ஒற்றை விரலால் மனைவி கழுத்தில் இருக்கும் மாங்கல்யத்தை வருடியவன், “என் கைவிட்டு நீ போயிட்ட. திரும்ப வரவே மாட்டன்னு நினைச்சேன்” என்றான் தேவா.
“இப்போ உங்ககிட்ட தான் இருக்கேன்” துளசி சொல்ல,
“ம்ம்” என்றவன் அவளின் கழுத்தில் முகம் புதைத்தான்.
“நீ என்னை கிராஸ் பண்றப்போ எல்லாம் காத்துல ஒரு வாசம் வரும்டி. மயக்கும்!” என்றவன் மூச்சை நன்றாக இழுத்து சுவாசிக்க,
“ஏங்க” என்று துளசி சிலிர்த்தாள்.
“இப்போவும் மயக்குறடி” என்றான்.
துளசிக்கு அவன் வாசம், சுவாசத்தை தடை செய்தது.
“ம்ஹா” என்று மூச்சை இழுத்துவிட,
“என்னாச்சு?” என்று கழுத்து வளைவிலே உதடுகள் உரச கேட்டான்.
மீசை முடி உரசி இம்சை கூட்டியதில், தேவாவின் பின் சட்டையை இறுக்கமாக பற்றினாள்.
“நீ ரொம்ப சாப்ட். எப்படி உன்னை ஹாண்டில் பண்ண நான்?” என்று கேட்க, என்ன சொல்வாள் துளசி.
தேவா விரல்கள் மெல்ல அவளுள் ஊடுருவ ஆரம்பிக்க, “எனக்கு குளிக்கணும்” என்றாள்.
“இந்த குளிர்லவா?” தேவா நிமிர்ந்தான்.
“ஆமா” என்று துளசி விலக, தேவா முகம் சுருங்கியது.
பிடிக்கலையா? கணவனாக ஏற்க விருப்பமில்லையா?
சட்டென மூளையில் ஏதோ பிளாஷ். நோ. அப்படி மட்டும் இருக்க கூடாது.
சந்தோஷ் வற்புறுத்தியது மனதளவில் பாதித்திருக்குமா?
டாக்டர் இல்லையென்று தானே சொன்னார்.
விவாகரத்து வழக்கு நடந்த நேரம் தேவா மருத்துவமனைக்கு சென்று விசாரித்திருந்தான். அப்போது அவன் கேட்ட கேள்விகளை தான் சுந்தரம் அவரின் தேவைக்கு ஏற்ப மாற்றி துளசிக்கு அனுப்பியிருந்தது.
துளசியும் அதை புரிந்து கொண்டிருக்க வேண்டும். ஆனால் அன்றைக்கு அழுத தடம் அவளிடம் தெரிந்ததே!
தேவா அறைக்குள் இருக்க முடியாமல், வெளியே சென்றான். ஏதோ மூச்சடைக்கும் உணர்வு.
துளசி குளித்து வந்தவள், கணவனை காணாமல் அவனுக்கு அழைத்தாள்.
போன் அறையிலே இருக்க, காத்திருந்தாள். வீட்டிற்கு பேசினாள். நேரம் சென்றே தேவா அறைக்கு வர, “கோர்ட் ஏதும் போட்டுக்காமலா போனீங்க” என்று குளிரில் விறைந்திருந்தவனை கண்டு துளசி பதற்றம் கொண்டாள்.
“ஒன்னுமில்லை. நான் ஓகே” என்றவன், சமநிலை பெற நீண்ட நேரமே ஆகிவிட்டது.
“அப்படியெதுக்கு வெளியே போனீங்க?” என்று துளசி காபி கொடுத்து கேட்க,
‘நான் சட்டுன்னு விலகினதா?’ தோன்றிய நேரம் கணவன் பக்கம் அமர்ந்து அவன் தோள் சாய்ந்தாள்.
தேவா விரல்களை தேடி பிடித்து கோர்த்து கொள்ள, “நான் டாக்டர்கிட்ட பேசின வீடியோ பத்தி ஏதும் கேட்கணுமா?” என்று தேவா கேட்க,
“தேவையில்லை” துளசி உடனே சொன்னாள்.
“அப்புறம் ஏன் அழுத?”
“இப்போ அதை பேசியே ஆகணுமா” துளசியிடம் கோவம், ஒவ்வாமை.
“எனக்கு தெரிஞ்சுக்கணும்டி”
“அசிங்கம் என்னை தொடர்ந்துட்டே இருக்கு. உங்களையும் உள்ள இழுத்து விடுது. நான் வாழணும்ன்னு ஆசைப்படுறப்போ எல்லாம் திரும்ப முளைச்சு வந்து, எனக்கு கோவத்தை மட்டுமில்லை அழுகையும் கொடுக்குது”
“இதோ இப்போ கூட அப்படித்தான். நீங்க சாதாரணமா பேசுறீங்க. நான், என, எனக்கு முடியலை” என்று துளசி விலகி எழ, தேவா அவளை பிடித்து தனக்குள் கொண்டு வந்தான்.
