Advertisement

     ஐயர் சொல்லும் மந்திரத்தை புரியாது தப்பும் தவறுமாக திருப்பி சொல்லிக் கொண்டிருந்தான் விக்ரம். அவன் மனமோ
     ‘எப்படா பொண்ணை கூப்படுவீங்க. நான் சட்டுபுட்டுனு கல்யாணத்தை முடிச்சிட்டு வீட்டப்பாத்து கிளம்புவேன்ல’ என்று சலித்தபடி இருந்தது.
     அவன் மைன்ட் வாய்ஸ் கேட்டதாலோ இல்லை முகூர்த்த நேரம் வந்துவிட்டதாலோ ஐயர் பெண்ணை அழைத்து வர சொன்னார். அந்த வார்த்தையை கேட்டதும் ஆயிரம் வாட்ஸ் லைட்டை போட்டது போல் விக்ரமின் முகம் பிரகாசமானது.
     ‘அப்பாடா ஒருவழியா அவளை கூப்டு விட்டுடாங்க’ மனதில் பெரும் உவகை அடைந்த விக்ரம் சங்கவி வரும் வழியில் தன் விழியை வைத்தான்.
     தாமரை பூவின் நிறத்தில் அங்காங்கே ஜரிகை வைத்து அதற்கு எதிர்ப்பதமாக பச்சை வண்ண ரவிக்கை அணிந்து, முகத்தில் வெட்கம் ததும்ப அட்டகாசமாய் மேடைக்கு வந்து சேர்ந்தாள் கவி.
     ‘அம்மாடி எவ்ளோ அழகா இருக்கா நம்மாளு’ என்று வரும் அவளை வைத்த கண் வாங்காமல் பார்த்து வைத்த விக்ரமிற்கு சுற்றி நின்ற அனைவரும் மறைந்து போக அவன் கவி மட்டுமே தெரிந்தாள்.
     அதில் அவனை ஐயர் இரண்டு முறை அழைத்ததையும் அவன் கவனிக்கவில்லை. அவன் உறைந்த நிலையை கண்டு தன் தலையில் அடித்துக் கொண்ட அபி
     “விக்ரம் அத்தான்” என்று அவன் முதுகிலேயே பட்டென ஒரு அடியே வைக்க அங்கு என்ன நடக்கிறது என்று புரியாமல் ஒரு நிமிடம் முழித்தான் விக்ரம்.
     “ஐயர் கூப்பிடறாரு அங்க பாரு” அபியின் அருகில் இருந்த ஹர்ஷா தான் தக்க சமயத்தில் நடப்பதை நினைவு படுத்தி விட்டான்.
     “ஆன்.. ஆ.. ஓகே மச்சான்” என்று திணறிய விக்ரம் அதன் பின்னே ஐயரை திரும்பி பார்த்தான்.
     “என்ன ண்ணா கல்யாணம் நடக்கிறதுக்கு முன்னாடியே பையன் இப்படி பிளாட் ஆகிட்டான். இவன் கல்யாணம் முடிஞ்சா நாமலாம் அவன் கண்ணுக்கு தெரிய மாட்டோம் போலையே”
     அபி சத்தமாக விக்ரமை கிண்டல் செய்ய அனைவரும் சிரித்து விட்டனர். ஆனால் விக்ரம் தான் இந்த உலகிலே இல்லையே. சங்கவியின் அழகில் மந்தரித்து விட்டது போல் அமர்ந்திருந்தான்.
     விக்ரமின் திருமணம் கூத்தும் கும்மாளமுமாக முடிய அனைவரும் அருணாசலத்தின் இல்லம் திரும்பினர். பால் பழம் தருவது போன்ற அனைத்து சடங்குகளும் நல்லபடியாக நடந்தேற, மாலை கடந்து இரவு நேரம் மெல்ல கவிழ
     “என்ன விக்ரம் அத்தான் முகம் ஜொலிக்குது. ம்ம் பர்ஸ்ட் நைட் மூட்ல இருக்க போல” என்று கண்ணடித்த அபி “என்ஜாய் மச்சான்” என எப்போதும் போல் அல்லாமல் சற்று நல்ல வார்த்தை சொல்லி போனான்.
     அவன் கூற்றில் புன்னகைத்த விக்ரம் என்றும் இல்லாத நாளாய் அமைதியின் உருவாய் சென்று அவன் அறைக்குள் ஆவலாய் தன் கவியின் வரவை எதிர்நோக்கி அமர்ந்தான்.
