சித்தார்த் தன்னுடைய ஒருபுறம் வீரா, மறுபுறம் கதிர் என இருவரையும் அணைவாய், அதேநேரம் திடமாய் பிடித்திருந்தான். அவனுடைய செய்கையே சொல்லாமல் சொன்னது, அவர்களை எந்தவித ஆபத்து வந்தாலும் என்னைதான்டியே வரவேண்டுமென.
அதுவும் அந்த பாட்டி பேய் வீராவின் ரத்தத்தை கேட்டதில், விட்டால் கேப்டன் ஸ்டைலில் ஓங்கி அடிச்சிடுவேன்டா என்பதை போன்ற ஒரு போசில் நின்றிருந்தான் சித்து. இதுக்கு மேல இங்க இருந்தா உசுருக்கு உத்திரவாதம் இல்லையென பயந்து போன சித்து எதை பத்தியும் கவலைப்படாமல் வெளியே செல்ல பார்த்தான்.
“ஏப்பா சித்தார்த்தா, நீ இப்ப வெளிய போகனும்னா தாராளமா போயிக்க. ஆனா இத்தோட இந்தா இருக்கானே உன்ற அப்பன் அவன அடியோட மறந்திரு. ஏன்னா நீ இந்த இடத்தை விட்டு ஒரு அடி வெளியே எடுத்து வச்சாலும், உன்ற அப்பன் ஜென்மத்துக்கு இந்த கொகைய விட்டு வெளிய வரமுடியாதபடி செஞ்சூட்டுருவேன்”
அரவிந்தை காட்டி பேய் புதுவித மிரட்டல்விட, சித்தார்த்துக்கு தூக்கிவாறி போட்டது. என்னதான் வெளியே எலியும் பூனையுமாய் அடித்துக் கொண்டாலும், தந்தைமீது மகனுக்கு கொஞ்சம் என்ன நிறையவே பாசம் உண்டே. அந்த பாசத்தில் மகன் சற்று தயங்கி நிற்க
“சித்து என்னை நெனச்சு தயங்காதடா, நான் வாழ்ந்து முடிச்ச கட்ட. நமக்கு வீராவும் கதிரும் ரொம்ப முக்கியம். அவங்கல மொதல்ல இங்கருந்து பாதுகாப்பா வெளிய கூட்டிட்டு போயிடுடா”
அரவிந்து வீரா கதிரை சேஃபாக்க முகத்தில் நவரசத்தை சொட்ட விட்டு சித்துவை பார்க்க, பாவம் அவரின் வாய்ஸ் கொஞ்சமும் வெளியே வரவேயில்லை. அந்த கண்ணாத்தா பேய்தான் அரவிந்தின் வாயை அடைத்து வைத்துவிட்டதே. அதை மறந்துபோய் ஆக்சன் காட்டிக் கொண்டு அமர்ந்திருந்தார் அரவிந்த்.
“என்ன சித்தார்த்தா ரொம்ப யோசிக்கிற. என் பேச்ச மீறி அவங்கல கூட்டிட்டு போய், காலத்துக்கு உன்ற அப்பனோட ஆத்மாவ சாந்தி அடையவிடாம பண்ணப்போறியா. இந்த உலகத்துல மிகப்பெரிய பாவம் என்ன தெரியுமா, ஒரு ஆன்மா செத்ததுக்கு அப்புறம் சாந்தி அடைய முடியாம இருக்கிறதுதான். அந்த பாவத்தை உன்ற அப்பனுக்கே செய்யப்போறியா சித்தார்த்தா”
அப்பாவிப் போல் பேய் சித்தார்த்திடம் கேட்டு அவனுடைய சரியான வீக்னசில் அடிக்க, அப்பவும் அசரவில்லை சித்தார்த். எதாவது செய்து முதலில் வீரா கதிர் இருவரையும் வெளியேற்றவே நினக்க, ஆனால் நம் வீராவோ அவனின் எண்ணத்திற்கு முற்றும் மாறாக ஒன்றை செய்ய முடிவெடுத்தாள்.
