“அவங்க தான் வளர்க்கணும், அவங்களுக்கும் பொழுது போகனும் இல்ல”, என்றான்.

 “டேய் நீங்க ரெண்டு பேரும் வேலை பாக்குறீங்க சரி, அவ இப்ப ஒர்க் ப்ரம் ஹோம் ல தானே இருக்கா,  பிள்ளையை அவ கூட இருக்கட்டுமே”, என்று சொன்னாள்.

“ஏன் உங்கிட்ட எதுவும் கம்ப்ளைன்ட் பண்ணினாளா”, என்றான்.

   “அவளுக்கும் குழந்தை கூட இருக்கனும் ன்னு தோணும் இல்ல”, என்றார்.

  “அவ வொர்க் போக ஆரம்பித்தா குட்டி பையன் தேடுவான், அதுக்கு அவன் இப்பவே அவங்க கூட இருந்து பழகட்டும்”, என்றான்.

  “ஏன்டா பிள்ளை தேட மாட்டானா, நீங்க வேற பாண்டிச்சேரி போறீங்க”, என்று கேட்டாள்.

    “பிள்ளைக்கு பழக்கி விடுறோம், அம்மா அப்பா பாத்துக்குவாங்க, ஃபுல் அண்ட் ஃபுல் அவங்க கூட இருந்து பழகட்டும், எங்கள பார்த்தா ஹாய் சொல்லிட்டு போட்டும்” என்று சொன்னான்.

   “அடேய் நாளைக்கு உன் பிள்ளை, உனக்கும் ஹாய் மட்டும் தான் சொல்ல போகுது”, என்று சொன்னார்.

   அவனும் சிரித்துக் கொள்வான்.  ஆனால் தன் குழந்தைக்கு நல்ல தகப்பனாக இருப்பதில் தவறவில்லை, குழந்தையும் யாழினி கதிரவனிடம் எந்த அளவு பிரியமாக இருக்கிறதோ,  அதே அளவு ராதாவிடமும் நந்தனிடமும் ஒட்டிக் கொள்ளும், கதிரவன் அக்கா வரும் போது அவள் பிள்ளைகளோடு தான் இருப்பான், அந்த நேரத்தில் யாழினியை கூட தேட மாட்டான்.

   கதிரவனின் அம்மா அப்பாவோடு சற்று ஒட்டுதல் அதிகம் என்றாலும், யாழினியை பார்த்தால் அத்தனை பேரையும் ஒதுக்கி தள்ளிவிட்டு, யாழினியின் இடுப்பை விட்டு இறங்காமல் தொற்றிக் கொள்வான்.,

  கதிரவனின் அக்கா சொல்வாள், “நீ எப்படி உன் பொண்டாட்டி முந்தானைய பிடிச்சிட்டு சுத்துறீயோ, அதே மாதிரி உன் பிள்ளையும் சுத்துது பாரு”, என்று சொல்லி கிண்டல் செய்வது அங்கு வழக்கமான ஒன்று,

    வாழ்க்கை அழகான பூந்தோட்டம் தான்,  ஒருவருக்கொருவர் அன்பு செலுத்தும் இடங்களிலும், உண்மையான பாசம் கொட்டிக் கிடக்கும் இடங்களிலும்,

அன்பு நடிப்பாக இல்லாமல் உண்மையாக இருக்கும் பட்சத்தில் அது என்றும் இன்பம் மட்டுமே கொடுக்கும்.

பூந்தோட்டம் போல தான் குடும்பமும், எத்தனை மலர் செடிகள் இருந்தாலும், அத்தனையும் சேர்ந்து இருந்தால் மட்டுமே பார்ப்பதற்கு அழகாக இருக்கும், தனித்தனியாக இருந்தாலும் ஒரே நேர் வரிசையில் அடுக்கப்பட்டிருக்கும் மலர் செடிகள் தான் பார்ப்பதற்கு கண்ணுக்கு குளிர்ச்சியை கொடுக்கும்,

அங்கொன்றும் இங்கொன்றுமாக தனித்தனியாக இருக்கும் போது பார்ப்பதற்கு அந்த அளவு ஈர்ப்பை கொடுப்பதில்லை,

   தோட்டத்திற்கே இந்த நிலைமை என்னும் போது,

 வாழ்க்கையில் குடும்பங்களும் அப்படிதான், ஒருவருக்காக ஒருவர் என்று வாழும் வாழ்க்கையில் தான் ஆனந்தம் அதிகம்.

எபிலாக்

4 வருடங்களுக்கு பிறகு

கதிரவனின் மகனுக்கு 2 வயதாக இருக்கும் போது அவனுக்கு ட்ரான்ஸ்ஃபர் கிடைத்து வெளியூருக்கு மாற்றலாகி சென்றனர்.

