Advertisement

     “என்ன பார்த்தா உங்களுக்கு எப்படி தெரியுது? கொலைகாரன் மாதிரியா? ஹான். எவ்ளோ தைரியம் இருந்தா ஒரு டாக்டர் என்கிட்ட வந்து இதை கேட்டுருப்பீங்க” என அகிலன் ஹைப்பிச்சில் கத்திக் கொண்டிருந்தான்.
     “இங்க பாருங்க டாக்டர். இந்த கத்துற வேலையெல்லாம் வச்சுக்காதீங்க. உங்களால நான் சொல்றதை செய்ய முடியுமா முடியாதா?” என்று கறாராக கேட்டான் ராமின் அடியாள் மோகன். அன்று ராம் அவனுக்கு இட்ட பணியை செய்ய இன்று அகிலனை தேடி வந்துவிட்டான் மோகன்.
     அந்த அடியாளை பார்த்து முறைத்த அகிலன் ‘ஏதோ சரியில்லையே! இவன் உண்மையாவே ஹர்ஷாவோட எதிரியா, இல்லை இவன் பின்னாடி இருந்து வேற யாரும் தூண்டி விடுறாங்களா? நம்மல லாக்கப் உள்ள வைக்கிறதுக்கு மட்டும் எல்லா வேலையும் பண்றானுங்க போலையே’ என்று யோசித்தான்.
     அதை கவனித்த மோகன் “என்ன டாக்டர்! என்ன யோசைனை பண்றீங்க. உங்களால இதை செய்ய முடியுமா முடியாதா?” என்று மீண்டும் கேட்க எதோ யோசித்த அகிலன்
     “எனக்கு கொஞ்சம் டைம் குடுங்க. நான் யோசிச்சு சொல்றேன்” என்று முடித்து கொண்டான். அந்த ஆட்களும் சென்றுவிட பின்னே தீவிர யோசைனையில் இறங்கிய அகிலன் யோசனையின் முடிவில் யாருக்கோ அழைத்தான்.
     சிறிது நேரம் எல்லாவற்றையும் பேசி முடித்தவன் ஒரு முடிவிற்கு வந்தவனாய் கைப்பேசியை வைத்து விட்டான். அதன் பின் அடுத்த நாள் அந்த மோகனிற்கு அழைத்து “இங்க பாரு மோகன். நான் இதுல தெரிஞ்சோ தெரியாமலோ இன்வால்வ் ஆகிட்டேன்.
     இப்போ என்னால பின்வாங்க முடியாது. அதனால நான் இதுக்கு சம்மதிக்கிறேன். ஒரு ரெண்டு நாள் அப்புறம் வா. நான் ஏற்பாடு செஞ்சிடுறேன்” என்று பேசி வைத்தான்.
     அந்த தகவலை மோகன் அப்படியே ராமிடம் சேர்க்க “சபாஷ் மோகன்! அந்த டாக்டர் நம்ம வழிக்கு வந்துட்டானே! நான் கூட அவன் ஏதாவது ஏடாகூடம் பண்ணுவான்னு நினைச்சேன். பரவாயில்லை டாக்டர் புத்திசாலி தான்” என பாராட்டிவிட்டு
     “அப்புறம் அவன் அந்த மருந்தை தந்த உடனே எனக்கு போன் பண்ணு நான் அதை சேர்க்க வேண்டிய இடத்தில சேர்த்திடுறேன்” என்று வன்மையாய் கூறி கைப்பேசியை வைத்தார்.
——————————————–
     “அண்ணா! உங்ககிட்ட கொஞ்சம் பேசணும். நீங்க பிரீயா இல்ல எதாவது வேலை இருக்கா?” என்று ஹாலில் அமர்ந்து செய்தித்தாள் வாசித்துக் கொண்டிருந்த ராஜசேகரிடம் கேட்டபடி வந்தார் பார்வதி.
     “என்ன அத்தை எங்க அப்பாட்ட எதோ பெரிய பிட்டா போட போறீங்க போல. டிஸ்கிளைமர்லா பெருசா இருக்கு?” என்று பார்வதி பேசியதற்கு கிண்டல் பேசியபடி வந்தான் அபிமன்யு.
     அவனோடு வந்த ஹர்ஷா அபியின் முதுகிலே ஒரு அடியை போட்டு “ஏன்டா! அத்தைய கூட விடமாட்டியா. எல்லாத்தையும் போட்டு கிண்டல் பண்ணிக்கிட்டு” என்று கண்டித்தவன் “நீங்க பேசுங்க அத்த” என்று பார்வதியிடம் கூறினான்.
