Advertisement

     வெகு நாட்கள் இல்லை வெகு வருடங்களுக்கு பின்னர் அந்த வீட்டில் தன் மகனோடு உள்ளே நுழைந்தார் வசுந்தரா.
     அந்த வீட்டின் ஒவ்வொரு இண்டு இடுக்கும் வசுந்தரா அவர் கணவன் ராஜாராமோடு வாழ்ந்த நினைவுகளை இன்னும் பசுமையாக நினைவுப்படுத்தியது.
     ஏற்கனவே ஆட்களை விட்டு வீட்டை சுத்தம் செய்திருந்ததால் ராஜாராமின் வீடு புத்தம் புதிதாய் இருக்க, ஆங்காங்கே வசுந்தரா ராஜாரமின் புகைப்படங்கள் தொங்கிக் கொண்டிருந்தது.
     அருணாசலம் மற்றும் விஸ்வநாதன் வீட்டினர் அனைவருமே வந்திருக்க, அந்த புகைப்படங்களில் புன்னகை முகத்தில் தழவ காதலோடு தன் மனைவியுடன் நிற்கும் ராஜாராமையே  பார்த்திருந்தனர்.
     அவரின் புன்னகை அனைவரையும் கவரும் விதம் வசீகரமாய் இருந்தது. ‘ரெண்டு பேரும் எவ்ளோ சந்தோஷமா இருக்காங்க. இவங்கள கடவுள் ஏன் இவ்ளோ தூரம் கஷ்டப்படுத்தி பாத்தாரு’ என்பதே அனைவரின் வருத்தமாய் போயிற்று.
     ஆனால் அதே நேரம் ராஜாராமின் நகலாய் ஹர்ஷா நிற்க பலரின் மனதில் சொல்லொன்னா உணர்ச்சிகள் எழுந்தது உண்மையே.
     இவ்வளவு நாட்கள் ஹர்ஷா தனக்கு மட்டுமே மகனாக இருக்க வேண்டும் என்று கண்மூடி தனமாக இருந்த ராஜசேகரின் மனம் ஹர்ஷாவை ‘இவன் தன் அண்ணனுக்கு மகனும் கூட’ என்று எண்ணத் துவங்கியது.
     அருணாசலமோ தன் மகனே பேரன் உருவில் வந்து நிற்கிறான் என்று எண்ணி எண்ணி பூரித்தார். அவருக்கு அதற்கு மேல் வேறு எதுவும் தேவையாய் இருக்கவில்லை.
     வசுந்தராவின் மனநிலையோ மற்றவரின் மனநிலையை விட வேறாய் இருந்தது. அவருக்கு தன் ஜென்ம சங்கல்பம் நிறைவடைந்த நிம்மதி அந்த நிமிடம் எழுந்தது.
     இப்படியே அவர் விதி முடிந்தால் கூட அதே இடத்தில் சந்தோஷமாக இறந்துவிடுவார் வசுந்தரா. அப்படி ஒரு மனநிலையில் இருக்கிறார்.
     ஹர்ஷாவோ தான் ஒருவனின் வரவில் அனைவரும் மகிழ்ச்சி அடைய அது தனக்கு போதும் என்று மட்டும் மனதிற்குள் எண்ணியவன் அதற்கு மேல் எதையும் போட்டு குழப்பிக் கொள்ளவில்லை.
     இங்கு வரும் வரை கூட மனதில் ஏதேதோ போட்டு குழப்பிக் கொண்டு தான் வந்திருந்தான் ஹர்ஷா. ஆனால் தற்போது தன் மனதை எதையும் யோசிக்கவிடாது தன்னை சுற்றி இருந்தவர்களை மட்டும் பார்த்து நின்றான்.
     அவர்கள் மகிழ்விலே தன் மனதின் நிறைவும் என்பதை உணர்ந்த ஹர்ஷா தன் உணர்வுகளை மறந்தபடி தன்னை பெற்றவர்களுக்காக அந்த நாளை அர்ப்பணித்தான்.
