Advertisement

     சங்கவியுடன் வெளியே வந்த அபி அந்த அலுவலக கேன்டீன் இருக்கும் கீழ் தளத்திற்கு சென்றான். தன் அனுமதி இன்றி தரதரவென இழுத்து வந்த அபியை எண்ணி கோபம் வந்தது சங்கவிக்கு.
     ஆனால் அறைக்கு வெளியே வந்ததும் அவன் நடவடிக்கைகள் அப்படியே மாறிப் போனதில் குழம்பிவிட்டாள். அவன் பிடித்திருந்த கையை விட்டுவிட்டு சாதாரணமாக “வாங்க சிஸ்டா!” என்று முன்னே நடந்தவனை எந்த வகையில் சேர்ப்பது என்று சங்கவிக்கு புரியவில்லை.
     தன் முன்னே டேபிளை பார்த்தபடி அமர்ந்திருக்கும் அபியை குழப்பத்துடன் பார்த்திருந்தாள் சங்கவி. “என்ன சிஸ்டா இவன் நம்மள அங்க ரூம்ல வச்சு தரதரன்னு இழுத்துட்டு வந்தான். இங்க வந்து எதுவும் பேசாம தரைய பார்த்ததிட்டு இருக்கானேன்னு தோணுதா? என்று கேட்டு சிரித்தவன்,
     “உங்ககிட்ட ஒரு முக்கியமான விஷயத்தை பத்தி பேசத்தான் சிஸ்டா நான் கூட்டிட்டு வந்தேன். பர்ஸ்ட் நான் யாருன்னு சொல்லிடறேன். அதுக்கு அப்புறம் நான் என்ன பேச வந்தேன்னு சொல்றேன்” என்று தன்னை பற்றி கூறினான் அபி.
     “நான் அபிமன்யு அருணாசலம், நுயூராலஜில ஸ்பெஷலைசேசன் பண்ணிட்டு இருக்கேன். விக்ரம் என்னோட அத்தை பையன். அவனை பத்தி தான் பேச வந்தேன் சிஸ்டா.
     எங்க விக்ரம் பையன் கெஞ்ச நாளா சரியே இல்லைங்க. ஆபிஸ் விட்டு வந்தா எப்பவும் வீடு புல்லா சலம்பிட்டு திரியரவன், இப்போ கொஞ்ச நாளா வந்தோன்னே விட்டத்த பாத்து சிரிச்சிட்டு படுத்திருக்கான்‌.
     வாய் ஓயாம பேசிட்டே இருக்கிறவன் இப்போலாம் வாய திறந்தா ஒருத்தர பத்தி தான் பேசிட்டே இருக்கான்‌. அதான் அவங்கல பத்தி உங்ககிட்ட கேக்கலாம்னு வந்தேன் சிஸ்டா” என்று சொல்லவந்ததை சொல்லி முடித்தான்.
     இப்போது சங்கவியின் முகம் ஒருமாதிரி ஆகிவிட்டது. தயக்கமாக அபியை பார்த்த சங்கவி “என்ன சார் சொல்றீங்க?” என்றாள் சங்கடமாக. “ஐயோ இந்த சார் மோர்லாம் வேணாம் சிஸ்டா.
     என்னை விட எப்படியும் நீ சின்ன பொண்ணா தான் இருப்ப. சோ என்ன நீ அண்ணான்னே கூப்பிடலாம் ஓகேவாமா” என்று அபி அவசரமாக குறிக்கிட்டு சொன்னான்.
     அபி கூறிய வேகத்தில் சிரித்த சங்கவி “ஓகே அண்ணா” என்றாள். “இது ஓகேமா. இப்போ நான் எதுக்கு உன்கிட்ட பேசறேன்னா‌. இந்த விக்ரம் ஒரு பொண்ணு பேர சொல்லி புலம்பிட்டு இருக்கான்னு சொன்னேன்லமா.
     அது வேற யாரும் இல்ல நீதான். சார்க்கு உன் மேல பயங்கர கிரஷ் போல. இன்னும் சொல்லப்போனா அவனுக்கு உன் மேல லவ் வந்திருச்சுனு தான் நான் நினைக்கிறேன்.
