Advertisement

     ஹர்ஷாவிடம் தன் வாழ்க்கையில் நடந்த நிகழ்வுகளை ஷாலினி சொல்லி கொண்டிருக்கும் போது போலீஸ் அதிகாரிகளும் வந்து சேர்ந்தனர்.
     அவர்களை கண்டு பயந்த ஷாலினியிடம் “நீங்க சூசைட் அட்டெம்ட் செஞ்சதால நாங்க போலீஸ்க்கு இன்பார்ம் பண்ணிட்டோம் மா. இட்ஸ் ஜட்ஸ் எ பார்மாலிட்டி பார் அவர் ஹாஸ்பிடல் சேப்டி.
     சோ நீங்க பயப்பட வேண்டாம். இன் பேக்ட் இவங்க உங்களுக்கு ஹெல்ப் தான் பண்ணுவாங்க. அன்ட் யு கண்டினுயு மா” என்று முடித்தான்.
     சிறிது தயக்கத்திற்கு பின் “திரீ இயர்ஸ் நாங்க லவ் பண்ணோம் டாக்டர். உயிருக்கு உயிரா லவ் பண்ணோம். ஃபைனல் இயர் வந்தோம். கேம்பஸ்ல நாங்க ரெண்டு பேரும் ஒரே கம்பெனிக்கு செலெக்ட் ஆகிட்டோம்.
     வருண் எங்க ஃபைனல் இயர் எக்சாம் முடிஞ்ச அப்புறம் கல்யாணம் பண்ணிகலாம்னு சொன்னான் டாக்டர். தென் அப்படியே நாங்க ரெண்டு பேரும் செலக்ட் ஆன கம்பெனிக்கு பெங்களூர் போலான்னு சொன்னான்.
     அதை அவன் ரொம்ப சீரியசா சொன்னான். எனக்கு அப்போ புரியலை. ஏன் இதை இவ்ளோ சீரியஸ் இஸ்யூ ஆக்கனும்னு. பட் அவன் சொன்னது சரின்னு இப்ப தோனுது டாக்டர்” என சிறிது வருந்தினாள்.
     பின் “லாஸ்ட் செமஸ்டர் எக்சாம் முன்னாடி எங்களுக்கு பேர்வல் குடுத்தாங்க காலஜ்ல. அன்னைக்கு வருண் எங்க பிரண்ட்ஸ் எல்லாருக்கும் அவனோட வீட்ல பார்ட்டி தரேன்னு இன்வைட் பண்ணிருந்தான்.
     அன்ட் அங்க போய் பார்த்தப்ப தான் தெரிஞ்சது அது அவங்க கெஸ்ட் ஹவுஸ்னு‌. அப்போ தான் வருணோட ஸ்டேட்ஸ் கூட எனக்கு தெரிஞ்சது. அதுவரைக்கும் அவன் ஒரு பணக்கார வீட்டு பையன்னு எனக்கு தெரியாது.
     அவன் அதை யார்க்கிட்டையும் காட்டிக்காம நார்மலா தான் பழகுவான்‌. எங்க பிரண்ட்ஸ்க்கு கூட ஷாக் தான் அவன பத்தி தெரிஞ்ச அப்புறம்” இது வரை தடையின்றி பேசியவள் இப்போது தயக்கமாக தன் பெற்றோரை ஏறிட்டாள்.
     பின் தன் தலையை குனிந்தவாறு “அன்னைக்கு நான் கொஞ்சம் எமோஷனலா இருந்தேன் அவன் ஸ்டேட்ஸ் நினைச்சு. அவன் என்னை ரொம்ப கண்சோல் பண்ணுனான். அப்போ எங்கள அறியாமையே தப்பு பண்ணிட்டோம்.
     ஆனா நடந்தத நினைச்சு அவனும் ரொம்ப பீல் பண்ண ஆரம்பிச்சான். கண்டிப்பா சீக்கிரம் மேரேஜ் பண்ணிக்கலாம்னு சொன்னான். நான் தான் கொஞ்ச நாள் ஆகட்டும்னு சொன்னேன். அப்புறம் எங்க எக்சாம்ஸ் நடந்துச்சு.
     சோ நானும் கவனிக்காம விட்டுட்டேன். இப்ப ஒன் வீக் முன்னாடி தான் நானும் நோட் செஞ்சேன். அப்ப தான் நான் பிரக்னென்ட்னு கன்பார்ம் பண்ணுனேன். ரொம்ப ஷாக்கிங்கா இருந்துச்சு எனக்கு.
