Advertisement

     அனுக்ஷ்ராவும் ரித்துவும் மதிய உணவு வேளையில் தங்கள் கல்லூரியின் உள்ளே இருந்த மரத்தடியில் அமர்ந்து உணவு உண்டு கொண்டிருந்தனர்.
     விஸ்வநாதன் அன்று அனுவை திட்டி சென்றாலும் இரண்டு நாட்கள் சென்ற பின்னர் அவளை அழைத்து “உன்னை நம்பி அனுப்பறேன். போனோமா வந்தோமான்னு இருக்கனும்” என்ற அறிவுரையோடு கல்லூரிக்கு அனுப்பி வைத்தார்.
     இந்த மட்டுமேது அனுமதி தந்தாரே என்ற நிம்மதியில் அனுவும் ஆர்வமாக கல்லூரி சென்று வர ஆரம்பித்ததாள். இந்த சம்பவம் நடந்த பின்னர் விஸ்வநாதனின் நடவடிக்கையில் நிறைய மாற்றங்கள் வந்தன.
     முன்னர் போல் அனுவை எந்த கேள்வியும் கேட்பதில்லை. அதே போல் திட்டுவதும் இல்லை. ஏன் வீட்டில் உள்ள மற்ற உறுப்பினர்களையும் எதுவும் சொல்வதும் இல்லை.
     இவரின் இந்த செய்கை வீட்டில் இருந்தவர்களுக்கு குழப்பத்தை ஏற்படுத்தியது. ஆம் குழப்பத்தை தான் ஏற்படுத்தியது. அதுவும் அனுவிற்கு மிக அதிகமாகவே குழப்பத்தை தந்தது அவர் நடவடிக்கைகள்.
     தான் பிறந்ததிலிருந்து தன்னை எதற்கெடுத்தாலும் கண்டிக்கும் தந்தை இப்போது அமைதியாக செல்வது அவளுக்குள் ஒரு வித பயத்தை ஏற்படுத்தியது என்று சொன்னால் அது மிகையாகாது.
     இந்த அமைதிக்கு பின் என்ன வரக் காத்திருக்கிறதோ என எண்ணிய அனு ‘வருவது வரும் போது வரட்டும். இப்போது நம்மை கல்லூரி செல்ல அனுமதி அளித்திருக்கிறாரே. அதுவே போதும்’ என்று அதற்கு மேல் சிந்திக்காமல் விட்டு விட்டாள்.
     ஆனால் அந்த அமைதிக்கான அர்த்தம் எங்கு போய் முடியும் என இன்னும் ஒரு வாரத்திற்குள் தெரியும் போது அவள் என்ன செய்வாளோ?
     இங்கு கல்லூரியிலோ அனுவிற்கென சொல்லிக் கொள்ளும் அளவில்  தோழிகள் என யாரும் இல்லை. எனவே இப்போது ரித்து வந்தபின் அவளுடன் சேர்ந்து உணவு உண்கிறாள். இல்லையெனில் தன் வகுப்பறையில் தனியாக உண்டுவிடுவாள்.
     “ஷரா க்கா.. நான் உன்கிட்ட ஒரு விஷயம் கேக்கனும். நானும் ஒரு வாரமா உன்கிட்ட கேக்கலாம்னு நினைக்கிறேன். ஆனால் கேக்க முடியலை” என்று பீடிகையோடு ஆரம்பித்தாள் ரித்து.
     “என்ன ரித்து. எதுவும் சிலபஸ்ல டவுட்டா?” என்றாள் ஷரா உண்டுக் கொண்டே. “இல்ல க்கா.. அது வந்து… நான் அன்னைக்கு உடம்பு சரியில்லைன்னு லீவ்ல வீட்ல இருந்தேன்ல அப்போ..” என இழுத்தவள், அன்று அன்னையும் தந்தையும் பேசியதை முழுவதுமாக கூறினாள்.
