Advertisement

     அருணாசலத்தின் இல்லம் மெல்ல மெல்ல தங்கள் இழப்பின் வேதனையில் இருந்து மீண்டு கொண்டிருந்தது. அந்த ஒரு மாத வீட்டின் இயல்பு நிலைக்கு  ஹர்ஷாவின் பங்கு அலப்பறியது.
     அன்று ஞாயிற்றுக்கிழமை காலை நேரம். வீட்டின் ஹாலில் தான் குடும்பத்தின் அனைத்து உறுப்பினர்களும் இருந்தனர். அப்போது தான் தன் அறையில் இருந்து வெளியே வந்தான் ஹர்ஷவர்தன்.
     வந்தவன் நேராக தன் அத்தை மற்றும் தாத்தாவின் முன்னே சென்று நின்றான். அவன் அத்தை கையில் இருந்த அவனின் செல்ல தம்பியே அதன் காரணம் என்றால் மிகையில்லை.
     சிறிது நேரம் தன் தம்பியை கொஞ்சியவன் அவன் அத்தையை பார்த்து “ஏன் அத்தை என் தம்பிக்கு பேர் வைக்கலையா?
     நம்ம விக்ரம்க்கு அப்போ பெய்ய பங்சன் வச்சு பேரு வச்சோம்ல. அப்பி என் தம்பிக்கு எப்ப பேர் வைக்க போறோம்?” என்றான் தன் நினைவடுக்கில் இருந்த நிகழ்வை தோன்டி எடுத்து.
     கேட்ட அருணாசலம் குடும்பத்தில் இருந்த அனைவருக்கும் “அட இது நமக்கு தோனாம போய்டுச்சே!” என்று தான் தோன்றியது. அதே நேரம் ஹர்சாவிற்கு தன் தம்பி மேல் உள்ள பாசமும் நன்கு புரிந்தது.
       அப்போது “சரி உன் தம்பிக்கு என்ன பேரு வைக்கலாம்னு நீயே சொல்லு கண்ணா” என்ற குரல் அருகே கேட்டது. அது வேற யாருடைய குரலும் இல்லை சாட்சாத் ராஜசேகரின் குரலே. ஆம் ராஜசேகர் இப்போது தன் மனைவியின் இழப்பில் இருந்து நன்றாக மீண்டிருந்தார்.
      கடந்த ஒரு வாரமாக மருத்துவமனைக்கும் சென்று வந்துக் கொண்டிருக்கிறார். காரணம் அவர் இரு மகன்கள் இன்றி வேறு யாராய் இருப்பார்கள்.
     தந்தை தன்னையே தன் தம்பிக்கு பேரை தேர்வு செய்ய சொல்லவும் சிறிது நேரம் தன் குட்டி விரலால் மூலையை தட்டி யோசித்தான் ஹர்ஷா.
      சட்டென அந்த பெயர் அவன் மூலையில் உதையமானது.‌ “அப்பா நான் பேர் செலக்ட் பண்ணிட்டேன். அபிமன்யு எப்படி இருக்கு” என்றான் தன் தம்பியை பார்த்து கொண்டே உற்சாகமாய்.
     சுபத்ரா இருந்த வரை விக்ரம் ஹர்ஷா இருவருக்கும் மகாபாரதம் கதையை கூறுவதுண்டு. அதில் இந்த பேர் ஹர்ஷாவை கவர்ந்திருந்தது. அதையே இப்போதும் முன்மொழிந்தான்.
     ஹர்ஷா பேரை சொன்னவுடன் பெரியவர்களுக்கு மிகவும் ஆச்சரியமாக இருந்தது. அப்போது தான் அவர்களுக்கு ஒன்று புரிந்தது குழந்தைகளுக்கு சிறு வயதில் நாம் என்ன சொல்லி தருகிறோமோ அதை அவர்கள் அப்படியே மனதிற்குள் எடுத்து கொள்கிறார்கள் என.
    எனவே தான் சிறு குழந்தைகளிடம் நல்ல விஷயங்களை சொல்லி தர வேண்டும் என்று சொல்லி சென்றனரோ ஆன்றோர்கள்.
     தன்னை ஆச்சரியமாக பார்த்திருந்த தாத்தா அருணாசலத்திடம் “தாத்தா இந்த பேரு தான் என் தம்பிக்கு வைக்கிறோம்” என்றான் அழுத்தமான குரலில்.
