Advertisement

     வசுந்தரா தன் பெயரை சொன்னவுடன் “ராம்-தேவி!” என்று தனக்குள் சொல்லி பார்த்த ராம் “வாவ்! நைஸ் நேம்” என்றான் புன்னகையுடன். எப்போதும் போல் அந்த விரிந்த புன்னகையில் வீழ்த்தப்பட்டாள் வசுந்தரா.
     அதற்கு மேல் என்ன பேசுவது என புரியாத வசுந்தரா “அப்போ நான் போகட்டுமா?” என்றாள் தயக்கமாக. அவளின் முகத்தில் இருந்த தயக்கத்தை கண்ட ராமும் “சரி போ தேவிமா” என்றான். இதுவரை தேவி என்று வசுந்தராவை யாரும் அழைத்தது இல்லாததால், அந்த பெயர்‌ அவளுக்கு பிடித்துவிட்டது.
     இப்படியே இவர்கள் நாட்கள் செல்ல ராம் தேவியின் உறவு நட்பு என்ற எல்லையை விட்டு மேலே தான் இருந்தது. அவர்களுக்கு அது என்ன உறவு என தெரிந்தாலும் அதை வாய்விட்டு சொல்லிக் கொள்ளவில்லை.
     அன்று வார இறுதி நாள் எப்போதும் போல் வசுந்தரா வீட்டில் இருந்து விஸ்வநாதன் மட்டும் அவளை பார்க்க வந்திருந்தார். வசுந்தரா வீட்டில் இருந்து காலை நேரமே ஆட்கள் வந்துவிடுவதால் ஞாயிறு அன்று மட்டும் ராம் மாலை போல் வசுந்தராவை வந்து பார்த்து செல்வான். அதேபோல் காலையில் வந்த தமையனை அணைத்து கொண்டு பாச மழை பொழிந்தாள் வசுந்தரா.
     “என்ன ண்ணா நீ மட்டும் வந்திருக்க, அப்பா வரலையா?” என்றாள் பின்னால் நின்ற காரை பார்த்தபடி. அதற்கு “வசுமா நம்ம கம்பெனி ஒரு புராஜெக்ட் சைன் பண்ண போறதா போன்ல சொன்னேன்லமா. அதை செலிபரேட் பண்ண அந்த கம்பெனி ஓனர் ஒரு பார்ட்டி அரேஜ்ச் பண்ணியிருக்காரு.
     அதுக்கு நாமலும் போகனும்மா. இன்பேக்ட் இது நம்ம ரெண்டு கம்பெனியும் சேர்ந்து தர விருந்து. அப்பா நீயும் இருக்கனும்னு ரொம்ப ஆசைப்படறார். நானும் தான்மா. அதான் உன்னை கூடவே கூட்டிட்டு போகலாம்னு வந்துட்டேன்” என்று தான் மட்டும் வந்த காரணத்தை விஸ்வநாதன் கூறி முடித்தார்.
     விஸ்வநாதன் கூறியதை கேட்டு மகிழ்ந்த வசுந்தரா “ஹேய்! சூப்பர் ண்ணா. இதோ நான் போய் பேக் எடுத்துட்டு அப்படியே காலேஜ்க்கு லீவ் சொல்லிட்டு வந்திடுறேன்” என்று சிட்டாய் பறந்து சென்றாள்.
     சென்னை சென்றடைந்த வசுந்தராவை ராகவன் பாசமாய் அணைத்து கொள்ள அவளும் தந்தையை ஆரவாரமாய் அணைத்து கொண்டாள். தந்தையுடன் பாசப் போராட்டத்தை முடித்த வசுந்தரா “சரி போய் பிரஸ் ஆகிட்டு வா” என கூறிய அண்ணன் பேச்சைக் கேட்டு தன் அறைக்கு வந்தாள்.
     அறைக்கு சென்ற சில நிமிடங்கள் கடந்த பின்னர் தான் தன் மனதில் ஏதோ ஒன்று குறைவது போல் உணர்ந்தாள். நேரம் செல்ல செல்ல வசுந்தராவின் மனது கோயம்புத்தூரிலையே விட்டு வந்தது போன்ற எண்ணம் எழுந்தது.
