கண்ணாத்தா பேய் தன்னுடைய வாழ்வில் நடந்த மீதி நிகழ்வுகளை, தான் சொல்லாமல் விட்டதை மீண்டும் சொல்ல தொடங்கியது.
அரவிந்தின் தாத்தா கண்ணாத்தாவை திருமணம் செய்து கொண்டபோது, கண்ணாத்தாவின் வீட்டில் அவள் அண்ணன் அந்த திருமணத்துக்கு ஒத்துக் கொள்ளவில்லை. எனவே கண்ணாத்தாவை இழுத்து சென்று தான் கல்யாணம் செய்திருந்தார் அந்த மனிதர். அதனால் தன் பிறந்த வீட்டின் தொடர்பே இல்லாமல் போய்விட்டது கண்ணாத்தாவிற்கு.
சம்மந்தமே இல்லாது இடையில் கிழவியின் இந்த கதை ஏன் உள்ளே நுழைக்கிறது என புரியாமல் மற்றவர்கள் முழிக்க, கிழவி மீதி சொன்ன கதை அனைவரின் காதிலும் புகையைதான் கிளப்பியது.
“இந்த பொதையலு கதைய கேட்டதுக்கு அப்புறம், என் அண்ணே இதுக்கு எதாச்சு உதவி செய்யுவானுட்டு அவனை போய் பாத்தேன். அவன் அவனுக்கு தெரிஞ்ச ஒரு மந்திரவாதிய ஏற்பாடு செஞ்சான்” தொடர்ந்தது கிழவி.
ஒரு பௌர்ணமி நாளில் நடு இரவு நேரத்தில், தன் அண்ணனோடு கண்ணாத்தா அந்த மந்திரவாதி எல்லோரும் இந்த குகைக்கு வந்தனர். அவர்களுடன் வந்த அந்த பிக்காளி ஒரு அரைகுறை மந்திரவாதி. ஒரு வாய் சோற்றுக்கு ஊரை ஏமாத்திக்கொண்டு திரிந்தவன்.
அதை எதுவும் அறியாது அவனை போய் அழைத்து வந்திருந்தனர் அண்ணன் தங்கை இருவரும். அவனால் அந்த பில்லி சூனியத்தில் பி.எச்டி பெற்றிருந்த மந்திரவாதி போட்ட கட்டை உடைக்க முடியவில்லை. அந்த சூழ்நிலை இவர்கள் மூவருக்குமே பேக்பையர் ஆகிவிட்டது. மூன்று பேரும் அந்த குகைக்குள் மாட்டி இருக்க, நம் கண்ணாத்தா கிழவி அந்த மந்திரவாதியயும் அவள் கூடப்பிறந்த அண்ணனையும் அங்கையே மாட்டிவிட்டு தப்பிக்க பார்த்தாள்.
அதை கடைசி நொடியில் பார்த்துவிட்ட அவள் அண்ணங்காரன் அவளையும் பிடித்து உள்ளே இழுத்து போட்டுவிட்டான். கண்ணாத்தாவின் அண்ணன் பின்னே எப்படி இருந்திருப்பான்.
அதுபோக “என்னைய மட்டுமா மாட்டிவிட பாக்குற நீ செத்தாலும் இங்கையே அடஞ்சுதான் கெடப்ப. என் ரெத்தத்தை தவிர வேற யாராலையும் உன்னைய காப்பாத்த முடியாது” என்று சாபமிட்ட நேரம் அவன் முன்னாடி அங்கிருந்த கட்டை எடுக்க மந்திரிவாதி எடுத்து வந்திருந்த ஒரு பொம்மை கிடக்க அதில் கிழவி சிக்கிவிட்டது.
குகையில் இருந்து இறந்த அவர்கள் உடல்கள் அந்த மந்திரவாதி போட்ட கட்டின் காரணமாக அந்த கிணத்துக்குள் தூக்கி வீசப்பட்டது.
