யுகம் சுகம் தானே 19

“என்ன ஆச்சு..? ஏன் இரண்டு பேரும் இப்படி இருக்கீங்க..?”  உதய் வீட்டுக்குள் வந்து பேக்கை வைத்தபடி கேட்டான். மாமியார், மருமகள் இருவரிடமும் மௌனம்

ம்மா.. என்ன..?”  உதய் அம்மாவிடம் கேட்க

நீ சாப்பிட்டியா..?” என்றார் அவர்.  

வர வழியிலே சாப்பிட்டு தான் வந்தேன், நான் கேட்டதுக்கு பதில் சொல்லுங்க, ஏன் இப்படி இருக்கீங்க..?”  திரும்பவும் கேட்டான்

ம்ப்ச்.. ஒன்னுமில்லை.. நீங்க தூங்க போங்க, நாளைக்கு காலையிலே பூஜைக்கு கிளம்பணும்..” என, உதய் திரும்பி மனைவியை பார்த்தான்

அவள் அவனையே கலக்கத்துடன் பார்த்து நின்றிருந்தாள். கணவன் என்ன சொல்வானோ என்ற பயமும் அவளிடம் நிச்சயம் இருந்தது. இருவரும் ஒன்றுமன்றுமாக வாழ்ந்தால் கூட இவ்வளவு கலக்கம் இருந்திருக்காது. ஏற்கனவே மனைவியாக  நிறைய சொதப்பி வைத்திருந்தவள், இப்போது மருமகளாகவும் அதிருப்தி பெற்று கொண்டாள்

அம்மா, மகன் உறவும், அவர்களின் அந்த ஆழ்ந்த பாசமும் புரிந்திருந்தவள், இது தெரிந்தால்  உதய் நிச்சயம் சத்தம் போட்டு சண்டை போட போகிறான் என்றே  அவனை பார்த்து நின்றாள்

அவளின் கலங்கிய முகத்தில் புருவம் சுருக்கிய உதய், “என்னடி..?” கேட்டான்

கண்ணம்மாவை பார்த்தவள்,  “நான் அப்போ உங்களை வீட்டோட மாப்பிள்ளையா நினைச்சது..” என்று நிறுத்த, உதய்க்கு புரிந்தது. அம்மாக்கு எப்படி தெரியும் இது..? உள்ளுக்குள் யோசனை ஓட, வாய் தானாகவே

அது அப்போ நினைச்சது தானே..? இப்போ என்ன..?” என்றுவிட்டான் அம்மா, மனைவியை பார்த்து

கண்ணம்மா மகனை கூர்மையாக பார்த்தவர்,  “என்கிட்ட இதை ஏன் முன்னாடியே  சொல்லலை உதய்..?”  கேட்டார்.  அவரின் அருகில் சென்று கை பிடித்து கொண்டவன், 

“ம்மா.. அது அப்போ அவளோட சூழ்நிலைக்காக யோசிச்சது, அதுவும் ஒரு நாலு, அஞ்சு வருஷத்துக்கு முன்னாடி, அப்போ அவளோட மெச்சூரிட்டி  லெவலும் இப்போ இருக்கிற மாதிரி இல்லை. ஆனா இப்போ அப்படி  இல்லையே, நம்ம கல்யாணத்தப்போ எல்லாம் அவளுக்கு அந்த நினைப்பே இல்லையே, அப்பறம் என்னம்மா, விடுங்க..”

“ம்ப்ச்.. உதய் புரிஞ்சுக்கோ,  ஒரு மூணாவது மனுஷங்க இந்த விஷயத்தை என்கிட்ட சொல்லி யோசிங்கன்னு சொன்னா எனக்கு எப்படி இருக்கும் சொல்லு, உண்மையை சொல்லணும்ன்னா நான் அந்த பையன் சொன்னதை நம்ப கூட இல்லை  கொஞ்ச நேரம் முன்னாடி வரைக்கும், ஆனா அது உண்மைன்னு தெரியும் போது கோவம் வராமல் இருக்குமா..? இதுக்கு பவ்யாவே என்கிட்ட ஓப்பனா பேசியிருக்கலாமே..?”

