Advertisement

     மருத்துவமனை லேப்பில் இருந்து ஹர்ஷாவிற்கு அழைப்பு வந்தது. அதை எடுத்து பேசியவனுக்கு அந்த பக்கம் கூறிய செய்து அவ்வளவு அதிர்ச்சியாய் இருந்தது.
     “என்ன சொல்றீங்க?” என்றவன் கேள்வியில் அந்த லேப் ஹெட் “ஆமா டாக்டர்! அந்த மெடிசின் எல்லாமே பேக். இன்னும் சொல்லனும்னா அதை எந்த பேஷன்டுக்கு குடுத்தாலும் அந்த பேஷன்ட்டோட ஹெல்த் இருக்க நிலைமையவிட ரொம்ப மோசமா தான் போகும்.
     இப்போ இந்த கோல்ட்டுக்கான சிரப்ப ஒருத்தர் குடிச்சிருந்தா கோல்ட் குறையாம இன்னும் அதிகம் தான் ஆகும். எல்லாமே டாக்சின்ஸ் தான் டாக்டர்” என்று தான் ஆராய்ந்தவற்றை சொல்லி முடித்தார் லேப் ஹெட்.
     எல்லாவற்றையும் கேட்ட ஹர்ஷாவிற்கு தலை சுற்றாத குறை தான். ‘யாரோட வேலைடா இது?’ என நெற்றியை பிடித்து அமர்ந்துவிட்டான். அருகில் இருந்த பார்த்த யாருக்கும் எதுவும் புரியவில்லை. “என்னாச்சு ஹர்ஷா?” என்று ராஜசேகர் தான் கேட்டார்.
     ஹர்ஷா தனக்கு வந்த அழைப்பில் கூறியவற்றை அப்படியே தன் தந்தையிடம் பகிர்ந்து கொண்டான். கேட்டிருந்த மற்றவர்களுக்கும் இது அதிர்ச்சியாக இருந்தது.
     “என்ன ண்ணா! இது யாரோட வேலையா இருக்கும்? இந்த அளவு செஞ்சிருக்காங்க‌. நீ அதை பார்க்காம விட்டிருந்தா நம்ம ஹாஸ்பிடலுக்கு எவ்ளோ கெட்ட பேரு வந்திருக்கும்‌” என பயத்துடன் அபி புலம்பினான்.
     அவனை தொடர்ந்து விக்ரம் “உண்மை தான் அபி. ஆனா யாருக்கு நம்ம மேல இவ்ளோ வென்ஜன்ஸ் இருக்கும். நாம யாருக்கும் இதுவரை ஒரு கெட்டதும் செஞ்சது இல்லையே. அப்புறம் ஏன் நம்ம குடும்பத்தை டார்கெட் பண்றாங்க” என பேசிக் கொண்டே வந்தவனை இடைமறித்தான் ஹர்ஷா.
     “இல்லை விக்ரம் நம்ம பேமிலி அவங்க டார்கெட் இல்லை” என்றான் தீவிரமான குரலில். “என்ன சொல்ற ஹர்ஷா எனக்கு புரியல?” என விக்ரம் வினவ
     “ம்ம் ஆமா விக்ரம். அவங்க டார்கெட் நான். கொஞ்சம் நடந்த எல்லா விஷயத்தையும் நல்லா யோசிச்சு பாரு. முதல் தடவை என்னை தான் வெட்டி கொல்ல பாத்தாங்க. பட் நான் தப்பிச்சிட்டேன். நெக்ஸ்ட் போதை மருந்து. அதையும் எனக்கு தர பாத்தப்பதான் நீ அதை குடிச்சிட்ட.
     ஆனா இந்த ரெண்டு இன்சிடென்ட்கும் நடுவுல ஒரு டூ மந்த்ஸ் கிட்ட கேப். மோஸ்ட்லி நான் அந்த டைம் வெளிய போகலை. அன்ட் இந்த கேப்ல நம்ம பேமில யாரையும் அந்த ஆளுங்க எதுவும் செய்யலை.