“இங்க பாருங்க பாட்டி என் அங்கிளை அப்படி எதுவும் பண்ணிடாதீங்க. நீங்க என்ன சொன்னாலும் நான் செய்றேன். ஆனா நான் அப்படி செய்ய நான் சொல்றதை நீங்க கேக்கனும். மொதல்ல நீங்க என் அங்கிளை அந்த கட்டுல இருந்து வெளிய வர வைக்கனும். அப்படி நீங்க செஞ்சா மட்டும்தான் நான் நீங்க கேட்டா மாதிரி என்னோட ரத்தத்தை தருவேன்”
அரவிந்தை பேய் ரிலீஸ் செய்தால் எப்படியும் எல்லாரையும் அவர் எஸ்கேப் செய்து விடுவார் என நம்பி வீரா அந்த பாட்டி பேயிடம் ஒருவித டீலை போட்டாள். பாவம் இவ்வளவு நேரம் அந்த பேயிடம் மாட்டி இருந்ததும் அதே அரவிந்துதான் என்பதை மறந்துவிட்டாள் போலும். வீராவின் இந்த ஐடியாவை பற்றியா பாட்டி பேய் அறியாது.
எனவே அவளுடைய போக்கிற்கே போவது போல் போய் தன் காரியத்தை நடத்திக் கொள்ள முடிவெடுத்தது. அதன்படி சிறிதுநேரம் எதையோ தீவிரமாக யோசிப்பதைப்போல் சீனை போட்டு, அரவிந்தை ரிலீஸ் செய்தது. ஆனால் அந்த பேய் உள்குத்து எதுவும் இல்லாமல் எப்படி உடனே ரிலீஸ் செய்ய ஒத்துக் கொண்டதென யாரும் யோசிக்கவில்லை.
“அ.. ஆ… அம்மாடி என் பேச்சு திரும்ப வந்திருச்சு. அப்பாடா இப்பதான் என் உயிரே வந்த மாதிரி இருக்கு”
பெரிதாய் சந்தோசமடைந்த அரவிந்த் ‘என் வீராம்மான்னா வீராம்மாதான். இந்த மூளைக்கு எங்கையோ இருக்க வேண்டிய பொண்ணு இங்க வந்து மாட்டிக்கிச்சு’ என வீராவுக்காக வருத்தப்பட்டபடி அந்த கோலத்தை தான்ட வர, ம்ஹூம் முடியவில்லை. அந்த கோலத்தில்தான் மனிதர் இன்னும் அடைபட்டு கிடந்தார். ஒரு எட்டுக்கூட வெளியே காலை எடுத்து வைக்க முடியாது அரவிந்த் நிற்க, அதை பார்த்து பொங்கிவிட்டாள் வீரா.
“என்ன பாட்டி என் அங்கிளை வெளிய விடுறேன்னு சொன்னீங்க. ஆனா அவர் வாய மட்டும் ரிலீஸ் பண்ணி விட்ருக்கீங்க. ஏன் இப்படி பண்றீங்க, என் அங்கிளை பர்ஸ்ட் வெளிய விடுங்க”
வீராவை பார்த்து ஒரு மார்கமாய் சிரித்த பாட்டிபேய் “என்ன வீரா பாப்பா, உன் மாமன வெளிய விட்டா அப்படியே ஓடிபோயிடலாம்னு தானே இப்புடியெல்லாம் என்ட்ட பேசுன. இதுகூடவா எனக்கு தெரியாது. நான் முன்ன சொன்னதுதான் இப்பவும், நீ என்னை இந்த பொம்மைக்குள்ள இருந்து வெளியே எடுத்து விடு நான் உன் மாமன வெளிய விடுறேன்” என அக்மார்க் வில்ல சிரிப்பு சிரித்து பேசி வைத்தது.
இதில் ஹைலைட் என்னவென்றால் அவளை சுற்றி இருந்தவர்கள் என்ன செய்து தப்பிப்பது என தெரியாது முழித்து வைக்க, நம் டூ இடியட்ஸான மாதவனும் சங்கரும் எதோ டூர் வந்தவர்களை போல் வேடிக்கை பார்த்தபடி அமர்ந்து இருந்ததுதான்.
எப்படியும் அந்த பேய் தான் நினைத்ததை செய்து முடிக்கும் என இருவருக்கும் நன்றாக தெரியுமே. இருந்தும் எல்லாம் பேசி முடித்த பின் எதாவது ஒரு முடிவு வரட்டும் என பார்த்துக் கொண்டிருந்தனர்.
‘இந்த பாட்டி பேய் கிட்ட நம்ம திட்டம் எதுவும் வேலைக்காக மாட்டேங்குதே. இப்ப எப்புடி தப்பிக்கிறது?’
