Advertisement

     வசுந்தராவிடம் சென்னையில் வைத்து தன் காதலை சொன்ன ராஜராம், அவர்கள் காதலை கோயம்புத்தூர் சென்று வளர்த்து வந்தான்.
     இப்படியே நாட்கள் இனிமையாக கடக்க, நாட்களுக்கு இன்னும் இனிமை சேர்க்கும்படி ராஜாராமிற்கு பிறந்தநாள் வந்தது. அங்கு தான் மிகப்பெரிய திருப்பமும் நிகழ்ந்தது.
     “மெனி மோர் ஹேப்பி பர்த்டே ராம்!” என்று அனைவரும் கத்தி வாழ்த்து தெரிவிக்க ராஜாராம் கேக்கை வெட்டினான்.
     “தேவிமா!” என்று காதலுடன் அழைத்து ராஜாராம் முதல் கேக் துண்டை எடுத்து தேவிக்கு ஊட்டி விட்டான். சுற்றி இருந்த அனைவரும் கைதட்டி உற்சாகப்படுத்தினர்.
     ராஜாராமின் பிறந்தநாள் கொண்டாட்டம் கோயம்புத்தூரில் இருக்கும் அவன் கெஸ்ட் ஹவுஸில் தான் நடந்து கொண்டிருந்தது‌.‌
     வீட்டிற்கு எல்லாம் வரவே மாட்டேன் என்ற வசுந்தராவை கொஞ்சி காலில் விழாத குறையாக கெஞ்சி வர வைத்திருந்தான் ராஜாராம். சிறிது பயத்துடனே வந்திருந்தாலும் வசுந்தராவிற்கு அங்கிருந்த சூழல் பிடித்துவிட்டது.
     அந்த வீட்டை சுற்றி இருந்த இயற்கையான காற்று மரங்கள் என அனைத்தும் பிடித்திருந்தது. கொஞ்ச நேரம் அதையெல்லாம் தன் தோழிகளோடு சுற்றி பார்த்து கொண்டிருந்தாள் வசுந்தரா.
     அப்போது தயங்கி தயங்கி வந்த ராஜாராம் “தேவிமா ஒரு விஷயம்” என இழுக்க “என்ன ராம்” என்றாள் புன்னகையுடன்.
     “அது தேவிமா… என் பிறந்தநாள்கு பிரண்ட்ஸ் பார்ட்டி கேட்டிருந்தாங்க”
     “அதான் பார்ட்டி நடந்துட்டு தானே ராம் இருக்கு” என்றாள் வசுந்தரா ராமின் கேள்விக்கு.
     “அதில்ல தேவிமா அது வந்து பசங்க டிரிங்க்ஸ் பார்ட்டி கேட்டிருந்தாங்க” என்று ராம் ஒருவழியாக கூறி முடிக்க
     “ராம் நீ.. நீங்க குடிப்பீங்கலா?” என அதிர்ந்து கேட்டாள் ராமின் தேவி.
     “ஐயோ இல்லமா. உன் மேல சத்தியமா சொல்றேன் தேவிமா, நான் இதுவரை குடிச்சதும் இல்லை. என்னோட பிரண்ட்ஸ் கேட்டாங்கடா.
     அதான் இந்த பார்ட்டி அரேஞ்ச் பண்ணிருக்கேன். அதுவும் வீட்ல இல்லடா. பக்கத்து ஹோட்டல்ல. ஈவ்னிங் ஐஞ்சு மணிக்குள்ள அவங்க எல்லாரும் கிளம்பிடுவாங்க.
     நான் அங்க ஹோட்டல்ல போய் அவங்களுக்கு எல்லாம் சரியா இருக்கான்னு பாத்துட்டு வந்திடுறேன்மா. ஒரு ஒன் அவர் வெயிட் பண்ணுமா நான் வந்திடுவேன்”
     தன் முன்னால் நின்றிருந்த வசுந்தராவிடம் கிட்டதட்ட கெஞ்சினான் ராம்.
