யாழினி வீட்டிலிருந்து பெரியவர்கள் வர வீடு கலைக் கட்டியது.,
மறுநாள் முதல் செக்கப்பிற்காக அவளை அழைத்துக்கொண்டு சென்றனர். 40 நாள்களே ஆகியிருக்க, மருத்துவர் பிடித்த உணவுகளை சாப்பிட அனுமதி தந்தார்., சத்திற்காக மட்டும் மருந்து கொடுக்கப் பட்டது.,
முதல் செக்கப்பிற்கு கதிரவன் அவளோடு வந்தான், அப்போதே அவளிடம் சொல்லி விட்டான்.
“எப்போதெல்லாம் எனக்கு நேரம் கிடைக்கிறதோ, அப்பதெல்லாம் கண்டிப்பாக உன்னோடு வருவேன், மற்ற நாட்களில் என்னை எதிர்பார்க்காதே, இதை முதலில் சொல்லிட்டேன், அப்புறம் என்கிட்ட வருத்தப்படக்கூடாது”, என்று சொன்னான்.
அவளும் சிரித்துக் கொண்டே சம்மதித்தால், அதன்பிறகு அவ்வப்போது அனைவரும் வந்து பார்த்துக் கொள்ள, கதிர்வனின் அக்கா விடுமுறை கிடைக்கும் நாட்களில் எல்லாம் இங்கு வந்து பார்த்துக்கொள்ள தவறவில்லை.
அவளுக்கு பிடித்த ஸ்வீட், உணவு என ஆள்ஆளுக்கு செய்ய இவளோ சில நாளிலே உணவை பார்த்தால் ஓடிப் போய் மறைந்து கொள்ளும் நிலைக்கு தள்ளப்பட்டாள்.
அதன் பிறகு அவளின் சோர்வும், ஆட்டி படைத்தது.
ராதாவும் தன்னால் குழந்தையை வைத்துக்கொண்டு எதுவும் செய்ய முடியா விட்டாலும் தன்னால் இயன்ற அளவு அவளை பார்த்துக் கொண்டாள்.
ஆளாளுக்கு அவளை தாங்கி பிடிக்க, சோர்வு மூன்று மாதத்தில் குறைந்த பின்பே அலுவலகம் செல்ல தொடங்கினாள், அதுவரை வொர்க் ப்ரம் ஹோம் வாங்கியிருந்தாள். அதன் பின்பே அலுவலகம் செல்ல தொடங்கி இருந்தாள்.
கேப் வேண்டாம் என்று சொல்லி விட்டார்கள்., ராதா இப்போது குழந்தையை எடுத்துக்கொண்டு அலுவலகம் செல்ல தொடங்கி இருந்ததால், காருக்கு டிரைவர் வைத்து இவர்கள் இருவரையும் அழைத்துக் கொண்டு செல்லும்படி கதிரவன் ஏற்பாடு செய்திருந்தான்.
நந்தன் கேட்டதற்கு “சேப்பா போயிட்டு வரட்டும் , சிஸ்டர் குழந்தையோட இருக்காங்க, இவளும் இப்படி இருக்கும் போது கேப் வேண்டாம், நம்ம கார் னா வெயிட் பண்ணி, இவங்க எப்ப கிளம்புறாங்களோ அப்ப கூட்டிட்டு வந்துருவாங்க, அதுதான் சேஃப்”, என்று சொல்லிவிட்டு நந்தனை அதற்கு மேல் எதுவும் சொல்ல விடவில்லை.
எப்போதும் போலவே ராதா யாழினியை கவனித்துக் கொள்ள, நந்தனும் இப்போது எல்லாம் அவளை கேட்காமலே வாங்கி கொடுத்தான்.
“எனக்கு வேண்டாம் என்று சொன்னால், உனக்கு இல்ல உள்ள இருக்குற பேபிக்கு, நீ தானே பொறுப்பா இருக்க சொன்ன”, என்று சொல்லியே அவளை எதிர்த்து பேசாமல் சாப்பிட வைத்தான்.
