இங்கிருந்து மதுவும், “ஆமாடா உங்க அப்பாக்கு என்னையும் என் ப்ரண்டையும் திட்றதே வேலை தான், சின்னத்திலிருந்து நாங்க ரெண்டு பேரும் சேர்ந்து இருந்தா உங்க அப்பாவிற்கு பிடிக்கவே பிடிக்காது”. என்றாள்,

     “ஏம்பா”, என்று நிலா கேட்க உடன் ,

   ‘இதை இவளுக்கு எப்படி நான் சொல்லுவேன்’ என்று யோசித்தவன் மதுவை பார்த்து முறைக்க.,

     மதுவும் “நிலா அது சின்ன வயசுல ஒரு கேம் சரியா”, என்று சொல்லி விட்டு “நீ போய் தாத்தா ரெண்டு பேரும் வெளியே போயிருக்காங்க, என்னன்னு பாரு”, என்று அனுப்பினாள்.

  இரண்டு மாதத்திலே விஷயம் வெளியே தெரிந்ததால் பேசி முடித்தனர். ஆனால் திருமணம் மட்டும் ஒரு வருடம் கழித்து வைக்கலாம் என்று முடிவுக்கு வந்தனர்.

     அப்போது சிவாவிடம் “ஒழுங்கு மரியாதையா ட்ரீட் வை, இல்லாட்டி உனக்கு இருக்கு பாத்துக்கோ, வேலைக்கு போனதுக்கு நீ இன்னும் எனக்கு ட்ரீட் தரலை”, என்று கேட்டவள் சரணின் முன்வந்து நின்றாள்.

அவனும் ‘இவ எதுக்கு திடீர்னு நம்ம கிட்ட வந்து நிற்கிறா’, என்று யோசித்தபடி,

    “என்ன வேணும் மேடம், அது தான் நீங்க நினைச்சதை சாதிச்சிட்டீங்க இல்ல, அப்புறம் என்ன”, என்று கேட்டான்.

    “நீங்களும் தான் என் படிப்பை கெடுத்து, நீங்க நினைச்சதை சாதிச்சிட்டீங்க, அதை என்ன நாங்க சொல்லவா செய்யுறோம்”என்றாள்.

    அவளையே பார்த்த படி இருந்தவன், “இப்ப என்ன வேணும் மேடம்”, என்றான்.

   இவளும் அவனையே பார்த்து இருந்தவள், “நான் பிஜி படிக்கணும்னு ஆசைப்பட்டேன், அது ஞாபகம் இருக்கா” என்று கேட்டாள்.

   “ஆசைப்பட்ட இல்லன்னு யாரு சொன்னா, ஆனா அதுக்கப்புறம் பேபி வந்துச்சு, பேபி வளர்க்க வேண்டியது வந்துச்சுன்னு, அப்படியே டவுன் ஆயிடுச்சு”, என்று சொன்னான்.

      “நோ இப்ப நான் படிக்கணும்,நிலாவ ஸ்கூல் சேர்க்கும் போது என்னை காலேஜ் சேர்த்து விடுங்க”, என்றாள்.

     “காலேஜா நோ, கரஸ்ல படி”, என்று சொன்னான்.

இவளும் அவனை பார்த்து, “இதெல்லாம் போங்கு ஆட்டம் தெரியுமா”, என்றாள்.

அவனும் சிரித்தபடி படி, “காலேஜ் அப்புறம் பார்ப்போம்”, என்று சொன்னவன்,  “படிச்சிடுவ இல்ல”, என்று கேட்டான்.

   “பிள்ளைக்கு 3 1/2 வயசு தான் ஆகுது, ஆறு வயசுக்குள்ள முடிச்சிடுவேன்”, என்று சொன்னாள்.

     “ஒருவேளை அடுத்த பேபி வந்துருச்சுன்னா”, என்று கேட்டான் .

    இவளோ அவனைப் பார்த்து,  “சோ நீங்க ப்ளான் பண்ணி தான், பண்ணிட்டு இருக்கீங்க இல்ல”, என்றவள். “கொன்னுபோடுவேன், இந்த தடவை என்ன ஆனாலும் சரி, நான் படிக்கிறேன்”, என்று சொல்லிக் கொண்டிருந்தாள்.

     நாட்கள் சடுதியில் மறைவதாக தான் தோன்றியது, சிவாவிற்கும் நந்தினிக்கும் திருமணம் செய்யும் போது நந்தினி பரீட்சையில் முதல் கட்ட தேர்வில் பாஸாகி, இரண்டாம் கட்ட தேர்வு எழுதி இருந்தாள். பரிட்சை முடிவுக்காக காத்திருந்த நேரத்தில் திருமணம் பேசி முடிக்கப்பட்டது.