     “இல்லங்க லேட் ஆகிடும். ஹாஸ்டல் உள்ள விடமாட்டாங்கபா. ஆல்ரெடி என்னோட பிரண்ட்ஸ் எல்லாரும் கிளம்பி வெளிய போய் நிக்கிறாங்க. நான் கிளம்பனும் ராம்”
     வசுந்தராவும் தன் நிலையை கூறி கெஞ்சிட “தேவிமா தேவிமா என்னோட நிலைமையையும் கொஞ்சம் புரிஞ்சிக்கோடா. காலைல இருந்து உன்கிட்ட பேசக்கூட எனக்கு டைம் கிடைக்கல.
     என்ன பார்த்தா உனக்கு பாவமா இல்லையா. ஒரு ஒரே ஒரு மணி நேரம் தான்டா. அங்க போய் பசங்கல விட்டுட்டு நான் உடனே வந்திடுறேன்.
     உன் பிரண்ட்ஸ் கிளம்பிட்டா போக சொல்லுடா. நான் உன்னை கரெக்ட் டைம்கு ஹாஸ்டல்ல சேர்த்திடுறேன்” என ராம் தேவியின் கையை பிடித்து கொண்டு கெஞ்ச உருகி விட்டாள் வசுந்தரா தேவி.
     “சரி ராம். நான் வெயிட் பண்றேன். பட் நீங்க சீக்கிரம் வரனும். இல்ல நான் கிளம்பிடுவேன்” என வசுந்தரா செல்ல மிரட்டல் விட
     “தேங்க்யூ தேவிமா. போய்ட்டு உடனே வந்திடுறேன் செல்லம்” என்று உற்சாகமாக பேசிய ராம் அவளின் கன்னத்தை செல்லமாக தட்டிவிட்டு, அவன் நண்பர்களை அழைத்து கொண்டு ஹோட்டலுக்கு சென்றுவிட்டான்.
     வசுந்தரா தன் தோழிகளை அழைத்து தான் வர நேரம் ஆகும், ராமே தன்னை கொண்டு வந்து விடுவதாக கூறியதையும் எடுத்து சொல்லி அவர்களை அனுப்பி வைத்தாள்.
     “வசுந்தரா சீக்கிரமே வந்திடுடி. ரொம்ப லேட் பண்ணாத. வார்டன் உள்ள விடமாட்டாங்க. அப்புறம் கொஞ்சம் பத்திரமா இரு.
     நான் என்ன சொல்றேன்னு புரியுதா” என செல்லும் முன் அவள் தோழி ராகினியும் அறிவுரை வழங்கியே சென்றாள்.
     “சரி” என வெட்கத்துடன் ஒத்துக் கொண்ட வசுந்தராவும், ராம் வரும் வரை நேரத்தை நெட்டி தள்ள அந்த வீட்டை மற்றும் வீட்டை சுற்றி இருந்த தோட்டத்தை மீண்டும் சுற்றி பார்த்துக் கொண்டிருந்தாள்.
     இப்படியே இரண்டு மணி நேரம் சென்றும் ராம் வரவில்லை. கடுப்பான வசுந்தரா ‘இவரை என்ன இன்னும் காணோம்.
     இப்படியே போனா வார்டன் என்னை கேட் வெளியவே நிறுத்தி வச்சிடுவாங்க. சரி நாம கிளம்பலாம்’ என்று தன் பையை எடுத்து கொண்டு வெளியே வந்தாள்.
     அவள் வாசல்படியை தான்டி வெளியே வரும் நேரம் சரியாக ராமின்‌ காரும் வீட்டின் உள்ளே வந்தது. அதை கண்டு நிம்மதியடைந்த வசுந்தரா தானே அந்த காரை நெருங்கினாள்.
     ஆனால் காரின் உள்ளே இருந்து வெளிவந்த ராமோ தன் தலையை கையில் தாங்கியபடி கீழே இறங்கினான்.
     அவன் சிறிது தள்ளாடியபடி வசுந்தராவை நெருங்க, ராமுக்கு ஏதோ உடல்நிலை சரியில்லை என புரிந்துக் கொண்டவள் அவள் கீழே விழும் முன் தன் கையில் தாங்கி கொண்டாள்.
     “என்னாச்சு ராம். ஏன் ஒரு மாதிரி இருக்கீங்க?” ராஜாராமை கையால் தாங்கியபடி அவன் அறைக்கு வந்துவிட்டாள் வசுந்தரா.