     இதுல ஹைலைட் என்னன்னா அவன் உன்னை லவ் பண்ற விஷயம் அவனுக்கே புரியலைமா” என்று முடித்தான் அபி. “என்னன்னா சொல்றீங்க. அவர் என்னை ஆர்வமா பார்ப்பாரு தான். ஆனா லவ் எல்லாம்” என்று சங்கவி இழுக்கும் போது,
     “ஓஓ… உனக்கே தெரியர அளவுக்கு சார் ஜொல்லு ஊத்திட்டு அலையுராரா. ஆனா ஒன்னுமா அவன் உன்னை லவ் பண்றான்” என்று கூறிய அபி விக்ரம் வீட்டில் நடந்துக் கொண்ட விதம், அதை வைத்து தான் கண்டுபிடித்தது.
     மேலும் அவனை தூண்டிவிட தற்போது செய்துவிட்டு வந்தது என அனைத்தையும் கூறினான். கேட்ட சங்கவிக்கு ஆச்சரியமாக இருந்தது.
     “நான் உன்ன கையப்புடிச்சு இழுத்துட்டு வந்ததும் அவனை கடுப்பேத்த தான். உன்னை கூட்டிட்டு வரப்போ அவன் முகத்தை பார்த்தேன். பையன் முகம் கோபத்துல அப்படியே ஜிவுஜிவுன்னு ஆகிருச்சு” என்று கூறி சிரித்தான்.
     அதில் தானும் புன்னகைத்த சங்கவி “ஆனா அவரே வந்து லவ்வ சொன்னா நான் ரொம்ப சந்தோஷப்படுவேன் ண்ணா” என்று தயக்கமாக கூறி அபியின் முகத்தை பார்க்க “உன் மனசு எனக்கு புரியுது மா. ஆனா அவன் வந்து  உன்கிட்ட லவ்வ சொல்றதுக்குள்ள நீ ஔவையார் ஆகிடுவ. பரவாயில்லையா” என்று கிண்டலாக கேட்டான்.
     பின்னே இவ்வளவு நேரம் அவன் கூறிய கதையில் விக்ரம் எந்த இடத்திலாவது அவளை காதலிக்கிறேன் என எண்ணத்திலாவது வெளிப்படுத்தியுள்ளானா என்ன?
     அவனை வைத்துக் கொண்டு சங்கவியின் பாடு சற்று கஷ்டம் தான் என்பதும் மறுக்கமுடியாத உண்மையே!
     “இங்க பாரு சங்கவி இதுதான் பிளான். முடிஞ்ச அளவு அவனோட பொசசிவ்நெஸ்ஸ தூண்டுறோம். அவன் மனசை அவனுக்கு புரிய வைக்கிறோம். டீலா?” என கைக்காட்ட “என்னமோ நீங்க சொல்றீங்கன்னு ஒத்துக்கிறேன். டீல் ண்ணா” என்றாள் சங்கவியும்.
     அனைத்தையும் பேசி முடித்த பின்னர் இருவரும் விக்ரமின் அறை நோக்கி சென்றனர். அங்கே விக்ரம் முகம் கதவையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தது‌.
     சிரித்து பேசியபடி வந்த அபியையும் சங்கவியையும் பார்த்த விக்ரம் முகம் மீண்டும் கோபத்தில் சிவந்தது. ‘என் கவி கைய பிடிச்சிட்டு வரான். இவளும் பல்லை காட்டிட்டு வரா. இவ மனசுல என்னதான் நினைச்சிட்டு இருக்கா’ என்று பல்லை கடித்து கொண்டான்.
     வந்த வேலை சிறப்பாக முடிந்ததில் “சரி அத்தான் நான் கிளம்பறேன். நீ வேலைய பாரு” என்று கூற நிம்மதி பெருமூச்சு விட்டான் விக்ரம் ‘இதோட போறானே’ என.
     ஆனால் நான் போனாலும் உன்னை நிம்மதியாக இருக்க விடமாட்டேன் என கங்கனம் கட்டியது போல் அபி செல்லும் நேரம் “நான் போய்ட்டு வரேன் கவிமா” என்று கூறி கண்ணடித்து விட்டு அம்முவை அழைத்துக் கொண்டு செல்ல விக்ரமின் மொத்த நிம்மதியும் பறிப்போனது.
———————————–
     “ஹர்ஷா ஏன் இப்படி பண்றீங்க. நேத்தும் நீங்க ஹாஸ்பிடல் போகலை. பார்வதி அம்மா கேட்டப்ப நான் ஏதேதோ சொல்லி சமாளிச்சேன்‌. இன்னைக்கும் இப்படி செஞ்சா எப்படிப்பா” என்று கட்டிலில் படுத்து கொண்டு எழுந்து வர அடம் செய்துக் கொண்டிருந்த ஹர்ஷாவிடம் தான் புலம்பிக் கொண்டிருந்தாள் அனு.