     அவர்களை பார்த்து புன்னகைத்த பார்வதி “அது ஒன்னும் இல்ல ண்ணா. நம்ம ஹர்ஷா குட்டி கல்யாணம் முடிஞ்சு ரொம்ப நாள் ஆச்சு. ஆனா நாம இன்னும் நம்ம சம்மந்திக்கு விருந்தே தரலை.
     அவங்க கல்யாணம் ஆன அந்த வாரமே தந்துடாங்க. நாம அப்புறம் தரலாம்னு பார்த்தா அனுக்கு எக்சாம் வந்திருச்சு. டைமே இல்ல. இப்போ நீங்க எல்லாம் பிரீன்னா இந்த வீக் என்ட் நம்ம வீட்ல அவங்களுக்கு ஒரு விருந்துக்கு ஏற்பாடு செய்யலாமா ண்ணா?” என்று தான் எண்ணிய விஷயத்தை கேட்டு விட்டார்.
     “எனக்கு ஒன்னும் பிரச்சினை இல்லமா. பசங்களோட சவுகரியம் எப்படின்னு பார்த்து பண்ணிடலாம் பார்வதி” என்று தன் கருத்தினை சொல்லி விட்டார் ராஜசேகர்.
     ராஜசேகர் சம்மதம் தந்தவுடன் “எனக்கு ஒன்னும் சன்டே கமிட்மென்ட் இல்லப்பா. சோ அன்னைக்கே வச்சுக்கலாம்” என்று ஹர்ஷா தன்னுடைய சம்மதத்தையும் கூறிவிட்டான்.
     ஹர்ஷாவும் சரி என கூறியவுடன் “அப்போ ஓகே ஹர்ஷா குட்டி. வீட்ல இருக்க மத்த மூனு வானரங்களையும் சன்டே எங்கேயும் போக வேண்டாம்னு சொல்லிடு ப்பா. நீ சொன்னா தான் மூனும் கேக்குங்க” என அவனிடம் தன் உண்மையான எண்ணத்தை கூறினார்.
     ஆனால் அதை அருகில் இருந்து கேட்ட அபிமன்யுவிற்கு தான் கடுப்பாகிவிட்டது. “ஏன் அத்த! என்ன பார்த்தா உனக்கு வானரம் மாதிரி இருக்கா. உன் பையன சொன்னா அதுல ஒரு நியாயம் இருக்கு. என்னை எதுக்கு இப்போ இப்படி‌ சொன்ன?” என்று கோபம் போல் கேட்டுவிட்டு
     “உன் பேச்சு கா அத்த. இனிமே அபி குட்டி செல்லம்னு வந்துராத” என பேசி திரும்பி அமர்ந்து கொண்டான். அபி பேசியதில் பாவம்‌ போல் முகத்தை வைத்துக் கொண்ட பார்வதி “சாரிடா அபி குட்டி! உன்னை போய் நான் அப்படி சொல்லுவனா. நான் பெத்து வச்சிருக்கனே அந்த ரெண்டு வானரத்தை சொன்னேன்” என்று அந்தர் பல்டி அடித்து விட்டார்.
     பார்வதி பதிலில் போனால் போகிறது என்பது போல் முகத்தை வைத்த அபி “சரி உன்னை போனா போகுதுன்னு விடுறேன். ஏன்னா நீ என் செல்ல அத்தையா போய்ட்டியே!” என பார்வதியின் கண்ணத்தை பிடித்து ஆட்டிக் கொண்டான் அபி.
     “அப்போ ஓகே அண்ணா. நீங்க நம்ம சம்மந்தி வீடு அவங்க ரிலேட்டிவ்ஸ் வீடுன்னு எல்லாரையும் இன்வைட் பண்ணிடுங்க. அதுதான் முறை” என்று கூறிய பார்வதி எழுந்து உள்ளே சென்றுவிட்டார்.
     பார்வதி கூறாயதை கேட்ட ராஜசேகரும் அனைவரையும் மகிழ்ச்சியோடு அழைக்க ஆரம்பித்தார். ராஜசேகர் அறியவில்லை பாவம் இந்த விருந்து நிகழ்விற்கு பின்னர் அவர் நிம்மதி மொத்தமாக பறிப் போகப் போகிறது என.
