“நீங்க என்கிட்ட எதையாவது மறைக்கிறீங்களா?” என்று சட்டென கேட்டதும் பால் அருந்தி கொண்டிருந்தவனுக்கு புரை ஏறியது ஒருவழியாய் இருமலை சீர் செய்து நிதானித்து கொண்டவன்
“என்ன கேட்ட உன்கிட்ட நா எதையாவது மறைக்கிறேன்னா” என்று எழுந்து கொண்டவன் கிளாஸை ஓரமாய் வைத்துவிட்டு அவள் கைப்பற்றி “உன்கிட்ட நா எதையும் இதுவரைக்கும் மறைக்கல மறைக்கவும் மாட்டேன் ஆனா ஒன்னும் மட்டும் சொல்றேன் உன்கிட்ட நா எதையாவது மறைகிக்றேன்னு உனக்கு தோணுனா..! அதுக்கு ஏதாவது காரணம் இருக்கும்னு மட்டும் புரிஞ்சுக்கோ தேவிம்மா, யார் என்ன பத்தி என்ன நினைச்சாலும் அத பத்தி துளியும் கவலை பட மாட்டேன் ஆனா நீ!” என்று நிறுத்தியவனுக்கு தொண்டை அடைக்க சரி செய்து கொண்டு மீண்டும் தொடர்ந்தான் “நீ மட்டும் என்ன புரிஞ்சிகலன்னா என்னால தாங்கிக்க முடியல தேவிம்மா” என்று வேதனை கலந்த குரலில் கூற
அவன் முகத்தையே கண்கொட்டாமல் பார்த்து கொண்டிருந்தவள் “இன்னைக்கு காலையில மாமா கால் பண்ணி அடுத்த வாரம் கிளம்பி வர சொன்னாங்க”
“போய்ட்டு வா” என்று ஒற்றை வரியில் முடிக்க
“நீங்க வரலையா? நீங்க மட்டும் இங்க எப்டி தனியா இருப்பிங்க!”
“நா அங்க வந்தா எல்லாருக்கும் மனவருத்தம் தான் மிஞ்சும் யாரும் சந்தோசமா இருக்க மாட்டாங்க என்ன தான் யாருக்கும் பிடிக்காதே!, நீ மட்டும் போய்ட்டு வா எல்லாரையும் கேட்டேன்னு சொல்லு” அவன் குரலில் அத்தனை விரக்தி
அவன் பேச பேச அவள் மனம் வேதனையை உள்வாங்கி கொள்ள “உங்களையும் வர சொல்லிருக்காங்க நீங்க இல்லாம எப்டி அதுவும் சித்திரை திருவிழாவுக்கு, நீங்க கண்டிப்பா வரணும்னு அம்மாவும் சொல்லிருக்காங்க நீங்க வர மாட்டேன்னு சொன்னா அம்மா வருத்தபடுவாங்க அப்றம்…” என்று தயங்கியவள் “மாமா உங்ககிட்ட ஏதோ பேசனுமாம் அதனால கண்டிப்பா நீங்க வரணும்னு சொன்னாங்க விணு” என்று கூறிவிட்டு வேதனை கலந்த அவன் முகத்தை காண சகிக்காது விறுவிறுவென சென்று விட
சிந்தையில் எழுந்த சிந்தனையுடன் படுக்கையில் விழுந்தான் விஷ்ணு “தன் தந்தை வர சொன்னதற்கு ஏதேனும் முக்கிய காரணம் இருக்கும் இனி தன் முகத்தில் விழிக்க கூடாது என்றவர் அழைக்கிறார் என்றால் பெரிய விஷயமாக தான் இருக்கும்” என்று எண்ணி கொண்டவன் தன் சிந்தனையை ஒதுக்கி விட்டு அலைபேசியில் யாருக்கோ அழைப்பு விடுத்து சொல்ல வேண்டிய விஷயத்தை கூறி விட்டு ஆயசமாய் விழிகளை மூட நித்திரை சிறிதும் அவனை தழுவவில்லை
“தனக்கு மட்டும் இந்த மாதிரியான சூழ்நிலை நேரவில்லை என்றால் இந்நேரம் தேவியுடன் திருமணம் முடிந்து என் மனைவியாக இறுதிவரை வாழ்வின் சாராம்சமாக…” என்று இன்னும் என்னனோவோ எண்ணியவன் ஏக்க மூச்சை வெளியிட்டு கண்களை மூடி உறக்கத்தை இரவல் வாங்க தொடங்கினான்.