     குடும்பத்தோடு அங்கு சென்றவர்கள், ஆறு மாதங்களுக்கு ஒரு முறை சென்னை வருவது உண்டு, ஒரு வீட்டை வாடகைக்கு விடலாம் எனும் போது கதிரவன் மறுத்து விட்டான், அவன் அக்காவிடம் “உனக்கு சேன்ஜ் வேண்டும் ன்னு தோணினா, இங்க வா, வீட்டு சாவி நந்தன் ட்ட தான் இருக்கும்” என்றான்,

  வீடு எப்போதும் அவர்களின் உபயோகத்திற்காக மட்டுமே வைத்திருந்தனர்.

   நம்பிக்கையான மெய்ட் மூலம் வாரம் ஒரு முறை சுத்தம் செய்து பாதுகாக்க பட்டது.

 ஆறு மாத இடைவெளியில் அந்த விடுமுறைக்காக அனைவரும் வந்திருந்தனர்.

   இப்போது அவன் மகனுக்கு 4 வயது, நந்தன் மகளுக்கு 6வயதாக போகிறது.

 இவனும் எப்போதும் போல அனைவரும் வீட்டில் இருக்கும் போதே, “இசை நாளைக்கு ரெடியாயிரு, நம்ம கிளம்பலாம்” என்று சொன்னான்.

  “எங்கடா பாண்டிச்சேரிக்கா”, என்று கேட்டாள்.

  ” இல்லக்கா இந்த தடவை மகாபலிபுரம் போலாம்னு இருக்கேன்”, என்று சொன்னான்.

 “டேய் உனக்கு வெக்கமே இல்லையா டா”, என்று கேட்டாள்.

 “நான் எதுக்கு வெட்கப்படனும், என் பொண்டாட்டிய கூட்டிட்டு போறதுக்கு எனக்கு என்ன வெட்கம், என்னமோ அடுத்தவன் பொண்டாட்டியை கூட்டிட்டு போற மாதிரி வெக்கமே இல்லையா, ன்னு கேட்கிற”, என்று சொல்லி அவளை கலாய்த்து கொண்டிருந்தான்.

   யாழினியோ “என் மானத்தை வாங்குவதிலேயே குறியா இருங்க”, என்று சொன்னாள்.

     “ஆனாலும் நீ இப்படி இருக்க கூடாது டா”,என்றார் அவன் அக்கா.

  அந்த நேரம் அங்கு வந்த அவன் மகன் அரையும் குறையுமாக கேட்டு விட்டு கேள்வி கேட்க தொடங்கினான்.

 நாலு வயதான அவன் மகனும் “ஏன்மா அப்பா இப்படி இருக்காரு” என்று கேட்டான்.

    “என்னது இப்படி இருக்காரு”, என்று கேட்டாள்.

 “இல்ல அத்தை சொன்னாங்களே, என்னமோ இப்படி இருக்கீயே ன்னு அதைத்தான் கேட்டேன்”, என்றான்.

    “ஒண்ணுமே இல்லடா, அப்பா அத்தைக்கு ஐஸ்கிரீம் வாங்கி தர்றேன் ன்னு சொல்லி வாங்கி கொடுக்கலை அதை தான் அத்தை அப்படி கேட்டாங்க”, என்றாள்.

     “அத்த ஐஸ்கிரீம் சாப்பிட்டா த்ரோட் பெயின் வரும், அது தான் அப்பா ஐஸ்கிரீம் வாங்கலை” என்று அவனுக்கு சொல்லும் காணத்தை சொன்னான்.

     ” அத்தைக்கு அப்பா சொல்லுவாங்க, நீ போம்மா, போய் ஆச்சி, தாத்தா என்ன பண்றாங்கன்னு, அந்த வீட்ல போய் பாத்துட்டு வா”, என்று சொல்லி பக்கத்து வீட்டிற்கு அனுப்பி வைத்தாள்.

 “இவன் முன்னாடி எதுவும் பேசாத அக்கா” என்று சொன்னான்.

 “ஆமாடா  நல்லவனே, நீ தான் பார்த்து பேசனும்”,என்றார்.

 “பையன் ஸ்கூலுக்கு போறான், இப்ப விவரம் தெரியுது, விவரம் கொஞ்சம் நல்லவே தெரியுது, ஒரு பாட்டு கூட  பாட முடியல, ஏன்பா இந்த பாட்டு  பாடுறேன்னு கேட்கிறான்”,  என்று சொல்லி பேசிக்கொண்டிருந்தனர்.

  “உனக்கு இப்படி பிள்ளை வந்தா தானடா சரி வருவ”, என்றாள்.

