“இப்போ நீங்க அண்ணனா, இல்லை ப்ரொபசரா?” என்றாள் சந்தேகமாய்.
“அப்கோர்ஸ் அண்ணன் தான். காலேஜ் டைம் ஓவர்” என்றான்.
“அது..” என்று எதையோ சொல்ல வந்தவள், விஜய் வருவதைப் பார்க்கவும்,
“அண்ணா, இன்னைக்கு ஒரு வாத்து மூக்கன் வாத்தி என்னை படுத்தி எடுத்துட்டார். பச்சைப் பிள்ளை நானு சாப்பிடக் கூட இல்ல. ஒழுங்கா வந்து எனக்கு பப்சும் டீயும் வாங்கிக் குடு” என்றாள் பாவமாய்.
“என்கிட்டையே அவனை மரியாதை இல்லாம பேசுறியா?” என்று சரண் கோபப்பட,
“கொஞ்சம் நிறுத்துறியா? சார் காலேஜ் படிச்ச டைம்ல என்னென்ன பேசுனிங்கன்னு நான் எடுத்து விடவா? என்னமோ வானத்துல இருந்து குதிச்சு புரொபசர் ஆன மாதிரி. நீங்களும் ஸ்டூடண்ட்டா இருந்து தான் வந்திருக்கிங்க. எங்க கஷ்ட்டம் என்னன்னு தெரியாமையா இருக்கும். அதுலயும் நீ பேசுனதை கம்பேர் பண்ணும் போது நானெல்லாம் ஒண்ணுமே இல்லை” என்றாள்.
“அம்மா தாயே தெரியாம சொல்லிட்டேன். உனக்கென்ன டீயும் பப்சும் தான. வா வாங்கித் தரேன்” என்று சரண் சொல்ல, விஜயை முறைத்துக் கொண்டிருந்தாள் வேதா.
“வாத்து மூக்கன் வாத்தியா?” என்று அதிர்ந்த விஜய் “இவளை” என்று பல்லைக் கடித்துக் கொண்டிருந்தான்.
“அப்பறம் இன்னைக்கு அகரன் அவன் பிரண்ட் கூட வெளிய போறேன்னு சொன்னான்.” என்றாள்.
“என்கிட்டயும் சொன்னான். நீ வேணும்னா விஜய் கூட வீட்டுக்கு போயேன். நான் அண்ணியை பிக்கப் பண்ணிட்டு வீடு வர லேட் ஆகிடும்டா” என்றான் சரண்.
“ஆத்தி எப்படி கோர்த்து விடுறான் பார்” என்று நினைத்தவள்,
“அவருக்கு எதுக்கு சிரமம். யாராவது பார்த்து ஏதாவது சொல்லிட்டா சங்கட்டமா போய்டும். அவருக்குத்தான் எதுவும் வெளியே தெரியறதில் இஷ்ட்டமில்லையே” என்று சைடு வாக்கில் குத்தினாள்.
ஏற்கனவே கோபத்தில் இருந்தவனுக்கு வேதாவின் பேச்சு மேலும் கோபத்தைத் தூண்ட, அடக்கிக் கொண்டு, எதுவும் பேசாமல் காரை எடுக்க சென்றான்.
“சும்மா விளையாடாத வேதா. ரெண்டு பேரும் ஒரே இடத்துக்குத்தான போறீங்க? அவனா உன்னை சுமக்க போறான். கார் தான சுமக்க போகுது. நீ இன்னைக்கு விஜய் கூட போ.” என்றான் சரண்.
“எங்க அவர் தான் போயிட்டாரே” என்றாள் குறையாக.
“நீ ஏறாம கார் கேட்டைத் தாண்டாது. அதுக்கு நான் கியாரண்டி” என்று மனதிற்குள் நினைத்தவன்,
விஜயின் காரை மறித்த சரண்,
“விஜய் சார்..! இவ என் தங்கை. எனக்கு அவசரமா வெளிய கொஞ்சம் வேலை இருக்கு. இவளை எங்க வீட்ல கொஞ்சம் டிராப் பண்ணிட முடியுமா?” என்றான் பவ்யமாய்.
“எதுக்கு இப்படி பம்முறான்” என்று விஜய் யோசிக்க, வேதாவும் ஏன் என்று புரியாமல் முழித்தாள். பிறகு பின்னால் பார்க்க, அவளுடன் படிக்கும் சில மாணவர்கள் அங்கிருந்தனர். அதில் லயாவும், ஹரிணியும் அடக்கம்.