சித்திரை மாதத்தின் முதல் நாள் என்பதை விட அவளுக்கு மிகவும் விசேஷமான நாள் என்றே கூறலாம், அதுவும் அன்று திருவோண நட்சத்திரம் என்பதால் கோவிலில் பெருமாளுக்கு சிறப்பான அபிஷேகங்களும் ஆராதனைகளும் நடக்கும், சில்லென்ற பனி காற்று மனதை குளிர்விக்க அதிகாலையில் சீக்கிரம் எழுந்து கொண்டவள் முற்றம் தொளித்து கோலமிட்டு குளித்து முடித்தவள் அருகில் இருந்த பெருமாள் கோவிலுக்குள் நுழைய ஏகாந்தமாய் செவிகளை நிறைத்தது திருப்பாவையின் பாசுரம்
ஒலிபெருக்கியில் ஒலித்து கொண்டிருந்த”மார்கழித் திங்கள்” என்று தொடங்கிய பாசுரத்தில் மனம் லாயிக்க கண்களை மூடியபடி தன் மனம் கவர்ந்த மணாளனை எண்ணி ரசித்து கொண்டிருந்தாள் பாவை அவனின் பால்ய நினைவுகளில் மனம் மூழ்க மனமும் தேகமும் குறுகுறுப்பில் ஆழ்த்தியது ஏதோ ஒன்று ரசனையை இடையூறு செய்ய விழிகளை திறந்தவளின் எதிரில் தன் மனம் கவர்ந்த நாயகன் ராமனாய் வேஷ்டி சட்டையில் வண்ணமாய் புன்னகைத்தபடி நின்றிருந்தான்
படபடவென இமைகள் வியப்பில் அடித்து கொள்ள வியப்பை மறைத்து கொண்டு எதிரில் இருப்பவனை கண்டு கொள்ளாமல் எழுந்து செல்ல அவள் பின்னோடு அவனும் சென்றான் அர்ச்சனை தட்டை ஐயரிடம் நீட்டியவள் “பேர் விஷ்ணு திருவோணம் நட்சத்திரம் மகர ராசி” என்று கூறிவிட்டு கண்களை மூடி உலகளந்தவனை தரிசிக்க வலியுடன் அவளையே பார்த்து கொண்டிருந்தான் விஷ்ணு
“அவள் அறிந்த விஷயம் தான் இன்று என்ன நாள் என்பதும் தான் கோவிலுக்கு வருவோம் என்றும் தெரிந்திருக்கும் அவனுக்கு” என்று எண்ணியவள் ஐயர் கொடுத்த பிராசத்தை வாங்கி தன் நெற்றியில் இட்டு கொண்டு அவனிடம் அனுமதி கேட்காமலே வெற்றிடமான நெற்றியில் வைத்துவிட்டு பிரகாரத்தை சுற்றி வந்து தூணின் ஓரத்தில் சம்மணமிட்டு அமர்ந்து கொள்ள
அதுவரை அவள் பின்னொடு தொடர்ந்தவன் எதிரில் அமர்ந்து “இன்னைக்கு என்ன விசேஷம் தேவிம்மா அரச்சனையெல்லாம் பலமா இருக்கு” என்று தெரிந்தும் தெரியாது போலவே கேட்க
“ஏன் இன்னைக்கு என்ன நாள்ன்னு உங்களுக்கு தெரியாதா!”