இவளோ நந்தன் ராதாவின் பிள்ளைக்கு அவர்கள் இருவரிடமும் எப்படி பேச வேண்டும் என்று வாய் அடிக்கச் சொல்லிக் கொடுத்துக் கொண்டிருந்தாள். அதுவும் தன் ஆறு மாத கையும் காலையும் ஆட்டி அவளோடு கதை பேச தொடங்கி இருந்தது.
நாட்கள் சடுதியில் செல்வது போல தான் தோன்றியது, அவன் தான் சும்மா இருக்காமல், அவளுக்கு ஐந்து மாதம் இருக்கும் போது, “பாண்டிச்சேரி போயிட்டு வருவோமா” என்று கேட்டான்.
இவளோ “பிச்சுப்புடுவேன் பிச்சு, என்னை இப்ப வீட்டை விட்டு வெளியே விட மாட்டாங்க, அத்தைட்ட போய் கேளுங்க, அத்தை அனுப்புவதற்கு சரின்னு சொன்னாங்கன்னா போலாம்”, என்று சொன்னாள்.
அன்று கதிர்வனின் அக்கா வந்திருக்க, ராதாவும் நந்தனும் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தார்கள்.
இவனோ அவர்களோடு வந்து அமர்ந்து கொண்டவன் யாழினியை அழைத்து அருகே அமர்த்திக் கொண்டு, “சரி நம்ம ரெண்டு பேரும், ஒரு ட்ரிப் பாண்டிச்சேரி போயிட்டு வருவோமா”, என்று கேட்டான்.
அவளோ அவனை திரும்பி முறைத்து பார்க்க,
கதிரவனின் அக்கா தான், “டேய் நீ அடிதான் வாங்க போற, வேணும்னே எங்களை கிண்டல் பண்றதுக்கு தானே இப்படி பண்ற”, என்று சொன்னாள்.
“அது சிக்ஸ் மந்த்ஸ் ஒன்ஸ், இப்ப நமக்கு சிக்ஸ் மன்த்ஸ் கம்ப்ளீட் ஆயிடுச்சு, இப்போ கல்யாணம் முடிஞ்சு எய்ட் மந்த் போய்கிட்டு இருக்கு” என்று சொன்னாள்.
எல்லோரும் அதை பற்றி கேலியும் கிண்டலுமாக பேசிக் கொண்டிருக்க,
இவனோ அவளுக்கு மட்டும் கேட்கும் அளவில், அப்ப நாம தான் த்ரீ மன்த் டிளே பண்ணிட்டோமா”, சொன்னான்.
முதலில் புரியாமல் அவனை பார்த்தவள், அவனின் பார்வை அவளது வயிற்றை தீண்டிச் செல்ல, மற்றவர்கள் யாரும் கவனிக்கவில்லை என்றாலும் அவனை கிள்ளி வைக்க தவறவில்லை.
“பேச்சை குறைங்க ” என்று அவன் காதில் கேட்கும் அளவிற்கு சொன்னாள்
பிறகான நேரம் அங்கு கலகலப்பாக கிண்டலும் கேலியுமாக நேரங்கள் செல்ல, அப்போது தான் நந்தன் சொல்லிக் கொண்டிருந்தான்.
“சித்தி ஏழாவது மாசமே வளைகாப்பு வைக்கணும்னு சொல்றாங்க”, என்றான்.
“விட்டுட்டு போவாங்கன்னா எந்த மாசம் ஆனாலும் வச்சுக்கோங்க, கூட்டிட்டு போற மாதிரி இருந்தா 9வது மாசம் வைங்க” என்று சொன்னான்.
அவளோ “என்னை அனுப்பிட்டு, இங்க நீங்க என்ன பண்றதா பிளான்ல இருக்கீங்க” என்று கேட்டாள்.
ராதாவோ, “உங்க அண்ணனுக்கு ஒரு ஏஞ்சல் இருந்த மாதிரி, எஸ்பி ப்ரோ க்கு ஒரு ஏஞ்சல் இருந்தா வேண்டாம்னா இருக்கு” என்று சொன்னாள்.
“ஓஹோ உங்களுக்கு ஒரு ஏஞ்சல் வேற கேக்குதா”, என்று சொல்லி அவனோடு சண்டை போட,
இவனும் புரியாமல் “என்ன ஏஞ்சல்” என்று கேட்டான்.
