Advertisement

     “அபி அத்தான்…! அத்தான்‌..! அத்தான்….!” என வண்டி ஓட்டிக் கொண்டிருந்த அபிமன்யுவின் கவனத்தை தன் புறம் திருப்ப அவன்‌ காதில் கத்தினாள் ஆதிரா. அவள் கத்திய கத்தலில் கடுப்பான அபி
     “ஏய் அம்மு! ஏன்டி என் காதுக்குள்ள வந்து இப்படி கத்துற. கொஞ்சம் நேரம் கத்தாம வாடி” என்று பதிலுக்கு கத்திய அபியோ கவனமாக தன் இருசக்கர வாகனத்தை அந்த போக்குவரத்தில் செலுத்தினான்.
     இன்றைய நாள் இருவருக்கும் கல்லூரி விடுமுறை தான். ஆனால் அம்முவை தோழி வீட்டில் சேர்ந்து படிக்க செல்வதாக கூறும் படி சொல்லிய அபி மாலை போல் அவளை அழைத்துக் கொண்டு வெளியே வந்துவிட்டான்.
     ஆனால் அம்முவிற்கு தான் எங்கே செல்கிறோம் என தெரியாது மண்டை குடைந்தது‌. அதை அறிந்துக் கொள்ளவே அபியை கேட்க அழைத்தாள். ஆனால் அவனோ சரியான பதில் தராது அழைத்து செல்கிறான்.
     அபி எங்கு கூட்டிச் செல்கிறான் என புரியாமல் ஏற்கனவே கடுப்பில் இருந்த அம்மு அபி கத்திவிடவும் மேலும் கடுப்பானவள் ‘செல்லம் வெல்லம்னு கொஞ்சிக்கிட்டு வருவாருள்ள.
     அப்போ பேசிக்கிறேன்’ என மனதில் நினைத்து அபியிடம் பேசாமல் முகத்தை உர்ரென தூக்கி வைத்துக் கொண்டு வந்தாள்.
     அவள் முகத்தை கண்ணாடியின் வழியே பார்த்த அபி ‘இன்னும் கொஞ்ச நேரம் தான் செல்லக்குட்டி. அப்புறம் நீயே சந்தோஷத்துல ‘அத்தான்னு..!’ வந்து என்னை கட்டிப்ப பாரு’ என மனதினுள் சிரித்துக் கொண்டான்.
     ஒரு மணி நேரம் சென்றது. ‘எங்க தான் கூட்டிட்டு போறாரு. கேட்டா வல்லுனு விழறது. எங்க போறோம்னு தெரியாம நமக்கு தான் மண்டை வெடிக்கிது’ என மனதிற்குள் புலம்பியபடி வந்த ஆதி அபியை கட்டிக் கொண்டு முதுகில் கண்களை மூடி சாய்ந்துவிட்டாள்.
     ஒருவழியாக அபி வரவேண்டிய இடம் வரவே வாகனம் நிறுத்துமிடத்தில் வண்டியை நிறுத்தி‌ ஆதியிடம் “அம்மு வந்துட்டோம்டா. வா வா போகலாம் டைம் ஆச்சு!!” என அவள் பேச நேரமே தராது இழுத்து சென்றான்.
     அந்த இடம் அங்கிருந்த பதாகைகள் அலங்காரங்கள் எல்லாம் அவர்கள் எங்கிருக்கிறார்கள் என அபி சொல்லாமலே ஆதிக்கு தெரியப்படுத்தியது.
     மகிழ்ச்சியில் ஆச்சரியத்தில் அவள் மனது துள்ளி குதித்தது. அதில் அவளுக்கு வந்திருந்த அந்த சிறிது நேர கோபம் எல்லாம் எங்கேயோ காற்றில் பறந்து விட்டிருந்தது.
     ஏனெனில் அவர்கள் வந்திருந்த இடம் ஒய்.எம்.சி.ஏ மைதானம். அங்கே நடக்க இருக்கும் இசை நிகழ்ச்சிக்கு தான் அம்முவை அழைத்து வந்திருந்தான் அபி‌.
     “அத்தான்…!!!” என ஹை பிச்சில் மகிழ்ந்த ஆதியிடம் “என்னடி?” என்றான் அபி குறும்பாக. ” ‘மியூசிக் பியஸ்ட்டா’ வாவ்!!! அத்தான் செம செம போங்க. நான் இதை எக்ஸ்பெக்ட் பண்ணவே இல்ல.
