Advertisement

     அதே முறைப்போடு “எப்பா சாமி! உன் சிவாஜி கணேசன் ஆக்டிங் எல்லாத்தையும் மூட்டை கட்டி வச்சிட்டு விஷயத்தை சொல்லு விக்ரம் அத்தான்” என்றான் அபி. அதில் அவனை நோக்கி “எல்லாம் உன்னால தான்டா, வளர்ந்த வண்டலூர் வரிக்குதிரையே!” என்றான் விக்ரம் கோபமாக.
     “எதே! என்னாலையா. யோவ் அத்தான் யார பார்த்து வரிக்குதிரைனு சொல்ற. காவால உழுந்த காக்கா மாதிரி இருந்துட்டு என்னை சொல்றியா. எதாவது நல்லா சொல்லிட போறேன். நான் என்ன செஞ்சேன். என்ன உன் தங்கச்சிய இழுத்துட்டா ஓடிட்டேன்” என வேண்டுமென்றே விக்ரமிடம் வம்பிழுத்தான்.
     இவர்கள் சண்டையை சிரிப்புடன் பார்த்து பின் “அபி இரு. பர்ஸ்ட் விக்ரம் என்ன சொல்றான்னு கேட்போம். சொல்லு மச்சான் என்னடா உன் பிரச்சினை?” என்றான் ஹர்ஷா கடைசியாக
     விக்ரம் “மச்சான் உன் தம்பி ரொம்ப பண்றான் டா. அம்முவ விட்டு கொஞ்சம் தள்ளியே இருக்க சொல்லு. இப்ப தான் அவ பர்ஸ்ட் இயரே முடிக்க போறா. இன்னும் நாலு வருஷம் இருக்கு அவ யூ.ஜி முடிக்கவே.
     ஆனா உன் தம்பி போற வேகத்தை பார்த்தா எனக்கு முன்னாடியே அவன் கல்யாணத்தை முடிச்சிருவான் போலடா. நீ ஒருபக்கம் போன்ல ரொமேன்ஸ ஓட்டுற. உன் தம்பிகாரன் நேர்லையே ரொமேன்ஸ் பண்ணி என் வயித்தெறிச்சலை கிளப்புறான்.
     ஒரு சிங்கிள் பையன் இருக்க இடத்துல‌ ஏன்டா இப்படி பண்ணி இம்சைய கூட்டுறீங்க” என்றான் ஒரு மூச்சாக. அவன் குரலில் இருந்தது அம்மு மீதான அவனின் அக்கறை கொஞ்சம் மற்றும் அபி மீதான கடுப்பு அதிகம் இருப்பது ஹர்ஷாவிற்கு புரிந்தது.
     அதேபோல் ஹர்ஷாவிற்கு அவன் தம்பியையும் நன்றாக தெரியுமே. அபி விக்ரமை வம்பிழுக்க தான் ஏதோ செய்ய போக அதற்கு தான் விக்ரம் எகிறுகிறான் என்றும் புரிந்தது.
     உண்மையும் அதுதான். என்று அபியின் காதலை விக்ரம் ஹர்ஷாவின் மூலம் கேட்டானோ அன்றிலிருந்து விக்ரம் அவன் அருகில் வரும் நேரம் அம்முவை உரசிக் கொண்டு அவளை கொஞ்சிக் கொண்டு என தன்னால் முடிந்த அளவு அவனை வெறுபேற்றி அனுப்புவான்.
     ஆனால் இன்று உண்மையாகவே அம்முவின் கண்ணில் விழுந்த தூசியை தான் ஊதிக் கொண்டிருந்தான் அபி. அதை கண்டு அபி அம்முவிற்கு முத்தமிடுவதாக தவறாக எண்ணியே மூச்சு வாங்க வந்து பேசுகிறான் விக்ரம். “ஏன்டா?” என்று அபியை பார்த்து கேட்ட ஹர்ஷா விக்ரமை தன் அருகே இழுத்து அமர வைத்தான்.
     “மச்சான்! உனக்கு என் தம்பியை பத்தி நல்லா தெரியும் தானே. அவன் உன்னை வம்பிழுக்க தான் எதாவது பண்ணிருப்பான். மத்தபடி அவன் அப்படி எல்லாம் அம்முவ டிஸ்டர்ப் பண்ற ஆளா சொல்லு” என்று தன்மையாக பேச,
     அபியோ “அண்ணா உனக்கு எதாவது ஸ்டமக் பர்ன் ஆகுற ஸ்மெல் வருதா?” என விக்ரமை சுட்டி கிண்டல் அடிக்க “வேணாம் அபி என்னை கடுப்பேத்தாத” என இவனும் எகிற, இவர்கள் இப்படி அடித்துக் கொள்ளும் நேரம் வந்து சேர்ந்தாள் அம்மு.
