Advertisement

     காலையிலே அபியால் எழுந்த கடுப்பில் அலுவலகம் கிளம்பி சென்ற விக்ரமிற்கு அன்று சோதனையாக டிராபிக்கும் சதி செய்யவே நொந்து போய் தன் காரை சைக்கிள் வேகத்தில் நகர்த்திக் கொண்டிருந்தான்.
     அந்த நேரம் பார்த்து ரெட் சிக்னலும் விழுந்திட “ச்சே என்னடா இது நமக்கு வந்த சோதனை! இந்த சிக்னல் கூட சிக்கல் பண்ணுதே. எப்ப சிக்னல் விழுந்து, நான் எப்ப ஆபிஸ் போயி! எப்பா நினைக்கவே கண்ண கட்டுதே!” என புலம்பியபடி அமர்ந்திருந்தான் காரினுள்.
     அப்போது எதோ வண்டி ஒன்று அபியின் காரில் மோதிய சத்தம் கேட்கவே திடுக்கிட்டு காரில் இருந்து இறங்கி வெளியே வந்தான். அங்கே அவன் காரை ஒரு ஸ்கூட்டி இடித்திருந்தது.
     அந்த ஸ்கூட்டி ஓட்டிய நபரை கோபமாய் திட்ட போன விக்ரம் அதிர்ந்து நின்றுவிட்டான். ஏனெனில் அந்த ஸ்கூட்டியை ஓட்டி வந்த பெண்ணோ அவள் பின்னே இருந்த பைக்காரனிடம் சண்டை போட்டுக் கொண்டிருந்தாள்‌.
     “ஏன்டா டோமரு! என்ன தைரியம் இருந்தா என் வண்டிய இடிச்சிருப்ப ஹான்!” என்று கத்தியவள் அந்த பைக் ஆளை பிடித்து இழுத்து வந்து அவள் ஸ்கூட்டி அருகில் நிறுத்தி
     “பாருடா! நல்லா பாரு. என் வண்டி எப்படி அடி வாங்கிருக்குன்னு. உன் கண்ணை ரோட்டுல வைக்காம எங்க பராக்கு பாத்துட்டுடா வந்த என் வென்று” என எகிறிக் கொண்டிருந்தாள்.
     சிக்னல் விழுந்திருந்த நேரம் கொஞ்சம் வேகமாக வந்த பைக்காரன் அந்த பெண்ணின் வண்டியை இடித்துவிட அதில் அவள் தடுமாறி சென்று விக்ரமின் காரில் இடித்துவிட்டாள்.
     ஆனால் அந்த பெண்ணின் வண்டிக்கு அந்த அளவு சேதாரம் ஏற்ப்படவில்லை. ஆனால் அவள் இடித்ததில் விக்ரமின் கார் தான் நன்றாக அடிவாங்கியிருந்தது. அதை கண்டுக் கொள்ளாத அந்த பெண் பைக் ஓட்டி வந்தவனிடம் வம்புக்கு நின்று கொண்டிருக்கிறாள்.
     “எம்மா பொண்ணே! அதுக்கு ஏன்மா அந்த பையன்ட இப்படி நடுரோட்டுல சண்டை போடுர?” என கூட்டத்தில் இருந்து ஒரு குரல் வரவே கொதித்து போன அந்த பெண் “யோவ்! யாருயா அது? யாரா இருந்தாலும் என் முன்னால வந்து பேசுங்க” என்று கத்தி விட்டாள்.
     பின் அந்த பைக்காரனிடம் திரும்பி “இங்க பாரு ஒழுங்கா என் வண்டிய இடிச்சு டேமேஜ் பண்ணதுக்கு காச எடுத்து வச்சிட்டு இடத்தை காலி பண்ணு” என்று நிலையாய் நின்று விட்டாள்.
    அதற்கு மேல் தாங்காது என அந்த பைக்காரனும் காசைக் கொடுத்துவிட்டான். பின் அருகில் அதிர்வாய் பார்த்து நின்ற விக்ரமை பார்த்து “யோவ் என்ன ஆ..னு வாய பிளந்து பார்த்துட்ட இருக்க.
     எங்கடா சண்டை நடக்கும் வேடிக்கை பார்க்கலாம்னு வரது. போயா போய் பொழப்ப பாருங்க எல்லாம். வந்துட்டாங்க! பிரச்சினை வந்தா உதவி செய்ய ஒருத்தனும் வரமாட்டாங்க. ஆனா வேடிக்கை பார்க்க மட்டும் வருவாங்க” என விக்ரமை திட்ட ஆரம்பித்து தன் போக்கில் பேசியடி அவள் வண்டியை எடுத்து கொண்டு நகர்ந்து விட்டாள்.