     எங்கையோ கூட்டிட்டு போறீங்கன்னு நினைச்சேன். பட் இதை நான் கொஞ்சம் கூட எதிர்ப்பார்க்கவே இல்லை. தேங்க்ஸ்! தேங்க்ஸ் அத்தான்..! தேங்க் யூ சோ மச்!!” என்று ஆர்ப்பாட்டமாக அபியை அணைத்துக் கொண்டாள் அம்மு.
     திடீரென யோசித்தவளாக “ஆனா அத்தான் நான் டிக்கெட்ஸ் எடுக்க டிரை பண்ணி பார்த்துட்டேன். பட் இந்த அனவுன்ஸ்மென்ட் வந்த ஒரே நாள்ல எல்லா டிக்கெட்டும் காலின்னு சொன்னாங்க.
     உங்களுக்கு எப்படி கிடைச்சிது” என்றாள் கேள்வியாக. அதற்கு சிரித்த அபி “நானும் உனக்கு பிடிச்ச க்ஷோன்னு எவ்வளவுவோ டிரை பண்ணி பார்த்தேன். எனக்கும் டிக்கெட்ஸ் கிடைக்கலை” என்றான்.
     “அப்புறம் இது எப்படி?” என அவன் கையில் இருந்த டிக்கெட்டை காட்டி கேட்க “அது.. என் அண்ணன் எனக்கு முன்னாடி எடுத்துட்டார் டி” என்று நடந்ததை கூறினான் அபிமன்யு.
     அபி அவ்வளவு மெனக்கெட்டும் அவனுக்கு டிக்கெட் கிடைக்கவில்லை. நேற்று அவனை அழைத்த ஹர்ஷா இரண்டு டிக்கெட்களை தந்து அம்முவை பத்திரமாக அழைத்து சென்று வரும் படி கூறினான்.
     நடந்தவற்றை கேட்ட அம்மு “அப்போ நாம ரெண்டு பேரும் சேர்ந்து இங்க தான் வரோம்னு ஹர்ஷா அத்தான்க்கு தெரியுமா?” என்றாள் மகிழ்ச்சியாக.
     “ம்ம் தெரியும் தெரியும்” என்றவன் ஏதோ யோசித்து “ஆனா அண்ணா பாரேன் யார்க்கு என்ன பிடிக்கும்னு நாம‌ சொல்லாமையே அவர் நமக்கு செய்றாருல்ல” என்றான் பெருமையாக.
     அதை தானும் ஆமோதித்தாள் அம்மு. பின் அந்த பதாகைகள் அருகே நின்று பல கோணங்களில் புகைப்படங்கள் தனியாக மற்றும் அபியுடன் எடுத்துக் கொண்டாள் அம்மு. அந்த புகைப்படங்களை மறுநாள் நன்பர்களிடம் காட்டி மகிழ்ச்சி கொள்ள.
     அம்முவின் அழகான ஆர்ப்பாட்டத்தை ரசித்தவாறே அபி “வாடி. டைம் ஆகுது இப்ப போனா தான் முன்னாடி இடம் பிடிக்க முடியும். உனக்கு பிடிச்ச சிங்கர்ஸ் எல்லாரும் வராங்கலாம். வா வா சீக்கிரம் போகலாம்” என இழுத்து சென்றான்.
     அங்கே திரண்டிருந்த கூட்டத்தில் அடித்து பிடித்து சென்றவர்கள் நின்று பார்த்தால் மேடையில் இருப்பவர்கள் தெரியும் தூரம் நின்றுக் கொண்டனர்.
     வந்ததில் இருந்து வாய் ஓயாது பேசியபடி இருந்த அம்முவை அவ்வளவு பிடித்தது அபியிற்கு. அவள் மகிழ்ச்சிக்காக என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்ற எண்ணம் மனதில் வந்து நின்று கொண்டது.
     நிகழ்ச்சியும் ஆரம்பமானது. ஒரு புகழ்பெற்ற ஊடக தொகுப்பாளர் நிகழ்ச்சியை துவங்கி வைக்க ஒவ்வொரு பாடகராக பாட வந்தனர்.
     அடுத்ததாக வந்த நபரை கண்டு ஆர்ப்பரித்து தள்ளினாள் அம்மு. “அத்தான் அங்க பாருங்க. என் ஃபேவரைட் சிங்கர் அன்ட் மியூசிக் டைரக்டர் யுவன்!!” என தன் மன மகிழ்வை அப்பட்டமாக காட்டினாள் ஆதி.