     ‘என்னாச்சு வசு உனக்கு?’ என தனக்கு தானே கேள்வி கேட்டுக் கொண்டவளின் மனக்கண்ணில் அவள் மனம் கவர்ந்த கண்ணாளன் ராமின் முகம் தோன்றி மறைந்தது‌.
     அப்போது தான் காலை கிளம்பும் நேரம் இருந்த உற்சாகத்தில் ராமை பார்க்க மறந்ததே நினைவு வந்தது.
     “அவரை பார்க்காம வந்ததா இப்படி மனச போட்டு படுத்துது. ஐயோ வசு என்னடி இப்படி ஆகிட்ட. இந்த ராம் என்னை அநியாயத்துக்கு மயக்கி வச்சிருக்காரு போலையே” என்று எண்ணியவள் வெட்கி சிவந்தாள்.
     “ராம்! ராம்” என கூற அந்த பெயரே அவ்வளவு தித்தித்தது வசுவிற்கு. சில நிமிடங்கள் கழித்து தன் அண்ணனின் அழைப்பில் உணர்வுக்கு வந்த வசுந்தரா அதன்பின் தமையனை பார்க்க சென்றாள்.
     அந்த ஐந்து நட்சத்திர விடுதி பலதரப்பட்ட தொழிலதிபர்களால் நிறைந்து இருந்தது. விஸ்வநாதனுடன் சேர்ந்து புராஜெக்ட் செய்ய இருந்த கம்பெனி சமூகத்தில் கொஞ்சம் பெரிய நிலையில் இருந்ததால், அவர்களின் அழைப்பின் பேரில் நிறைய நிறுவன தலைவர்கள் அங்கே குழுமி இருந்தனர்.
     அதில் ராமும் அவன் நிறுவனத்தின் தலைவர் என்ற முறையில் அங்கே வந்திருந்தான். அவனுக்கு அறிமுகமாக பலர் அங்கே இருந்ததில் அவனும் அவர்களோடு பேசிக் கொண்டிருந்தான். அப்போது அந்த விடுதியின் தோட்டத்தில் ஒரு பெண் அவன் வசுந்தரா தேவியை போல் நிற்பது தெரிந்தது.
     இன்னும் அருகே சென்று பார்க்க எண்ணிய ராம் தான் பேசிக் கொண்டிருந்த நபரிடம் சொல்லி கொண்டு தோட்டத்தின் பக்கம் சென்றான். அங்கே நிலவு ஒலியில் தேவதை போல் தன்னுடைய தேவி நின்றதை கண்டு வாயடைத்து நின்று விட்டான்.
     நேற்று சென்னை கிளம்பும் முன் தன் தேவியின் தரிசனத்தை கண்டுவிட்டு வரலாம் என கல்லூரி விடுதிக்கு சென்றவர், வசுந்தரா ஊருக்கு கிளம்பியதை கேட்டு ஏமாற்றத்துடன் திரும்பினார்.
     நேற்று ஒரு நாள் வசுவை பார்க்காததிலே ஓய்ந்து போய்விட்டார் ராம். எனவே அவர் கோயம்புத்தூருக்கு திரும்பி வந்தபின் தன் காதலை உடனே சொல்லிட எண்ணி இருந்தார்.
     இன்று எதிர்ப்பாராத விதமாக இங்கே வசுந்தராவை பார்த்ததில் அவ்வளவு மகிழ்ந்தார் ராம். அதே மகிழ்வுடன் “தேவிமா!” என்று மென்மையாக அழைக்க, ராமின் குரலை சட்டென கண்டுக் கொண்ட தேவி “ராம்!” என்றவாறு திரும்பினாள். அவள் குரலில் இருந்த பரவசத்தை கண்டுக் கொண்ட ராமுக்கும் புன்னகை வந்தது.
     “நீ இங்க என்ன பண்ற தேவிமா?” என்று வசுந்தரா திரும்பியவுடன் கேட்டார் ராம். “இந்த பங்ஷன்க்கு நாங்க ஹோஸ்ட் ராம். எங்க கம்பெனி தான் இவங்க கிட்ட புராஜெக்ட் வாங்கிருக்காங்க. சோ அதான் நானும் கணடிப்பா கலந்துக்கனும்னு அண்ணா கூட்டிட்டு வந்துட்டாங்க” என்று படபடவென ஒப்பித்தாள் வசுந்தரா.