     அபிமன்யுவோ பல நாட்கள் கழித்து பார்த்த தன் காதலி அம்முவை தனியாக தள்ளிக் கொண்டு போய் நன்றாக கடலை வறுத்து கொண்டிருந்தான்‌.
     பல நாட்கள் கழித்து கிடைத்த அருகாமையில் இருவரும் தங்கள் காதல் உலகில் சஞ்சரித்து கொண்டிருக்க சுற்றி இருந்தவர்களை கண்டுக் கொள்ளவே இல்லை. அவர்களுக்கு அவர்கள் பிரச்சினை!
     வசுந்தராவின் பிள்ளைகள் ஆதர்ஷ் மற்றும் ரித்திகா இருவருக்கும் அவர்களின் தந்தை தன் தாய் வாழ்வில் நடத்திய கொடுமைகள் எல்லாம் கேட்டு அதிர்ந்து தான் போய் இருந்தனர்.
     ஒருவர் காதல் என்ற பேரில் அவர் காதலித்த பெண்ணின் வாழ்க்கையில் இவ்வளவு தூரம் கீழிறங்கி நடந்துக் கொள்வாரா என்று வருத்தப்பட்டனர்.
     அதே நேரம் தங்களுக்கு ஒரு அண்ணன் இருக்கிறான் அதுவும் அது அனுவின் கணவன் ஹர்ஷவர்தன் என்றும் அறிந்து சற்று மனம் மகிழ்ந்தனர் என்றே சொல்லலாம்.
     ஆனால் ஹர்ஷாவின் தந்தையை கொன்றது தங்கள் தந்தை எனும் போது இவர்கள் இருவரும் குற்ற உணர்வில் அவனிடம் இருந்து விலகியே இருக்க, ஹர்ஷா எப்போதும் போல் அவர்களை விலக்காது நல்லபடியாக நடந்துக் கொண்டு அவர்களை சகஜமாக வைத்திருந்தான்.
     இப்படி ஒவ்வொருவரும் அவரவர் எண்ணத்தில் இருக்க அந்த ஒரு நாள் இரவு அமைதியாகவே கழிந்தது. அடுத்த நாளே சென்னை நோக்கி புறப்பட்டு விட்டனர் அனைவரும்.
     வசுந்தரா மட்டும் இன்னும் சில நாள் அங்கிருந்து விட்டு வருவதாக கூற அவர் மனதை புரிந்தது போல் அவரை மட்டும் அங்கு விட்டு வந்தனர். அவர் மனம் அந்த வீட்டோடு தன் பழைய நினைவுகளோட நின்றுவிட்டது.
     இங்கே அம்மு மீண்டும் டெல்லி கிளம்பி வேண்டும் என்றிட, அவளை தன் அறைக்கு தள்ளிக் கொண்டு சென்ற அபி கொடுக்க வேண்டியதை கொடுத்து வாங்க வேண்டியதை கறாராக வாங்கியே விட்டான்.
      “இன்னும் கல்யாணத்துக்கு ரெண்டு வருஷம் காத்திருக்கனுமே. இங்கேயே படிச்சா தினமும் பாக்கவாவது செய்வேன். இவ டெல்லி போய் உக்காந்துகிட்டு என் உயிர வாங்குறா”
     அவள் சென்றபின் அபிமன்யு சோகத்தில் அம்முவை திட்டியும் புலம்பியும் தள்ளிக் கொண்டிருந்தான்‌.
     இன்னும் இரண்டு வருடங்கள் ஆனாலும் வாழ்க்கையை நிம்மதியாக ஆரம்பிக்கப் போகும் இந்த ஜோடி தங்கள் வாழ்வில் இன்பத்தை மட்டுமே பார்க்கவும் போகின்றனர். அதற்கு இந்த பிரிவும் அவசியமே!