“என்னோடையே இந்த பொம்மையும் இருக்க, என் புள்ள அதை என் நியாபகமா எடுத்து அந்த வீட்டுக்குள்ள வச்சான். இத்தனை வருஷமா எப்படி வெளிய வரதுன்னு தெரியாம தவிச்சுட்டு இருந்தப்ப தான் நீங்க எல்லா வந்தீங்க.
வீரா நான் இருந்த பொம்மைய கையில எடுக்கவும் எனக்கு புரிஞ்சு போச்சுது. அவ என்னோட ரத்தமுன்னு. அவ என் அண்ணனோட வம்சாவளிதேன். அதான் நான் உறுதியா சொன்னேன், அதுமாதிரி அவ ரெத்தத்தை ரெண்டு சொட்டு விடவும் நான் வெளிய வந்துட்டேன்”
பொம்மைக்குள் தான் வந்த வரலாறை கண்ணாத்தா கூறிமுடிக்க, கிழவியின் மீதிருந்த கொஞ்சநஞ்ச மரியாதையும் சுத்தமாய் போனது அனைவருக்கும்.
“இந்த கேவலமான ஃபிளாஷ் பேக்க வச்சுகிட்டு என்னனென்ன பண்ற கெழவி நீ. ஒழுங்கா மரியாதையா எங்களை எல்லா விடுற”
சித்து விட்ட தைரியத்தை மீண்டும் திரட்டி கிழவியை மிரட்ட “ஏய்யா ராசா அவரபடாதையா, நாஞ்சொல்றத முழுசா கேட்டுப்புட்டு அப்பொறம் என்ன சொய்யுறதுன்னுட்டு நீயே முடிவு செய்யுயா” என மிரட்டலை விட்டுவிட்டு கெஞ்சலில் இறங்கியது.
‘அட கட்டையில போன கெழவி உன் எஸ்டிடி எல்லாம் தெரிஞ்சிருந்தா நான் நீ சொல்றதை எல்லா கேட்டுருக்க மாட்டேனே. உன்ன என் லெஃப்ட் கைல டீல் பண்ணியிருப்பனே’ லேட்டாக வந்தது மாதவனின் மைண்ட் வாய்ஸ்.
கிழவி கெஞ்சுவதை கண்டு போனால் போகிறதென மனம் இறங்கிய சித்து,
“சரி சரி ரொம்ப கெஞ்சாத இப்ப நான் என்ன செய்யனும்னு சொல்லி தொலை, செஞ்சூட்டு போறேன்” என்றான்.
சித்துவின் சம்மதம் கிடைத்தவுடன் தன் கண்ணில் வராத கண்ணீரை துடைத்துப் போட்ட கிழவி
“அது ஒன்னும் இல்ல கண்ணு, உன் பாட்டேன் முப்பாட்டேன் அவுக யாரும் செய்யாதத நீ செய்யப்போற கண்ணு. அதேன் அந்த பொதையலு, அது இன்னமு இங்கனதேன் இருக்கு. அத எடுத்து ஊரு சனங்களுக்கு குடுத்துப்புட்டீனா நம்ம குடும்பத்து மேல இருக்க சாப போயிருங்கண்ணு. இனி இந்த பொதையலால யாரும் கஷ்டபட வேணாமய்யா”
கிழவி தன்னுடைய ஓவரால் எமோஷனை ஒன்றாக திரட்டி ஒன்றாய் ஒரே பெர்பாமன்சில் கொண்டுவர, சித்து தன் தலையை தட்டி எதையோ தீவிரமாக சிறிது நேரம் யோசித்தான்.
“சரி கெழவி நீ சொன்னத நான் செய்யுறேன், ஆனா நீ சொல்றதுக்காகலாம் நான் ஒன்னும் இதை செய்யல. அதை உன் மனசுல வச்சுக்க. அப்புறம் அதுக்கு முன்ன என் நைனாவ நீ ரிலீஸ் பண்ணனும்”
சித்தார்த் ஸ்ரிக்டாய் சொல்லி நிறுத்த, கிழவியின் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. ஏனெனில் இதுமட்டும் நடந்துவிட்டால், கிழவி இந்த உலகத்தை விட்டு மேலோகம் சென்றுவிடுமே, அந்த சந்தோஷம்தான்.