“தெரியலன்னு தானே உன்கிட்ட கேக்குறேன்”, என்ன கூறுவாள் என்று அறிவதற்காக ஆவல் கொண்டு மனம் உந்தியது
“என்னோட மாமாக்கு பிறந்த நாள் அதான் அர்ச்சனை பண்ண வந்தேன் நீங்க வேணா பத்தோட பதினொன்னா இதையும் மறந்துருக்கலாம்! ஆனா என்னால எதையும் மறக்க முடியாது விணு நா கிளம்புறேன் வந்து ரொம்ப நேரம் ஆச்சு” என்று எழுந்து கொண்டவள் தயங்கியபடி அவன் முகத்தை பார்த்து “மாமா.. நா.. கேக்குறதுக்கு உண்மை..யான பதிலை சொல்லுங்க கோயில்ல வச்சு கேக்குறேன் பொய் சொல்ல கூடாது” என்று பலமான பீடிகையுடன் கேட்க
நிதானமாக எழுந்து கைகளில் படிந்த தூசை தட்டிவிட்டு “நீ முதல கேளு உண்மைய சொல்லவா இல்ல பொய் சொல்வான்னு நீ கேக்குற கேள்விய பொறுத்து சொல்றேன்” என்று கூற
“நிஜமாவே என்ன உங்களுக்கு பிடிக்கலையா? பிடிக்காம தான் கல்யாணத்துக்கு சரின்னு சொன்னிங்களா? கல்யாணத்தை நிறுத்த வேற வழி தெரியாம தான் எனக்கு தூக்க மாத்திரை கலந்து கொடுத்திங்களா?” என்று கண்களில் ஏக்கத்தை தேக்கி கொண்டு ஒவ்வொரு கேள்வியிலும் அவன் பதிலை ஆர்வத்துடன் கேட்க காதை தீட்டிவைத்து அவன் முகத்தை பார்த்த வண்ணம் இருந்தாள் வைதேகி
அவளின் திடீர் கேள்வியில் திகைத்தவன் “இதுக்கு உண்மைய சொல்லவா? இல்ல பொய் சொல்லவா? தேவிம்மா” என்று அவளிடமே கேள்வியை தொடுக்க
“எதுவா இருந்தாலும் பரவாயில்ல உண்மைய மட்டும் சொல்லுங்க எனக்கு சாதகமா பதில் வந்தா சந்தோஷப்படுவேன் இல்லையா உங்கள நினைச்சுக்கிட்டே கடைசி வரைக்கும் வாழ்ந்துட்டு போறேன் உண்மைய மட்டும் சொல்லுங்க மாமா” என்று வேதனை குரலில் ஊக்கினாள்
சரேலென முகத்தை திருப்பி கொண்டான் விஷ்ணு அவள் முகத்தை பார்த்து விஷயத்தை கூறும் அளவிற்கு அவனுக்கு இன்னும் தைரியம் வரவில்லை காவலனாய் இருந்த போது உண்டான கம்பிரம் காதலானாய் மாறியதும் அவை அனைத்தும் பிடரியில் அடிபட்டதை போல தெறித்து ஓடி மறைந்து கொண்டது, அதே நேரம் அவள் கண்களை கண்டால் பேச்சு கூட வர மறுக்கிறது என்று திரும்பி நின்று கொண்டு கூறலானான் “உன்ன எனக்கு பிடிக்கும் தேவிம்மா! ஆனா… எந்த அளவுக்குன்னு சொல்ல தெரியல? உன்ன கல்யாணம் பண்ணிக்க வீட்டுல சம்மதம் கேட்டதும் அப்ப நா அனுபவிச்ச சந்தோஷம் இருக்கே வார்த்தையால சொல்ல முடியாது” என்று சன்னமாய் சிரித்து கொண்டவன்
“நீ சமைஞ்சதும் வெக்கத்தோட என்ன பாத்தையே அந்த முதல் பார்வை! அந்த பார்வைக்கு ஈடு இணையே இல்ல அத என்னைக்கும் என்னால மறக்க முடியாது ஏன்னா! அன்னையில இருந்து தான் எனக்குள்ள ஒரு மாற்றம்! என்கிட்டயே பல தடவை என்னவா இருக்கும்னு கேட்டு பாத்துகிட்டேன் அப்ப தான் என்னோட மனசு சொல்லுச்சு உன்ன நேசிக்க ஆரம்பிச்சுட்டேன்னு எப்டி என்னனு காரணம் கேட்டா.. இப்போ கூட எனக்கு சொல்ல தெரியல”, ரசனையுடன் ஒவ்வொரு வரியிலும் காதலை நிறைத்து கூறியவன்
“உன்கிட்ட சொன்னது இல்ல!, முதல என்னோட லட்சியம் அது நிறைவேறுற வரைக்கும் எதையும் வெளிக்காட்டிக்க கூடாதுன்னு எனக்கு நானே சொல்லிப்பேன் அதெல்லாம் உன்ன பாக்குற வரைக்கும் தான்! உன்ன பாத்ததும் என்னோட கனவு லட்சியம் எங்க போகும்னே தெரியாது அதனாலயே உன்ன பாக்க கூடாதுன்னு எனக்கு நானே தீர்மானம் எடுத்துகிட்டேன்”
“அதனால தான் படிப்பு முடிச்சதுமே அப்பாவுக்கு பிடிக்கலைன்னாலும் அவருக்கு தெரியாம கஷ்டப்பட்டு எக்ஸாம் எழுதி ட்ரெய்னிங் அகாடமியில சேந்தேன், வீட்டுக்கு வா வான்னு கூப்பிடுவீங்களே நா வராததுக்கு காரணம் நீ தான் தேவிம்மா! முதல என்னோட லட்சியம் அப்றம் தான் கல்யாணம்னு முடிவோட இருந்தேன், லட்சியத்துல வெற்றியடைஞ்சுட்டேன் ஆனா… கல்யாண வாழ்க்கையில! தோத்துட்டேன் தேவிம்மா சொல்ல முடியாத காரணம்!, என்ன காரணம்னு மட்டும் கேக்காத என்னால இப்போ எதையும் சொல்ல முடியாது” என்று தன் வரையறுக்க முடியா காதலை சொல்லி முடித்தவன் அவள் முகம் காண கண்களில் நீர் நிறைய நின்றிருந்தாள் பெண்ணவள்
விழிநீரை துடைத்து விட்டவன் “போதுமா! இல்ல இன்னும் ஏதாவது சொல்லானுமா!”
