Advertisement

     “ஹாய் அத்தான்!! வாட் எ சர்ப்ரைஸ்! இன்னைக்கு ஈவ்னிங் வீட்ல இருக்கீங்க. எப்பவும் ஹாஸ்பிடல்ல தானே இந்த டைம் இருப்பீங்க. என்ன ஸ்பெஷல் அத்தான்?
     ஐ!! மாமா அப்பா எல்லாரும் இன்னைக்கு வீட்ல தான் இருக்கீங்களா. ஹை! செம்ம செம்ம!!” என ஹர்ஷாவிடம் கேட்டு விட்டு குதூகலமாக முடித்தாள் ஆதிரா.
     ஹர்ஷா என்றும் தன் பணி என்று வரும் போது மிகவும் அர்ப்பணிப்புடன் தான் செயல்படுவான். எனவே அவன் வீட்டில் இருக்கும் நேரத்தை விட மருத்துவமனையில் இருக்கும் நேரம் அதிகம்.
     இன்று அபியும் அம்முவும் கல்லூரி முடித்து வந்த நேரம் ஹர்ஷா வீட்டில் இருக்கவும் இருவரும் மகிழ்ந்து விட்டனர். அவன் அருகே அமர்ந்து கொண்டு கதை பேச துவங்கி விட்டாள் அம்மு.
     “சும்மா தான் டா அம்மு. இன்னைக்கு வொர்க் அவ்ளோவா இல்ல. அதான் வீட்டுக்கு வந்துட்டேன்” என்ற ஹர்ஷா அபி அம்முவிடம் கல்லூரி முதல் நாள் எப்படி சென்றது என கேட்டுக் கொண்டிருந்தான்.
      அப்போது அவன் முகம் அடிக்கடி ஏதோ யோசனைக்கு செல்லவும் பேசவுமாக இருக்க பேச்சு சுவாரசியத்தில் அம்மு அதை கவனிக்கவில்லை.
     ஆனால் அதை கண்டு கொண்ட அபி “ண்ணா.. என்ன ரொம்ப நேரமா எதோ திங்க் பண்ணிட்டு இருக்கீங்க. என்ன விஷயம் ண்ணா..” என்றான் கேள்வியாக.
     அவன் முகத்தை வந்ததில் இருந்து பார்த்திருந்த அருணாசலம் ராஜசேகர் கூட என்னவென தான் யோசித்து இருந்தனர். அபி சட்டென கேட்டுவிடவும் அவர்களும் ஹர்ஷாவை பார்த்தனர்.
     சிறிது நேர மௌனத்திற்கு பின் “ம்ஹீம்..” என மூச்சை இழுத்து விட்ட ஹர்ஷா “எல்லாரும் வந்த அப்புறம் பேசலாம்னு தான் வெய்ட் செஞ்சேன்.
     ஓகே அபி நீ போய் அத்தையை கூட்டி வா நான் தாத்தாவை கூப்புடறேன். பேசனும்” என்றதோடு முடித்தவன் தன் தாத்தாவின் அறை நோக்கி சென்றான்.
     அருணாசலம் குடும்பத்தின் அனைத்து உறுப்பினர்களும் விக்ரமை தவிர்த்து அங்கே அமர்ந்திருந்தனர். “தாத்தா ஒரு முக்கியமான விஷயம் பேசலாம்னு தான் எல்லாரையும் வரவச்சேன்.
     விக்ரம நான் தான் ஒரு இடத்துக்கு அனுப்பி வச்சிருக்கேன். அவன் இப்ப வந்துருவான். நான் அதுக்குள்ள உங்ககிட்ட விஷயத்தை சொல்லிடறேன்” என்று ஆரம்பித்தான்.
     என்னவாக இருக்கும் என அருணாசலம் தன் மகன் மற்றும் மருமகனை பார்த்தார். அவர்களும் எதுவும் தெரியாது என்பது போல் தங்கள் உதட்டை பிதுக்கினர்.
      மீண்டும் அவர்கள் ஹர்ஷாவை கண்ணில் கேள்வியுடன் பார்த்தனர். அவர்களை பார்த்துக் கொண்டே “தாத்தா நேத்து கோமதி அத்தை எனக்கு போன் பண்ணிருந்தாங்க” என ஆரம்பிக்கவும்
     “அவ எதுக்கு உனக்கு போன் பண்ணா‌. அதான் அவளோட பங்கு எல்லாம் வாங்கிட்டு நாம வேணாம்னு போய்டால்ல. அப்பறம் என்ன இப்ப திரும்பவும் போன் பண்றா!” என்று கோபமாக திட்டினார் பார்வதி.