     இப்படியே நாட்கள் அமைதியாக செல்ல ஒரு நாள் ஹர்ஷா மருத்துவமனை விட்டு வரும் நேரம் அனு அவனுக்காக காத்திக் கொண்டிருந்தாள்.
     “வாங்க ஹர்ஷா. வாங்க” அனு பரபரப்பாக அழைக்க அவள் முகத்தில் இருந்த ஜொலிப்பை குழப்பமாக பார்த்த ஹர்ஷா “என்ன அனு இன்னைக்கு ரொம்ப பரபரப்பா இருக்க. என்னடி விஷயம் உன் முகம் வேற ஜொலிக்குது” என்று கேட்டான்.
     “அது ஹர்ஷா. நான் நானு மறுபடியும் பிரெக்னெட்டா இருக்கேன்” ஒருவாறு சொல்லி முடித்த அனு வெட்கத்துடன் ஹர்ஷாவை பார்க்க, அவன் முகம் முழுவதும் புன்னகை.
     “என்னடி செல்லம் உண்மையாவா” என சந்தோஷப்பட்ட ஹர்ஷா அவளை இறுக்கி அணைத்து முத்த மழை பொழிந்து தள்ளினான். அதன்பின் வீட்டில் இருப்பவர்களுக்கு சென்று ஹர்ஷா கூற அனைவரும் மகிழ்ச்சியில் துள்ள வீடே விழாக்கோலம் கொண்டது.
     அனுவை அதற்கு பின் வந்த நாட்கள் எல்லாம் கையில் வைத்துப் பார்த்துக் கொண்டனர் வீட்டினர். ஹர்ஷாவே மருத்துவர் என்பதால் ரிப்போர்டை பார்த்து தனக்கு பிறக்கு போவது பெண் என அறிந்துக் கொண்டான்.
     அதை வீட்டினரிடமும் பகிர்ந்திருக்க இதுவரை இரண்டு ஆண் பிள்ளைகள் இருந்து இப்போது பெண் குழந்தை பிறப்பதில் அனைவரும் மகிழ்ச்சி கடலில் இருந்தனர்.
     அன்றும் அப்படித்தான் சிரிப்பும் மகிழ்ச்சியுமான ஒரு மாலை வேளையில் அபி விக்ரமிடம் வம்பு செய்துக் கொண்டிருந்தான்‌.
     “சைத்து சைரு கண்ணா ரெண்டு பேரும் நல்லா கேட்டுக்கோங்க. உங்க அம்மா அத்த வயித்துல இருக்க பாப்பா நம்மலோட பாப்பாடா. நாம தான் நல்லா பாத்துக்கணும்” ஹர்ஷா பேசிக் கொண்டிருந்த நேரம் வந்த விக்ரம்
     “ஆமாடா சைரு கண்ணா‌. அது நம்ம பாப்பா. பாப்பா மட்டும் பிறந்து வளரட்டும் அதை நாம தான் தூக்கப் போறோம்டா” என்று தன் மகனிடம் கூறிக் கொண்டிருந்தான்.
     அதை கேட்டு குறுக்கே புகுந்த அபி “ஏதே நீங்க தூக்க போறீங்களா. எங்க குட்டி பிரிண்செஸ்க்கு ஒரு பிரின்ஸ நாங்க தேடி புடிச்சு தருவோம். போயும் போயும் உன் பையனுக்கு எல்லாம் தரமாட்டோம் விக்ரம் அத்தான். என்ன சைத்து குட்டி” என்று மகனையும் கூட்டு சேர்த்தான்.
     “ஹேய் எங்களை என்னன்னு நினைச்ச. இங்க இருந்து பொண்ணு மட்டும் எடுப்பீங்க. ஆனா பொண்ணு தர மாட்டீங்களா. இது எந்த ஊரு நியாயம்” என்ற விக்ரம் தன் இரண்டு வயது மகனை பார்த்து
     “டேய் மகனே நாம தான்டா தாய்மாமன் குரூப்பு. பொண்ணு நமக்கு தான். என்ன பொண்ண தூக்கிருவல்ல” என்று கேட்க அவனுக்கு என்ன புரிந்ததோ குதூகலத்துடன் “ஆமா ஆமா” என கத்தினான்.