எனவே சித்து சொன்னதற்கு எல்லாம் தலையை ஆட்டிவிட்டு, ஓம் சூமந்தரகாளி என்றொரு மந்திரத்தை போட்டு அரவிந்தை ரிலீஸ் செய்தது.
“ஹப்பாடி சுதந்திரம் கெடைச்சிருச்சு. மகனே ரொம்ப தேங்க்ஸாடா”
போன சந்தோஷம் திரும்பி வந்தது அரவிந்துக்கு. இப்போது மகிழ்ச்சியாய் வெளியே வந்திருந்தார் மனிதர்.
ஆனால் தன் மகனை பற்றி முழுதாக அறிந்த தந்தைக்கு அவனின் முடிவை கேட்டு குழப்பம்தான் ‘நம்ம மகன் ஒன்னும் அவ்வளவு நல்லவன்லாம் இல்லையே’ என்று.
“சித்து… டேய் மகனே. உண்மையாவே எடுக்கபோற பொதையல எல்லா ஊர் மக்களுக்கு தரப்போறியாடா” டவுட்டாக கேட்ட தந்தையை முறைத்த சித்து “ஆமா நைனா” என்றான் பல்லைக்கடித்துக் கொண்டு.
அரவிந்து மேலும் தன்னை சந்தேகத்துடன் பார்க்கவும்
“யோவ் நைனா உண்மைய தான்யா சொல்றேன். இந்த கெழவி சொன்னதை நல்லா யோசிச்சு பாரு நம்ம குடும்பத்துமேல இருக்க அந்த சூனியம். எனக்கு என்னவோ அதனால தான் என் அம்மா உன் அம்மா எல்லாம் நம்மல சின்ன வயசுலையே விட்டுட்டு போய்டாங்கன்னு தோனுது. அந்த நிலைமை என் வீராக்கும் வரதை என்னால ஏத்துக்கவே முடியாது நைனா.
அம்மா இல்லாம நீ இத்தனை வருஷமா என்ன வச்சுகிட்டு எவ்ளோ கஷ்டப்பட்டன்னு நான் உன் கூடவே இருந்து பாத்திருக்கேன் ப்பா. அதே ஹிஸ்டரி எனக்கு தொடர்ந்தா என் வீரா இல்லாம என் பிள்ளைங்கள மட்டும் வச்சுக்கிட்டு என்னால எல்லாம் உன்ன மாதிரி இருக்க முடியாது ப்பா.
அதான் இந்த புதையல் யாருக்கு சொந்தமானதோ அவங்கட்டையே அதை சேத்துட்டா என் வாழ்க்கை நிம்மதியா நல்லா இருக்கும்ல. இதுல என்னோட சுயநலமும் இருக்குதுதான் நைனா”
சித்தார்த் சொல்லி நிறுத்தவும் அங்கிருந்த அனைவருக்கும் மனது கணத்து போனது. தாய் இல்லாமல் வளர்வது, மனைவி இல்லாமல் பிள்ளையை வளர்ப்பது இரண்டும் எவ்வளவு கஷ்டம் என்று அறிந்திருந்த அரவிந்திற்கு தன் மகனின் மனம் புரிய அவன் தோலை தட்டிக்கொடுத்து தன் சம்மதத்தை தெரிவித்தார்.
இங்கே வீராவுக்கோ தன் மேல் சித்து வைத்திருக்கும் காதலை எண்ணி கண்கள் கலங்கியது. இப்போது இமோஷனுக்கு இடம் கொடுத்தால் வேலைக்காகது என்றுணர்ந்த சித்து கிழவியிடம் சென்றான்.