     “ஹர்ஷா குட்டி பேர் சூப்பரா இருக்கு டா. உன் தம்பி பேர் இனிமே அபிமன்யு தான். அதையே வச்சிடலாம் சரியா” என்ற அருணாசலத்திடம் “அப்ப பங்சன்?” என்றான் கேள்வியாய் ஒற்றை புருவத்தை தூக்கி ஒயிலாக.
     தன் செல்ல பேரனை தன்னை நோக்கி இழுத்து அணைத்து “சரிடா பெரிய மனுஷா பங்சன் வச்சிடலாம்” என்றார் அருணாசலம் சிரிப்புடன்.
     அதே போல் அடுத்த வாரமே ஒரு நல்ல நாளை தேர்வு செய்து அன்றே ராஜசேகரின் இரண்டாம் புதல்வன் ஹர்ஷாவின் தம்பிக்கு பெயர் சூட்டு விழா வீட்டின் அளவில் சிறியதாக அழகாக நடைபெற்றது.
     ஹர்ஷா கூறியது போல அவன் தம்பிக்கு அபிமன்யு அருணாசலம் என்ற பெயரே முடிவானதில் ஹர்ஷாவிற்கு ஏக மகிழ்ச்சி. பெயர் சூட்டும் நிகழ்ச்சியில் தன் தம்பியை விட்டு அவன் எங்கும் நகரவில்லை.
     நிகழ்ச்சியும் நல்லபடியே முடிந்தது. ராஜசேகருக்கு தன் மனைவி இல்லை என்பது மனதில் வருத்தமாக இருந்தாலும் தன் பிள்ளைகளுக்கு தான் மட்டுமே இனி என்ற நிதர்சனத்தை புரிந்து கொண்டார்.
     அதன் பின் நாட்கள் அதன் போக்கில் நகர ஆரம்பித்தது. பிள்ளைகளும் வளர தொடங்கினர். ஹர்ஷா தன் தம்பி அபிமன்யுவை தனக்கு தெரிந்த அளவில் நன்றாக பார்த்து கொண்டான்.
     காலை முதல் மாலை வரை பார்வதி பார்த்து கொள்வார். மாலை வீடு வரும் ஹர்ஷா தன்னை சுத்தப்படுத்தி கொண்டு தான் அபிமன்யுவிடம் வருவான்.
     அதே போல் வெளியே சென்று வரும் மற்றவர்களையும் தங்களை சுத்தம் செய்யாது அபிமன்யு முன் வரவிட மாட்டான்.‌ தன் தம்பி இருக்கும் அறையிலே அமர்ந்து வீட்டு பாடங்கள் அனைத்தையும் முடித்து பின் அவனுடனே தன் நேரத்தையும் செலவு செய்ய தொடங்கினான் ஹர்ஷா.
     அவனை பின்தொடர்ந்தது விக்ரமும் அதே போல் நடந்து கொள்ள பார்த்தப் பெற்றோருக்கு மகிழ்ச்சி பிள்ளைகள் தாங்கள் சொல்லாமலே ஒழுக்கத்துடன் நடந்து கொள்வதில்.
     இதில் குட்டி அபிமன்யு வளர வளர தன் அண்ணனை நன்கு அடையாளம் கண்டு கொண்டான். அவன் காலை பள்ளி செல்லும் போது முதலில் முகத்தை முகத்தை பார்த்தவன் இப்போது தானும் வருவதாக அடம் பிடிக்க தொடங்கினான் அழுகையுடன்.
     “அபி குட்டி அழக் கூடாது. அண்ணா ஸ்கூல் போய்ட்டு சீக்கிரம் வந்துடுவேன். அப்புறம் ரெண்டு பேரும் விளையாடலாம்.
      இப்ப சமத்தா அத்தை கூட இரும்பியாம்” என சலிக்காது தினமும் அழனை சமாதானம் செய்தே பள்ளி கிளம்புவான் பொறுப்புள்ள அண்ணனாக ஹர்ஷா.
      அதே போல் எப்படி தான் மாலை ஹர்ஷா வீடு வரும் நேரம் தெரியுமோ இந்த பாசக்கார தம்பியும் வாசலை பார்க்க தொடங்கி விடுவான். பெரியவர்களுக்கு ஆச்சரியமாக மற்றும் மகிழ்ச்சியாக இருந்தது இவர்களை கண்டு‌.