     அதை கண்ட அபி சைத்துவிடம் திரும்பி “டேய் மகனே பொண்ண தூக்க கேங்கா இறங்குவானுங்கடா‌. உன் தங்கச்சிய அவன் பக்கமே அனுப்பக் கூடாது. என்ன உன் தங்கச்சிய நல்லா பாத்துப்பல்ல” என்று கேட்க
     “ம்ம் ஓகே அபிப்பா. என் தங்கச்சிய நான் ரொம்ப பத்திரமா பாத்துப்பேன்” என குதித்து கொண்டே கூற
     அவன் கண்ணம் வழித்து முத்தம் வைத்த அபி “கேட்டுக்கோ விக்ரம் அத்தான். எங்க சிங்ககுட்டி சைத்துவ மீறி எவனும் வர முடியாது” என்று கெத்தாக காலரை தூக்கிவிட்டான்.
     “அங்க சிங்கக்குட்டினா என் சைடு சிறுத்தக்குட்டிடா. நீங்க உங்க பொண்ண எங்க ஒளிச்சு வச்சாலும் உள்ள புகுந்து தூக்குவோம்டா” விக்ரம் சரிக்கு சரியாக அபியிடம் வம்பு வளர்த்தான்.
     இவர்கள் இருவரும் செய்யும் அலப்பறையை கேட்டபடி வந்த பார்வதி தன் தலையிலே அடித்துக் கொண்டார்.
     “ஏன்டா புள்ளையே இன்னும் பிறக்கலை. அதுக்குல மாப்பிள்ளை பாக்க இறங்குறீங்களா. இவனையெல்லாம் எப்படிமா கவி சமாளிக்கிற” அபி விக்ரமிடம் ஆரம்பித்து சங்கவியிடம் முடித்தார் பார்வதி.
     “என்ன பண்றது அத்த. எல்லாம் என் தலை எழுத்து. உங்க புள்ளைட்ட வந்து மாட்டிக்கிட்டேன்” சங்கவி சலித்துக் கொண்டே கூற
     “அதுக்கு தான் சிஸ்டா நானே உனக்கு நல்ல மாப்பிள்ளையா பாக்குறேன்னு சொன்னேன்‌. நீ இவன் தான் வேணும்னு தலைகீழா குதிச்சிட்ட. இனி ஒன்னும் பண்ண முடியாது.
     வீட்ல இவன் தொல்லை பத்தாதுன்னு ஆபிஸ்லையும் சேந்து இவன்கூட எப்படி தான் குப்பைக் கொட்டிட்டு இருக்கியோ” அபி சைடு கேப்பில் தானும் விக்ரமை ஓட்டினான்.
     “பாரு ஹர்ஷா உன் மச்சான எல்லாரும் எப்படி கிண்டல் பண்றாங்கனு” விக்ரம் சிறுவன் போல் தன் நண்பனிடம் புகார் செய்ய
     “சரி விடுங்கப்பா என் மச்சான் பாவம்ல. அவன போய் ஓட்டிட்டு இருக்கீங்க” ஹர்ஷா புன்னகையுடன் விக்ரமுக்கு ஆதரவாக பேசி வைத்தான்.
     “நீ சும்மா இருண்ணா. இவரு தங்கச்சி டெல்லி போறேன்னு சொன்னப்ப வாய் கிழிய பேசுனாருல்ல. இப்ப பேச வேண்டியது தானே. இப்ப மட்டும் என்ன உன்கிட்ட கம்ப்ளைண்டு” அபி நேரம் பார்த்து விக்ரமை வைத்து செய்தான்.