“அத்தை.. சாரி நடுவுல பேசுறதுக்கு, உங்க மகன் சொல்றது போல நான் இதை முதல்ல நினைச்சிருந்தேன் அப்பாவுக்காக, எனக்கு தெரியும் அது முழுக்க முழுக்க சுயநலமான முடிவுன்னு, ஆனா இப்போ எனக்குள்ள அப்பாவை தனியா விட்டு வர வருத்தம் இருந்தாலும் இந்த நினைப்பு இல்லை, அதான் அதை பத்தி உங்ககிட்ட எதுவும் பேசல, ஆனா இது இந்தளவு உங்களை ஹர்ட் பண்ணும்ன்னு நான் நினைக்கல, சாரித்தை..” வருத்தத்துடன் சொல்ல, கண்ணம்மாவால் மேலும்  பேச முடியவில்லை. 

அவருக்கும் புரிந்து தான் இருந்தது, ஆமா இப்போ என்னாங்கிறீங்க  என்று நிற்காமல், மருமகள்  உண்மையாகவே  வருத்தப்படுகிறாள் என்று. மேற்கொண்டு எப்படி பேச, என்ன பேச.   

“நீ சொல்றதும் சரி தான் பவ்யா, நான் தான் கொஞ்சம் எமோஷனல் ஆயிட்டேன் போல.. தூங்க போலாம், நேரம் ஆச்சு..” என்று ரூமுக்கு சென்றுவிட, ஹாலில் கணவன், மனைவி மட்டுமே. 

“வா..” உதய் அவனின் பேக்குடன் ரூமிற்கு செல்ல, ஷா அவனுடன் சென்றாள். நேரே ரெப்ரெஷ் செய்து வந்தவன், மனைவி தூங்காமல் அமர்ந்திருக்கவும், “எதையும் யோசிக்காம தூங்கு, காலையில பூஜைக்கு போகணும்.. நான் போய் அம்மாவை பார்த்துட்டு வரேன், அவங்க முகமே சரியில்லை..” என, ஷா தலையாட்டி படுத்துவிட்டாள். 

கணவன் வந்தவுடன் மனம் விட்டு எல்லாம் பேசிவிட வேண்டும் என்று நினைத்திருந்தவள், உதய் அம்மாவை பார்க்க போறேன் என நிறுத்தி வைத்து பேச மனம் வரவில்லை. அவளும் பார்த்திருந்தாளே கண்ணம்மாவின் வருத்தத்தை, கோவத்தை. பேசிட்டு வரட்டும்.. என்று படுத்து கொள்ள, உதய் பெரு மூச்சுடன் மனைவியை பார்த்து கீழே சென்றான். 

அவன் நினைத்தது போல கண்ணம்மா தூங்காமல் விழித்து அமர்ந்திருக்க, உள்ளே சென்றவன், கணபதியின் தூக்கம் கெடாமல், வெளியே போலாம்.. என்று அம்மாவிற்கு சைகை செய்து வெளியே அழைத்து வந்தான். அவரும் மறுக்காமல் வந்தவர் சோபாவில் அமர்ந்து கொள்ள, உதய் அவரின் பக்கத்தில் அமர்ந்தான். 

“எனக்கு காபி வேணும் உதய்..” கண்ணம்மா கேட்க, 

“ஹாஹா.. என்கூட சேர்ந்து ரொம்ப கெட்டு போயிட்டம்மா..”   சிரிப்புடன் இருவருக்கும் காபி போட்டு எடுத்து வர, அமைதியாக குடித்தனர். 

“காபி சுமார் தான்..” கண்ணம்மா கடைசி சொட்டு வரை குடித்து கமெண்ட் சொல்ல, எட்டி கப்பை பார்த்த மகன்

தெரியுது..” என்றான் கேலியாக

ஏதோ டென்ஷனுக்கு சூடா  சுடு தண்ணி மாதிரி இருந்தது அதான் குடிச்சேன், என்ன செய்ய..?” அம்மா பிகுவாக  அலுத்து கொள்ள

ஆமாமா.. சுடு தண்ணியே தான், எங்க அம்மாகிட்ட தான் இப்படி  சுடு தண்ணி போட கத்துக்கிட்டேன்..”  என்றான் மகன் விடாமல்

இப்போ என்னடாங்கிற..? எதோ அம்மா கொஞ்சம் கஷ்டத்துல இருக்காளேன்னு விட்டு கொடுத்தா என்ன உனக்கு..? கூட கூட பேசிகிட்டு..”  எகிற

அப்படி உன்னை யாரு கஷ்டப்படுத்திக்க சொன்னா, உனக்கு தெரியும் இல்லை அப்படி எல்லாம் உன்னை சந்தோஷமா விட்டுட்டு நான் போக மாட்டேன்னு..”

அதென்னமோ சரி தான், கூடவே இருந்து என்  உயிரை வாங்கினா தானே உனக்கு நிம்மதி. நான் வாங்கி வந்த வரம் அப்படி..”

