அன்றிரவு எல்லாம் உறங்க போய்விட, கண்ணம்மா, அனிதா மட்டும் பூஜை பொருட்களை எடுத்து வைத்து கொண்டிருக்க, “ம்மா..” என்று வந்தான் உதய்

என்ன உதய்..?”  கண்ணம்மா பேக் செய்தபடி கேட்டார்

காபி வேணும்..” மகன் சொல்ல,  

என்ன ஆச்சு உதய்..? ஏதாவது பிரச்சனையா..?” செய்த வேலையை அப்படியே விட்டு பதட்டத்துடன் வந்தார் கண்ணம்மா

ம்மா.. எதுக்கு இவ்வளவு டென்க்ஷன்..?”

பின்ன நீ நடுராத்திரில காபி கேட்டாலே வில்லங்கம் தானே..? என்ன சொல்லு..?”

ம்ப்ச்.. அப்படி எல்லாம் எதுவும் இல்லை..”

என்னண்ணா.. கல்யாண டென்ஷனா..?” அனிதா கிண்டலாக கேட்க, எட்டி அவளின் தலையை கொட்டியவன்

நீ பேசாத, ஏதோ விருந்தாளி மாதிரி முதல் நாள் வந்துட்டு பேச்சை பாரு..”

ண்ணா.. நான் தான் சொன்னேன் இல்லை.. பிளைட் கேன்சல் ஆகி, திரும்ப நாங்க புக் வரதுக்குள்ள போதும் போதும்ன்னு ஆகிடுச்சுன்னு..”

அதெல்லாம் சும்மா, வரணும்ன்னு அக்கறை இல்லை..” என்றுவிட, அனிதா கண்ணில் நீர் தேங்கிவிட்டது

ஏய்.. நான் சும்மா சொன்னேன், இதுக்கு போய் கண்ணுல தண்ணி வச்சுக்கிட்ட..” தங்கையை தோளோடு அணைத்து கொண்டான்

“போதும் இந்தாங்க காபி..”  கண்ணம்மா அண்ணன், தங்கையிடம் காபி நீட்ட, “உங்களுக்கு..” கேட்டான் மகன்

குடிக்காம விட்டுடுவியா..?”  இன்னொரு கப்புடன் வந்தார். மூவரும் சோபாவில் உட்கார, உதய் கண்ணம்மா பக்கத்தில் அமர்ந்து கொண்டான். என்னமோ இன்று அவரை மிகவும் தேடியது மகனுக்கு. இருவரும் எவ்வளவு தான் அடித்து கொண்டாலும் உதய்க்கு எல்லாம்  அம்மா தான்.  

முதல் மகன்.. ஒரு மகன்.. அம்மா, மகன் இப்படி  ஆயிரம் இருந்தாலும் இருவருக்குள்ளும் எப்போதுமே ஒரு ஆழ்ந்த பாசம், பந்தம் உண்டுகண்ணம்மா மகளிடம் பேசி கொண்டிருக்க, உதய் காபி குடித்ததும் அப்படியே அவரின் மடியில் படுத்து கொண்டான்

அம்மாவின் கருவறைக்கு பிறகு ஒரு நிம்மதியான, பாதுகாப்பான  இடம் என்றால் அது நம் அன்புக்குரியவர் மடி தான். அதிலும் அம்மா மடி என்றாலே பரசுகம். கண் மூடி கொள்ளகண்ணம்மா மகளிடம் பேசி கொண்டே இயல்பாக அவனின் தலையை வருடினார்

 மறுநாள் வீட்டில் உள்ள சடங்கு முடிந்து மாலை உறவினர்கள் புடை சூழ, முதலில் உதய் மண்டபத்திற்கு வந்து சேர்ந்தான். அடுத்து பவ்யா வர, கண்ணம்மா, அனிதா இருவருமே  முன் நின்று ஷாவை  வரவேற்று உள்ளே அழைத்து சென்றார்கள்

உதய் நண்பர்களுடன் நின்றிருந்தவன் ஷா உள்ளே வரவும், கண்கள் அவளின் பின்னேயே சென்றது. அடர் பச்சை நிற பட்டு சேலையில், தலை முடியை பின்னி பூ சுற்றி புதிதான அழகில் உதய்யை சொக்க வைத்தாள் பெண்

இருபக்க முக்கிய உறவுகளும் மேடையில் இருக்க, நிச்சய பத்திரிக்கை வாசிக்கப்பட்டுவிருந்து பரிமாறப்பட்டது. “அண்ணி.. சாரி, இப்போ தான் உங்களை பார்த்து பேச முடியுது, டிக்கெட் சொதப்பிடிச்சு..”  அனிதா  தானே சென்று  ஷாவிடம் பேசியவள், அவளை உணவுண்ண  அழைத்து வந்தாள்

ஷா பார்வை முதலில் ராமை தான் தேடியது. அவர் விருந்தினர்களிடம் பேசி கொண்டிருக்க, அவர் சாப்பிட்டாரா..? என்ற யோசனையுடன் சாப்பிட அமர்ந்தாள். அவளுக்கு பக்கத்தில் அமர்ந்திருந்த உதய், “என்ன ஆச்சு..?”  என்று கேட்க, அப்போது தான் அவனின் இருப்பை உணர்ந்தாள்

என்ன ஷா..?” உதய் திரும்ப கேட்க

இல்லை அப்பா சாப்பிட்டாரான்னு..”

