட்டியா. எத்தனை டைம் நான் கால் பண்றேன்.
     என்ன பண்ணிட்டு இருந்த” என்றான் கோபமாக. இப்போது தூக்கம் கலைந்து எழுந்த அம்மு “அத்தான் நீங்க கோபமா இருக்கீங்களா?” என்றாள் புரியாமல்.
     இவக்கிட்ட சண்டை போட்டுட்டு இருந்தா இன்னைக்கு வெளிய போன மாதிரி தான் என உணர்ந்த அபி “கோபம்லா ஒன்னும் இல்ல டா. நாம இப்போ வெளிய கிளம்புறோம் ஓகே.
     சோ நீ இன்னும் ஹாஃப் – அன் அவர்ல கிளம்பி கீழ வர புரியுதா” என்றான்‌. “எங்க அத்தான்” என்ற அம்முவின் கேள்விக்கு “அதலாம் நான் போகும் போது சொல்றேன்.
     நீ கிளம்பி வா” என வைத்து விட்டான். அப்போது தான் அவள் கைப்பேசியில் இருந்த ஐந்து தவறிய அழைப்புகளை கண்டவள் ‘ஓஓ அதான் அத்தான் கோபமா பேசுனாறா” என்று எண்ணி கொண்டாள்‌.
    பின் அவன் கிளம்பி வந்து சில நிமிடங்கள் கழித்து அம்முவும் கிளம்பி வந்தாள். ஆனால் அவர்கள் வெளியே செல்லும் முன் அவர்களை நிறுத்தினார் பார்வதி.
     இருவரும் வாசல் புறம் சென்ற நேரம் “அபி” என்ற குரலில் ஒருசேர திரும்பி பார்த்தனர். “என்ன மார்னிங் டைம் இவ்ளோ ஏர்லியா எங்க போறீங்க. நேத்தே அம்முக்கு எக்சாம் முடிஞ்சு போச்சே?” என்று கேள்வி எழுப்பினார் அவர்.
     அபி “ஸ்ஸ்ஸ்.. அத்தை காம் டௌன். நானும் அம்முவும் ஒரு முக்கியமான விஷயமா வெளிய போறோம். ஆனா நாங்க வீட்ல இல்லைன்ற விஷயம் யாருக்கும் தெரியக் கூடாது.
     மெயினா அண்ணாவுக்கு தெரியவே கூடாது அத்தை” என்றான் மெதுவாக.‌ அதற்கு “ஏன்டா ஹர்ஷாக்கு தெரியக் கூடாது. அப்படி என்ன டா திருட்டு தனம் பண்ண போறீங்க” என்றார் சந்தேத்துடன்.
     “ஐயோ! அத்த இங்க வாங்க” என அவரை அருகே இழுத்தவன் அவர் காதில் ஏதோ கிசுகிசுப்பாக சொல்ல அவரின் முகமும் பூவாய் மலர்ந்தது.
     “யாருக்கும் தெரியாம நான் பாத்துக்கிறேன் டா அபி செல்லம். நீ போய் எல்லா ஏற்ப்பாட்டையும் செய். போ போ” என்றார் மகிழ்வுடன்.
     அவர் மகிழ்ச்சியை கண்டு “அத்த உங்களுக்கு இன்னொரு ஸ்வீட் நுயூஸ் சொல்லட்டா” என்றான் அபி ஆர்வத்தை தூண்டும் விதமாக.
      பின் அவனே அவரிடம் “அண்ணா நேத்து ஓகே சொன்னாங்கல‌ அந்த பொண்ணு தான் எனக்கு அண்ணி. அது மட்டும் கண்பார்மா சொல்றேன்” என்றான் அவன் ஹர்ஷாவிடம் தெரிந்த மயக்கத்தால்.
     அபி சொன்ன செய்தியில் “என்னடா அபி சொல்ற. ஹர்ஷா உன்கிட்ட சொன்னானா” என்றார் மகிழ்ச்சியாக. பார்வதியின் தோளை சுற்றி கைப் போட்ட அபி “அதெல்லாம் நான் சொல்ல மாட்டேன். ஆனா நீங்க அண்ணாவ நோட் பண்ணி பாருங்க அத்த.
     நான் சொன்னது கரெக்ட்னு புரியும்” என்று கூறி அவர் கண்ணத்தில் முத்தமிட்டு “வரேன் அத்த” என கிளம்பி விட்டான். அப்போது தான் தன் மகளின் நினைவு வர அவளை கண்டார்.
      அபியின் பின்னே அமைதியாக செல்வது தன் மகள் தானா என ஆச்சரியப்பட்ட பார்வதி “சரி தூக்க கலக்கத்தில இருக்கவல அபி இழுத்துட்டு போறான் போல” என எண்ணியவர் அதை அதோடு விட்டுவிட்டார்.
    அவருக்கு தான் அதை விட முக்கியமான வேலை இருக்கிறதே. அதான் ஹர்ஷாவின் மனதை அறியும் வேலை. சிறிது நேரத்தில் ஹர்ஷா ராஜசேகர் இருவரும் உணவு உண்ண வந்து அமர்ந்தனர்.