     அதையே தங்கள் பார்வையில் வைத்து பார்த்தனர் அருணாசலமும் ராஜசேகரும். “அத்தை டென்ஷன் ஆகாதீங்க. நான் சொல்றத முழுசா கேட்டுட்டு அப்புறம் உங்க ஒப்பீனியன சொல்லுங்க” என்றான் ஹர்ஷா அமைதியாக.
     பின் “கோமதி அத்தை போன் பண்ணி ரொம்ப பீல் பண்ணாங்க தாத்தா. ‘என்ன தான் சொத்து கேட்ருந்தாலும் என்னை எதுக்கு அப்படியே மொத்தமா தள்ளி வைச்சீங்க’ன்னு ஒரே அழுகை.
     அன்ட் இப்ப நம்ம ஸ்ரேயாக்கு மேரேஜ் பிக்ஸ் பண்ணிருக்காங்கலாம். தாய் மாமாவா அப்பா வந்து நிக்கனும் அப்படின்னு ஆசைப்படுறாங்க.
     தாய் வீடுன்னு நம்ம ஃபேமிலில எல்லாரும் இருக்கனும்னு ரொம்ப கேட்டுக்கிட்டீங்க. அப்புறம் இன்னைக்கு நம்ம வீட்டுக்கு வந்து இன்வைட் பண்ணுறேன்னு சொன்னாங்க.
     நானும் யோசிச்சு பாத்தேன் தாத்தா. அவங்களுக்கும் தாய் வீடுன்னு இருக்கிறது நாம தான். சோ வர சொல்லிட்டேன். அவங்கல பிக்கப் பண்ண தான் விக்ரம் ரயில்வே ஸ்டேஷன் போயிருக்கான்” என்று முடித்தான் ஹர்ஷா.
     “அவளுக்கு நாம எதுவும் செய்ய மாட்டோன்னு நினைச்சு தானே அவ சொத்து குடுத்தாதா ஆச்சுன்னு அப்பாட்ட வம்பு பண்ணி சொத்த வாங்கிட்டு போனா.
     இப்ப என்ன தாய் வீடு வேணும். தாய் மாமன் வேணும்னு பேசுறா. அப்படி நாம வேணும்னு நிஜமாவே நினைக்கிறவளா இருந்தா கல்யாணம் பிக்ஸ் பண்ணிட்டு வந்தா சொல்வா.
     நீ எதுக்கு ஹர்ஷா குட்டி அவள வீட்டுக்கு வர சொன்ன. நீங்களே பாத்துக்கங்க அப்படினு மூஞ்சில அடிச்ச மாதிரி சொல்ல வேண்டியது தானே” என்று படபடவென பொறிந்து தள்ளினார் பார்வதி.
     “அத்தை கூல். ஏன் இவ்ளோ டென்ஷன். கொஞ்சம் நான் சொல்றத கேளுங்க. கோமதி அத்தை நாம‌ எல்லாம் ஒன்னா அவங்க அங்க தனியா இருக்கதால இன்செக்யூரா பீல் பண்ணி இருக்கலாம் இல்ல‌.
     நாம‌ அவங்களுக்கு எதுவும் குடுக்காம ஏமாத்திருவோம்னு நினைச்சிருக்கலாம். இல்லை அங்க மாமா வீட்ல எதுவும் பிராப்லம் வந்துருகலாம்.
     அதுனால கூட அவங்க சொத்தை கேட்டுருக்லாம்ல அத்த‌. நாமும் கொஞ்சம் இப்படி யோசிச்சு பாக்கலாமே அத்த” என்றான் ஹர்ஷா பார்வதியை சம்மதிக்க வைக்க வேண்டும் என்ற எண்ணத்தில்.
     “நீ சொல்ற மாதிரி வச்சுக்கிட்டாலும் நாம தான் அவகிட்ட பேசாம இருந்தோம். நாம‌ வேணும்னு நினைக்கிறவ அவளா நம்மட்ட பேசிருக்னும் தானே.
     இதுதான் சாக்குன்னு அவளும் பத்து வருஷமா பேசாமையே இருக்கா. இப்ப பொண்ணு கல்யாணம் பண்றப்ப மட்டும் நாம‌ தேவைப்படுறோம்” என்ற பார்வதிக்கு மனதே ஆறவில்லை.
     மீண்டும் பார்வதியே “அண்ணா நம்ம வீட்டுல ஹர்ஷா இருக்கப்ப எப்படி அவளுக்கு வேற சம்மந்தம் பாக்க மனசு வந்துச்சு. நாம‌ அவளுக்கு வேணும்னு பேசறவ பொண்ணுக்கு மாப்பிள்ளை பாக்குறோம் அப்படின்னு சொல்ல வேண்டியது தானே.