     விக்ரம் தான் அதிர்ந்து போய் நின்று விட்டான். அப்படியே போய் காரில் ஏறிய விக்ரம் “என்னடா இந்த விக்ரமுக்கு வந்த சோதனை. நான் அந்த பொண்ணுட்ட பேச வேண்டிய டயலாக்கை எல்லாம் அந்த பொண்ணு வேற யார்ட்டையோ பேசிட்டு காசு வாங்கிட்டு போகுது.
     சரியான பஜாரியா இருப்பா போல. யாரு என்னன்னு தெரியாம மானாவரியா எல்லாருட்டையும் சண்டைக்கு போகுது. எப்பப்பா நல்ல வேளை நான் அவக்கிட்ட எதுவும் கேக்கலை. இல்லை என்னையும் டாரு டாரா கிழிச்சு தொங்கவிட்டருப்பா போலையே.
     ஐயோ வண்டி ரைட் சைடு வேற ஒடுங்கி போச்சு. அதை கேக்க கூட விடாம ஆஃப் பண்ணி அனுப்பிட்டா. ச்சே இந்த நாளே இவ்ளோ அமோகமா ஆரமப்பிச்சிருக்கே, இன்னும் போக போக என்ன ஆகப்போகுதே!” என்று புலம்பியவாறே அவன் அலுவலகத்தை சென்றடைந்தான்.
     விக்ரம் அலுவலகத்தின் உள்ளே நுழைந்ததும் அவனின் தோரணை அப்படியே மாறியது. வீட்டில் எந்த அளவிற்கு விளையாட்டுதனமாய் இருப்பானோ அந்த அளவு அலுவகத்தில் மிகவும் கண்டிப்பாக இருப்பவன் தான் விக்ரம்.
     எனவே அவன் உள்ளே வந்த நேரம் அவன் அலுவலக ஊழியர்கள் அனைவரும் மரியாதையாக வணக்கம் கூறிட அதை ஏற்றவாறு அவன் அறைக்குள் சென்று விட்டான்.
     அவன் அறைக்கு சென்றபின் பின்னாலே அவனின் அலுவலக மேனேஜர் வந்து கதவை தட்டினார். “எஸ் கம்மின்” என்ற விக்ரமின் கம்பீர குரலில் உள்ளே வந்த மேனேஜர் “சார் குட்மார்னிங்!” என ஆரம்பித்தார்.
     “இப்போ வந்திருக்க அந்த கவர்மெண்ட் டெண்டர்க்கு நாம இன்னும் கொட்டேஷன் அனுப்பலை சார். அதை இன்னைக்கு காலைல வந்த உடனே உங்களுக்கு நியாபகப்படுத்த சொல்ல சொன்னீங்க சார்” என்று முடித்தார் அந்த மேனேஜர்.
     அவர் கூறியதை முழுவதும் கேட்ட விக்ரம் “ம்ம் ஓகே! ஐ’ல் டேக் கேர் ஆஃப் இட். நீங்க அந்த சேப்பாக்கத்துல நடக்குற பில்டிங் டீடெயில்ஸ பார்வர்ட் பண்ணிடுங்க” என்று கூறியவன் தன் வேலையை பார்க்க ஆரம்பித்தான்.
     ஆனால் மேனேஜர் அந்த இடத்திலே நிற்க இப்போது அவரை பார்த்த விக்ரம் “இன்னும் என்ன?” என்றான் கடுப்பாக. காலையில் நடந்த நிகழ்வுகளால் வந்த கடுப்பு அது.
     அதில் தடுமாறிய மேனேஜர் “அது சார். இன்னைக்கு உங்களுக்கு பி.ஏ போஸ்ட்க்கு இன்டர்வியூ வச்சிருக்கோம். அதான் நீங்க ரெடின்னா எல்லாத்தையும் அரேஜ் பண்ணிடுவேன் சார்” என்றார்.
     “ப்ச்!” என தன் நெற்றியை தடவி யோசித்தவன் “இங்க பாருங்க சார் எனக்கு அந்த டெண்டர் வேலை இருக்கு. இதை ஈவ்னிங்குள்ள முடிக்கனும். அது உங்களுக்கும் தெரியும் தானே. இப்போ நான் வந்து இன்டர்வூயுவை எடுக்கறது ஒத்து வராது” என்றவன் சிறிது நேரம் யோசித்தான்.
