Advertisement

     “ச்சே! ரெண்டு பேரும் எப்படிடா மாட்டுனானுங்க. இதை அந்த ஹர்ஷா எப்படி கண்டுபிடிச்சான். ஐயோ அவனை கொல்லனும்னு நினைச்சாலும் முடியலை அசிங்கப்படுத்தனும்னு நினைச்சாலும் முடியலை.
     அவன் உயிரோட நடமாடுற ஒவ்வொரு நிமிஷமும் உள்ள பத்திக்கிட்டு எரியுதே! ஆஆ…” என பைத்தியம் பிடித்தது போல் கத்திக் கொண்டிருந்தார் ராம்.
     போலி மருந்துகளை ஏற்பாடு செய்து அனுப்பி வைத்திருந்தவரும் ராமே. ஹர்ஷாவை போலீஸில் மாட்டிவிடவே இதை செய்ந்திருந்தார். எனவே தான் அவரே ஒரு போலியான கம்பெனி பெயரை போட்டு புது கம்பெனி போல் எற்பாடு செய்திருந்தார்.
     ஹர்ஷாவின் கையெழுத்தையும் அவனுக்கு பதிலாக இவர் போலியாக போட்டுவிட்டார். அந்த மாத்திரைகான அப்ரூவல் அருணாசலம் மருத்துவமனையின் பார்மெட்டில் உருவாக்கவே அவர் நிறைய செலவு செய்து அவர்‌ ஆட்கள் மூலம் மருந்துகளை அனுப்பி வைத்தார்.
     பிரச்சினையை பெரிதாக்க இன்னும் இரண்டு நாட்களில் அவரின் ஆள் ஒருவனை அருணாசலம் மருத்துவமனைக்கு அனுப்ப திட்டமும் போட்டு வைத்திருந்தார். ஆனால் இப்போது ஹர்ஷாவால் அவரின் திட்டம் எல்லாம் மண்ணாய் போனது.
     இப்போது ஏதோ யோசித்த ராம் “அந்த டாக்டர் அகிலன். அவன் என்ன ஆனான். அந்த மாத்திரை குடுத்து அனுப்பின அப்புறம் எதாவது போன் பண்ணுனானா?” என கேட்டவர் மனதில் ஒரு புதிய திட்டம் உருவானது.
     ‘இது கண்டிப்பா சக்சஸ் ஆகும். உன்னை ஒழிச்சுக்கட்டுனா தான் நான் நிம்மதியா இருப்பேன்டா’ என சூழுரைத்துவிட்டு என்ன செய்ய வேண்டும் என தன் ஆட்களுக்கு உத்தரவிட்டான்.
     அப்போது ராமின் கைப்பேசி ஒலித்தது. அழைத்தது அவர் மனைவி தேவி தான். “சொல்லுமா” என்று அழைப்பை ஏற்று பாசமாக பேசினார். அந்தபுறம் என்ன சொல்லப்பட்டதோ “இதோ கிளம்பிட்டேன்மா. கொஞ்ச நேரத்துல வந்திடுவேன். சரிமா வச்சிடுறேன்” என அணைத்தவர் “சொன்னது ஞாபகம் இருக்கட்டும்” என தன் ஆட்களிடம் மீண்டும் நினைவுபடுத்தி சென்றார்.
     ராமின் இந்த பரிமாணங்களை பார்த்து அவன் ஆட்களே அதிசயித்து வாயை பிளந்து நின்றுவிட்டனர். அந்த புறம் பேசிய தேவியோ அந்த நாளின் கணம் தாளாமல் அமர்ந்திருந்தார்.
——————————————-
     தன் முன்னே கணினியை முறைத்திருந்த விக்ரமை பார்த்தவாறு சங்கவி நின்றிருந்தாள். ‘என்னடா இது காலைல வந்ததுல இருந்து மனுஷன் அதுக்குள்ளையே தலைய உட்டுட்டு உக்கார்ந்திருக்காரு. என்ன வேலை செய்யனும்னு ஏதாவது சொன்னா செய்யலாம்‌. இப்படி சும்மா நின்னுட்டு இருக்கோமே!’ என மனதில் புலம்பியவாறு இருந்தாள்.