     அனைத்தையும் கேட்ட அனு “எனக்கும் எதுவும் தெரியாதே ரித்து. நீ அத்தை மாமாட்டையே கேட்டு உன் டவுட்டை கிளியர் பண்ணிருக்கலாம்ல” என்றாள் யோசைனையாக.
     அதற்கு “இல்லை க்கா. அப்பா அம்மா இரண்டு பேரும் ரொம்ப பீல் பண்ணிட்டு இருந்தாங்க. அதுவும் அம்மா அழுதுட்டு இருக்கவும் எனக்கு எதுவும் கேக்க தோனலை க்கா” என்றாள்.
     பின் இருவரும் அதை பேசாது விட்டு படிப்பு விஷயத்திற்கு தாவி விட்டனர். ஆனால் இருவருக்கும் இறந்த நபர் யாராக இருக்கும் என்ற கேள்வி மட்டும் மனதின் ஓரத்தில் தங்கிவிட்டது‌.
     ஆதிரா பரிட்சையை முடித்து நண்பர்களுடன் வெளியே வந்து கொண்டிருந்தாள். அபிமன்யு நிற்கும் மரத்தின் அருகே வரும் போது சரியாக இருவருக்கும் இடையில் வந்து நின்றான் விஷ்ணு.
“குட் ஆப்டர்னூன் சார்” என்றாள் ஆதி தன் முன் வந்த நின்ற விஷ்ணுவை கண்டு இயல்பாக. “குட் ஆப்டர்னூன் ஆதி” என்ற விஷ்ணு தன்னிடம் என்றும் மரியாதை பார்வை பார்க்கும் ஆதியிடம் எப்படி தன் காதலை சொல்வதென தெரியவில்லை.
     ஆனால் உடன் நின்ற சந்தியாவிற்கு  சந்தேகம் வந்துவிட்டது. விஷ்ணு தன்னுடைய காதலை கூற தான் ஆதியை நிறுத்தி இருப்பானே? என.
     அருகில் அபி இருப்பது ஒருவித நிம்மதியும் தைரியமும் கொடுத்தாலும் சிறு பயம் இருக்கவே செய்தது. எனவே விஷ்ணுவை நோக்கி
     “சார் இங்க வெயில் ரொம்ப அதிகமா இருக்கு. அந்த மரத்தடிக்கு போலாமா?” என்றாள் வேகமாக. அவள் கூறியது ஒரு விதத்தில் உண்மையே. ஏனெனில் ஆதி சந்தியா இருவருக்கும் வெயிலில் வேர்வை ஊற்றிக் கொண்டிருந்தது.
     ஆதலால் இருவரோடும் சேர்ந்து அபியின் அருகே சென்றனர். அபிமன்யுவிற்கு அனைவரும் சேர்ந்து வருவது குழப்பத்தை தந்தாலும் அமைதியாய் பார்த்திருந்தான்.
     அபியின் அருகே வந்த உடன் அனைவரையும் முந்திக் கொண்ட சந்தியா “ஹாய் அபி அண்ணா. எப்ப வந்தீங்க” என்றாள் அப்போது தான் அவன் அங்கே இருப்பதை பார்த்தது போல.
     சந்தியாவின் கேள்வியை கேட்டு குழப்பினான் அபி. ஏனெனில் அவன் நிற்பதை கண்டு கையை அசைத்து விட்டு தான் நண்பர்கள் வந்தது. இருந்தும் “இப்ப தான் மா. டென் மினிட்ஸ் ஆகுது” என்றான்.
     “ஓஓ.. ஓகே ண்ணா.. ஓகே” என்ற சந்தியாவிற்கு சடுதியில் ஒரு யோசனை தோன்ற இவர்கள் பேசியதை பார்த்திருந்த விஷ்ணுவை நோக்கி
     “விஷ்ணு சார். இவர் அபிமன்யு அண்ணா. நம்ம காலேஜ் தான். பட் பி.ஜி பர்ஸ்ட் இயர்” என்றாள். அதற்கு “ஓஓஓ…” என்று இழுத்த விஷ்ணு இந்த தகவல் தற்போது எதற்கு என பார்வையால் கேட்டு நின்றான்.
