யுகம் சுகம் தானே 5

“இப்போது பேசித்தான் பாரேன்..” என்ற ஷாவின் மிதப்பான பார்வை பிரசாத் முகத்தில் வெஞ்சினமான  சிரிப்பை கொடுத்தது.  நேற்று  உதய் தன்னை அடித்த அடி தான் ஷா வின் மிதப்புக்கு காரணம் என்று புரிந்த பிரசாத், நிதானமாக உதய்யை பார்த்தான். உதய்யோ அவனின் பார்வையை எப்போதும் போல அலட்சியத்துடன் தான் எதிர்கொண்டான்

இதற்கு முன் இருவரும் பல முறை தொழில் சம்மந்தப்பட்ட மீட்டிங்கில், வெளியிடங்களில் பார்த்திருந்தாலும் பேசி கொண்டதில்லை. உதய் எப்போதும் போல அவனின் வேலையை பார்த்து கொண்டிருப்பவன் என்றால் பிரசாத் எப்போதும் போல மற்றவர் என்ன செய்கிறார்கள் என்று பார்த்து கொண்டிருப்பவன்

அதிலும் முக்கியமாக உதய் என்ன செய்து கொண்டிருக்கிறான் என்று பார்ப்பது தான் அவனின் முதல் முக்கிய வேலை. அதையும் மிக சாமர்த்தியமாக தான் செய்வான். தன்னை இப்படி ஒருவன் தொடர்கிறான் என்பதே உதய்க்கு தெரிய வராத அளவு அவனின் குள்ளநரி தனம் இருக்கும்

அவன் என்னென்ன செய்கிறான்எப்படி செய்கிறான்,  என்ன செய்ய போகிறான்..? இப்படி   உதய் எனும் மனிதனை முழுதும் தெரிந்து வைத்திருப்பவன் பிரசாத்

அதற்கு காரணம் ஷா. உதய் என்பவன் மேல் அவள் கொண்டுள்ள காதல். அந்த காதல் தான் பிரசாத்துடனான திருமணத்தை  மறுக்க காரணமாகி போனது. அதை அவனால் தாங்க முடியவில்லை.  

ஆப்ட்ரால் அவனுக்காக என்னை வேண்டாம் சொல்றாளா..? என் பக்கத்துல நிக்க கூட தகுதி  இல்லாத ஒருத்தனுக்காகவா..? SR  குரூப்ஸ் வருங்கால சேர்மேன் நான்என்னோட உயரம் என்ன..? என் பிஸ்னஸ் கவுண்ட் என்ன..? என்னை போய் அவனுக்காக.. ஓஹ் காட்..”

ரெண்டே ரெண்டு பிஸ்னஸ் வச்சிருக்கிற அவன் என்னை தோற்கடிக்கிறதா..? விட மாட்டேன்.. இவளையும் விட மாட்டேன்.. அவனையும் விட மாட்டேன்.. முதல்ல உதய்யை அடிக்கிறேன், எந்திருக்கவே முடியாத அளவு அடிக்கிறேன்.. அப்பறம் இருக்கு இவளுக்கு..”  மனதில் வன்மத்துடன், வஞ்சத்துடன் வருடங்களாக காத்திருந்தான்  பிரசாத்

அவன் எதிர்ப்பார்த்து காத்திருந்தது போல உதய்யும் அந்த வெளிநாட்டு ப்ராஜெக்ட் எடுக்க முயல்கிறான் என்று தெரிய, அது அவனுக்கு கிடைக்க கூடாது என்று பல வேலைகளை பார்த்தான். ஆனால் வெளி நாட்டு ஆட்களிடம் அவனின் பணம் என்று மந்திரம் வேலை செய்யவில்லை. உதய் அவனின் திறமையால், உழைப்பால் மொத்த பேரையும் அடித்து அந்த ப்ராஜெக்ட்டை தட்டி சென்று விட்டான்

விட கூடாது..” என்று தொடர்ந்து கண்காணித்தவன், அவனை முழுதும் ஏறவிட்டு கடைசியில் அடிக்க வேண்டும் என்று முடிவு செய்து கொண்டான். அதன்படி கிஷோர் வைத்து காய்களையும் நகர்த்தினான். ஆனால் உதய் சாமர்த்தியமாக கலாதரனை வரவைத்து, அவர்களின் பிஸினஸிலே கை வைத்து விட்டான்

அவன் அடித்த அடி கண்டிப்பாக பெரிய அடி தான். ஆனால் பிரசாத்திற்கு அது ஒன்றும் இல்லை எனும் நிலை தான். பணம், படைபலம் கொட்டி கிடக்க, ஒரு வாரத்துல எல்லாவற்றையும் மீட்டு விடுவான். ஆனால் உதய் அவன் மேல் கை வைத்தது, அதை அவனால ஏற்று கொள்ள முடியாது, அவனின் தான் எனும் அகங்காரம் வீறு கொண்டு நின்றது