     தன் வேலையை கணினியில் முடித்துவிட்ட விக்ரமும் நிமிர்ந்துவிட்டான். அப்போது தான் தன் முன்னே முழித்துக் கொண்டு நின்றிருந்த சங்கிவியை பார்த்த விக்ரமிற்கு நினைவு வந்தது‌. அவன் தான் சங்கவியை அழைத்திருந்தான்.
     ஆனால் அவள் வரும் முன் வேறு ஒரு மெயில் வர அதில் மூழ்கிவிட்டான். அதனால் அவள் வந்ததை அவன் கவனிக்கவில்லை. அவன் நிமிரவும் ‘ஹப்பாடா ஒருவழியா நிமிர்ந்து பார்த்துட்டாரு’ என சங்கவியும் நிம்மதி ஆனாள்.
     “ஹே கவி! சாரிமா நீங்க வந்ததை நான் கவனிக்கலை. நீங்களாவது என்னை கூப்பிட்டுருக்கலாமோ?” என பரிவாக கேட்டவன் கண்களில் இருந்த சேதி சங்கவிக்கு சுத்தமாக புரியவில்லை.
     விக்ரம் ஒரு தாளை நீட்டி “ஓகே! இந்தாங்க. இது ஆர்.கே இன்டஸ்டீரிஸ் டென்டர் நோட்டிஸ்‌. இதுக்கு நாம கொட்டேஷன் அனுப்ப போறோம்.
     சோ அந்த கொட்டேஷன்க்கு ஒரு ரஃப் காப்பி ரெடி பண்ணிட்டு வாங்க. அன்ட் லாஸ்ட் மந்த் நம்ம கம்பெனி கவெர்மெண்ட்க்கு ஒரு கொட்டேஷன் அனுப்பி இருந்தோம்‌. அதை சாம்பில்க்கு எடுத்துக்கோங்க. அவ்ளோ தான் நௌ யு கேன் கோ” என இதை கூறுவிட்டு வேறு ஒரு கம்பெனியின் புராஜெக்டை டிசைன் செய்ய ஆரம்பித்தான்.
     ஆனால் இங்கே சங்கவியின் நிலை தான் பரிதாபமாக இருந்தது. அவள் இங்கு வேலைக்கு சேர்ந்து இதோடு ஒரு மாதம் நிறைவுப் பெற்று விட்டது.
     விக்ரம் ஆரம்பத்தில் சங்கவி என்றழைத்தவன் பின் ‘நான் உங்களை கவின்னே கூப்பிடுறேன். உங்களுக்கு ஒன்னும் அப்ஜெக்ஷன் இல்லையே’ என நேரடியாக கேட்டுவிட்டான்.
     சங்கவிக்கு ஒன்றும் புரியவில்லை என்றாலும் ‘சரி நம்ம எம்.டி தானே. சும்மா இப்படி கூப்டா வசதியா இருக்கும்னு நினைக்கிறார் போல’ என எண்ணி நாலா புறமும் தலையை ஆட்டி ஒத்துக் கொள்ள அன்றிலிருந்து அனைவருக்கும் சங்கவியானவள் விக்ரமிற்கு மட்டும் கவி ஆகிவிட்டாள்.
     அலுவகத்தில் அளந்து பேசும் விக்ரம் கவியிடம் மட்டும் விதிவிலக்கு தான் இப்போது எல்லாம். விக்ரம் இதுவரை அவளுக்கு சிறிய சிறிய வேலைகள் தான் கொடுத்து வந்தான்.
     ஆனால் இன்றோ கூலாக அவளை ஒரு கம்பெனிக்கே கொட்டேஷன் செய்து தர சொல்லிவிட சங்கவிக்கு தான் இதயம் தாறுமாறாக அடித்துக் கொண்டது.
