Advertisement

     வானம் இருளால் சூழ தொடங்கி இளந்தென்றல் இனிமையாக வீசி செல்லும் மாலை நேரம். ஹர்ஷவர்தன் அனுக்ஷ்ராவின் வாழ்விலும் இது மிக முக்கியமான ஒரு நாளே. ஆம் வண்ண விளக்குகளால் சூழப்பட்ட அந்த பெரிய மண்டபத்தில் இன்று இவர்களின் ரிசெப்ஷன் கோலாகலமாக நடந்துக் கொண்டிருக்கிறது.
     கண்ணை கவரும் மேடை அலங்காரத்தின் நடுவே கரும் ஊதா வண்ண கோட் வெள்ளை சட்டை அணிந்து ஹர்ஷா மாப்பிள்ளை கலை முகத்தில் மின்ன அம்சமாக நின்றுக் கொண்டிருந்தான்.
     அவன் அருகே அனுவோ அதே ஊதா வண்ண டிசைனர் புடவையில் ஆளை அசரடிக்கும் அழகில் ஹர்ஷாவிற்கு ஏற்ற மணப்பெண்ணாக நிற்க, வந்த உறவினர் நண்பர்கள் என பலர் இவர்கள் ஜோடி பொருத்தத்தை வாயில் கையை வைத்து பார்த்தனர். அதில் சிலர் கொஞ்சம் பொறாமையாகவும் பார்த்து பெருமூச்சை வெளியேற்றி கொண்டும் இருந்தனர்.
     “அனும்மா நீ இந்த டிரஸ்ல செமையா இருக்கடி. இன்னும் இந்த நைட் மட்டும் தான் அப்புறம் நாம ஹஸ்பண்ட் அன்ட் வொய்ப்டி” என்றான் ஹர்ஷா அனுவை ரசனையாக பார்த்துக் கொண்டே. அதில் வெட்கி சிவந்தாள் அனு.
     ரிஷப்ஷன் ஆரம்பித்து இரண்டு மணி நேரமாக நின்ற இருந்ததில் மிகவும் களைத்து போனாள் அனு. அதை அவள் முகத்தில் இருந்து உணர்ந்த ஹர்ஷா “என்னடா அனு டையர்டா இருக்கா?” எனவும் ஆம் என தலை அசைத்தாள்.
     உடனே அருகில் இருந்த விக்ரமை அழைத்தான் ஹர்ஷா. “விக்ரம்! டேய் மச்சான்” என ஹர்ஷாவின் குரலை மண்டபத்தில் இருந்த பெண்களை வாயில் ஜொல்லு ஒழுக சைட் அடித்துக் கொண்டிருந்த விக்ரம் கவனிக்கவில்லை. அதில் கடுப்பான ஹர்ஷா
     “ஏய்.. விக்ரம் எருமை!” என்று அவன் கையை பிடித்து உலுக்கிய பிறகே ஹர்ஷாவின் புறம் திரும்பி “என்னா மச்சான்?” என்றான் கூலாக. அதில் கடுப்பாய் முறைத்த ஹர்ஷா “என்னடா பண்ணிட்டு இருக்க?” என்று கடுகடுத்தான்.
     “இல்ல மச்சான்! அந்த பிங்க் சுடி.  செம்ம அழகா இருக்காடா. அதான் நான் அவளை…” என வெட்கப்பட்டுக் கொண்டே நகத்தை கடித்தான். விக்ரம் வெட்கப்படுவதை விசித்திரமாக பார்த்த ஹர்ஷா “என்ன வெட்கப்படுரியா? ச்சை! சகிக்கல. மொதல்ல வாயில இருந்து கைய எடுத்து தொலை” என்றான் கடுப்பாக.
     உடனே வாயில் இருந்து கையை எடுத்த விக்ரம் அப்போது தான் ஹர்ஷா தன்னை எதற்கோ அழைத்தான் என்பதை உணர்ந்து “ஆமா மச்சான்! நீ எதுக்கு என்னை கூப்பிட்ட?” என்றான்.
     “ஹப்பா! இப்போவாவது கேட்கனும்னு தோணுச்சே” என வெளிப்படையாக அலுத்துக் கொண்ட ஹர்ஷா “மச்சான் உன் தங்கச்சிக்கு ரொம்ப டையர்டா இருக்கு போலடா. சோ அவளுக்கும் எனக்கும் சேர்த்து ரெண்டு டம்ளர் ஜுஸ் எடுத்துட்டு வாடா” என்று வேலை ஒன்றை கொடுத்தான்.