“இதையெல்லாம் கேட்கணும்னு என் நேரம்டா சாமி” என்று தலையில் அடிக்காத குறையாக சென்றாள் வேதா.
“ஹேய் லயா, என்னடி இந்த வேதா விஜய் சார் கூட போறா?” என்றாள் ஹரிணி.
“அதான் கேட்டுட்டு தான நின்ன. சரண் சார் அவர் தங்கைக்கு லிப்ட் கேட்டதை. அப்பறம் என்ன கேள்வி?” என்றாள் லயா எரிச்சலுடன்.
“இருந்தாலும் விஜய் சார் யார் கூடவும் பேசக் கூட மாட்டாரே. இன்னைக்கு இவளுக்கு எப்படி லிப்ட் எல்லாம் குடுக்குறார்?” என்ற ஹரிணிக்கு அதிர்ச்சி இன்னமும் போகவில்லை.
“கூட வேலை பார்க்குற ஸ்டாப் கேட்ட, மாட்டேன்னா சொல்ல முடியும். அதான் விஜய் சார் ஹெல்ப் பண்றாரா இருக்கும். நீ உன் சந்தேகத்தை எல்லாம் மூட்டை கட்டி வை. எப்படியோ இன்னைக்கு அவ பேச்சு வாங்கி நின்னதே எனக்கு பேரானந்தமா இருக்கு” என்று மகிழ்ந்திருந்தாள் லயா.
“இப்பவும் சொல்றேன். இந்த வேதாவை பட்டிக்காடுன்னு லேசா எடை போடாதே. ஷி ஸ் வெரி பிரிலியண்ட். அப்பறம் சரண் சாரும் விஜய் சாரும் பிரண்ட்ஸ் தான? இப்ப ஏன் இப்படி பார்மலா பேசிக்கிறாங்க?” என்றாள் ஹரிணி.
“போதும் ஹரிணி..! அவங்க எப்பவுமே கேம்பஸ்குள்ள பார்மலா தான் பேசிக்குவாங்க.” என்றவள்
“அப்பறம் அந்த வேதா புராணத்தையும் நிப்பாட்டு. அவ ஒரு ஆளுடான்னு.” என்று லயா பேச்சை முடித்து சென்றாள்.
அங்கே விஜயுடன் சென்று கொண்டிருந்த வேதாவோ,
‘அய்யோ..! பசிக்குதுன்னு சொன்னேன். பப்சும் டீயும் வாங்கித் தர்றேன்னு சொல்லிட்டு அம்போன்னு அனுப்பி விட்டுட்டான்.” என்று விஜயை ஓரக்கண்ணால் பார்த்தவள் சலித்தாள்.
“இவரு வேற? எப்ப பார்த்தாலும் மூஞ்சிய விறைப்பா வச்சு சுத்திகிட்டு.” என்று நொந்தவள்,
‘பசிக்கு பாவமில்லை. இதுல என்ன ரோஷம் வேண்டி கிடக்கு. ரோஷமா சோறான்னு பார்த்தா, நமக்கு சோறு தான் முக்கியம்’ என்று நினைத்தவள்,
“விஜய் சார்..!” என்று இழுத்தாள்.
“என்ன?” என்பதைப் போல் பார்த்து வைத்தான். முறைத்து வைத்தான் என்று சொன்னால் தான் சரியாக இருக்கும்.
அவன் அப்படி அவளிடமே நேரடியாக கேட்பான் என்று எதிர்பார்க்காதவள்,
“உங்க நோஸ் ரொம்ப ஷார்ப்பா இருக்குல்ல.வாத்துக்கும் அப்படித்தான இருக்கும். அதான் அப்படி சொன்னேன்” என்று எதையோ சொல்லி மழுப்பிக் கொண்டிருந்தாள்.
‘எப்படி சமாளிக்கிறா பார்’ என்று எண்ணியவன் அமைதியாக காரை ஒட்டிக் கொண்டிருக்க, அவனை ஓரக்கண்ணால் அவ்வப்போது பார்த்துக் கொண்டு வந்தவளுக்கு, பசியெல்லாம் இருந்த இடம் தெரியாமல் சென்றிருந்தது.
கோபக் கவசத்தை கழற்றி வைத்துவிட்டு பார்த்தால், பிடிக்காதது என்று அவனிடம் எதுவும் இல்லை. அவனைத் தலையிலிருந்து பாதம் வரை ஆராய்ந்தவள்,