“மா..ஒரே ஒரு காபி குடிச்சேன். அதுவும் ராம்ஸ் சொந்தக்காரங்க வந்தப்பறம், அந்தப் புள்ள குரு வாங்கிக் கொடுத்தான்.
“டாக்டர் என்னடா பாப்பா சொன்னாங்க?”, சாப்பிட்டபடியே பாண்டியன் விசாரிக்க,
“டாக்டர்ஸ் முதல்லையே ஷாக் எதாவது அடிச்சுதான்னு கேட்டாங்க. தெரியலைன்னு சொன்னோம். அப்பறம் ஆன்ட்டி கண் முழிச்சதும், கேட்டப்போ, ஹீட்டர் நிறுத்த ஸ்விட்சை தொட்டதுதான் தெரியும், ஷாக் அடிச்சிருச்சுன்னு சொன்னாங்களாம். கீழே விழவும், குழாய்ல நெத்தி இடிச்சு ஒரு பக்கம் ரத்தம் கொட்டியிருக்கு. இரண்டும் சேர்த்து மயக்கத்துக்கு போயிட்டாங்க. இப்ப பரவாயில்லை, ஆனா இரண்டு நாளாவது இருக்கணும், டெஸ்ட் எல்லாம் எடுக்கணும்னு சொல்லியிருக்காங்க. பாவம் ராம்ஸ், ரொம்ப பயந்திட்டார்.”
“நீ எப்படி அவர்கூட அவர் வீட்டுக்குப் போன ? அதுவும் அஞ்சு மணிக்கு. உங்க இரண்டு பேருக்கும்தான் ஆகாதே.”, ரோஜா அவளையே பார்க்க,
தோளைக் குலுக்கியவள், “ ம்ம்…. ஒரு ஃப்ளாஷ் தெரிஞ்சுது, அவங்க பாத் ரூம்ல விழுந்து கிடக்கற மாதிரி….”
இதை ஏற்கனவே அனுமானித்திருந்தவர், “கொஞ்ச நாளா ஒன்னும் இல்லையேன்னு சந்தோஷமா இருந்தேன். “, என்று வனரோஜா வருத்தப்பட,
‘ஒன்னும் இல்லையா? ஜக்கி ஓவர் டைம் பாக்குதும்மோவ்…’, என்று உள்ளுக்குள் கவுண்டர் கொடுத்தாள் ஸ்ரீ.
“நீ அவர்கிட்ட சொன்னியா நீ பார்த்தேன்னு ?”, என்னவோ மகள் முகத்தில் வந்து போனது கண்டு ரோஜா குடைய,
“இல்லைமா… சும்மா அந்த அம்மாகிட்ட ஒரு மினி இன்டெர்வ்யூ எடுக்கணும் போன் பண்ணித்தாங்கன்னு கேட்டேன்….”, என்று அவள் நடந்ததை கதையாகக் கூற இருவரும் கேட்டுக்கொண்டனர்.
“ஹம்ம்.. இந்த வாட்டி நீ செஞ்சது சரி.ஆனா நல்ல விஷயமா இருந்தா, ஒன்னும் சொல்லாத ஸ்ரீ. அடுத்து எதாவது தெரிஞ்சு, அதுவும் பலிச்சா பேச்சு கிளம்பிடும். ஜாக்கிரதை.”, தாயாக மகளின் நலனே பிரதானமாக இருக்க, அறிவுறித்தினார்.
“தெரியும்மா.. இதையே எத்தனை வாட்டி சொல்லுவ?”, என்று ஸ்ரீ சலித்தாலும், உள்ளுக்குள் உதைத்தது. ‘அம்மாக்கு மட்டும் உண்மை எல்லாம் தெரிஞ்சுது, நீ காலிடி மகளே…’, என்று மனது ஆரூடம் சொன்னது. சாப்பாட்டில் கவனம் செலுத்துவது போல தலையை குனிந்துகொண்டாள். இல்லாவிட்டால், நினைப்பதைக் கூட கண்டுபிடித்துவிடுவார் ரோஜா என்பதை அனுபவத்தில் நன்றாக உணர்ந்திருந்தாள் ஸ்ரீ.