     அவளுக்கு இரண்டு நாளாக ராமை பார்க்க முடியாத ஏக்கம், திடீரென இங்கே ராமை கண்டது என பல கலவையான உணர்வு உள்ளே சுழன்று அடித்தது. அதை அவள் முகத்தைப் பார்த்து உணர்ந்த ராமுக்கும் மகிழ்ச்சியாக இருந்தது.
     “ஓஓ.. அதான் நேத்து உன்னை ஹாஸ்டல்ல பார்க்க முடியலையா. சரி நானும் சென்னை கிளம்பறத உன்கிட்ட சொல்லலாம்னு தான் வந்தேன். ஆனா நீ ஊர்க்கு கிளம்பிட்டன்னு உன் பிரண்ட் சொல்லவும் என் மனசுக்கு ரொம்ப கஷ்டமா போயிடுச்சுடா.
     சரி போயிட்டு வந்து உன்னை பார்த்துக்கலாம்னு நானும் என்னை சமாதானபடுத்திகிட்டேன். பட் உன்னை இங்க பார்ப்பேன்னு நான் நினைச்சு கூட பார்க்கல. இட் இஸ் அ பிளசன்ட் சர்ப்பிரைஸ் பார் மி” என்று தன் மனதில் இருந்தவற்றை எல்லாம் கொட்டி கொண்டிருந்தான் ராம்.
     இதையெல்லாம் கேட்டிருந்த தேவிக்கும் வானில் பறப்பது போல் மகிழ்ச்சியாக இருந்தது. ராம் மெல்ல இப்போது விஷயத்திற்கு வந்தார். “தேவி உன்கிட்ட ஒரு முக்கியமான விஷயம் சொல்லனும்டா” என்று ஆரம்பிக்க “என்ன ராம்?” என தேவி கேட்டாள்.
     “இந்த ரெண்டு நாள் உன்னை பார்க்காமையே எனக்கு என்னமோ இழந்த பீல் தேவி. நீ பக்கத்துல இல்லைனா கண்டிப்பா நான் நானாவே இருக்க மாட்டேன்னு தான் தோனுது. சோ என் லைப் புல்லா எனக்கு ஒரு நல்ல தோழியா, வெல்விஷரா, அம்மாவா என்கூட லைஃப் புல்லா என்னோட மனைவியா இருப்பியா தேவிமா” என கண்களில் உயிரை ஏந்தி கேட்டு நின்றான் ராம்.
     தேவிக்கு ராமின் கேள்வியில் உடலில் ஒரு பூரிப்பு ஓடி நின்றது. கண்களில் தன்னால் நீர் இறங்கிட ராமே எதிர்ப்பாராத விதமாக அவனை அணைத்துக் கொண்டு “கண்டிப்பா ராம். எனக்கும் உங்களை ரொம்ப பிடிச்சிருக்கு” என்றாள் தேவி.
     தேவி தன்னுடைய காதலை ஏற்றுக்கொண்டதில் மகிழ்ந்த ராம் “தேவிமா” என்று அவளை தானும் அணைத்து நின்றார். இவர்கள் சிறிது நேரம் இதே மோன நிலையில் இருந்திட, முதலில் தன் உணர்வுக்கு வந்த ராம் “எப்படிமா உடனே ஓகே சொல்லிட்ட” என்று வியப்புடன் கேட்டார்.
     அதில் புன்னகைத்த தேவி “ஆரம்பத்தில இருந்தே உங்கள எனக்கு பிடிக்கும் ராம். அதுவும் உங்க இந்த சிரிப்பு தான் என்னை உங்க பக்கம் இழுத்தது. தினமும் நாம மீட் பண்றப்ப எனக்கு ஒன்னும் தெரியலை. ஏன் ஊருக்கு வர வரைக்குமே நான் பீல் பண்ணல.
