Advertisement

     ஆதிராவை அபிமன்யு பக்கத்தில் இருக்கும் பார்க் ஒன்றிற்கு அழைத்து வந்திருந்தான். அங்கே வந்த பின் யோசனை முகமாக அமர்ந்திருந்த அவனையே விழி எடுக்காது பார்த்திருந்தாள் ஆதிரா.
     அபிமன்யுவின் காதல் அவனை ஒரு புதிய மனிதனாக ஆதியிடம் காட்டியது. அவளுடன் கல்லூரியில் இருந்து வந்த அபி அவளின் பசி உணர்ந்து வெளியே சாப்பிட வைத்தே அழைத்து வந்தான்.
     இதுநாள் வரை அபியின் செய்கைகள் யாவும் அக்கறையாக தெரிய, இன்று அபியின் காதலை தெரிந்த பின் அவ்வளவும் காதலாகவே வேறு தெரிந்து துளைத்தது.
     ‘எப்போ இருந்து நம்மள லவ் பன்றாருன்னு தெரியலையே. சந்துக்கே தெரிஞ்சுருக்கு. நாம அவ்ளோ தத்தியாவா இருந்திருக்கோம். ச்ச’ என்று இடையே ஒரு மனது வேற காறி துப்ப அமைதியாக இருந்த அபியின் மனதை அறிய அவனை பார்த்தாள்.
     “அ.. அத்தான்” என்றாள். ஆனால் வாயில் இருந்து காத்து தான் வந்தது. ‘என்னடா இது இந்த அம்முக்கு வந்த சோதனை. ஐயோ அத்தான்ட பேச வேற ஷையா இருக்கே. என்ன இது புதுசா உள்ள என்னனமோ பண்ணுதே’ என தடுமாறினாள்.
     பின் ‘ஓம் சாந்தி! ஓம் சாந்தி!’ என தன் மனதை சமாதானம் செய்தவள் மெதுவாக அபியின் கரத்தை சுரண்டினாள். இவ்வளவு நேரம் ‘அம்முவிடன் தன் காதலை எப்படி சொல்ல போகிறோம்.
     அப்படி சொன்னால் அவள் எப்படி எடுத்துக் கொள்வாள்’ என யோசித்துக் கொண்டிருந்த அபி அம்முவின் தொடுகையில் திரும்பி பார்த்தான்.
     அவனை பார்த்து தயங்கியவாறே “அ.. அத்தான் அது வந்து அத்தான். அது நீங்க எப்போல இருந்து என்ன லவ் பண்றீங்க” என்று திக்கி தினறி கேட்டு முடித்தாள்‌.
     அம்முவின் கேள்வி அபிக்கு இன்ப அதிர்ச்சியை தான் தந்தது. ‘நீங்க காலேஜ்ல ஏன் அப்படி சொன்னீங்க’ இல்லை ‘நம்ம வீட்ல இரண்டு பேருக்கும் உண்மையாவே மேரேஜ் பிக்ஸ் பண்ணிட்டாங்க லா என்ன?’
     இது போன்ற கேள்விகளை அம்முவிடன் எதிர்ப்பார்த்திருந்த அபிக்கு அவளின் இந்த கேள்வி மிகுந்த மகிழ்ச்சி அளித்தது.
    அபியின் அமைதியில் “அபி அத்தான். சொல்லுங்க என்ன எப்படி உங்களுக்கு பிடிச்சுது? எப்போல இருந்து?” என்றாள் இப்போது தடுமாறாமல் ஆனால் சிறிய குரலில்.
     “அம்மு அம்முமா. உனக்கு நான் உன்னை லவ் பண்றது, அதை உன்கிட்ட சொல்லாதது இதெல்லாம் அன்-ஈசியா பீல் ஆகலையா டா” என்றான் அபி அவள் முகத்தை பார்த்து.
     அதற்கு “பர்ஸ்ட் சந்து சொன்னத கேட்டப்ப கொஞ்சம் ஷாக்கா தான் இருந்தது. அவளுக்கே புரிஞ்ச விஷயம் எனக்கு புரியாம போய்ருச்சேன்னு கொஞ்சம் ஷேமா கூட இருந்துச்சு. அன்ட் அதுக்கு அப்புறம் தான் நீங்க என்கிட்ட நடந்துக்கற விதம் புரிஞ்சுது.