     அவன் எதிர்ப்பார்ப்பை பொய் ஆக்காமல் கவியும் வந்துவிட்டாள். அவள் தயங்கி கொண்டே விக்ரமை நோக்கி வர விக்ரம் முகம் முழுவதும் புன்னகையின் சாரல்.
     “வா கவி. உக்காரு” என வார்த்தைக்கே வலிக்காமல் விக்ரம் அழைக்க அவன் அருகில் நெருங்கி வந்து அமர அவள் கையை மிருதுவாக பிடித்து கொண்டான்.
     “உன்ட்ட கொஞ்சம் பேசணும்டா. நம்ம மேரேஜ்க்கு முன்னவே உன்கூட டைம் ஸ்பென்ட் பண்ண நினைச்சேன்‌. பட் வேலை புல்லா இருந்தது. சோ உன்கிட்ட பேச கூட முடியலைடி.
     உனக்கு ஓகே தானே பேசலாமா” விக்ரம் கேட்டு நிறுத்த சங்கவி சம்மதமென தலையசைத்தாள்.
     விக்ரம் பேச துவங்கிட எதை பற்றி பேச போகிறான்‌ என ஆர்வமாக சங்கவி கேட்க தயாரானாள்.
     “உனக்கே தெரியும் கவி இப்ப நம்ம வீட்ல இருக்க சிட்டுவேஷன். இந்த பிராப்ளம் வந்ததால தான் நம்ம மேரேஜும் இவ்ளோ சீக்கிரம் நடந்தது. நான் நம்ம மேரேஜ் ஒன் இயர் கழிச்சு பண்ணிக்கனும்னு அப்படின்ற தாட்ல தான் இருந்தேன்.
     பட் அது மாத்த காரணம் என்னோட ஃபேமிலி. இன்னும் சொல்லப்போனா நம்ம மேரேஜால இந்த வீட்ல கொஞ்ச நாள் காணாம போயிருந்த சிரிப்பு மறுபடியும் வந்திருக்கு.
     நான் என்னதான் விளையாட்டு தனமா இருந்தாலும், என் குடும்பம்னு வரப்போ நான் டோட்டலா வேற ஆள் கவி. இந்த ஃபேமிலி மட்டும் தான் என்னோட உலகம். அது உனக்கு புரியுதா”
     விக்ரம் பேசி நிறுத்த ‘இதையெல்லாம் எதுக்கு இப்போ சொல்றாரு’ என குழம்பி போய் பார்த்தாள் சங்கவி.
     “‌இதை நான் ஏன் சொல்றேன்னு உனக்கு தோனலாம். கண்டிப்பா தோனும். அதுவும் எதுக்குன்னு நானே சொல்லிடறேன்.
     உனக்கு என் கூட தனியா இருக்கனும்னு தோனும். நீ நினைக்கிறத நான் தப்பு சொல்ல மாட்டேன். அதே நேரம் நம்மளுது ஜாயின் ஃபேமிலி. இங்க நமக்கு சில நேரம் தனிமை கிடைக்காம போகும்.
     சோ இதெல்லாம் வச்சு தனிக்குடித்தனம் போகனும் அப்படின்னு நீ எப்பவும் சொல்ல கூடாது. நீ சொல்ல மாட்ட இருந்தாலும் இதையெல்லாம் நான்‌ உன்கிட்ட சொல்லனும்னு நினைச்சேன்”
      விக்ரம் தன் மனதில் இருந்த அனைத்தையும் தயங்கியபடியே ஆனாலும் அப்படியே சொல்லிவிட, சங்கவி தான் அவனை வியப்பாய் பார்த்தாள்.
     எப்போதும் குறும்பு செய்து கொண்டு அபியிடம் வம்பிழுத்துக் கொண்டு, அலுவலகம் சென்றால் வேலை வேலை என்று அலையும் விக்ரம் இல்லை இவன்.
     இன்று ஏனோ சற்று வித்தியாசமாக பொறுப்பாக தெரிந்து தொலைந்தான். இது இன்னும் பிடித்து போனது சங்கவிக்கு.