     “ம்ம். ஆமாம் சார். அன்ட் அது மட்டும் இல்ல நம்ம ஆதிராவோட கஸினும் கூட” என்ற போது அவன் கண்களில் சிறிது மின்னல் கூட வந்தது.
     ஆனால் அவள் அதோடு மட்டும் நிறுத்தாது “சாரி சாரி சார் கஸின்னு மட்டும் சொல்ல முடியாது. ஏனா…” என்று இழுத்தவள் ஒரு முடிவுடன் “வீட்ல இவங்க ரெண்டு பேருக்கும் தான் மேரேஜ்னும் பேசி வச்சிருக்காங்க.
     ஆதி யூ.ஜி. முடிச்ச உடனே மேரேஜ் தான்னு பிக்ஸ் பண்ணிட்டாங்க” என்றாள் ஒரே போடாக. கேட்டிருந்தவர்களில் யாருக்கு எவ்வளவு அதிர்ச்சி என வரையறுக்க முடியாது போனது.
     அதுவும் விக்கி ‘அட புளுகு மூட்டையே’ என அதிர்ந்து வாயை பிளந்து பார்த்திருந்தான். அவனை பார்த்து வந்த சிரிப்பை அடக்கி நின்றிருந்தாள் சந்தியா.
     ஆனால் ஆரம்பம் முதலே சந்தியாவின் செய்கையில் ஏதோ அர்த்தம் இருக்கிறது என எண்ணிய அபிக்கு இப்போது விஷயம் ஓரளவுக்கு புரிந்து விட்டது.
    இப்போது சூழ்நிலையை கையில் எடுத்த அபி “யாஹ் சார். எங்க வீட்ல பிக்ஸ் பண்ணிட்டாங்க. அன்ட் ஐ டூ லவ் ஹர் எ லாட். இன் பேக்ட் ஆதிய நான் ஃபைவ் இயர்ஸா லவ் பன்றேன்.
      சோ வீட்ல யாரும் எதுவும் சொல்லாம ஓகே சொல்லிட்டாங்க” என்று முடித்தான். பின் சந்தியாவை நன்றியோடு ஒரு பார்வை பார்த்தவன் ஆதியை பார்த்தான்.
    இதை ஆரம்பத்தில் இருந்து பார்த்திருந்த ஆதியின் மனதில் ‘அப்போ வீட்ல நமக்கும் அபி அத்தான்னு பேசி வச்சிட்டாங்களா?’ என்று தான் எண்ணம் வந்தது.
     அவளின் எண்ணத்தை அவள் முகத்தில் இருந்தே அறிந்து விட்ட அபி இதற்கு மேல் இங்கே இருந்தால் ஆதி ‘அப்படியா அத்தான்?’ என்றே கேட்டு விடுவாள் என “வா அம்மு கிளம்பலாம்.
     டை ஆச்சு. நீ இன்னும் சாப்பிடல. சோ டையர்டா தெரியிர பாரு” என்று அவளை அழைத்து சென்றான். என்ன முயன்றும் அவன் குரலில் இருந்த அக்கறை மற்றவர்க்கு புரியத்தான் செய்தது.
     இதையெல்லாம் கண்ட விஷ்ணுவிற்கு மனதிற்குள் பாரமாக இருந்தது. ஆனால் நிதர்சனம் உரைக்க ‘இனி ஆதியை தன் மனதால் கூட எண்ண கூடாது’ என்ற முடிவில் ஆசிரியர் அறை நோக்கி சென்று விட்டான்.
     செல்லும் விஷ்ணுவை பாவமாக பார்த்திருந்த சந்தியாவின் சிந்தனை அவள் முதுகில் பட்டென்று விழுந்த அடியின் வலியில் கலைய திரும்பி பார்த்தாள்.
