Advertisement

யாவும் : 5

சில நிமிடங்களில் பேருந்து வர, 

உள்ளே ஏறி ஒரு இருக்கையில் அமர்ந்தாள் திகழ். ஜன்னலில் கண்ணை மூடி அமர்ந்துக் கொள்ள, அவள் கண்களில் இருந்து மீண்டும் கண்ணீர். 

செழியன் எவ்வளவு முயன்றும் அவளை பிடிக்க முடியவில்லை. அவன் அந்த பேருந்தை தொடர, அவனது தொலைபேசி அழைக்க,

“ஹலோ! சொல்லுங்க ம்மா..” என்றான். 

அந்த பக்கம் கூறிய செய்தியில், “இதோ வர்றேன் ம்மா… நீங்க ஒண்ணும் பதட்டப்படாதீங்க.. அப்பாவுக்கு ஒண்ணும் ஆகாது!” என அவன் அழைப்பை துண்டித்து வீட்டை நோக்கி மகிழுந்தை செலுத்தினான். பதட்டப்பட கூடாது என்று தன்னை நிதானபடுத்திக் கொண்டே சென்றான். 

கண்ணீரை துடைத்துக் கொண்டு அவள் நிமிர, அவளுக்கு முன்னே ஒரு பெண்ணும் ஆணும் அமர்ந்தனர். பார்க்க கல்லூரி மாணவர்கள் போல இருக்க, இருவரும் பேசிக் கொண்டும் சீண்டிக் கொண்டும் வர, அவளது முகத்தை வேறு புறம் திருப்பிக் கொண்டாள். இருந்தும் அவளது நினைவுகள் அவளை ஆக்கிரமித்தது. கண்மூடி இருக்கையில் சாய்ந்தவளின் நினைவு சில வருடங்களுக்கு முன்னேச் சென்றது.

“சேலத்திலிருந்து வரும் கொங்கு எக்ஸ்பிரஸ் இன்னும் சற்று நேரத்தில் நடைமேடை எண் மூன்றை அடையும்” என ஹிந்தியிலும் ஆங்கிலத்திலும் மாறி மாறி ஒலித்துக் கொண்டிருந்தது ஹஸ்ரத் நிசாமுதீன் ரயில்நிலையத்தில்.

வழக்கத்தை விட இன்று கூட்டம் சற்று அதிகமாகவே இருந்தது. வரப்போகும் ரயிலில் இருப்பவர்களை அழைத்துச் செல்ல வந்தவர்களும் அடுத்த ரயிலில் ஏறுவதற்காக காத்திருப்பவர்களும் அங்கே அலைமோதிக் கொண்டிருந்தனர்.

அங்கு இருந்தவர்களில் பெரும்பான்மையானோர் வடமாநிலங்களை சேர்ந்தவர்களே. தன் ஊரின் அடையாளமான வெளிர் நிறத்தை கொண்டிருந்த பெண்கள், பீடாவை வாயில் மென்று துப்பிக்கொண்டிருந்தார்கள்.  ரயில்நிலையம்  வரப்போகும் அறிகுறியாக கொங்கு எக்ஸ்பிரஸ்ரயிலின் வேகம் குறைய, பயத்தில் வெளிறிய முகத்துடன் அமர்ந்திருந்த திகழ்விழி தன்னருகில் இருந்த விக்னேஷின் கையைப்பிடித்தாள்.

அவளின் பயத்தை உணர்ந்த விக்னேஷ், “திகழ், பயப்படாத! வீட்டை விட்டு வரணும்னு முடிவு பண்ணி, இவ்வளோ தூரம் வந்துட்டோம். இப்ப வந்து பயந்துக்கிட்டு இருக்க? உங்க வீட்ல நம்ம காதலை ஏத்துக்கமாட்டாங்க. அது உனக்கும் தெரியும், எனக்கும் தெரியும். அதனால தான் இந்த முடிவு எடுத்திருக்கோம். இப்ப உங்க வீட்ல கோபமா தான் இருப்பாங்க. கொஞ்ச நாள்ல நமக்கு கல்யாணம் பண்ணி குழந்தை பிறந்துட்டா, கண்டிப்பாக நமமளை ஏத்துப்பாங்க… 