வாயை கொடுத்து மாட்டி, இப்போது நொந்துபோய் நின்ற வீராவின் மைண்ட் வாய்ஸ் இது. சிலபல நேரம் யோசித்த வீராவுக்கு இப்போது அந்த பேய் சொன்னதை செய்வதை தவிர வேற நல்ல வழி தெரியவில்லை. அதேசமயம் அந்த பேய் சொன்னதை செய்யவும் சற்று பயமாகவே இருந்தது. இருந்தும் தப்பிக்க வேறு எதாவது செய்யலாமா என புதிதாய் வீரா யோசிக்க துவங்க
“இங்க பாரு என் செல்லாக்குட்டி! நீ எவ்ளோ நேரம் யோசிச்சாலும் உன்னால உன் மாமன என் உதவி இல்லாம வெளிய எடுக்கமுடியாது. பேசாம நான் சொல்றதை செஞ்சூட்ரு. நாம எல்லாரும் சேந்தே வெளிய போயிடுவோம். என்ன நான் சொல்றது!”
எல்லாரும் சேந்தே போலாம் என பேய் வீராவை பேசி பேசியே கண்வின்ஸ் செய்ய வீரா ‘சரி செஞ்சூடுவோம் எபப்டியோ எல்லாரும் பத்திரமா வெளியப்போனா போதும்’ என மனதுக்குள் கடைசியாக ஒரு முடிவிற்கு வர இரண்டு பக்கத்திலிருந்து இருவேறு குரல்கள் கேட்டது.
“வீராம்மா அந்த கெழவி சொல்லுறத எதையும் கேக்காதமா”
“வீரா நான் சொல்றதை கேளு. என் நைனா எங்கேடோ கெட்டு ஒழியட்டும். நீ எனக்கு ரொம்ப முக்கியம்டி. வா நாம இப்படியே ஓடிரலாம்”
அரவிந்த் மற்றும் சித்துவின் குரல் ஒன்றன்பின் ஒன்றாக கேட்க, சித்து சொன்னதை கேட்டு அரவிந்துக்கு தூக்கி வாரி போட்டது. என்னதான் தன் பிள்ளை மற்றவர்களை அங்கிருந்து நல்லபடியாக கிளப்ப வேண்டும் என அரவிந்த் நினைத்தாலும், அதை செயல்படுத்துவது அவராகத்தானே இருக்க வேண்டும். இல்லையென்றால் அரவிந்தின் ஹீரோ ஹிஸ்டரி என்னாவது.
அப்படியிருக்கும்போது அவர் மகன் சித்து குறுக்கே வார்த்தையை விட்டதில் எங்கே தன்னை அம்போவென விட்டு கிளம்பிடுவானோ என பயந்து விட்டார் மனிதர்.
அதுமட்டும் இல்லாமல் அவரது மண்டையில் டெய்ங்கென கோலிகுண்டால் குறிவைத்து அடித்து, அவரின் ஒன்றுக்கும் உதவாத அந்த ஈகோவை வேறு இப்படி பேசி அவர் மகன் தூண்டிவிட்டிருக்க புசுபுசுவென மூச்சு விட்டுக்கொண்டு தன் மகனிடம் மள்ளுக்கு நின்றார் மனிதர்.
அவர் வம்பிழுத்தால் அப்படியே விட்டு செல்லும் ரகமா அவர் மகன். அவனும் தந்தைக்கு போட்டியாக வாயை விட ஆரம்பித்தான்.
நேரம் காலம் இல்லாது இப்படி தந்தை மகன் இரண்டு பேரும் இப்படி மள்ளுக்கு நிற்பதை பார்த்து கடுப்பில் பல்லை கடித்த வீரா,
‘ச்சே இனிமே இவங்கல நம்புனா வேலைக்கு ஆவாது. நாமதான் களத்துல இறங்கி இங்கயிருந்து போக எதாவது செஞ்சாகனும்’ என எப்போதும்போல் ஒரு முடிவுக்கு வந்தாள். இவர்கள் இருவரும் சண்டை போட்ட, அந்த கேப்பை பயன்படுத்திய வீரா பேய் சொன்னதை செய்ய முடிவெடுத்தாள்.
தங்கள் சண்டையிலிருந்து சற்று கேப் விட்ட தந்தை மகன் இருவரும் கண்டது, அந்த பொம்மையை நோக்கி முன்னேறி சென்றுவிட்ட வீராவைதான்.
