“ம்ப்ச்.. உங்க பிஸ்னஸ்ல இன்வெஸ்ட் பண்ணனும் தோணுச்சு, இன்வெஸ்ட் பண்றேன், என்ன தப்பு..?” உதய் அவளை பார்த்து சொன்னான்.
“இது காரணம் இல்லன்னு எனக்கு நல்லா தெரியும்..”
“என்னப்பா வேணும் உனக்கு இப்போ..?”
“எனக்கு ஒன்னும் வேண்டாம்.. அதை தான் நான் உங்ககிட்ட சொல்றேன்..” நிறுத்தி நிதானமாக சொன்னவளை உதய் தீர்க்கமாக பார்த்தான். அவளும் அவனின் பார்வையை நேராக எதிர்கொண்டாள்.