     ஆனால் அதை அருகில் இருந்த வசுந்தரா கேட்டுவிட்டு “நீங்க இருங்க தம்பி நான் போய் எடுத்துட்டு வரேன்” என சென்றுவிட இப்போது விக்ரம் மீண்டும் அந்த பிங்க் சுடி பெண்ணை சைட் அடிக்க ஆரம்பித்துவிட்டான். “இவனை திருத்த முடியாது” என தலையில் அடித்துக் கொண்ட ஹர்ஷாவும் அதன்பின் வந்த விருந்தினரை கவனிக்க திரும்பினான்.
     இங்கே இப்படி இருக்க அபிமன்யுவோ அம்முவின் இன்றைய கோலத்தில் அவள் பின்னாலே சுத்திக் கொண்டிருந்தான். அம்மு பச்சை வண்ண லெஹாங்கா அணிந்து அதற்கேற்றார் போல் அலங்காரமும் செய்து தேவதை போல் மண்டபத்தை சுற்ற,
     அவளை கண்ட அபி நொடி நேரமும் பிரியாது அவளை உரசியபடி சுற்றிக் கொண்டிருக்கிறான். எப்போதுடா அவள் தனியாக தன்னிடம் மாட்டுவாள் என சந்தர்ப்பத்தை எதிர்ப்பார்த்தவனுக்கு அவன் அத்தையே நல்லதொரு சந்தர்ப்பத்தை ஏற்ப்படுத்தி கொடுத்து அனுப்பினார்.
     “அம்மு மாடில நான் இருக்க ரூம்ல ஒரு ஜுவல் பேக் இருக்குடா. இந்தா ரூம் சாவி. கொஞ்சம் போய் சீக்கிரம் எடுத்துட்டுவாடா‌. அனுவுக்கு போட வேண்டிய ஜுவல்ஸ் அதுல இருக்கு. சோ பத்திரமா எடுத்திட்டுவா” என்ற பார்வதியின் வார்த்தைகள் அம்மு மட்டுமன்றி அபியின் காதிலும் விழுந்துவிட
     ‘இதோ நானும் வந்துட்டேன் செல்லம்’ என மனதிற்குள் குதூகலமாக எண்ணிக் கொண்டே அம்முவின் பின்னால் பதுங்கி பதுங்கி சென்று அறைக்குள் நுழைந்து கதவை அடைத்தான். அந்த சத்தத்தில் திரும்பிய அம்மு “என்ன அபி அத்தான்‌ எதுக்கு இப்போ உள்ள வந்தீங்க. கதவை எதுக்கு அடைச்சிங்க?” என்றாள் படபடப்புடன்.
     அதற்கு அம்முவை பார்த்து ஒரு மார்க்கமாக சிறித்த அபி “என்னடா அம்மு வாய் டைப்படிக்குது. இந்த அத்தான்ட்ட என்ன செல்லம் பயம். ம்ம்ம்” என்றவாறு அம்முவை நோக்கி முன்னேறினான்.
     அபியின் இந்த செயலை கண்டு “வேணாம் அத்தான்! கிட்ட வராதீங்க” என்று பின்னாலே நகர்ந்தாள் அம்மு. ஆனால் அந்த அறையின் சுவர் வந்துவிடவே திருதிருத்தப்படியே சுவற்றில் மோதி நின்றாள்.
     அம்முவின் முன்னே நின்று தன் இரு கைகளையும் அணைவாய் சுவற்றில் ஊன்றிய அபி “இன்னைக்கு இந்த டிரஸ்ல அவ்ளோ அழகா இருக்கடி அம்மு. சத்தியமா உன்னை விட்டு என் பார்வைய நகர்த்தவே முடிய மாட்டேங்குது. சும்மா அப்படியே தேவதை மாதிரி இருக்கடி” என்றான் கொஞ்சும் குரலில்.
     அபியின் இந்த பேச்சில் அம்மு முகம் வெட்கத்தில் செவ்வானமாய் சிவந்து விட்டது. “ம்ம் தாங்க்ஸ் அத்தான்” என்றாள் பதிலுக்கு. அம்முவின் வெட்கத்தை ரசித்தவாறே “சரி சரி‌ அப்புறம் வெட்கப்பட்டுக்கலாம். இப்போ அத்தானுக்கு ஒரு உம்மா குடுத்துட்டு போடி” என்றான் அபி காதலாக.
     அபி முத்தம் கேட்டதில் பதற்றம் அடைந்த அம்மு “ஐயோ அத்தான்! நான் போகனும். அம்மா ஜுவல் பேக் எடுத்துட்டு சீக்கிரம் வர சொன்னாங்க. நான் போகனும். பிளீஸ் பிளீஸ் அத்தான் வழிய விடுங்க” என்றாள் கொஞ்சலாக.
     “அதெல்லாம் முடியாதுடி. எனக்கு வேணும்னா வேணும் தான்.‌ இப்போ தந்துட்டு போ” என வம்படியாக அம்முவை இழுத்து இதழில் ஒரு முத்த யுத்தம் செய்தே விட்டான் அபி.