கொஞ்ச நாள் தான் இங்க இருப்போம். அப்பறம் சேலத்துக்கே திரும்ப போய்டலாம், கவலைப்படாத!” என்று நீண்டதொரு ஆறுதலை கூறியவன், அவள் பிடித்திருந்த கையில் அழுத்தம் கொடுக்க, திகழ்விழி சற்று தெளிவடைந்தாள். 

ரயிலும் ரயில் நிலையத்தை அடைய, இருவரும் தங்களது உடைமைகளை எடுத்து கொண்டு இறங்கினர். அவர்களைப் பார்த்ததும், “ஹாய் விக்னேஷ்!” என அழைத்துக் கொண்டே ஒருவன் வந்தான். வந்தவன் தமிழ் நாட்டு காரணாக இருந்தாலும் டெல்லி சாயல் நன்றாக தெரிந்தது.  

அவன், “விக்கி ட்ராவல்லிங் சௌகரியமா இருந்துச்சா?” என்க,

விக்னேஷ், “ம்ம்.. டா.. பரவாயில்லை! அவ்ளோ கூட்டமில்லை..” என்றவன், “இது தான் திகழ்விழி, நான் சொன்னேன்ல…” என்றவன் திகழிடம், “இது என் ப்ரண்ட் பாலு…” என்றான். 

திகழ் அவனைப் பார்த்து புன்னகைக்க, பாலுவும் தனது பீடா கறையான பற்களுடன் புன்னகைத்தான்.

விக்னேஷ், “வா திகழ்..” என கைப்பிடித்து அழைத்து சென்றான். மூவரும் வெளியே செல்ல, பாலு ஒரு மகிழுந்து ஓட்டுனரிடம் ஹிந்தியில் ஏதோ சொல்ல, அவர்கள் அந்த மகிழுந்தில் ஏறிச் சென்றனர். சரியாக  சிறிது நேரப் பயனத்தில் அவர்கள் பாலு தங்கியிருந்த உத்தம் நகரை அடைந்தனர். 

ஓட்டுனர் அந்த ஏரியாவின் தொடக்கத்திலே மகிழுந்தை நிறுத்திவிட்டார். 

பாலு, “கொஞ்சம் தூரம் தான் நடக்கணும்..” என்று கூறி நடக்க, அவர்கள் பின் தொடர்ந்தனர். திகழ்விழிக்கு அந்த இடமே வித்யாசமாக இருந்தது.  அங்கே ஹிந்தி மக்களிடையே நடுவே தமிழ்நாட்டினரின் நடமாட்டமும் இருந்தது. அது நடத்தர வர்க்கத்தினர் வசிக்கும் இடம் போல காட்சி அளித்தது.  

நெருக்கி நெருக்கி வீடுகள் கட்டப்பட்டிருந்தது. வெளியே சிறுவர் சிறுமியர் விளையாடிக் கொண்டிருந்தனர். பாலு நடந்து சென்ற வழி நெடிய ரோட்டிலிருந்து பலகிளைகள் விரிந்து செல்லும் குறுகலான பாதைக்கு சென்றது. அந்த இடம் மிகவும் நெருக்கமாக இருந்தது. ஏனோ அந்த சூழல் திகழிற்கு அச்சத்தை ஏற்படுத்தியது. இது போதாதற்கு அவ்வழியில் ஒரு சிறிய சாக்கடை ஓட பாலு லாவகமாக தாண்டி சென்றான். விக்னேஷும் தாண்டி செல்ல திகழ் மட்டும் தேங்கி நின்றுவிட்டாள். 