“குழந்தையை ஃப்ரீயா விடு ரோஜா. அவளுக்கு தெரியும்.”, எப்போதும் போல பாண்டியன் மகளுக்காக பரிந்துகொண்டு வர, ஸ்ரீக்கு இன்னுமே மனது உறுத்தியது.
இனிமே ஜக்கி என்ன காட்டினாலும் சித்தார்த்கிட்ட ஒன்னும் சொல்லக் கூடாது. தெரியலை தெரியலைன்னு சொல்லிகிட்டு ஒரு மாசம், இரண்டு மாசம் ஓட்டினா, அவரே சரி போய் தொலைன்னு விட்டுடுவார். ராம்ஸ்கிட்ட ஒரு எக்ஸ்பீரியன்ஸ் லெட்டரை தேத்திட்டு கழண்டுடணும். சின்னப் பெண் போடும் கணக்கெல்லாம் தவிடு பொடியாக்க சூழ்னிலைகள் உருவாகிக்கொண்டிருந்தது அறியாமல் தன் அறைக்குச் சென்றாள்.
நவீன் எப்போதும்போல அழைத்தான்.நாளை மறுனாள் அவர்களது போட்டி. தகுதி பெற எத்தனை ஓவருக்குள் என்ன ஸ்கோர் என்பதிலிருந்து, மற்ற அணிகள் எந்த மாதிரி ஆடினால் இவர்களுக்கு வாய்ப்பு என்று கணக்கு போட்டு பேசிப் பேசி களைத்திருந்தார்கள் வீரர்கள். அதிலிருந்து விடுபட்டு போனோடு ஒரு வழியாக படுக்கையில் விழுந்து ஸ்ரீக்கு அழைப்பு விடுத்திருந்தான்.
“ஹே ஸ்ரீ… “, குரலில் களைப்பு தெரியவும்,
“என்னாச்சு நவீன், நிறைய ப்ராக்டீசா? குரலே டயர்டா இருக்கு?”, என்று விசாரித்தவள் கொட்டாவி விட,
சிரித்தவன், “என்னை கேட்டுட்டு நீ தூங்கி வழியற ? மணி ஒன்பதரைதான் ஆகுது?”
“வீட்ல ஒன்னும் சொல்ல மாட்டாங்கல்ல ?”, நவீன் உறுதி செய்துகொண்டான்.
“அதெல்லாம் ஒன்னும் இல்லை. உங்களை தெரியும்தான…சோ ப்ராப்ளம் இருக்காது.”, என்று சமாளித்தாள்.
“இல்லை ராகுல் இன்வைட் பண்ணலாம்னா, எனக்கு ஓகேதான்.”, நவீன் கேட்கவும்,
“அம்மா அப்பா ஒன்னும் சொல்ல மாட்டாங்க நவீன். இட்ஸ் ஃபைன்.”, என்று சொல்லும் போதே யோசனை ஓடியது. ரோஜா அப்படி ஒன்றும் கட்டுப்பட்டி ஆசாமியெல்லாம் கிடையாது. ஆனால் ஸ்ரீயும் இதுவரை தனியாக ஒருவருடன் இரவு டின்னர் என்று சென்றது கிடையாது. கும்பலாக பலமுறை சென்றிருக்கிறாள். சரி சமாளிப்போம் என்று நினைத்துக்கொண்டாள்.
“ஓஹ்… அப்ப சார் பெரிய செலிப்ரிட்டி ஆகிட்டீங்களா? கன்ஃபர்மா?”, ஸ்ரீ அவனை ஓட்டினாள் சிரிப்புடன்.
“ஹே… நீயும் ஆரம்பிக்காத… திரும்ப பப்ளிக்ல மாட்ட வேண்டாமேன்னு ஒரு முன் ஜாக்கிரதைதான். ஏற்கனவே யாரை கூட்டிட்டு போறன்னு சொன்னாதான் ஹோட்டல சொல்லுவேன்னு மல்லுகட்டினார் அஷ்வின் அண்ணா. சொன்னதும் டீம் பசங்ககிட்டல்லாம் சொல்லி என்னை ஒரு வழி பண்ணாங்க. உனக்கு ட்ரீட்னு சொன்னதை காப்பாத்தறதுக்கு நான் எவ்வளவு படறேன் தெரியுமா?”, கொஞ்சம் ஆதங்கமாகவே சொன்னான் நவீன்.