     அதுவும் இப்பக் கூட நீங்க எனக்கு பிடிச்சத சாப்பிட வச்சு தான் கூட்டிட்டு வந்தீங்க. அது எனக்கு ரொம்ப பிடிச்சுது. இப்ப வரை நீங்க என்கிட்ட நடந்துக்கிட்ட விதத்தை யோசிச்சு பாத்தேன்.
     அப்போ அப்போ தான் புரிஞ்சுது…” என்று இழுக்க இப்போது “என்ன மேடம் புரிஞ்சுது?” என்று குறும்பாக கண் அடித்தான் அபி.
     இப்போது அவனை பாராது “அது அது… உங்க செய்கை எல்லாம் அக்கறைன்னு நெனச்சது தப்பு. அதை நீங்க மனசுல இருக்க லவ்னால தான் செஞ்சிருக்கீங்கன்னு புரிஞ்சுது”என்றாள் வெட்கத்துடன்.
     அவளின் புரிதலான பதில் மற்றும் வெட்க முகத்தில் மகிழ்ந்த அபி “செல்லக்குட்டி நீ ஒரு நாள்ல இவ்ளோ வளந்துட்டியா டா” என்று பொய்யாக வியந்தவன் அவளை தோளோடு அனைத்து கொண்டான்.
     அவனின் கேலியில் “ஐயோ அத்தான் கிண்டல் பண்ணாதீங்க” என்று சினுங்கிக் கொண்டே அவனோடு மேலும் ஒன்றினாள். அவளின் செய்கையில் இன்னும் அவனை இறுக்கிக் கொண்டான் அபி.
     சிறிது நேரம் இதே நிலை நீடிக்க அம்மு தான் “என்ன அத்தான் நான் கேட்ட கேள்விக்கு நீங்க இன்னும் பதிலே சொல்லலை” என்றாள் அவன் நெஞ்சில் இருந்து நிமிர்ந்து முகத்தை ஆர்வமாக பார்த்தவாறு.
     அவளின் ஆர்வத்தை கண்டு மகிழ்ந்த அபி மென்மையாக அவனின் அனைப்பை மென்மையாக மாற்றி “ம்ம். அது ஒரு ஆறு வருஷ ஃபிளாஷ் பேக்” என்றான் சிரிப்புடன்.
     அவனின் சிரிப்பை விடுத்து “என்ன ஆறு வருஷமா?” என்றாள் அம்மு வியப்பாக. பின் “அத்தான் பிட் பிட்டா சொல்லாம முழுசா சொல்லுங்க” என்றாள் உரிமையான அதட்டலுடன்.
     “பார்ரா என் அம்முக்குட்டி என்னை மிரட்டற அளவுக்கு வந்துட்டா” என்று சிரித்தவன் அவளை மேலே சீண்டாது அவனாகவே சொல்ல ஆரம்பித்தான்.
ஆறு வருடங்களுக்கு முன்…..
     “ம்ஹீம் முடியாது முடியாது. நீங்க என்ன விட்டு போகக் கூடாதுனா போகக் கூடாது” என ஆதிரா ஹர்ஷாவின் கெஞ்சலுக்கு மறுத்துக் கொண்டிருந்தாள்.
     ஆதிரா அப்போது எட்டாவது படித்துக் கொண்டிருந்தாள். ஹர்ஷாவிற்கு அப்போது தான் வெளிநாட்டு பல்கலைக்கழகத்தில் படிக் சீட் கண்பார்ம் ஆகி இருந்தது.
     அவனை போக வேண்டாம் என சொல்லி தான் இந்த அக்கப்போர் செய்துக் கொண்டிருந்தாள் ஆதிரா. ஆதிரா பிறந்ததிலிருந்து எல்லாவற்றிற்கும் ஹர்ஷா தான் வேண்டும் அவளுக்கு.
    அவளை பள்ளி அழைத்து சென்று வர, அவளுக்கு பாடம் சொல்லி தர, அவளுக்கு பிடித்த உணவை வாங்கி தர, அவளை வெளியே அழைத்து சென்று வர என அனைத்திற்கும் ஹர்ஷா வேண்டும்.
     இதில் அவன் வெளிநாடு சென்று விட்டால் அவள் நிலமை என்னவாவது என்று தான் இந்த அழுகை. அவள் அழுவதை பார்க்க பாவமாக இருந்தாலும் அவளை ஒருவாறு சமாளித்து வெளிநாடு சென்று விட்டான் ஹர்ஷா.