     ஆனா அதுக்கு அப்புறம் தான் உங்களை ரொம்ப மிஸ் பண்ணுனேன். உங்கள‌ பார்க்காத இந்த ரெண்டு நாள் எதையோ இழந்த மாதிரி தான் எனக்கும் பீல் ஆச்சு. அதான் கோயம்புத்தூர் வந்துட்டு என் மனசில இருக்கிறதை உங்ககிட்ட சொல்லணும்னு நினைச்சேன்.
     அப்புறம் உங்கள இங்க பார்த்த உடனே எவ்வளவு சந்தோஷப்பட்டேன் தெரியுமா. இப்படி நீங்க என் மனசுல வந்த அப்புறம் உங்க லவ்வ நான் எப்படி ஏத்துக்கமாட்டேனு சொல்லுவேன்” என்று வசுந்தரா கூறியவுடன் இன்னும் மகிழ்ந்த ராம் தன் தேவியை நன்றாக அணைத்து கொண்டார்.
     இப்படி தொடங்கிய இவர்கள் காதல் கோயம்புத்தூர் சென்றும் நீடித்தது. ராம் தினமும் தேவியை பார்க்க வந்துவிடுவார். அதுவும் அவர்கள் கம்பெனியின் கட்டுமான வேலைகள் முடிந்த பின்னும் கூட தேவிக்காக இங்க வருவதை வழக்கமாக்கி கொண்டார்.
     ராம் தேவி மகிழ்ச்சியுடன் தங்கள் நாட்களை கழிக்க, இவர்கள் மகிழ்ச்சியை மேலும் கூட்டும் வண்ணம் ராமின் பிறந்தநாள் வந்தது.
     இவர்கள் காதலிக்க தொடங்கிய பின் வந்த முதல் பிறந்தநாள் என்பதால் தன் வீடிருந்த சென்னைக்கு கூட செல்லாது கோயம்புத்தூரிலையே இருந்து கொண்டார் ராம்.
     இந்த பிறந்தநாள் விழா தான் ராம் தேவியின் வாழ்வில் மிகப் பெரிய பூகம்பத்தை கொண்டு வரும் என அறிந்திருந்தால் இருவரும் கொஞ்சமேனும் சுதாரித்து இருப்பரோ!
—————————-
     “வசும்மா எங்க இருக்க நீ” என்று கேட்டுக் கொண்டே வந்த கணபதி ராமின் குரலில் தன் இறந்த காலத்தில் இருந்து வெளி வந்த வசுந்தரா “என்னங்க” என்றார்.
      “என்னம்மா இன்னும் நீ கிளம்பலையா? இன்னைக்கு ஷரா வீட்டுல விருந்துன்னு நம்மல கூப்பிட்டுருக்காங்க. போகனும்ல நீ என்ன பண்ற” என்று கணபதி கேட்ட பின்னரே நினைவு வந்தவர் போல் “ஆமாங்க மறந்தே போய்ட்டேன். இதோ இப்ப கிளம்பறேன்” என்று கிளம்பினார் வசுந்தரா.
     “அப்புறம் இன்னொரு முக்கியமான விஷயம் வசும்மா. அங்க போய் நீ எதுவும் வார்த்தையை விட்டுராத. நான் என்ன சொல்ல வரேன்னு புரியுதாமா?” என்று கணபதி தயங்கியபடி கேட்கவும்,
     எதையோ நினைத்து வந்த அழுகையை அடக்கி முகத்தில் போலியாக புன்னகையை தவழவிட்ட வசுந்தரா “ம்ம் புரியுதுங்க. நான் எதையும் காமிச்சுக்கல” என்றார்.
     வசுந்தரா கிளம்ப சென்றபின் கணபதி ராமின் முகம் விகரமாய் மாறியது. “அந்த ஹர்ஷாவ பார்க்க தானே வர வசு.
     அவன் இருக்கற வரை என் வாழ்க்கையில நிம்மதி இருக்காது. அவனை கூடிய சீக்கிரம் இல்லாம ஆக்குறேன்டி” என்று வன்மையாக எண்ணி சிரித்தார் கணபதி ராம்.
     கணபதி எதை பற்றி பேசக்கூடாது என வசுந்தராவிடம் எச்சரிக்கை செய்து கிளப்பினாரோ, வசுந்தரா அதையே அங்கு சென்று பேசப்போகிறார் என ராம் அறியவில்லை பாவம்.

Advertisement