பவ்யா.. சார் முன்னமே சாப்பிட்டார்..” என்றான் அவளுடனே இருந்த ஜின்னா

ஆமாம் ஷா.. நீங்க சாப்பிடுங்க..”  ஜின்னா மனைவி கவிதா உணவு பரிமாற, அனிதாவும் உடன் நின்றாள். கண்ணம்மா வந்து  பார்த்து செல்ல, இளவட்டங்கள் எப்போதும் போல மாப்பிள்ளை, பெண்ணை ஊட்டிவிட சொல்லி கலாட்டா செய்ய ஆரம்பித்தனர்

மச்சி.. அப்பறம் என்ன  ஊட்டிவிடு..”  முகில் ஆரம்பிக்க

ஏன் நீங்க தான் முதல்ல ஊட்டிவிடணுமா..? ஷா நீ அண்ணாக்கு ஊட்டிவிடு..” என்றாள் முகில் மனைவி துர்கா

இது என்ன புதுசா இருக்கு, எப்போவும் நாங்க தானே முதல்ல ஊட்டுவோம், அது தான் முறை..” முகில் தரப்பு போர் கோடி பிடிக்க

நீங்க முதல்ல ஊட்டி கிழிச்சது எல்லாம் போதும், முறையை மாத்துவோம், நீ ஊட்டு ஷா..” துர்கா தரப்பு போர் கொடியை கிழித்துவிட்டனர்

ஒத்துக்க முடியாது, உதய் நீ தான் ஊட்டணும், ஷா நீதான் ஊட்டணும்..”  இரு தரப்பும் அடித்து கொள்ள, கடுப்பான உதய்

ஆணியே கழட்ட வேண்டாம், எல்லாம் போங்க..” என்று  சாப்பிடவே ஆரம்பித்துவிட்டான்

சார் போட்டோ..”  என்று போட்டோ கிராபர் முழிக்க, ஷா கீழே குனிந்து சிரிப்பை மறைத்தாள்

சிரிக்காதடி.. நானே கடுப்புல இருக்கேன்.. கடைசில ஊட்டவே விடாம பண்ணிட்டானுங்க..”   முணுமுணுத்து கொண்டே சாப்பிட்டு முடித்தனர்

சாப்பிட்டீங்களா..? கொஞ்ச நேரம் இப்படி உட்காருங்க..”   ஷாவின் பெரியம்மா இருவரையும் சேரில் உட்கார வைத்தார். தெரிந்தவர்கள் எல்லாம் வந்து பேசிவிட்டு போக, ஒரு பக்கம் பாட்டு, மேஜிக், வானவேடிக்கை என்று களை கட்டி கொண்டிருந்தது. ராம் மகளிடம் வந்து சிறிது நேரம் அமர்ந்தார்

தூங்க போக சொல்லலாமா அண்ணி, நேரம் ஆச்சு, காலையில முகூர்த்ததுக்கு எழுந்துக்கணும்..”  கண்ணம்மா ஷாவின் பெரியம்மாவையே கேட்டு அவர்களை ரூம்க்கு அனுப்பி வைத்தார்

இருவர் ரூமும் மேலே இருக்க, ஷா அவளின் ரூம் செல்லுமுன் உதய் அவளின் கை பிடித்தான். அவள் ஆச்சர்யமாக பார்க்க, உடன் வந்த துர்கா, அனிதா, முகில்  ரூம் சென்றனர். இருவர் மட்டும் நிற்க, அவளின் கையை தன் இரு கைகளில் அணைத்து பிடித்தவன், 

மனசை போட்டு ரொம்ப வருத்திக்காத, பார்த்துக்கலாம்..”  என, ஷா கண்களில் நீர் நிரம்பிவிட்டது. இதுவரை அவளுக்கென  இருந்தது, பார்த்தது, கேட்டது எல்லாம் ராம் மட்டும் தான். இன்று உதய் அவளுக்காக.. அவளை புரிந்து பேச, மனம் சட்டென பலவீனம் கொண்டது

ஏய்.. என்னப்பா..” சற்றும் யோசிக்காமல் அவளை தோளோடு அணைத்து கொள்ள, ஷாவால் இயல்பாய் அவனின் தோள் சாய முடியவில்லை. முதல் நெருக்கம் அல்லவா. பெண் உடல், மனம் கூச்சம் கொண்டு தயங்கி நின்றது