     தென் இப்போ இந்த இஸ்யூ. இந்த மெடிசின நான் ஆத்தரைஸ் செஞ்ச மாதிரி என்னோட சைனயே அதுல போட்டு போர்ஜெரி பண்ணி டிஸ்டிரிபியூட் பண்ணிருக்காங்க. இதால யாருக்கு என்ன ஆகியிருந்தாலும் நான் தான் ரெஸ்பான்ஸிபில். எம்.டி ன்ற முறையில என்னை அரெஸ்ட் பண்ண கூட சான்ஸ் இருந்தது” என ஹர்ஷா தான் எண்ணியதை எல்லாம் கூற ஒருவருக்கும் பேச்சே வரவில்லை.
     ஆனால் அனைவர் மனதிலும் ‘யாராக இருக்கும்’ என்ற யோசனை மட்டும் பலமாக வந்தது. அதன்பின் வேதாசலம் “மச்சான்! ஹர்ஷா இனிமே தான் நாம ரொம்ப ஜாக்கிரதையா இருக்கனும்‌. ஹாஸ்பிடல் புல்லா சர்வைலன்ஸ்ல வைங்க.
     நம்ம வீட்லையும் சிசிடிவி பிக்ஸ் பண்ணிடலாம். யாரு இப்படி எல்லாம் பண்றாங்கனு தெரியுர வரை ஹர்ஷா நீ கொஞ்சம் கேர்புல்லா இருப்பா. வெளிய போய்ட்டு வரப்ப நாலாபுறமும் கவனம் இருக்கனும். உனக்கு சொல்லனும்னு அவசியம் இல்லைதான். இருந்தாலும் கவனம் வச்சுக்கோ. புரியுதா” என்று ராசேகரிடம் ஆரம்பித்து ஹர்ஷாவிடம் முடித்தார்.
     அவர் கூறியதை கேட்ட ஹர்ஷா “கண்டிப்பா மாமா! நான் கேர்புல்லா இருக்கேன். அன்ட் வீட்ல இருக்க யாருக்கும் இது எதுவும் தெரிய வேணாம் பயப்படுங்க. அப்புறம் தாத்தாட்ட சொல்லவே வேணாம். எல்லா பிராப்ளமையும் சால்வ் பண்ணிட்டு சொல்லிக்கலாம். ஓகே தானே” என்றான் பொதுவாக.
     அனைவரும் சரி என ஒத்துக் கொள்ள அதன்பின்னே இன்னும் சில பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுப்பது குறித்து பேசிவிட்டு அறையை விட்டு வெளியே வந்தனர்.
     இவர்கள் சேர்ந்து வருவதை புருவ முடிச்சிடன் பார்த்த பார்வதி “இங்க வாங்க” என பொதுவாக அழைத்தார். மற்ற அனைவரும் ‘எங்களுக்கு எதுவும் கேட்கவில்லை’ என்பது போல் தத்தம் அறையை நோக்கி ஓடிவிட சிக்கியது என்னவோ வேதாசலம் தான்.
     ‘ஐயையோ! நாம மட்டும் சிக்கிட்டமே’ என மனதில் நினைத்தவர் “என்ன பார்வதிமா?” என்றார் சாந்தமாக. “என்ன நாலு பேரும் தனியா பேசிட்டு வரீங்க. என்ன விஷயம்?” என்று நேரடியாக கேட்டேவிட திருதிருவென முழித்த வேதாசலம்
     “ஒன்னும் இல்லையே. ஏன் பார்வதி நாங்க தனியா இப்படி பேசுனதே இல்லையா. அதுக்கு ஏன் சந்தேகமா பார்க்குற!” என மழுப்ப முயன்றார். அவர் பதிலை பார்வதி ஆராய்வதற்குள் “ஹான் இப்போ தான் ஞயாபகம் வருது பாரு. உன் புள்ளை தலை வலிக்கிதுன்னு காபி கேட்டான். அவனை போய் என்னன்னு பாரு. அப்படியே எனக்கும் ஒரு காபி” என விக்ரமை கோர்த்து விட்டு  தன் அறைக்குள் ஓடிவிட்டார்.
     வேதாசலம் கூறியபடி காபி போட சென்ற பார்வதிக்கு அப்போது அந்த விஷயம் மனதிற்குள் மறந்து போனது. எல்லாம் தெரியும் நாள் பார்வதியிடம் சிக்கி மற்றவர்கள் என்ன ஆவாரோ!