    அந்த நேரத்தில் மதுவும் நான்கு மாத வயிற்றுப் பிள்ளையோடு இருக்க, இன்னும் படிப்பு முடிய 8 மாதங்கள் இருக்கும் சூழ்நிலையில்,  ‘எப்படி எழுதுவேன்’ என்று யோசனையோடு அவ்வப்போது சரணை முறைக்க தவறவும் இல்லை, படிப்பை முடித்தே ஆகணும் என்று முடிவோடு இருந்தாள்.

   திருமணத்திற்கு முன்பே நந்தினியிடம் குடும்பத்தினர் பேசியிருந்தனர்.

    “சிவா மது இருவரின் நட்பும் இதே போல இருக்க, அவளின் துணையும் வேண்டும், ஏனெனில் சரண் இருவரையும் புரிந்தவன், இருவரும் பேசுவதோ விளையாடுவதோ வீட்டினர் கண்களுக்கு தவறாக தெரியாது,

      ஏனெனில் இருவரும் சிறுவயதிலிருந்தே இப்படியே பார்த்திருந்ததால், அது அவர்களுக்கு பழக்கம், அதுபோல நீயும் ஏற்றுக்கொள்ள முடியுமா” என்று நந்தினியிடம் கேட்டனர்.

“அவர்களை நானும் பள்ளிக்காலத்தில் இருந்து பார்த்துக் கொண்டு தான் இருக்கிறேன் ண்ணா, அது மட்டுமல்லாமல் கல்லூரி காலத்தில் இவர்களுடைய நட்பை தெரிந்தவர்கள், இவர்களைப் பார்த்து பொறாமை பட்டவர்கள் தான் அதிகம், இருவரின் நட்போடு சேர்த்து அவர்களுக்குள் இருக்கும் நிஜமான அன்பும் சேர்ந்து தான் இப்படி இருக்கிறார்கள்,  அது மாறுவதற்கு நான் காரணமாக இருக்க மாட்டேன்”, என்றாள்.

     “இந்த ஒரே தட்டில் சாப்பிடுற பழக்கம் கூட இன்னும் இருக்கு, தெரியுமா” என்று சரண் அம்மா கேட்டார்.

      “தெரியும், அன்னைக்கு வெளியே போய் இருக்கும் போது கூட, சிவா டேஸ்ட் பார்த்து நல்லா இருந்தா மட்டும் தான் மதுவிற்கு கொடுப்பான், அவளுக்கு என்ன பிடிக்கும் பிடிக்காது ன்னு, மதுவோட அம்மாக்கு தெரிஞ்சத விட, சிவாவிற்கு நல்ல தெரியும்”,என்றாள்.

      “அப்போ மதுவோட ரசனை டேஸ்ட் எதுவும் எனக்கு தெரியாதா”என்று கேட்டான்.

       ‘எல்லாருக்கும் அவளைப் பற்றி தெரியும், ஆனால் சிவாக்கு தெரிஞ்ச அளவிற்கு தெரியாது அண்ணா, அவங்க ப்ரண்ட்ஸிப் பார்த்தா சின்னதா பொறாமை வரும் ண்ணா, ஸ்கூல் டைம் ல டிச்சர்ஸ் இவங்கள டூவ்ண்ஸ் ன்னு தான் சொல்லுவாங்க”,என்றாள்.

     சரணும் சிரித்தபடி “எனக்கே அந்த டவுட் அடிக்கடி வரும், இவன் என்னோட பிறந்தானா, இல்ல அவளோட பிறந்தானா ன்னு “, என்றான்.

     எப்போதும் போல சிவாவும் மதுவும் சேர்ந்து அவ்வப்போது ஏதாவது செய்து விட்டு சரணிடம் பஞ்சாயத்துக்கு நிற்கும்போது இருவரும் சரணை கலாய்ப்பது இப்போது குறைந்திருந்தது.,

    காரணம் சரணுக்கு துணையாக நந்தினி நின்றிருந்தாள், இவர்கள் இருவரையும் அவன் விசாரிக்கும் போது இவள் வேறு பழைய விஷயங்களையும் சேர்த்து போட்டுக் கொடுக்க, அங்கு விசாரணை கமிட்டி பெரிசாக தொடங்கியது.

     இவளோ சிவாவிடம் “டேய் இங்க பாரு, உன் பொண்டாட்டிய வாய மூடிட்டு இருக்க சொல்லு, இல்லாட்டி என்கிட்ட அடி வாங்கிடுவா பாத்துக்கோ, வேலைக்கு இன்னும் அப்பாயின்மென்ட் ஆர்டர் கையில வாங்கல., கவுன்சிலிங் மட்டும் தான் முடிச்சிட்டு உட்கார்ந்துட்டு இருக்கா, பார்த்து சொல்லி வையி”, என்று சொன்னாள்.

    அவனும் “ஏய் நீ வேற நான் சொன்ன மாதிரியே ஆகிப்போச்சு பாத்தியா, எங்க அண்ணனாவது தோப்புக்காரணம் போட்டான், நான் போய்  கால்ல விழுந்து சரண்டர் ஆக  வேண்டியதா  இருக்கு,  எப்படியோ சமாளிக்கிறேன் போ”, என்று சொன்னான்.

