சங்கர் குடும்பம் இங்கே தன் தங்கை நிர்மலாவுடன் தங்கிக் கொண்டது. புவனாவிற்கு ஒரு அக்கா மட்டுமே உடன் பிறந்தது. புவனாவின் தந்தை மட்டுமே நாற்பது கிலோ மீட்டர் தொலைவில் இருக்கிறார்.. அவரை இந்த நேரத்தில் பதட்டப்பட வைக்க விரும்பாமல்.. தகவல் சொல்லவில்லை யாரும்.

லட்சுமணன் வண்டி ஓட்ட… வெங்கட் அருகில் அமர்ந்திருந்தார். தன் கிரமாத்தின் எல்லையை தாண்டியது வண்டி. இருவரும் ஏதும் பேசும் நிலையில்லை. அப்போது லட்சுமணனின் போன் ஒலித்து.. வண்டியை ஓரமாக நிறுத்தி, அழைப்பை ஏற்று பேசினான். குணசேகரின் நிலை பற்றி சொல்லிக் கொண்டிருந்தார்கள் அவனிடம். பத்துநிமிடத்தில்.. வண்டி நகர்ந்தது.

என்னமோ இருவருக்கும் எதோ ஒரு வாசம் நாசியை தீண்டிய்படியே இருந்தது.. இருவரும் அதை உணர்ந்து சுதாரிக்கும் முன்.. முழுவதுமான ஒரு தீ பிழம்பு அந்த வண்டியை ஆக்கிரமித்துக் கொண்டது. கதவை திறக்க முடியவில்லை. அண்ணன் தம்பி இருவரின் சத்தம் நீண்ட தூரம் கேட்டது போல.. அடுத்த ஊரிலிருந்து ஆட்கள் வந்து வண்டியை கூட மீட்க முடியாமல் போனது.

மெல்ல மெல்ல விடியல் வந்தது, புவனா குடும்பத்திற்கு மட்டும் இருள் சூழ்ந்து நின்றது போல.. சங்கர், லட்சுமணன் எண்ணிற்கு அழைக்க.. லைன் போகவில்லை. அங்கே ஈரோட்டில் நண்பருக்கு அழைத்து கேட்க.. அவர் வரவில்லை என்ற தகவலை சொல்லவும்.. பெண்களிடம் ஏதும் சொல்லாமல் சங்கர் கிளம்பிவிட்டார், தேடுவதற்கு.

இங்கே, கருணாகரன், தன் பிள்ளைகள் பெண்கள் என எல்லோரையும் கோவைக்கு அனுப்பிவிட்டார், வெங்கடசேன் லட்சுமணன் செய்தி தெரிந்ததும். அப்போது சாந்திதேவி எட்டு மாசம் கர்பமாக இருந்தார். தன் குழந்தையால்தான், தன் அக்கா கணவருக்கு இப்படி ஆகிவிட்டது என பயம் தொற்றியது அவருக்கு. எல்லோரும் ஆயிரம் சமாதானம் சொல்லி.. அவளை கருணாகரன் வீட்டிற்கு அழைத்து சென்றனர். அண்ணன் கருணாகரன் “அப்படி எல்லாம் விட்டுட மாட்டேன் சாந்தி.. நீ தைரியமா இரு.. மாமாவ சரி பண்ணிடலாம்.. நீ யோசிக்காத..” என சொல்லி அனுப்பி வைத்தார்.

தில்லைநாயகம் மகனை நிறுத்தி கேள்வி கேட்டார் “என்ன செய்த.. மாப்பிளையை நான் வெளிநாடு கூட்டி போய் கூட சரி பண்ணிடுவேன்… நீ என்ன பண்ணின” என்றார் இப்போதுதான் மிரட்டலாக.

தில்லைநாயகம் மருத்துவமனையிலிருந்து இப்போதுதான் வந்தார். மருத்துவர்கள் செல்லியது குறித்து சென்னை மருத்துவர்களிடம் காலையில் கேட்க வேண்டும் என எண்ணிக் கொண்டே வந்தவர்க்கு.. யாருமில்லா வீடே வரவேற்க.. மகனிடம் கேள்வி கேட்டார்.

மகனின் நண்பன்.. நடந்த எல்லாவற்றையும் சொல்லிவிட்டான்.

தில்லைநாயகம் அமைதியாகிவிட்டார்.. இவ்வளவு அவசரகாரனா என் மகன் எனதான் எண்ணம் வேறு ஏதும் ஓட மறுக்கிறது. எல்லோருக்கும் புத்தி சொல்லும் எனக்கு, இப்படி ஒரு மகனா.. ஏன் இவ்வளவு அவசரம் என ஓடிக் கொண்டே இருந்தது.

சற்று நேரத்தில் ஊரை பிளந்தது பெண்களின் அழுகை சத்தம். கருணாகரன் என்ன செய்வது என தெரியாமல் அறையுள் அமர்ந்துக் கொண்டார், எதோ ஒன்று அவரை தாக்கியது இனம் புரியாமல். கருணாகரன் ஒடுங்கிக் கொண்டார் அந்த இடத்தில். உடல்நடுங்க.. வெப்பநிலை அதிகமாக கண் திறந்திருந்தும் ஒரு இருட்டு அவரை சூழ… பயம் சூழ்ந்துக் கொள்கிறது அவரை. 