     “தேவி….மா” என்ற ராமின்‌ குளறலான குரலை கேட்டு, அது ஏன் இப்படி வருகிறது என உணர்ந்த வசுந்தரா அதிர்ந்துவிட்டாள்.
     “ராம் குடிச்சிருக்கீங்கலா?” அதிர்வாய் வசுந்தரா கேட்க
     “இல்ல தேவிமா. என் பிரண்ட்ஸ் அவனுங்க எல்லாம் சேர்ந்து இப்படி பண்ணிட்டாங்கடி. என்னோட கூல் டிரிங்க்ஸ்ல சரக்க மிக்ஸ் பண்ணி தந்திட்டாங்க. நானா குடிக்கலை செல்லம்”
     ராஜாராம் கூறியதை வைத்து இது எல்லாம் ராஜாராமின் நண்பர்களின் வேலை என புரிந்து கொண்டாள் வசுந்தரா.
     “என் செல்லம்டி நீ. தேவி உன்னை நான் எவ்ளோ லவ் பண்றேன் தெரியுமா தங்கம். நீதான் என்னோட உயிரு. என்னை பத்தி தெரியும்ல டா. நான் இதுவரை குடிச்சதே இல்ல தெரியுமா.
     ஆனா என்னோட ஃபிரண்ட்ஸ் இப்படி எல்லாம் பண்ணிட்டானுங்க சாரிடி. அப்புறம் இன்னொரு விஷயம்டா. நான் இதுவரை என் பர்த்டேவ அப்பா இல்லாம செலிபரேட் செஞ்சதே இல்லடி.
     ஆனா உனக்காக எல்லாத்தையும் உனக்காக மட்டும் தூக்கி போட்டுட்டு இந்த வருஷம் செலிபரேட் பண்ண வந்துட்டேன்டி”
     தெரியாத்தனமாக குடித்திருந்தாலும் ராம் குடிபோதையில் தன் மனதில் இருந்ததை வசுந்தராவிடம் கொட்டினான்.
     ராம் பேச பேச வசுந்தராவின் கன்னங்கள் சிவந்து விட்டது. அப்படியே மனது ஜிவ்வென்று வானில் பறப்பது போல் இருந்தது.
     இருவரும் பேசிக் கொண்டிருக்கும் போதே திடீரென ராம் ‘வாந்தி வருகிறது’ என்பது போல் செய்கை செய்ய,
     ‘ஐயையோ’ என பதறிய வசுந்தரா அவனை அவசரமாக இழுத்து பாத்ரூமிற்குள் சென்றாள். சிறது நேரத்திலே வயிற்றில் இருந்தது அனைத்தும் வெளியே வந்துவிட தண்ணீர் குழாயை திறந்தாள் வசுந்தரா.
     தண்ணீர் குழாய்க்கு பதில் ஷவரை வசுந்தரா திறந்து விட்டுவிட, தண்ணீர் இருவர் மேலும் பூமாலை பொழிந்தது. ராமை ஒரு பக்கம் தாங்கியபடி ஷவரை அணைக்க முடியாமல் வசுந்தரா திணறி விட்டாள்.
     ஆனால் அவள் ஷவரை அணைக்கும் நேரம் இருவரையும் தண்ணீர் தொப்பலாகவே நனைத்திருந்தது.
     ஒருவழியாக பைப்பை நிறுத்தி, அவனை மீண்டும் அறைக்குள் அழைத்து வந்தாள்.
     அதில் ராமின் போதை பாதி தெளிந்திட, அறையினுள் இருந்த ஏ.சியின் உபயத்தால் போதை இருந்த இடத்தை தற்போது குளிர் ஆக்கிரமித்துவிட்டது.
     “சாரிடி செல்லம். நான் இப்ப குடிச்சிட்டு வந்து உன்னை ரொம்ப கஷ்டபடுத்துறேன்ல. என்னை அடிச்சிடுடி” என அழுக தொடங்க
     “ஐயோ கொஞ்ச நேரம் வாயை மூடுங்க ராம்” என கடுப்பில் கத்தியே விட்டாள் வசுந்தரா.
