Advertisement

     கண்ணில் கோப தீயுடன் கிளம்பிய ஹர்ஷா, நேராக சென்று நின்றது அவன் மருத்துவமனையில் மருத்துவராகப் பணிபுரியும் அகிலனின் முன் தான்.
     ரவுண்ட்ஸ் முடிந்து வந்த ஹர்ஷா தன் முன் இருந்த பெரிய தொலைக்காட்சியின் மூலம் மருத்துவமனை கண்காணிப்பு கேமராவை இயக்கினான்.
     விக்ரமிடம் பேசிவிட்டு நிமிர்ந்த ஹர்ஷாவின் கண்களில் அவன் மருத்துவமனையில் பணிபுரியும் டாக்டர் அகிலன் யாரோ ஒரு பெண் செவிலியின் கையை பிடித்து இழுத்துக் கொண்டிருந்த காட்சி தான் விழுந்தது.
     அங்கு நடப்பவற்றை கண்டு அந்த இடத்தை நோக்கி விரைந்து சென்ற ஹர்ஷா டாக்டர் அகிலனை கோபமாக முறைத்து நின்றான்.
     சற்று நேரம் முன்னே தன் ரவுண்ட்சை முடிந்த சென்ற ஹர்ஷா மீண்டும் வர வாய்ப்பில்லை என எண்ணிய அகிலன் இப்போது தன் முன்னே வந்து நிற்பவனை சற்றும் எதிர்ப்பார்க்கவே இல்லை.
     ஹர்ஷாவின் உக்கிர பார்வையில் அந்த செவிலியின் கையை விட்ட அகிலன் பயத்தோடு அவனை பார்த்திருந்தான்.
     “ரெண்டு பேரும் இன்னும் டூ மினிட்ஸ்ல என் ரூம்ல இருக்கனும்!” என்றுவிட்டு தன் அறை நோக்கி சென்று விட்டான். அந்த செவிலி பெண்ணும் ஹர்ஷா வந்த தெம்பில் அகிலனை காணாது ஹர்ஷாவின் பின்னே கிட்டத்தட்ட ஓடினாள்.
     டாக்டர் அகிலன் கடந்த இரண்டு ஆண்டுகளாக அருணாசலம் மருத்துவமனையில் தான் மருத்துவனாக பணியில் உள்ளான். நல்ல திறமையான மருத்துவன். பெரிதாக இதுவரை அவன் மேல் குற்றச்சாட்டு என எதுவும் எழுந்தது இல்லை.
     எனவே தான் அனைவரின் முன்பும் வைத்து விசாரிக்காமல் தனியே தன் அறைக்கு வரவழைத்து விசாரிக்க எண்ணினான் ஹர்ஷா.
     அந்த செவிலி பெண் கீதா வந்து சில நிமிடங்கள் கழித்தே வந்து சேர்ந்தான் அகிலன். வந்த இருவரையும் தன் முன்னே இருந்த நாற்காலியில் அமர சொன்ன ஹர்ஷா இருவரையும் பார்த்தவன் பேசாது அமைதி காத்தான்.
     சில நிமிட மௌனத்திற்கு பின் அந்த செவிலி பெண்ணே “டாக்டர் என்ன நடந்துச்சுன்னு நான் சொல்றேன்” என்று மெதுவாக ஆரம்பித்தாள்.
     கீதா டாக்டர் அகிலனுக்கு உதவியாக இருக்கும் செவிலிகளில் ஒருத்தி. நடுத்தர குடும்பத்தை சேர்ந்த பெண்‌. வெகு அமைதியான பெண்ணும் கூட. இந்த மருத்துவமனையில் சேர்த்து ஒரு சில மாதங்களே ஆகிறது.
     டாக்டர் அகிலனுக்கு கீதாவின் பொறுமை, பொறுப்பு, சாந்த குணம் பிடித்துவிட்டது. எனவே எப்போதும் தனக்கு உதவிக்கு அவளை தான் அழைப்பான். பக்கத்திலே இருப்பது போல் வேலை சொல்லுவான்.
     இப்போது சில நாட்களுக்கு முன் தான் அவளிடம் தன் காதலை தெரிவித்தான்‌. இது போல் காதல் திருமணங்களை தன் வீட்டில் ஏற்க மாட்டார்கள் என கீதாவும் மறுத்து வந்தாள்.