     இதுதான் சரியான நேரம் என எண்ணிய பார்வதி மெதுவாக பேச்சை ராஜசேகரிடம் ஆரம்பித்தார். இருவருக்கும் உணவை பரிமாறியபடி “அண்ணா நேத்து ஒரு பொண்ண பத்தி சொன்னேனே.
    அந்த பொண்ண கூட நம்ம ஹர்ஷா பாத்து ஓகேன்னு சொல்லிட்டான்னு” எனும் போதே ஹர்ஷா தன் காதை தீட்டிக் கொண்டு அமர்ந்திருந்தான்.
     “அந்த பொண்ணு வீட்ல பேசிருங்க ண்ணா. எப்ப பொண்ண பார்க்க வரதுன்னு” என்றவர் ஓர பார்வையாக ஹர்ஷாவை காண அவன் முகம் ஆயிரம் வாட்ஸ் பல்ப் போட்டது போல் பிரகாசம் ஆனது.
    அதை கண்டு தானும் மகிழ்ந்த பார்வதி அவர் அண்ணனை வேகமாக செயல்படுத்துமாறு முடுக்கி விட்டார். அனைவரும் உணவு உண்டு சென்ற பின்னர் “இந்த பசங்கல சின்னதுல இருந்து நான் தான் வளர்க்குறேன்.
     ஆனா இவனுங்கல என்னால புரிஞ்சுக்க முடியலையே. எப்படியோ இவங்க வாழ்க்கை நல்லபடியா அமைஞ்சா அதுவே போதும்” என்று தான் எண்ணினார்.
    அனுக்ஷ்ராவும் ரித்திகாவும் கல்லூரி விட்டு தங்கள் இல்லம் வந்தனர். அவர்கள் வந்த நேரம் விஸ்வநாதன் வீட்டில் தான் இருந்தார். என்றும் மாலை அவ்வளவாக வீட்டில் இருக்கமாட்டார்.
     ‘இன்று ஏன் இந்த நேரம் வீட்டில் இருக்கிறார்’ என ஒன்று போலவே இரண்டு பெண்களும் எண்ணினர். ஆனால் அதை ஒருவர் மற்றவரிடம் கேட்டுக் கொள்ளவில்லை.
     அதே நேரம் விஸ்வநாதனுடன் அவர்களின் தாத்தா ராகவன் அமர்ந்து கொண்டிருக்க அனுவின் தாயோ சற்று தள்ளி நின்றிருந்தார்.
    என்ன நடக்கிறது எனப் புரியாத போதும் விஷயம் சற்று பெரியது என்றே நம்பினர். ஏனெனில் அவர்கள் தாத்தா ராகவன் தந்தை விஸ்வநாதன் இருவரையும் ஒரே நேரம் பார்ப்பது அரிது.
    அதுவும் இருவரும் சாதாரணமாக பேசுவதெல்லாம் அதிசயமாக நடக்கும் நிகழ்வே அந்த வீட்டில். கணபதியும் வசுந்தராவும் கோயம்புத்தூர் சென்ற காரணத்தால் அவர்கள் இங்கே இல்லை.
    அப்போது “ஷரா நில்லு” என்ற விஸ்வநாதன் குரலில் இருவரும் அப்படியே நின்றனர். “இப்பவாவது அவனை என்ன விஷயம்னா சொல்ல சொல்லுமா மீனாட்சி” என்றார் ராகவன் தன் மகனை நோக்காது.
     ராகவனின் குரலில் விஸ்வநாதனை கண்டார் மீனாட்சி. ஆனால் அதையெல்லாம் கண்டுக் கொள்ளாத விஸ்வநாதன் ஏதோ செய்தி கூறுவது போல் அந்த விஷயத்தை பகிர்ந்தார்.
     “நம்ம ஷராக்கு ஒரு வரன் வந்திருக்கு” எனும் போதே அனைவரின் கவனமும் விஸ்வநாதன் மீது ஆழமான பதிந்தது.
     அனுவிற்கோ திக்கென்றது இருந்தாலும் ‘ஆறு மாசம் முன்னாடியே நடந்த இன்சிடென்ட்டால அப்பா இதை அப்பவே பண்ணுவாருன்னு நீயே நினைச்ச.
     இப்ப என்ன புதுசா ஷாக் குடுக்குற’ என அவள் மனமே எடுத்துக் கொடுக்க ‘உண்மை தானே’ என எண்ணிய அனுவும் அவள் தந்தை சொல்ல போவதை கேட்க தயாரானாள்.
    ஆனால் மனதின் உள்ளே சிறு குறுகுறுப்பு தானாகவே எழுந்தது. அதை பயம் என எண்ணிக் கொண்டாள். ஆனால் அவளுக்கு புரியவில்லை திருமணம் என்ற பேச்சு வந்தாலே பெண்களுக்கு இந்த குறுகுறுப்பு வந்துவிடும் என்று.