     “தேவி குளிருதுடி” என ராம் தற்போது நடுக்கத்துடன் கூற, வசுந்தரா எதுவும் கூறவில்லை. அதுமட்டுமே வித்தியாசம்.
     ஏற்கனவே தண்ணீரில் நனைந்தது தற்போது ஏ.சியில் நிற்பது என அவளுக்குள்ளும் குளிர் பரவியது.
     “இதையெல்லாம் குடிக்கிறதுக்கு முன்னாடி யோசிச்சிருக்கனும். ஒரு கூல் டிரிங்க்ஸ்கும் சரக்குக்கும் வித்தியாசம் தெரியாம குடிச்சிட்டு வந்த நீங்க பேசக்கூடாது”
     வசுந்தராவும் முடிந்தளவு தன் கடுப்பை காண்பித்து “இருங்க ராம் டவல் எடுக்கிறேன். இங்க உக்காருங்க” என மெத்தையில் அவனை அமர வைத்து கபோர்டில் டவளை துளாவினாள்.
     ராஜாராமின் பிறந்தநாள் என்பதால் புடவை அணிந்து சிறப்பாக தன்னை அலங்கரித்து வந்திருந்தாள் வசுந்தரா.
     நீரில் நின்றது ராம் எக்கு தப்பாக அவள் மீது சாய்ந்தபடி அறை வரை வந்தது என அனைத்தும் சேர்த்து அவள் ஆடையை அலங்கோலமாக்கி இருந்தது.
     அவள் கபோர்டில் துண்டை தேடும் நேரம் எதேச்சையாக அவளை திரும்பி பார்த்த ராமிற்கு அவள் இடை பளிச்சென்று தெரிய, அவன் மூலை எக்குத்தப்பாக யோசித்து வைத்தது.
     ஏற்கனவே தலையில் ஏறியிருந்த போதை, அந்த மாலை நேர ஏகாந்தம் மற்றும் அறையில் நிலவிய குளிர் என ஏதோ ஒன்றோ இல்லை மொத்தமும் சேர்ந்தோ ராமை நன்றாகவே உசுப்பியது என்பது தான் உண்மை.
     கபோர்டினுள் கையை விட்டிருந்த வசுந்தராவை பின்னாலிருந்து அணைத்துக் கொண்டான் ராம்.
     “என்னடி செல்லம் இது இவ்ளோ வழுவழுன்னு இருக்க” என்று அவள் இடையை வருடியவாறே கேட்க அதிர்ந்து போனாள் வசுந்தரா.
     அப்போது தான் அவள் இருக்கும் நிலையும் தாங்கள் மட்டுமே இருக்கும் தனிமையும் அவளுக்கு புரிந்தது. அவள் தோழி ராகினி கூறிய வார்த்தைகள் அவள் காதில் மீண்டும் விழ
     ‘இப்போ என்ன செய்ய’ என அந்த சூழ்நிலை சமாளிக்க தெரியாது நெளிந்தாள் வசுந்தரா. அது மேலும் ராமே உசுப்பிவிடவே செய்தது.
     “இது தப்பு ராம். கல்யாணத்துக்கு முன்ன இது வேணாங்க” என நமத்துப்போன குரலில் கூற “எனக்கு நீ வேணுமே செல்லம்” என ராம் அவளுக்கு மேல் உருகினான்.
     அதற்கு மேல் யார் கெஞ்சினார்கள் யார் மிஞ்சினார்கள் என தெரியாத அளவு திகட்ட திகட்ட ஒரு கூடல் நடந்துவிட்டது அந்த காதலர்களுக்குள்.
     அன்று வசுந்தரா அவளின் ஹாஸ்டலுக்கும் செல்லவில்லை. அடுத்த நாள் காலை எழுந்த பின்னரே என்ன நடந்தது என ராமிற்கு நினைவு வந்தது.
     அதற்கு பிறகு தவறை புரிந்து யாரை நோவது என உணர்ந்த ராம் சிறிது நேரம் நன்றாக சிந்தித்து ஒரு முடிவை எடுத்தான்.