“அச்சோ… அப்படியெல்லாம் எதுக்கு கஷ்டம் நவீன்? விடுங்க பார்த்துக்கலாம்.”, என்று மறுத்த போது,
“இப்ப வேணாம்னு சொன்னா, இன்னும் ஓட்டுவாங்க. அதெல்லாம் ஒன்னும் இல்லை. உன் பேரை வெச்சு கிண்டல் பண்றதுதான் கொஞ்சம் கில்டியா இருக்கு. “, என்று நவீன் சொல்லவும்,
‘சரியான அமூல் பேபி…ஆனாலும் நேர்மையான புள்ளையா இருக்கே…’, என்று கொஞ்சிக் கொண்டது ஸ்ரீயின் மனது.
பேச்சு அடுத்து அவளது நாளைப் பற்றி திரும்பியது.
அவன் விசாரிக்கவும் இராமலிங்கத்தின் கதையைக் கூறினாள். முன்னெச்சரிக்கையாக அவள் விஷனாக பார்த்ததைக் கூறாமல், அவர் மனைவியிடம் பேசக் கேட்டதிலிருந்து கூறினாள்.
“ஓஹ்… பாவம். தனியா இருக்காங்களா?”, நவீன் விசாரிக்க, இராமலிங்கம் அவர் மகன் பஞ்சாபி பெண்ணை மணந்ததால் தள்ளி வைத்த கதையைக் கூறினாள்.
“ஆனா, அந்த பிள்ளை குருக்கு ப்ரவீனோட அதான் ராம்ஸ் மகனோட கான்டாக்ட் இருக்கு நவீன். ஹாஸ்பிடல் போனதுமே மெசேஜ் போட்டான். கொஞ்ச நேரத்துலயே அவரும் கூப்பிட்டு பேசினார். குருவும் அப்பப்ப அப்டேட் குடுத்துகிட்டே இருந்தான். இருக்கறது ஒரு பிள்ளை. அவன் ஆசைப்படி இருக்கட்டும்னு நினைக்கறாரா இந்த மனுஷன். அப்படி என்ன ஒரு பிடிவாதம்?”, ஸ்ரீ பொரிந்தாள்.
“ரொம்ப பாசம் வெச்சிருந்திருப்பார் ஸ்ரீ. பையனுக்கு இப்படி பொண்ணு பார்க்கணும், அப்படி கல்யாணம் செய்யணும்னு நிறைய கனவு இருந்திருக்கும். அது கலைஞ்சதுல வந்த கோவம்தான். “, நவீன் சொல்லவும்,
“ஆனா அது நியாயமில்லாத கோவம் நவீன். இவர் ஆட்டி வெக்கற பொம்மையா அவன்? அவனுக்குன்னு ஒரு கனவு இருக்கும், அதை வாழற உரிமையும் இருக்கணும்தானே?”, ஸ்ரீ வாதாடினாள்.
“ஹே… கூல். அவர் பக்கத்தை சொன்னேன். அது சரின்னு சொல்லலை.”, நீயும் நானும்கூட வீட்டுக்கு ஒரே பிள்ளைங்கதான்.
“அப்பா அம்மாவை டிஸப்பாயிண்ட் பண்ற மாதிரி எதுவும் செய்தா அவங்களும் அப்படித்தான் ரியாக்ட் பண்ணுவாங்க ஸ்ரீ. ரொம்ப பக்குவப்பட்டவங்கதான் பிள்ளைக்குன்னு தனி லைஃப் இருக்கும் அவங்க இஷ்டப்படி வாழட்டும்னு விலகி நிப்பாங்க. “, நவீன் பொறுமையாக விளக்கினான்.