 அப்போது தான் நந்தன் கேட்டுக் கொண்டிருந்தான், “உங்களுக்கு ஏதோ அடுத்து டிரான்ஸ்பர் வரும் ன்னு சொல்றாங்களே உண்மையா”, என்று கேட்டான்.

   “ஆமா வரக்கூடிய வாய்ப்புகள் அதிகம் இருக்கு, ப்ரோமோஷன் வர வேண்டியது தான், ஆனால் கொஞ்சம் பொலிட்டிக்கல் பிரஷர் எல்லாம் சேர்ந்து ப்ரமோஷன் டிலே ஆகுது, ஆனா ட்ரான்ஸ்ஃபர் கண்டிப்பா இருக்கும்”, என்று சொன்னான்.

 “பிள்ளை படிப்பு போற ஊருக்கு எல்லாம் மாத்திட்டே இருக்க வேண்டியதா இருக்கே” என்றான் நந்தன்.

“ஒரு இடத்தில் இருந்து படிக்க வைக்கலாமே டா”, என்று அவன் அக்கா சொல்லும் போதே,

 அவனோ “இசை எல்லாம் நான் விட்டுட்டு போக மாட்டேன்”, என்று சொன்னான்.

 யாழினியோ  இடுப்பில் கையை வைத்து முறைத்துக் கொண்டிருந்தாள்.

“அவன் என்ன ஐஏஎஸ் ஆ படிக்கிறான், நீ இப்படி முறைக்கிற, அவன் படிக்கும் போது பார்த்துக்கலாம், விடு விடு”, என்று சொன்னான்.

  அவளோ தன் தலையில் தட்டிய படியே சென்றாள்.

 அவனும் அவளைப் பார்த்து சிரித்துக் கொண்டிருக்க,  ராதாவும் நந்தனும் எப்போதும் போல பார்வை பரிமாற்றத்தோடு,  கதிரவன் அக்காவை பார்க்க,

   கதிர்வனின் அக்காவும் அவர்களை தான் பார்த்துக் கொண்டிருந்தாள்,

  அவள் செல்லவும்,  அவள் பின்னையே எழுந்து கதிரவன் செல்ல,  கதிரவனின் அக்கா தான், “முதல்ல சுத்தி போடணும், ரெண்டு பேருக்கும், எப்படித்தான் இப்படி இருக்காங்களோ, எனக்கு இப்ப வரைக்கும் புரியல”, என்று சொன்னாள்.

   நந்தனோ “அதிகமான அன்பு இருவருக்கும், காதல் ன்னா இதுதான், அது தான் அவர்களை கட்டி வைத்திருக்கிறது. இருவரும் நிச்சயமாக ஒருவரை விட்டு ஒருவர் இருக்க மாட்டார்கள், அது மட்டும் தெரிந்த விஷயம், படிப்பிற்காக அவரிடம் இவள் முறைத்தாலும், அவரை விட்டு இருக்க மாட்டாள்”, என்று பேசிக் கொண்டிருந்தான் ,

கதிரவன் அக்காவும் “நிச்சயமா நானும் இதை ஒத்துக்கிறேன், இவனும் சும்மா பேசுவான், ஆனா இவனும் புள்ளைய விட்டுட்டு இருக்க மாட்டான், இவளை விட்டுட்டு இருக்க மாட்டான், கண்டிப்பா எந்த ஊருக்கு ட்ரான்ஸ்பர் கிடைச்சாலும் அம்மா அப்பாவையும் சேர்த்து தான் கூட்டிட்டு போகப்போறான், என்ன பண்ண நம்ம தான் போய் எட்டி பார்த்துட்டு வரணும்”,என்றவர்.

    “இந்தா இவன் தான், மகாபலிபுரம், பாண்டிச்சேரி ன்னு வருவானே, ஆறு மாசத்துக்கு ஒரு தடவை”, என்று சொல்ல

     எல்லோரும் சிரித்துக் கொண்டு இருந்தனர்.

 அங்கு மகிழ்வான ஒரு இல்லறத்தின் முழுமை மட்டுமே தெரிந்தது.

எல்லோரும் இன்புற்று இருக்க இறைவனை பிரார்த்திப்போம்.

            என்றும் அன்புடன்

               ஆதிபிரபா,

இரண்டு வருடங்களாக எழுதவில்லை, மீண்டும் என் எழுத்தை ஊக்கப்படுத்திய நட்பூக்கள் அனைவருக்கும் மனம் நிறைந்த நன்றிகள்,

உங்களை போன்ற வாசகர்கள் இல்லை என்றால் என் போன்ற எழுத்தை நேசிப்பவர்களின் எழுத்துக்கள் பவனி வர முடியாது.,

என்றும் உங்களின் அன்பும் ஆதரவும் வேண்டும்.

             ❤️ ஆதிபிரபா 💕