     அபியின் நெஞ்சின் கை வைத்து தள்ளிய அம்மு “நீங்க ரொம்ப பேட் பாய் அத்தான்” என்றவாறு நகைப் பையை எடுத்து கொண்டு வெளியே ஓடிவிட்டாள் ஆதிரை. அதன்பின்னர் வந்த அபியின் பார்வை இப்போது அம்முவை இன்னும் உரியமையாய் பார்த்து வைத்தது.
     அபியின் ஒவ்வொரு பார்வைக்கும் அம்மு வெட்கி சிவந்தாள்‌. இவர்கள் பார்வை பரிமாற்றத்தை கண்ட விக்ரம் “நாளைக்கு உனக்கு தானேடா கல்யாணம். என்னமோ உன் தம்பிகாரனுக்கு கல்யாணம் நடக்கப்போற மாதிரி இப்படி ஒரே குஜாலா சுத்திட்டு இருக்கான்டா” என்றான் கடுப்புடன்.
     விக்ரமின் புலம்பலில் சிரித்த ஹர்ஷா “பல்லு இருக்கவன் பக்கோடா சாப்பிடுறான்‌. நீ ஏன்டா கடுப்பாகுற” என்று கூறி கண் அடித்துவிட்டு அனுவை நோக்கி திரும்பிவிட்டான்.
     ஹர்ஷாவின் பதிலில் அழும் நிலைக்கே சென்ற விக்ரம் “பேசுங்கடா பேசுங்க. எனக்கும் ஒரு காலம் வராமையா போகும். அப்போ பேசிக்கிறேன்” என்று சபதம் போடுவது போல் பேசியவன் திரும்பி நீண்ட நேரம் அவன் பார்த்த அந்த பிங்க் சுடி பெண்ணை காண நெஞ்சு வலியே வந்துவிட்டது.
     ஏனென்றால் அந்த பெண்ணின் தோளில் வேறொரு ஆடவன் கைப்போட்டு சிரித்து சிரித்து பேசிக்கொண்டு இருந்தான். அதுமட்டும் இன்றி அந்த பெண்ணின் கையில் ஒரு குழந்தை வேறு இருந்தது. அதை பார்த்தவுடன் புரிந்துவிட்டது அது அந்த பெண்ணின் குழந்தை என.
     ‘ஐயோ! இவ்ளோ நேரம் கல்யாணம் ஆன பொண்ண பார்த்தா வழிஞ்சோம். ஐயையோ இது மட்டும் அண்ணன் தம்பி ரெண்டு பேருக்கும் தெரிஞ்சது வச்சு செய்வானுங்களே. விக்ரம் தப்பி தவறிக் கூட இவனுங்களுக்கு தெரியக் கூடாதுடா’ என மனதோடு பேசியவன் திரும்பி ஹர்ஷாவிற்கு வருகின்ற பரிசுகளை சமத்தாக வாங்கி வைக்க ஆரம்பித்தான்.
     இப்படி மண்டபமே மகிழ்ச்சியில் செல்ல இரு விழிகளோ எப்போதும் போல் ஹர்ஷவர்தனை வெறுப்புடன் பார்த்திருந்தது. அது வேறு யாரும் இல்லை ராம் தான்.
     இந்த நிகழ்ச்சி தொடங்கியது முதல் ஹர்ஷாவையே வெறித்தபடி தான் அமர்ந்து உள்ளார். ஹர்ஷா ஒவ்வொரு முறை சிரிக்கும் போதும் மனதுக்குள் எரிமலையே வெடித்து சிதறியது அவருக்கு.
     ‘இன்னும் கொஞ்ச நேரம் தான்டா இந்த சந்தோஷம் எல்லாம். அப்புறம் பாரு நீ எப்படி அழுகப்போறன்னு. இந்த கல்யாணம் கண்டிப்பா நடக்காதுடா. நான் நடக்கவும் விடமாட்டேன்’ என சூளுரைத்துக் கொண்டார் மனதிற்குள்.
     மனதில் இருந்த அதே வெறியோடு அவரின் அடியாள் மோகனுக்கு அழைத்து “என்னடா பண்றீங்க. அந்த அகிலன் டாக்டர்கிட்ட பேசினியா. என்ன தான்டா அவன் பிளான். சீக்கிரம் கேட்டுட்டு சொல்லுடா. இங்க அந்த ஹர்ஷாவ பாக்க பாக்க எனக்கு வயிறு எரியுது. ஒழுங்கா அவன்கிட்ட பேசிட்டு சொல்லுடா” என பேசி வைத்தார்.