     ‘நீ என்னவோ பேசிக்கொள். எனக்கு எதுவும் கேட்கவில்லை’ என்பது போல் அனுவின் புடவையை அணைத்து கொண்டு படுத்திருந்தான் ஹர்ஷா.
     “ப்ச் என்னப்பா இப்படி செய்றீங்க. டைம் ரொம்பவே ஆகிருச்சு. நீங்க இப்போ எழுந்து கிளம்பினா தானே ஹாஸ்பிடல்கு சரியான நேரத்துக்கு போக முடியும். அடம் பண்ணாம எழுந்திருங்கப்பா” என்று ஹர்ஷாவை எழுப்ப படாதப்பாடு பட்டுக்கொண்டிருந்தாள்‌.
     அவளின் உலுக்கலுக்கு ஒருவழியாக திரும்பிப்படுத்த ஹர்ஷா “ஏன்டி புருஷன் டையட்ல தூங்குனா, அவனை டிஸ்டர்ப் பண்ணக்கூடாதுன்னு நினைக்காம இப்படி தான் போட்டு உலுக்கி எடுப்பியாடி” என்று கேட்டுக் கொண்டே அவளையும் இழுத்து கட்டிலில் தள்ளினான்.
     “ஐயோ அம்மா” என்று கத்தியபடி ஹர்ஷாவின் அருகே விழுந்த அனு “ஏன் ஹர்ஷா இப்படி செய்றீங்க. நான் குளிச்சிட்டேன். இனிமே என்னால மறுபடியும் குளிக்க முடியாதுபா. ஆள விடுங்க” என எழுந்து கொள்ள பார்த்தாள்.
     ஆனால் அவளை போகாமல் தடுத்த ஹர்ஷா “நீ அவ்ளோ கஷ்டப்பட்டு குளிக்கப் போக வேணாம் செல்லம். அத்தான் எதுக்கு இருக்கேன். நான் பாத்துக்கிறேன்” என்று தனக்கு தேவையானதை எடுத்துக் கொண்டே விட்டான் அந்த பிடிவாதக்காரன்.
     இப்படி ஹர்ஷாவின் கொஞ்சலிலும் அனுவின் கெஞ்சலிலும், ஒருவழியாக ஹர்ஷா சினுங்கிக் கொண்டே மருத்துவமனைக்கு கிளம்பி சென்றான்.
     மாலை நேரம் வீட்டிற்கு வந்த ஹர்ஷா ஹாலில் அமர்ந்திருந்த ராஜசேகரை கண்டு அவர் அருகில் சென்று “அப்பா என்ன இந்த டைம் இங்க உக்கார்ந்து இருக்கீங்க” என்றவாறு அமர்ந்தான்.
     ஹர்ஷாவை பார்த்து புன்னகைத்த ராஜசேகர் அவனின் தலையை வாஞ்சையுடன் தடவியவாறு “ஒன்னும் இல்ல கண்ணா சும்மா தான்” என்றார்‌.
     அன்று வசுந்தரா மற்றும் கணபதி ராம் பேசியதை கேட்டு மனதை போட்டு குழப்பிக் கொண்டு இருக்கிறார் ராஜசேகர் ‘எங்கே தன் மகனை அவர்கள் உரிமை கோரி வந்துவிடுவார்களோ’ என.
     அதிலிருந்தே மனம் பதற்றத்தோடு சுற்றிக் கொண்டிருக்கிறார் ராஜசேகர். “அப்பா நீங்க ரெண்டு நாளா சரியே இல்லை. நானும் அதை கவனிச்சிட்டு தான் இருக்கேன்‌. அது ஏன்னு எனக்கு தெரியும்பா” என்று கூற திடுக்கிட்டார் ராஜசேகர்.
     “என்னப்பா?” என்று அதிர்வுடன் ராஜசேகர் கேட்க “இன்னும் ஒன் வீக்ல அம்மாவோட நினைவு நாள் வருதுல. அவங்கல நினைச்சு தானே நீங்க இப்படி இருக்கீங்க” என்று கேட்க அப்போது தான் ராஜசேகருக்கே சுபத்ராவின் நினைவு தினத்தை மறந்தது ஞாபகம் வந்தது.
     எனவே “ஆம்” என்பது போல் தலை அசைத்தார் ராஜசேகர். “அப்பா பீல் பண்ணாதீங்க. அம்மா நம்ம கூடவே தான் இப்பவும் இருக்காங்க. அப்புறம் அப்பா இதையே நினைச்சிட்டு இருக்காதீங்க‌. அன்னைக்கு அபியோட பர்த்டே கூட.