     இங்கே அனைத்தையும் கேட்ட ஹர்ஷா வேகமாக மாடிக்கு ஓடியவன் அனுவிடம் நடக்க இருக்கும் விருந்தை பற்றி அப்படியே கூறிவிட்டான். அனுவிற்கோ அத்தனை ஆனந்தம் அவள் வீட்டு ஆட்கள் இங்கே வரப்போவது குறித்து. என்ன தான் கணவன் வீட்டில் பெண்கள் ராணியாய் வாழ்ந்தாலும் தாய்‌ வீடு என்றால் தனி சுகம் தானே!
—————————————–
     வசுந்தரா தன் அறையில் துணி மடித்துக் கொண்டிருந்த நேரம் வேகமாக வந்தார் மீனாட்சி. அனுவின் திருமணம் முடிந்த பின் மீனாட்சி அதிக நேரம் வசுந்தராவோடு தான் கழித்துக் கொண்டிருக்கிறார் தன் தனிமையை போக்கிக் கொள்ள.
     “ஹே வசு! மாப்பிள்ளை வீட்ல இருந்து போன் வந்துச்சு. இந்த வாரம் ஞாயித்துக்கிழமை மாப்பிள்ளை வீட்டு சார்பா விருந்து தராங்கலாம். நம்மல எல்லாம் இன்வைட் பண்ண போன் பண்ணுனாங்க.
     உங்களை இன்வைட் பண்ண போன் நம்பர் கூட உன் அண்ணன்கிட்ட வாங்கிட்டாங்க. அதனால நாம எல்லாரும் இந்த வார கடைசி அனுவ பார்க்க போறோம்” என்று மகிழ்ச்சியாக சொல்ல வசுந்தராவும் மகிழ்ந்தார்.
     “ரொம்ப சந்தோஷம் அண்ணி. நம்ம அனு அங்க எப்படி இருக்கான்னும் நாம நேராவே போய் பார்த்துடலாம்” என வசுந்தராவும் அனு வீட்டிற்கு செல்ல போகும் நாளை எண்ணி மகிழ்ந்தார்.
     அவர் மகிழ்ச்சிக்கு இது ஒன்றே காரணமா என்று கேட்டால் அதையும் வசுந்தரா மட்டுமே அறிவார். மீனாட்சி சென்ற பின்னே மீண்டும் பழைய நினைவுகள் அவரை ஆக்கிரமித்தன.
     அன்று விஸ்வநாதனும் ராகவனும் பார்க்க வராததால் கஷ்டத்தில் இருந்த வசுந்தரா அன்று முழுவதும் ஒழுங்காக சாப்பிடக் கூடவில்லை. அதோடு காலை அவளிடம் வந்து பேசிய அந்த நபரின் சிரிப்பு வேறு அவளை பாடாய் படுத்தியது‌‌.
     காதல் என தடுமாறும் வயது ஒரு வாலிபன் வந்து பேசி செல்ல இதுவரை இப்படி வெளி ஆட்களிடம் பேசி பழக்கமில்லாத வசுந்தராவிற்கோ அது புது அனுபவமாய் இருந்தது.
     இப்படியே அந்த நாள் செல்ல அடுத்து வந்த நாட்களில் அந்த ராமும் அவள் கல்லூரி செல்லும் போது எல்லாம் பார்வையில் வந்து விழுந்தான்‌. அவன் இவளை பார்த்ததும் பூரித்து போய் புன்னகை புரிவதை பார்க்கும் போது வயிற்றில் பட்டாம்பூச்சிகள் பறந்தன வசுந்தராவிற்கு.
     ‘யார் இவரு? நம்ம காலேஜ்ல தினமும் பார்க்குறோம். இங்க படிக்கிறாரா இல்ல வொர்க் பண்றாரா?’ என்ற கேள்வி மனதை அறித்திட ராகினியிடம் மறைமுகமாக கேட்டுப்பார்த்தாள் வசுந்தரா.
     ராகினிக்கு என்ன புரிந்ததோ ‘கேட்டு சொல்றேன்’ என ராமை பற்றி விசாரித்து வந்துவிட்டாள். “ஹே வசு! அவர் பேரு ராம். அன்ட் நம்ம காலேஜ் கண்ஸ்ட்ரக்ஷன் வொர்க் நடக்குத்துல்ல. அதை அவங்க கம்பெனி தான் செஞ்சு தராங்கலாம். அவர் அந்த கம்பெனி எம்.டியாம்” என்று முடிந்த அளவு தகவலை திரட்டி வந்து சொன்னாள்.
     வசுந்தராவிற்கு ராம் மேல் சிறு ஈர்ப்பு ஏற்பட்டது. அவள் கல்லூரி வரும் நேரம் போகும் நேரம் என எல்லா நேரமும் அவளை தூர நின்று ராம் ரசித்துக் கொண்டிருப்பதும் ஒரு காரணமாக இருக்கலாம். ஆனால் ஏதோ ஒன்றால் ராமின் பால் நன்றாக ஈர்க்கப்பட்டால் வசுந்தரா.