     “இந்த விக்ரம எனக்கு ரொம்ப பிடிக்குது ப்பா. எனக்கு பர்ஸ்ட் உங்கள பிடிக்க முன்னாடி உங்க பேமிலிய தான் பிடிச்சது. நீங்க லவ் பண்றத உங்களுக்கு முதல்ல தெரிஞ்சு என்கிட்ட வந்து பேசி,
     என் குடும்பம் அந்த அளவுக்கு பணக்காரங்க இல்லன்னு தெரிஞ்சும் என்னை எந்த வித்யாசமும் காட்டமா ஏத்துக்கிட்ட இந்த ஃபேமிலி… இல்ல நம்ம பேமிலிய விட்டு நீங்க போலானு சொன்னாலும் நான் வரமாட்டேன். போதுமா விக்ரம்”
     சங்கவி புன்கைத்து நிறுத்த விக்ரம் மனதில் பேரமைதி கொண்டான். தன் மனைவி தன் குடும்பத்தை அவள் குடும்பமாக எண்ணியதில் பெருமகிழ்ச்சி அடைந்தான்.
     “என் செல்லக்குட்டி! ஐ லவ் யூ டி” அதே மகிழ்ச்சியோடு சங்கவியை இழுத்து அணைத்த விக்ரம் அவளை முத்த மழையில் நனைந்து விட்டான்.
     அப்படியே அவளோடு கட்டிலில் சரிந்த விக்ரம் அவர்களின் காதல் வாழ்க்கையை அழகாய் அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் சென்றான்.
—————————————
     எல்லா வேலைகளையும் முடித்து சங்கவியை விக்ரமின் அறைக்கு அனுப்பிவிட்டு தங்கள் அறைக்கு கலைத்து போய் வந்த அனு உடையை மாற்றிக் கொண்டு அப்படியே மெத்தையில் சரிந்தாள்.
     அங்கே இவளுக்காக வெகு நேரமாக காத்துக் கொண்டு அமர்ந்திருந்த ஹர்ஷாவை சிறிதும் இவள் கண்டுக் கொள்ளாமல் படுத்துவிட, கடுபபாகிப் போனான் ஹர்ஷா.
     “அனு என்னடி நீ பாட்டுக்கு வந்த, டிரஸ் மாத்துன. இங்க ஒருத்தன் உக்காந்திருக்கேன் என்னை கூட கண்டுக்காம பொசுக்குன்னு படுத்துட்ட‌” ஹர்ஷா பாவமாக கேட்ட
     “ப்ச் என்னங்க வேணும் உங்களுக்கு. காலைல இருந்து செம வேலை டையர்டா இருக்கு. எனக்கு தூக்கம் வருது பா” அவனை விட பாவமாக முகத்தை வைத்து அனு கூற ஹர்ஷாவின்‌ முகம் புஸ்சென்று ஆனது.
     “ஏய் என்னடி இது நான் உனக்காக எவ்ளோ நேரமா வெயிட் பண்றேன். இப்படி சொன்னா என்ன அர்த்தம். என்னை பாத்தா பாவமா இல்லையா உனக்கு” ஹர்ஷா அப்பாவியாக தன்போக்கில் புலம்ப அதை கேட்க வேண்டிய அனுவோ அங்கே தூங்கி விட்டிருந்தாள்.
     “அனு அனு அடியே பொண்டாட்டி!” ஹர்ஷா கத்தி பார்த்து அவள் தூங்கியதை கண்டு அதிர்ந்தே விட்டான். ஏனெனில் ஹர்ஷாவிற்கு இன்று நடந்த நிகழ்வுகளில் அவனின் திருமணம் நினைவு வந்தது.
     அதோடு சேர்த்து அவன் முதல் இரவும் ஞாபகத்தில் வந்து நிற்க, ஆசையோடு அனுவுக்காக காத்திருந்தான். அவன் மனைவியோ இதை எல்லாம் அறியாது தூங்கிவிட பாவமாய் முகத்தை வைத்து அவளை பார்த்த ஹர்ஷா இதற்கு மேல் தான் என்ன செய்ய என எண்ணி அவளை மெதுவாக அணைத்து கொண்டு தானும் தூங்கினான்.
     அதிகாலை கதிரோன் தன் கதிர்களை வீசி உலகுக்கு புத்துயிர் தந்து பாரெங்கும் பரவினான். அந்த காலை வேளையில் துயில் கலைந்து எழுந்த அனு தன் அருகே குழந்தை போல் தூங்கும் கணவனை கண் எடுக்காமல் பார்த்து வைத்தாள்.