     சிரிப்புடன் நேரம் கழிய அப்படியே சபையும் கலைந்தது. விக்ரம் அறைக்குள் சென்ற மறுநிமிடம் தன் மனைவி சங்கவியை பின்னால் இருந்து அணைத்துக் கொண்டான்.
     “ஏன்டி என்கூட இருக்கிறது உனக்கு அவ்ளோ கஷ்டமா இருக்கா என்ன. அங்க வச்சு ஆமான்னு சொல்ற”
     “இல்லையா பின்ன உங்க புள்ளைய கூட நான் சமாளிச்சிறுவேன்‌. ஆனா உங்கள என்னால சமாளிக்க முடியலையே. அவனை விட நீங்க தான் ரொம்ப சேட்டை பண்றீங்கப்பா” விக்ரம் கேட்டதற்கு நொந்து போய் கூறினாள் சங்கவி.
     “அதுக்கு என் கூட இருக்க முடியலைன்னு சொல்லுவியா. என்ன நிஜமாவே பிடிக்கலையா” விக்ரம் பாவமாக முகத்தை வைத்துக் கொண்டு கேட்க
     சங்கவி சிரிப்புடன் அவனை அணைத்துக் கொண்டவள் “என் செல்லக்குட்டிக்கு கோவம் வந்துருச்சா” என விக்ரமின் கண்ணத்தில் முத்தமிட்டாள்.
     “அது சும்மா உங்கள கிண்டல் பண்ண சொன்னதுப்பா. உங்களோட இந்த ஸ்வீட் இம்சை புடிச்சு போய் தானே கூடவே சுத்துறேன். என் லவ் புரியலையா”
     சங்கவி மையலுடன் விக்ரமை பார்த்து வைக்க அவளை காதலோடு நெருங்கிய விக்ரம் “அப்படியா செல்லம் மாமாவ உனக்கு அவ்ளோ பிடிக்குமா” என்று பேசியபடி அவளை அணைத்துக் கொண்டு இதழை நெருங்கும் நேரம்
     “அப்பா…..!” என்ற சத்தம் கேட்க பதறிப்போன சங்கவி விக்ரமை விட்டு தள்ளி நின்றாள்.
     அதில் கடுப்பான விக்ரம் “எனக்கு வெளிய இருந்து எவனும் சூன்யம் வைக்க போறது இல்லடி. நீ பெத்து வச்சிருக்கியே ஒரு குட்டி சாத்தான் அவன் தான்டி எனக்கு சூன்யம் மான்யம் எல்லாம்” என்றான்.
     அவன் பேசி முடிக்கவும் சைரு விக்ரமிடம் வரவும் சரியாக இருக்க, என்னதான் கிண்டல் பேசினாலும் விக்ரமுக்கு தன் மகன் என்றால் உயிர் தான்.
     “சைரு குட்டி” என அப்படியே அவனை வாரி தூக்கிய விக்ரம் அவன் கண்ணத்தில் முத்த மழை பொழிந்தான். விக்ரம் சங்கவியின் வாழ்க்கை எப்போதும் இதே போல் அதிரடியாக கலகலப்பாக செல்லும் என்பதில் ஐயமில்லை!
     அனு அறைக்குள் வரும் நேரம் “அப்பா அப்புறம் என்னாச்சு” என்ற சைத்துவின் குரலுக்கு ஹர்ஷா ஏதோ கூற என சைத்தன்யாவிற்கு கதை சொல்லி அவனை தூங்க வைத்துக் கொண்டிருந்தான் ஹர்ஷா.
     அதை புன்னகையுடன் ஹர்ஷாவை வைத்த கண் வாங்காமல் பார்த்தபடி அமர்ந்திருந்த அனுவிற்கு அவள் வாழ்வில் கிடைத்தவற்றில் மிகவும் சிறந்த விஷயம் ஒன்றென்றால் அது ஹர்ஷா என்றே தோன்றியது.