     எப்போதும் அண்ணன் செய்வதை அப்படியே செய்யும் அபிக்கு அதன் பிறகு அம்முவை பார்த்துக் கொள்வது தன் கடமை என்ற எண்ணம் தானாகவே வந்தது.
     அவளை சமாதானம் செய்து, அவளை படிக்க வைத்து என அவன் நேரங்கள் அவளை சுற்றியே அதன் பின் இருந்தது. அப்போது தான் ஒரு நாள் ஆதிரா பெரிய பெண் ஆனாள்.
     சடங்குகள் செய்ய ஹர்ஷா வர முடியாத காரணத்தால் அபியே செய்யட்டும் என முடிவெடுத்தனர் வீட்டினர். எனவே சடங்கு நாள் வரும் வரை ஆதியை பார்க்க அவனை அனுமதிக்கவில்லை.
     பக்கத்து அறையே ஆனாலும் ஒரு வார்ம் பார்க்க முடியவில்லை அபியால் அம்முவை. அதுவே அவனுள் ஏதோ சொல்ல முடியாத ஒரு தவிப்பை உருவாக்கியது.
     ஒரு வாரம் சென்ற பின் புடவை அணிந்து முழு அலங்காரத்தில் அழைத்து வரப்பட்ட அம்முவை கண்டதும் மொத்தமாக விழுந்துவிட்டான் அபி.
     அபியும் அப்போது தான் கல்லூரி முதல் ஆண்டில் இருந்தான். ஆனால் அந்த நிமிடம் அவள் மேல் காதலில் விழுந்தான்.
     அன்றிலிருந்து அவளுக்கு செய்யும் அனைத்தையும் உரிமையாகவே செய்தான். அதனால் தான் அவள் வீட்டினர் அறியாது எங்கே சென்றாலும் அவளுக்கே கூட தெரியாது அவளுக்கு காவலாக செல்வான்.
     மூன்று வருடம் சென்று இந்தியா வந்தான் ஹர்ஷா. வந்த சில நாட்களிலே அபியின் செயல்களில் அம்முவின் மீது தோன்றிய அதிக அக்கறை அவனை ஈர்த்தது.
     தம்பியின் சிறு சிறு செய்கையிலே அவனின் மனம் அறிந்து அதை செய்து கொடுக்கும் ஹர்ஷாவிற்கு அபியின் மனம் போகும் திசை புரியாமலா போய்விடும்.
     சில நாட்களில் அவனின் மனமும் ஓரளவு புரிந்தது. அதேபோல் அவனின் காதலை அம்மு உணரவில்லை என்பதையும் புரிந்துக் கொண்டவன் அபியிடமும் அதை குறித்து கேட்டுக் கொள்ளவில்லை.
     ஹர்ஷாவிற்கு தெரிந்துவிட்டதோ என எண்ணிய அபியும் தன் அண்ணன் தான் நினைப்பது நியாமெனில் தங்களை சேர்த்து வைப்பான் என அதை அத்தோடு விட்டுவிட்டான்.
     அனைத்தையும் சொல்லி முடித்த அபி தன் கை வளைவில் இருந்த அம்முவிடன் “அப்புறம் அண்ணா அவ்வளவு சொல்லியும் பாரின்லையோ இல்லை அந்த டெல்லி யூனிவர்சிட்டிலையோ படிக்க போகலை ஏன்னு தெரியுமாடா?” என்று வினவினான்.
     அதற்கு இல்லை என்பது போல் தலை ஆட்டிய அம்முவிடம் “உன்னால தான். உன்னை பாக்காம இருக்க முடியாதுன்னு தான் இங்க இருக்க காலேஜ்லயே என்ட்ரண்ஸ் எழுதுனேன்” என்றான் சிரிப்புடன்.
     இப்போது அனைப்பில் இருந்து விலகிய அபி அவள் முகத்தில் இருந்த முடியை விலக்கியவாறு “இப்ப ஓகேவா மேடம். உங்க டவுட்ஸ்லாம் கிளியர் ஆகிருச்சா?” என்று முடித்தான்.
     “ம்ம்…” என்று வெட்க சிரிப்புடன் இழுத்த அம்முவிடம் “ஓய் என் லவ் ஸ்டோரிலாம் கேட்டல்ல. இப்ப உனக்கு என்னை பிடிச்சிருக்கான்னு சொல்லு?” என்றான் என்னவோ பிடிக்காமல் தான் அவள் இவன் அனைப்பில் இருப்பது போல்.