“விடுங்க. விடுங்க என்னை” என்று துளசி திமிற,
“சாதாரணமா நான் பேசலை. எனக்குள்ளயும் கொதிக்குது” என்றான் தேவா.
“பிடிக்கலை தானே, அப்புறம் ஏன் பேசுறீங்க” என்று அவனை அடிக்க,
“நீ ஏண்டி விலகின? நான் உன்கிட்ட வரேன். நீ தள்ளி போற? எனக்கென்ன நினைக்க தோணும் சொல்லு” என்று அவளின் கைகளை பற்றி கொண்டு கேட்டான்.
“கொஞ்சம் பதட்டமா இருந்தது. வந்ததும் ஆரம்பிப்பீங்கன்னு எனக்கெப்படி தெரியும்?” மனைவி வெட்கத்தை மீறி பொரிந்துவிட,
“ஹனிமூன்ல நேரம், காலம் எல்லாம் பார்க்க முடியாது” என்றான் கணவன்.
“எனக்கு அப்படி முடியாது”
“உனக்கேன் அந்த தவிப்பு இருக்க போகுது? உடம்பு சூடாகி கொதிச்சா தெரியும் என் கஷ்டம்”
“நீங்க என்கிட்ட இதையெல்லாம் சொல்லலை” துளசி குரல் மெலிந்தது.
“சொல்ல முடியாது. உன்கிட்ட நிச்சயம் சொல்ல கூடாதுன்னு இருந்தேன்” என்றான் சட்டென மூண்ட கோபத்துடன்.
“அதுக்குள்ள என்னாச்சு?” என்று துளசி கேட்க, தேவா அவளை விலக்கி எழ முயல, துளசி இப்போது அவனை இழுத்து பிடித்து அமரவைத்தாள்.
“விடுடி”
“என்னன்னு சொல்லுங்க”
“நீ இரண்டாவது. எனக்கு உன்னை எப்படி தொட பிடிக்கும்?” அடிமனதில் வலுவாக படிந்திருந்த கோவம் வெளியே வராமல் இருக்குமா?
“இதுவா” என்று துளசி சாதாரணமாக கேட்க, தேவா மனைவியை கண்கள் இடுங்க பார்த்தான்.
“எல்லோருக்கும் எல்லாம் சாதாரணம் கிடையாது துளசி” என்றான் அழுத்தமாக.
“நான் உன்னை காதலிக்க ஆரம்பிக்கும் போது எனக்கு இது காதல்ன்னு கூட தெரியாது. பிடிக்கும். சரவணன் மாமாவோட நீ சுத்திட்டிருந்த காலத்துலே உன்னை பார்க்க பிடிக்கும். ரொம்ப அழகா, பூனை குட்டி மாதிரியே அவரை கைபிடிச்சு சுத்திட்டு இருப்ப” என்றான். கோவத்தை விட ரசனை அதிகம் அவனிடம்.
“சரவணன் மாமா தவறினப்போ உனக்காக அவ்வளவு வருத்தப்பட்டேன். இந்த பூனை குட்டி எப்படி சமாளிக்கும்? யார் கை பிடிச்சு சுத்தும்ன்னு சித்தப்பாகிட்ட புலம்பியிருக்கேன்டி”
“அப்புறம் எல்லாம் நீ ரொம்ப அமைதியாகிட்ட. உன் குணமே இதுதான்னு எல்லாம் சொல்ல என்னால ஏத்துக்க முடியலை. சரவணன் மாமாகிட்ட மூச்சே விடாம நீ பேசினதை நாந்தான் பார்த்திருக்கேனே”
“என்னமோ வளர வளர என் பார்வை மாறுச்சு. காலேஜ் படிக்கும் போதே உறுதி பண்ணிக்கிட்டேன். பசங்க யார் உன்னை ப்ரொபோஸ் பண்ணாலும் அவ்வளவு கோவம் வரும். அந்த குணாவை மிரட்டி கூட இருக்கேன்” தேவா சொல்ல,
“நீங்க தானா அது. ரொம்ப டார்ச்சர் பண்ணிட்டான்” என்று துளசி மகிழ்ந்தாள்.
“இப்போ கேளு. தொல்லை விட்டதுன்னு திரும்ப குனிஞ்சுக்கிட்ட. சில நேரம் உன் முகத்தை பிடிச்சு நிமிர்த்தணும்ன்னு வெறியே வந்திருக்கு” என,
“நீ தாண்டி எனக்கு அந்த பேர் வரவே காரணம். உன்னை அப்படியா தொல்லை பண்ணிட்டேன். என்னை பார்த்து பயந்து ஓடுவ?” இப்போதும் மனத்தாங்கல் தான்.
“தொல்லை பண்ணலை. ஆனா காதலிக்க சொல்லி மிரட்டவீங்களோன்னு பயம்.”