     “ஹர்ஷா! ஹர்ஷா!” என ஹர்ஷாவின் தோலை பிடித்து அனு உலுக்கவும் “என்னமா?” என்றான் சிந்தனை கலைந்த ஹர்ஷா. “என்னப்பா ஆச்சு. நான் கூப்பிட்டது கூட தெரியாம யோசனைல இருந்தீங்க. எதாவது முக்கியமான விஷயமா?” என வினவினாள்.
     அனுவை அருகில் கண்ட ஹர்ஷா அவளை இழுத்து அணைத்து கொண்டான். என்னதான் உறவுகள் என நிறைய பேர் இருந்தாலும் மனசுமையை தன் மனைவியிடம் இறக்கிக் கொண்டிருந்தான் ஹர்ஷா அந்த ஒற்றை அணைப்பில்.
     இப்படி ஹர்ஷா திடீரென அணைக்கவும் அதிர்ந்த அனு “ஹர்ஷா!” என திணற ஆனால் பாவம் அவள் வாயில் இருந்து வெறும் காற்று மட்டும் தான் வந்தது. சில நிமிடங்கள் கடந்த பின் ஹர்ஷாவே அனுவை விட்டு விலகினான்‌.
     “ஹ..ஹர்ஷா!” என்ற அனு அழைக்க “ம்ம்” என்றான் ஹர்ஷா. சில நிமிடங்கள் மௌனத்தில் கழிய சற்று தன் சுயநினைவு வந்த ஹர்ஷா “என்னடி ஒரு ஹக்குக்கே இப்படி நிக்கிற. அப்போ மத்ததுக்கு எல்லாம் என்ன பண்ணுவ!” என கிண்டல் செய்தான்.
     அதற்கு ஹர்ஷா முதுகில் இரண்டு அடி போட்ட அனு “சும்மா கிண்டல் பண்ணாதீங்க” என்று சிணுங்க “ஓகே கிண்டல் பண்ணலை. சரி என்னடி பின்னாடியே வந்த எதாவது கேக்க வந்தியா?” என பேச்சை மாற்றினான் ஹர்ஷா.
     “அதெல்லாம் ஒன்னும் இல்லை. இன்னைக்கு ஹாஸ்பிடல்ல இருந்து சீக்கிரம் வந்துட்டீங்கல்ல அதான் சும்மா பேசலாம்னு வந்தேன். நீங்க தான் ஏதோ திங்க் பண்ணிட்டு இருந்தீங்க. எதாவது இம்பார்டன்ட் மேட்டரா என்ன. அப்படி எதாவது இருந்தா சொல்லுங்க நான் டிஸ்டர்ப் பண்ணலை” என அனு அப்பாவியாய் கூறவும் தன் மனதில் இருந்த அனைத்து குழப்பங்களையும் ஒதுக்கிய ஹர்ஷா அனுவின் கைப் பிடித்து தன் அருகே அமர்த்திக் கொண்டான்.
     “எனக்கு இது தோனலை பாரேன். என் செல்லக்குட்டி என்கிட்ட பேச வந்துருக்காங்க. எனக்கு அதை விட வேற என்ன முக்கியமான வேலை இருக்கப்போகுது. நாம பேசலாம்டா” என்றான் ஹர்ஷா.
     அனு மகிழ்வுடன் தலை ஆட்டவும் அவள் தலையை செல்லமாக கலைத்தவன் அனுவுடன் பேசிக் கொண்டிருந்தான். அப்போது அனு “ஐயோ! ஹர்ஷா‌. உங்கட்ட ஒன்னு சொல்லனும்னு நினைச்சேன் மறந்தே போய்ட்டேன். அது அம்மா கால் பண்ணுனாங்கல அப்போ” என வேகமாக பேசியவள் தடுமாறினாள்.
