“ஹாஹா.. என் பவிகுட்டியை அப்படியெல்லாம் விட்டிருக்க மாட்டேன்..” கழுத்தில்முத்தம்வைத்தான்கணவன்.
“அதென்னபுதுசாபவிகுட்டி..”
“ ஏன்பிடிக்கலையா..?”
“ அம்மாஅப்படிதான்கூப்பிடுவாங்க..”
“அவங்களுக்குஎன்பவிகுட்டியைஎப்படிகொஞ்சணும்ன்னுதெரிஞ்சிருக்கு..” அவளின்மூக்கைஉரசியவன், புது பால் எடுத்து குடிக்க கொடுத்தான். ஷாவும் மறுக்காமல் குடித்து வைக்க, அவளின் உதட்டோர பால் துளிகள் உதய் உதட்டுக்கு இடம் பெயர்ந்தது.
“உங்களை..” ஷா அவனை தள்ளிவிட,
“விழுந்தா ரெண்டு பேரும் சேர்ந்து தான் விழுவோம்டி என் பொண்டாட்டி..”
“பரவாயில்லை.. உங்க மேல தான் நான் விழுவேன்..”
“அப்போ கீழே விழுவோமா..?” விஷமமாக பார்த்து கேட்டான்.
“ஒன்னும் வேண்டாம், கேட்க சொல்லிட்டு பதில் சொல்லாம இப்படி டைவர்ட் பண்ணா எப்படி..?”
“நீ ரொம்ப எமோஷன் ஆயிட்ட, நான் எப்போவும், கோவத்துல, எமோஷன்ல எதையும் ஹாண்டில் பண்ண மாட்டேன்..”
“உங்களை நினைச்சாலே நான் எமோஷன் ஆயிடுறேன் என்ன செய்ய..”
“இது தப்பாச்சே, என்னை நினைச்சா அப்படி இப்படி தானே ஞாபகம் வரணும்..” கண்ணடித்து சொன்னான் கள்வன்.
“உங்களை அவ்வளவு தேடியிருக்கேன், அப்போ மட்டுமில்லை, நம்ம கல்யாணத்துக்கு அப்பறமும் கூட..”
“இப்போவும்மா..? நான் உன்கூட தானே இருந்தேன்..”
“அப்பா ஆப்பரேஷன் முடிச்சு நீங்க நம்ம வீட்டுக்கு போயிட்டிங்க இல்லை அப்போ..”
“நான் நம்ம வீட்டை ரொம்ப மிஸ் பண்ணேன்டி, உண்மையை சொல்லணும்ன்னா என்னால வேற எங்கேயும் ஸ்டே பண்ணவே முடியாது, உனக்காக, மாமக்காக மட்டும் தான் நான் அவ்வளவு நாள் உங்க வீட்ல இருந்ததே..”
“புரிஞ்சது.. உங்களை மிஸ் பண்ண அந்த ஏக்கத்தில தான் அன்னிக்கு அப்பாகிட்ட அப்படி பேசிட்டேன், ஸ்டில் நான் அப்படி பேசினது ரொம்ப தப்பு, நம்ம வீட்ல இவ்வளவு அண்டர்ஸ்டேண்டிங்கா இருக்கும் போது நான் அப்படி பேசியிருக்க கூடாது..”
“நான் பேசினது எல்லாம் உங்களை மிஸ் பண்ண அந்த ஏக்கத்துல தான், என்ன காரணமா இருந்தாலும், சாரிங்க..” மிகவும் வருந்தி கேட்க, உதய்க்கு புரியாமல் இருக்குமா..?
“மிஸ் பண்ணா கோவப்பட தோணுமா என்ன..? புருஷனை கட்டிப்பிடிச்சுக்க தானே தோணனும்..”
“அப்போ என்னமோ உங்ககிட்ட இப்படி ஓப்பனா சொல்ல தயக்கம்..”
“என்னடி இது முற்றும் துறந்த புருஷன் பொண்டாட்டிக்குள்ள என்ன தயக்கம் வேண்டிக்கிடக்கு..”
“அச்சோ.. எப்போ பாரு இதே பேச்சு தானா..?”
“ஏய் இதுல என்ன இருக்கு..? புருஷன் பொண்டாட்டிக்குள்ள மானம், வெட்கம், சூடு சொரணை, ஈகோ, முக்கியமா இந்த துணி எல்லாம் இருக்கவே கூடாது, இருந்தா இப்படி தான் கஷ்டப்படணும்..”
“உங்களை வாயிலே போடணும், இதே தானா..” அவனின் வாயில் விரல்களால் லேசாக அடித்தாள்.
“ஏண்டி.. இவ்வளவு ட்ரைனிங் கொடுத்ததும் உனக்கு என் வாயை மூட தெரியல, சொன்னா மட்டும் கோவம் வருது..”
“போங்க.. நீங்க இப்படியே தான் பேசிக்கிட்டு இருக்க போறீங்க, உங்க மனசுல இருக்கிறதை சொல்ல போறது இல்லை..” அவனின் மேல் இருந்து எழ, பிடித்து அமர வைத்தவன்,
“என்ன சொல்லணும் இப்போ உனக்கு..? நான் ஏன் முதல்ல நம்ம கல்யாணம் வேண்டாம் சொன்னேன்னா, இல்லை உனக்கிட்ட ஏன் பேசலைன்னா.. இல்லை ஏன் உன்னை விட்டு தள்ளி நின்னன்னா..?” அவளின் முகம் பார்த்தான். ஷா பதிலை எதிர்பார்த்திருக்க,
“சிம்பிள்.. நமக்கு அப்போ கல்யாண வயசு இல்லை, செகண்ட் எனக்கு என் லைப்ல ஏதாவது சாதிக்கணும், அது தான் எனக்கான நேரமும் கூட..”