     ‘இவரால மட்டும் எப்படி இது முடியிது. தன்னை பத்தி யோசிக்காம மத்தவங்கள பத்தியே யோசிக்கிறாரே. என்ன மனுஷன்’ அனு ஹர்ஷாவை பார்த்தபடி இந்த நாட்களில் நடந்த நிகழ்வுகளை அசைப்போட்டாள்.
     ஹர்ஷா தன் அன்னையிடம் இப்போதெல்லாம் ஓரளவு நன்றாகவே பேசுகிறான். அவன் மனதில் அவரை தன் அன்னையாக ஏற்றுக் கொள்ளாவிட்டாலும் அவரின் நலனுக்காக அவன் பேசுவது அனு அறிந்ததே.
     இப்படி ஒவ்வொருவருக்காகவும் பார்த்து பார்த்து செய்யும் தன் கணவனை எண்ணி கர்வம் கொண்ட அனு வேறு உலகத்தில் சஞ்சரித்து கொண்டிருந்தாள்.
     அதில் ஹர்ஷா தூக்கத்தில் இருந்து எழுந்து விட்டதை கவனிக்கவில்லை அவள். “என்ன செல்லம் அப்படி என்னத்த இவ்ளோ சீரியஸா யோசிட்டு இருக்கீங்க”
     பேசியபடி ஹர்ஷா அனுவின் இடையை கட்டிக் கொள்ள அதில் தன்னிலை அடைந்த அனு “எல்லாம் உங்கள பத்தி தான் யோசிட்டு இருக்கேன் ஹர்ஷா” என்றாள்.
     “என்னடி என்ன பத்தி என்ன யோசிட்டு இருந்த” ஹர்ஷா அனுவின் மடியில் படுத்தபடி கேள்வியை கேட்டு வைக்க, அனுவின் கைகள் தானாக அவன் தலையை கோதிவிட்டது.
     “நீங்க எப்படி ஹர்ஷா இப்படி இருக்கீங்க‌. எல்லாருக்காவும் பார்த்து, எல்லாரும் நல்லா இருக்கனும்னு நினைச்சு. அதுக்காக உங்க மனசை பத்தி கூட கவலப்படாம. ப்பா என்னால எல்லாம் இப்படி இருக்கவே முடியாது தெரியுமா. நீங்க ரியலி கிரேட் ப்பா”
     அனு ஹர்ஷாவை சிலாகித்து பேச, ஹர்ஷாவோ தன் மனைவியின் சிரித்த முகத்தை தான் பார்த்திருந்தான்.
     “ஓய் பொண்டாட்டி என்னடி இன்னைக்கு இவ்ளோ அழகா இருக்க. எனக்கு என்னென்னமோ தோனுதே” ஹர்ஷா தாபமான குரலில் பேசியபடி அவள் கன்னத்தை கைகளில் தாங்கினான்.
     அவன் செய்கையில் தான் பேசிக் கொண்டிருந்ததை மறந்து வெட்கம் கொண்ட அனு “என்ன ஹர்ஷா காலைலயே ஆரம்பிக்கிரீங்க. விடுங்க நான் குளிக்க போறேன்” என நைசாக நழுவ பார்த்தாள்.
     “என்ன குளிக்க போறியா. நைட்டே மிஸ் பண்ணிட்டேன். இப்போ செம சான்ஸ் கிடைச்சிருக்கு‌. அதை அப்படியே விட்டுருவேனா” அவன் அனுவை நகரவிடாமல் பேசிக்கொண்டே அவள் மீது படர
     அந்த அதிகாலை சூரியனும் மேகத்திற்குள் சென்று மறைத்துக் கொண்டது‌. இரவில் நடத்த நினைத்த அனைத்தையும் காலையில் நடத்திக் கொண்ட ஹர்ஷாவின் செய்கையால்.
     “குட் மார்னிங் ப்பா! குட் மார்னிங் தாத்தா” அபிமன்யு தன் தாத்தா மற்றும் தந்தைக்கு காலை வணக்கத்தை சொன்னபடி ஹாலில் வந்து அமர்ந்தான்.
     அப்போது தான் காலை ஏழு மணி ஆகி இருக்க ஒவ்வொருவரும் தங்கள் அறையினுள் இருந்து வெளியே வந்தனர்.
     ஹர்ஷா முதற்கொண்டு அனைவரும் அங்கே இருக்க அங்கு இல்லாமல் இருந்த ஒரே ஆள் நம் விக்ரமே. அவன் எப்போதடா வருவான் அவனை வம்பிழுக்கலாம் என மாடியையே நோட்டம் விட்டுக் கொண்டிருந்தான் அபி.