     அபிமன்யுவிற்கு ஒரு வயது ஆன பின் அவனை தன் அறையில் தன்னோடு வைத்து கொண்டான் ஹர்ஷா. அவன் வயதிற்கு மேல் இருந்தது அவனின் முதிர்ச்சி.
     அன்னையும் இல்லாது தந்தை அதுவும் அதிக நேரம் தங்களோடு இல்லாதவர், குடும்பத்தின் பொறுப்பில் வளர்வது இது போன்ற காரணங்களால் இயல்பிலே பொறுப்பான ஹர்ஷா இப்போது அதிக பொறுப்புடன் நடக்க துவங்கினான்.
     அபியை பார்த்து கொள்வதோடு விக்ரமிற்கும் நல்ல எடுத்துக்காட்டாகவும் தோன்ற தொடங்கினான் ஹர்ஷா. பார்வதி, ராஜசேகர் ஏன் அருணாசலத்திற்கே ஹர்ஷாவை காணும் போது இன்னொரு சுபத்ராவாகவே தெரிந்தான்.
     அவ்வளவு பாசத்தையும் தன் குடும்பத்தின் மீதும் அபிமன்யு, விக்ரம் மீதும் அவன் வைத்தான். அவனின் அன்னையின் வார்த்தைகள் படி அந்த குடும்பத்தை சிரிப்புடன் அதற்கும் மேல் உயிர்ப்புடன் வைத்திருந்தான் என்று சொன்னால் சரியாக இருக்கும்.
     அபிமன்யுவிற்கு தன் மீது பாசத்தை பொழியும் அண்ணன் என்றால் அவ்வளவு பிரியம். அதுவும் விடுமுறை நாட்கள் என்றால் சொல்லவே வேண்டாம் அவன் அண்ணன் பின் தான் இருப்பான்.
     ஹர்ஷா படிக்கும் போது தானும் ஸ்லேட்டுடன் அமர்ந்து கொள்வான் அபிமன்யு. இவ்வாறு அன்னை என்ற உணர்வை தானே அறியாது தன் தமையனுக்கு அளித்தான் ஹர்ஷா.
     இவர்களின் பிணைப்பை கண்டு ராஜசேகருக்கு மனதில் சொல்லொணா நிம்மதி. அவரின் மனதில் எழுந்த பயங்கள் இப்போது அநாவசியமாக தோன்றியது.
     காலம் தங்களுக்கு என்ன வைத்திருக்கிறது என தெரியாது என்றாலும் அதை கண்டிப்பாக தன் பிள்ளைகள் துணையோடு சமாளித்து விடுலாம் என்று முழுமையாக நம்பினார் ராஜசேகர்.
     நாட்கள் அதன் போக்கில் நகர வருடங்கள் இரண்டும் கடந்தது. அன்று தீடீரென ஒரு நாள் பார்வதி மயக்கி விழுந்தார்.
     அவரை பரிசோதித்த மருத்துவர் பார்வதி கருவுற்றதாக கூறினார். இப்போது ஐந்து ஆண்டுகள் கழித்து அருணாசலம் குடும்பத்தில் மீண்டும் ஒரு வாரிசு.
     கேட்ட அனைவருக்கும் மகிழ்ச்சியே ஆனால் உள்ளுக்குள் பயமும் சமமாக இருந்தது. அவர்களுக்கு ஏற்பட்ட இழப்பு ஒன்றும் அவ்வளவு சுலபமாக மறக்க கூடியது அல்லவே.
     ராஜசேகர் தானே தன் தங்கையை கண்ணும் கருத்துமாக பார்த்துக் கொண்டார். அவருக்கு இன்னும் சுபத்ராவை ஒழுங்காக பார்க்காமல் விட்டு விட்டோம் என்ற குற்ற உணர்வு இருந்தது.
     அதே தப்பை தன் தங்கையிடம் காட்டக்கூடாது என்று சிறு சிறு விஷயத்திலும் கவனம் செலுத்தினார். ஹர்ஷா தன் பங்கிற்கு மூன்று வயது அபிமன்யு மற்றும் விக்ரமை தன் பொறுப்பில் கொண்டு வந்தான்.
     என்னதான் ஒரு வயதில் இருந்து இரவில் அபியை ஹர்ஷா பார்த்துக் கொண்டாலும், காலை முழுவதும் பார்வதி தான் பார்ப்பார்.