      நான் உடனே அதை வருண்க்கு சொல்ல கால் செஞ்சேன். நான் சொன்னதை கேட்ட அப்புறம் வருண் உடனே மேரேஜ் பண்ணிக்கலாம்னு அரேன்ஜ் பண்றேன்னு சொல்லி என்னை காம்ப்ரமைஸ் பண்ணிட்டு போனை வச்சான்.
     அதுக்கு அப்புறம் அவன் போன் பண்ணவே இல்லை. நான் செஞ்சாலும் எடுக்கல. எங்க பிரண்ட்ஸ் அவன் வீட்டுக்கு போய் பார்க்க டிரை செஞ்சாலும் அவன மீட் பண்ண முடியலை.
     என்ன பண்றதுன்னு பயந்துட்டு இருந்தேன். அப்பதான் ஒரு மூனு நாள் முன்னாடி வருணோட வீட்ல இருந்து அவங்க அப்பா எனக்கு கால் பண்ணுனாங்க. அவனுக்கு அவங்க யாரோ ரிலேடிவ் பொண்ணோட மேரேஜ் பிக்ஸ் பண்ணிட்டதா சொன்னாரு.
     அன்ட் அவனோட லைப்ல என்ன தலையிட கூடாதுன்னு மிரட்டுனாறு. அப்படி எதாவது செஞ்சா என் அப்பா அம்மாவ எதாவது செஞ்சுருவோம்னு மிரட்டுனாங்க. காசு… காசு… தரேன்னுனு….” இதுவரை கோர்வையாக சொல்லியவள் கடைசி வரியை கூறும் போது அவள்  விழிகளில் நீர் வழிந்தது.
      கேட்ட அனைவருக்கும் விஷயம் ஓரளவுக்கு புரிந்து விட்டது. பிரச்சினை செய்வது அந்த பையனின் பெற்றோர் என. அதை உறுதி செய்ய “வருண் எதாவது அவங்க பேரன்ட்ஸ் மூலமா செஞ்சுருக்க வாய்ப்பிருக்கா?” என்றான் ஹர்ஷா.
     சட்டென பதில் வந்தது அவளிடமிருந்து. “கண்டிப்பா இல்லை டாக்டர். அவன் அப்படிலாம் பண்ண மாட்டான். அவன் பேசறத அவனோட பேரன்ட்ஸ் கேட்டுட்டாங்க போல.
     அவனை யாருக்கும் தெரியாம அவனோட அப்பா தான் எங்கையும் மறச்சு வச்சுருப்பாங்கன்னு நினைக்கிறேன் டாக்டர். ஆனா அவர் என்னை மிரட்டவும் எனக்கு என்ன செய்யன்னு அப்ப புரியல.
     என் அப்பா அம்மாக்கு வெளிய என் ரிலெட்டிவ்க்கு தெரிஞ்சா என் பேரன்ட்ஸ்க்கு தான் கஷ்டம். ஒரு வேளை என் பேபிய கலைக்க சொன்னா‌? ஆனா வருணோட எங்க இந்த குழந்தைய அழிக்க எனக்கு மனசு இல்லை.
     சப்போஸ் நான் குழந்தைய பெத்துக்கனும்னு டிசைட் செஞ்சா, அதை ஆர்பனேஜ்ல தான் விட யோசிப்பாங்க என் அப்பா அம்மா. என் அப்பா அம்மாக்கும் அவமானம். சோ அந்த டைம் எனக்கு என்ன செய்யன்னு தெரியலை.
     அதான் நான் சூசைட் பண்ணிக்கலாம்னு டிசைட் செஞ்சேன். என்னோட என் பேபியும் கஷ்டபடாதுன்னு நினைச்சு இப்படி பண்ணிட்டேன் டாக்டர்” என்று முடித்தவள் தன் கண்ணீரை துடைத்தாள்.
     அவள் சொல்லி முடித்தவுடன் சிறிது நேரம் அமைதியில் கழிந்தது. அந்த நேரத்தில் எதையோ யோசித்து முடிவு செய்து விட்டான் ஹர்ஷா. இப்போது அந்த பெண் ஷாலினியிடம் வார்த்தைகளை கவனமாக போட்டு பேச துவங்கினான்‌.
     “இங்க பாரு மா, நீ சொன்னது எல்லாம் வச்சு பார்த்தா அந்த பையன் மேலையும் மிஸ்டேக் இருக்க மாதிரி தெரியலை தான்‌. ஆனா நீங்க செஞ்ச இந்த விஷயம் ரொம்ப தப்பு.