     ஆனால் அகிலன் அவளை விடாது தொல்லை செய்ய, இன்று அதன் அளவு எல்லை மீறியது. மதிய நேரம் யாரும் இல்லா ஐ.சி.யூ காரிடோரில் கீதாவை கண்ட அகிலன் மீண்டும் தன் காதலை ஏற்க வற்புறுத்தினான்‌.
     மறுத்து கிளம்ப பார்த்த கீதாவை கையை பிடித்து இழுத்தவன் திடீரென அனைத்து விட்டான். இதை சரியாக ஹர்ஷாவும் பார்த்து விட தாமதிக்காமல் அங்கே சென்றுவிட்டான்.
     அனைத்தையும் சொல்லி முடித்த கீதா தன் கண்களில் வழிந்த நீரை துடைத்துக் கொண்டாள்.‌ இப்போது அகிலனை காண அவன் தலை குணிந்து அமர்ந்திருந்தான்.
     “கீதா சிஸ்டர் சொன்னது எல்லாம் உண்மையா அகிலன்?” என்றான் ஹர்ஷா அகிலனிடம். அதற்கு அகிலன் “டாக்டர் ஹர்ஷா எனக்கு கீதாவ ரொம்ப பிடிச்சிருக்கு. சோ அதான் பேசிட்டு இருந்தேன்” என்றான்.
     “பேசிட்டு மட்டும் தான் இருந்தீங்களா அகிலன்” என்ற ஹர்ஷாவின் கூர்மையான எதிர்கேள்வியில் தடுமாறிய அகிலன் “ஐ லவ் ஹர் எ லாட் ஹர்ஷா” என்றான் தவிப்பாக.
     ஒரு தோல் குழுக்களுடன் “சோ வாட்?” என்ற ஹர்ஷா முறைத்து பார்த்திருந்தான். காதலிக்கிறேன் என்பவன் செய்யும் வேலையா இது என்று அவன் பார்வை கேட்டது.
     ஹர்ஷாவின் உடல் மொழியில் இருந்து தனக்கு சாதகமான தீர்ப்பு கிடைக்காது என எண்ணிய அகிலன் இப்போது “இங்க பாருங்க ஹர்ஷா நான் கீதாவ லவ் பண்றேன். அவகிட்ட நான் எப்படி வேனா பழகுவேன்.
     அதை கேட்க நீங்க யாரு. நீங்க வேனா இந்த ஹாஸ்பிடல் ஓனரா இருக்கலாம். பட் என் பர்ஸ்னல்ல தலையிட உங்களுக்கு எந்த ரைட்ஸ்ம் இல்லை. புரியுதா!
     நீங்க இதோட ஸ்டாப் பண்ணிட்டா உங்களுக்கு நல்லது” என்றான் சீரலாக. அகிலன் பேசியது கோபத்தை ஏற்றினாலும் தன் பொறுமையை பிடித்து வைத்தி பேசினான் ஹர்ஷா.
     “அகிலன் நீங்க மட்டும் லவ் பண்ணா பத்தாது. கீதாவும் உங்கள லவ் பண்ணியிருந்தா நான் இப்படி உங்கள உக்கார வச்சு பேசிட்டு இருந்திருக்க மாட்டேன்.
     கீதா தான் உங்கள லவ் பண்ணவே இல்லைன்னு சொல்றாங்களே. அப்புறம் எதுக்கு அந்த பொண்ணை போர்ஸ் பண்றீங்க. இதோட நீங்க ஸ்டாப் பண்ணிக்கோங்க. அவங்கல டிஸ்டர்ப் பண்ணாம இருந்தீங்கனா தான் உங்களுக்கு நல்லது.
     இந்த ஹாஸ்பிட்டல்ல ஒர்க் பண்ணனும்னா அவங்க ஒழுக்கமானவங்கலா இருக்கனும். இதை நீங்க வந்த பர்ஸ்ட் டேவே சொல்லிட்டேன். அப்படி இருந்தும் இந்த மாதிரி செஞ்சுருக்கீங்க.
     பொண்ணுங்க இந்த ஹாஸ்பிடல் வந்தா சேப்டின்னு நம்பி தான் அவங்களும் எங்க ஹாஸ்பிடல்க்கு வேலைக்கு வராங்க‌. அவங்க சேப்டிக்கு நாங்க தான் பொறுப்பு. சோ இதோட விட்டுட்டு உங்க வேலைய மட்டும் பாருங்க” என்றான் ஹர்ஷா அவனின் சீரலுக்கு பதிலாக.