‘அவர்களை ஏதேனும் செய்ய வேண்டும்’ என சொன்னது தான்தான் என்ற உணர்வு பலமாக தாக்கியது. ‘எதோ ஒரு அவரசம்’ என எப்படி சொல்லுவது, எல்லோரும் படித்த, நல்ல பண்புள்ளவர்கள் என பெயரெடுத்தவர்கள்.. சிறுபிள்ளை விளையாட்டல்லவே, ‘எதோ நடந்திடுச்சு போய் விளையாடுங்க’ என சொல்லுவதற்கு. முழுதாக கேட்க்கிறதே “என்ன விட்டு போயிட்டீங்களா” என்ற அலறல் கேட்க்கிறதே.. நிஜம், நிஜமே.. நிஜம். கருணாகரன் பீதியில் அமர்ந்திருந்தார்.

சங்கரும் பாவம் நிலைகுலைந்து நின்றார். எதோ வண்டி பஞ்சர்… இல்லை, பழுது என எண்ணி தேடி சென்றவர்க்கு, போலீஸ் வாகனம், அம்புலன்ஸ்.. என பார்த்ததும் ஆவியில்லை. தன் தங்கை கணவர்களிடம் சொச்ச உயிர் கூட இல்லை.. எல்லாம் கருகி போயிற்று. ஓய்ந்து அமர்ந்துக் கொண்டார் சங்கர்.

போலீஸ் என்ன.. எது.. முதற்கட்ட விசாரணை தொடகியது. சங்கர் எல்லோருக்கும் தகவல் சொல்லி வரசொல்லி இருந்தார். ஊர் மக்கள், சொந்தகள் என எல்லா ஆண்களும் கூடி ஏதேதோ ஒன்று சொல்ல.. போலீஸ் கேஸ் பதிந்துக் கொண்டது.

உயிரற உடல்களை ஆய்வு செய்து சொந்தங்களிடம் தரவே மணி பதினொன்று. வீட்டு பெண்களுக்கும் எதோ புரிந்து போயிற்று.. வந்த சொந்தகளை பார்த்து. இறுதியாக முகத்தை கூட பார்க்க முடியவில்லை. பிள்ளைகள் இருவருக்கும் விழிப்பதை தவிர ஏதும் தெரியவில்லை. பத்மாவிற்குதான் நடந்தது ஓரளவு புரிந்தது, தன் சங்கர் மாமாவின் மனைவியின் சொல் கேட்டு எதோ புரிந்தது. வக்கீல் குடும்பம் தன் அப்பா, சித்தப்பாவை கொன்றுவிட்டனர் என. அதன்பின் எல்லாம் மற்றவர்கள் சொல்லியபடியே நடந்தது குடும்பத்தார்க்கு. 

தில்லைநாயகம், எல்லோருக்கும் செய்பவர் தன் மகனை விடுவாரா என்ன.. ஒரே நாளில் எல்லா ஏற்பாடும் செய்து மகனை நகரத்திற்கு அனுப்பி வைத்தார். 

கருணாகரனின்  சார்ப்பாக.. ‘நான்தான் செய்தேன்.. ஊர் பகை’ என பெயர் சொல்லி ஒருவன் வந்து சரணடைந்தான் காவல்நிலையத்தில். அப்பட்டமாக தெரிந்தது ஊருக்கு, இது நாடகம் என, ஆனால் யாரும் கேள்வி எழுப்ப துணியவில்லை. பயம் வந்துவிட்டது ஊரிடம், முன்போல யாரும் கூடி பேசகூட இல்ல, விமர்சிக்கவில்லை, சாபம் விடவில்லை, வாயில் கைவைத்து கடந்து சென்றுவிட்டனர் எனலாம்.

கருணாகரனும் ஊராரின் கண்ணில் படவேயில்லை. கருணாகரனின் குடும்பம் மொத்தமும் இப்போது கோவையில் குடியேறியது. எனவே பேச்சுகள் எங்கும் எழவில்லை. அப்படியே தில்லைநாயகம் அமைதியாக மகனை காப்பாற்றிவிட்டார் எனலாம்.

ஆனால், புவனாவும் நிர்மலாவும் திக்கு திசை தெரியாமல் நின்றனர். குடும்பத்தின் ஆணி வேர் இருவரும் ஒரே நேரத்தில் தங்களை  விட்டு பிரிந்ததில் திண்டாடி போயினர். 

தில்லைநாயகம் ஒரு உதவி செய்தார் எனில்.. அது அந்த குடும்பத்தை, வழக்கு ரீதியாக எந்த தொந்திரவும் செய்ய வேண்டாம் என காவலர்களிடம் கேட்டுக் கொண்டார். மேலும் சங்கர் ஏற்பாடு செய்த வக்கீலிடம் தானே பேசி.. ‘எங்க ஊரு, என்ன வேணும் சொல்லுங்க செய்திடரோம்… கோர்ட்டு கேஸ் என பெண்களை அலைய விட வேண்டாம்.. சொல்லுங்க’ என்றார்.