     நிகழ்ந்தவற்றை எண்ணி அழுதபடி இருந்த வசுந்தராவை ஆதரவாக அணைத்த ராம்
     “தேவிமா அழாதடி. கஷ்டமா இருக்கு‌. நாம தப்பு பண்ணிட்டோம் தான். ஆனா அதை எப்படி சரி பண்ணனும்னு எனக்கு தெரியும்டி” என்ற ராம் தான் எண்ணியதை கூறினான்.
     அழுத விழிகளுடன் ‘என்ன’ என கேள்வியாக வசுந்தரா பார்க்க, அவள் விழி நீரை துடைத்தபடி “நாம கல்யாணம் பண்ணிக்க போறோம்” என முதல் அதிர்ச்சியை தந்தான்.
     “அதுவும் இன்னைக்கே. என் பிரண்ட்ஸ் கிட்ட சொல்லி ஏதோவொரு கோவில்ல வச்சு நம்ம கல்யாணத்த நடத்திக்க போறோம். நம்ம பேமிலிக்குலாம் இதை பொறுமையா சொல்லிக்கலாம்” என தன் திட்டத்தை கூறினான் ராம்.
     இதற்கு மேல் திருமணம் செய்யாமல் எப்படி. அதுமட்டும் இல்லாமல் தவறு நடந்தும் தன்னை விலக்காது இருக்கும் ராம் தனக்கு வேண்டும் என யோசித்த வசுந்தராவும் அதற்கு சம்மதித்தாள்.
     அதன்பின் ராமின் நண்பர்கள் உதவியோடு மருதமலை முருகன் கோவிலில் வைத்து ராஜாராம் வசுந்தரா தேவியின் திருமணம் எளிமையாக நடந்து முடிந்தது.
     தன் தந்தை மற்றும் தமையனிடம் ‘விடுதி உணவு சேரவில்லை. அதனால் தன் தோழியோடு வெளியே வீடெடுத்து தங்கிக் கொள்கிறேன்’ என்று பொய் உரைத்துவிட்டு ராமுடன் தன் வாழ்வை துவங்கிளாள் வசுந்தரா.
     ராஜராமிற்கு கோயம்புத்தூரில் வேலை ஏற்கனவே முடிந்துவிட்டது. வசுந்தராவிற்காக தான் வந்துக் கொண்டிருந்தான்.
     இப்போது வேலை திருச்சியில் என்றிருக்க வாரம் ஒருமுறை வீட்டிற்கு வந்துவிடுவான் ராம். வசுந்தரா தன் வீட்டினரிடம் கூறியபடி அவள் தோழி ராகினியோடு தான் ராம் வீட்டில் தங்கியிருந்தாள்.
     ஆனால் வார இறுதியில் ராம் வரும்போது இயல்பான கணவன் மனைவியாக தான் வாழ்ந்து வந்தனர்.
     அப்படி ஒருமுறை ராம் திருச்சி சென்றவன் ஒரு மாதம் ஆகியும் திரும்பி வரவில்லை. வேலை அவனை அவ்வளவு நெருக்கி பிடித்தது‌.
     இதனாலையே இருவரும் தங்கள் திருமணத்தை அவர்களின் வீட்டிற்கு சொல்லமல் தள்ளிப்போட்டபடி இருந்தனர். கடைசிவரை சொல்ல முடியாமலும் போனது.
     போனில் பேசிக் கொண்டு தான் வசுந்தரா நாட்களை ஓட்டிக் கொண்டிருந்தாள். அன்று கல்லூரி விட்டு வெளியே வந்த வசுந்தராவிற்கு தனக்காக கல்லூரியின் எதிரே காத்திருந்த ராமை கண்டு மகிழ்ச்சி பொங்கியது.
     ராம் அவளை பார்த்து புன்னகைத்தபடி சாலையை கடக்க அப்போது தான் அந்த விபரீதமும் நடந்தது.
     கண் இமைக்கும் நிமிடத்தில் அவள் கண் முன்னே நடந்து வந்துக் கொண்டிருந்த ராமை ஒரு மினி லாரி அடித்து தூக்கி எறிய, அவனை ரத்த வெள்ளத்தில் பார்த்த வசுந்தராவும் மயங்கி சரிந்தாள்.
-மீண்டும் வருவான்

Advertisement