“மிரட்டி எல்லாம் பிடிக்க வைக்க முடியாது. வெறுக்க வைக்க தான் முடியும்”
“இப்போ உங்களை புரியது”
“அப்புறம் ஏண்டி அப்படி சொன்ன? இரண்டாவது, அதனால உன்னை வேணாம்ன்னு சொன்னேனா நான்?”
“நீங்க கோவப்பட்டாலும் எதார்த்தம் அதுதான்”
“துளசி”
“எனக்கு உங்களை தெரியாதுங்க. நீங்க எப்படிப்பட்டவர்ன்னு கல்யாணத்துக்கு அப்புறம் கூட முழுசா எனக்கு தெரியாது. அதான் உண்மை. நம்பிக்கை வைச்சு மட்டுமே நம்ம கல்யாணம். அப்புறம் இந்த முரடனை கொஞ்சம், கொஞ்சமா பிடிக்க ஆரம்பிக்குது” என்றவள்,
தேவாவின் கன்னங்களை வருடியபடி, “வாழணும்ன்னு ஆசை வருது. நம்ம உறவு நிலைச்சு நிக்கணும்ன்னு வேண்ட தோணுது. உங்களை இன்னும் புரிஞ்சுக்கணும்ன்னு ஆவலா இருக்கு” என்றாள்.
“உங்களை போல நானும் காதலிக்க முடியுமான்னு தெரியலை. ஆனா நிச்சயம் இனி உங்களை காயபடுத்த மாட்டேன்” என்று அவனின் கன்னத்தில் இதழ் பதித்தாள்.
அவனின் காதல் நெஞ்சம் விம்மியது! தேவா கண்களை மூடி கொண்டான்.
என் காதலுக்கான அங்கீகாரம் மட்டுமில்லை மரியாதையும் கிடைத்துவிட்டதா?
துளசி அவனின் காதலை நிராகரித்த நாட்களில் அடைந்த வேதனைக்கு இப்போது அவளின் வார்த்தைகள் மருந்தாகின்றன.
என்னை உணர்ந்து கொண்டாள்! என் காதலை, காதலாக ஏற்று கொள்கிறாள்! இதைவிட வேறென்ன வேண்டும் எனக்கு?
காதலிக்கப்பட்ட பெண் தனக்கான காதலை மதிப்பதே, அந்த காதலுக்கான மரியாதை அல்லவா?
தேவா எனும் காதலனின் விழியோரம் கசிந்த கண்ணீரில், துளசி நெஞ்சம் குலுங்கியது.
“என்னங்க” என்று அவன் கன்னத்தை வருடியவள், தன்னை காணாத கணவனின் கண்களை காண வேண்டி தவித்தாள்.
முதல் தவிப்பு!
“தப்பா ஏதும் சொல்லிட்டானா?” என்று கேட்க, தேவாவிடம் பதிலில்லை.
அவனால் பேச முடியவில்லை என்பதே நிஜம். முழுதும் தன்னை மறந்து போயிருந்தான்.
துளசி தாள முடியாமல், கணவனை தன்னை காண வைத்தே தீர வேண்டும் என்ற தவிப்பில், அவன் உதட்டில் தன் உதடுகளை பொருத்தினாள்.
மென்மையான தீண்டல்!
தேவா உதடுகள் சுகமாக அவளின் தீண்டலை ஏற்று கொள்ள, தேவாவும் மெல்ல மீண்டு வந்தான்.
கண்களை திறக்க, துளசி அவன் முகத்தையே பார்த்து கொண்டிருக்க அவளிடம் தெரிவது என்ன? எனக்கான தேடலா?
தேவா கைகள் அவளை தனக்குள் வளைக்க, உதடுகள் இன்னும் அழுத்தமாக இணைந்து கொண்டது.
இருவரும் விழிகள் கலந்தபடி முத்தமிட, துளசிக்குள் வெட்கம் முளைக்க ஆரம்பித்தது.
தேவாவின் கண்கள் காட்டும் ஏக்கம் பெண்ணை சிலிர்க்க வைத்தது.
அவன் கைகள் காட்டும் நெருக்கம் அவள் உடலை சிவக்க வைத்தது.
“முழு மனசோடத்தானே என்னை ஏத்துகிற?” என்று தேவா நெருங்கிய பின்னும் கேட்டான்.
“எப்படி பதில் கொடுத்தா ஏத்துப்பீங்க?” என்று துளசி கேட்டவள், தேவாவை தன் நெஞ்சுக்குள் பொத்தி வைத்து கொண்டாள்.
அவளின் வாசம் இவனை போதையேற்ற, உடை இல்லா நெருக்கம் கேட்டது அவன் இளமை.
“பயந்திட மாட்டியே?”
இவ்வளவு வருடங்கள் காத்திருந்த காதல் அவளை அச்சமூட்டி விடுமோ? நிதானமாக நடந்து கொள்வேனா நான்? அவனுக்கே சந்தேகம்.
அவன் பிடி இப்போதே அவளின் இடையை சிவக்க வைத்திருந்தது.