     பின் ஒரு முடிவுக்கு வந்தவனாக “ஒன்னு பண்ணுங்க சார். நீங்க அன்ட் ராகவ் யூ போத் ஜஸ்ட் கேரி ஆன் த இன்டர்வியூ. எப்பவும் பாலோ பண்ற ரூல்ஸ் அன்ட் ரெகுலேஷன் படி கொண்டு போங்க. ஆல்ரெடி குவெஸ்ஸின்ஸ் பிரிப்பேர் பண்ணி தானே வச்சிருப்பிங்க.
     அதையே வச்சு பார்த்துக்கோங்க. எல்லா டெஸ்ட்டுலையும் குவாலிபை ஆகுற பெஸ்ட் திரி கேண்டிடேட்ட மட்டும் என் ரூமுக்கு அனுப்புங்க. அன்ட் அவங்கல்ல ஒருத்தரை நான் செலக்ட் பண்ணிக்கிறேன்” என்று அவரை அனுப்பி வைத்தான்.
     அதன்பின் அவன் வேலையில் கவனம் வைத்தான். வெளியே அவன் சொன்னது போல் அந்த மேனேஜர் மற்றும் மற்றொரு ஊழியரும் சேர்ந்து இன்டர்வியூவை முடித்துவிட்டனர். அதன்பின் மூன்று தேர்வானவர்களின் ரெஸ்யூமை விக்ரமிடம் தந்துவிட்டு சென்றார் மேனேஜர்.
     அவர் சென்று பின் ஒவ்வொரு ஆளாக உள்ளே அனுப்பினார் மேனேஜர். முதல் இரண்டு நபர்களை சோதித்தவன் மூன்றாவது நபரை அழைத்தான் “கம்மின்” என்றவன் அவள் ரெஸ்யூமை பார்தவாறே “வெல் மிஸ்.சங்கவி” என்று நிமிர்ந்தான்.
     நிமிர்ந்தவன் அதிர்ந்து போய்விட்டான். ஏனென்றால் காலையில் விக்ரம் பஜாரி என பட்டப்பெயர் இல்லை இல்லை செல்லப்பெயர் வைத்த அந்த ஸ்கூட்டி பெண் தான் அவன் எதிரில் அமர்ந்திருந்தாள்.
     அதுவும் சாந்த சொருபினியாக முகத்தில் மென்னகை மின்ன காலையில் பார்த்த தோற்றத்தில் இருந்து முற்றிலும் எதிர்ப்பதமான தோற்றம். விக்ரமின் நிலை அவளின் “குட்மார்னிங் சார்” என்ற வார்த்தையில் கலைந்தது.
     அதன்பின் அவன் மற்றவர்களிடன் கேட்ட அதே கேள்விகளை கேட்டு அவள் பதிலையும் பெற்று கொண்டான். அவளும் எல்லாம் முடித்து வெளியே சென்றபின் மூவரின் பதில்களையும் ஆராய்ந்தான். எப்படி பார்த்தாலும் எல்லாரையும் விட சங்கவியின் பதில்கள் தான் சிறப்பாக இருந்தது.
     அவள் பேச்சிலே தெரிந்தது அவள் நல்ல திறமைசாலி என. ஆனால் விக்ரமின் மனமோ ‘என்ன திறமை இருந்து என்ன பண்றது‌. சரியான பஜாரியா இல்ல இருக்கா. ம்ஹூம் ஒருவேளை நான் வேலை தரலைனா சண்டைக்கு வந்திருவாளோ. நடந்தாலும் நடக்கலாம்’ என்று எண்ணியது.
     பின் பலவிறு யோசித்து சங்கவிக்கே வேலை கொடுக்க முடிவு செய்தான். அவள் திறமைக்கு ஐம்பது சதவிகிதம் பார்த்தான் என்றால் எங்கே சண்டை போட வந்துவிடுவாளோ என பயந்து ஆம் பயந்து போய் தான் மீதி ஐம்பது சதவிகிதம் என எண்ணி வேலை கொடுக்க முடிவு செய்தான்.
     சங்கவி வேலை கிடைத்த மகிழ்வில் விக்ரமை காண செல்ல அவள் வேலைகளை எல்லாம் சொல்லி முடித்த விக்ரம் “இங்க பாருங்க மிஸ்.சங்கவி. இனி நீங்க என்னோட பெர்சனல் அஸிஸ்டன்ட். நீங்க நாளைக்கு உங்க வேலைல ஜாயின் பண்ணிடுங்க. ஓகே தானே’ என்ற விக்ரம் அவள் வெளியே செல்லும் நேரம்
     “அன்ட் மிஸ்.சங்கவி இனிமே ரோட்ல போறப்ப எதிர்ல இருக்க கார்ல மோதாம போங்கமா” என்றிட சங்கவி புரியாமல் பார்க்க “அது மார்னிங் நீங்க என்னோட கார்ல தான் உங்க ஸ்கூட்டிய லேண்ட் பண்ணிருந்தீங்க” என்றான் நக்கலாய்.