      அவனுக்கு மூன்று வயது ஆகவும் ஹர்ஷாவின் பள்ளியிலே சேர்க்க அபியின் பொறுப்பு முழுவதும் இப்போது ஹர்ஷாவிடம் வந்து விட்டது. அபியும் பள்ளிக்கு அண்ணனுடன் என்றதும் ஆர்ப்பாட்டமாக கிளம்பி விடுவான்.
     பார்வதியின் கணவர் வேதாசலம் மற்றும் தந்தை அருணாசலம் என குடும்பமே பார்வதியை தாங்கியது. எனவே பார்வதிக்கு சிறு தலை வலி என்றால் கூட அப்படி கவனித்து கொண்டனர்.
     இதை எல்லாம் சிரிப்புடன் பார்ப்பதை தவிர எதுவும் செய்ய முடியாது பார்வதியால். அன்று வார இறுதி, ஞாயிற்றுக்கிழமை! காலை உணவிற்கு கூடினர் அனைவரும்.
     அப்போது பார்த்து அபிமன்யு தன்னை தூக்கி சாதம் ஊட்டுமாறு பார்வதியை கேட்டுக் கொண்டு இருந்தான். பெரியவர்கள் அவனுக்கு தன்மையாக சொல்லி புரியவைக்க முயன்றனர்.
     ஆனால் அபியின் அடம் அதிகரித்துக் கொண்டே சென்றது. அந்நேரம் திடீரென “அபி உனக்கு ஒரு தடவை சொன்னா புரியாது. என்ன‌ இவ்ளோ அடம் பண்ற.
     அத்தைய டிஸ்டர்ப் பண்ணக் கூடாது. நீயே உக்காந்து சாப்டு” என்றான் ஹர்ஷா அதிகாரமான குரலில். ஹர்ஷா கத்தவில்லை அதே நேரம் தன் கோபத்தை அவனின் குரலின் அழுத்தத்திலே வெளிப்படுத்தினான்.
     அவனின் குரல் மாறுபாட்டை வைத்தே தன் அண்ணனின் கோபம் உணர்ந்த அபிமன்யு அதற்கு மேல் அவன் வாயை திறக்கவில்லை. சமத்தாக அமர்ந்து ஹர்ஷா சொல்லி கொடுத்தது போல் உண்ண துவங்கினான்.
     பின் பார்வதியை பார்த்து “அத்த இனிமே நீங்க அபிய பாம்பர் பண்றத விட்டுருங்க. அவன் வளந்துட்டான்‌. அதனால அவன் வேலையை அவனே பாத்துப்பான்.
     அப்படி அவனால முடியலைனா நான் இருக்கேன். நீங்க ஸ்ரைன் பண்ணிக்காதீங்க” என்றவன் தன் தம்பியிடம் “அப்படி தானே அபி” என்றான். அவன் சொல்லிய தினுசில் அபிக்கு ஆம் என தலையை அசைப்பதை தவிர வேறு வழியும் இருக்கவில்லை.
     அதே பார்வையை மாற்றாது விக்ரமை பார்க்கவும் அவன் “ஆமா அம்மா நாங்க பிக் பாய்ஸ். சோ இனிமே உங்களை டிஸ்டர்ப் பண்ண மாட்டோம்” என்றான் தானாகவே.
     ஏனெனில் விக்ரமும் அபியும் தான் எப்போதும் பார்வதியிடம் செல்லம் கொஞ்ச சண்டை இட்டு கொள்வார்கள். அதனாலே ஹர்ஷாவின் கோபத்தை கண்டு சுய வாக்குமூலம் அளித்து விட்டான் விக்ரம்.
      ராஜசேகர் பார்வதியிடம் அதிக பளுவை தூக்கக் கூடாது என அனைவர் முன்னிலையிலும் தான் கூறி இருந்தார்.
      அதை வைத்தே சாமர்த்தியமாக அவர்கள் வாயாலையே இப்படி சொல்ல வைத்து விட்டான். இப்போது ஹர்ஷா தன் உணவிலும் தன் தம்பியின் மீதும் கவனம் செலுத்த துவங்கினான்.
      இவனை பார்ப்போருக்கு தன் ஒவ்வொரு செய்கையால் தினம் தினம் ஆச்சரியம் கொடுத்து கொண்டிருக்கிறோம் என உணராது மகிழ்வுடன் தன் அறையை நோக்கி சென்றான் ஹர்ஷவர்தன் அருணாசலம்.

Advertisement