     பிஃபோர் மேரேஜ்….” என இழுத்தவன் “ஓகே லீட் இட். இனிமே அதை பத்தி பேசி நோ யூஸ். அன்ட் இப்ப நீ சொன்ன டீடெயில்ஸ் வச்சு நாங்க போலீஸ் சப்போர்டோட போய் அந்த பையன ரெஸ்கூயூ பண்ணா உனக்கு ஓகே தானே.
      ஒருவேளை அங்க நாங்க போகுறப்ப அந்த பையன் மாத்தி பேசி, உன்னை யாருனே தெரியாது அப்படின்னு சொன்னா நீ என்ன பண்ணுவ மா?” என்றவன் கூர்மையாக அவளை தான் பார்த்திருந்தான்‌.
     “கண்டிப்பா அவன் அப்படி சொல்ல மாட்டான் டாக்டர். அவன் உங்களோடவே வந்துருவான். வேனும்னா பாருங்க நான் சொல்ற மாதிரி தான் நடக்கும்” என்றாள் உறுதியாக.
     அந்த உறுதியை கண்டு ஹர்ஷா தனக்கு தெரிந்த வகையில் ஒரு முடிவை எடுத்து அதை நடத்தி காட்டியும் விட்டான்.
____________________________________________
      அந்த மருத்துவ கல்லூரி மரத்தடி கல் மேடைகள் அமளி துமளி பட்டுக் கொண்டிருந்தது. இன்று கல்லூரியின் முதல் நாள் என்பதால் முதல் வருட மாணவர்களை சீனியர் மாணவர்கள் வைத்து செய்து கொண்டிருந்தனர்.
     அதில் ஒரு குழுவில் வந்த ஒருவரின் சத்தத்தை கேட்டு சட்டென திரும்பிப் பார்த்தான் அபிமன்யு. அந்த குரலுக்கு சொந்தக்காரியான ஆதிரா தன் நண்பர்களோடு நின்று முதலாம் ஆண்டு மாணவர்களை வம்பிலுத்து கொண்டிருந்தாள்.
     அந்த குழுவில் இருந்தது மூன்றே பேர் தான் – ஆதிரா, சந்தியா மற்றும் அவர்கள் நண்பன் விக்கி. இந்த மூவர் கூட்டணி தான் நின்று கொண்டிருந்தனர்.
     அதை கண்ட அபி அந்த மரத்திற்கு சற்று அருகில் போய் நின்று அவள் என்ன செய்கிறாள் என பார்க்க தொடங்கினான்.
      அங்கே ஒரு முதலாம் ஆண்டு மாணவனை அழைத்தவள் “நீ எதாவது ஒரு பாட்டு பாடி காட்டு பாப்போம்” என்று கூறி சிரித்துக் கொண்டிருந்தாள்.
      “ஐயோ! அக்கா எனக்கு பாட்டுலாம் பாட தெரியாது. அப்புறம் நான் பாடுனா நீங்களாம் அப்படி தெரிச்சு ஓடிருவீங்க. வேற எதாவது சொல்லுங்க செஞ்சுட்டு போறேன்” என்றான் அந்த மாணவன் பதிலாக.
      அந்த மாணவன் தன்னை நக்கல் செய்வதை புரியாத ஆதிராவும் “அப்ப சரி நீ டான்ஸ் ஆடிட்டு போ” என தன் கைப்பேசியில் ஒரு பாட்டை போட்டாள்.
     ‘இந்த லூசுக்கு அவன் கிண்டல் பண்றது கூட புரியல. இதுல மேடம் ரேகிங் பண்ண இறங்கிட்டாங்க. இவள…’ என தன் தலையில் அடித்து கொண்டவன் அங்கே என்ன நடக்கிறது என பார்த்தான்.
     அவனும் அப்படி இப்படி என தன் உடலை அசைக்க, பார்க்க முடியவில்லை ஆதிராவாலும் அவள் நண்பர்களாலும். “ஏஏ..ஏ… தம்பி தம்பி நீ பாடவும் வேணாம்!! ஆடவும் வேணாம்!!
      நீ பண்றது எங்களுக்கு தான் பணிஷ்மென்ட் மாதிரி இருக்கு. நீ அப்படியே கிளாஸ பாத்து ஓடிடு” என்று அருகில் இருந்த ஆதிராவின் நண்பன் விக்கி அந்த மாணவனை துரத்தி விட்டான்.
     பின் ஆதிரா தான் துவங்கினாள். “என்னடி சந்து இது. போன வருஷம் நம்ம சீனியர்லா நம்மல எப்படி வச்சு செஞ்சுதுங்க.