     விஸ்வநாதன் கூறுவதை இப்போது அனுவும் கவனித்தாள். “பையன் பேரு ஹர்ஷவர்தன். அருணாசலம் இண்டர்ஸ்டீரிஸ் அருணாசலத்தோட மூத்த மகன் ராஜசேகரோட பெரிய பையன்”
     ‘அப்ப பிசினஸ் மேனா’ என மனதில் எண்ணினாள் அனு. “ஆனா பையன் பிசினஸ் எல்லாம் பாக்கல. அதேயெல்லாம் அருணாசலத்தோட பொண்ணோட பையன் தான் பாத்துகிறான்.
     மாப்பிள்ளை பையன் அவரோட அப்பா மாதிரி டாக்டர் வேலை பாக்குறான். மூனு வருஷம் வெளிநாடு போய் படிச்சிட்டு இங்கையே வந்து அருணாசலம் ஹாஸ்பிடலோட எம்.டியா இருக்கான்.
     சென்னைல பிரபலமான கார்டியாலஜிட்ல இந்த பையனும் ஒருத்தன். வயசு என்னமோ இருபத்தி ஒன்பது தான். ஆனா இந்த சின்ன வயசுல நல்ல திறமை. ப்யூச்சர்ல இன்னும் பெரிய ஆளா வர வாய்ப்பு அதிகம்னு சொல்றாங்க.
     அந்த ஹாஸ்பிடலையும் ரொம்பவே நல்லா மேனேஜ் செய்றான்னு கேள்வி பட்டேன். அங்க போய் கேட்டப்ப எல்லாரும் அவ்ளோ புகழ்றாங்க.
     நான் வெளிய விசாரிச்சு பாத்தப்பையும் அந்த பையன பத்தி யாரும் தப்பா ஒரு வார்த்தை கூட சொல்லலை. அவங்களுக்கு நம்ம ஷராவ போட்டோ பாத்தே ரொம்ப பிடிச்சு போச்சாம்.
     எனக்கு இன்னைக்கு தான் மாப்பிள்ளையோட அப்பா போன் செஞ்சார். டீட்டெயில்ஸ் சொல்லி எப்போ பொண்ணு பார்க்க வரட்டும்னு கேட்டாரு” என்று முடித்தவர்
      “அவங்களுக்கு சண்டே வசதியா இருக்குமாம். அன்னைக்கு வரட்டுமான்னு கேக்குறாங்க. என்ன சொல்லலாம்” என்றார் அனைவரையும் பார்த்து பொதுவாக.
     “இந்த வரன் யார் கொண்டு வந்தது” என்றார் ராகவன் இப்போது. அவர் நேரடியாக விஸ்வநாதனிடம் கேட்டதே அனைவருக்கும் ஆச்சரியமாக இருந்தது.
     விஸ்வநாதன் தானும் வியபந்தவர் “ஒரு ஆறு மாசம் முன்னாடி தரகர் கிட்ட  ஜாதகத்தை கொடுத்திருந்தேன். அவங்களும் அதே தரகரை தான் பாத்திருப்பாங்க போல.
     அவங்களும் கொஞ்ச நாளா பொண்ணு பாத்துட்டு இருந்தாங்கலாம். ஆனா அதுல யாரையும் பிடிக்கலையாம். நம்ம ஷராவ பாத்ததும் அவங்களுக்கு பிடிச்சு போச்சாம்.
     அதனால அந்த பையன் வீட்ல அவங்க அப்பாவே கால் பண்ணி பேசினாரு ப்பா” என்று முடித்தார். சிறிது யோசித்த ராகவன் “அருணாசலம் குடும்பத்தை பத்தி எனக்கு ஓரளவு தெரியும்.
     ரொம்ப நல்ல குடும்பம். பையன் குணமும் அருமையா இருக்கப்ப தயங்க வேண்டாம். வர சொல்லு” என்றபின் அவர் அறையை நோக்கி சென்றுவிட்டார்.
     அவரை பொறுத்த வரை விஸ்வநாதன் வாழ்வில் ஒரு முறை செய்த தவறை மீண்டும் செய்ய மாட்டார் என்ற நம்பிக்கை. அது மட்டும் அல்ல.
      அவர் மகன் விஸ்வநாதன் ஒருவரை பத்தி கணித்தால் அது தவறாது என்ற எண்ணம் எப்போதும் உண்டு. எனவே அவர் தன் சொந்த மகள் விஷயத்தில் தவறாக எதுவும் செய்ய மாட்டார் என நம்பினார்.
     இத்தனை ஆண்டுகள் சென்று ராகவன் விஸ்வநாதனிடம் நீளமாக பேசியதில் மகிழ்ந்து போயிருந்த விஸ்வநாதனும் அவர்களை வரும் ஞாயிறு அன்றே வர சொல்லி அழைத்து சொல்லி வைத்தார்.
     மீனாட்சியும் மாப்பிள்ளையின் தகுதியை கேட்டு தன் மகள் இனி மகிழ்ச்சியாக வாழ வேண்டும் என கடவுளை வேண்ட பூஜை அறையை அடைந்தார்.
     ஆனால் இவர்கள் யாரும் பயத்தில் வியர்த்து போய் நின்றிருந்த அனுவை கவனிக்காது போயினர்!!
-மீண்டும் வருவான்

Advertisement