     ‘என்ன சங்கவி இது. இவ்ளோ பயப்படுற. நோ பயப்படாத. உன்னால கண்டிப்பா முடியும். எஸ் யு கேன் டூ இட். ஓகே சியர் அப் மை கேர்ள்!’ என தனக்குள் பேசி ஊக்குவித்தவாறு சென்று அந்த சாம்பில் பையிலை எடுத்து வந்தாள்.
     சில மணி நேரத்தில் அதை படித்து உணர்ந்து புதிய கொட்டேஷனின் தேவைகள், அதற்கேற்ப என்னென்ன சேர்க்க வேண்டும் என்பது போன்ற தகவல்களை ஓரளவு திரட்டி ஒரு ரஃப் காப்பியை எழுதி முடித்தாள்.
     அவள் முடிக்கும் நேரம் மதிய உணவு வேளையே வந்து விட்டது. எனவே விக்ரம் உணவு உண்ண செல்வதற்குள் வேகமாக சென்றாள் சங்கவி.
     “சார்! இந்தாங்க” என்று அவள் தயாரித்த ரஃப் காப்பியை தர ஆச்சரியமாக அவளை பார்த்தவன் “அதுக்குள்ள முடிச்சிட்டீங்களா! பரவாயில்லை குட்” என்று பாராட்டிவாறு வாங்கிக் கொண்டான்.
     ஏனெனில் விக்ரம் அவள் இந்த வேலைக்கு புதிது என்பதால் அதை முடித்துதர இன்றைக்கு முழுவதும் எடுத்துக் கொள்வாள் என எண்ணியிருந்தான். ஆனால் அவனே ஆச்சரியம் கொள்ளும் வண்ணம் சீக்கிரமே முடித்து தந்துவிட்டாள் கவி.
     அந்த ரஃப் காப்பியை பார்த்த விக்ரம் ஆச்சரியத்தின் உச்சத்திற்கே சென்றான். பொதுவாக விக்ரம் கொடுக்கும் அனைத்து வேலைகளையும் சங்கவி திறம்படவே செய்வாள். இன்றோ அதையெல்லாம் தாண்டி மிக அற்புதமாக செய்திருந்தாள்‌.
     ‘எப்பா ரொம்ப திறமையான பொண்ணா தான் இருக்கா’ என பாராட்டாக நினைத்தவன் ‘ஆனாலும் வாய் தான் கொஞ்சம் ஓவரா இருக்கு’ என அவளை மனதில் கிண்டல் செய்தவாறே தன் வேலையை பார்க்க சென்றான்.
     அந்த கொட்டேஷனில் சிறு சிறு திருத்தங்கள் மட்டும் செய்தவன் அவன் கணக்கிட்டு வைத்திருந்த பண மதிப்பையும் அதில் சேர்த்தான். பின் சங்கவியை அழைத்து “லஞ்ச் கம்ப்ளீட் பண்ணீட்டு இதை புல்லா டைப் பண்ண எனக்கு மெயில் பண்ணிடுங்க கவி. அன்ட் யுவர் டிராப்ட் காப்பி இஸ் குட்‌. யு ஹேவ் டன் அ கிரேட் ஜாப்” என்று நன்றாக வாய்விட்டு பாராட்டி விட்டான்.
     அதற்கு “தேங்க் யு சார்” என வாங்கி மகிழ்ச்சியுடன் செல்லும் கவியையே கண்ணிமைக்காமல் பார்த்து வைத்தான் விக்ரம். ‘அவள் இப்படி மகிழ்வாள் என்றாள் இன்னும் என்ன வேண்டுமானாலும் செய்யலாம்’ என அவன் மனது கூறியது.
     அதுமட்டும் இல்லாது இப்போது சில நாட்களாய் விக்ரம் கண்ணிற்கு சங்கவி சற்று அழகாய் வேறு தெரிந்து கொண்டிருக்க அவளை ரசித்து பார்த்து வைக்கிறான். அதனாலோ என்னவோ அவளின் பெயரும் கவி என சுறுங்கிற்று‌. அதை அவன் உணர்ந்தானா என்றால் அதுவும் இல்லை.