உதய்யின் செயலால் அவனின் கர்வம், அகந்தை எல்லாம் சீண்டிவிட பட்டது போலானது. உதய் கிருஷ்ணாவை அடிக்க பிரசாத் வருடங்கள் வேலை பார்க்க, உதய்யோ சில மணி நேரங்களிலே அவனை மிகவும் ஈசியாக  அடித்து விட்டான்

எதிர்பாராததை எதிர்பாருங்கள்.. கேள்விப்பட்டிருக்கேன், நேத்து பார்த்துட்டேன்..”   பிரசாத் நேரடியாகவே உதய்யிடம்  சொல்ல, ஷா திரும்பி உதய்யை பார்த்தாள்

உதய்யோ மிகவும் சாதாரணமாக, “முதல்ல இன்ட்ரோ கொடுத்துக்கலாம் ப்ரோ, நாம  இதுவரைக்கும் பேசினது இல்லையில்லை..  நான் உதய்.. உதய் கிருஷ்ணா..”  கை நீட்டினான்

பிரசாத்.. பிரசாத்கண்ணா..”  அவனும் கை நீட்டினான். இருவரின் கைகளும் மிகவும் வலிமையாக, உறுதியாக மற்றவரின் கை பற்றி குலுக்கி, பிரிந்தது

ம்ம்.. இப்போ சொல்லுங்க, முன்ன என்னமோ சொன்னீங்க இல்லை..  ஏதோ  எதிர்பாராததை எதிர்பாருங்கள்ன்னு.. உண்மை தான் ப்ரோ. எல்லா நேரமும் ஒரே  மாதிரி இருக்காதே, அண்ட் நாம செய்றது மத்தவங்களுக்கு தெரியாதுன்னும்  நினைச்சு அசால்டா இருந்துட கூடாது, அப்பறம் விளைவுகள்..”  தோளை குலுக்க

சரி தான் உதய்.. எல்லா நேரமும் ஒரே மாதிரி இருக்காது..” சொன்ன பிரசாத்தின் உதட்டோர வெஞ்சின வளைவு. மறைமுக எச்சரிக்கை. புரிந்து கொண்ட உதய் அவனை சாதாரணமாக தான் பார்த்து வைத்தான்.

ஆமா உதய் இப்போ தான் உங்களை உங்க  அம்மாவோட பார்க்கிங்ல பார்த்தேன்..” பிரசாத் கேட்க

ஆமா பிரசாத், ஷாவை பார்க்க வந்திருந்தாங்க..”  அவனும் பேர் சொல்லியே பேச செய்தான்

ஓஹ்..”  பிரசாத் திரும்பி ஷாவிடம்,  “அப்பறம் ஷா இந்த வருஷத்தோட இயர்லி  போர்ட் மீட்டிங்குக்கு எல்லாம் ரெடியா..?” கேட்டான்

ஷா திரும்பி ஜின்னாவை பார்க்க, “ஜித்தன் தான் பார்த்துகிறான் சார்..”  என்றான் ஜின்னா அவனிடம்

என்ன ஷா நீ..? போர்ட் மீட்டிங் அரேஞ்மென்ட்ஸ் உன் கண்ட்ரோல்ல இருக்க வேண்டாமா..? இப்படி இருக்க..?”

நீங்களே  சொல்லுங்க உதய்.. எதோ எங்க அளவுக்கு இல்லைனாலும் உங்களுக்கும் கொஞ்சமாவது பிஸ்னஸ் பத்தி தெரியும், எங்களை மாதிரி குரூப்ஸ் ஆப் கம்பெனிஸ் இல்லைன்னாலும் ரெண்டு குட்டி கம்பெனி வச்சிருக்கீங்க..”

கிட்டத்தட்ட லக்ஸ் குரோர் டர்ன் ஓவர் இருக்கிற RK குரூப்ஸ் போர்ட் மீட்டிங்ன்னா சும்மாவா..? அதோட வைஸ் சேர்மேன் ஷாரா மேடம் இந்த மீட்டிங்குக்கு தீயாய் இறங்கி வேலை செய்யாம ஒரு எம்பிளாயி கிட்ட போய் கொடுத்திருக்காங்க பாருங்க..”  நக்கல் சிரிப்புடன் உதய்யிடமே கேட்க, ஷா ஏதோ பேச வந்தாள்

உதய் திரும்பி அவளை ஒரு பார்வை பார்க்க, அவள் முறைப்புடன் முகம் திருப்பி கொண்டாள்

உண்மை தான் பிரசாத், ஷா இன்னும் கூட தீயாய் வேலை செய்யலாம் தான்..”  உதய் அழுத்தமாக சொன்னான்