     ஆனால் ஹர்ஷாவின் பதிலில் ‘இவன் யார் என்னை கேட்க’ என கோபமடைந்த அகிலன் “இங்க பாருங்க ஹர்ஷா. இது என் லைஃப். எனக்கு யாரை பிடிக்குதோ அவங்கல தான் லவ் பண்ண முடியும்.
     எனக்கு கீதாவ பிடிச்சிருச்சு. அவளுக்கு பிடிக்குதோ இல்லையோ அவ என்னை தான் லவ் பண்ணனும் கல்யாணமும் பண்ணனும்” என்றான் திமிராக.
     அந்த பெண் கீதா அகிலனின் சத்தத்தில் மிரண்டவள் பயத்தில் எழுந்து ஹர்ஷாவின் புறம் நகர்ந்து நின்றுக் கொண்டாள். அதை கண்டு கோபமான அகிலன் “ஏய் ஒழுங்கா இந்த பக்கம் வாடி.
     இப்ப எதுக்கு அங்க போய் நிக்கிற‌. என்னை பார்த்தா எப்படி தெரியுது உனக்கு?” என்றான் ஆவேசமாக அவளின் புறம் நகர்ந்தவாறு.
     “அகிலன் மரியாதையா அங்கையே நில்லுங்க. நான் இவ்ளோ தூரம் சொல்றேன் கொஞ்சம் கூட புரிஞ்சுக்காம நடந்துக்குறீங்க. கொஞ்சம் கூட பேசிக் மேனர்ஸ், பொண்ணுங்ககிட்ட கண்ணியமா நடந்துகனும் அப்படின்னு ஒரு ஒழுக்கம் இல்லை.
     நீங்களாம் டாக்டர்க்கு படிச்சு என்னத்த கத்துக்கிட்டீங்க. உங்கள லாஸ்டா வார்ன் பண்றேன். போய்ருங்க. டீசன்டா உங்க ஜாப் ரிசைன் பண்ணிட்டு போய்ருங்க.
     இல்லைனா டெர்மினேஷன் ஆர்டர் உங்கள தேடி வரும்” என்றான் ஹர்ஷா முடிவாக. ஹர்ஷாவின் ஒழுக்கம் இல்லை என்ற வார்த்தை அகிலனனை அதிகம் உசுப்பி விட “ஆமாம் டா நான் ஒழுக்கம் இல்லாதவன் தா.
     இவள என்னோடையே கூட்டிட்டு போறேன். நீ என்ன பண்றனு நானும் பாக்குறேன்” என்றவன் கீதாவின் அருகே வர, அவள் கையை பிடித்து இழுக்கும் முன்பே ஹர்ஷா வந்திருந்தான்‌.
     அவனை தடுக்கும் நோக்கோடு தள்ள அகிலன் தடுமாறி கீழே விழுந்தான். ஹர்ஷாவும் அவனை தள்ளிவிட வேண்டும் என வரவில்லை. அவனை தடுக்க முயற்சிக்க திடீரென கீழே விழுவான் என எதிர்ப்பாக்கவில்லை.
     கீழே விழுந்த அகிலனுக்கு ஹர்ஷாவின் மேல் கொலை வெறியே வந்தது. தன்னை ஒழுக்கம் கெட்டவன் என சொன்னதும் அல்லாமல் வேண்டுமென கீழே தள்ளியதாக எண்ணினான்.
     கோபமாக எழுந்தவன் விருட்டென வெளியே கிளம்பி விட்டான். மற்ற அனைவரிடமும் நன்றாக நடந்து கொண்ட அகிலன் தனக்கு பிடித்த ஒரே காரணத்திற்காக அந்த பெண்ணும் தன்னை விருப்ப வேண்டும் என எண்ணியது முட்டாள் தனமென நினைக்க மறந்தான்.
     அவன் சென்ற பின் ஹர்ஷாவை நோக்கி திரும்பிய கீதா ” ரொம்ப தேங்க்ஸ் டாக்டர். ரொம்ப டிஸ்டர்ப் பண்ணிட்டே இருந்தாரு. என்ன செய்யன்னு தெரியாம இருந்தேன்.