விக்னேஷ் திரும்பிப் பார்க்க, திகழ் ஒரு அசூகையான முக பாவத்துடன் அவனைப் பார்த்தாள். அவளின் பாவனையை வைத்தே அவளின் எண்ணவோட்டத்தை அறிந்தவன், “திகழ், இன்னும் ரெண்டு நாளுக்கு தான் இங்க தங்குவோம்.. அப்புறம் வேற வீடு பாத்துக்கலாம். இப்போதைக்கு அட்ஜெஸ்ட் பண்ணிக்கோ..” என்றவன் அவளின் கையைப்பிடித்து அந்த சாக்கடையை கடக்க உதவி செய்தான். 

மேலும் சிறிது தூரம் நடந்து அந்த ஏரியாவின் கடைக்கோடியை அடைந்த பிறகே பாலுவின் இருப்பிடம் வந்தது. அது ஒரு சிறிய காலணி. பாலு ஒரு வீட்டின் கதவை சாவியால் திறக்க, அவர்கள் உள்ளே நுழைந்தனர். அந்த வீட்டில் ஒரு சிறிய கூடம், இரண்டு அறைகள், ஒரு சமையலறை இருந்தது. அந்த அறை மிகவும் சிறியது, ஒரு கட்டில் போடுவதற்கு மட்டுமே இடமிருந்தது. வீடு அவ்வளவாக சுத்தமாக இல்லாவிடினும் முகம் சுழிக்க வைக்கவில்லை. 

பாலு, “இதான் நம்ம பேலஸ், கொஞ்சம் சுமாரா தான் இருக்கும், அட்ஜெஸ்ட் பண்ணிக்கோங்க..” என்றான் ஒரு சிரிப்புடன்.  

விக்னேஷ், “திகழ், உனக்கு ட்ராவல்லிங் டையர்ட்டா இருக்கும். போய் ரெஸ்ட் எடுத்துக்கோ..” என்று ஒரு அறையை நோக்கி கைக்காட்ட, எதுவும் சொல்லாமல் அந்த அறைக்குள் நுழைந்து கொண்டாள். 

தனது பெட்டியை ஒரு ஓரமாக வைத்தவள் அந்த கட்டிலில் சாய்ந்து விட்டாள். படுத்து இருந்தாலும் அவள் கண்கள் மூடவில்லை. முதன் முதலில் பயம் ஆட்கொண்டது. ஏதோ தவறு செய்துவிட்ட உணர்வு. பெற்றோரை ஏமாற்றிவிட்டோம். அப்பாக்கிட்ட பேசி சம்மதம் வாங்கி இருக்கலாமோ என்று எண்ணம் தோன்றியது. இந்நேரம் நான் வீட்டில் இல்லை என்பது எல்லோருக்கும் தெரிந்திருக்கும். என்னை தேடும் பணியில் ஈடுபட்டிருப்பார்கள். அம்மா தன்னைக் காணாமல் நிச்சியம் கலங்கி கண்ணீர் விட்டுக் கொண்டிருப்பர். பள்ளி சென்று கொண்டிருக்கும் தனது தங்கை தம்பி என்ன செய்து கொண்டிருப்பர் என்று எண்ணம் அலைமோத அவள் கண்களிலிருந்து தானாக கண்ணீர் வழிந்தது கண்களை மூடிக் கொண்டாள்.

சிறிது நேரத்தில் கதவை திறந்து கொண்டு உள்ளே​ நுழைந்த விக்னேஷ், “திகழ், எழுந்து சாப்டு படுத்துக்கோ..” என்று அவள் தோளைத் தொட, அவள் கண்விழித்தாள். அவளின் முகத்தை பார்த்து அழுதிருக்கிறாள் என்று அறிந்தவன் கோபமாக, “திகழ், மறுபடியும் பயப்பட ஆரம்பிச்சிட்டியா? உனக்கு எத்தனை தடவை நான் சொல்லி புரிய வைக்கிறது. என்மேல உனக்கு நம்பிக்கையே இல்லையா? அப்பறம் எதுக்கு என் கூட வந்த? வா.. உன்னை உங்க வீட்டுல கொண்டு போய் விட்றேன்” என்று அவளின் கைப்பிடித்து விக்னேஷ் அழைக்க,

திகழ் பதறி, “உங்க மேல நம்பிக்கை இல்லாம இல்லை! எனக்கு என்வீட்டை  நினைச்சு தான் கவலையா இருந்துச்சு. இனிமேல் அழமாட்டேன்” என கண்களை துடைத்துக் கொண்டு அவனைப் பார்த்தாள். 