“ஏய் கெழவி உன் பிளாஷ்போக் எல்லாம் முடிஞ்சது, நாங்க எதுக்கு இங்க வந்திருக்கோம்னு எல்லாம் சொல்லிட்ட சரி. எப்படி அந்த பொதையல நாங்க எடுக்கறது, அதுக்கான புரசீஜர் என்ன? சீக்கிரம் சொல்லு சட்டுப்புட்டுனு வேலைய முடிச்சிட்டு கெளம்புவோம்”
நியாமாய்தான் அவனும் கேட்டு வைத்தான். பின்னே புதையலை எடுத்து தர சொல்லும் கிழவி எப்படியென சொல்லவில்லையே. சித்து கேட்டதுதான் தாமதமென காற்றில் கைவீசியது கிழவி. கிழவி கையை கீழே இறக்கவும் ஒரு பேப்பர் சித்துவின் காலில் வந்து விழுந்தது.
‘என்னடா இது’ குழம்பிய சித்து அதை கையில் எடுத்து பார்க்க, வேறொன்று இல்லை சித்துவின் முன்னோர்களால் கிறுக்கி வைக்கப்பட்டிருந்த புதையல் மேப்தான் அது.
“ராசா அந்த கடுதாசிய பாரு என்ன செய்யனுமிட்டு ஒனக்கே தெரியும்”
கிழவி சொன்னதற்கு மாறாக அந்த பேப்பரை பார்த்த சித்துவுக்கு கோபம்தான் வந்தது. பின்னே சிறுபிள்ளைகள் விளையாட்டுக்காய் கிறுக்கியதை எல்லாம் புதையல் மேப்பென எடுத்து வருகிறதே இந்த கிழவி.
“ஏய் கெழவி என்னதிது, கோழி கிறுக்கி வச்சது மாதிரி இருக்கு. இதவச்சு என்னத்த செய்யுறது”
சித்து கத்த, கிழவி அது என்னவென பொறுமையாய் விளக்கியது. அதன்பின் அந்த வட்டம் சதுரம் எல்லாவற்றையும் விட்டுவிட்டான் சித்து. ஏனெனில் அவர்கள் புதையல் இருக்கும் இடத்திற்குதான் வந்துவிட்டனரே. எனவே வேறு எதாவது டீட்டெய்ல் இருக்கிறதாவென முன்னே பின்னே திருப்பி திருப்பி பார்த்தான். மீஹூம் ஒன்றும் தெரியவில்லை.
பின் நன்றாக பார்க்க அங்கே எரிந்த பந்தத்திடம் சென்றான். அதன் முன்னே தூக்கி சிறிது நேரம் பார்க்க, இப்போதும் அந்த பேப்பரில் எந்த ஒரு வித்தியாசமும் தெரியவில்லை. ‘என்னடா இது’ என சித்து மேலும் அதை திருப்பி பார்க்க, தூரத்திலிருந்து பார்த்திருந்த வீராவுக்கு என்ன தோன்றியதோ வேகமாக அவனருகில் வந்து அந்த பேப்பரை கையில் வாங்கினாள்.
“சித்து இங்க பாருங்க இதுல ரெண்டு பேப்பர் ஒட்டி இருக்கமாதிரி இருக்குல்ல”
வீரா கேட்ட பின்னே அதை கவனித்த சித்து அது ஒரு பேப்பர் இல்லை, அதில் இரண்டு பேப்பர் ஒன்றாக ஒட்டப்பட்டிருக்கிறதென புரிந்துக் கொண்டான். அதை லேசாக தேய்த்து அந்த பேப்பரை இரண்டாக பிரித்தான்.
“ஆமாடா செல்லம். எப்படி கண்டுபிடிச்ச நீ, செம பேபி”
வாய்க்கு வந்ததை எல்லாம் சொல்லி வீராவை சித்து புகழ, “பின்ன உன்ன மாதிரியா என் மருமகல அப்படிதான்டா இருப்பா” பழைய பாமுக்கு வந்தாருந்தார் அரவிந்த்.
இப்போது தன் தந்தையின் பக்கம் சென்றால் அவ்வளவுதான் என்று தன் கையில் பிரிந்திருந்த பக்கத்தில் இருக்கும் வாக்கியம் மற்றும் படங்களை நன்கு உற்றுப்பார்த்தான் சித்து. இப்போதுதான் புரிந்தது கிழவி எதற்கு மந்திரவாதியை அழைத்து வந்திருக்கிறதென.