“அப்பறம் உன்கிட்ட ஏன் பேசலைன்னா..? என்ன பேசணும்..? நாம ஒன்னும் லவ் ப்ரொபோஸ் பண்ணி பிரிஞ்சிருக்கல, மேரேஜ் பேச்சு டிராப் ஆகி விலகியிருந்தோம்..”
“அதுவும் ரிஜெக்ஷன் என் பக்கம்ன்னும் போது நான் திரும்ப உன்கிட்ட பேசி, உன்னை கன்வின்ஸ் பண்ணி உன்கூட என்னோட அந்த கமிட்மெண்டை வச்சுக்க தோணல, உனக்கான ஸ்பேஸ் கொடுக்க நினச்சேன், மே பி உங்க அப்பாக்காக மூவ் ஆன் பண்ற நிலமை வந்தா..”
“கோவப்படாத ஷா, உண்மை, நம்மளோட அந்த பீலிங்ஸ்க்கு அப்போ எந்த பேரும் நாம கொடுக்கல, போறவரைக்கும் போகட்டும், காலம் நம்மை எங்க கொண்டு வந்து நிறுத்ததுன்னு பார்த்து தான் முடிவெடுக்கணும் நினைச்சிருந்தேன்..”
“ஏன்னா என்னோட கனவு, அதுக்கான தூரம், சக்ஸஸ் எதுவுமே தெரியாது, எனக்குள்ள இருக்க அந்த நம்பிக்கை, திறமை, உழைப்பை மட்டுமே மூலதனமா வச்சு நான் செய்யும் போது பலதையும் யோசிச்சு தான் செய்வேன், பிஸ்னஸ்க்கே அப்படின்னா நம்ம லைப்..”
“ஒருவேளை என்னோட முயற்சில நான் தோத்துட்டா, என்னால மீண்டு வர முடியலைன்னா, உன்கிட்ட நான் கண்டிப்பா வந்திருக்க மாட்டேன், அதே ஜெயிச்சிட்டா, எனக்கான அடையாளத்தை நான் உருவாக்கிட்டா, கண்டிப்பா உன்கிட்ட வரத்தான் செஞ்சிருப்பேன், இது தான் உண்மை..”
“யாருமே தனியா வாழ்ந்துற முடியாது, அதுவும் நமக்கான கேர்ள் இருக்கும் போது வாய்ப்பே இல்லை.. ஆனா அதே சமயம் நான் பெயிலியர் ஆகியிருந்தா எத்தனை பிரசாத் இடையில வந்திருந்தாலும் வேற தான் யோசிச்சிருப்பேன், கல்யாணம் கிடையவே கிடையாது..”
“அப்போ உங்க அடையாளம் தான் உங்களுக்கு முக்கியமா..? என்னை விட்டிருப்பீங்களா..?”
“அதெப்படி விட்டிருப்பேன், ஜெயிச்சிக்கிற வரை ஓடியிருப்பேன்..”
“அப்படியென்ன அவசியம், உங்களோட அடையாளத்துல தான் நான் இருக்கணும்ன்னு நினைக்கிறீங்களா..?”
“பிக் நோ ஷா, எனக்கான அடையாளம் தான் உனக்கான அடையாளமா இருக்கனும்ன்னு நான் நினைக்கல, அதே நேரம் எனக்குன்னு எந்த அடையாளமும் இல்லாமல் போயிட கூடாதுன்னு தான் நினைச்சேன், உழைச்சேன்..”
“இப்போ பாரு, இந்த பிஸ்னஸ் கடல்ல எனக்குன்னு ஒரு ஷிப் இருக்கு, என் பேரை போட்டு கொடி இருக்கு, அது பறக்கவும் ஆரம்பிச்சிடுச்சு, இது போதும், எனக்கான வழியில நான் போயிட்டே இருப்பேன்..”
“யாருமே கால் ஊனுற வரைக்கும் தான் இந்த போராட்டம், தடுமாற்றம், விழுறது எல்லாம், ஒன்ஸ் நின்னுட்டா போதும், தொடர் ஓட்டம் தான், நானும் ஓடுவேன்..”
“ரொம்பதான், அப்படியே ஓடிட்டே இருங்க..” ஷா முகத்தில் கோவம்.
“என்ன கோவம்..?”
“அப்போ நீங்க என்னை மிஸ் பண்ணவே இல்லையா..?”
“மிஸ் பண்ணாம தான் உனக்காக பங்க்ஷன், அசோசியேஷன் மீட்டிங் எல்லாம் வந்தேனா..? அங்கிருந்து நீ கிளம்புற வரைக்கும் உனக்காக தேவுடு காத்தேனா..?”
“அது ஒன்னு தான் உங்களை எனக்கு புரியவும் வச்சது..”
“புரிஞ்சும் ஏன் கல்யாணத்துக்கு கேட்டதுக்கு மறுத்த..?”
“உண்மைக்கும் அப்போ உங்க மேல கோவம், வருத்தம் இருந்தது தான், அதே நேரம் அப்பா, அவருக்காகவும் யோசிச்சேன், எப்படியும் நீங்க நம்ம வீட்லே இருக்க மாட்டீங்கன்னு தெரியும், சோ.. பல குழப்பம், யோசனை, கொஞ்சம் வீம்பு..”
“ம்ஹூம்.. நிறைய வீம்பு.. என்னை எப்படி சுத்தவிட்ட..”
“என்ன இருந்து என்ன..? உங்களோட இப்படி உரசிட்டு தானே இருக்கேன்..”