     “அம்மு இங்க வாடா!” என்று சும்மா சென்றுக் கொண்டிருந்த அம்முவை ஹர்ஷா அழைக்க “என்ன அத்தான்?” என்றவாறு அம்முவும் வந்தாள். “என்னடா எங்கையோ வெளிய கிளம்பிட்ட போல?” என்றான் ஆதிரை கிளம்பி வந்ததை கண்டு.
     அதில் தன் பையில் எதையோ சரிப்பார்த்தவள் “ஆமா அத்தான். உங்க மேரேஜ் ஷாப்பிங் தான். நிறைய திங்க்ஸ் வாங்க வேண்டியது இருக்கு. சோ கிளம்பிட்டேன்” என்றுவிட்டு “ஏன் அத்தான் யாராவது என்கூட துணைக்கு வரப்போறீங்கலா” என்றாள் குறும்பாக.
     ஏனென்றால் அம்மு ஷாப்பிங் என்று வந்துவிட்டாள் காலை சென்றால் இரவு கடையை மூடும் வரை தேடி வாங்கும் ரகம். அவள் கேள்வியில் சுதாரித்த அபி முன் அறிவிப்பாக “எனக்கு கொஞ்சம் வொர்க் அப்பா தந்திருக்காரு அம்மு.
     உன் அண்ணா தான் சும்மா இருக்கான். நீ வேணும்னா அவனை கூட்டிப் போவேன்” என விசமமாக விக்ரமை மாட்டிவிட்டு சென்றுவிட்டான். அதில் திடுக்கிட்ட விக்ரம் இதுவரை இருந்த கடுப்பை கடாயில் கடாசிவிட்டு,
     தன் கைப்பேசியில் வராத அழைப்பை வந்ததாக பேர் செய்தவன் “ஹலோ! ஓ முக்கியமான வேலையா! இதோ உடனே கிளம்பிட்டேன்” என்று தானாக பேசிவிட்டு “ஆபிஸ்ல இருந்து ஒரு முக்கியமான கால் மச்சான். நான் உடனே போகனும். வரேன்டா‌” என அவசரமாக சொல்லிவிட்டு வெளியே வந்து தன் காரில் ஏறியவன்
     “ஹப்பாடா” என பெருமூச்சு ஒன்றை விட்டு “எனக்கு தான் பிரண்டா வந்ததும் சரியில்லை, கூட பிறந்ததும் சரியில்லை. இதுல பொண்டாட்டியா வரப்போறது எப்படி இருக்க போவுதோ?” என புலம்பியபடியே வண்டியை எடுத்து சென்றான்.
     இடையில் குறுக்கிட்ட அவன் மனசாட்சி “முதல்ல உனக்கு பொண்டாட்டினு ஒருத்தி வராளான்னு பாரு மகனே. அப்புறம் பேசு” என கேலி செய்ய “நீ மூடிட்டு கிட! அதெல்லாம் கண்டிப்பா வருவா” என கடுப்புடன் சொல்லி சென்றான்.
     இங்கே அபி விக்ரம் இருவரும் விழுந்தடித்து ஓடியதை கண்டு சிரித்த ஹர்ஷா “பாருடா அம்மு! நீ கிண்டல் பண்ணுறத கூட புரிஞ்சுக்காம ரெண்டு பேரும் ஓடுறானுங்க . நீ அப்படி பயமுறுத்தி வச்சிருக்க போல” என்றான். அதில் தானும் சிரித்த அம்மு “நான் என்னத்த சொல்றது அத்தான்.
     எனக்கு விதிச்சது அவ்ளோ தான்” என சலிப்பு போல் கூறி சென்றாள். ஆனால் அபியை ‘ஓடவா செய்ற. போய்ட்டு வந்து உன்னை பேசிக்கிறேன் அத்தான்’ என்று மனதில் அவனை கருவிக் கொண்டே சென்றாள் அம்மு.
____________________________________________
     “மீனாட்சி ஷராக்கு இன்னொரு பூரி வைமா. அவளுக்கு பூரினா ரொம்ப பிடிக்கும்ல” என்ற விஸ்வநாதனை வியந்து தான் பார்த்திருந்தனர் குடும்பத்தினர். விஸ்வநாதனின் நடத்தை இந்த ஒரு மாதமாக இப்படி தான் இருக்கிறது.