       இவளோ “நீ தானடா ஆசைப்பட்ட, இந்த பொண்ணு தான் வேணும்னு, கேட்ட இல்ல , அதுதான்  அனுபவி”, என்று சொன்னாள்.

   நந்தினி “அண்ணா அண்ணா அங்க பாருங்க, ரெண்டு பேரும் ரகசியம் பேசிட்டு இருக்காங்க”, என்றாள்.

   சரணும் “இது ரெண்டுக்கும் இதே பொழப்பு தான், இவங்க ட்ட பேசுவதே வேஸ்ட்”, என்று சொன்னான்.

   இவளோ “நீங்க பஞ்சாயத்து தலைவரா இருந்து வேஸ்ட்” என்று சத்தமாக சொன்னாள்.

   “என்ன பார்த்தா உனக்கு பஞ்சாயத்து தலைவர் மாதிரி இருக்கா”, என்று கேட்டான்.

  “ஹலோ கோர்ட்ல மட்டும் தான் உங்களுக்கு தீர்ப்பு சொல்ல முடியும், இங்க எல்லாம் தீர்ப்பு உங்க தீர்ப்பு செல்லுபடி ஆகாது, போங்க போங்க”, என்று சொன்னாள்.

   வயிற்றில் 8 மாத கருவோடு நின்றிருந்த மதுவை அதற்கு மேல் அவனாலும் எதுவும் சொல்ல முடியவில்லை, நந்தினியாளும் எதுவும் சொல்ல முடியவில்லை,

    ஆனால் இருவரும் திட்டு வாங்கியதற்கு காரணம் மது ஆசைப்பட்டால் என்று ரோடு கடையில்  அவள் கேட்டதை வாங்கி வந்தான் என்பதற்காக தான் இந்த பஞ்சாயத்து,

     ஏற்கனவே 10 நாளுக்கு முன்பு தான் அதிக  சளி இருமல் வந்து கஷ்டப்பட்டு வந்திருந்தாள்,  இவளுக்கு எந்த பாதிப்பும் வந்து விடக்கூடாது என்று யோசித்து இருக்க, இவ்வளோ ரோடு கடை உணவை வாங்கி உண்டதை கண்டித்துக் கொண்டிருந்தனர்.

   மதுவின் அம்மாவும், சரணின் அம்மாவும் அவளுக்கு கசாயம் தயாரித்துக் கொண்டிருக்க.,

    நந்தினியோ “உட்கார்ந்து ஒழுங்கா மருந்தை குடி., இப்பதான் இருமல் குறைஞ்சிருக்கு, மறுபடி இதெல்லாம் சாப்பிடுற” என்று சொல்லிவிட்டு சிவாவிடம் சத்தம் போட்டுக் கொண்டிருந்தாள்.

     “அவ எது கேட்டாலும் வாங்கி கொடுத்துடுவீங்களா, கொஞ்சம் கூட யோசிக்கவே மாட்டிங்க, அந்த பெரிய வயிறை பிடிச்சிட்டு இறும்பும் போது எவ்ளோ கஷ்டப்பட்டா,  அதெல்லாம் மறந்து போச்சா, அவ எது கேட்டாலும் உடனே வாங்கி கொடுக்கனுமா”, என்று கேட்டாள்.

   அப்போதும் சிவா சொன்னது, “அவ என்ன கேட்டாலும் நான் செய்வேன், எதை கேட்டாலும் வாங்கி கொடுப்பேன்”, என்று சொன்னான்.

     இருவரும் கையைப் பிடித்துக் கொண்டு “நண்பேன்டா” என்று சொல்லி சிரித்துக் கொண்டிருந்தனர்.

அவளது சிரிப்பை பார்த்துக் கொண்டிருந்த சரணுக்கு தான், ‘இவள் எப்போதும் இதே சந்தோஷத்தோடு இருந்தால் எனக்கு அது போதும்”, என்று நினைத்துக் கொண்டான்.

உலகில் ஒருவனுக்கு

கிடைக்கும் உயர்ந்த வரம்

திருப்தியான மனம்.

மதுவும் சிவாவும் சிறுவயது நண்பர்களாக இருந்து பின்பு உறவினராக மாறினாலும், அதே நட்பு மட்டும் மாறாமல் இருவருக்கும் இடையே அப்படியே இருந்தது,

     சரணும் நந்தினியும் அந்த நட்பு கெடாமல் பார்த்துக் கொண்டனர். வீட்டினரும் அவர்களுக்கு உறுதுணையாக நிற்க, நட்பு குடும்ப உறவாக மாறினாலும்., அன்பு மட்டும் மாறாமல் அப்படியே இருந்தது.

இதே மகிழ்வோடும் சந்தோஷத்தோடும் அனைவரும் வாழ எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக் கொள்வோம்.

                      என்றும் அன்புடன்

                          ஆதிபிரபா