     சோ எப்பவும் போல அம்மாக்கு கோவில் வச்சு திதி கொடுத்துட்டு வந்திடுவோம். அன்ட் ஈவ்னிங் பார்ட்டி அரேஞ்ச் பண்ணப்போறேன் ப்பா. நீங்க அவனை அப்செட் பண்ணக்கூடாது. புரியுதா” என எல்லா வருடமும் சொல்வதை மீண்டும் சொல்லி சென்றான்.
     ஹர்ஷா சென்றபின் தன் மகனை பெருமை பொங்க பார்த்த ராஜசேகர் எக்காரணம் கொண்டும் அவனை யாருக்கும் தரமாட்டேன் என உறுதி பூண்டார். அதன் பின்னே சற்று தெளிந்தார்.
     அனுவுக்கு ஹர்ஷா வீட்டிற்குள் வந்தவுடன் தன் மாமனாரிடம் பேசிவிட்டு மேலே செல்லும் போது வருத்தமாக சென்றது போல் தோன்ற, ஹர்ஷாவின் பின்னே சென்றாள். அங்கே ஹர்ஷா விட்டத்தை வெறித்தப்படி படுத்திருந்தான்.
     தன் கணவனை இதுவரை இப்படி ஒரு நிலையில் கண்டிராத அனு “என்னங்க என்னாச்சு? ஏன் இப்படி இருக்கீங்க” என பதற்றமாக கேட்டுக் கொண்டே அருகில் அமர்ந்தாள் அனு.
     அனுவை திரும்பி பார்த்த ஹர்ஷா, அவள் மடியில் தன் தலையை வைத்து அவள் இடுப்பை கட்டிக் கொண்டான். அனு என்ன கேட்டாலும் எதுவும் சொல்லாமல் படுத்திருந்த ஹர்ஷா சிறிது நேரம் கழித்து வாயை திறந்தான்.
     ” எனக்கு அப்போ அஞ்சு வயசு தான்டி இருக்கும். அப்போ எங்கம்மா என் கைய பிடிச்சுட்டு நான் சாமிய பார்க்க போறேன் ஹர்ஷா. நான் திரும்ப வர வரைக்கும் நீதான் உன் அப்பா தம்பி நம்ம குடும்பத்தை எல்லாத்தையும் நல்லா பாத்துக்கணும் குட்டின்னு சொன்னாங்கடி.
     அப்போ எனக்கு ஒன்னும் புரியலை. ஆனா அம்மா வரவரை நம்ம குடும்பத்தை நல்லா பாத்துக்கனும்னு பாத்துக்க ஆரம்பிச்சேன். வருஷாவருஷம் அபியோட எல்லா பர்த்டேக்கும் அவன் அழுதுட்டு இருப்பான்டி.
     நான் தான் அவனை சமாதானப்படுத்தி வீட்ல பார்ட்டி பண்ணுவோம். இன்னும் ஒன் வீக்லி அவன் பர்த்டேடி. அதோட அம்மாவோட நினைவு நாள். அதான் அப்பா அப்செட்டா இருக்காரு.
     இன்னும் ஒன் வீக் தான் அனு, அபியை நாம தான் பார்க்கனும்டி” என்று கூறி முடித்தவன் “ஆனா அனு நான் அம்மாக்கு பிராமிஸ் செஞ்சது போல நம்ம பேமிலிய நல்லா தானேடி பாத்துக்கிறேன்.
     அப்புறம் ஏன்டி இன்னும் அவங்க என்கிட்ட வரலை” என்று கூறி அனுவை இறுக்கி அணைத்தான் ஹர்ஷா. அதில் ஹர்ஷாவின் கஷ்டத்தை உணர்ந்த அனு “கவலைப்படாதீங்க ஹர்ஷா கூடிய சீக்கிரம் உங்க அம்மாவே நமக்கு பொண்ணா பிறக்கப் போறாங்க பாருங்களேன்” என்று கூற
     “நிஜமாவா அனு குட்டி” என்று கேட்ட ஹர்ஷாவை காண ஐந்து வயது சிறுவன் போல் தான் தெரிந்தது அனுவிற்கு. ‘ஆம்’ என்ற அனுவும் அவனை நன்றாக அணைத்து கொண்டாள் ‘இனி என்றும் உன் அன்னையாக நான் இருப்பேன்’ என்பது போல்.
-மீண்டும் வருவான்

Advertisement