     அடுத்து ஒளித்த பாடல் வேறு அம்முவின் பிடித்த பாடல்களில் ஒன்றாக இருக்க “ஐயோ!! ஒன் ஆப் மை பேவரைட் சாங் அத்தான். சூப்பரா பாடுறாங்கல!!” என்று கேட்டவாறு திரும்பி அபியை பார்த்த அம்மு அதிர்ந்தாள்.
     ஏனெனில் அங்கே அபி அம்முவையே வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தான்.
     நிகழ்ச்சி ஆரம்பித்த கொஞ்ச நேரம் அபியும் நிகழ்ச்சியை தான் கவனித்தான். அதன்பின் அம்முவின் ஆர்ப்பரிப்பில் அவன் கவனம் முழுவதும் தன் செல்ல அம்முவின் புறம் திரும்பிவிட்டது.
     அவன் பார்வையின் வீரியம் தாங்காமல் “எ.. என்ன அத்தான் அப்படி பார்க்குறீங்க?” என்றாள் திணறலாக. அவள் வார்த்தையில் தெளிந்த அபி “ஆன்… என்ன என்னடா அம்மு” என்றான்.
     அவன் கேள்வியில் என்ன கூறுவது என தெரியாது விழித்த அம்முவோ “அது.. அது அத்தான். இல்லை ஸ்டேஜ்” என மேடையை பார்க்குமாறு சைகை செய்தாள்.
     அங்கே பார்த்த அபி “ஹேய் அம்மு இது உன்னோட ஃபேவரைட் சாங் தானே. சூப்பர் டா” என்றான் அதை இப்போது தான் கவனித்த அபி. அதன்பின் எங்கே மேடையில் நடந்த நிகழ்வுகள் அம்முவின் புத்திக்கு சென்றது.
     அபி அவளை பார்த்த பார்வை தான் அவள் மனதினுள்ளே வந்து ஏதோ செய்ய ஆரம்பித்தது. சிறிது நேரம் மீண்டும் நிகழ்ச்சியை பார்க்க எண்ணி மேடையை பார்த்தாள் அம்மு.
     ஆனால் அவளுக்கு பிடித்த பாடகர்‌ பாடல்களை விட அவளின் அருமை அத்தை மகனின் நினைவே மேலோங்கி நின்று இம்சித்தது. அதற்கு மேல் அவளால் பார்க்க முடியும் என தோன்றவில்லை.
     எனவே அபியை அழைத்து “போகலாம் அத்தான்” என்றுவிட்டாள். அவளுக்கு பிடித்த நிகழ்ச்சி. இதற்கு போக வேண்டும் என அவ்வளவு ஆசைப்பட்டு நன்பர்களிடம் பேசிக் கொண்டிருந்தாள் அம்மு.
     அவளுக்கு ஒரு இன்ப அதிர்ச்சி தரலாம் என சொல்லாமல் அழைத்து வந்திருந்த அபிமன்யுவிற்கு இப்போது அம்மு திடீரென போகலாம் என அழைத்ததும் ஒன்னும் புரியவில்லை.
     “என்னாச்சு டா அம்மு. நீ ரொம்ப ஆசைப்பட்ட க்ஷோ. உனக்காக தானேடா நாம‌ இவ்ளோ தூரம் இந்த க்ஷோவ பார்க்க வந்தோம். இப்போ என்னடா ஆச்சு போலாம்னு சொல்ற” என்றான் அபி சந்தேகமாக.
     அபி இவ்வாறு கேட்கவும் என்ன சொல்வது என யோசித்த அம்மு “அத்தான் அது ஐம் நாட் ஃபீலிங் வெல். அதான் வீட்டுக்கு போகலாம்னு…” என இழுக்கவும்,
     “செல்லம் உடம்புக்கு என்னடா செய்யுது?” என பதறி விட்டான் அபி.‌ அவன் பதறியதில் “ரொம்பலாம் ஒன்னும் இல்ல அத்தான். ஜஸ்ட் டையர்டா இருக்கு. ரொம்ப நேரம் நிக்கிறோம்ல அதான். நாம இப்போ வீட்டுக்கு போலாமா அத்தான்?” என்றாள் அம்மு கொஞ்சலாக.