     “அது.. எனக்கும் உங்கள பிடிச்சிருக்கு அத்தான்” என்றவளிடம் “உண்மையாவா?” என்றான் கேள்வியாக அபி. அவள் பதிலில் ஏன்டா கேட்டோம் என ஆகிவிட்டது.
     “அது வந்து அத்தான். சின்ன வயசில இருந்தே உங்கள‌ எனக்கு பிடிக்கும். ஆனா ஹர்ஷா அத்தான் பாரின் போனப்ப தான் உங்க கூட இன்னும் ரொம்ப குளோஸ் ஆனேன்.
     பட் ஹர்ஷா அத்தான் மாதிரி தான் உங்களையும் நினைச்சேன். உன்மையாவே வேற எதுவும் தோனுனது இல்லை. இன்னைக்கு சந்தியா சொன்னப்ப கூட எனக்கு இது தெரியலையே அப்டின்னு தான் தோனுச்சு.
     பட் அவெர்ஷனா எதுவும் தோனலை. அதே சமயம் நம்ம மேரேஜ் பண்ணிக்கிட்டா நான் லைப் லாங் நம்ம வீட்லையே இருக்கலாம்ல. அது மட்டும் இல்ல நீங்க ரொம்ப நல்லவரு அபி அத்தான். என்னை கஷ்டபடுத்த மாட்டீங்க.
     அன்ட் நீங்க எதாவது வம்பு பண்ணாலும் ஹர்ஷா அத்தான்கிட்டையோ இல்ல அம்மாகிட்டையோ சொல்லிருவேன். அவங்க பாத்துப்பாங்கல. சோ அதான் ஓகேன்னு சொல்லிட்டேன்” என்று நீண்ட வசனமாக முடித்தாள்.
     ‘ஒரு பேச்சுகாவது என்னை பிடிச்சிதால தான் ஓகே சொல்றேன்னு சொல்றாளா பாரு’ என நொந்த அபி “அம்மு என்ன உனக்கு பிடிச்சிருக்கு தானே?” என்றான் பீதியுடன்‌.
     அதற்கு அம்மு “பிடிச்சிருக்கு அத்தான். எத்தனை டைம் கேப்பீங்க. சரி போலாமா” என்றாள். “ஏய் அம்மு குட்டி கொஞ்ச நேரம் பேசிட்டு போலாமே. அதான் இன்னையோட உனக்கு எக்சாம்ஸ் முடிஞ்சு போச்சுல. சோ கொஞ்ச நேரம் டா” என்றான் கெஞ்சலாக.
     பின் இருவரும் சிறிது நேரம் சின்ன வயது கதைகள், அபி அம்மு அவர்கள் வீடு, குடும்பம், வாழ்க்கை என அனைத்தையும் பற்றி பேசி விட்டு மாலை ஆகவே வீட்டை நோக்கி கிளம்பினர். இதில் அம்முவிற்கு மனதில் அபியின் மீது தனி பிரியம் தான் எப்போதும்.
     அதுவும் இன்று அவன் ஆறு ஆண்டுகளாக தன்னை மட்டுமே மனதில் நினைத்துக் கொண்டு இருப்பதாக கூறியது அவளின் மனதை அவனை நோக்கி செலுத்தி விட்டது.
    ஆனால் அதை அபியிடம் நேராக சொல்ல தெரியாது சுற்றி வளைத்து வீடு குடும்பம் ஹர்ஷா என உளறி முடித்தாள்.
    அவள் மனதை அறியாத அபி ‘இவளுக்கு உண்மையாவே என்னை பிடிச்சிருக்கா இல்லை நம்ம வீட்லயே இருக்க போறோம்னு சம்மதம் சொல்லிட்டாளா? ஒன்னு புரியலையே’ என எண்ணியவாறே வண்டியை கிளம்பினான்.
      எப்போதும் அம்மு தன் மாமன் மகன் என்ற உரிமையில் அபியோடு செல்பவள் இன்று இனி எல்லாம் அவனே என்ற உரிமையில் வண்டியின் பின்னே அமர்ந்து அவனை கட்டிக் கொண்டு சென்றாள்.
-மீண்டும் வருவான்

Advertisement