     ஆனா நமக்கு மாட்டுற ஜூனியர் எல்லாம் இவ்ளோ மொக்கை‌ பீசா வருதுங்க” என்று தன் தோழி சந்தியாவிடம் அலுத்துக் கொண்டாள்.
     அதற்கு விக்கி “ஹே ஆதி! பசங்க மொக்கை இல்லை. நமக்கு தான் ரேகிங் பண்ண தெரியலை. அந்த பையன் இவ்ளோ நேரம் நம்மள தான் நக்கல் பண்ணிட்டு போறான்.
     அது கூட புரியாம பாடு ஆடுன்னு சொல்லிட்டு இருக்க. உன்னை என்ன பண்ண ம்ம்.. இதுக்கு தான் சொன்னேன் நமக்கு இதுலாம் செட்டே ஆகாது.
     வழக்கம் போல காலேஜ் வந்தோமா; கேன்டீன் போனோமா; சமோசா தின்னமா; அப்படியே கிளாஸ பாத்து போனோமான்னு இருக்கறத விட்டுட்டு எதுக்கு இப்படி காலைலையே பல்பு வாங்கிட்டு இருக்கோம்.
     இப்பவாவது ஒழுங்கா நான் சொல்றத கேட்டு என் பின்னாடியே கிளாஸ்கு வந்து சேருங்க. அதை விட்டு ரேகிங் பண்றேன் ரேசிஸ் போறேன்னு சுத்திட்டு இருந்தீங்க!
     அப்புறம் பர்ஸ்ட் இயர் பசங்கலாம் எங்கள ரேகிங் பண்றாங்கன்னு வந்து ஒப்பாரி தான் வக்கினும். என்ன புரியுதா!! மரியாதையா அப்படியே வாங்க கிளாஸ்கு போலாம்” என்று நீண்ட உரையை நிகழ்த்தினான் அவர்களின் நண்பன் விக்கி.
     அவன் கூறியதை கேட்டு அசடு வழிந்த ஆதிரா “சரி நமக்கு தான் ரேகிங் பண்ண தெரியலை விடு விடு. ஆனாலும் நாம சீனியர் தானே! நம்மல எப்படி அவன் கிண்டல் பண்ணலாம்.
     அவன கூப்டு டா திட்டி விடலாம்” என்றாள். “ஏ லூசு! அவன் நம்மல கிண்டல் பண்ணிட்டு போறான்‌. திரும்ப கூப்பிட்டு மறுபடியும் பல்ப் வாங்கனுமா.
     பேசாம இருந்திருந்தா அவன் சீனியர்ன்னு ஏதோ கொஞ்சம் மரியாதையாவது தந்துருப்பான். இப்ப நம்ம பண்ணுன கூத்துல நம்மல பேக்குன்னு நெனச்சிட்டு போய்ருப்பான்.
     திரும்ப கூப்பிட்டா நம்மல லூசுன்னே கண்பார்ம் பண்ணிட்டு போய்ருவான்‌. கொஞ்ச நஞ்ச மரியாதைய காப்பாத்தவாவது இப்படியே கிளம்புனா நல்லது.
     இல்லனா என்னமோ பண்ணுங்க. நான் கிளம்புறேன்” என சொல்லிக் கொண்டே செல்ல ஆரம்பித்தான்.
     விக்கி கூறிய உண்மை புரிய “சே சீனியர் ஆகியும் ஒரு ரேகிங் கூட பண்ண முடியலையே” என தங்கள் நிலையை நொந்து கொண்டு வகுப்பறையை நோக்கி நகர்ந்தனர் தோழிகள் இருவரும்.
      இதையெல்லாம் மரத்தின் பின் நின்று பார்த்துக் கொண்டிருந்த அபிக்கு சிரிப்பை அடக்க முடியவில்லை.
     ஆதிராவின் அப்பாவி தனத்தை ஒரு வித ரசிப்புடன் பார்த்திருந்தவன் “அடியே என் அத்த மகளே!! சீக்கிரம் வளந்துரு செல்லம்! இன்னும் குழந்தையாவே இருக்கியே டா அம்மு!!
     நீ அட்லீஸ்ட் யூ.ஜீ முடிச்சா தான் அண்ணா உன்னை பாக்கவே விடுவாரு. இதுல கல்யாணம்லா…” என எண்ணி பெருமூச்சு ஒன்றை வெளியிட்டு, ஆதியை எண்ணி முகத்தில் மலர்ந்த சிரிப்புடன் தன் வகுப்பறைக்கு சென்றான் அபிமன்யு அருணாசலம்!!
-மீண்டும் வருவான்

Advertisement