ஆம் இந்த புதையலை சுற்றி ஒரு மாயகட்டு இருக்கிறது. இந்த நகைகளை எல்லாம் ஆட்டையப் போட்டு வைத்த அந்த மனிதர், தன்னுடைய ரத்த வாரிசை தவிர வேறு யாரும் எடுக்கக்கூடதென்ற நல்ல எண்ணத்துடன் ஒரு மந்திர கட்டை போட்டிருந்தார்.
மக்கள் என்னவோ ஒரு மந்திரவாதியை வைத்து குடுபம்பத்துக்கு மட்டும் சூனியம் வைத்திருக்க, அதில் எல்லாம் கண்ணாத்தா கேங் சிக்கவில்லை. இந்த புதையல் கட்டில் சிக்கியதாலே நம் கண்ணாத்தாவின் கேங் பாவம் சிக்கி காலியாகியிருந்தது. அது அந்த கண்ணாத்தாவிற்கே இன்னும் தெரியாதது பரிதாபமே.
அந்த பேப்பரில் இருந்த அனைத்தையும் படித்து பார்த்த சித்து, ‘அட வெளங்காம போன களவாணி பயலே, ஊருல இருந்தவனுங்கட்ட ஆட்டையபோட்ட திருடனு உன்ன நெனச்சா நீ சரியான ரத்தவெறி புடிச்ச கிறுக்கனா இருந்திருப்ப போல’ என முணுமுணுத்து வைத்தான்.
அதற்கு முன்னர் அந்த மேப்பில் குறிப்பிட்டிருந்த இடத்தை சித்து தேட, “சித்து என்ன தேடறீங்க” அருகிலிருந்த வீரா கேட்டாள்.
அந்த மேப்பிலிருந்த ஒரு படத்தை காட்டி “இந்த சிம்பல் இங்க எங்க இருக்குன்னு பாருடி” என தானும் அந்த சிம்லை தேடி சென்றான் சித்து.
இருவரும் சில நிமிடங்கள் தேடியப்பின், அது அந்த குகையின் ஒரு சுவற்றின் மூலையில் அந்த சிம்பல் இருப்பதை கண்டுப்பிடித்தனர். அதை கண்டுபிடித்த சித்து அந்த மேப்பில் போட்டிருந்தபடி தன்னுடைய கையை கிழித்து, அதில் வழிந்த ரத்தத்துடன் சேர்த்து தன் கையை அந்த சிம்பலில் வைத்து அழுத்தினான்.
அவன் அழுத்த அழுத்த அந்த கல் சுவற்றின் உள்ளே செல்ல, குகையின் ஒரு பக்க சுவரு தானாக திறந்ததை அங்கிருந்த அனைவருக்கும் ஆவென பார்த்து வைத்தனர்.
திறந்த கதவிற்குள் எல்லோரும் எட்டிப்பார்க்க, அந்த கதவின் உள்ளே நீளமாக ஒரு பாதை சென்றது. அந்த பாதையை மேப்புடன் ஒப்பிட்டு பார்த்த சித்து,
“வீணாப்போனவன் அவன் ரத்த வாரிசுதான் பொதையல எடுக்கமுடியும்னு டுவிஸ்ட் வச்சான்ல, அதுக்கு அப்புறம் எதுக்கு இன்னும் இவ்ளோ படம் வரைஞ்சு வச்சிருக்கான். சரியான கிறுக்கனா இருப்பான் போல, இப்ப இதுக்கு உள்ள போனாதான் அந்த புதையல எடுக்கமுடியும் போலையே”
சித்து சலித்துக் கொண்ட நேரம் “அப்ப அந்த பொதையலு இங்க இல்லையா” என்று கேட்டு கண்ணாத்தா அங்கிருந்த அனைவருக்கும் பெரிய ஷாக்காக கொடுத்து வைத்தது.
-ரகசியம் தொடரும்