“எந்த பிள்ளையும் அப்பா அம்மாவை கஷ்டப்படுத்திப் பார்க்கணும்னு நினைக்கறதில்லை நவீன். பட், அவங்களுக்குன்னு ஒரு கனவு, அது படிப்பாகட்டும், வேலையாகட்டும், லைஃப் பார்ட்னர் ஆகட்டும், அவங்களை மீறித்தான் அந்த பிடித்தம் வருது. அதை நிறைவேத்திக்க நினைச்சா, பிள்ளைங்க வேண்டாதவங்களாகிடுவாங்க, அப்பா அம்மா மேல பாசமில்லாத, சுயனலவாதிங்களாகிருவாங்க. அந்த எண்ணம் தான் என்னை கடுப்படிக்குது.”, ஸ்ரீ பொரிந்தாள்.
“பக்குவப்பட்ட பேரண்ட்ஸ் புரிஞ்சுக்குவாங்க. இல்லைன்னா கஷ்டம்தான். ஏன் இவங்களே பார்த்து வெச்ச கல்யாணதுல கூட மூக்கை நுழைக்கறவங்க இருக்காங்களே.”, நவீன் யதார்த்தம் சொன்னான்.
“ஹம்… எனக்குத் தெரிஞ்ச ஒரு ஃபாமிலி. இப்படித்தான் அலசி ஆராய்ஞ்சு ஒரு பெண்ணை அவங்க பிள்ளைக்கு கட்டி வெச்சாங்க. பசங்க சந்தோஷமா இருக்கட்டும்னு தள்ளி நின்னு பார்க்க தெரியலை. இன்னும் என் பிள்ளைக்கு நான் செஞ்சாதான் பிடிக்கும்னு இவங்களே சுத்திகிட்டு இருந்தா என்னாகும்? உனக்கெல்லாம் எதுக்குடா கல்யாணம். உங்கம்மாக்கு புள்ளையாவே இருன்னு ஒரே மாசத்துல அந்த பொண்ணு போயிட்டா. இவங்க தப்பே புரியலை. போனவளை கரிச்சு கொட்டிகிட்டு இருக்காங்க அந்தம்மா. அந்த புள்ளை வாழக்கை போச்சேன்னு வருத்தமேயில்லை.”, ஸ்ரீ கதை சொல்ல,
“எங்கம்மா கூட கொஞ்சம் பொசசிவ்தான் ஸ்ரீ. அப்பா அடிக்கடி என்னை கிண்டல் பண்ணுவார். ‘இப்பல்லாம் தெரியாதுடா. உனக்குன்னு ஒரு பொண்டாட்டி வந்தா, இப்படி சாப்பிட்டியா, குளிச்சியாங்கறதுலேர்ந்து எல்லா விஷயத்தையும் விசாரிக்கற ஒரு மாமியாரை பார்த்து உங்கிட்ட சண்டை பிடிப்பா. ‘,ன்னு சொல்லுவார்.”, நவீன் சொல்ல சொல்ல ஸ்ரீ மண்டைக்குள் அலாரம் அடித்தது.
‘அய்யையோ…. இதெல்லாம் நமக்கு செட்டே ஆகாதே…. அந்த அக்கா மாதிரி நானும் தெரிச்சு ஓடிருவேனே…. இது தேவைதானா?’. நவீனுடன் டின்னர் டேட் என்ற ஆர்வம் எல்லாம் வடிந்து, தேவையில்லாமல் இதை வளர விடுகிறோமா என்று சந்தேகம் வந்துவிட்டது ஸ்ரீக்கு. ‘ஆனால் ஜக்கி கல்யாணனு சொல்லுச்சே.. ‘, என்று கேள்வி ஓட, “ம்க்கும் இதை மட்டும் காட்டிட்டு டைவர்சை காட்டாம விட்டிருக்கும். இல்லை அந்த அம்மாகிட்ட நான் படுற பாட்டை மறைச்சிருக்கும். அதால எனக்கு என்னிக்கு என்ன யூஸ் இருந்திருக்கு ? எப்பவும் சிக்கல்லதான் மாட்டிவிட்டுருக்கு. இப்பவும் அப்படித்தானா ?’, இவள் தீவிர சிந்தனையில் இருக்க,
தான் பேசியதன் வீரியம் தெரியாதவனோ..”ஹே ஸ்ரீ… என்ன பேசிகிட்டே தூங்கிட்டியா அன்னிக்கு மாதிரி ? குட் நைட். போய் படு.”, என்று சொல்லவும்,