“இது போதும் மாமா இந்த ஜென்மத்துக்கு இது போதும்!” என்று புன்னகையும் அழுகையும் ஒன்றுசேர கூறியவள் “நீங்க என்ன கல்யாணம் பண்ணிக்கலனாலும் பரவாயில்ல நீங்க என்ன நேசிக்கிறேன்னு சொன்ன இந்த ஒரு வார்த்தை போதும்” என்று கண்ணீருடன் புன்னகை மலர கூறியவள் கோவில் என்றும் பாராமல் அவன் கன்னத்தில் இதழ் பதித்துவிட்டு நடையில் துள்ளலுடன் சென்றாள்
அவள் புன்னகையுடன் செல்வதை கண்டவனுக்கு மனதில் ஈட்டியை கொண்டு துளைப்பது போன்ற வலி உண்டானது அவளின் ஈடுஇணையற்ற புன்னகையை சிதைக்க அவன் மனம் துளியும் விரும்பவில்லை “உன்னுடன் வாழ எனக்கு கொடுத்து வைக்க வில்லை பெண்ணே” என்று எண்ணியவன் பெருமூச்சை வெளியிட்டு கோவிலில் இருந்து வெளியே வர
அவன் அலைபேசி சிணுங்கியது எடுத்து காதில் வைத்தவன் “அப்டியா! ஓகே இன்னும் பதினைஞ்சு நிமிஷத்துல அங்க இருப்பேன் எதுக்கும் ரெண்டுபேரும் ஜாக்கிரதையா இருங்க நா துவாரகாவ கூட்டிட்டு அங்க வந்துடுறேன்!” என்று தொடர்பை துண்டித்துவிட்டு இல்லம் விரைந்தான் விஷ்ணு
வாசலை நோக்கியபடி தவிப்புடன் நின்றிருந்தார் சாவித்ரி அவர் பதட்டத்துடன் இருப்பதை கண்டு “என்ன அத்தை ஏ வாசல்ல நின்னுட்டு இருக்கீங்க” என்று கேட்கவும்
“உன்கிட்ட சொல்ல வேண்டிய அவசியமில்ல உன்னோட வேலைய பாத்துட்டு போடா” என்று கடிந்து கொண்டவர் வாசலை தவிப்புடன் பார்க்க
உள்ளே சென்றவன் “என்னாச்சு மாமா அத்தை ஏன் பதட்டமா இருக்காங்க” என்று சாவித்ரியை திருப்பி பார்த்தவாறு கேட்க
“வைத்தி கோயிலுக்கு போனாப்பா போயி ரொம்ப நேரம் ஆகுது இன்னும் காணோம் நீயும் கோயிலுக்கு தானே போன அவ எங்கடா?”
“என்ன மாமா சொல்றிங்க! அவ எனக்கு முன்னாடியே வீட்டுக்கு போறேன்னு வந்துட்டாளே இன்னும் வரலையா?” என்று அதிர்ச்சியடைந்தவன் அவள் அலைபேசிக்கு அழைப்பு விடுக்க அழைப்பு ஒலி போய் கொண்டே இருந்ததே தவிர எடுத்த பாடில்லை “எங்க போயிருப்பா..” என்று தவிப்புடன் யோசனை செய்தபடி மீண்டும் மீண்டும் அவள் அலைபேசிக்கு அழைப்பு விடுத்தான் “பிக்கப்! பிக்கப்! போன எடு தேவிம்மா!” என்று முணுமுணுத்தவனுக்கு எந்த வித பதிலும் இல்லை தவிப்புடன் அலைபேசியை வெறிக்க தொடங்கினான் விஷ்ணு.