Advertisement

     “இன்னைக்கு பங்ஷன் முடிஞ்சு நீங்க என் அப்பாகிட்ட தனியா போய் என்ன பேசுனீங்க. அவர் கூட சண்டை ஏதும் போட்டீங்களா?” என்ற அனுவின் சந்தேகமான கேள்வியில் ஒரு நிமிடம் ஒன்றும் புரியவில்லை ஹர்ஷவிற்கு.
     அதற்கு “என்னடி கேக்குற. நான் எதுக்கு உன் அப்பாக்கிட்ட சண்டைக்கு போக போறேன். சொல்றத ஒழுங்கா சொல்லுடி” என்றான் ஹர்ஷா கடுப்பாக. பின்னே நிச்சயமான உடன் மாமனாரிடம் யாராவது சண்டை போடுவார்களா என்று கூடவா புரியாது என எண்ணினான்.
     “இல்லைங்க‌. நம்ம பங்சன் முடிஞ்ச அப்புறம் என் அப்பா உங்களை தனியா கூட்டிட்டு போய் பேசினாராமே. ரித்தி சொன்னா. அப்பவே எனக்கு கொஞ்சம் பயமா இருந்தது.
     ஆனா நாங்க எல்லாம் வீட்டுக்கு வந்த அப்புறம் என்னை கூப்பிட்டு ‘மாப்பிள்ளைக்கிட்ட உன் நம்பர் தந்திருக்கேன்டா. அவர் போன் செஞ்சா தயங்காம பேசனும் என்ன’ அப்படின்னு சொல்லுராரு.
     ஏற்கனவே நான் உங்ககிட்ட பேசற விஷயம் எதுவும் அவருக்கு தெரிஞ்சு போய் இப்படி போட்டு வாங்குறாரோன்னு பயம் வந்திருச்சு‌. அதான் தனியா போய் என்ன பேசுனீங்கன்னு கேக்குறேன்” என்றாள் அனு பதட்டமான குரலில்.
     “அதுக்கு என்னை பாத்தா உனக்கு சண்டைக்காரன் மாதிரி இருக்கா?” என்று கோபம் போல் வம்பிழுத்தான். அவன் கோபப்படுகிறான் என நினைத்த அனுவும் “நான் அப்படி சொல்லைங்க‌. அது வந்து அப்பா உங்களை… நீங்க… அப்பா. பிளீஸ் சொல்லுங்களே” என திணறினாள்.
     அனு திணுவதை கேட்டு வந்த சிரிப்பை வாய்க்குள் அடக்கிய ஹர்ஷா “ஆன் உக்ரைன் போரை எப்படி நிறுத்துறதுன்னு பேசிட்டு இருந்தோம்” என்றான் கிண்டலாக. அவனின் பதிலில்‌ “ப்ச் உங்களுக்கு எல்லாமே விளையாட்டு தானா‌. பிளீஸ் சொல்லுங்க பா.
     என்ன தான் பேசுனீங்க” என்றாள் கெஞ்சலாக. அவள் கெஞ்சலாக பேச பேச அவளை சீண்ட வேண்டும் என்ற எண்ணம் தான் வந்தது ஹர்ஷாவிற்கு. “என்ன செல்லம் என்ன சொல்லனும்” என்றான் ராகமாய் இழுத்து.
     “ஹையோ ஏன் ஹர்ஷா இப்படி படுத்துறீங்க. என்ன ஆச்சுன்னு சொல்லுங்களே பிளீஸ் பிளீஸ்பா” என்று அனு அலுத்துக் கொள்ளும் போதே “ஹே ஹே குட்டிம்மா! என்னடி சொல்ல சொல்லுற?” என்றான் குதூகலமாக.