     நாம ஹர்ஷாக்கு கேட்ருப்போம்ல. அப்படி அவ பாத்த மாப்பிள்ளை நம்ம ஹர்ஷாவ விட ரொம்ப பெரிய ஆளா என்ன. இப்ப மட்டும் பொண்ணுக்கு தாத்தா வேணும் தாய்மாமா வேணும்னு வர தெரியுது” என தன் ஆதங்கத்தை கொட்டினார்‌.
     பார்வதி பேச்சில் இருந்த நியாயம் அனைவருக்கும் புரியவே செய்தது. அருணாசலம் ராஜசேகர் இருவருக்குமே இதே எண்ணம் தான். ஹர்ஷாவிற்கும் அது புரிந்தது தான்.
     எனவே “நீங்க சொல்றத நானும் யோசிக்க தான் செஞ்சேன் அத்த‌. கோமதி அத்தைக்கு வேணா நாம தேவையில்லாம இருக்கலாம். சூழ்நிலைக்காக நம்மல தேடி வராங்க அது எனக்கும் புரியுது.
     ஆனா நாம நம்ம கடமைய சரியா செய்யனும். என்னதான் இருந்தாலும் ஸ்ரேயாவுக்கு தாய்மாமாவா இருந்து அப்பா எல்லா கடமையையும் செய்யனும்.
     அவங்க அப்படி சுயநலமா இருக்காங்க அப்படிங்கறதுக்காக நாம நம்ம கடமைல இருந்து தவற கூடாது. என்ன தாத்தா நாம சொல்றது சரிதானே.
      நாம ஸ்ரேயாக்கு சீர் செய்றோம்ல” என்றவனின் தொனியே நாம் செய்தாக வேண்டும் என்பதை போல் இருந்தது.
     ஹர்ஷா முடிவு செய்து விட்டான் என எண்ணி “சரி ஹர்ஷா” என்று அருணாசலமும் ஒரு வார்த்தையில் முடித்து கொண்டார்.
      பார்வதிக்கும் ராஜசேகருக்கும் விருப்பம் இல்லை என்றாலும் ஹர்ஷா கூறிய கடமை என்ற வார்த்தை அவர்களையும் ஒத்துக் கொள்ள வைத்தது.
     அதற்கே அவன் அதை அழுத்தி அழுத்தி கூறினான். இவர்கள் பேசி முடிக்கவும் சிறிது நேரத்திலே விக்ரம் கோமதி மற்றும் அவர் கணவர் மோகன் என இருவருடன் வந்து விட்டான்.
     அவர்களை ஹர்ஷா சொன்னது போல் கவனித்து பத்திரிகையை வாங்கிக் கொண்டனர். ஆனால் சற்று விலகியே இருந்தனர். ஹர்ஷாவோ வீட்டினரிடம் பேசியதுடன் தன் வேலை முடிந்துவிட்டது என மருத்துவமனை சென்று விட்டான்.
     கோமதிக்கு தன் குடும்பத்தின் ஒதுக்கம் நன்றாக புரிந்தது. ஆனால் அவருக்கு அவரின் பெண் திருமணம் சிறப்பாக நடந்தால் போதும். அதற்கு மட்டும் இவர்கள் வந்து சீர் செய்தால் போதும் என அனைவரையும் அழைத்து அன்று தங்கிவிட்டு அடுத்த நாளே கிளம்பி விட்டார்.
     பார்வதி தான் அவர் சென்ற பின் அவரை திட்டிக் கொண்டும் புலம்பிக் கொண்டும் இருந்தார்‌ ஹர்ஷாவிறகு பெண் கொடுக்கவில்லை என.
     அதை பார்த்த ஹர்ஷாவிற்கு சிரிப்பாக வந்தது. “ஹையோ அத்த. ஏன் இப்படி புலம்பிக்கிட்டே இருக்கீங்க. கூல் அத்த” என்ற ஹர்ஷாவிற்கும் தன்னையும் தன் தம்பியையும் தன் பிள்ளைகளாக எண்ணும் அத்தையை பார்த்து மனது நிறைந்து தான் போனது.
     இப்படி நாட்கள் செல்ல. கோமதி சென்ற ஒரு வாரம் கழித்து பார்வதி ஆரம்பித்தார். அன்று ஞாயிற்றுக்கிழமை ஆதலால் சிறியவர்கள் அனைவரும் சாவகாசமாக எழுந்து மெதுவாக சாப்பிட வருவர்.