     ஆம் அகிலன் இப்போது இவர்கள் கூட்டணியில் சேர்ந்து விட்டான். அன்று என்னதான் அகிலன் வீடேட்றியாக பேசி வைத்தாலும் பின் அவனே அவர்களை அழைத்து ஹர்ஷாவை பழிவாங்கும் படலத்தில் தானும் சேர்த்து கொண்டான்.
     ஹர்ஷாவிற்கு எதேனும் நடந்துவிட்டால் விஸ்வநாதன் தன் மருமகனுக்கு ஊறு விளைவித்தவர்கள் அனைவரையும் உறு தெரியாமல் அழித்துவிடுவார். அதை எண்ணியே முதலில் ஹர்ஷாவின் திருமணத்தை நிறுத்த திட்டம் தீட்டினார் ராம். ஆனால் அவர் நேரில் சென்று அகிலனிடம் பேசவில்லை.
     ஏன் இதில் ராம் என்ற ஒருவர் இருப்பதை மறைத்து அந்த அடி ஆட்களின் மூலம் தன் எண்ணங்களை அகிலனுடன் பகிர்ந்து கொண்டார். அதே போல் அகிலனுக்கு ராம் என்ற நபரையும் சுத்தமாக தெரியாமல் பார்த்துக் கொண்டார் சாமர்த்தியமாக.
     அங்கே ராமிடம் பேசிய மோகன் உடனே அகிலனுக்கு தொடர்பு கொண்டான். “ஹலோ! டாக்டர் என்னதான் உங்க பிளான் சீக்கிரம் சொல்லுங்க. விடிஞ்சா கல்யாணம். நாம அதுக்குள்ள எதாவது செஞ்சே ஆகனும்” என்று எடுத்தவுடன் பொறிந்தான் மோகன்.
     அனைத்தையும் பொறுமையாக கேட்ட அகிலன் “என்ன மோகன் நீ இவ்ளோ டென்ஷன் ஆகுற. இன்னும் விடியிற வரை நமக்கு டைம் இருக்கு. சோ டோன்ட் வொர்ரி மேன். ஐ ஹேவ் எ கிரேட் பிளான்” என்றான் கூலாக.
     அகிலனின் பதிலில் “என்ன டாக்டர் ரொம்ப கூலா பேசிட்டு இருக்கீங்க. உங்களால முடியும்னா சொல்லுங்க. இல்லைனா நான் பாத்துக்கிறேன்” என்றான் மோகன் வேகமாய். அதற்கு “அப்படி என்ன பண்ண போற மோகன்” என்று வினவினான் அகிலன்.
     “அதெல்லாம் எப்பவும் செய்ற பிளான் தான் டாக்டர். மாப்பிள்ளையை கடத்திடலாம். அவனுக்கு இந்த கல்யாணத்துல விருப்பம் இல்லைனு அவன் போன்ல இருந்தே ஒரு மெசேஜ போடுவோம். கல்யாணம் தானா நின்னுடும்” என்றுவிட அங்கே அகிலன் தலையில் அடித்து கொண்டான்.
     “ஏன்டா உனக்கு மூளைன்னு ஒன்னு இருக்கா. அந்த ஹர்ஷவர்தன் சம்மதம் சொல்லி தான் இந்த கல்யாணம் நடக்குது. அவன் வாக்கு குடுத்தா அதுல இருந்து பின்வாங்கினதா சரித்திரமே இல்லை. இதுல இப்படி நாம செஞ்சா ஒருத்தனும் நம்ப மாட்டானுங்க. உடனே போலிஸ்க்கு போய்ருவாங்க என்று நக்கலாக பேசிய அகிலன்
     “சோ நான் சொல்ற மாதிரி செய். யாருக்கும் எந்த சந்தேகமும் வராது. அதே நேரம் இந்த கல்யாணத்தை விஸ்வநாதனே நிறுத்துருவார்” என்று அகிலன் தன் திட்டத்தை விளக்கினான்.
     “அப்படி என்ன டாக்டர் திட்டம்” என்றான் மோகனும் ஆர்வமாக. அகிலன் கூறிய திட்டத்தை கேட்டு மோகன் ஆச்சரியத்தில் வாயை பிளந்து விட்டான். “சூப்பர் பிளான் டாக்டர்” என்று பாராட்டியவன் அழைப்பை அனைத்து விட்டு ராமிற்கு அழைத்து அகிலனின் திட்டத்தை கூற ராம் முகத்தில் கோரமான ஒரு சிரிப்பை தந்தவர் மகிழ்வுடனே கைப்பேசியை வைத்தார்.
     ‘இனி இந்த கல்யாணம் நிச்சயமா நடக்காது ஹர்ஷா. அதே மாதிரி உன்னை கொல்லாம விடவும் மாட்டேன்டா. உன் சாவும் என் கையால தான்’ என மனதில் வன்மத்துடன் ஹர்ஷாவை பார்த்து வைத்தான் ராம்.

Advertisement