    “ஐயோ ஹர்ஷா என்ன இது இப்படி பண்றீங்க. அப்புறம் நீங்க கால் பண்ணா நான் பேச மாட்டேன் பாத்துக்கோங்க” என்றாள் மிரட்டலாக. அவள் மிரட்டுவதை ரசித்தவாறே “நீ என்னை மிரட்ட டிரை பண்றியாடா குட்டிம்மா. இதை நான் உன் அப்பா காதுல போட்ட என்ன ஆகும் தெரியுமா செல்லம்” என்றான் குழைவான குரலில்.
     அவன் கூறிய திணுசில் அனுவிற்கு தான் பயமாய் போய்விட்டது. அதன்பின் அமைதியாகி விட்டாள் அனு. அவளின் அமைதியை கலைக்கும் விதமாக “என்னடி சைலண்ட் ஆகிட்ட. நாம பேச ஆரம்பிச்சு இத்தனை நாள்ல இப்போ தான் செல்லம் என்கிட்ட வாயை திறந்தே பேசுற. இதுல பேச வேற விஷயமே இல்லாத மாதிரி அப்பா என்ன சொன்னாங்க ஆட்டுக்குட்டி என்ன சொன்னாங்கன்னு” என தன் போக்கில் திட்டுவது போல் பேசி அவள் கேட்ட கேள்விக்கு மட்டும் பதில் கூறாமல் இழுத்தடித்தான்.
     இப்படி பேசிக் கொண்டிருந்த நேரம் அனுவின் அறைக்கதவை யாரோ இருமுறை தட்டினர்‌. அதில் கலைந்த அனு “ஹான்.. உள்ள வாங்க‌ கதவு திறந்து தான் இருக்கு” என்றாள் வருவது தன் தாயோ இல்லை ரித்தியோ என எண்ணி. ஆனால் வந்தது அனுவின் தந்தை விஸ்வநாதன்.
     உள்ளே வந்த விஸ்வநாதன் காதில் கைப்பேசியை வைத்து தன்னை பார்த்து திருதிருவென முழித்துக் கொண்டிருந்த அனுவை கண்டு “யார்ட்ட ஷரா பேசிட்டு இருக்க?” என்று கேட்டு முடிக்கும் முன்னே “அது அப்பா… அது அவரு தான்” என உளற ஆரம்பித்தாள்.
     பின் “இந்தாங்க ப்பா” என தன் கைப்பேசியை தன் தந்தையிடம் நீட்டிவிட்டாள்‌. அதை அந்த பக்கம் இருந்து கேட்டுக் கொண்டிருந்த ஹர்ஷா தலையிலே அடித்து கொண்டவன் “அவரு மிரட்ட கூட வேணாம். இவளே எல்லாத்தையும் உளறி வச்சிடுவா போலையே” என்று தான் எண்ணினான்.
     விஸ்வநாதன் குழப்பத்துடன் அனுவிடம் கைப்பேசியை வாங்கியவர் “ஹலோ?” என்றார்‌. அவர் குரலை கேட்ட ஹர்ஷா “மாமா! நான் ஹர்ஷா” என்றான்‌. ஹர்ஷாவின் குரலை கேட்டு அட்டென்ஷன் போசிற்கு வந்த விஸ்வநாதன் “மாப்பிள்ளை நீங்களா?
     நல்லா இருக்கீங்களா?” என்று தடுமாற்றத்துடன் கேட்டவர் “ஷரா பாப்பா நீங்க தான்னு சொல்லலை மாப்பிள்ளை. அதான்” என்று இழுத்தார். அதற்கு “நல்லா இருக்கேன் மாமா. அனு நான் போன் செய்யவும் கொஞ்சம் பதறிட்டா” என்று புன்னகைத்தான் ஹர்ஷா.
     “நான் பாப்பாட்ட சொல்றேன் மாப்பிள்ளை” என்று அனுவிடம் கைப்பேசியை தந்தவர் “பாப்பா மாப்பிள்ளை தானேடா நீ தயங்காம பேசு என்னடா” என அவள் தலையை தடவிவிட்டு வெளியேறினார். விஸ்வநாதனின் தடுமாற்றம் ஹர்ஷாவிற்கு சிரிப்பை ஏற்ப்படுத்தியது என்றால் அனுவிற்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.