     சைத்து தூங்கிவிடவே அவன் எழாதவாறு தான் எழுந்து “என்னடி என்ன அப்படி பாக்குற” என ஹர்ஷா அனுவை உரசியவாறு போய் அமர்ந்தான்‌.
     அதற்கு புன்னகைத்த அனு “என் லைப்ல கிடைச்ச பெஸ்ட் கிஃப்ட் நீங்கதான் ஹர்ஷா” என்க
     “ம்ஹூம் அப்படியா செல்லக்குட்டி. நான் உனக்கு கிப்டோ இல்லையோ எனக்கு தெரியாது. பட் நீ என் லைஃப்ல வந்த பெரிய லக்கி சேம்டி. என் வாழ்க்கையில என்ன நடந்தும் நான் மத்தவங்களுக்காக பாத்தா எனக்காக பாக்க என கூட நீ இருந்த பாத்தியா. அது எப்பவும் இங்க இருக்கும்டி” என தன் இதயத்தை சுட்டி காட்டி அவளை அன்போடு தழுவிக் கொண்டான்.
     ஹர்ஷாவின் அணைப்பில் சுகமாய் சாய்ந்திருந்த அனு “உங்களோட இந்த குணம் தான் ப்பா என்னை உங்க பின்னாடியே சுத்த வைக்குது. இங்க இருக்க எல்லாருக்கும் நான் இருக்கேன்ற பீளிங்க நீங்க தரீங்க. பட் உங்களுக்காக நீங்க எதுவுமே பண்ணிக்க மாட்டேங்குறீங்க. அப்ப உங்களுக்காக நான் தானே யோசிக்கனும்” என புருவம் உயர்த்தி கேட்க
     அவள் புருவத்தில் தன் இதழை ஒற்றி எடுத்த ஹர்ஷா “ஆமா மேடம் எனக்காக நீங்க தானே இருக்கீங்க. அதை காட்டுற மாதிரி சைத்துவ தந்த இப்போ இன்னொரு செல்லக்குட்டிய தரப்போற. இதைவிட வேற என்னடி வேணும்” என்று உணர்ச்சிகரமாக கூறியவன் அனுவின் வயிற்றில் அழுத்தமாக ஒரு முத்தம் வைத்தான்.
     அந்த நேரம் பார்த்து அவன் அருமை மகள் அனுவின் வயிற்றில் ஒரு பக்கம் தன் அசைவை உணர்த்த அதன் அசைவில் “ஏய் செல்லம் என் குட்டிம்மா ‘அப்பா நான் உங்களை பீல் பண்றேன்னு” சொல்றா பாரு” என்று மகிழ்வில் ஆர்ப்பரித்தான்.
     “ம்ம் உங்க பொண்ணுக்கு இப்பவே அவ அப்பாவ தான் பிடிக்குது போல” என்று சற்று பொறாமையை வார்த்தையில் சேர்த்து கூற
     “என்னடி உன் பொண்ணு கூடவே போட்டி போடுற. என்மேல அவ்ளோ பொஸசிவ் பீலாடி” என்று அனுவை கொஞ்ச ஆரம்பிக்க, அனு ஹர்ஷாவின் செய்கையில் மனமார சிரித்தாள்.
     காற்றும் சேர்ந்து அவர்கள் ஆனந்தத்தில் மகிழ்வு கொண்டு சன்னலின் வழியே தன் உணர்வுகளை வெளிப்படுத்தி சென்றது.
     ஹர்ஷாவின் வாழ்வில் இனி இன்பம் துன்பம் எது வந்தாலும் அவன் குடும்பம் இருக்கும் வரை அவனும் அனைத்தையும் அவர்களுக்காய் தாங்கி நிற்பான். அவன் பின்னே என்றும் அனுவும் இருப்பாள். இவர்கள் வாழ்வும் சிறப்பாக செல்லும் என்பதிலும் சந்தேகமில்லை!
-முற்றும்

Advertisement