“வீரா நோ…”
வீராவை தடுக்க அலறியபடி ஸ்லோ மோஷனில் கை நீட்டியபடி நம் நாயகன் ஓட, அவன் வருவதற்குள் கீழே கிடந்த கூர்மையான ஒரு கல்லை எடுத்து தன் விரல் நுனியில் ஒரு கீறு கீறி சொட் சொட்டென மூன்று துளி இரத்தத்தை அந்த பொம்மையின் மண்டையில் விட்டு முடித்தாள் வீரா.
வேகமாக ஓடியிருந்தாலே வீராவை நம் சித்துவால் தடுத்திருக்க முடியாது. இதில் ஐயா நிறைய சினிமாக்களை பார்த்த இபெக்ட்டில் ஸ்லோ மோஷனில் ஓடி ஒரு சீனை கிராயேட் பண்ண நினைத்திருக்க, எல்லாம் புஸ்சென்று போனது. அவள் இரத்தத்தை விட்ட பின்னர் சாவுகாசமாய் சித்து அவளை நெருங்கினான்.
“வீரா! ஏன் வீரா ஏன்… என்மேல உனக்கு நம்பிக்கை இல்லையா ஹான்? நான் எதாவது செஞ்சு உங்களை எல்லாம் காப்பத்திருக்க மாட்டனா. எதுக்கு உன் கையை கட் பண்ணி பிளட்ட எல்லாம் விட்ட. ஐயோ செல்லம் என்னடா இவ்ளோ பெருசா கட் பண்ணி வச்சிருக்க”
சித்து வீராவை பேசவே விடாது ஓவாராக ஒரு பெர்மான்சை போட்டு, தன் கண் முன்னால் வெள்ளை புகையொன்று புசுபுசுவென அந்த பொம்மையிலிருந்த வந்ததைக்கூட கவனிக்காது நவரசத்தையும் முகத்தில் சொட்ட விட்டு நின்றான். இவனுடைய லோட் குவாலிட்டி ஆக்டிங்கை பார்த்து தன் தலையிலேயே அடித்து கொண்டார் அவனை பெற்ற அந்த அருமை மகான் அரவிந்த்.
“அடச்சை நிறுத்துடா. ஏய் இவன் வாய மூட எதாவது கோந்து இருந்தா கொண்டாங்கடா”
‘எல்லாம் ஓரளவுக்கு தான் வ்ரோ’ இதுவரை இவன் நாடகத்தை பார்த்து பொறுத்தது போதும் பொங்கி எழு என நினைத்தைப்போல் ஒரு குரல் தன் மனக்குமுறலை வெளியேற்ற, தங்கள் சைடிலிருந்த கேட்ட குரலில் தலையை மட்டும் மெல்ல திருப்பி பார்த்தார்கள் சித்துவும் வீராவும்.
அங்கே பொம்மை இருந்த இடத்தில் ஒரு கிழவி நின்று சாரி பறந்துக் கொண்டிருக்க, பார்த்தாலே தெரிந்தது அந்த கிழவி ஒரு ஆன்மா என்பது. தோற்றத்தை வைத்து பார்த்தால் தோராயமாக ஒரு எழுபது வயது இருக்கும் என சொல்லிவிடலாம்.
அந்த கிழவியின் உருவத்தை பார்த்தவுடன் ‘இந்த மூஞ்ச எங்கையோ பார்த்தா மாரியே இருக்கு. எங்க பாத்தோம்’ என யோசனை மோடுக்கு போய்விட்டான் சித்து.
இங்கோ அரை அடி உயரத்திற்கு மேலே காற்றில் மிதந்திருந்த அந்த உருவத்தை பார்த்து அதிர்ந்து போயினர் அரவிந்தும் அவர் ஆருயிர் தங்கை அலமேலுவும். அந்த உருவத்தின் நினைவுகள் பிட்டு பிட்டாக இருவர் நினைவிலும் உலா வர
“ஏய் கெழவி நீயா!” என இருவரின் கேரசான குரலும் கேட்க, மற்றவர்கள் இவர்கள் முகத்தை பார்த்து ஒன்றும் புரியாமல் முழித்து வைத்தனர். ஆனால் இருவரின் குரலிலும் இருந்த எதோ ஒன்று மற்றவர்களுக்கு ஒரு பீதியை உண்டு பண்ணியது.
அப்படி இந்த சோ கால்ட் கெழவி யார், இன்னும் என்னென்ன கூத்தை எல்லாம் பண்ண காத்திருக்கோ. பொருத்திருந்து பார்ப்போம் மக்களே!
-ரகசியம் தொடரும்