     விக்கி தான் அடிந்திருந்தான். “ஹே சந்து! என்னா பெர்பார்மன்ஸ் எரும. எவ்ளோ பெரிய அனு குண்ட அசால்டா வீசிட்டு நிக்கிற. நான் அப்படியே ஷாக் ஆகிட்டேன்” என்றான் வடிவேலுவின் மாடுலேஷனில்.
     விக்கியின் கிண்டலில் “அட போடா. விஷ்ணு சார் வந்த வேகத்தை பாத்தல்ல. அவர் அம்முகிட்ட புரபோஸ் பண்ற முடிவுல வந்த மாதிரி தான் இருந்துது. ஆனா ஆதி ரொம்ப இன்னசன்ட் டா.
     அவ வீட்ல ரொம்பவே செல்லமா வளத்துட்டாங்க. அவளால பாக்குறவங்க யாரையும் தப்பா கூட நினைக்க முடியாது டா. அவளுக்கு இந்த மாதிரி விஷயம் எல்லாம் புரியவும் செய்யாது.
     அன்ட் விஷ்ணு சார். அவர் ஆதிய உண்மையாவே லவ் பண்ணாரு. நான் கூட ஆரம்பத்தில அவர் ஆதிய பார்த்தத வச்சு அவர் மேல பெருசா மரியாதை வைக்கில.
     பட் இந்த சிக்ஸ் மந்த்ஸ். என்னதான் அவ மேல லவ் இருந்தாலும் தப்பா நடந்துக்கிட்டது இல்லை. அவ பாக்காஇருக்கப்ப தான் பாப்பாரு. சோ இரண்டு பேருக்கும் எந்த மன கஷ்டமும் வராதபடி செய்யதான் இப்படி செஞ்சேன் டா” என்றாள் நீளமாக.
     நல்ல நண்பர்கள் என்றும் ஒரு சிறந்த தாய் தந்தை மற்றும் அனைத்து உறவுகளையும் உள்ளடக்கியவர்கள் என்பது எவ்வளவு உண்மை என புரிந்து கொண்டான் விக்கி.
     மேலும் விக்கிக்கு சந்தியாவை எண்ணி பெருமையாகவே இருந்தது. விஷ்ணு என்னதான் தன் காதலை சொல்லி இருந்தாலும் அபி இருக்கும் வரை அது கண்டிப்பாக நடவாத ஒன்று.
     அதனால் அனைவருக்கும் மன கஷ்டம் தான் மிஞ்சும். இதை அறிந்து யாருக்கும் எந்த தர்மசங்கடமும் வராதவாறு பார்த்துக் கொண்ட சந்தியா விக்கியின் மனதில் உயர்ந்து சென்றாள்.
     இருந்தும் அவளை கிண்டல் அடிக்கும் பொருட்டு “ஹப்பா சந்து! உன்னை நான் என் ஏஜ் பொண்ணுன்னு தப்பா நினைச்சிட்டேன். இப்ப தானே தெரியிது.
      நீ பாப்பா இல்லை பாட்டினு” என்று ராகமாய் இழுத்துவிட்டு  ஓட தொடங்கிட “என்னது நான் பாட்டியா! ஏய் விக்கி மண்டையா. நில்லுடா…! உன் மண்டைய இன்னைக்கு நான் உடைக்கில என் பேர் சந்தியா இல்லடா” என்றபடி விக்கியை துரத்திச் சென்றாள்.
     மருத்துவமனையில் அகிலனால் இன்று நடைபெற்ற அனைத்து நிகழ்வுகளும் ராஜசேகருக்கு அரைகுறையாக தெரியவர ஹர்ஷாவை எண்ணி எப்போதும் போல் இப்போதும் பெருமை வந்தது அவருக்கு.