     ஆனால் அவனுக்கு அதற்குள் ஏதோ வேலை வந்துவிட விக்ரமை வம்பிழுக்க முடியாத கடுப்பில் தான் வெளியே சென்றான் அபி.
     “ஹப்பா போய்ட்டான்டா. இனிமே நாம நிம்மதியா கீழ போகலாம்” அபிமன்யு கிளம்புவதை மேலே மறைந்து நின்று‌ பார்த்திருந்த விக்ரம் அதன்பின் தான் கீழே வந்தான்.
     “வாடா மச்சான்” என்ற ஹர்ஷாவின் குரலோடு “வெல்கம் அத்தான்” என்ற அபியின் குரலும் கேட்டு அதிர்ந்து திரும்பினான் விக்ரம்.
     “என்ன விக்ரம் அத்தான் வெளிய போனவன் எப்போ திரும்பி வந்தான்னு தானே பாக்குற ஹாஹாஹா. இந்த அபி எங்க போனாலும் வர வேண்டிய நேரத்தில கரெக்டா வருவான்”
     அபி டயலாக் அடித்தவாறு வர நொந்து போய் பார்த்தான் விக்ரம். “அப்புறம் என்ன அத்தான் இன்னைக்கு இவ்ளோ லேட்டா வர. கண்ணு வேற நல்லா செவந்திருக்கு. என்னாச்சு” அபி கண்ணடித்து கேட்க விக்ரமுக்கு தான் வெட்கம் வந்துவிட்டது.
     “நான் கூட நீ ஒரு அப்பாவினு நினைச்சேனே. நீ சரியான அடப் பாவியா இருப்ப போலையே” அவன் வாயில் கை வைத்து ஏதோ அதிசயம் நிகழ்ந்தது போல் பேச ‘போச்சு அபி ஒட்டியே சாகடிக்க போறான்’ என விக்ரமுக்கு அதற்கு மேல் அங்கே நிற்க முடியவில்லை.
     “டேய் அபி பாவம்டா என் மச்சான். அவனை நடு வீட்ல நிக்க வச்சு இப்படி ஓட்டுரியே. அவனை விடுடா” அப்போது அவனை காப்பாற்றும் விதமாக ஹர்ஷாவின் குரல் ஒலிக்க தன்னை காக்க வந்த தன் ஆருயிர் நண்பனை பெருமை பொங்க பார்த்தான் விக்ரம்.
     அபி ஹர்ஷாவை குழம்பி போய் பார்க்க “நடு வீட்ல வச்சு பேசாம அப்படி சோபாவுல போய் ஓரமா உக்காந்து பேசுடா. என் மச்சான் பாவம்ல அவன் காலு வலிக்க போகுது” என ஹர்ஷா அடுத்து கூறிய வார்த்தைகளில் அபி உற்சாகமாக விக்ரம் முகம் பீஸ் போன பல்ப் ஆனது.
     அதன்பின் என்ன அண்ணன் தம்பி இருவரும் சேர்ந்து தங்களுக்கு சிக்கிய வாழ்நாள் அடிமையை போட்டு கதற கதற அவனை பேசக் கூட விடாமல் ஓட்டி தள்ளி விட்டனர்.
     அதை வீட்டில் இருந்த அனைவரும் மகிழ்வுடன் பார்த்து ரசிக்க, ஹர்ஷா எதிர்ப்பார்த்த படியே அந்த குடும்பத்தில் மகிழ்ச்சி நிறைந்து காணப்பட்டது.
     “என் பேரனுங்க இதே போல எப்பவும் சந்தோஷமா இருக்கனும் ஆண்டவா” வாய் விட்டே அருணாசலம் மகிழ்வுடன் வேண்டிக் கொண்டார்.
     “கண்டிப்பா ப்பா” என்று அருகில் இருந்த ராஜசேகரும் அதை ஆமோதிக்க சிறியவர்களின் ஆரவாரத்தை ஆதூரமாய்‌ பார்த்து வைத்தனர்.
     மற்றவர்கள் அவ்வாறு வாய் விட்டு சொல்லவில்லை தானே தவிர அவர்கள் மனதிலும் அதே எண்ணம் தான் ஓடியது என அவர்கள் முகமே காட்டியது.
-மீண்டும் வருவான்

Advertisement