ஆஹாஆஹா.. நீ ரொம்ப சரியோ, மகன்கிட்ட பேசுற மாதிரியா பேசுற, எதோ சண்டை காரங்ககிட்ட பேசுற மாதிரி தான் பேசுறதே.. ஒரு மகனாச்சே, ஒரு கண்ணு, ராஜா, மந்திரி ஒன்னும் கிடையாது..”

ஹாஹா.. உனக்கு இந்த ஆசை வேற இருக்கா, வேணும்ன்னா சொல்லு  எருமை, காண்டாமிருகம், சிம்பான்ஸி  இப்படி கூப்பிடுறேன்..”

உங்களை பத்தி தெரிஞ்சும் கேட்டது என் தப்பு தான், நான் வாங்கி வந்த வரம் இப்படி..”  அடித்து கொண்ட அம்மா, மகன் முகத்தில்  லேசான சிரிப்பு தேங்கியது

இப்போ சொல்லு.. என்ன கோவம், என்ன வருத்தம் உனக்கு..?” உதய் அவரை பார்த்தபடி ஒரு  கால் மடக்கி அமர்ந்தவன் கேட்க, கண்ணம்மாவும் லேசான மனதுடன் எல்லாம் சொன்னார்.

 ரிசப்ஷன் அன்று பிரசாத் இவரை தேடி வந்து பேசியது, அதில் குழம்பி பவ்யாவை கவனித்து பார்த்தது, இவர்களின் சண்டை, இரண்டாம் முறை பிரசாத் போன் செய்தது, ராம் மகளிடம் பேசியதை கேட்டது, அதை தொடர்ந்து பவ்யாவிடம் இவர் கேட்டது என்று எல்லாம் ஒன்று விடாமல் சொல்லி முடித்தார்

ஓஹ்.. இவ்வளவு நடந்திருக்கா..? என்கிட்ட பார்ஸ்டே கேட்டிருக்கலாம் இல்லைம்மா.. அந்த பிரசாத் சரியில்லை, அவனுக்கு முதல்ல பவ்யாவை  கட்டணும்ன்னு ஆசை இருந்திருக்கு, அதுவும் சொத்துக்காக தான்..”  என்று அவனை பற்றி உதய் எல்லாம் சொல்லி முடித்தான். இவன் பிஸினஸில் அவன் தொந்தரவு வரை

அந்த பையன் இவ்வளவு மோசமா..? நான் ராம் அண்ணா பேமிலி ப்ரண்ட்ன்னு நினைச்சு பேசினேன் உதய்..”

ம்மா.. அவன் சொன்னதை போய் நம்பி இவ்வளவு மனஉளைச்சல் தேவையா..? என்னை பத்தி தெரியாதா உனக்கு..?”

ம்ப்ச்.. உதய் முதல்ல ஒன்னு நல்லா புரிஞ்சுக்கோ, நான் அந்த  பையன் சொன்ன வீட்டோட மாப்பிள்ளையை நம்பவே இல்லை, அதை முழுசும்  இக்னோர் பண்ணிட்டேன், என்னை குழப்பினது எல்லாம் பவ்யாவோட பாதுகாப்பு பத்தி தான்,    அவன் சொன்னது மாதிரி அவளுக்கு அவ்வளவு பாதுகாப்பு நம்மால கொடுக்க முடியுமான்னு தான், சொந்த வீட்லே எந்நேரமும் பாதுகாப்போட இருக்கிறது எல்லாம் எந்தளவு சரிப்பட்டு வரும்ன்னு பல யோசனை..”

ம்மா.. பிரசாத் ரொம்ப பில்ட் அப் பண்ணி உங்களை குழப்பி விட்டிருக்கான், நீங்க நினைக்கிற அளவு எல்லாம் இல்லை, முக்கியமா ராம் மாமா எங்க இருந்தாலும் மகளோட பாதுகாப்பை விட மாட்டார், அது நமக்கே தெரியாது, சோ நாம நம்மால முடிஞ்ச அளவு  உஷாரா இருப்போம் அவ்வளவு தான்,   இதுக்கு போய் இவ்வளவு கோவம், வருத்தம்..”

இல்லை உதய்.. நான் பவ்யா இப்படின்னு நினைச்சது இல்லை, அதான் அந்த பையன் சொன்னப்போவும் நான் அதை ஒதுக்கிட்டேன், ஆனா அதுவே உண்மைன்னும் போது என்னால் அதை சட்டுன்னு ஏத்துக்க முடியல, அவ மேல நான் வச்சிருந்த நம்பிக்கை, எப்படி சொல்ல..? அந்த அபிமானம் எல்லாம்  குறைஞ்சது போல, உனக்கு புரியுது தானே..?”