புரிந்து அவளை விட்டவன், “நல்லா தூங்கி ரெஸ்ட் எடு, நீ இப்படி இருந்தா நல்லா இல்லை, அதுக்கு கெத்தா வீரப்பா இருக்க ஷா மேடமே ஓகே..” என்றான்

கண்களை சுண்டிவிட்டவள், “குட் நைட்..” என, உதய்யும்குட் நைட்” என்று அவரவர் ரூமுக்கு சென்றனர். விடியற்காலை முகூர்த்தம்

உதய் கிளம்ப, கண்ணம்மா, கணபதி இருவரும்  முன் நின்று மகனை கவனித்து அவன் தயாரான பின் கண் குளிர பார்த்தே வெளியே சென்றனர். அங்கு ஷாவும் கிளம்ப, முதல் ஆளாக ராம் மகளை மணக்கோலத்தில் பார்த்து கண் கலங்கி  உச்சி முகர்ந்து வந்தார்

உதய் முதலில் மணமேடைக்கு செல்ல, அடுத்து பவ்யா அழைத்து வரப்பட்டாள்.   வெல்வெட் ரோஜா வண்ண பட்டு சேரியில், வைர நகைகள் மின்ன, தலையில் மல்லி பூ சூடி, மணப்பெண் அலங்காரத்தில் உதய்யின் தேவதை பெண் ஜொலிக்க, அவனின் கண்கள் அவள் மேலே

பக்கத்தில் அமர்ந்தவள் ஓரக்கண்ணால் அவனை பார்க்ககண்ணடித்துவிட்டான் கள்வன். ஷா இதை நிச்சயமாய் எதிர்பார்க்கவில்லை. உதய்யா இது.. மனதின் ஆச்சரியம் கண்களில் மின்ன, குனிந்து கொண்டாள்

சடங்குகள் முடிய உதய் கையில் தாலி கொடுக்கபட்டது. கண்ணம்மா, கணபதி, ராம் மூவரும் இமை சிமிட்டாமல் பார்க்க, உதய் அவனின் இஷ்ட தெய்வத்தை மனதில் வணங்கியேபடியே பவ்யா கழுத்தில் மூன்று முடிச்சிட்டு தன் சொந்தத்தை.. பந்தமாக  தன்னுடன்  இணைத்தான்

கண்ணம்மா ஆசை படி அர்ச்சனை, வாழ்த்து மண்டபத்தை நிறைத்தது. குங்குமம் வைத்தவன், அவளின் கைகளை தன்னுடன் பிணைத்து கொண்டான்

அடுத்தடுத்த சடங்குகள் எல்லாம் முடிய, பெரியவர்கள் காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கினார்கள். பெற்றவர்கள் காலில் விழ உதய் வர, ராமை கண்  காட்டினார் கண்ணம்மா. புரிந்து கொண்ட உதய் மனைவியுடன் அவர் காலில் விழுக, ராம் இருவரையும் ஆரத்தழுவி கண்கள் கலங்க, பெண்ணும் கலங்கி போனாள்

அடுத்து கண்ணம்மா, கணபதி காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்க, கண்ணம்மா, கணபதி இருவரும்  நிறைந்த மனதுடன் ஆசீர்வாதம் செய்தனர்இங்கு சடங்கு முடிய, உதய் வீடு கிளம்பினர் மணமக்கள்

கண்ணம்மா வற்புறுத்தலில் ராம் மகளுடனே மகள் வீடு வந்தார். அனிதா மணமக்களுக்கு ஆரத்தி எடுக்க, ஷா வலது கால் உள்ளே வைத்து சென்றாள். அடுத்து பூஜை ரூமில் விளக்கேற்றி, பால், பழம் சடங்கு முடிந்தது

ண்ணா.. ரெஸ்ட் எடுங்க, மதிய சாப்பாடு முடிஞ்சு, உங்க மகளையும், மருமகனையும் கூப்பிட்டு போலாம்..” ராமிற்கு தனி ரூம் ஒதுக்கி கொடுத்துவிட்டு, ஷாவிற்கு அனிதா ரூம் கொடுத்தார் கண்ணம்மா. உதய் அவனின்  ரூம் செல்லவிருந்தினர்கள் ஹாலில் குட்டி தூக்கம்

வெளியே ஹோட்டலில் மதிய உணவு சொல்லிவிட, உறவினர்கள் உணவு  முடித்து மணமக்களுக்கு சொல்லி கொண்டு, பலகாரத்துடன் அவரவர் வீடு கிளம்பினர். மாலை போல ஒரு டீயுடன் ராம் மணமக்களை தன்னுடன் அழைத்து கொண்டு கிளம்பியவர், திரும்பவும், “நீங்களும் வாங்க..”  என்று கண்ணம்மா, கணபதியை   கூப்பிட, நாளை வருகிறோம் என்று மறுத்துவிட்டனர்