     அவர் சென்றபின் கூட வாயை பிளந்து கொண்டு பார்த்திருந்தாள் அனு. ஆனால் அவள் சத்தம் கேட்காததால் மீண்டும் மீண்டும் கூப்பிட்டு பார்த்த ஹர்ஷா அழைப்பை அணைத்து மறுபடியும் அழைப்பு விடுத்தான்.
     அதில் தெளிந்த அனு அழைப்பை ஏற்றவுடன் “என்னடி கனவு கட்டுட்டு நின்னியா? நானும் கூப்பிட்டு கூப்பிட்டு பார்த்துட்டு கட் பண்ணிட்டு கால் பண்றேன்” என்றான் கடுப்பாக. அவன் கேள்வியை கண்டு கொள்ளாத அனுவோ
     “உண்மையாவே கனவு மாதிரி தாங்க இருக்கு. இப்ப வந்திட்டு போனது என் அப்பாவா இல்லை அவர் குளோனிங்கான்னே தெரியலை. என் அப்பாவா இப்படி எல்லாம் பேசிட்டு போறாருன்னு நானே ஷாக்ல இருக்கேன் ஹர்ஷா” என்ற அனுவின் குரலே ஆச்சரியத்தில் தான் இருந்தது.
     அவள் பதிலில் சிரித்த ஹர்ஷா “ஆனாலும் நீ உன் அப்பாவ பத்தி சொல்றது எல்லாம் உன்னோட ஓவர் இமேஜினேஷன்னு தான்டா தோனுது. அவர் நார்மல் தான். பாரு நம்ம எங்கேஜ்மெண்ட் முடிஞ்ச உடனே என்னை கூப்பிட்டு உன் நம்பரை தந்து பேசி பழகுங்க மாப்பிள்ளைனு சொன்னாரு தெரியுமா” என்று கிண்டலாக முடித்தான்.
     அதை கேட்டு “ஹர்ஷா!!” என பல்லை கடிக்க “கூல் செல்லம் கூல்! நான் சொல்றது டுரூ டா” என்றவன் விஸ்வநாதன் தன்னிடம் பேசியதை முழுவதையும் கூறி முடித்தான். அவன் தன் தந்தையை பற்றி கூறியதை கேட்ட அனுவிற்கு உண்மையில் மயக்கம் வரும் போல் தான் இருந்தது.
     ஒரு முறைக்கு இரு முறை உண்மை தானா என்று கேட்டு தெளிவுப்படுத்திக் கொண்ட பின் மிகவும் மகிழ்ச்சி அடைந்தாள் அனு. அனுவின் அமைதியை உணர்ந்து “நான் கூட நீ சொன்னதை வச்சு உன் அப்பாவ ரொம்ப ஸ்ரிக்ட் ஆபிசர்னு நினைச்சேன்.
     பட் இப்போ அதுக்கு பின்னாடி எதோ ரீசன் இருக்குன்னு தோனுது. பட் அவர் உன் ஸ்டடிஸ்லையும் உன் தங்கச்சி ஸ்டடிஸ்லையும் உங்களுக்கு பிடிச்சதை பண்ண விடாம இருந்தது எனக்கு ஓகே இல்லை தான்” என்றான். அனுவும் “ம்ம்” என்றாள்.
     ஏனெனில் அனு விஸ்வநாதன் தங்களுக்கு பிடித்த படிப்பை படிக்க விடவில்லை என பேச்சு வாக்கில் சொல்லி இருந்தாள். அதை வைத்து தான் ஹர்ஷா இப்படி சொல்லியிருந்தான். அதன் பின்னான நேரத்தை அவர்களுக்கே உரித்தான நேரமாக அந்த இளம் ஜோடி மாற்றிக் கொண்டனர்.