ம்மா.. எல்லோருக்கும் இது நடக்கும், நாம ரொம்ப நம்புற ஒருத்தர்கிட்ட இப்படின்னு தெரிஞ்சா வர கோவம் தான், ஆனா அவ இப்போ அப்படி இல்லை, அது உங்களுக்கு புரியுது தானே..?”

ம்ம்.. புரியுது உதய்..”

ம்மா.. அவளுக்கு இருக்கிற ஒரே சொந்தம் அவங்க அப்பா மட்டும் தான், அவரும்   உடம்பு முடியாமன்னும் போது அவரை எப்படி தனியா விடங்கிற அவளோட அந்த கவலை, பயம் தான் இப்படி அவளை யோசிக்க வச்சிருக்கு..”

 “அதையே இப்படி யோசிச்சு பாருங்க,   என்னை தவிர வேற மாப்பிளையை அவங்க அப்பா செலக்ட் பண்ணி இருந்து, அவனுக்கு வீட்டோட மாப்பிள்ளையா போறதுல எந்த அப்ஜெக்ஷ்னும் இல்லைன்னும் போது அவளுடைய அந்த எதிர்பார்ப்புல எந்த தப்பும் இல்லாம தானே போயிடுது, அப்படி இருக்கிறப்போ நான்னு வரும் போது மட்டும் அதை பெருசா பேசி அவளை கஷ்டப்படுத்த வேணாம் நினைக்கிறேன்..”

எனக்கு இந்த விஷயம் கல்யாணம் முடிஞ்ச அன்னிக்கே தெரியும், இதை யோசிச்சு தான் நான் அதை அப்படியே விட்டுட்டேன்..  அண்ட் அவளும் என்னை பத்தி தெரிஞ்சு தானே அவளுடைய அந்த ஆசையை அவளே ஓரங்கட்டிட்டா..”

அப்பறம் எதுக்கு உங்க ரெண்டு பேருக்கும் இதை வச்சு தான் சண்டைன்னு அந்த பிரசாத் சொல்லணும்..”

ம்மா.. அவனுக்கு எப்படியாவது என்னை தோற்கடிக்கணும்ன்னு ஒரு வெறி, அதான் எல்லா வழியிலும் என்னை கார்னர் பண்ண இப்படி லூசு தனமா செஞ்சிட்டிருக்கான், அவனை விட்டு தள்ளுங்கம்மா..”

அவனை விடுறதா, இன்னொரு முறை என்கிட்ட பேசட்டும், அப்புறம் இருக்கு கச்சேரி அவனுக்கு..” உள்ளுக்குள் கருவி கொண்டார் கண்ணம்மா

“இப்போ ஓகே தானே.. எல்லா கோவமும், குழப்பமும் ஓடி போச்சா..?”

ம்ம்.. பவ்யாகிட்ட தான் கொஞ்சம்  பேசிட்டேன், அவ முகம் சுருங்கி போச்சு, என் மகனை என்கிட்ட இருந்து பிரிப்பாங்களான்னு கோவத்தை அடக்க முடியல..”

ம்மா.. அவளும் உன்னை மாதிரி தான் புரிஞ்சுப்பா, என்னோட லேடிஸ் ரெண்டு பேரும் செம ஸ்மார்ட், மெச்சூர்ட்..”  உதய் உள்ளார்ந்த கர்வத்துடன், மகிழ்வுடன் சொன்னான்

இப்படி ஐஸ் வச்சா மட்டும்  உன் கேவலமான காபியை மறந்துடுவேன்னு நினைக்காத உதய்..” மகனின் வார்த்தையில் அம்மாவாக சந்தோசம் கொண்டவர், வெளியே அப்போதும் மகனை வம்பு தான் இழுத்தார். என்ன செய்ய இவர்கள் உறவு அப்படி..? 

கண்ணு.. நீங்க தூங்கவே இல்லையா..?” கணபதி எழுந்து வர, அப்போது தான் நேரம் பார்த்தனர் அம்மாவும், மகனும். விடியற்காலை மூன்று மணி. ஐந்து மணிக்கே கோவிலில் இருக்க வேண்டுமே என்பதால் எல்லா ஏற்பாட்டையும் செய்ய கணபதி முதல்லே எழுந்து வந்தவர் பார்த்தது அம்மா, மகனும் பேசி கொண்டிருப்பதை தான்