பெண்களுக்கு என்ன செய்வது என தெரியவில்லை. சிலநாட்கள் கேஸ் அப்படியே நின்றது. உள்ளே சென்றவன் ஜாமீனில் வெளியே வந்துவிட்டான். அதை பெரிதாக புவனா குடும்பம் எடுக்கவில்லை. 

ஒருமாதம் சங்கர் இருந்தார் எல்லாம் பார்த்தார், ஆனால் எத்தனை நாட்கள்.. பிள்ளைகள் பள்ளி, படிப்பு என குழந்தைகளுக்காக கண்ணீரை துடைத்துக் கொண்டனர் பெண்கள். புவனத்தின் தந்தை, தன் மகளையும் பேத்தியையும் கூட்டி செல்கிறேன்.. சொத்தை பிரித்துக் கொடுங்கள் என்றார்.

நிர்மலாவின், முகம் வாடித்தான் போகிற்று.. நிர்மலா பிறந்து வீடு சென்றால், பெரிதாக மரியாதை கிடையாது. எனவே முகம் வாடி நின்றார். புவனமும், அந்த முடிவில் இல்லையே, எனவே தன் தந்தையை இங்கே இருக்க கேட்டுக் கொண்டார். சங்கர்க்கு கொஞ்சம் தெம்பு வந்தது, ஒரு ஆண்துணை என எண்ணி, தானும் அப்படியே சொன்னார்.

ஆக, இரண்டு மாதம் ஆனது.. பெண்களுக்கு, காலையில் எழுந்தால், உணவு சமைக்க வேண்டும் என்ற ஸ்மரணை வரவே. அதன்பின்தான் பிள்ளைகள் பள்ளி செல்வது குறித்து முடிவானது. சங்கர்  தேவையான ஏற்பாடுகளை ஊராரின் உதவியோடு செய்து தந்தார். ஊரார் அப்படியே தாங்கினார் இவர்கள் குடும்பத்தை. ஆனால், புவனம் தேவையானதை மட்டும் ஏற்றுக் கொண்டார்.. பிள்ளைகள் பாதுகாப்பு, அவர்களின் படிப்புக்கு என ஊராரை நம்பினார். மற்றபடி, யாரிடமும் நெருங்கி பேசி, உறவை வளர்க்கவில்லை. தங்கள் தோட்டம் பாத்தியம் என சுருக்கிக் கொண்டனர் இரு பெண்மணிகளும். 

எந்த நல்லது கெட்டதுக்கும் இவர்கள் செல்வதில்லை. ஆனாலும் ஊரார் அழைக்காமல் விடுவதில்லை. திருவிழா நடந்தாலும், இவர்கள் செல்வதே இல்லை. பிள்ளைகள் கூட பாட்டு சத்தம் கேட்டால்.. கதவை சாற்றிக் கொண்டனர்.

நாட்கள் எண்ணி எண்ணி சென்றது. கொஞ்சம் கொஞ்சமாக பிள்ளைகளின் உலகம்தான் பெரியவர்களை நிகழ்காலத்திற்கு கொண்டு வந்தது. புவனம் தோப்பின் பொறுப்பை எடுத்துக் கொண்டார், தந்தையோடு சென்று.. வேலைகளை பழகிக் கொண்டார். 

நிர்மலா எப்போதும் போல பிள்ளைகள், வீடு என இருந்துக் கொண்டார். வெளியாட்கள் யாரும் வந்து போகாததால்.. புவனம் நிர்மலா இருவரும் ஒற்றுமையாக குடுமபத்தை நடத்தினர்.

ஐந்து வருடம் சென்று புவனத்தின் தந்தையும் இறந்து போக.. எல்லாம் புவனம் பார்க்க தொடங்கினார். பத்மா அடுத்த ஊரில் உள்ள கல்லூரியில் B.Se படித்தாள், அதன்பின் M.Se படித்தாள்..  படிப்பு முடித்ததும் திருமணம் முடித்தனர் விமர்சையாக. அப்போதுதான் ஊராரோடு கொஞ்சம் கலந்தது புவனத்தின் குடும்பம்.

சங்கர் இப்போது வரை எல்லாவற்றுக்கும் துணை நிக்கிறார். தென்னைக்கு மருந்து அடிப்பது தொடங்கி, பத்மா வயதுக்கு வந்த போது குறைவில்லாமல் சீர் செய்தது தொடங்கி.. வீடு கட்ட உதவி.. பத்மாவின் திருமணத்திற்கு வரன் பார்த்து.. சிறப்பாக அமைத்து தந்து.. சாம்பவியை கல்லூரியில் சேர்த்து.. இப்போது பார்த்திபனையும் கல்லூரியில் சேர்த்து என எல்லாவற்றுக்கும் சங்கர் துணை நிற்கிறார் இப்போதுவரை.