     அவன் அலுவலகம் வந்தவுடன் அவனுடைய கண்கள் சங்கவியை தேடுவதை உணர்ந்திருந்தால் விக்ரம் தான் எப்போதோ கமிடெட் ஆகியிருப்பானே! அது புரியாமல் இன்று வரை தத்தியாய் சுற்றி கொண்டிருப்பவனை என்ன சொல்ல.
     வேலை முடிந்து மாலை வீட்டை வந்தடைந்த விக்ரம் மனது ‘ப்பா சான்ஸே இல்ல. என்ன பொண்ணுடா அவ. அழகான பொண்ணுங்க புத்திசாலியா இருக்க மாட்டாங்கன்னு சொல்லுவாங்க. ஆனா இவ அழகாவும் இருக்கா அறிவாவும் இருக்கா.
     ஆனா அந்த திமிர்.. ம்ஹூம் அது கூட அவளுக்கு அழகு தான். கவி! வாவ் அவ பேரும் அழகு தான்’ என நினைத்துக் கொண்டது. ஆனால் அந்த கவி அவன் மனதில் வந்த நங்கூரம் இட்டு அமர்ந்து விட்டதை அறியாமல் அமர்ந்திருந்தான் விக்ரம்.
     ஹர்ஷவர்தன் வந்த போலி மருந்துகள் குறித்த ஒரு ரிப்போட்டை போலீஸிற்கு அனுப்பி வைத்தான்‌. அதன்பின் அவன் மருத்துவமனையில் அந்த மருந்துகளை எடுத்த கொண்ட நோயாளிகளை பரிசோதனை செய்ய உத்தரவிட்டான்.
     அந்த மருந்துகள் புதிதாக வந்ததன் காரணமாக அந்த அளவு விற்பனை ஆகாமல் இருந்தது ஹர்ஷாவிற்கு சாதகமாய் அமைந்தது. அப்படி கொடுக்கப்பட்ட ஒன்றிரண்டு ஆட்களையும் அழைத்து தீவிர பரிசோதனை செய்துவிடவே யாருக்கும் எந்த தீங்கும் வராது காப்பாற்றினான்.
     மருத்துவமனையை முழுதாக தன்வசம் கொண்டு வந்தபின்னே நிம்மதியடைந்த ஹர்ஷா மாலை நேரம் வீட்டை அடைந்தவுடன் கண்டது சோஃபாவில் ஹாயாக படுத்து விட்டத்தை பார்த்து படுத்திருத்த விக்ரமை தான்.
     ஹர்ஷா வந்து அவன் அருகில் நின்றதை கூட கவனியாது ஏதோ கனவு லோகத்தில் இருந்தான் விக்ரம். ‘பய ஏதோ சரியில்லையே! ஒரு திணுசா இருக்கான்’ என யோசைனையுடன் அவனை பார்த்த ஹர்ஷாவும் அவனை எழுப்பாது தன் அறைக்கு சென்று விட்டான்.
     ஒரு வாரமாக நடந்த கலவரத்தில் அவன் அனுவிடம் கூட சரியாக நேரம் செலவு செய்யாததால் விக்ரமை பிறகு பார்த்துக் கொள்ளலாம் என ஓடிவிட்டான் ஹர்ஷா.
     அறையை மெதுவாக திறந்தான் ஹர்ஷா. அங்கே அனு புத்தகம் மார்பில் கிடக்க தூங்கியிருந்தாள். அனு பரிட்சைக்கு படித்திருப்பாள் போலும். அசதியில் அப்படியே உறங்கி இருந்தாள்.
     ‘அனு செல்லம் தூங்குறீங்களா! இதோ மாமா வந்துட்டேன்டா. இனி எப்படி தூங்குறன்னு பார்க்குறேன்’ என எண்ணியவாறு அவள் அருகே சென்று தானும் படுத்து கொண்டான்.