விக்னேஷ் சற்று இளகி போய், “முகத்தை கழுவிட்டு வந்து சாப்பிடு..” என்க, அவள் குளியலறை சென்று முகம் கழுவி வந்தாள். 

திகழ் வந்தவுடன் அவளது கையைப் பிடித்து கொண்டவன், “சாரி திகழ், நீ அழுகுறதை பார்த்ததும் எனக்கு கோவம் வந்திடுச்சு… அதான் அப்படி பேசிட்டேன்..” என்றான். 

திகழ், “என்னங்க.. என்கிட்ட போய் மன்னிப்பு கேட்கிறிங்க… உங்களுக்கு என்னைத் திட்ட இல்லாத உரிமையா?” என்க, அவன் புன்னகையுடன் சாப்பாட்டை அவள் முன் வைத்தான். திகழ் உண்ண ஆரம்பித்தாள். 

அவள் சாப்பிட்டு முடிக்கும் வரை காத்திருந்தவன், “திகழ், நீ ரெஸ்ட் எடு.. நான் பாலு கூட போய் மத்த வேலையெல்லாம் பாக்குறேன்..” என்றான். திகழ் சம்மதமாய் தலையாட்ட, பாலுவுடன் விக்னேஷ் கிளம்பிவிட்டான். மீண்டும் தனிமையில் அவள் எண்ண அலைகள் மோத, முன்பு போல் அல்லாமல் தன் எண்ணங்களுக்கு கடிவாளமிட்டவள் படுத்து கண்களை இறுக மூடிக்கொண்டாள்​. சிறிது நேரத்திலே நித்ரா தேவி கண்களை தழுவ உறங்கியும் போனாள். 

பாலியல் தொழில் என்பது மிகவும் மோசமான, இந்திய கலாசாரத்துக்கு எதிரான செயலாகப் பார்க்கப்படுகிறது. நம் நாட்டில் மறைமுகமாக அங்கீகரிக்கப்பட்ட, பாலியல் தொழில் நடக்கும் இடங்களும் இருக்கத்தான் செய்கின்றன. அப்படி பட்ட இடங்களில் டெல்லியில் பிரபலமான கார்ஸ்டின் பேஸ்டன் ரோடு. ஜீ.பி ரோடு என சுருக்கமாக அழைக்கப்படும் பிரபலமான

சிகப்பு விளக்கு பகுதி. காலையிலே ஆள்நடமாட்டத்துடன் இருந்தது. பெண்கள் அங்குமிங்கும் அளவளாவி கொண்டிருந்தனர்.  அவ்விடத்திற்கு வழக்காமாக வந்து செல்லும் ஆண்கள் மிகவும் சகஜமாக உள்ளே நுழைந்து கொண்டிருந்தனர். சிலர் யாரேனும் பார்த்து விடுவார்களோ என பயந்து முகத்தை துணியால் மறைத்து கொண்டு வந்திருந்தனர்.  

இதற்காகவே இருக்கும் சில ஏஜென்டுகள் கஸ்டமரை அழைத்து வர அங்குள்ள பெண்கள் வரிசையாக நின்றிருக்க, யாரை தேர்வு செய்வது என குழப்ழத்துடன் ஒவ்வொரு பெண்களின் முகத்தை ஆராய்ச்சி செய்தபடி இருந்தனர். 