மணமக்களுடன் அனிதாவும், அனிதா கணவரும் செல்ல, பிள்ளைகள் கண்ணம்மா வைத்து கொண்டார். ராம் வீட்டிலும் விளக்கேற்றி, பால், பழ சடங்கு செய்தனர்  ஜோதி, ஷாவின் பெரியம்மா

இரவு உணவு முடிந்ததும்அனிதாவும், அனிதா கணவரும் உதய், ஷாவை ரூமுக்கு அனுப்பி வைத்தனர்ஷா ரூம் நன்றாக பெரிதாக இருக்க, அலங்கரிக்கப்பட்ட கட்டிலை பார்த்தவனுக்கு சிரிப்பு. ஷா உள்ளே வந்தவள், உதய் சிரிப்பை கேள்வியாக பார்த்தாள்

கதவை லாக் பண்ணிட்டு வா..” என்றவன் பூக்களை தள்ளிவிட்டு, வசதியாக கட்டிலில் சாய்ந்து அமர்ந்தான்.

பால்..” ஷா கேட்க

இப்போ வேண்டாம்.. கொஞ்ச நேரம் கழிச்சு தேவைப்படும்..” என்றான் குறும்பாக கண் சிமிட்டி

“என்ன புதுசா கண் அடிச்சிக்கிட்டு..” ஷா உடை மாற்ற செல்ல

எங்க போற..?” என்றான்

இந்த புடவை மாத்த..”

நோ.. இப்படியே இரு, புடவையில பார்க்கும் போது ரொம்ப கம்பீரமா தெரியற..” என்றான் ரசித்து

என்ன திடீர்ன்னு..”

இத்தனை நாளும் இருந்தது தான், ஆனா வெளியே சொல்ற அளவு நாம அப்போ இல்லையே..?”

இப்போ இருக்கோமா என்ன..? “ 

“ஏன் இல்லையா..? இப்போ நமக்கு கல்யாணம் ஆகிடுச்சு மேடம், உன்னை ரசிக்க.. ருசிக்க எல்லாத்துக்கும் உரிமை இருக்கு..”

என்ன பேச்சு இது..” ஷா முகம் சிவந்து போக, அவனை முறைத்தாள்

இது தான் புருஷன் பேச்சு.. எனக்கும் உன்கிட்ட இப்படி பேசுறது ஆச்சரியம் தான், ஏன் நான் இப்படி பேசுவேன்னு எனக்கே இப்போ தான் தெரியுது, ஆனா இதுவும் ரொம்ப ஜிவ்வுன்னு  தான் இருக்கு..”

எனக்கு இல்லை..”

உடனே எப்படி முடிவுக்கு வரமுடியும்..?”  கட்டிலில் இருந்து எழுந்து அவளின் அருகில் வந்து நின்றவன், “ஒரு சேன்ஸ் கொடேன், நானும் என்னை பத்தி தெரிஞ்சுக்க உதவியா இருக்கும்..” என,   

“என்ன..?” என்று ஷா புரியாமல் பார்த்தாள்.

“இல்லை.. இந்த கில்மா விஷயத்தில நான் எப்படின்னு எனக்கே தெரியல, ரொம்ப ஹார்ஷா, இல்லை சாப்டா, இல்லை மெதுவாவா..”

போதும்.. போதும்..” ஷா காது கூச நிறுத்தியவள், “என்ன ஆச்சு உங்களுக்கு..?” கேட்டாள்

அதான் சொன்னேனே இத்தனை நாள் நமக்குள்ள இருந்த டென்க்ஷன், டிஸ்டன்ஸ் எதுவும்  இல்லாமல் ஒரு நார்மலான லவ்வரா, கணவனா இருக்கேன், அதான் மனசும் உன்மேல இருக்க என் லவ்வை எக்ஸ்பிரஸ் பண்ணுது நினைக்கிறேன்.. நீ என்ன நினைக்கிற..?”

நான் ஒன்னும் நினைக்கல..”

அப்படியா..?” மிக நெருங்கி நிற்க, தன் முகத்தில் உரசும்  அவனின் நெஞ்சில் ஷா  அதிர்ந்து போனாள்.

இந்த செயின் என்னை விட உனக்கு தான் ரொம்ப அழகா இருக்கு.. ஆனா மேலிருந்து உன்னை இப்படி பார்த்தா செயின் மட்டும் தெரியல, அப்ஸ் அண்ட் டவுன்ஸும் தெரியுது..” என, ஷா உடல் மொத்தமும் சிவந்து, கண்கள் விரிந்து போனது