ராதா கதை சொல்ல, அவனோ “அடிப்பாவி நல்லா இருந்த குடும்பத்துல கும்மியடிக்கிற வேலை எல்லாம் பாத்தியா” என்று அவளை கேட்டான்.
“நான் ஒன்னும் பொய் சொல்லல, உண்மைய தான் சொன்னேன், ஏஞ்சல் உன் பின்னாடி சுத்தினாளா, இல்லையா”, என்று நந்தனை கேட்டாள்.
நந்தனோ “சும்மா இரு, இப்போ ஏம்மா தேவையில்லாம அதை போய் பேசுற” என்று சொன்னான், அவன் யாழினியிடம் சொல்லிக் கொண்டிருக்கும் போதே,
யாழினி கதிரவனை பார்த்து, “உங்களுக்கு அந்த மாதிரி எதுவும் ஏஞ்சல் இருக்கா” என்று கேட்டாள்.
“எனக்கு ஏஞ்சலும் கிடையாது, டெவிலும் கிடையாது, நீ ஒருத்தி தான் எல்லாமே” என்று சொன்னான்,
“ஓஹோ இப்ப என்னை பார்த்தா டெவில் மாதிரி தெரியுதா”, என்று கேட்டாள்.
“அம்மா தாயே, நான் உன்னை ஒண்ணுமே சொல்லல, ஒன்பதாவது மாசம் வளைகாப்பு போட்டு கூட்டிட்டு போனா, கூட்டிட்டு போங்கன்னு சொன்னேன், நீ ஒரு வேளை அம்மா வீட்டில் இருக்க ஆசைப்படுவ ன்னு நினைச்சு, நான் தெரியாம சொல்லிட்டேன், நீ இங்கேயே இருமா”, என்று சொன்னான்.
“அடப்பாவிகளா” என்று எல்லாரும் அவர்களை பார்த்துக் கொண்டிருக்கும் போதே,
அவன் தோளில் சாய்ந்து கொண்டு, “நீங்க என்னைய விட்டுட்டு இருந்துருவீங்களா” என்று அவனிடம் கேட்டாள்.
“அது எப்படி இசை இருப்பேன், நானும் லீவு போட்டு உன் பின்னாடியே வந்துற மாட்டேன்”, என்று சொல்லிக் கொண்டிருந்தான்.
கதிரவனின் அக்கா தான் “அதுதான பார்த்தேன், நீ எப்படிடா இவளை விட்டுட்டு இருப்பேன்னு நான் யோசிச்சு முடிக்குறதுக்குள்ள சொல்லிட்டியா, லீவ் போட்டுட்டு பின்னாடியே போயிடுவேன்னு, இதுதான் நீ, யாழி அதெல்லாம் பயப்படாத, அவன்க்கு ஏஞ்சலும் வராது, அவனுக்கு டெவிலும் வராது, அவன் சொன்ன மாதிரி எல்லாமே அவனுக்கு நீ மட்டும் தான்”, என்றார்.
“அக்கா நீங்களும் அப்படி தான் சொல்றீங்க” என்று அவரிடம் சென்னாள்.
“சும்மா சொன்னேன்மா, ஆனா உன்னை அப்படி தானே வச்சிருக்கான்”, என்று சொல்லி பேசிக் கொண்டிருக்கும் போதே,
அன்று அனைவருக்கும் உணவை வெளியில் ஆர்டர் செய்தான் கதிரவன்.
அவன் சொன்னது போலவே ஒன்பதாவது மாதம் வளைகாப்பு வைத்து அங்கே விட, அதன் பிறகு அவள் “ஒர்க் ப்ரம் ஹோம் எடுத்துக் கொள்கிறேன், டெலிவரிக்குப் பிறகு லீவு போட்டுக் கொள்கிறேன்”, என்று சொல்லி இருந்தாள்.
‘டெலிவரிக்கு பிறகு ஆறு மாதம் விடுப்பும், அதன் பிறகு சிறிது நாள் ஒர்க் ப்ரம் ஹோம் வேண்டும்’ என்று கடிதம் மூலம் அலுவலகத்திற்கு விண்ணப்பம் ஒன்றையும் அனுப்பி வைத்திருந்தாள்.