     அதில் அதிர்ந்து போய் விக்ரமை பார்த்த சங்கவி “சார் ஐம் சாரி! என் பின்னாடி வந்த வண்டி என்னோட ஸ்கூட்டில மோதவும் தான் உங்க கார்ல லேசா இடிச்சிட்டேன். ரியலி வெரி சாரி சார்” என்றாள் தயக்கமாக.
     புரிந்தது போல் தலை அசைத்தவன் “யூ மே கோ நவ்” என்றிட “தேங்க்ஸ்” என கூறி கிளம்பிவிட்டாள். ஆனால் ‘எப்படி அப்படியொரு நிகழ்வை பார்த்தப் பின்னும் வேலை கொடுத்தார்’ என யோசித்தப்படியே சென்றாள் அவள் ஹாஸ்டலை நோக்கி.
     இங்கே விக்ரமின் நாள் இபப்டி வேலை வேலை என செல்ல, வெளியே சென்ற அபி மற்றும் அம்முவின் நேரமோ கொண்டாட்டமாய் கழிந்தது.
     அம்முவும் அபியும் ஒரு மாலிற்கு தான் வந்திருந்தனர். என்னதான் விக்ரமை வெறுப்பேத்த அம்முவிடன் நெருக்கமாக இருப்பது போல் நடித்தாலும் அபி அம்முவின் மனதை கலைப்பது போல் என்றும் நடந்துக் கொண்டதில்லை. அதிக நேரம் கைகளை பிடித்து கதை பேசுவான். எப்போதாவது சிறிய அணைப்பு அவ்வளவுதான்.
     “ஏன் அத்தான்! நான் ஒன்னு கேட்டா நீங்க தப்பா நினைச்சிக்க மாட்டீங்களே” என்று பீடிகையோடு ஆரம்பிக்க “என்னடி டிஸ்கிளைமர் எல்லாம் பலமா இருக்கு. அப்படி என்னத்த கேக்க போற?” என்றவன் அவள் கைகளை தன்னுடன் கோர்த்து கொண்டான்.
     அதற்கு “அது ஒன்னும் இல்லை அத்தான். ஏன் உனக்கும் என் அண்ணனுக்கும் ஒத்தே வர மாட்டேங்குது. ஏன் ரெண்டு பேரும் டாம் அன்ட் ஜெர்ரி மாதிரி அடிச்சிக்கிறீங்க?” என்று தன் சந்தேகத்தை கேட்டு வைத்தாள்.
     அதில் புன்னகை சிந்திய அபி “ஏனா நானும் உன் அண்ணாவும் சின்ன வயசுல இருந்தே அப்படி தான். அது என்னமோ நான் என்ன செஞ்சாலும் அவன் அதுக்கு ஏட்டிக்குப் போட்டியா தான் பண்ணுவான்.
    ஹர்ஷா அண்ணாவை அவன் பிரண்டா பார்த்தான். நான் பிறந்த அப்புறம் என்னை பார்க்கவும் அவனுக்கு என்ன தோனுச்சோ என்கூட சண்டை போடுவான். எனக்கும் அவன் கூட நார்மலா பேசவே வராது.
     என்னவோ மாமா மச்சான்னாலே அப்படி தான் போல‌. உன் அண்ணன் எனக்கிட்ட சண்டை போட்டு நல்லா எண்டர்டெயின்மெண்ட் பண்ணிக்கிட்டான். எனக்கும் அது பிடிச்சது. சோ நான் இப்ப அவனை ஓட்டி எண்டர்டெயின்மெண்ட் பண்ணிக்கிறேன். அவ்ளோ தான்” என்று கூற
     ‘லூசாடா இவனுங்க’ என்றே அம்மு நினைத்தாள். ‘இவனுங்க சண்டைல தலையிட்ட நம்ம மண்டை தான் உடையும் இவனுங்க நல்லா சந்தோஷமா தான் இருப்பானுங்க போல. எப்படியோ போகட்டும்’ என எண்ணி கொண்டே அவனோடு சேர்ந்து சுற்றினாள் அம்மு‌.
-மீண்டும் வருவான்

Advertisement