     அந்த நேரம் ஹர்ஷாவும் வீட்டிற்கு வந்துவிட, அவனை பேச அழைத்த ராஜசேகர் என்ன நடந்தது என ஹர்ஷாவின் வாய்மொழியாகவே கேட்டு தெரிந்து கொண்டார்.
     பின் “ஹர்ஷா நீ அகிலனோட விஷயத்தில கொஞ்சம் ஓவரா எமோஷனல் ஆகி நடந்துகிட்ட மாதிரி தோனுது பா” என்றார் தன் எண்ணத்தை.
     அதற்கு “எனக்கு அகிலன் லவ் பண்ணதுலா ஒரு விஷயமே இல்லப்பா. அந்த பொண்ணுக்கு இதுல சம்மதமே இல்லப்பா. பட் அது மட்டும்னா கூட நான் அதையெல்லாம் ஹாஸ்பிடல்க்கு வெளிய வச்சுக்கோங்கனு சொல்லிருப்பேன்.
      பட் அந்த பொண்ணு கிட்ட மிஸ் பிஹேவ் பண்றான் ப்பா. நம்மள நம்பி தானே நம்ப ஹாஸ்பிடல்க்கு வொர்க் பண்ண வராங்க. அப்போ அவங்க சேப்டிக்கு நாம தானே பொறுப்பு. அதை தான் செஞ்சேன் ப்பா‌.
     அன்ட் அட் த சேம் டைம் அங்க மிஸ்டேக் அந்த நர்ஸ் மேல இருந்திருந்தாலும் நான் கண்டிப்பா ஆக்ஷன் எடுத்திருப்பேன் ப்பா.
     உங்களுக்கு தெரியாதா?” என்றான் ஹர்ஷா ராஜசேகரிடம். இவர்கள் பேசுவதை கேட்டபடி வந்த பார்வதி “என் ஹர்ஷா குட்டிய பத்தி தெரியாதா ண்ணா. அவன் நியாயமா தான் இருப்பான்.
     அப்புறம் தப்புன்னு ஒரு விஷயத்தை பண்ணவே மாட்டான். அது அவனுக்கு தெரியவும் தெரியாது” என்று திடமாக சொன்னவர் ஹர்ஷாவின் புறம் திரும்பி
     “ஹர்ஷா குட்டி விக்ரம் உனக்கு ஒரு போட்டோ அனுப்பி வச்சானே பாத்தியாப்பா. உனக்கு புடிச்சிருக்கா?” என்றார் ஆர்வமாக.
     நடந்த பிரச்சினையில் விக்ரம் பேசியதை சுத்தமாக மறந்துவிட்டிருந்த ஹர்ஷா திருதிருவென முழித்தான். அவன் முழியிலே அவன் இன்னும் பார்க்கவில்லை என உணர்ந்த பார்வதி
     “அப்ப இன்னும் பாக்கலயா” என்றார் சட்டென்று உள்ளே சென்ற குரலில். அவரின் முக வாட்டத்தை பொறுக்காத ஹர்ஷா ” ஐயோ அத்த இருந்த டென்ஷன்ல மறந்துட்டேன்.
      இப்ப போய் பிரஸ் ஆகிட்டு உடனே அந்த பொண்ணு போட்டோவ தான் பாக்குறேன். ஓகேவா. கூல் கூல் அத்த” என்றுவிட்டு தன் அறைக்கு சென்றுவிட்டான்.
     அவன் செல்வதை பார்த்திருந்த பார்வதி மனதில் ‘கடவுளே இந்த பொண்ணு அம்சமா ஹர்ஷாவுக்கு நல்ல ஜோடியா இருக்கா. அவனுக்கு பிடிக்க வச்சிரேன். உனக்கு வேண்டிகிட்ட மாதிரி உன் கோயில்க்கு வந்து பொங்கல் வச்சு பூஜை பன்றேன்” என்று வேண்டுதலோடு அமர்ந்து விட்டார்.

Advertisement