____________________________________________
     இரவு உணவுக்கு ஹர்ஷா இறங்கி வரும் நேரம் உறவினர்கள் எல்லாரும் கிளம்பி இருந்தனர்‌. வீட்டு ஆட்கள் மட்டுமே இருந்தனர். அங்கே ஹால் சோஃபாவில் அமர்ந்திருந்த விக்ரம் எதோ தீவிர யோசனையில் இருந்தான்.
     அவனை பார்த்துக் கொண்டே வந்த ஹர்ஷா “என்னடா மச்சான்! எதோ பெரிய யோசைனையில இருக்க போல. அப்படி என்னத்த யோசிச்சிட்டு இருக்க?” என்றவாறு அவன் அருகில் அமர்ந்தான்.
     இன்னும் யோசனையை கைவிடாதவனாக “மச்சான் நீ அபியையும் என் தங்கச்சி அம்முவையும் இப்பலாம் நோட் பண்ணுறியா?” என்றான். ஹர்ஷாவிற்கு விக்ரம் எங்கே வருகிறான் என ஓரளவு புரிந்தது. எனவே “நீ எதை கேட்குற?” என்று மட்டும் கேட்டான்.
     அதற்கு “அவங்க ரெண்டு பேரோட ஆட்டிடூய்ட் கொஞ்சம் வித்தியாசமா இருக்குடா. முன்னவிட இப்போ ரொம்ப குளோஸா இருக்க மாதிரி இருக்கு” என்றான்.
     இன்று மாலை விக்ரம் ஆபிஸ் கால் ஒன்றை பேசிக் கொண்டே அவன் அறை பால்கனியில் வந்து நின்றான். அப்போது அவர்கள் வீட்டு தோட்டத்தில் அபியும் அம்முவும் நிற்பதை விக்ரம் கண்டான். ஆனால் சிறிது நேரத்தில் அம்முவை அபி அணைப்பதை கண்டு அதிர்ந்து விட்டான்.
     அவர்கள் அதன்பின் வீட்டின் உள்ளே சென்றுவிட்டனர். ஆனால் விக்ரம் தான் அவர்களின் தற்போதைய நடவடிக்கைகளை நினைத்தபடி அமர்ந்து கொண்டான். அப்படி யோசிக்கும் போது சமீக காலமாக அம்மு மற்றும் அபியிடம் இருக்கும் நெருக்கம் ஏதோ வித்தியாசமாக பட அதை ஹர்ஷாவிடம் சொல்லினான்.
     ஆனால் இது எல்லாம் ஹர்ஷா அறிந்தது தானே. எனவே “ஏன் அபியை கூப்பிட்டு கேளேன்” என்றான் நக்கலாக. “ஏதே! உன் தம்பிக்கிட்டையா! எப்பா ஏன்டா இந்த கொலவெறி. அவனுக்கு எனக்கும் தான் எப்பவும் ஏழாம் பொருத்தமே. நான் என்ன கேட்டாலும் ஏட்டிக்குப் போட்டியா தான் உன் தம்பிகாரன் பண்ணுவான்னு தெரிஞ்சே சொல்ற” என்றான் சட்டென்று.
     அதே நேரம் அபிமன்யுவும் வந்து சேர்ந்தான். ஹர்ஷாவின் அருகே அமர்ந்த அபியை கண்ட விக்ரம் “நீயே கேளுடா மச்சான்” என்றான் ஹர்ஷாவிடம். மனதிற்குள் சிரித்துக் கொண்ட ஹர்ஷா அபியிடம் “அபி உனக்கும் அம்முவுக்கும் நடுவுல என்னடா நடக்குது. விக்ரம் கேக்க சொல்றான்” என்றான் விக்ரம் முறைப்பதை சட்டை செய்யாமல்.
     தன் அண்ணனின் குறும்பு புரிந்த அபி விக்ரமை பார்த்து “ஏன் விக்ரம் மாமா! என்னை கேட்டிருந்தா நானே சொல்லிருப்பேன். ஏன் என் அண்ணனை தூது அனுப்புற” என்றவன் “நானும் அம்முவும் லவ் பண்றோம். ஏன் உனக்கு தெரியாதா என்ன” என்று குறும்பாக சொல்லி உணவறை நோக்கி சென்று விட்டான்.