      “அப்போ அது ந..நமக்குள்ள எல்லாம் ஓகேவான்னு கேட்டாங்க” என்றாள் தடுமாறியபடி. சட்டென ஹர்ஷாவிற்கு புரிந்துவிட்டது. ஆனால் அனுவை வம்பிழுக்கும் பொருட்டு “என்ன நமக்குள்ள எல்லாம் ஓகே தானே. இதை உங்க அம்மாட்ட சொல்ல வேண்டியது தானே” என்றான் வாய்க்குள் சிரித்துக் கொண்டு.
     இப்போது நன்றாக தடுமாறிய அனு “அது அதுவந்து நமக்கு அன்னைக்கு சடங்குலா வச்சாங்கல. அப்போ..” என திணறிக் கொண்டு ஹர்ஷாவை பார்க்க ஹர்ஷா சத்தம் வராது சிரித்துக் கொண்டிருந்தான். அதை பார்த்தவுடன் அனுவிற்கு தெரிந்துவிட்டது ஹர்ஷா அவளிடம் விளையாடுகிறான் என.
     “போங்க போங்க! நீங்க இப்படி தான் செய்றீங்க. உங்களுக்கு தான் புரியுதே. அப்புறம் ஏன் என் வாயவே கிளறுறீங்க” என செல்லமாக கோபித்துக் கொள்ள “அனுக் குட்டி உன்கிட்ட நான் விளையாடாம யாரு விளையாட போறா. ஓகேடா உன் அம்மா நமக்குள்ள பர்ஸ்ட் நைட் முடிஞ்சிதான்னு தானே கேட்டாங்க. நீ என்ன சொன்ன” என்றான் சிரிப்புடன்.
     அதில் வெட்கம் கொண்ட அனு “அது எல்லாம் முடிஞ்சிருச்சுன்னு சொல்லிட்டேன்” என்றாள் தரையை பார்த்தபடி. ஹர்ஷா குனிந்திருந்த அனுவின் முகத்தை நிமிர்த்தி “என்ன எல்லாம் முடிஞ்சிடுச்சா! அடிப்பாவி நமக்கு தான் எதுவுமே நடக்கலையே” என்றான் பொய்யாக அதிர்ந்து.
     அதற்கு அனு “நீங்க தானே நம்ம விஷயத்தை அம்மாவே இருந்தாலும் யார்க்கிட்டையும் சொல்லக் கூடாதுனு சொன்னீங்க. அதான் என் அம்மாட்ட முதல் தடவையா பொய் சொல்லிட்டேன்” என்றாள் ரோஷமாக. அன்று மெஹந்தியின் போது ஹர்ஷாவிடம் வாங்கிய வசவுகள் இப்போது வரை வேலை செய்தது.
     “பார்ரா! என் அனு குட்டி இவ்ளோ வளந்துட்டாளே!” என அதிசயித்து “அனு செல்லம் நீ இதையே மெயின்டெய்ன் பண்ணு உனக்கு எக்சாம் மட்டும் முடியட்டும் அப்புறம் ரெண்டு பேரும் ஹனிமூன் கிளம்பிடலாம்” என ஹர்ஷா கண்ணடித்தான்.
     அதற்கும் சிணுங்கினாள் அனு. “குட்டிம்மா! நான் சொல்றதை நல்லா கேட்டுக்கோ. நம்மளடோ விஷயம் நம்ம ரெண்டு பேரை தாண்டி வெளிய போகவே கூடாது. அது உன் அம்மாவா இருந்தாலும் அது எனக்கு பிடிக்காது புரியுதா. அதே மாதிரி நான் உனக்கிட்ட என் ஃபிரண்ட்ஸ் ரிலட்டிவ்ஸ்னு அவங்க என்னை நம்பி சொன்ன பர்சனல் விஷயத்தை மோஸ்ட்லி அவங்க சொல்லாம ஷேர் பண்ணிக்க மாட்டேன்.
     அதே போல‌ நீயும் உன்னோட குளோஸ் சர்க்கில்ல இருக்கவங்க பர்சனல் என்கிட்ட சொல்ல தேவையில்லை. என்னதான் இருந்தாலும் லைஃப்ல நமக்குன்னு ஒரு ஓன் ஸ்பேஸ் இருக்கும்டா. அதை நான் மதிக்கிறேன். ஆனா நாம ரெண்டு பேருன்னு வரப்ப யாரும் இடைல வரது எனக்கு சுத்தமா பிடிக்காது. நான் இப்ப சொல்றது தான் எப்பவும். ஓகே தானேடி” என்று முடித்தான் ஹர்ஷா.