      அனுவின் சிறு சிறு ஏக்கத்தை கூட நிவர்த்தி செய்யும் விதமாக தான் நடக்கிறார். ஏன் திருமண உடைகள் எடுக்கும் நேரம் அனுவை அழைத்து சென்றவர் “உனக்கு இந்த புளு கலர் நல்லா இருக்காதுடா இந்த அரக்கு கலரை பாரேன் நல்லா பொறுத்தமா இருக்கும்” என்று பார்த்த அனைவரின் நெஞ்சிலும் பூமி அதிராமலே நிலநடுக்கத்தை வரவைத்து விட்டார் மனிதர்.
     ஆனால் அதேசமயம் ரித்து கேட்ட லெஹாங்காவை வாங்கி தரவும் மறுத்து “புடவை வாங்குறதுனா வாங்கு இல்லை தாவணி வாங்கிக்கோ. ஆனா இந்த லெஹாங்காலா வேணாம்” என்று கறாராக சொல்லிவிட்டார். இப்போது அவரை தவறான கண்ணோட்டத்தில் பார்க்க தோன்றவில்லை அனுவிற்கு.
     ‘அவர் கூறுவதும் நம் நல்லதிற்கு தானே’ என மனதார உணர முனைகிறாள் அனு‌. சாப்பிட்டு முடித்த அனு அனைவரிடமும் சொல்லிவிட்டு தன் அறை நோக்கி சென்று தன் கைப்பேசியை எடுக்க,
     அதே நேரம் ஹர்ஷாவிடன் இருந்து “வீடியோ கால் எடு” என்ற செய்தியும் வந்து சேர்ந்தது. அதே போல் அவனின் அழைப்பை ஏற்றவுடன் அனு “ஹர்ஷா நானே உங்ககிட்ட பேசனும்னு தான் வந்தேன். கரெக்ட்டா நீங்களே கால் பண்ணீட்டிங்க.
     சொல்லுங்க சொல்லுங்க என்ன நேச்சுரல் மெத்தெட் யூஸ் பண்ணா பேஸ் பிரைட் ஆகும். அம்மா கூட என்னன்னு கேட்டு வச்சு செஞ்சு பார்க்க சொன்னாங்க” என்றாள் ஆவலாக. இதுவரை உற்சாகத்துடன் கேட்டுக் கொண்டிருந்த ஹர்ஷா அனு இவ்வாறு சொல்லவும் திடுக்கிட்டு,
     “ஏய் அனு! என்னடி சொல்ற? அத்தைகிட்ட போய் என்னத்த சொல்லி தொலைச்ச?” என்றான் படபடப்பாக. அவனை விசித்திரமாக பார்த்த அனு “அதான் நீங்க சொன்னீங்களே! நேச்சுரல் மெத்தெட்ல பேஸ நல்லா பிரைட் பண்ணலாம்னு. இன்னைக்கு ஃபேசியல் பண்ணிட்டேன். அதோட அம்மா உங்ககிட்ட கேட்டுட்டு நீங்க சொல்றதையும் செய்ய சொன்னாங்க” அவ்வளவு தான் எனும் விதமாய் சொல்லி முடித்தாள் அனு‌.
     அவள் பதில் கேட்டு தன் தலையிலேயே அடித்துக் கொண்ட ஹர்ஷா “ஏன்டி! நாம எது பேசினாலும் அப்படியே போய் உன் அம்மாட்ட ஒப்பிச்சு வச்சிட்டு தான் அடுத்த வேளை பார்ப்பியா?” என்றான் கடுப்பாக.
     அவனின் கடுப்பு புரியாமல் “ஆமா! நான் சின்ன வயசுல இருந்தே அப்படி தான். ஸ்கூல் காலேஜ்லனு எது நடந்தாலும் அப்படியே வந்து அம்மாட்ட சொல்லிடுவேன். அப்புறம் நீங்க சொன்னதுல என்ன தப்பு இருக்கு. அதான் இதை அம்மாவோட ஷேர் பண்ணிட்டேன்” என்றாள் அப்பாவியாய்.
     அவளின் இந்த அப்பாவி தனத்தை பார்த்து “நீ உண்மையாவே பேபி தான்டா குட்டிம்மா” என்றான் ஆதூரமாக. “சரி சரி பேச்சை மாத்தாம அந்த டிப்ப சொல்லுங்க” என்று சிணுங்கினாள்.