     “அனு! அனு குட்டி!” என்று ஹஸ்கி வாய்சில் அவளை அழைக்க அனு எழவில்லை. ‘இது வேலைக்கு ஆகாது’ என தோன்றவே அனுவின் காதில் “அடியே பொண்டாட்டி…! எழுந்திருடி” என கத்த அனு அடித்து பிடித்து தூக்கத்தில் இருந்து எழுந்தவள் திருதிருவென முழித்தாள்.
     அவள் முட்டை கண்ணை வைத்து முழித்து கொண்டிருந்தது எப்போதும் போல் ஹர்ஷாவை ஈர்க்க அவள் விழிகள் இரண்டிலும் முத்தம் இட்டான். “ப்பா.. என்னா கண்ணுடி. இந்த முட்டை கண்ண விரிச்சு விரிச்சு பார்த்ததுல தான்டி உன்கிட்ட டோட்டலா விழுந்துட்டேன்” என காதலாக பேசியவன் மேலும் விழிகளிலே முத்தமிட்டான்.
     ஹர்ஷாவின் காதல் மொழிகளை கேட்டு வெட்கப்பட்ட அனு “… என்ன ஹர்ஷா இது! நீங்க எப்போ வந்தீங்க?” என திணற “ம்ம் இப்போ தான்டா செல்லம்” என்றவாறு அவளை அணைத்து கொண்டான்‌.
     இதே நிலை சிறிது நேரம் நீடிக்க அனு புத்தகத்தை வைத்து தூங்கியது நினைவு வர “என்னடி நீ படிக்கறேன்னு புக்கை வச்சு தூங்கிட்டு இருக்க. இப்படி தான் மேடம் தூங்கிட்டே படிப்பீங்களா?” என்று தன் கலாட்டாவை துவங்க
     அதற்கு “ஐயோ! இல்லைங்க. நான் எப்பவும் நல்லா தான் படிப்பேன். ரொம்ப போக்கஸ்டு. ஆனா இன்னைக்கு கொஞ்சம் அலைச்சல்ல அதான் தூக்கம் வந்திருச்சு போல” என பதறி பதில் அளித்தாள் அனு.
     “இன்னைக்கு என்ன அலைச்சல்? எங்க போன?” என அவள் பதிலில் குழம்பிய ஹர்ஷா வினவ‌ “நானும் அம்முவும் ஷாப்பிங் போனோம். அதான் உங்ககிட்ட அம்மு சொன்னாளே. என்னமோ தெரியாத மாதிரியே பேசுறீங்க” என்று ரோசமாக அனு பேச தன்னிடம் அம்மு எதுவும் சொல்லவில்லை என்றான் ஹர்ஷா.
     “ஆமாங்க அம்மு உங்களுக்கு கால் பண்ணா. பட் நீங்க எடுக்கலை சோ வீட்ல சொல்லிட்டு உங்களுக்கு ஒரு மெசேஜ் போட்டுட்டு தான் போனோம்” என்று தாங்கள் செய்தி அனுப்பியதை கூற அப்போது தான் தன் கைப்பேசியை எடுத்து பார்த்த ஹர்ஷாவிற்கு புரிந்தது அனு கூறியது உண்மையென.
     அவன் தான் வந்த செய்தியை கவனிக்காது விட்டுவிட்டான். அதை உணர்ந்தவன் “ஓஓ.. எஸ்டா. மெசேஜ் வந்திருக்கு. நான் தான் பார்க்கலை. அது இருக்கட்டும் உன் தங்கச்சியோட ஊர் சுத்திட்டு வந்திருக்கியே எனக்கு என்ன வாங்கிட்டு வந்த?” என்றான் விளையாட்டாய்.
     அவள் கூற வரும் நேரம் சரியாக அவர்கள் அறை கதவு தட்டப்பட்டது. “ஒரு நிமிஷம்டி! தோ வரேன்” என்று சென்ற ஹர்ஷா அங்கே பதட்டமாக நின்ற அபியை கண்டு குழம்பினான்.

Advertisement