     ரொம்ப ரொம்ப தேங்க்ஸ் டாக்டர்” என்றாள் அழுகையுடன். “இங்க பாருமா இந்த மாதிரி பிராப்லம்னா நேரா என்கிட்ட வந்து கம்ப்லைன் பண்ணுங்க.
     அதை விட்டுவிட்டு இந்த மாதிரி ஆட்களை எல்லாம் சகிச்சுக்கிட்டு வேலை பார்க்கனும்னு எந்த அவசியமும் இல்லை. புரியுதா” என்றான் அவளுக்கு பதிலாக.
     பின் அவளுக்கு விடுப்பையும் கொடுத்து நன்கு ஓய்வெடுத்து விட்டு அவள் மனநிலை நன்றான பின் மருத்துவமனை வந்தால் போதும் என அனுப்பினான்.
     “ஓகே டாக்டர். தேங்க் யூ சோ மச். இந்த ஹெல்ப்ப என் லைப்ல நான் எப்பயும் மறக்க மாட்டேன்” என்ற கீதாவும் கிளம்பி விட்டாள். வந்த பிரச்சினை ஒருவழியாக நான்கு சுவற்றுக்குள் முடிந்து விட்டது என எண்ணிய ஹர்ஷா ஒரு பெருமூச்சை விட்டு தன் இருக்கைக்கு சென்று அமர்ந்தான்.
     ஆனால் அது இல்லை இனி தான் ஆரம்பம் என எண்ணும் படி அகிலன் தன் இல்லத்திற்கு வந்த பின் சுவற்றை வெறித்து அமர்ந்திருந்த காட்சி உணர்த்தியது.
     இப்போதும் தன் தவறை உணராத அகிலனோ ஹர்ஷாவின் மீது பெரும் வன்மத்தை வளர்த்துக் கொண்டு அமர்ந்து விட்டான். அவனை எப்படியும் மட்டம் தட்ட வேண்டும் என்ற எண்ணம் அவன் மனதில் மரமாய் வளர துவங்கியது.
————————————————–
     அறையில் சோகமே உருவாக அமர்ந்திருந்தார் வசுந்தரா. அந்த நேரம் அறைக்குள் வந்த கணபதி சோக சித்திரமாக அமர்ந்திருந்த வசுந்தராவை கண்டு “என்ன வசுமா இப்படி உக்காந்திருக்க” என்றவர் அவரின் நிலையை உணர்ந்தவராக
     “இன்னும் எத்தனை நாளைக்கு பழசயே நினைச்சு வருத்தப்பட்டுட்டு இருப்பமா. மறக்க முயற்சி பண்ணுமா” என்றவர் ஆதரவாக அவரின் தலையை வருடினார்.
     வேதனையோடு கணபதியை பார்த்த வசுந்தரா “எப்படிங்க இந்த நாள  மறக்க முடியும். மறக்க கூடிய விஷயமா. நம்மலால ஒரு உயிர் போயிருச்சே அது நான் எப்படிங்க மறக்கறது” என்றவர் முடிவில் அழுது விட்டார்.
     கணபதிக்கும் அந்த நினைவுகள் தான். ஆனால் அவரும் சோர்ந்து அமர்ந்து விட்டால் வசுந்தரா இன்னும் உள்ளுக்குள் நொந்து விடுவாரே. எனவே அவரின் வருத்தத்தை போக்கும் பொருட்டு வசுந்தராவை ஆதரவாக அனைத்து கொண்டார் கணபதி.
     அன்னை தந்தையை உணவுன்ன அழைக்க வந்த ரித்துவின் காதில் இவர்களின் வேதனையான புலம்பல்கள் வந்து விழுந்தது. உடனே ‘அப்படி யாரு இறந்து போயிருப்பாங்க’ என்ற எண்ணம் தான் மனதில் தோன்றியது.
     அதை அப்படியே விட்டவள் அவர்களை உணவுன்ன அழைக்க இருவரும் ஒருசேர மறுத்துவிட்டனர். ரித்து இவர்களின் செய்கையில் குழம்பியபடி அனுவிடம் இது குறித்து பேச வேண்டும் என எண்ணி சென்றாள்.
     இதே நேரம் மருத்துவ கல்லூரியின் அருகே இருந்த பார்க்கில் அபிமன்யுவின் கோப முகம் கண்டு திகைத்து போய் நின்றிருந்தாள் ஆதிரா!!
-மீண்டும் வருவான்

Advertisement