     இதுவரை ரசனையை பூசியிருந்த ஹர்ஷாவின் முகம் விசமத்தை ஏந்தியது. “அது.. பேபி” என்றான் ஹஸ்கி குரலில். “ம்ம் சொல்லுங்க” எனும் அனுவின் குரலிலும் மென்மை சேர்ந்தது.
     ஆனால் மேலே எதுவும் கூறாத ஹர்ஷா தன் விரல் கொண்டு திரையில் தெரிந்த அனுவின் நெற்றியில் இருந்து வருட தொடங்கி அவள் உதட்டில் வந்து நிறுத்திவிட்டு அவளை பார்க்க அனுவிற்கு வயிற்றினுள் பட்டாம்பூச்சிகள் பறந்தன.
     இப்போது தொடுதிரையில் தெரிந்த அனுவின் முகம் நோக்கி குனிந்த ஹர்ஷா அவளுக்கு முத்தமிட, ஹர்ஷா நேரிலே முத்தம் கொடுத்ததை போல் விதிர்த்து போனாள். “என்ன பண்றீங்க?” என்ற அனுவின் குரல் வெளியே வரவில்லை.
     “பேபி அப்படியே எழுந்து போய் கண்ணாடிய பாரேன்” என்றான் மாறாத அதே குழைந்த குரலில். அதிர்வில் இருந்த அனுவோ ஹர்ஷா கூறியதை அப்படியே செய்தாள். “முகத்தை தூக்கி கண்ணாடிய பாரேன். உன் பேஸ் எப்படி ஃபிளஷ் ஆகி பிங்கா இருக்கு பாரேன்” என்றான் ரசனையாய்.
     அப்போது கண்ணாடியை நிமிர்ந்து பார்த்த அனு இன்னும் வெட்கி சிவந்தாள். “அனுமா இது என்னடா பெரிய விஷயம், நீ மட்டும் என் கூட வந்து சேருடா. அப்புறம் பாரு என் கைக்குள்ள நீ இருக்குற ஒவ்வொரு நிமிஷமும் இதே மாதிரி நீ சந்தோஷமா பிரைட்டாவே இருக்க போற பாரு” என்றவனின் வரிகளில் அவள் மனதிற்குள் ஒரு சிலிர்ப்பு ஓடி அடங்கியது.
     இவர்கள் இப்படி தங்கள் நேரத்தை இங்கே இனிமையாக கடத்த அங்கே அம்முவின் கையில் சிக்கியிருந்த அபிமன்யுவோ முழி பிதுங்கி போய் நின்றிருந்தான். “அபி அத்தான்! உங்களுக்கு என்னை பார்த்தா எப்படி தெரியுது? காலைல நான் சும்மா விளையாட்டுக்கு ஷாப்பிங்கு கூப்டா என்னமோ பேய பாத்த மாதிரி ஓடுறீங்க.
     அப்போ உங்களுக்கு என் மேல உண்மையா லவ் இல்ல” என அவனை லெஃப்ட் அன்ட் ரைட் விலாசிக் கொண்டிருந்தாள். தான் காலையில் செய்த சிறு தவறு இப்படி விஸ்வரூபம் எடுக்கும் என அறியாத அபி “ஐயோ! அம்முமா.
     நான் சும்மா உன் அண்ணன கிண்டல் பண்ண தான் அப்படி செஞ்சேன். என்னை பத்தி உனக்கு தெரியாதா? ம்ம் நான் உன்னை எவ்ளோ லவ் பண்றேன்னு உனக்கு தெரியாதா செல்லம்” என்று ஏதேதோ பேசி காலில் விழாத குறையாக கெஞ்சி சமாதானம் செய்து கொண்டிருந்தான்.
     ஆனால் இங்கே நடப்பவற்றிக்கும் எனக்கும் என்ன சம்மந்தம் என குறட்டை விட்டு நிம்மதியாக தூங்கி கொண்டிருந்த விக்ரமை கண்டு ‘முடிஞ்ச அளவு இப்பவே தூங்கி நல்லா ரெஸ்ட் எடுத்துக்கோ செல்லம். ஏனா உனக்கு ஒரு பெரிய ஆப்பா நான் ரெடி பண்ணிட்டே இருக்கேன்’ என அவனை நக்கலான சிரித்து சென்றது விதி!!
-மீண்டும் வருவான்

Advertisement