     அவள் சாதரணமாக சொல்லி இருந்தாலே உடன் அழைத்து சென்றிருக்கும் அபி இப்படி கொஞ்சும் போது மறுத்தா பேசப் போகிறான். அம்முவை அணைவாக பிடித்து கொண்டு பாதுக்காப்பாக அந்த கூட்டத்தில் இருந்து வெளிவர ஆரம்பித்தான்.
     உள்ளே வரும் போது கூட அபி இப்படி அழைத்து வந்தது அப்போது தான்‌ அம்முவிற்கு உரைத்தது. ‘ச்சே.. அத்தான் எப்படி என்னை பார்த்துக்காரு. நான் இப்படி தத்தியா இருக்கேனே’ என தன்னையே நொந்துக் கொண்ட அம்மு அவனின் அணைப்பில் இன்னும் ஒன்றினாள்‌.
     அவள் உடல் நிலை சரியில்லாததால் தான் இப்படி தன்னோடு ஒன்றுகிறாள் என எண்ணிய அபி அவளை பூப்போல் அழைத்து சென்றான்‌.
____________________________________________
     “அக்கா ஏன்க்கா இந்த மாமா இப்படி இருக்காரு?” என்று பாவமாக கேட்டபடி வந்து அமர்ந்தாள் ரித்திகா. அவள் முகத்தில் சோகம் டன்டன்னாக வழியவே “என்னடா ஆச்சு?” என்றாள் அனு.
     “பின்ன என்னக்கா. எனக்கு இருக்கிறது நீ ஒரே ஒரு அக்கா தான். உன் கல்யாணத்துக்கு கூட நான் ஆசைப்பட்ட மாதிரி டிரஸ் பண்ணக்கூடாதா?” என நடந்த நிகழ்வை கூறினாள் ரித்து.
     “உன் மேரேஜ்க்கு நான் ஸாரி தான் கட்டணும் அப்படின்னு மாமா சொன்னாருக்கா. நான் சரின்னு சொல்லிட்டேன். ஆனா உன் எங்கேஜ்மெண்ட்க்கு லெஹாங்கா போடலான்னு ஆசையா இருந்தேன்.
     ஆனா அவரு லெஹாங்கா நல்லா இருக்காது. நீ சுடி தான் போடனும் அப்படின்னு சொல்லிட்டாரு க்கா” என்றாள் சோகமாக குரலில்.
     “அப்புறம் அம்மா கூட பாவம் சின்ன பொண்ணு போட்டுட்டு போறான்னு சொன்னாங்க. ஆனா அதுக்கும் மாமா அம்மாவ ரொம்ப திட்டிட்டார்” என்றவளின் குரல் சிறிது பிசிறுதட்டியது.
     அவள் குரலின் பேதம் உணர்ந்த அனு “ரித்து மா அழறியாடா?” என்றாள் பதட்டமாக. “வேற என்னக்கா நாம பண்ண முடியும். இந்த வீட்ல நாம ஆசைப்பட்டதை படிக்க தான் முடியலை,
     அட்லீஸ்ட் ஆசைப்பட்ட டிரஸ் கூடவா போட முடியாது. என்னமோ போக்கா வர வர இந்த வீட்ல எல்லாமே எல்லை மீறி போகுது. வெறுப்பா இருக்குக்கா” என்றவள் கடைசியில் அழுது விட்டாள்.
     ரித்து அழுகவும் அவளை அணைத்து ஆறுதல் படுத்த ஆரம்பித்தாள் அனு. இதில் அதுவரை ஹர்ஷாவுடன் அவள் பேசிக்கொண்டிருந்ததை மறந்து விட்டிருந்தாள்.
     ஆனால் கைப்பேசியின் வழி அந்த பக்கம் இதை அனைத்தையும் ஹர்ஷா கேட்டுவிட்டான் என்பதை அனு அறியவில்லை. ஏற்கனவே நடந்த நிகழ்வுகள் மூலம் விஸ்வநாதன் மீது அதிர்ப்தியில் இருந்தான் ஹர்ஷா.
     அதில் இந்த நிகழ்வும் சேர்த்துக்கொள்ள விஸ்வநாதன் மீது ஒரு வெறுப்பு மனநிலை ஹர்ஷாவின் மனதில் வளர ஆரம்பித்து விட்டது.
     விதி வழி வரும் நிகழ்வுகள் எந்நாளும் மனிதன் எண்ணப்படி மாற்றம் காணாதே!! இதில் விஸ்வநாதன் மட்டும் விதிவிலக்கா என்ன?
-மீண்டும் வருவான்

Advertisement