     கேட்ட விக்ரம் தான் அதிர்ச்சியில் எழுந்து நின்றுவிட்டான். ஹர்ஷாவை கண்டு “உன் தம்பி என்ன சொல்லிட்டு போறான்டா?” என்றான். அதற்கு “அதான் சொல்லிட்டு போறான்லடா மச்சான் கேக்குலையா. அவனும் அம்முவும் லவ் பண்றாங்க. வீட்ல இருக்க எல்லாருக்கும் கூட தெரியுமே” என்ற ஹர்ஷாவின் பதிலில் மீண்டும் அதிர்ந்தான் விக்ரம்.
     அவன் முகத்தை பார்த்த ஹர்ஷாவிற்கு சிரிப்பை அடக்க முடியாமல் போனது. “அடேய் அண்ணன் தம்பி ரெண்டு பேரும் சேர்ந்து இதை என்கிட்ட சொல்லாம மறைச்சிட்டீங்கலாடா. எவ்ளோ நாளாடா இது நடக்குது” என்றான் பாவமாக.
     அவனின் பாவனை இன்னும் சிரிப்பை தான் தந்தது ஹர்ஷாவிற்கு. “என்ன மச்சான் ஷாக்கா!!” என்று கேட்டு சிரித்தவன் விக்ரம் இன்னும் பாவமாக பார்க்கவும் “அவன் ரொம்ப வருஷமா லவ் பண்றான்டா. இப்போ சில மாசத்துக்கு முன்னாடி அம்முட்ட பேசி ஓகே வாங்கிட்டான் போல” என்றான் கூலாக.
     “அப்போ உனக்கும் தெரியும். அதானே உன் தம்பி உனக்கு தெரியாம எதாவது செஞ்சா தானே அதிசயம். என் தங்கச்சியும் தான் இருக்காளே ஒரு வார்த்தை சொல்லலை” என்றான் மனத்தாங்கல் போல்.
     “டேய்! அபி ஒன்னும் என்கிட்ட வந்து சொல்லலை. நானே தான் கண்டுபிடிச்சேன். வீட்ல இருக்கவங்க எல்லாரும் கூட அவங்க முகத்தை பார்த்தே கண்டுபிடிச்சிருப்பாங்க. நீ தத்தியா இருந்துட்டு அவனை சொல்லாதடா” என்றான் என்னவோ விக்ரம் கண்டுபிடிக்காதது தான் தப்பு என்பது போல‌.
     இதை கேட்டு “என்னமோ போடா” என்று அமர்ந்து விட்டான் விக்ரம். பின் என்னவோ யோசித்து விட்டு “ஆனாலும் அவனுக்கு முன்ன பிறந்த நமக்கு செட்டாகுறதுக்கு முன்னாடி அவன் கமிட் ஆகிருக்கான் பாரேன்.
     என்னை கூட ஒருவிதத்தில விட்டுருடா. ஆனா இத்தனை வருஷம் ஆகியும் உனக்கு வீட்ல உள்ளவங்க பொண்ணு பார்க்குறாங்க. உனக்கும் கொஞ்சம் கூட திறமையே இல்லை ஹர்ஷா” என்று கிண்டலாய் முடித்தான்‌.
     விக்ரமின் கிண்டலில் சிரித்த ஹர்ஷா “உண்மை தான்டா. அவன் எங்க அப்பா மாதிரி” என்று கூறி பதிலுக்கு கிண்டலடித்தான்‌. இப்படி ஒருவருக்கொருவர் கிண்டல் அடிக்கும் நேரம் வந்து சேர்ந்தனர் ராஜசேகர் வேதாசலம் மற்றும் அருணாச்சலம் மூவரும்.
-மீண்டும் வருவான்

Advertisement