டாக்டர் கொடுத்த தேதியில் சரியான நேரத்தில் சற்று சிரமத்தோடு கதிரவனின் மகனை பெற்று அவன் கையில் கொடுத்திருந்தாள்.
அப்படியே அவனை உரித்து வைத்தது போல பிறந்து இருக்க, கதிரவனின் அக்கா தான், “ஜெராக்ஸ் மிஷின் எதையும் முழுங்கிட்டியா”, என்று யாழினியை கிண்டல் செய்து கொண்டிருந்தார்.
அவளோ “ஏன்” என்று கேட்டாள்.
“அப்படியே என் தம்பி எங்கே என்று இருக்கான், குழந்தைய பார்த்தவுடனே சொல்லிரலாம், குழந்தைங்கள்ல அவ்வளவு சீக்கிரம் கண்டுபிடிக்க முடியாதும்பாங்க, ஆனா பாரு எவ்ளோ ஜாடை ஒற்றுமை”, என்று சொல்லி பேசிக்கொண்டிருந்தார்.
“முழுங்கினாலும் முழுங்கி இருப்பேன்” என்று சொல்லி சிரித்துக் கொண்டிருந்தாள்.
மூன்று மாதங்கள் அவளுக்கு மருந்து சாப்பாடு என்று யாழினியின் பெரியம்மாவும், அம்மாவும் உடன் இருந்து கவனித்துக் கொண்டனர், உடல் நிலை நன்றாக தேறி வந்திருந்தாள்.
அதன் பிறகு அவர்கள் ஊருக்கு செல்லும் போது, கதிரவனின் அம்மா “இதன் பிறகு நான் பார்த்துக் கொள்கிறேன்” என்று சொல்லி இருந்தாலும்,
அவர்கள் இருக்கும் போதே இடையிடையே அவரும் செய்து கொடுத்து தான் இருந்தார், அதன் பிறகு அவர்களுக்கான நாட்கள் எப்போதும் போல ஓடினாலும்,
இருவருக்கான அன்யோனியமும் அன்பும் அதிகரித்து இருந்தது, காதல் ஒருவரை எப்படி வேண்டுமானாலும் மாற்றி வைக்கலாம், அது உண்மையான அன்பு உள்ள இடத்தில் மட்டுமே சாத்தியம்.,
எவ்வளவு தூரம் கடந்து இருந்தாலும், அந்த அன்பு இழுத்துக் கொண்டு வந்து சேர்த்து வைத்து விடும், அது போல தான் யாழினிக்கும் கதிரவனுக்கும்.
இருவரும் வேலை வேலை என்று சென்றாலும் அவர்களுக்கான நேரத்தை ஒதுக்குவதற்கும் அவர்கள் தவறவில்லை,
குழந்தை பெரியவர்களின் பொறுப்பில் அன்புடன் அன்பானவர்கள் கையில் அழகாக வளர தொடங்கினான்.
அவர்களுடைய நாட்கள் ஆனந்தமாக சென்றது, ட்ரான்ஸ்ஃபர் வந்தாலும் பெற்றோருடனே இனி இடம்பெயர்வதாக கதிரவனின் முடிவும் இருந்தது, கதிரவனின் அக்காவும், நந்தன் ராதா என அனைவரும் சேர்ந்து விட்டால் வீடு அதிரடியாக கலைக் கட்டி இருக்கும்.
அதில் முக்கியமாக கலாய்க்கப்படுவது கதிரவனும் யாழினியும் தான்,
ஏனெனில் அவன் ஆறு மாதத்திற்கு ஒரு தடவை பாண்டிச்சேரி என்பதை மட்டும் இப்போது வரை தவறவிடவில்லை,
பிள்ளையை அம்மா அப்பாவிடம் விட்டு பழகியவன், அவர்களிடமே வளர்க்க கொடுத்து விட, கதிரவனின் அக்கா தான்,
“ஏன்டா பெத்தது நீ, வளக்குறது அம்மா அப்பா வா”, என்று கேட்டாள்.