கரெக்ட் உதய்.. நீங்க நான் சொல்றதை சரியா புரிஞ்சுக்கிட்டீங்க, உங்களுக்கு தெரியும் இல்லை RK குரூப்ஸ்ல எங்க SR குரூப்ஸ் ஷேர் பத்து  பர்சன்ட் இருக்கு, அது போக எங்க பிஸ்னஸ் கான்டெக்ட்ல இருக்கிறவங்க ஒரு பத்து பர்சன்ட் ஷேர் இருக்கு, ஒரு குரூப் ஆப் கம்பெனிஸ்ல இந்த ஷேர் வேல்வியூ ரொம்ப அதிகம்..”

இன்னும் சொல்ல போனால் RK அங்கிள், ஷாக்கு அப்பறம் மேஜர் ஷேர் ஹோல்டர் நாங்க தான், என்னதான்  RK, ஷா சேர்மேனா இருந்தாலும் எங்க பர்மிஷன் இல்லாம அவங்களால எதுவும் செய்ய முடியாது, எங்களோட சைன் ரொம்ப முக்கியம்..” 

“அவங்களோட மோஸ்ட் ஆப் தி பிஸ்னஸ்ல எங்க ஷேர் இருக்கு, ஏன் இப்போ நீங்க நிக்கிறீங்களே இந்த மால்ல கூட என் ஷேர் இருக்கு, நானும் இதுக்கு ஒன் ஆப் தி பார்ட்னர் தான்..”  கையை வீசி அதிகாரத்துடன் சொல்ல, உதய் கைகளை கட்டி கால்களை விலக்கி நின்றான்

இவ்வளவு பெரிய RK சாம்ராஜ்யத்தின் போர்ட் மீட்டிங்கை ஒரு எம்பிளாயி பார்க்கிறதா..?   மீட்டிங்ல எதுனா பிரச்சனைன்னா அந்த எம்பிளாயி கிட்டவா கேட்க முடியும்..?  இல்லை போர்ட் மெம்பர்ஸ் ஏதாவது இஷியூ கிரியேட் பண்ணா அந்த எம்பிளாயாய தீர்த்து வைப்பான்..?”

வைஸ் சேர்மேன் பவ்யஷாரா மேடம் தானே பார்க்கணும், போர்ட் மெம்பர்ஸ் கேட்கிற கேள்விக்கு எல்லாம் பதில் சொல்ற பொறுப்பு வைஸ் சேர்மேனுக்கு தானே..”

அதுவும் RK அங்கிளுக்கு உடம்பு முடியலங்கிற விஷயம் எல்லோருக்கும் தெரிஞ்சு,  அதை வச்சு வேற  எவ்வளவு பிரச்சனைகள் வர போகுதோ..?”   மிகவும் வஞ்சத்துடன் சொல்ல,  ஷா முகத்தில் அடக்கப்பட்ட கோவம்

ஜின்னா கைகளில் போன். அதுவும் ஆன்னில் இருந்தது. RK சாராக இருக்கலாம்உதய் கண்களும், காதுகளும், அவனின் உணர்ச்சிகளும் எப்போதும் போல கூர்மையாக எல்லாவற்றையும் ஆராய்ந்து மனதில் பதிய வைத்து கொண்டிருந்தது

“வெளியாள் உங்களுக்கே தெரியும் இல்லை உதய்.. இந்த எம்பையரை பில்ட் பண்ண RK சார் எவ்வளவு கஷ்டப்பட்டார்ன்னுஅவரோட உழைப்பு, திறமையால தான் இன்னிக்கு RK குரூப் இவ்வளவு பெருசா வளர்ந்து நிக்குது, அவரோட உயிரே இது தான். அவரோட மொத்த வாழ்க்கையும் RK குரூப்க்காகன்னே வாழ்ந்தவர்..”

இப்போ அதோட வளர்ச்சியும், வீழ்ச்சியும் ஷா கிட்ட தான் இருக்கு, ஆனா பாருங்க உதய் அவளுக்கு இதோட மதிப்பு இன்னும் தெரியல. RK குரூப்ஸ்ங்கிறது எல்லோரையும் சேர்த்து தான், நாங்க எல்லாம் எடுக்கிற முடிவு RK குரூப்ஸ்ல எந்தளவு மாற்றத்தை கொண்டு வரும்ன்னு அவளுக்கு இன்னும் தெரியல..”