     வழமை போல் வசுந்தரா ஒரு நாள் கல்லூரி முடிந்து அவள் ஹாஸ்டலை நோக்கி சென்றுக் கொண்டிருந்தாள். ஆனால் அன்றென பார்த்து அவன் நிற்கும் இடம் காலியாக இருந்தது.
     அதில் ‘என்ன இவரை இன்னைக்கு காணோம். எங்க போயிருப்பாரு?’ என்று யோசித்துக் கொண்டே சுற்றி சுற்றி பார்த்தபடி வந்தாள் வசுந்தரா. அப்படி வந்தவள் யாரோ ஒருவர் மேல் மோதி கீழே விழப்போக அந்த நபர் அவளை விழாது பிடித்துக் கொண்டார்.
     ‘ஹப்பாடா கீழ விழல’ என நிம்மதி அடைந்த வசுந்தரா அப்போது தான் யாரோ ஒரு ஆண்மகனின் அணைப்பில் இருப்பதை உணர்ந்தார். அதில் அதிர்ந்து விலக பார்த்தவரை “ஹே ஏஞ்சல்! நான் தான்‌டா” என்ற குரல் தடுத்தது.
     ஆம் வசுந்தராவை விழாமல் பிடித்திருந்தவர் ராம் தான். “நீ.. நீங்களா! சா‌.. சாரி நான் பாக்கலை” என்று திணறிய வசுந்தராவை பார்த்து குறும்பாய் புன்னகைத்த ராம் “ம்ம் ஆமா முன்னாடி பார்க்கல. ஆனா என்னை தானே தொலவிட்டு இருந்த” என்றார்.
     அந்த புன்னகை வசுந்தராவை ஏதோ செய்ய “அ.. அதெல்லாம் ஒன்னும் இல்லையே. நான்‌ சும்மா வேடிக்கை பாத்துக்கிட்டே வந்தேன். அதான் உங்க மேல வந்து மோதிட்டேன்” என்று சமாளிக்க பார்த்தார்.
     அந்த சமாளிப்பில் நன்றாக சிரித்த ராம் “ஓகே ஓகே! நான் ஒத்துக்கிறேன். நீ வேடிக்கை தான் பார்த்த. நானும் பார்த்தேன்” என்றார். ராமின்‌ சிரிப்பு வசுந்தராவை ஏதோ செய்ய “பிளீஸ் இப்படி சிரிக்காதீங்களே!” என்று சொல்லியே விட்டார்.
     அதில் இன்னும் சிரித்த ராம் “சரி நான் சிரிக்கலை. ஆனா உன்கிட்ட ஒன்னு கேக்கனும்” என்று ஆரம்பித்தார். “ரொம்ப நாளா உன்னை தூர நின்று சிரிச்சிட்டு பார்க்க மட்டும் தான் செய்யிறேன்.
     நீயும் பார்க்குற சிரிக்கிற. அது எனக்கு பத்தலை. சோ அதான் பேசி உன்கூட ஃபிரண்ட் ஆகலாம்னு இப்போ வந்தேன். என்ன நாம பிரண்ட்ஸா இருக்கலாமா?” என வசுந்தரா மறுக்க முடியாது அளவு கேட்டு விட்டார் ராம்.
     “என்ன பிரண்ட்ஸா?” என்று திகைத்தார் வசுந்தரா. காதல் என்று வந்தால் முடியாது என்று மறுக்கலாம். ஆனால் நட்பு என்றவுடன் ‘சரி’ என்பதை தவிர வேறு எதுவும் சொல்ல தோன்றவில்லை அவளுக்கு.
     அதேபோல் ராம் காதல் என்று வந்திருந்தாலும் வசுந்தரா மறுத்திருக்கமாட்டாள் என்பதும் மறுக்கமுடியாத உண்மை. எனவே “ம்ம் பிரண்ட்ஸ்” என்றுவிட்டாள் கடைசியில்.
     “ஹே சூப்பர்! நான் ராம். உன்கிட்ட அன்னைக்கே சொல்லிட்டேன். ஆமா உன் பேர் என்ன சொல்லு” என்றார் ராம். அதற்கு அழகாய் புன்னகைத்த வசுந்தரா “வசுந்தரா தேவி!” என்றாள் கம்பீரமாக.
-மீண்டும் வருவான்

Advertisement