     எனவே பெரியவர்கள் சீக்கிரம் உண்டு முடிப்பது வழக்கம். ஏனெனில் உண்டு அவர்கள் மாத்திரை எடுக்க வேண்டுமே. ஒரு வேளை மாத்திரை எடுக்க மறந்தால் யார் ஹர்ஷாவின் கோபத்திற்கு ஆளாவது.
      எனவே பெரியவர்கள் அனைவரும் உண்டு கொண்டிருந்தனர். அப்போது “அப்பா அண்ணே உங்க ரெண்டு பேர் கிட்டையும் ஒரு முக்கியமான விஷயம் பேசணும்.
      சாப்பிட்டு ஹால்க்கு வாங்க” என்றவர் தன் கணவரை பார்த்து “நீங்க போய் ஹர்ஷாவ கூப்பிட்டு வாங்க பேசணும்” என்றார்.
     அவரின் தீவிரமான முகமே சொல்ல போகும் விஷயம் பெரியது என சொல்லாமல் சொல்லியது. எனவே அனைவரும் வேகமாக உண்டு சென்று ஃசோபாவில் அமர்ந்து கொண்டனர்.
     “குட் மார்னிங் அத்த‌. என்ன மாமா எதோ நீங்க பேச கூப்டதா சொன்னாரு. என்ன விஷயம் அத்த” என்றான் ஹர்ஷா அவனும் நாற்காலியில் அமர்ந்த பின். “நீயும் உக்காரு விக்ரம்” என்றான் தன்னுடன் வந்த விக்ரமை பார்த்து.
     பெரியவர்கள் அனைவரும் பேச அமர்ந்திருப்பதை கண்ட அவர்களின் பின்னால் வந்த அபியிடம் அம்மு “என்ன அபி பொதுக்குழு கூடியிருக்கு. என்னவா இருக்கும்?” என்றாள் ஆர்வமாக.
     அவளை ஒரு பார்வை பார்த்த அபி அங்கிருந்தவர்களை பார்த்து “தெரியலை அம்மு. வா போய் பாக்கலாம்” என்று முன்னே சென்றான்.
     “ம்மா.. என்ன எல்லா பேச வந்துருக்கீங்க. எங்கள மட்டும் கூப்பிடவே இல்ல” என்று சிறுப்பிள்ளையாய் புகார் வாசித்தவள் சென்று ஒரு இருக்கையில் அமர்ந்து கொண்டாள்.
     அதை பார்த்த அனைவர் முகத்திலும் சிறு புன்னகை வந்தது. ஆனால் பார்வதி மட்டும் அம்முவை முறைத்து “கொஞ்ச நேரம் சும்மா இருக்கியா” என்றார் காட்டமாக.
     ‘ஆஹா மம்மி சீரியஸ் மோட்ல இருக்கும் போல‌. எதாவது பேசுனாலே தூக்கி அடிச்சிரும் போலையே. வாய மூடிக்கிட்டு கம்முன்னு உக்காந்துரு அம்மு” என மனதிற்குள் பேசியவள் நல்ல பிள்ளை போல் அமர்ந்து கொண்டாள்.
      அவளின் செய்கைகளை பார்த்து சிரித்துக் கொண்டிருந்த ஹர்ஷா பார்வதி கூறிய செய்தியை கேட்டு திடுக்கிட்டு திரும்பினான். அதை கேட்ட வீட்டினருக்கு பார்வதி என்ன கூறினார் என கிரகித்துக் கொள்ளவே சில நிமிடம் பிடித்தது.
     இதில் அந்நேரம் வீட்டிற்கு வந்த நபரை கண்டு ஹர்ஷாவின் ரத்த அழுத்தம் ஏறியது என்று சொன்னால் அது மிகையாகாது. ஆனால் அவன் அதற்கு எதிர்வினை ஆற்றும் முன்னே பார்வதி தான் நினைத்ததை சாதித்துக் கொண்டார்.
     அதே நேரத்தில் தன் தந்தை பேசும் கடுஞ்சொற்களை கேட்டு விழியில் வழிந்த நீரை கூட துடைக்க தெம்பில்லாமல் நின்றுக் கொண்டிருந்தாள் அனுக்ஷ்ரா.
     அவள் சுதாரிக்கும் முன்னே நிலைமை கை மீறி செல்லும் என அவள் என்ன கனவா கண்டாள். விழியில் வழியும் கண்ணீரோடு இனி தன் தந்தையின் முடிவு என்னவாக இருக்குமோ என்ற அச்சத்துடன் விஸ்வநாதனையே பார்த்திருந்தாள் அனுக்ஷ்ரா.

Advertisement