என்ன செய்ய சொல்லி கொடுக்க RK அங்கிளும் நல்லா இல்லையே, அவருக்கு ஆல்ரெடி செகண்ட் அட்டேக், இப்போ கம்பெனில ஏதாவதுன்னா..”  பேசி கொண்டே போக, ஷா அவ்வளவு தான் வெடித்து விடும் நிலையில் இருந்தவள்

பிரசாத்..” என்று  சீறி கொண்டு  வரஉதய் அவளின் கையை பிடித்தான்

ஜின்னாவும், “மேடம்.. உங்களை RK சார் உடனே கூப்பிட சொன்னார்..”  என்று வேகமாக போனுடன் வந்தான்.  

ஷா திரும்பி இருவரையும் அளவில்லா கோவத்தில் பார்த்தவள், அந்த போனை வாங்கி பிரசாத் முகத்துக்கு நேரே வீசி எறிந்தாள்அவன் முகத்துக்கும், போனுக்கும்  ஒரு இன்ச் இடைவெளியில் போன் கீழே விழுந்து சில்லு சில்லானாது. பிரசாத் இதை எதிர்பார்க்காமல் அதிர்ந்து ஒரு அடி பின்னால் போனான்.

“என்ன செய்ற ஷா..”  உதய் அவளை கட்டுப்படுத்தி பிடித்து வைத்தான். 

“ஷா என்ன இது..? உன்கிட்ட இருந்து இதை நான் எதிர்பார்க்கல.. உன் நல்லதுக்கு தானே நான் பேசினேன்..”  பிரசாத் அப்போதும் மிகவும் வருத்தம் கொள்வது போல பேச, உதய்க்கு உண்மைக்குமே ஆச்சரியம். இப்படியும் மனிதர்கள் இருக்கிறார்களே என்று. 

“மேடம்.. நாம கிளம்பலாம்..” ஜின்னா அவளை அங்கிருந்து கிளப்ப பார்த்தான். 

“வெய்ட்  ஜின்னா சார்.. எனக்கு ஷாகிட்ட மீட்டிங்க பத்தி டிஸ்கஸ் பண்ண இன்னும் நிறைய இருக்கு..”   என்றான் பிரசாத். 

“இல்லை சார்..” ஜின்னா பேச வர

என்கிட்ட நீங்க டிஸ்கஸ் பண்ண  என்ன இருக்கு..? மீட்டிங்  சீக்கிரமே வச்சே ஆகணும்ன்னு அரேஞ் பண்ணது நீங்க, உங்களுக்கு அங்க என்ன பேசணுமோ அதை அங்கேயே பேசுங்க.. என்கிட்ட தனியா டிஸ்கஸ் பண்ண எந்த அவசியமும் இல்லை..” ஷா கடினமாக சொன்னாள்

ஏன் இவ்வளவு கோவம் ஷா, ரிலாக்ஸ், நான் உன்கிட்ட பேசணும்ன்னு தான் இருக்கிற வேலை எல்லாம் விட்டு வந்தேன்..” பிரசாத் நல்லவனாக சொல்ல, உதய்யால் பொறுக்க முடியவில்லை.

ஆமா ஷா.. மலைல இருக்கிற காரை எல்லாம் பொக்லைன் வச்சு வாரிட்டு இருந்தவர் உனக்காக தான் அதை நிறுத்திட்டு வந்திருக்கார்..” உதய் சீரியசாக சொல்வது போல  நொடியில் பிரசாத்தை அடித்துவிட, இதை எதிர்பார்க்காமல் பிரசாத் அவனை உறுத்து விழித்தான்

ஆமா பிரசாத் கேட்கணும் நினைச்சேன்.. எப்படி அந்த ரோட்ல  எல்லாம் பொக்லைன் வண்டி ஏறுச்சு, பாவம் ரொம்ப கஷ்ட பட்டிருப்பாங்க இல்லை, கேள்விப்பட்டேன் ஒரு நாள் முழுசும் ஏறினாங்களாமே..”  

“உதய் பணம், பவர் இருக்கிற இருக்கிற இடத்துல எதுவுமே கஷ்டம் இல்லை.. உங்களுக்கு அது தெரியாது..” பிரசாத் கேலியாக சொல்ல, உதய்யிடம் அப்போதும் நிதானம்

ஒரேடியா அப்படி சொல்லிட முடியாதே பிரசாத்.. பணம், பவர் இருக்கிற இடத்துல கொஞ்சம்  மூளையும்  இருக்கணும்..”  என்றுவிட்டான்

அப்போ எனக்கு மூளை இல்லன்னு சொல்றானா..?” நேரடியாக கேட்க தன்மானம் இடம் கொடுக்காமல், பொதுவாக முறைத்து பார்த்தவன், “நான் கிளம்புறேன், மீட்டிங்ல பார்க்கலாம் ஷா..”  அவளிடம் சொன்னவன்

அப்பறம் உதய் சீக்கிரமே மீட் பண்ணலாம்..” என்று அவனிடமும் விடைபெற்றான்