     அனு “ஹர்ஷா நாம லைப் பாட்னர்ஸ் தானே நாம இதெல்லாம் ஷேர் பண்றதுல தப்பு இல்லையே அப்புறம் ஏன்?” என்றாள் புரியாமல். அதற்கு புன்னகைத்த ஹர்ஷா “அனு உனக்கு புரியற மாதிரி நான் சொல்றேன். உன் பிரண்ட் இல்லை உன் ரிலடிவ் இல்லை நம்ம வீட்ல இருக்க யாரோவாவே இருக்கட்டும்.
     இப்போ உன்னை நம்பி அவங்க பர்சனல்ல உன்கிட்ட சொல்லி யார்க்கிட்டையும் சொல்ல வேண்டாம்னு சொல்றாங்கனு வை. அப்போ அவங்க உன்கிட்ட எதோ ஒரு குளோஸ்நெஸ் பீல் பண்ணி வேற ஒருத்தர்க்கிட்ட சொல்ல முடியாத விஷயத்தையே உன்னை நம்பி சொல்றப்ப நீ அவங்கலுக்கு உண்மையா இருக்கனும்லடா.
     என்ன தான் நான் உன் ஹஸ்பண்டா இருந்தாலும் அதை என்கிட்ட சொல்லனும்னு அவசியம் இல்லை. அதே மாதிரி அவங்களுக்கு எதாவது பிரச்சினைனா அதை மத்தவங்ககிட்ட சொன்னாதான் சால்வ் ஆகும்னா நீ தாராளமா என்கிட்ட சொல்லலாம். அது தான் உன்னோட தனிப்பட்ட ஸ்பேஸ் புரியுதா” என்று ஹர்ஷா சீரியசாக விளக்க அவன் பரந்த எண்ணத்தை கண்டு வியந்தாள் அனு‌.
     ஆனால் ஹர்ஷாவை கிண்டல் செய்யும் பொருட்டு “ஹப்பா பேசி முடிச்சிட்டீங்களா! என்னா அருவை” என காதை குடைந்து கொண்டாள். “ஹேய் என்னடி கிண்டலா!” என செல்லமாக தலையில் கொட்டியவன் “ஆனா இந்த விஷயம்லா நம்ம லைப்க்கு ரொம்ப முக்கியம்டி.
     ஏன்னா நிறைய பேருக்கு இந்த மாதிரி சின்ன சின்ன விஷயத்துல தான் சண்டை வரும். அதான் நாம பர்ஸ்டே தெளிவாகிட்டா பிராப்ளம் வராதுல” என்றான் தெளிவாக. அதில் அனு அமைதி ஆகிவிட்டாள்.
     “என்னடி சைலண்ட் ஆகிட்ட?” என்ற ஹர்ஷாவின் கேள்விக்கு “சத்தியமா சொல்றேங்க. நீங்க சான்ஸே இல்லை தெரியுமா. உங்கள மாதிரி ஒருத்தர் என் லைஃப்ல வந்தது என்னோட லக் தான்” என்றாள் உள்ளார்ந்து.
     அவள் பதிலில் சிரித்த ஹர்ஷா “அப்படியா! இல்லவே இல்லை. நான் தான் இப்படி ஒரு ஏஞ்சல் கிடச்சதுல லக்கிடி” என அனு வை அணைத்த ஹர்ஷா அழகாக நெற்றியில் முத்தமிட்டான். தானாக அவன் உதடுகள் அவள் கண்டத்திற்கு சென்று பின் உதட்டையும் எடுத்து கொண்டது. அனுவும் அழகாய் அவன் கரங்களுக்குள் பொருந்தி போனாள்.
     தன் மனதில் இருந்த கேள்விகள் மற்றும் குழப்பங்களை ஒதுக்கி விட்டு தன் மனைவியின் அருகாமையை மகிழ்வுடன் ரசித்திருந்தான் ஹர்ஷவர்தன்.
-மீண்டும் வருவான்

Advertisement