மறுநாள் மதியம் போல மகள் வரவும் அவள் குடும்பத்துடன் கிளம்பி மருமகள் வீடு வந்தனர் கணபதி தம்பதி. ஜின்னா, அவனின் மனைவி கவிதா மட்டும் அவர்களுடன் கிளம்பி நிற்க, வீட்டை, கம்பெனி பார்க்கும் பொறுப்பு, ஜித்தன், அவனின் பெற்றவர்களிடம் ஒப்படைக்கபட்டது.
அடுத்து சில மணி நேரங்களில் மதுரை வந்தடைய, அவர்களின் தனி கேரவன் மூலம் திருநெல்வேலி அருகில் இருக்கும் உதய் பண்ணை வீடு வந்தனர்.
“இது தான் நம்ம பூர்வீக வீடு, சுத்தி நிலம், எங்க மாமனார் காலத்துலே இதை எல்லாம் விட்டுட்டு சென்னை வந்துட்டோம், அப்பறம் இவர் தலையெடுத்து தான் இந்த நிலத்தை, வீட்டை பராமரிக்க ஆள் வச்சோம்..” மருமகளுக்கு அவர்களின் குடும்பத்தை பத்தி சொன்னார் கண்ணம்மா.
ஷா ஆர்வமாக சுற்றி பார்த்தாள். அந்த காலத்து வீடு. முற்றம் வைத்து பெரிதாக கட்டபட்டு இருந்தது. பராமரிப்புக்காக அங்கேயே இருந்த குடும்பம் இவர்கள் தங்க வசதிகளை செய்து கொடுத்தனர்.
“இப்போ கொஞ்ச வருஷம் முன்னாடி தான் உதய் ஆல்டிரேஷன் ஒர்க் எல்லாம் செஞ்சான், அவனுக்கு ரொம்ப பிடிக்கும் இந்த வீடு. நேரம் கிடைக்கும் போதெல்லாம் ரிலாக்ஷேனுக்காக இங்க தான் வருவான்..” கண்ணம்மா மேலே இருக்கும் உதய் ரூமை அவளுக்கு ஒதுக்கி கொடுத்தார்.
அங்கு வந்து தான் இரவு உணவு என்பதால் எல்லோரும் ரெப்ரெஷ் செய்து உணவுண்ண அமர்ந்தனர். உணவு முடித்து உதய்க்கு அழைத்து தாங்கள் வந்து சேர்ந்ததை சொன்ன கண்ணம்மா மகன் எங்கிருக்கிறான் என்று கேட்டு கொண்டார். அவன் மதுரை வந்துவிட்டேன் என, சரி என்று வைத்துவிட்டவர், மருமகள், ராமை பார்த்தார்.
“அவங்க முன்னாடி இருக்காங்கம்மா..” அனிதா சொல்ல, பால் கொடுக்கணும் என்று கிட்சன் சென்றார் கண்ணம்மா.
வெளியே அமர்ந்திருந்த ராமோ முகுந்தனிடம் போன் பேசி கொண்டிருக்க, ஷா அவளின் வழக்கமான போன் கால்களை கேட்டு கொண்டிருந்தாள். அவளுக்கு வரும் போன் கால்கள் எப்போதும் ரிக்கார்டர் தான். அதை நிதானமாக கேட்டு, சிலதை மனதில் குறித்து கொண்டவள், தேவையில்லாதது எல்லாம் நீக்கி கொண்டிருந்தாள்.
சில நாட்களாக கேட்காததால் நிறைய இருக்க எல்லாம் பொறுமையாக கேட்டு வந்தவளுக்கு கணவனின் கால் வரவும் முகத்தில் மெல்லிய புன்னகை. ஆனால் கேட்க கேட்க முகம் கசங்கி போனது.
“பவிக்குட்டி..” அழைப்பையே அப்போது தான் உணர்ந்தவளுக்கு கண்கள் கலங்கி தான் போனது. அவனின் அந்த மகிழ்ச்சியும் உணர, தன்னை தானே திட்ட மட்டும் முடிந்தது அவளால்.
“என்ன செஞ்சிருக்கேன் நான்..? ச்சே.. நிறைய சொதப்புறேன்.. ஏற்கனவே நம்ம மேல கோவம், இப்போ இதுவும் சேர்ந்திருக்கும்.. ம்ப்ச்..”
“ஷாம்மா.. என்ன..?” ராம் போன் வைத்து மகளின் தோள் தொட்டு கேட்க, ஹெட் செட்டை எடுத்தாள்.
“என்னடா முகம் எப்படியோ இருந்துச்சி..?” ராம் கேட்க,
“கல்யாணம் ஆனதில இருந்து நிறைய சொதப்புறேன்ப்பா..” என்றாள் மகள்.
“ஷாம்மா.. உனக்கு புரியறது எனக்கு ரொம்ப சந்தோஷம், இனியாவது பார்த்து நடந்துக்கோ, பாரு நமக்காக எல்லாம் பார்த்து பார்த்து செய்றாங்க, நாமும் அதுக்கு ஏத்தது போல நடந்துக்கணும், முக்கியமா வீட்டோட மாப்பிள்ளை அது இதுன்னு இனி உளற கூடாது..” என்றவர் அவளின் தலை வருடி பக்கவாட்டில் இருந்த அவரின் ரூமிற்கு செல்ல, கொல்லபபுற வாசல் வழியே வந்த கண்ணம்மா கேட்டுவிட்டார்.
“அப்போ அவன் சொன்னது உண்மையா..?” சந்தேகம் ஊர்ஜிதமாக மருமகள் முன் வந்து நின்றவர்,