இத்தனை சத்தங்களுக்கு நடுவிலும் ஓங்கி ஒலித்தது அந்த குரல். குரலுக்கு சொந்தமானவர் காஞ்சனா. அந்த சிவப்பு விளக்கு பகுதியின் தலைவி.  பார்ப்பதற்கு தமிழ் படங்களில் உள்ள வில்லி தோற்றத்தை கொண்டிருந்தார். அவரின் தோற்றமே தமிழ் நாட்டை சேர்ந்தவர்  என அடித்து கூறியது. 

வாயில் கொதக்கு கொதக்கென்று மென்றுக் கொண்டிருந்த பீடாவை எதிலிருந்தவனின் முகத்திற்கு இடமாற்றியவர், “டேய் பேமானி!” என்று ஆரம்பித்து கேட்கவே முடியாத கொச்சையான வார்த்தைகளில் திட்டியவர், “இன்னொரு தபா அந்த வீணாப்போனவன் வீட்டுக்கு ஆள் கூட்டிட்டு போக வந்த,உன்னை அவ்ளோதான்..! ஏற்கனவே ஒருதடவை ஒருத்தி இட்ன்னு போய் ஆஸ்பிட்டல்ல தான் போய் பார்க்குற மாதிரி ஆயிருச்சு. மனுசனா அவன், எப்படி போட்டு கடிச்சு வச்சிருக்கான். காட்டு மிராண்டி பையன்..” என நாலு பச்சையான கெட்ட வார்த்தைகளில் திட்டியவர், “இன்னொரு தபா இட்ன்னு போயும் அதான் ஆச்சு… இப்படியே நடந்துட்டு இருந்தா நாங்க தொழில் பண்ண வேண்டாமா? இனிமேல் எவ்ளோ குடுத்தாலும் அவன் வீட்டுக்கு பொண்ணுங்களை அனுப்ப மாட்டேன்னு போய் சொல்லுடா…” என்று அவனை துரத்திவிட்டு அடுத்த வேலையை கவனிக்க சென்றார். 

இதை எதையும் அறியாத திகழ் விழி அந்த சிகப்பு விளக்கு பகுதியில் உள்ள ஒரு அறையில் துயில் கொண்டிருந்தாள். உள்ளே நுழைந்த காஞ்சனா, “ஏய் சரோஜா! அந்த புதுசா வந்த குட்டி எழுந்திருச்சா?” என்க, 

சரோஜா, “இன்னும் இல்லைக்கா..” என்றாள். 

“இன்னும் இல்லையா? இவ்வளோ நேரமா தூங்குது… போய் மூஞ்சில தண்ணீயை ஊத்தி எழுப்பிவிடு… எந்திருச்சு ஏதாவது கலாட்டா பண்ணினா என்கிட்ட சொல்லு..” என்றார். சரோஜா சரிக்கா எனத் தலையாட்ட, காஞ்சனா அவ்விடத்தை விட்டு அகன்றார்.

சரோஜா உள்ளே சென்று, “இந்தாம்மா பொண்ணு, கண்ணை முழிச்சு பாரு..” என முகத்தில் தட்ட, திகழ்விழி சிணுங்களுடன் கண்விழித்து பார்த்தாள். 

அவளுக்கு ஒரு நிமிடம் தான் எங்கே உள்ளோம் என்பதே தெரியவில்லை. கண்களை கசக்கி விட்டு பார்க்க, இப்போதும் அதே நிலைமை தான். தான் எதிரே நின்ற பெண்ணையும் தெரியவில்லை. திகழ் எதுவுமே புரியாமல் அதிர்ச்சியாக அப்பெண்ணைப் பார்க்க, திகழ்விழியின் கேள்வி உணர்ந்து அவளைப் பார்த்து ஏதோ கூறினாள். அந்த பெண்ணின் பதிலைக் கேட்ட திகழ் விழி முகத்தில் ஏகத்திற்கும் அதிர்ச்சி!

                                             தொடரும்…

சென்ற பதிவிற்கு முகநூல் மற்றும் தளத்தில் கருத்துக்களை பகிரந்து கொண்ட நண்பர்களுக்கு நன்றி! ❤️